சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - இது  உண்மை நிகழ்ச்சி Khan11

ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - இது உண்மை நிகழ்ச்சி

2 posters

Go down

ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - இது  உண்மை நிகழ்ச்சி Empty ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - இது உண்மை நிகழ்ச்சி

Post by யாதுமானவள் Thu 23 Jun 2011 - 18:34

ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும்

குவைத்தில் கறுப்புச் சட்டைக்காரன் என்றால் பெரும்பாலான தமிழர்கள் உடனே சொல்லி விடுவார்கள் ரஹமத்துல்லா என்று. அந்த அளவிற்கு பெரியார் கொள்கைகளின் சிறுவயது முதலே ஈடுபாடு கொண்டவர் அவர். அவர்மட்டுமல்ல அவரின் தந்தை பெரியாரின் சீரிய தொண்டறென்று கேள்விப்பட்டுள்ளேன்.


இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த இச்சகோதரர் குவைத்திற்கு வருவதற்கு முன்பு (ஒரு 15 வருடத்திற்கு முன்பு) தமிழ்நாட்டில் லாரி ஓட்டுனராகப் பணியாற்றியிருந்திருக்கிறார். அடிக்கடி தமிழ் நாட்டிலிருந்து ஆந்திராவிற்கு லோடு ஏற்றிக்கொண்டு செல்வது வழக்கமாம். அப்படி இருக்கையில் இரவில் ...திருப்பதியில் தர்மஸ்தாலவில் வண்டியை நிறுத்திவிட்டு இரவு உறங்கிவிட்டு பிறகு காலை சிற்றுண்டிக்குப் பின் மீண்டும் தமது பணியைத் தொடர்வது வழக்கமாம்.

சிலநேரம் இரண்டு மூன்று நாட்களெல்லாம் தங்கவேண்டிய சூழல் உருவாகிவிடுமாம். அப்படி இருக்கையில்..அங்கு தங்கும்போதேல்லாம்... விடியற்காலை... ஒரு ரம்மியமான சூழலில் மலை மீது இளங் காற்றில் 3 மணிக்கு அங்கு ஒலிக்கும் சுப்ரபாதம் கேட்பதற்கு அவ்வளவு பிடிக்குமாம் அவருக்கு. அதுவும் MS சுப்புலக்ஷ்மியின் குரலுக்கு மயங்காதவர் எவரேனும் உண்டோ?


அப்படி அங்கு செல்லும்போதெல்லாம்... விடியற்காலை சுப்ரபாதம் கேட்பதற்கென்றே சீக்கிரம் விழித்துவிடுவாரம். அவரும் சேர்ந்து கூடவே பாடவும் முயற்சிப்பாராம். அது சமஸ்கிருதத்தில் இருப்பதால் வார்த்தைகள் சரிவர வராது ஆதலால்.. சாயந்திரம் பூஜையெல்லாம் முடிந்தபின் எப்போதும் அந்தவழி ஒரு பிராமணப் ப்ரோகிதரர் செல்வதைப் பார்ப்பாராம்... சரி அவரிடம் கேட்டுப் பார்ப்போமே இந்த சுப்ரபாதத்தை நமக்குப் படித்துக் கொடுப்பார என்று என நினைத்து

அந்தப் ப்ரோகிதரை அணுகி ... பெரியவரே... எனக்கு சுப்ரபாதம் ரொம்ப பிடிச்சிருக்கு... எனக்கும் அது போல பாடணும்னு விருப்பமா இருக்கு. கொஞ்சம் சொல்லித்தருவீங்களா எனக்கு என்று கேட்க, அந்தப் ப்ரோகிதர் உடனே... உன் பேர் என்னப்பான்னு கேட்டிருக்கார்.. உடனே இவர் சொல்லி இருக்கார் ரஹமத்துல்லா என்று.


உடனே தீயை மிதித்தவர் போல ... அபிஷ்டு,,,.. நீ எல்லாம் புலால் சாப்பிடறவா... புலால் சாப்பிடறவா வாயிலல்லாம் இது நுழையாது என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம்..


"மானமும் அறிவும் மனிதர்க்கு அழகுன்னு" வார்த்தைக்கு வார்த்தை சொல்ற பெரியார் தொண்டனைப் பார்த்து ஒரு பிராமணன் இப்படி சொன்னதுல இரஹமத்துல்லாக்கு ரோஷம் பொத்துகிட்டு வந்துடிச்சு... அது என்னடா அது... அவன் வாய்ல நுழையறது என்வாய்ல எப்படி நுழையாம போய்டும்னு பார்க்கலாம்னு சொல்லிட்டு ரோஷத்தோட வண்டி ஸ்டார்ட் பண்ணி இரவு 8 :30 மணிக்கு ஏதோ ஒரு கடையில andha cassette வாங்கிட்டு வந்திருக்கார்.. இராத்திரி முழுவதும் lorry லையே போட்டு கேட்டு ப்ராக்டிஸ் பண்ணிட்டு காலைல அந்தப் ப்ரோகிதர் தேவஸ்தானத்துக்கு போறதுக்காக அந்தப்பக்கம் போய்க்கிட்டிருக்க.. அவரைக் கூப்பிட்டு இந்தாங்க பாருங்க இதாணே ன்னு சொல்லி....

"கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா பிரவரத்ததே
உத்திஷ்ட நரசாதூலா கர்த்தவ்யம் தெய்வமாநிஹம்"... ன்னு

மூச்சு விடாம கடகட கடன்னு முழு சுப்ரபாதத்தையும் அக்ஷரம் பிசகாம... உச்சரிப்பு பிசகாம சொல்லி இருக்கார்...
வாயப் பொளந்த பிராமணன் மூடவே இல்லையாம்... ஷாக் ஆகி இவர் சொல்றதை அப்படியே கேட்டுகிட்டிருந்தாரம்.... சுப்ரபாதம் சொல்லி முடிச்சுட்டு இந்தா இதை போனஸ் ஆ வச்சுக்கோங்கன்னு... சொல்லி,,...


வெங்கடேச ஸ்தோத்திரம் இருக்குல்ல ....

"கமலா குசசூசுக குங்குமதோ
நியதாருணிதாதுல நீலதநோ".... இதையும் மூச்சு விடாம சொல்லவும் வாயப்பொளந்து கேட்டிருக்கார் ப்ரோகிதர்...


சொல்லி முடிச்சுட்டு ரஹமத்துல்லா கேட்டிருக்கார்... என்ன அய்யரே சரியா சொன்னேனா... உங்க வாய்ல நுழையற பாஷை எங்க வாய்லையும் நுழையும்னு இவர் சொல்ல...


ஒரு இஸ்லாமியன் நம்ம சுலோகத்தை நம்மை விட ப்ரமாதமா சொல்றானேன்னு ஏற்பட்ட ஆதங்கத்துல அந்த அய்யர் சொன்ன பதில் தான் சூப்பர்...


"டேய்... நீ போன ஜென்மத்துல பிராம்மணாளா பொறந்திருந்திருப்பேடா..." ன்னு சொன்னாராம்

************
(இது உண்மையிலேயே நடந்தது . இந்தச் சகோதரர் இன்று கூட அவ்வளவு அருமையாக சுப்ரபாதம் சொல்லி அசத்துவார். கடைசியாக Rahammathulla சொன்னார்... ராத்திரில்லாம் கஷ்டப்பட்டு படிச்சது எனக்கு கஷ்டமாவே தெரியலே ... ஆனா இவன் சொன்ன பதிலால பட்ட கஷ்டம் இருக்கே ....ன்னு சொன்னார்.... )
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - இது  உண்மை நிகழ்ச்சி Empty Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - இது உண்மை நிகழ்ச்சி

Post by நேசமுடன் ஹாசிம் Thu 23 Jun 2011 - 20:10

சம்பவத்தின் கடைசி வரிதான் ஆச்ரியமானது இஸ்லாமிய அடிப்படையில் மறுஜென்மம் என்ற ஒன்றை நம்பாதவருக்கு அவர்
ஐயர் சொன்ன பதில் ஆச்சரியத்தை உண்டாக்கியிருக்கிறது

எதனையும் கற்றுக்கொள்வதற்கும் சொல்லிக்கொடுப்பதற்கும் மதங்கள் தடையாக எங்கும் இருந்ததில்லை மதவாதிகள்தான் தடைசெய்கிறார்கள்

நல்லதொரு படிப்பினைச் சம்பவம் பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா


ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - இது  உண்மை நிகழ்ச்சி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - இது  உண்மை நிகழ்ச்சி Empty Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - இது உண்மை நிகழ்ச்சி

Post by யாதுமானவள் Fri 24 Jun 2011 - 6:44

சம்பவத்தின் கடைசி வரிதான் ஆச்ரியமானது இஸ்லாமிய அடிப்படையில் மறுஜென்மம் என்ற ஒன்றை நம்பாதவருக்கு அவர்
ஐயர் சொன்ன பதில் ஆச்சரியத்தை உண்டாக்கியிருக்கிறது"



aama saadhik, sariya sonneenga.

innoru friend padichuttu sonnar. nallavelai andha progithar Rahamathullaakku poonul maattividaama irundhaarennu solli sirikkarar..
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - இது  உண்மை நிகழ்ச்சி Empty Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - இது உண்மை நிகழ்ச்சி

Post by நேசமுடன் ஹாசிம் Fri 24 Jun 2011 - 9:44

யாதுமானவள் wrote:சம்பவத்தின் கடைசி வரிதான் ஆச்ரியமானது இஸ்லாமிய அடிப்படையில் மறுஜென்மம் என்ற ஒன்றை நம்பாதவருக்கு அவர்
ஐயர் சொன்ன பதில் ஆச்சரியத்தை உண்டாக்கியிருக்கிறது"



aama saadhik, sariya sonneenga.

innoru friend padichuttu sonnar. nallavelai andha progithar Rahamathullaakku poonul maattividaama irundhaarennu solli sirikkarar..

சிரிக்க முடிகிறது :”: :”: :”: :”: :,;:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - இது  உண்மை நிகழ்ச்சி Empty Re: ரஹமதுல்லாவும் சுப்ரபாதமும் - இது உண்மை நிகழ்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum