சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ நினைப்பவனுக்கு வானம் கூட...
by rammalar Tue 14 Jan 2025 - 14:08

» டிப்ஸ் ! டிப்ஸ் !! அறிந்து கொள்வோமே
by rammalar Sat 11 Jan 2025 - 19:44

» யமடோங்கா - திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:45

» கஜகேசரி -திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:44

» கரையும் நேரம்- கவிதை
by rammalar Thu 9 Jan 2025 - 7:48

» தென்கச்சி சுவாமிநாதன்- இன்று ஒரு தகவல் -பாகம் 6
by rammalar Wed 8 Jan 2025 - 17:08

» இள நெஞ்சே வா - படம் : வண்ன வண்ணப் பூக்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 17:06

» ஒரு தலை ராகம்- திரைப்பட பாடல்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 16:48

» நான் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:41

» இலை - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:39

» 60 வயது மாநிறம் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:38

» கோட நாடு -திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:36

» வள்ளிவரப்போறா - நகைச்சுவை திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:35

» En Peyar Sivaji - அட்டகாசமான நகைச்சுவை திரைப்படம்|
by rammalar Mon 6 Jan 2025 - 12:01

» நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே.
by rammalar Mon 6 Jan 2025 - 11:21

» இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் - விடுகதைகள்
by rammalar Mon 6 Jan 2025 - 3:10

» புத்தாண்டு சபதம்!
by rammalar Tue 31 Dec 2024 - 13:34

» 'சிரஞ்ஜீவி யார்?' அனுமனின் விளக்கம்..!
by rammalar Tue 31 Dec 2024 - 2:15

» சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே…
by rammalar Wed 25 Dec 2024 - 10:00

» கலகலப்பான Comedy Thriller திரைப்படம்! |
by rammalar Tue 24 Dec 2024 - 10:42

» குளத்தில் தாமரைகள்...
by rammalar Wed 18 Dec 2024 - 16:10

» கவிதைச்சோலை - கணக்கெடுப்பு
by rammalar Wed 18 Dec 2024 - 5:17

» மது விலக்கு
by rammalar Tue 17 Dec 2024 - 3:47

» கொஞ்சம் டைம் பாஸ் கடிகள் பாஸ் !
by rammalar Mon 16 Dec 2024 - 10:57

» விவேகானந்தர் சிந்தனைக் கருத்துகள்
by rammalar Sat 14 Dec 2024 - 17:29

» பெண் சிசுவுக்கு கள்ளிப்பால்...
by rammalar Fri 13 Dec 2024 - 8:06

» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Tue 10 Dec 2024 - 15:18

» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48

» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44

» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43

» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42

» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41

» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38

» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37

» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36

மனைவியை காதலியுங்கள்! Khan11

மனைவியை காதலியுங்கள்!

Go down

மனைவியை காதலியுங்கள்! Empty மனைவியை காதலியுங்கள்!

Post by நண்பன் Fri 1 Jul 2011 - 21:39

உங்கள் மனைவிதான் உங்கள் காதலி!

உங்கள் காதலி உங்கள் மனைவிதான்!

காதல் மனைவிக்காக உலக அதிசயத்தையே எழுப்பிய ஷாஜஹான் என்று காதலால் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். இவர்களை தலைமுறை தலைமுறையாக நினைவில் கொள்ளும் நாம், மனைவியை மட்டும் காதலியாய் ஏற்றுக்கொள்ள தயங்குகிறோம்.

"அன்பே நீ வெளியில் வராதே;
வண்ணத்து பூச்சிகளெல்லாம்

நீ தான் மலரென்று தேனெடுக்க

முற்றுகையிட்டுவிடும்''

என்று, திருமணமான புதிதில் ஐஸ் மேல் ஐஸ் வைத்தவர்கள்கூட, நாளாக நாளாக, 'அப்படியா நான் சொன்னேன்?' என்று அரசியல்வாதிகள் ஸ்டைலில் பல்டி அடிப்பதையும் நடைமுறை வாழ்வில் பார்க்க முடிகிறது.

அடிக்கடி மெரீனா பீச்சுக்கு விசிட் அடிக்கும் பஷீர் அன்றும் அப்படியே அங்கு சென்றிருந்தார். அது மாலைநேரம் என்பதால் குளுமையை அள்ளிக்கொண்டு வந்து வீசிச்சென்றது கடல்காற்று. அந்த இனிமையில் அப்படியே காலாற நடந்து சென்றார்.
ஓரிடத்தில், கரையோரம் படகு ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதில் சிறிது நேரம் அமர்ந் திருக்கலாம் என்று நினைத்தவர் அதை நோக்கி நடந்தார்.

படகை நெருங்க நெருங்க இரண்டு பேர் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது.

"உனக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். நம்மைக் கண்டு ஓடிப்போகும் அந்த சூரியனைக் கூட உனக்கு பிடித்து தருவேன். ஏன்... இன்னும் சிறிது நேரத்தில் நம்மை காண வர இருக்கும் நிலவைக்கூட பிடித்து உனக்கே உனக்காய் பரிசளிப்பேன்'' என்று காதல் வசனம் பேசிக்கொண்டிருந்தான் அந்த காதலன்.
அதற்கு காதலி சொன்னாள்...

"எனக்கு அதெல்லாம் வேண்டாம். நீ உன் மனைவியை டைவர்ஸ் செய்தால் போதும்'' என்றாள்.

''காதல் என்கிற போர்வையில் இப்படி கலாச்சாரத்தை சீரழிக்கிறார்களே' என்று கோபம் கொண்ட பஷீர், அவர்களை லெஃப்ட் ரைட் வாங்க நெருங்கினார்.
அவர்களை பார்த்த அடுத்த நொடியே அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டார். அங்கிருந்த பெண் வேறு யாருமல்ல; பஷீரின் மனைவிதான்!

சென்னை போன்ற நகரங்களில் இப்படி ஓப்பனாகவே நடமாடும் கள்ளக்காதலர்கள், பல இடங்களில் ரகசியமாக சந்தித்துக்கொள்கிறார்கள் என்கிறார்கள் போலீசார்.

இப்படிப்பட்ட கள்ளக்காதல் அதிகரிக்க காரணம் என்ன? அன்பு கிடைப்பதில் ஏற்பட்ட பற்றாக்குறைதான்!

பீச்சுக்கு அடிக்கடி காற்று வாங்க வந்த பஷீருக்கு, கூடவே மனைவியையும் அழைத்து வந்து மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று தோன்றவில்லை. அதனால்தான், அவர் மனைவி இன்னொரு துணையை தேடிவிட்டாள்.

பணம், பணம் என்று பணத்தை மாத்திரமே தேடும் இன்றைய சமுதாயம், அன்புதான் பெரிய பொக்கிஷம் என்பதை மறந்தே போய்விட்டது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவியை காதலியுங்கள்! Empty Re: மனைவியை காதலியுங்கள்!

Post by நண்பன் Fri 1 Jul 2011 - 21:40

ஒருவர் ஞானியை பார்க்கச் சென்றார்.

ஞானியை "திருமணம் ஆன புதிதில் கலகலப்பாக, அன்பாக என்னிடம் பேசிய என் மனைவி இப்போது என்னை கண்டாலே எரிந்து விழுகிறாள். நான் என்ன செய்வது?'' என்று கேட்டார்.

"தினமும் ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக் கொண்டு மனைவியிடம் கொடு. மீண்டும் கல கலப்பாக பேசுவாள் உன் மனைவி'' என்றார் ஞானி..
கேள்வி கேட்டவருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

''மனைவி எரிந்து விழுவது ஏன் என்று கேட்டால், முதலிரவுக்கு செல்லும் வழிமுறையை கூறுகிறாரே இந்த ஆள்; ஒருவேளை போலி ஞானியாக இருப்பாரோ?'' என்று கூட சந்தேகித்தார்.
தனது சந்தேகத்தை ஞானியிடம் வெளிப்படுத்தாமல் வெளியேறினார். செல்லும் வழியில் பூக்கடையை அவர் பார்த்துவிட, 'இன்று ஒருநாள் தான் ஞானி சொன்னபடி செய்து பார்ப்போமே' என்று ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு போனார், வீட்டுக்கு!

வீட்டு வாசலில் காலை வைக்கவே அவருக்கு பயமாக இருந்தது. எப்போதும் எரிந்து விழுபவள், இன்னிக்கு கொஞ்சம் அதிகமாக எரிந்து விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்தார்.

இருந்தாலும் மனதை ஒருவழியாக தேற்றிக்கொண்டு வீட்டுக்குள் சென்றார்.

கணவனை மல்லிகைப்பூவுடன் பார்த்த அவரது மனைவியின் முகத்தில் திடீர் மகிழ்ச்சி, பரவசம்!

ஓடி வந்து மல்லிகைப்பூவை வாங்கியவள், "என்னங்க... இந்த பூவை நீங்களே என் தலையில் வைத்து விடுங்களேன்'' என்று கொஞ்சினாள், சிணுங்கினாள்.

அவருக்கு நடப்பது கனவா? நனவா? என்ற சந்தேகமே வந்துவிட்டது. `ஞானி கொடுத்த ஐடியா நல்லா ஒர்க்அவுட் ஆகுதே' என்று தனக்குள் சிலிர்த்துக் கொண்டார்.

மறுநாளும் மல்லிகைப்பூவை வாங்கிச் சென்றார். அப்போதும் அவரை அன்பாக வர வேற்று உபசரித்தாள் மனைவி.

சில நாட்கள் இப்படியே கழிந்தது.
ஒருநாள், தனக்கு மல்லிகைப்பூ ஐடியா கொடுத்த ஞானியை பார்க்கச் சென்றார்.

"ஞானி! நீங்க சொன்னபடியே மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு போனேன். வழக்கமாக, என்னை கண்டுகொள்ளாத என் மனைவி என்னை விழுந்து, விழுந்து கவனித்தாள், அன்பொழுக பேசினாள். எப்படி அவள் மாறினாள்?'' என்று கேட்டார்.
"அன்பை ஒருவரிடம் இருந்து தானாக பெற்றுவிட முடியாது. நாமும் அன்பாக இருந்தால் தான் அடுத்தவர்களிடம் அதே அன்பை பெற முடியும்'' என்று கூறிய ஞானி,

"ஆமாம்... நான் சொல்வதற்கு முன்பு கடைசியாக எப்போது உன் மனைவிக்கு மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு போனாய்?'' என்று கேட்டார்.

சிறிதுநேரம் யோசித்தவர், "எப்படியும் ஏழு எட்டு மாதம் இருக்கும்'' என்றார்.

அதை சுட்டிக்காட்டிய ஞானி,

மனைவிக்கு தங்கம், வெள்ளி, பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்துதான் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பது கிடையாது.

அன்பாக ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக்கொடுத்தாலே போதும். அன்புக்கு அவ்வளவு பவர் இருக்கிறது. இனியாவது மனைவியிடம் அன்பாக இரு.

அவளும் உன்னிடம் அன்பாக இருப்பாள்''

என்று வாழ்த்தி அனுப்பினார்.

நீங்களும் உங்கள் மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க வேண்டுமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவியை காதலியுங்கள்! Empty Re: மனைவியை காதலியுங்கள்!

Post by நண்பன் Fri 1 Jul 2011 - 21:40

அதற்கு சில டிப்ஸ் :

o நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றேசெலவிடுங்கள்.
o முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாகஇருந்து விடா தீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்தவிஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். இருவரும்ஒன்றாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தால், அதில் வரும்கதாபாத்திரங்களிலேயே மூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில் மனைவி இருக்கிறாள்என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவளிடமும் கலகலப்பாக பேசுங்கள்.

o எடுத்துக்கொண்டால், பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட தெரி யாமல்கடலை' போட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசும் விஷயத்தில் பல நேரங்களில் ஒன்றுமே இருக்காது. ஒன்றுமே இல்லாத விஷயத்தைக்கூட பலமணிநேரம் பேசு வார்கள். அதே போன்று நீங்களும் பேசுங்கள். அதற்காக, ஒன்றும்இல்லாத விஷயத்தை பேசுங்கள் என்று அர்த்தம் இல்லை. உங்கள் குடும்பத்துக்குதேவையான நல்ல விஷயங்களை ஆரோக்கியமாக விவாதியுங்கள். இந்தவிவாதத்தில் உங்கள் குடும்ப பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம்.
o பூக்கள் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அடிக்கடி அந்த பூக்களை உங்கள் அன்பான மனைவிக்கு வாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.

o சம்பளம் பெறுவோர், சம்பளம் வாங்கிய நாள் அன்று மல்லிகைப்பூவுடன் மனைவிக்கு பிடித்த ஸ்வீட்டையும் வாங்கிக்கொண்டு கொடுத்தால் அவர்களது மனைவி அடையும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.
o உங்கள் மனைவியை எப்போதும் காதலியாகவே நினைத்திருங்கள். ஒருகாதலன் காதலியிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வானோ, அதே போன்றுநடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற்சியாவது செய்யுங்கள்.

o உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டேனா? நிறைவேறாத ஆசைகள் இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன்' என்று அவ்வப்போது மனைவியிடம் சொல்லிப்பாருங்கள். நீங்கள் இப்படி கேட்டமாத்திரத்திலேயே உள்ளம் குளிர்ந்து போவாள் உங்களவள்.

o தனக்காக தனது கணவன் நிறைய நேரம் ஒதுக்குகிறான் என்பதை மனைவி புரிந்துகொள்ளுமாறு நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தாம்பத்தியம் சிறப்பாக அமையும். அதற்காக சிலவற்றைச் செய்யலாம்.

o நீங்கள் எதைச் செய்தாலும் எல்லாம் உனக்காக என்று சொல்வது ஒரு ரகம், எல்லாம் உன்னால்தான் என்று சொல்லி மகிழ்ச்சிப் படுத்துவது இன்னொரு ரகம். அதேபோல சரியாக நடக்காத ஒன்றை என்னால்தான் இந்த தவறு என ஒத்துக் கொள்வது உங்களுடைய இமேஜை உயர்த்திக் காட்டும்..

o இந்த வீடு அழகா இருக்குன்னா அதற்கு முழுக்க முழுக்க என் மனைவி தான் காரணம், பிள்ளை சரியாக இருக்கான் என்றால், நான் உடல் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் அதுக்கு என் மனைவிதான் காரணம் என்று சொல்லுங்கள். உங்களுக்காக உங்கள் மனைவி செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நன்றி சொல்லுங்கள்.

o நண்பர்கள், தெரிந்தவர்கள் ஆகியோரிடம் பேசும்போது மனைவி செய்த புத்திசாலித்தனமான செயல் ஏதாவது ஒன்றை அவள் காது கேட்கச் சொல்லுங்கள். இதனால் அவள் மகிழ்வாள்.

o ஆலோசனைகளை கேளுங்கள், கவனியுங்கள். அவளது சிந்தனைக்கு மதிப்பளித்துப் புகழுங்கள். உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.



திருமணமான சில காலத்திற்குள்ளாகவே ஞாயிற்றுக்கிழமை ஓய்வாக இருந்துவிட்டு திங்கட்கிழமை காலையில் வேலைக்கு அரக்கப் பரக்க ஓடுவதைப்போல, புதிய மனைவியுடன் ஜாலியாக பொழுதைப் போக்கிய நீங்கள் வேலை, அப்படியிப்படி என ஓடுவதால் ரொமான்ஸ் தடைபடுகிறது.
ஏதோ கேள்வி கேட்பதும், பதில் சொல்வதுமாக இருக்கும் நிலை உண்டாகி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நிலை நீடிக்கும்போது யாரோ ஒருவருக்கு செக்ஸ் தூண்டல் வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடுவார்கள்.

அங்கே உடல்களின் சேர்க்கை இருக்கும், உறுப்புகளின் சேர்க்கை இருக்கும்! ஆனால் காதல் இருக்காது. உணர்வுகள் ஒன்றியிருக்காது. இப்படியிருந்தால் நாளடைவில் செக்ஸ் கூட கசக்கும்.
ஆண்மைக் குறைவு கணவனுக்கும், மனச்சிதைவு பெண்ணுக்கும் உண்டாகும். அப்புறமென்ன வாழ்க்கை நரகம்தான்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவியை காதலியுங்கள்! Empty Re: மனைவியை காதலியுங்கள்!

Post by நண்பன் Fri 1 Jul 2011 - 21:40

நீங்கள் உங்கள் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் அதை வெளிப்படுத்த வேண்டும். குடும்பச் சுமையில் களைத்துப் போய் காணப்படும் மனைவிக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்லவேண்டும், நேரத்தை ஒதுக்கி அவளை வெளியே அழைத்துச் செல்வது, இதமாக நடந்து கொள்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

எனக்காக, இந்தக் குடும்பத்திற்காக எத்தனை கஷ்டப்படுகிறாய் என சொல்ல வேண்டும். இவையெல்லாம் அவள் தனது சுமைகளை மறந்து உங்களோடு சுகத்தில் ஈடுபட வழி வகுக்கும். எந்த ஒரு திட்டம் போட்டாலும் அதைப் பற்றி மனைவியிடம் கூறி ஆலோசனைக் கேளுங்கள்.
உங்கள் நினைவில் அவளை வைத்துக் கொள்ளுங்கள்!

நீங்கள் வெளியூர் சென்றால் உங்கள் மனைவியைப் பற்றியும் நினைக்க வேண்டுமென ஒவ்வொரு பெண்ணும் விரும்புவாள். இந்த ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

வெளியூருக்கு எப்போது சென்றாலும் அடிக்கடி போன் செய்வது, போன் செய் தாலும் ஒரு கடிதம் போடுவது இப்படி எதையாவது செய்யலாம்.

உங்கள் மனைவியின் ஆசையைக் கேட்டு அதை நிறைவேற்ற உதவி செய்யுங்கள்.

o மனைவியை மதிக்கத் தெரியவேண்டும். நீங்கள் உங்கள் மனைவியின் ஹீரோவாக இருப்பதற்குத் தேவையானவை எவை என்பதை தீர்மானமாகத் தெரிந்துகொள்ளுங்கள். அவளது காதலுக்கு நீங்கள் தகுதியானவர்தான் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளுங்கள்.
எப்போதும் கடுமையாக விமர்சிப்பது, எதிர்மறையாக அவளைப் பற்றி சொல்வதெல்லாம் ரொமாண்டிக் எண்ணங்களை அவளது மனதிலிருந்து சிதறடித்துவிடும்.

பொது இடத்தில் மனைவியை ஆபாசமாகத் தொடுவது, குறிப்பாக பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் அவ்வாறு நடந்துகொள்வது ஆகியவை உங்கள் மீது மனைவிக்குள்ள மரியாதையைக் குறைத்துவிடும் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். தாய் தரக் குறைவாக நடந்து கொண்டால் எந்தக் குழந்தையும் அவளை மதிக்காது என நினைப்பாள். மனைவிக்கு சங்கடமான நிலையை உண்டாக்குவது, அச்சுறுத்தலாக இருப்பது எது என்பன போன்றவற்றை தெரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.

பெண் மட்டுமே வீட்டு வேலையை செய்துகொண்டிருக்க வேண்டும். நீங்கள் ஹாயாக ஓய்வெடுக்க வேண்டும் என்ற நிலையிருந்தால் அதை மாற்றுங்கள். மனைவிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நீங்கள் அந்த வேலையை எடுத்துச் செய்யுங்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவியை காதலியுங்கள்! Empty Re: மனைவியை காதலியுங்கள்!

Post by நண்பன் Fri 1 Jul 2011 - 21:42

மனைவி மன இறுக்கத்துடனோ நேரமில்லாமல் இருந்தாலோ அவளை பாதுகாருங்கள்.

காதலியுங்கள்!

ரொமான்சில் மிக முக்கியமானது உங்கள் மனைவி என்ன பேசுகிறாரோ அதை கேட்பது, அவள் சொல்வதை மட்டுமின்றி அவள் எந்தவித சைகையில் சொல்கிறாள் என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும். அவளை எது மகிழ்ச்சிப்படுத்துகிறது எது துக்கப்படுத்துவது என்பதையும் கேட்க வேண்டும்.

மனைவி குடும்ப விவகாரத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் பேச ஆரம்பிக்கும்போது நீங்கள் உங்கள் பொருளாதார நிலையையும், பணச் செலவையும் பற்றி பேசிக்கொண்டிருந்தால் வாழ்க்கை கசந்துவிடும்.

உடல் தேவை ஏற்படும் போது எப்போதும் விளக்கை அணைப்பது மட்டும் பெண்ணை திருப்திப்படுத்துவது ஆகாது. அவளது இதயத்திலும் இடம் பிடிக்க வேண்டும்.

செக்ஸை விட மனைவி எதிர்பாராத நேரத்தில் திடீரென அணைத்தல், திடீர் முத்தம், போன்றவையெல்லாம் ரொமான்ஸ் அதிகரிக்கும் வழிகள். கணவனாக இருப்பவர் செக்சை மட்டும் விரும்பினால் போதாது. காதலையும் விரும்ப வேண்டும். ஏன் என்றால், ஆண்கள் செக்சை விரும்புகிறார்கள், பெண்கள் காதலை விரும்புகிறார்கள்.

o மனைவி கஷ்டப்பட்டு சில வேலைகளை செய்யும்போது, அதில் நீங்களும் பங்கெடுத்துப் பாருங்கள். அந்தநேரம், அவள் மனதிற்குள் ஆனந்த மழைச்சாரலேபொழியும்.
மொத்தத்தில், நீங்கள் மனைவியிடம் எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவளும் உங்களிடம் அன்பாக இருப்பாள். நீங்கள் அவளிடம் ஒரு காதலனாய் பழகும்போது அவளும் உங்கள் காதலியாய் மாறிவிடுவாள்!

மறந்து விடாதீர்கள்!

உங்கள் மனைவிதான் உங்கள் காதலி!

உங்கள் காதலி உங்கள் மனைவிதான்!

நன்றி நீடூர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவியை காதலியுங்கள்! Empty Re: மனைவியை காதலியுங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum