Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்
5 posters
Page 1 of 1
கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்
காதல்
இளமையில் அரும்பும் இனிய உணர்வு மட்டுமல்ல; அது உண்மையாக உள்ள போது
முதுமையின் முடிவு வரை தங்கக்கூடிய ஓர் அழகான நிரந்தர பந்தம்.
கைகளைக் கோர்த்து நடப்பது காதல் அல்ல, மனங்களைக் கோர்த்து இணைவது
காதல், ஆசைப்பார்வைகள் காதல் அல்ல, மோகம் வடிந்தும் பின்னிப்பிணைவது
காதல்,
ஆனால், இந்த வரையறைக்கேற்ற காதலை இன்று அதிகம் காண முடிவதில்லை. இனிய
உணர்வாக ஆரம்பிக்கும் காதல் விரைவிலேயே கசப்பான அனுபவமாகி விடுகிறது.
காரணம் திரைப்படங்கள், காதல் கதைகள் எல்லாம் திருமணமே காதலின் வெற்றி
என்ற பார்முலாவை இளைஞர் மனதில் பதித்து விட்டது தான் என்றும் சொல்லலாம்.
பார்த்துக் காதல், பார்க்காமல் காதல், மோதல் காதல், மோகக்காதல்,
இரக்கக்காதல் என்று ஏகப்பட்ட காதல்கள் வெள்ளித்திரையில் காட்டப்பட்டாலும்
திருமணத்தோடு அங்கு காட்சி முடிந்து விடுகிறது. அதன் பிறகு எல்லையில்லாத
ஓர் இன்பப் பயணம் தான் என்ற கற்பனை காண்பவர் மனதில் விரிகிறது. ஆனால்,
உண்மையில் திருமணம் காதலின் வெற்றியல்ல. அது காதலின் வெறும் நுழைவுத்
தேர்வே. உண்மையான வெற்றி அந்த ஆரம்ப இனிமையைக் கடைசி வரையில் தக்க
வைத்துக் கொள்வது தான்.
திருமணத்தில் முடியாத காதல் சோகமானாலும் அது பல இனிய நினைவுகளை
சாசுவதமாக மனதில் தக்க வைத்துக் கொள்கிறது. ஆனால் திருமணத்தில் முடிந்த
காதல் பல சமயங்களில் கலைந்த கற்பனைக் கனவுகளாகவும், கானலைத் தேடி ஓடிய
ஓட்டமாகியும் விடுகிறது.
இதெல்லாம் எதனால்? எங்கே தவறு நிகழ்கிறது என்று சிந்தித்தால் ‘புரிந்து
கொள்ளுதல்’ என்கிற அம்சம் இது போன்ற காதலில் இல்லாமல் போகிறதால் தான்.
கண்மூடித்தனமான காதல் என்றும் கசப்பான அனுபவமாகவே முடியும். எனவே
காதலிப்பவர்களே கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு காதலியுங்கள்.
முதலில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நிறைய
கேளுங்கள். நிறைய கவனியுங்கள். அவசர முடிவுகளைக் கண்டிப்பாக
எடுக்காதீர்கள். காதலிக்கும் நேரத்தில் காதலிப்பவரிடம் ஒரு குறையும்
தெரியாது விட்டால் நாம் கண்களை மூடிக் கொண்டு காதலிக்கிறோம் என்று
அர்த்தம். காதலிப்பது மனிதப்பிறவியை என்றால் குறைகள் கண்டிப்பாக இருக்க
வேண்டுமல்லவா? அந்தக் குறைகளில் முக்கியமான சிலவற்றையாவது அறிந்திருங்கள்.
அவர்களுடைய முக்கிய பலவீனங்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவை உங்களால்
சகித்துக் கொள்ள முடிந்தவையா, பொறுத்துக் கொள்ள முடிந்தவையா என்று
யோசித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் தேனிலவு முடிந்த பின்னர் நீங்கள்
தினமும் சந்திக்கக்கூடியவை அவை.
உண்மையான காதல் இருக்கும் போது மாறுவதும் சுலபம், மாற்றுவதும் சுலபம்.
ஆனால் காதலின் பலத்தை விடக் குறைகளின் தாக்கம் பெரிதாக இருக்கையில்
மாறுதல் சுலபமல்ல. பெரிய பாதிப்பில்லாத குறைகளையும் பலவீனங்களையும்
பொறுத்துக் கொள்ளலாம். அலட்சியப்படுத்தலாம். ஆனால், அவை சகித்துக் கொள்ள
முடியாதவையாக இருக்கும் போது, அதை உணர்த்தி மற்றவரை மாற்றவும் முடியாத
போது காதல் முன்பு கொடுத்த மகிழ்ச்சிக்கு மும்மடங்கு துக்கத்தைத் தருவதாக
அமைந்து விடும் என்பதற்கு எத்தனையோ பேர் வாழ்க்கையே சாட்சி.
வாழ்க்கை மூன்று மணி நேர சினிமா அல்ல. வாழ்க்கையின் எல்லை வரை நீளும்
உண்மைக் காதலை சினிமா மூலமோ, கற்பனை மூலமோ தெரிந்து கொள்ள முடியாது.
சர்க்கரையைப் படத்தில் பார்த்தோ, எழுதியதைப் படித்தோ அதை சுவையை உணர
முடியாது. சாப்பிட்டால் மட்டுமே அதன் இனிப்பை உணர முடியும். காதலும்
அப்படித்தான். பார்த்த சினிமாவை வைத்தோ, படித்த கதையை வைத்தோ
கண்மூடித்தனமாய் ஏற்படும் கவர்ச்சியைக் காதல் என்று எண்ணி ஏமாந்து
விடாதீர்கள். அந்த உண்மைக் காதலின் உன்னதத்தை உணர வேண்டுமென்றால் கண்களைத்
திறந்து வைத்துக் காதலியுங்கள். அது முடிந்தால் உண்மையான காதல்
உங்களுக்குக் கைகூடக்கூடும். அதன் மூலம் கிடைக்கும் பேரானந்தத்தை கடைசி
மூச்சு வரை நீங்கள் அனுபவிக்கக்கூடும்.
தினசரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்
எப்பா எவளவு பெரிய விடயம் ரொம்ப காதலிச்சிருப்பிங்க போல
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்
யாரைச் சொன்னீர்கள் என்னையா?lafeer2020 wrote:எப்பா எவளவு பெரிய விடயம் ரொம்ப காதலிச்சிருப்பிங்க போல
(:)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்
இந்த படம் அழகாக உள்ளது.
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்
ஹனி wrote:
இந்த படம் அழகாக உள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்
நண்பன் wrote:ஹனி wrote:
இந்த படம் அழகாக உள்ளது.
ஏன் அண்ணா இப்படி பொல்லுடன் நான் என்ன தவரு செய்தேன். :!#: :!#:
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்
கட்டுரை பிடிக்க வில்லையா மேடம் :queen:ஹனி wrote:நண்பன் wrote:ஹனி wrote:
இந்த படம் அழகாக உள்ளது.
ஏன் அண்ணா இப்படி பொல்லுடன் நான் என்ன தவரு செய்தேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்
நண்பன் wrote:யாரைச் சொன்னீர்கள் என்னையா?lafeer2020 wrote:எப்பா எவளவு பெரிய விடயம் ரொம்ப காதலிச்சிருப்பிங்க போல
அப்பா அப்பப்பா நண்பன் என்ற போயரை மாற்றி காதலன் என்று வைக்கலாம் என்று தோன்றுது என்ன அருமை என்ன அருமை என்னால் எப்படி உங்களை பாராட்டுவது என்று தொரியல்ல இப்படி நிறைய தகவல்களைத் தாங்க நண்பா
உங்கள் காதலும் கடைசிவரை மலர எனது வாழ்த்துக்கள்
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்
நண்பன் wrote:கட்டுரை பிடிக்க வில்லையா மேடம் :queen:ஹனி wrote:நண்பன் wrote:ஹனி wrote:
இந்த படம் அழகாக உள்ளது.
ஏன் அண்ணா இப்படி பொல்லுடன் நான் என்ன தவரு செய்தேன்.
அப்படி இல்லை இந்த கட்டுரைக்கு அந்தப்படம்தான் அழகு சேர்த்ததுன்னு நான் நினைத்தேன். கட்டுரை அருமை.
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்
இப்பதான் நின்மதி எனக்கு நன்றிங்கம்மணி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்
நண்பன் தான் காதல் மன்னன் ##* ://:-:
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்
:() :()kiwi boy wrote:நண்பன் தான் காதல் மன்னன் ##* ://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மனைவியை காதலியுங்கள்!
» மனைவியை காதலியுங்கள்
» கடைசி வரை காதலியுங்கள்...
» ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
» மனைவியை காதலியுங்கள்
» கடைசி வரை காதலியுங்கள்...
» ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum