சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Tue 10 Dec 2024 - 15:18

» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48

» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44

» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43

» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42

» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41

» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38

» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37

» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36

» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30

» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29

» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28

» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26

» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25

» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24

» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34

» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Khan11

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

+3
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by Nisha Sat 14 Nov 2015 - 3:18

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Download

ஆம் ஒரே வார்த்தையாய் ... பேசாதே! பாராதே! செய்யாதே! இப்படி தே தே என தேவைக்கும் மேலேசொல்லும் போது சொல்லும் நமக்கு  நம் சொல் தேனாய் தான் இனிக்கின்றது. அதை நாமே செயல் படுத்தி பார்க்கும் போது தான் அதன் கஷ்ட நஷ்டம் புரிகின்றது...!

ஆனாலும்??

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி.என்பர்.அது எனக்கு இச்சூழலில் நன்கு பொருந்தும் எங்கேயோ எப்படியோ இருந்த நான் இந்தபக்கம் வந்து .. கண்ணை கட்டி காட்டில் விட்டது போல திக்குதெரியாமல்அலையும் படி ஆனதே என  முதல் நாள் நொந்தே போனேன்! வலையும் வேண்டாம், மீனும் வேண்டாம் ஆளை விடுங்கப்பா என சம்ஸிடம் சொல்லியும் ஆனது! 

ஆனாலும் குமார்  விடுவதாயில்லையே! தளம் திறந்ததோடு தன் வேலை முடிந்தது என செல்லாமல் என்னை ஊக்கப்படுத்தி அதை போடுங்க அக்கா இப்படி எழுதுங்க அக்கா என பதிவும் போட வைத்து... அதுக்கு விளம்பரமும் செய்து... இன்னும் கடவுட்,பேனர் தான் பாக்கி...எனும்படிக்கு  என்னை  பதிய வைக்க தன் சிந்தனை சிறகை விரித்து என் மனசெல்லாம் பரந்து பறக்கும் குமார் இருக்க என் மனதில் தோன்றுவதை பதிவதற்கு பயம் ஏன் எனும் தைரியத்தினையும் தந்து விட்டார். 

தம்பியுடையான் சண்டைக்கஞ்சானாம்.. நானும் அஞ்ச மாட்டேன்பா.. அதான் எங்க சேனைப்படை எனக்கு பாதுகாப்பா தினம் தினம்  திட்டி திட்டி, தட்டிக் கொட்டி .. அப்படி செய்யக்கா.. இப்படி செய்யக்கா உன் கூட யாமிருக்க பயமேனக்கா என வழி நடத்துகின்றதே! என் கைவிரலை பிடித்து வழி நடத்தி எழுத வைக்காதது தான் பாக்கி! 

நினைத்து பார்க்கின்றேன்.. இத்தனைக்கும்  நான் என்ன தவம் செய்தேன்? எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து வாழ்ந்து... இது வரை முகம் பாராமலே... மனம் உணர்ந்து என்னை உயிர்ப்பிக்கும் இவர்கள் அன்புக்கு நான் என்ன செய்து விட்டேன்?அபிப்ராய பேதங்களும் புரிதலின்மையும்.... உடன் பிறந்தோரையேயே விரோதியாக்கும் இக்காலத்தில் நிஷா அக்கா என அழைத்து அன்னையைபோல் பாசம் காட்டி என்னுள் அடங்கி என்னை அடக்கும் அன்பை கொட்டும் இவர்கள் யார்?

சொல்லத்தானே வேண்டும்!

எங்கள் சேனையில் அன்பு மட்டும் தான் பேசும். மதமும்,இனமும் மொழியும் பேசுவது என்ன.. உரசக்கூடச்செய்யாது. எம் அன்பு புரியாதோருக்கு புதிர் தான். புரிந்தோரோ... எம் ஜோதியில் தாமும் ஒருவராகி என்னுள் உயிர்ப்பர்!

ஆம் உயிர்ப்புத்தான்... மனிதம் மறந்த இப்பூவுலகில் மனிதராய் வாழ நாம் ஒவ்வொரு நொடியும் உயிர்க்க வேண்டி இருக்கின்றதே! எனக்கு மட்டும் விதிவிலக்காகுமா? 

என்னை சுற்றி ஒரு வட்டம் என்னை உயிர்ப்பிக்க.... இரவும் பகலும் இருபத்தி நான்கு மணி நேரமும் பாதுகாப்பாய் இருக்கின்றார்கள் என்பதே என்னை வானுயரும் உயரத்தில் கொண்டு போய் விட்டிருக்கின்றது என சொல்வேன்..! 

நாடோடியாய் புகலிடம் தேடி வந்த நாட்டில். நாலு பேர் பார்த்து ஆச்சரியப்பட நான் ஏதேனும் சாதித்தேன் எனில் அதற்கு முதல் காரணம் நான் கொண்ட இறை நம்பிக்கை எனில் இறையின் வழிகாட்டலாய் என்னை வழி நடத்தியதெல்லாம் என்சுரேஷ் அண்ணா,சுதா அண்ணா,முஸம்மில், சம்ஸ், ஹாசிம்,, குமார், பானு, ஜானி எனும்பெரும்படையணி தரும் உந்து சக்தி தான். இவர்களின் உற்சாகம் தரும் வார்த்தைகள் தான் என்னை இத்தனை நாளும் இயக்கியது என்பேன். 

பூஜ்ஜியமாயிருந்த என்னை... உன்னால் முடியும்மா.. நீ சாதிப்பே என என்னை உயர்த்திய ஒவ்வொருவர் பற்றீயும் அவர்கள் எனக்காக செய்தவை பற்றியும் தான் நான் முதலில் உங்களுடன் பகிரபோகின்றேன்.. 

நானும் பிறந்தேன், வாழ்ந்தேன், மறைந்தேன் என்றில்லாமல் எதையேனும் செய்தேன் என எவரேனும் சொன்னால் அதன் பின்னால் இறைவனின் கருணையோடு.. என் மேல் நான் கொண்ட நம்பிக்கையோடு ,என்னவர்,என் மகன், மகள்  துணை மட்டுமல்ல... என்னை சுற்று பூச்சரமாய் சூழ்ந்து நிற்கும் என் அன்பு பாசமலர்களும் தான் காரணம்..! 

எதையும் சொல்தல் எளிது தான்..அதை செய்தல் செந்தணலை கடப்பது  போலிருந்தாலும்... என் பாதம் படும் இடமெல்லாம் குளுமையாயிருக்க வேண்டுமே என எனக்காக பாடு படும் என் உடன் பிற்வாமல் என்னுடன் பிறப்பாய் ஆனோருக்கு இந்த வலைப்பூவும் பதிவுகளும் சமர்ப்பணம்!

இப்பட்டியலில் இனிமேல் இதை படிக்கும் நீங்களும் சேரலாம்.
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு

http://alpsnisha.blogspot.ch/2015/11/blog-post_14.html

Last edited by Nisha on Sat 14 Nov 2015 - 14:38; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 14 Nov 2015 - 8:39

அக்கா ஒரு விதத்தில் நாம் அனைவரும் ஒரே விதமான தேவையுடையவர்கள் எம் உறவுகள் கடந்து வெளிநாடுகளில் வாழும் எமக்கு தேவையான ஒன்றாக இருந்தது பாசம் பகலெல்லாம் பணியோடு முடங்கிக் கிடக்கும் நாம் பரிவோடு உறவாட உறவுகளில்லை என்பதால் இவ்வாறான இணையத் தொடர்புகளில் இணந்த எமது உறவு அனைத்து உறவுகளையும் தாண்டி சிறப்படைந்திருக்கிறது என்பதுதான் உண்மை 

அதையும் தாண்டி எம் அனைவருக்குள்ளும் இருந்த தமிழுணர்வும் திறமையும் இன்னுமின்னும் எம்மை வியக்கச்செய்திருக்கிறது ஆதலால் அத்தனையும் தாண்டி இணைந்துவிட்டோம் இணைபிரியா உறவாக. 

தொடருங்கள் அக்கா வாழ்த்துகள்

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by நண்பன் Sat 14 Nov 2015 - 12:27

உங்களின் இறை நம்பிக்கையும் உங்கள் முயற்சியும் உங்களை இத்தனை தூரம் வரை உயர்த்தி இருக்கிறது என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது  அத்தோடு என்றும் உங்களுக்கு ஆறுதலாகவும் பக்க பலமாகவும்  தேவைப் பட்ட நேரம்  அறிவுரைகள் மட்டுமல்லாது ஆறுதலாகவும் உங்கள் மனதில் மிளிர்ந்த எட்டு நட்சத்திரங்களுல்  நானும் ஒருவன் என்று எண்ணும் போது மனது மகிழ்ச்சியாக உள்ளது

இந்த நேரம் வரை உங்களுக்கு உங்களுடன் கூடவே பயணித்த உங்கள் துணைவர் மற்றும் மகன் மகள் அனைவரையும் இந்த நேரம் எண்ணிப் பார்க்கிறேன் மகிழ்ச்சியாக உள்ளது  தமிழால் நாம் ஒன்று சேர்ந்திருக்கிறோம் வாழ்க தமிழ் வளர்க உங்கள் வெற்றிப்பயணம் அத்தோடு உங்கள் நற்சேவைகள் பொது நல எண்ணங்களுடன்   என்றும் இறைவன் உங்களுக்கு தேகாரோக்கியம் காத்து மகிழ்வை நிலைத்திடச்செய்ய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

என்றும் மாறா அன்புடன்
நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by Nisha Sun 15 Nov 2015 - 4:37

கடவுளைக்கண்டேன் 

பூவைப்பறிப்பதற்கு  கோடாரி எதற்கு எனக்கேட்கும் கில்லர்ஜி 
கையில் நகச்சுத்தி வந்து  ரெம்ப  சீரியஸா ஹாஸ்பிடல்ல இருக்கின்றாராம் அவரை சுத்தி  20 டாக்டர்களும், 30 நர்சுங்களும்  நின்று கொண்டு கடவுள் வருவாரா? சம்மதம் தருவாரா எனகாத்துக்கொண்டிருப்பதாகவும்... கடவுள் வரவேண்டும் எனில்  இப்பூவுலக தமிழ்ப் பதிவர்கள் அனைவரும் கடவுளை சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும் எனவும் அக்கோரிக்கைகளை  கடவுள் நிறைவேற்றிய பின் தான் டாக்டர்களை சந்தித்துஆப்ரேசனுக்கு அனுமதி அளிப்பார் எனவும் வானத்திலிருந்து  அசரிரி வந்ததாம். 

கனவில் அந்த சத்தம்  கேட்டு பதறிஅடிச்சு எழுந்த சிந்தனைகளை சிறைகௌ விரித்து  பறக்க வைக்கும் நம்ம  மனசு குமார் தன்னோட இன்னும் பத்து பேரு சேர்ந்து போய் கோரிக்கை வைத்தால் கடவுள் சீக்கிரமே தன்னை சந்திக்கவே ஒப்புக்கொள்வார் என  நினைத்து மனுஎழுதிக்கொண்டு  சிபாரிசுக்கு ஆல்ப்ஸ் தென்றல் நிஷா  பேரையும் முதலாவதா போட்டு விட்டார். 

நிஷாவும் அவர் கூப்பிட்டாரே என  பின்னாடி போய்.. கனவில் கடவுளை கண்டேன், கடவுளை கண்டேன் என கண்டதா சொல்லிக்கொள்கின்றார்களே! கடவுளை எங்கே போய் கண்டிருப்பார்கள். அவர் ரெம்ப தூரத்திலா இருக்கின்றார்? என ஒன்றும் புரியாமல்   ஞே என விழித்துகொண்டு நிற்கிறாராம்!

கடவுள் இரவும் பகலும் இருபத்து நான்கு மணி நேரமும் இந்த   ஆல்ப்ஸ் தென்றல் நிஷா வீட்டில் நிரந்தரமாக வாடகை தராமல் தங்கி ஓசியில் சாப்பிட்டு  தூங்கி கொண்டிருக்கின்றார் எனும் ரகசியம் இன்னும் குமாருக்கு தெரியாத வரைக்கும் நல்லது தான்!

நல்லது செய்தால் என்னை உயர்த்தும் என் தேவனுக்கே ஸ்தோத்திரம் என சொல்வதும்... தீமையோ துன்பமோ நடந்தால்... எல்லாமே நன்மைக்கு தான்.. என் கூட கடவுள்  இருக்க என்னால் தாங்க இயலா துயர் என்னை அண்டாதே எனும்  தன்னம்பிக்கையும், அப்படி எனக்கு  பெரிய கஷ்டம் தந்து  விடுவாரா என் கடவுள் எனும் அகம்பாவமும்.. அகம்பாவம் போக்க  வந்த துயர்முன்னே என் தப்பை உணர செய்ய  இதை அனுமதித்தீரோ என உரிமையாய் திட்டுவதுமாய்.. தினம் தினம் ஒவ்வொரு நொடியிலும் அவரை நினைத்து அவருடன் பேசிட்டு நான் காண்பதில் கேட்பதில்  எல்லாம் அவரைத்தானே கண்டு கொண்டிருக்கின்றேன். 

இருந்தாலும்  எனக்குள்ளும் அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்இருக்கத்தான் செய்கின்றது.. அத்தோடு மனசு குமார் ரெம்ப நம்பிக்கையாக தன்னோட அக்காவை கடவுளை சந்திக்க வைக்கணும் என ஆசைபட்டு முதல் ஆளா நிற்க வைத்திருப்பதால்... குமாருக்காக நானும்எங்கூடவே இருக்கும் கடவுளிடம் என் ஆசையை சொல்லலாம் என முடிவு செய்து விட்டேன். 

சரி ஸ்டாட் செய்திரலாமா?

என்னோட வேண்டுதல்கள்! 

1.நிஷா_ என்னோட 13 வயதில் எனக்கு ஏற்பட்ட விபத்தும்   இரண்டாம் மாடியிலிருந்து பின்னந்தலை அடிபட விழுந்ததும் அதனால் தொடரும் அனைத்து பாதிப்புக்கள்  காது, கண் , தலை என தொடரும் வலிகள் அனைத்தும் என்னை விட்டு நீங்கி நான் மீண்டும்  13 வயதுக்கு முன்னாடி இருந்தது போல்  படிப்பில் விளையாட்டில்  என அனைத்திலும் முதலாகிடணும். அப்படியே என் டாக்டராகும் கனவும் நிறைவேறணும்....!. 

கடவுள்> அடப்போம்மா!இதை என்னால் நிறைவேற்றவே முடியாதும்மா. என் கிருபை உனக்கு போதும் மகளே போதும்!  உனக்கு எல்லா திறமையையும் நான் தந்திட்டால் நாளைக்கு என்னையே நீ யாருன்னு கேட்பே மகளே!

 நிஷாவின் மனசாட்சி> அவர் சொல்லிட்டார்..ஆனால் நான் தான் இன்னும்  ஏன் இப்படி அனுமதித்தே என அவரை  தொல்லை செய்திட்டே இருக்கேனாம். பாவம் கில்லர்ஜி சார்!

2.நிஷா_ இந்த பூமியிலும் சரி  பூமி தாண்டிய அண்ட லோகங்களிலும் சரி இனிமேல் பசி என்னும் சொல்லே இருக்க கூடாது.. யாருக்கும் பசிக்கவே கூடாது. இளமையில் கொடுமை வறுமை என்றால் வறுமையில் கொடுமை பசிதானே. அதை மொத்தமாக இல்லாமல் போக செய்யும் படி எல்லோருக்கும் எல்லாமும்  உணவுப்பொருளிலாவது  முழுமையாகிடைக்க வேண்டும் கடவுளே! 

3.கடவுள்> மகளே! பூலோக மக்கள் அனைவரும் தினம் அதிகாலை எழுந்து உடல் களைக்க தோட்டத்தில் வேலை செய்து  தினம் தினம் தம் வியர்வையை நிலத்தில் சிந்தி விளையும் காய்கனிகளை புசிக்கின்றோம் என வாக்கு கொடுக்க சொல்லு மகளே நான்  நீ கேட்டதை இதோ ஒரு நொடியில் நிறைவேற்றி வைக்கின்றேன் என அவர் என்கிட்ட ஏட்டிக்கு போட்டியால்ல கேட்கின்றார்...

நிஷாவின் மனசாட்சி> ஐயகோ... நம்ம கில்லர்ஜி அண்ணாவின் நகச்சுத்தி.........!ஆப்ரேசன்... கோவிந்தாவா?  குமாரு உனக்கு இதெல்லாம் தேவையா.. உன்னை போய் கடவுளை   சந்தித்து கேளு என சொன்னால் நீ என்னத்துக்கு இந்த  ஆல்ப்ஸ்தென்றலை கூட்டிகிட்டு போனேன்னு குமாருக்கு திட்டுறது உங்களுக்கு கேட்குது தானேங்க பெரியவர்களே!!

4.நிஷா_ இந்த உலகத்தில் பணம் நோட்டு, குடிசை, பங்களா, நகை நட்டு எனஎதிலுமே ஏற்றத்தாழ்வு எதுவுமே இருக்க கூடாது கடவுளே! எல்லோருக்கும் எல்லாமும் சமமாய் இருக்கணும். எல்லோரும் ஒரே மாதிரி வீட்டில் ஒரே மாதிரி நகை  நட்டு சொத்து பத்து என வைத்து இருக்க வேண்டும்.  உதவி செய்யுங்களேன் கடவுளே!

5.கடவுள்> ரெம்ப சுலபம் என் மகளே சுலபம்..  நீங்கல்லாம்  உங்களிடம் இருக்கும் சொத்து,  நகையையெல்லாம்   வேண்டாம் என சொல்லி  குப்பை பையில் வைத்து கட்டி வீசி விடுங்கள்..  நான் அதையெல்லாம் தெருத்தெருவாய்  போய்  பொறுக்கி எடுத்து சரி சமமாய் உங்களுக்கே பிரித்து தருவேன்.  டீலா நோ டீலா மகளே!

நிஷாவின் மனசாட்சி> அட்ட்ட்ட்ட்டா என்னப்பா இது. இந்த கடவுள் ரெம்ப பொல்லாதவரா இருக்கின்றாரே.. அப்படின்னால் நம்ம சுவிஸ் வங்கியில் இருக்கும் பிளாக் மணில்லாம்  எடுத்து கொடுத்திருவாங்களா?.. நாங்க சுவிஸ்ல இருக்கோம்னு இனி பெரும்ம்ம்ம்ம்ம்ம்மையா சொல்லிக்கமுடியாதா?  சுவிஸும் மத்த நாடுகளும் ஒன்று போலாகிருமா?

நோ...வே --- சுவிஸ் வங்கில எல்லார் பிளாக் மணியும் இருக்கட்டும். அப்போது தான் எங்ஊருக்கு பெருமை. நாங்கல்லாம்  பெரியவுகளாக இருக்கலாம்ல... சுவிஸ்னால் சும்ம்ம்ம்மாவா? அதிரும்ல!

அப்படின்னால் கில்லர்ஜி ஆப்ரேசன் ?? 

நானா குமாரை என்னை சிபாரிச்சுக்கு கூட்டித்து போ தம்பின்னு கெஞ்சினேன்..இழுத்திட்டு போனார்ல .. கில்லர்ஜிகிட்ட மாட்டிகிட்டு ஙே  என முழிக்கட்டும்.  

6.நிஷா_ கடவுளே கடவுளே கடவுளே  நீ தானே என்னையும் எல்லோரையும் படைத்தே.. படைத்த நீயே ஏன் கடவுளே மரணம் எனும் ஒன்றை யும் தந்து எங்களை பிரிக்கின்றாய்! மரணமே இல்லாத ஒரு வரம் தாருங்கள் கடவுளே!

7.கடவுள்> சரிம்மா நீ சொல்லும் படியே செய்து விடுவோம்!  இந்த உலகத்தில் இருக்கும் நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாகி எனக்கு என ஒரே ஒரு பெயரை வைத்து  கோயில், சர்ச், மசூதி என தனியாய் குடியமர்த்தாமல் நான் உங்க மனசுக்குள் மட்டும் குடியிருக்க இடம் தரணும். என்னை தவிர எவனுக்கும் அவன் சொன்னான் இவன் சொன்னான்னு என் அண்ணன் தம்பி வந்து சொன்னாலும் கேட்க கூடாது.  என்னம்மா நிஷா நான் சொல்வது உன் காதில் நல்லா கேட்குது தானே?

நிஷாவின் மனசாட்சி> இது என்னப்பா இம்மாம் பெரிய குண்டை தூக்கி போடுறாரு இந்தக்கடவுள். நாமல்லாம்   நம்ம மனசாட்சி சொல்றதை கேட்கிற தில்லையே தவிர ஊரில இருக்க அத்தனை பேர் சொன்னதையும் கேட்டு தானே எதுன்னாலும்செய்வோம் இது நடக்குற விடயமா சொல்லுங்க. அதிலயும் ஒரே கடவுளாம் கடவுள். 

நிஷாக்க்க்க்கா! எங்கூர் தேவகோட்டை ஜமீன் நானாத் தாதாஜி  மீசைக்கார அண்ணாச்சிக்கு சீக்கிரம் குணமாக வரம் கேளுன்னால் நீ என்னா பண்ணிட்டிருக்கேக்கா?  
குமாரின் பல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் நற நற....!

8.நிஷா_ சரிங்க கடவுளே! உங்களுக்கும் இல்லை எனக்கும் இல்லை... இந்த அரசியல் வாதிங்களையும் சாமியார்களையும்  இந்த பூமியை விட்டு நாடு கடத்தி கூட்டிகிட்டு போயிருங்களேன்! நாங்க நிம்மதியா இருப்போம். இவங்க தான் தாங்க சொத்து சுகம் சம்பாதிக்கணும் என ஒன்னும் தெரியாத அப்பாவி மக்களை  மதம் எனும் பெயர சொல்லி தீவிரவாதிங்களை உருவாக்கி கொண்டே இருக்கின்றார்கள். நாங்கள் பாவம் தானே கடவுளே!

கடவுள்>  நிஷாம்மா நான் தூங்கிட்டிருக்கேன் என்னை  தொந்தரவு செய்யாதேம்மா! விடும்மா!

நிஷாவின் மனட்சாட்சி> ம்ம்ம்கூம் கடவுள் தூங்கிட்டிருக்காராமே!அப்ப இதுவும் க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கயாவா! கில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லர்  ஜீஈஈஈஈ கிட்ட மாட்டிக்காதே நிஷா! எங்காச்சும் ஓட்ட்ட்ட்டீரு நிஷா!

9.நிஷா_  சுவாமியே சரணம்! அடுத்த வருட வலைப்பதிவர் மாநாட்டை  சுவிஸில்  ஆல்ப்ஸ்தென்றலின்  ஊரில் நம்ம  Hegas Catering, Fine Indian & Swiss Food Services  தலைமையில் வைக்க அருள் கூரும் சுவாமி. இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை தமிழ் வலைப்பதிவர்களும் நம்ம ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்டு போய் புதுக்கோட்டையில் நடந்த பதிவர் மா நாட்டை விட பெஸ்ட்டு பெஸ்ட்டு  ஆஹா ஓஹோன்னு மட்டும் எழுதணும் கடவுளே!  

கடவுள்> என்னம்மா இப்படி பண்ணுறியேம்மா! உனக்கு வேற வேலையே இல்லையாம்மா! சும்மா நங்கு நங்குன்னுட்டு  உன் கம்பெனிய பத்தி தான் எல்லா இடமும் பேசுவியாம்மா! போம்மா  போய் அடுப்படில ஏதாகிலும் வேலை இருந்தால் பாரும்மா!

நிஷாவின் மனசாட்சி>  நோ கடவுளே நான் ஒவ்வொரு ஞாயிறும் சர்ச்சுக்கு ஒழுங்கா வந்தேன்ல.. காணிக்கை போட்டேன்ல.. ஜெபிச்சேன்ல.. நீ எப்படி நான் கேட்டதை தரமாட்டேன்னு சொல்லுவே!  நம்ம  ஐயாக்கள் அண்ணாக்கள், தம்பிக்கள்,அக்காக்கள் தங்கைகள் எல்லாம் இதை வைத்தாவது சுவிஸுக்கு வந்திட்டு போகட்டும் என நினைச்சால் எனக்கே வேட்டு வைக்கிறியா கடவுளே.. இனி உனக்கு காணிக்கை கட்!

10.நிஷா_  கடைசி கடைசியா கேட்கின்றேன் கடவுளே!   என்னை  பெரிய்ய்ய்ய்யா ஆளுன்னு எல்லோர் கிட்டயும்  சொல்லி விளம்பரப்படுத்தும் எங்க குமாருக்காக கேட்கின்றேன் கடவுளே.. என் தும்பியையும் சீக்கிரமாக  வலைப்பூவில் பதிவு எழுதும் ஆர்வத்தினை கொடுத்து விடு கடவுளே! என்னை விட தும்பி நல்லா எழுதும் கடவுளே!

கடவுள்> ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா  உன் வேண்டுதல் சீக்கிரம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் மகளே! ஆனால் உன் தும்பி காதல் தோல்வி கவிதை மட்டும் எழுதவே கூடாது.  சொல்லிட்டேன்.. மீறி எழுதினால்.. கில்ல்ல்ல்ல்ல்ல்ல்லார் ஜி ??  

நிஷாவின் மனசாட்சி>  ஐயகோ! இது நடக்கும் காரியமாங்க! தும்பிக்கு அறூபது வயதாகி தலையெல்லாம் நரைச்சாலும் என்  மனைவியை புதிது புதிதாக்காதலிக்கிறேன் அக்கான்னு என் காதை அறுத்திட்டிருப்பானே! 

கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் தரமாட்டான்னு இதை தான் சொல்வார்களாம்!

வெரி ஸாரி கில்ல்ல்ல்ல்ல்லர்ஜி.... பெட்டர் தென் நெக்ஸ்ட் ரைம்! நகச்சுத்திக்கு ஆப்ரேசனை விட நகத்தை  கழட்டி கொடுத்திட்டால் சரியாகிரும். நீங்க கவலையே படாதிங்க கில்லர்ஜி.... பூப்பறிக்க கோடரி தேவையே இல்லை கில்லர்ஜி சார்!  நான் என்கையாலேயே பறித்து விடுவேன் சார். 

குமாரின் வாய்ஸ்! அட போக்கா நீயும் உன் மனட்சாட்சியும்...  நாலும் தெரிந்த மாதிரி பீத்திகிட்டியேன்னு  உன்னை எனக்கு சிபாரிசுக்கு வா என கூப்பிட்டால் இப்படியா சொதப்பி விடுவே!  உன்ன்ன்ன்ன்ன்ன்ன்னை!உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

கடவுளை நான் தேடிப்போய் சந்திக்க அவசியம் இல்லாதபடி அவர் என்னை சுத்தி அரணாய் பாதுகாத்து வருகின்றார் எனும் அசைக்கமுடியாத நம்பிக்கை என்னுள்! தேவைகளும், ஆசைகளும் இல்லாதபடியால் இல்லாதவைகள் குறித்த கவலைகள் என்னுள் இல்லை. 

அந்த நம்பிக்கைக்கு ஏற்ப இன்று வரை என் தேவைகள் குறைவானதும் இல்லை. எனக்கு எது தேவையே அவைகளை எனக்கென நிச்சயித்த நாளில் கொடுத்து அன்பான கணவர், அழகும் அறிவுமான இரு குழந்தைகள். ஏனையோர் ஆச்சரியமாய் பார்க்கும் படி நல்லதொரு தொழில் நிறுவனம் நிர்வாகம் அதன் வளர்ச்சி என என்னுள் என்னையும் தன்னையும் உயர்த்தும் இறைவனுக்கே அத்தனை புகழும். 

இருப்பினும் மிகச்சுவாரஷ்யமான பதிவொன்றினை தொடங்கி அதில் நானும் பங்கிடும் படியாய் வாய்ப்பினை தந்த  கில்லஜி சார், குமார் ஆகியோருக்கும் இதைப்படிப்போருக்கும், கருத்திட்டு ஊக்கம் தருவோருக்கும்  நன்றி1நன்றி!

 தொடர்ந்திட.... 
நானே இங்கே ரெம்ப புதியவள். எனக்கு இன்னும் கொஞ்ச காலம் வேண்டும், தெரியாதவர்களை இணைத்தால் அவர்கள் கோபித்து விடுவார்களோ என தயக்கமாக இருக்கின்றது.  அத்த்டோடு இதுவரை  யாரெல்லாம் இணைக்கப்பட்டார்கள் எனவும் புரியவில்லை. இருப்பினும் நான் அறிந்த இருவரை இங்கே இணைக்கின்றேன் . மன்னிக்க.... 

பத்துப்பேரை கட்டாயம் பரிந்துரைக்க வேண்டும் எனில் ஒரு நாள் நேரம் கொடுங்கள். 

சிந்தனைச்சிதறல்கள் ஹாசிம்
வரதட்சனைக்கெதிராக மிகத்தீவிரமாக குரல் கொடுப்பவரும் எழுதுபவரும் கடைப்பிடித்தவரும் அன்புதம்பியும் சேனைத்தளபதியுமானவர். 

தோட்டம் சிவா 
இவருக்கு என்னை தெரியாது. இவரின் தோட்டம் பதிவுகள் மிக அத்தியாவசியமானவைகளாயும் எம் தேவைகளை பூர்த்திப்பதாயும் இருப்பதனால் இவரின் பதிவுகள் பிடிக்கும்.

http://alpsnisha.blogspot.ch/2015/11/blog-post_15.html

Last edited by Nisha on Sun 15 Nov 2015 - 12:56; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by நண்பன் Sun 15 Nov 2015 - 10:36

மொத்தமும் படித்து முடித்தேன் தலை சுத்திக்கிட்டு வந்திச்சி கடைசியில் எல்லாம் சரியாகி விட்டது.    ஷப்பே  இப்பவே கண்ணக்கட்டுதே
தொடரட்டும் உங்கள் அரட்டைகளும் அசத்தல்களும் அடியேனுக்கு சேனையே சொந்தம்
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by Nisha Sun 15 Nov 2015 - 12:16

நண்பன் wrote:மொத்தமும் படித்து முடித்தேன் தலை சுத்திக்கிட்டு வந்திச்சி கடைசியில் எல்லாம் சரியாகி விட்டது.    ஷப்பே  இப்பவே கண்ணக்கட்டுதே
தொடரட்டும் உங்கள் அரட்டைகளும் அசத்தல்களும் அடியேனுக்கு சேனையே சொந்தம்
நன்றியுடன் நண்பன்

முழுமையாக என் பதிவினை படிக்கவில்லை என் இதை வைத்தே புரிந்திட முடியிது .என்னமோ வித்தியாசமாகத்தான் படுகின்றது.    உங்களை சேனையை விட்டு வாங்கன்னு  நான் கூப்பிடவும் இல்லை ..! . மன்னிச்சிருங்க?

கண்ணாடித்துண்டில் விரிசல் கதை தான் நடக்குது?  ரெம்ப சந்தோஷம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by நண்பன் Sun 15 Nov 2015 - 18:40

Nisha wrote:

நான் முழுவதையும் அமைதியாகப்படித்தேன் ஒரே குழப்பமாய் இருந்தது இறுதியில்தான் இது ஆல்ப்ஸ் தென்றில் எழுதி இருந்தது விளங்கியது.    உங்களுக்கெல்லாம் இப்படி பெரிசு பெரிசா எழுதத்தெரியும் நீங்கள் தனியா ப்ளக்கர் தொடங்கி எழுதலாம் அல்லது பெரிய பெரிய தளங்களில் எழுதலாம் எனக்கு அந்தத் தகுதி இல்லை
அதனால் எனக்கு சேனையே கெதி என்று சொன்னேன்
உங்கள் புரிதல் வெரி சூசூசூப்பர் என்ன கொடுமை என்ன கொடுமை

Last edited by நண்பன் on Sun 15 Nov 2015 - 19:10; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by நண்பன் Sun 15 Nov 2015 - 18:46

இருப்பினும் மிகச்சுவாரஷ்யமான பதிவொன்றினை தொடங்கி அதில் நானும் பங்கிடும் படியாய் வாய்ப்பினை தந்த  கில்லஜி சார், குமார் ஆகியோருக்கும் இதைப்படிப்போருக்கும், கருத்திட்டு ஊக்கம் தருவோருக்கும்  நன்றி1நன்றி!

 தொடர்ந்திட.... 
நானே இங்கே ரெம்ப புதியவள். எனக்கு இன்னும் கொஞ்ச காலம் வேண்டும், தெரியாதவர்களை இணைத்தால் அவர்கள் கோபித்து விடுவார்களோ என தயக்கமாக இருக்கின்றது.  அத்த்டோடு இதுவரை  யாரெல்லாம் இணைக்கப்பட்டார்கள் எனவும் புரியவில்லை. இருப்பினும் நான் அறிந்த இருவரை இங்கே இணைக்கின்றேன் . மன்னிக்க.... 

பத்துப்பேரை கட்டாயம் பரிந்துரைக்க வேண்டும் எனில் ஒரு நாள் நேரம் கொடுங்கள். 

சிந்தனைச்சிதறல்கள் ஹாசிம்
வரதட்சனைக்கெதிராக மிகத்தீவிரமாக குரல் கொடுப்பவரும் எழுதுபவரும் கடைப்பிடித்தவரும் அன்புதம்பியும் சேனைத்தளபதியுமானவர். 

தோட்டம் சிவா 
இவருக்கு என்னை தெரியாது. இவரின் தோட்டம் பதிவுகள் மிக அத்தியாவசியமானவைகளாயும் எம் தேவைகளை பூர்த்திப்பதாயும் இருப்பதனால் இவரின் பதிவுகள் பிடிக்கும்.

இவைகளைப் படித்து முடிக்கும் வரை தலை சுற்றியது   அப்றம்தான் புரிந்தது இது சேனையில் எழுதியதாக தெரிய வில்லை ஆல்ப்ஸ் தென்றலில் எழுதப்பட்டிருப்பதைப் புரிந்தேன்  என்று சொன்னேன்

நான் முழுவதுமாய் படிக்க வில்லை என்று நீங்கள் எப்படி தெரிந்து கொண்டீர்கள் என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை

Last edited by நண்பன் on Sun 15 Nov 2015 - 21:56; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by நண்பன் Sun 15 Nov 2015 - 18:54

Nisha wrote:
நண்பன் wrote:மொத்தமும் படித்து முடித்தேன் தலை சுத்திக்கிட்டு வந்திச்சி கடைசியில் எல்லாம் சரியாகி விட்டது.    ஷப்பே  இப்பவே கண்ணக்கட்டுதே
தொடரட்டும் உங்கள் அரட்டைகளும் அசத்தல்களும் அடியேனுக்கு சேனையே சொந்தம்
நன்றியுடன் நண்பன்

முழுமையாக என் பதிவினை படிக்கவில்லை என் இதை வைத்தே புரிந்திட முடியிது .என்னமோ வித்தியாசமாகத்தான் படுகின்றது.    உங்களை சேனையை விட்டு வாங்கன்னு  நான் கூப்பிடவும் இல்லை ..! . மன்னிச்சிருங்க?

கண்ணாடித்துண்டில் விரிசல் கதை தான் நடக்குது?  ரெம்ப சந்தோஷம்.

ரொம்ப சந்தோசம் அநியாயம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by Nisha Mon 16 Nov 2015 - 0:07

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:மொத்தமும் படித்து முடித்தேன் தலை சுத்திக்கிட்டு வந்திச்சி கடைசியில் எல்லாம் சரியாகி விட்டது.    ஷப்பே  இப்பவே கண்ணக்கட்டுதே
தொடரட்டும் உங்கள் அரட்டைகளும் அசத்தல்களும் அடியேனுக்கு சேனையே சொந்தம்
நன்றியுடன் நண்பன்

முழுமையாக என் பதிவினை படிக்கவில்லை என் இதை வைத்தே புரிந்திட முடியிது .என்னமோ வித்தியாசமாகத்தான் படுகின்றது.    உங்களை சேனையை விட்டு வாங்கன்னு  நான் கூப்பிடவும் இல்லை ..! . மன்னிச்சிருங்க?

கண்ணாடித்துண்டில் விரிசல் கதை தான் நடக்குது?  ரெம்ப சந்தோஷம்.

நான் முழுவதையும் அமைதியாகப்படித்தேன் ஒரே குழப்பமாய் இருந்தது இறுதியில்தான் இது ஆல்ப்ஸ் தென்றில் எழுதி இருந்தது விளங்கியது.    உங்களுக்கெல்லாம் இப்படி பெரிசு பெரிசா எழுதத்தெரியும் நீங்கள் தனியா ப்ளக்கர் தொடங்கி எழுதலாம் அல்லது பெரிய பெரிய தளங்களில் எழுதலாம் எனக்கு அந்தத் தகுதி இல்லை
அதனால் எனக்கு சேனையே கெதி என்று சொன்னேன்
உங்கள் புரிதல் வெரி சூசூசூப்பர் என்ன கொடுமை என்ன கொடுமை

அப்படியா? நன்றி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by Nisha Wed 18 Nov 2015 - 2:35

இதுவும் கடந்து போகும்

நம் வாழ்க்கையில்  நடக்கும் அனைத்தும் நம் நினைவில் நிலைப்பதில்லை. அதே நேரம்  நாம் எதை மறக்க நினைக்கின்றோமோ அவை தான் நம் நினைவில் சிலைபோல் நிலைத்து வலியைத்தரும். 

வலியைத்தரும் என்பதனால்  வலி தரும் நினைவுகளை வெறுக்கின்றோமா எனில் , இல்லை என தான் சொல்வோம். வெறுப்பவைகள் நம்முள் நுழைந்து வலி தருவதாய் இருக்காது.. வெறுப்பு பல நேரம் கசப்பை தருவதால் அவை நமக்குள் நிலைக்கும் வலியை தருவதும் இல்லை.  நாம் நேசிப்பவைகள் நேசிப்பவர்கள் நம்மை புரிந்திடாமல் போகும் போது இதுவும் கடந்து போகும் என சொல்தல் இலகுதான்.. !

ஆனால்..........?

இதுவும் கடந்து  போகும்

நிலையா இந்த உலகில் நிலைத்தவை தான் என்னே?
நிலைத்தவர்கள் தான் யாரோ?
கலையும் நினைவில் நிலையாய், 
நிலைத்து நிற்கும் 
நினைவில் வலிகள் மட்டும் தானே
நிலையாய் என்றும் தொடரும்
நிலையா இவ்வுலகில் சிலையாய் நிலைத்தோரில்ல

கூறு போடும் நினைவாய் மாறும் மனித மனதில் மாறாதிருப்பதெல்லாம் தொடரும் வலிகள் தானோ?
பாதை எல்லாம் வாதை! 
தெரிந்தே செல்லும் பேதை மனதை அடக்கியாள முடியா கோழை!
காதல் என்ற பெயரில் கந்தலாகும் அன்பு 
காட்டும் அன்பு கூட காதலென சொல்லும்
தாகம் தீர்ந்த பின்னே  தூரமாகி போகும்!

தொலைந்த நினைவை தேடி அலையும் மனது கலையும் விந்தை என்னே?
சிந்தை செயல்கள் எல்லாம் மந்தையாய் ஓரிடத்தில்
விந்தை செய்யும் நிலையை கடத்தல் என்ன கடிதோ?
கானல் நீர் தான் எல்லாம்!
பொய்யாய்ப்போகும் மெய்கள் 
மெய்யை துடிக்க வைக்கும்! 
போதும் இந்த வேசம், 
இதுவும் கடந்தே போகும்

எனது வரிகளோடு... இந்த பாடலையும் கேட்டு பாருங்கள்.

கண்ணீரை போலே 
வேறு நண்பன் இல்லை 
கற்றுக்கொள் துன்பம் போலே 
பாடம் இல்லை
உன் நெஞ்சின் சோகம் எல்லாம் 
கேட்டுக் கொள்ள 
உனக்கிங்கே உன்னை தவிர 
யாரும் இல்லை
பணம் ஒன்றே எப்போதும் 
வாழ்க்கை இல்லை 
புரிந்தாலே இதயத்தில் 
துயரம் இல்லை

கண்ணீரை போலே 
வேறு நண்பன் இல்லை 
கற்றுக்கொள் துன்பம் போலே 
பாடம் இல்லை

ஒரு அலை மீது போவோம் 
இலை போல தானே 
உலகில் மனிதன் வாழ்க்கை 
போகும் வரை போவோம் நாமே
அதில் அகங்காரம் என்ன? 
அதிகாரம் என்ன? 
அன்பின் வழியில் சென்றால் 
கரை சென்று சேர்வோம் நாமே
கவலை இன்றி உலகத்திலே 
மனிதன் யாரும் கிடையாது 
கவலை தாண்டி போவதானால் 
தாமரை பூக்கள் உடையாது
வாழ்க்கை என்னும் கண்ணீரை 
காயத்தோடு தொட்டு பார் 
காலமோட காயம் எல்லாம் 
மாயமாய் மறையும் பார்

கண்ணீரை போலே 
வேறு நண்பன் இல்லை 
கற்றுக்கொள் துன்பம் போலே 
பாடம் இல்லை

தாய் கருவோடு வாழ்ந்த 
அந்நாளில் தானே 
கவலை ஏதுமின்றி 
கடவுள் போல் வாழ்ந்தோம் நாமே
பின் காசோடு கொஞ்சம் 
கனவோடு கொஞ்சம் 
நம்மை நாமே இன்று 
தேடி தான் தொலைகின்றோமே
வழியில் நீயும் வளையாமல் 
மலையில் ஏற முடியாதே 
வலிகள் ஏதும் இல்லாமல் 
வாழ்க்கை இங்கே கிடையாதே
வாசல் தாண்டி போகாமல் 
வானம் கண்ணில் தெரியாதே 
காசும் பணமும் எப்போதும் 
கானல் நீரை மறைந்திடுமே

கண்ணீரை போலே 
வேறு நண்பன் இல்லை 
கற்றுக்கொள் துன்பம் போலே 
பாடம் இல்லை
உன் நெஞ்சின் சோகம் எல்லாம் 
கேட்டுக் கொள்ள 
உனக்கிங்கே உன்னை தவிர 
யாரும் இல்லை

பணம் ஒன்றே எப்போதும் 
வாழ்க்கை இல்லை 
புரிந்தாலே இதயத்தில் 
துயரம் இல்லை ...

ஆல்ப்தென்றலிலும் உங்கள் கருத்தினை பகிர்ந்தால் மகிழ்வேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by நண்பன் Wed 18 Nov 2015 - 18:43

எவ்வளவு அழகான உண்மை நம் வாழ்க்கையில்  நடக்கும் அனைத்தும் நம் நினைவில் நிலைப்பதில்லை. அதே நேரம்  நாம் எதை மறக்க நினைக்கின்றோமோ அவை தான் நம் நினைவில் சிலைபோல் நிலைத்து வலியைத்தரும்  உண்மை  உண்மை 

என் மன வானில் பகுதியில் இந்தக் கவிதையினைப் படித்திருந்தேன் அருமையாக உள்ளதாகவும் கருத்திட்டிரந்தேன் கவனித்தீரோ அக்கா?

உண்மைதான் அக்கா வலியைத் தரும் நினைவுகள் அனைத்தையும் நாம் மறக்க நினைக்கும் போதெல்லாம் முதலில் நம் நினைவில் வருவது அந்த நினைவுகள்தான்   என்னால் தாங்க முடியாத வலி என்று நான் நினைப்பது  நான்  யாரை நேசிக்கிறேனோ அவர் என்னைப் புரிந்து கொள்ளாமல் அவருக்கு நான் செய்யும் நல்லதையும் கெட்டதாய் எண்ணி என்னிடம் இருந்து வில நினைக்கும் போது உயிர் பிரியும் வலியை உணர்கிறேன் 

நிலையா இந்த உலகில் நிலைத்தவைதான் என்ன என்று தொடங்கிய உங்கள் கவிதை வரிகள் அனைத்தும் அருமை  அத்தோடு வந்த பாடலும் பாடல் வரிகளும் இனிமையாக இருந்தது அருமையாக இருந்தது

பாடலில் வந்த ஒவ்வொரு வரிகளும்  பிரமாதம்
தாய் கருவோடு வாழ்ந்த 
அந்நாளில் தானே 
கவலை ஏதுமின்றி 
கடவுள் போல் வாழ்ந்தோம் நாமே
பின் காசோடு கொஞ்சம் 
கனவோடு கொஞ்சம் 
நம்மை நாமே இன்று 
தேடி தான் தொலைகின்றோமே
வழியில் நீயும் வளையாமல் 
மலையில் ஏற முடியாதே 
வலிகள் ஏதும் இல்லாமல் 
வாழ்க்கை இங்கே கிடையாதே
வாசல் தாண்டி போகாமல் 
வானம் கண்ணில் தெரியாதே 
காசும் பணமும் எப்போதும் 
கானல் நீரை மறைந்திடுமே

மிகவும் கவர்ந்த வரிகள் இவைகள் பிரமாதம் அக்கா
இன்னும் தொடருங்கள் ஆறுதலாகவும்
சில வரிகள் கவலையாகவும் உள்ளது
மாறா அன்புடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by சே.குமார் Wed 18 Nov 2015 - 20:42

அக்கா அருமையான பகிர்வு அக்கா...
அந்த பாடல் இணைப்பு செம... உங்க தளத்தில் பார்த்தேன்...
கலக்கிட்டீங்க போங்க...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by Nisha Thu 19 Nov 2015 - 11:08

சிறுவர் கதை:பட்டணத்து எலியும் பட்டிக்காட்டு எலியும்

பட்டணத்து எலியும் பட்டிக்காட்டு எலியும் நண்பர்களாக பழகி வந்தது, ஒருநாள் பட்டிக்காட்டு எலி தன் பட்டணத்து சினேகிதனை தன் ஊருக்கு விருநதுக்கு அழைத்தது. விருந்துக்கு வந்த பட்டணத்து எலியும் பட்டிக்காட்டு எலியும் சேர்ந்து அங்கிருந்த வயல் வெளிகளில் வளர்ந்திருந்த நெற்கதிர்களையும்,காய்கனிகளையும் கொறித்து தின்று பயமில்லாமல் தம் இஷ்டம் போல் ஓடி விளையாடியது. 

அப்போது பட்டணத்து எலி  இதெல்லாம் ஒரு விருந்தா? சுவையே இல்லை!இப்படியா விருந்து வைப்பது? பட்டணத்தில் வந்து பார்!எத்தனை விதமான உணவுகள் சீஸ்,தேன்,பால் சாக்லேட் என சுவையான உணவுகளேல்லாம் இருக்கின்றது!இதென்ன வாழ்க்கை!தினம் தினம் இங்கே கிராமத்தில் வயலில் ஓடி ஓடி களைத்து ஒவ்வொன்றாக பொறுக்கி தின்னும் நிலை உனக்கு கஷ்டமாக இல்லையா?

வா உடனே பட்டணத்துக்கு.விருந்தென்றால் என்னவென்று காட்டுகிறேன்.வாழ்க்கை என்றால் என்னவென்று நீ நேரில் வந்துஅனுபவித்து பார் என்று தான் இருந்த பட்டணத்துக்கு வரும்படிஅழைத்தது!

பட்டிக்காட்டு எலிக்கு பட்டணத்து எலி இப்படி சொன்னதும் ரெம்ப வெட்கமாக போய் விட்டதாம்.பட்டிக்காட்டு எலியும் பட்டணத்தில் ஒரு வேலையும் தேடி அங்கேயே செட்டிலாகி விட்டால் பட்டணத்து எலி மாதிரி தானும் ஜம்பமாக  கூலிங்க் கிளாஸோட போன் எல்லாம் வாங்கி கொள்ளலாம் எனநினைத்து பட்டணத்தை பார்க்கும் ஆசையில் சந்தோஷமாக பட்டிக்காட்டை விட்டு பட்டணம் புறப்பட்டுபோனது! பட்டணத்து எலி ஒருபெரிய வீட்டிற்கு பின்னால் இருந்த பொந்தில வாழ்வதால் பட்டிக்காட்டு எலியும் அங்கே போனது!
 
பட்டிக்காட்டு எலியை வா வா என மகிழ்ச்சியோடு வரவேற்ற பட்டணத்து எலி தனனை தேடி வந்த பட்டிக்காட்டு எலிக்கு விருந்து கொடுக்க அந்த பெரிய  வீட்டுக்குள் போய் வெண்ணெய் கேக்கு துண்டுகள் ரொட்டித்துண்டுகள், சீஸ்களை,சாக்லேட்களை எல்லாம் திருடிக்கொண்டு வந்தது. சாப்பாடு ரெடியானதும் இரண்டு  எலியு்மாக சேர்ந்து சாப்பிட உட்காநதது. 

அப்போது தீடீரென மியாவ் மீயாவ் என்று சத்தம் வரவே இரண்டு எலியும் பயந்து போய் சாப்பாட்டை அப்படியே விட்டு விட்டு ஓடி ஒளிந்தது்!அந்த வீட்டுசொந்தக்காரர் வளர்க்கும் பூனை அது என்பதால் அது வீடு எங்கும் சுயாதீனமாய் திரியுமாம்.ரெம்ப திமிர் பிடித்த பூனை அது. 

இரண்டு எலிகளும் பூனைஅந்தப்பக்கமா போனதும் திரும்பி வந்து சாப்பிடஅமர்வதும் பூனை மியாவ் மியாவ் என வரும் போது எலிகள் ஒளிவதுமாக நிம்மதியில்லாமலே பயந்து பயந்து மெதுவாக த்தான் சாப்பிட முடிந்தது.பயத்தோடு சாப்பிட்டதனால் பட்டிக்காட்டு எலியால் சரியாக சாப்பிட முடியவில்லையாம். அதனோடு அடிக்கடி எழுந்து ஓடியதால் களைத்து போய் விட்டதாம்.   

கடைசியாக அந்தப்பக்கமா வந்த பூனை எலிகள் சாப்பிட்டுகொண்டிருந்த பக்கமாக வந்து எலிகள் திருடி அடுக்கி வைத்திருந்த சாப்பாட்டையெல்லாம் தட்டி சிதற அடித்து விட்டு மீதியை தானும் சாப்பிட்டே முடித்து விட்டது

எலிகளுக்கோகஷ்டப்பட்டு்திருடியும் சாப்பாடுகிடைக்கவில்லை என்பதோடு பூனை அருகில் இருப்பதால் நிம்மதியாக தூங்க முடியாமல் பயத்தில் திடுக் திடுக் என விழித்ததனால் உடம்பெல்லாம் நடுக்கம் வந்து விட்டதாம். 

மறு நாள் விடிந்ததும் பயத்தோடும் பசியோடுமிருந்த பட்டிக்காட்டுஎலி பட்டணத்து எலியை பார்த்து என் ஊரில் சாப்பாடு பால் சீஸ் பிரெட்  போல் சுவையில்லாம இருந்தாலும். நிம்மதியாக சாப்பிடலாம் உன்னைப்போல பயந்து பயந்து சாப்பிட வேண்டாம். இதை பார்த்தா என் பட்டணம் பெரிது என்றாய்! சுதந்திரமில்லாமல் யாருக்கோ  பயந்து பயந்து வாழும் உன் வாழ்வும் ஒரு வாழ்வா..!உனக்கு வெட்கமாக இல்லை. என் ஊரில் ராஜா போல் என் இஷ்டப்படி ஓடி விளையாடும் நான் எங்கே இப்படி அடிமை வாழ்வு வாழும் நீ எங்கே? இந்த வாழ்க்கையையா சொர்க்கம் என்பது போல் பெருமையாக சொன்னே! 

எனக்கு சொர்க்கம் என் ஊரு தான்பா!

நான் என் ஊருக்கே போகிறேன் என்று அன்றே தன் ஊரைத்தேடி மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு ஓடியே போய் விட்டதாம்! 

இக்கதை நமக்கு என்ன சொல்வது என்ன..?

சொர்க்கமாயிருந்தாலும்  நம்மூரு போல வருமான்னு நீங்க  நினைக்கிறிங்க தானே?

http://alpsnisha.blogspot.ch/2015/11/blog-post_19.html

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by நண்பன் Sat 21 Nov 2015 - 10:45

இந்தக் கதை நமக்கு சொல்லும் உண்மை இதுதான் சொர்க்கமாயிருந்தாலும்  நம்மூரு போல வருமான்னு நீங்க  நினைக்கிறிங்க தானே?

இந்தக் கதை பட்டணத்திற்கு தொழிலுக்கு வந்த நமக்கும் பொருந்தும் நமக்கு இஸ்டப்பட்டதை இஸ்டப்பட்ட நேரம் செய்ய முடியாத  அடிமை வாழ்வும் உண்டு

வந்து பாருங்கள் எங்கள் கிராமப் புரங்களில் எவ்வளவு சுதந்திரம் எவ்வளவு மகிழ்வு எவ்வளவு ஒற்றுமை 

கதை கற்றுத்தந்த பாடம்

சொர்க்கமாயிருந்தாலும்  நம்மூரு போல வருமா?
என்பதுதான்
நன்றி அக்கா இன்னும் தொடருங்கள் இது போன்ற பயனுள்ள வற்றை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by சே.குமார் Sat 21 Nov 2015 - 15:49

எலிக் கதை நன்று...
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமான்னு சொல்லிடுச்சு...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by Nisha Mon 23 Nov 2015 - 10:40

இன்றைய சூழலில் பெண்கள்! எப்படி இருக்கின்றார்கள்? எப்படி இருக்க வேண்டும்?

"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா "

இன்றைய சூழலில் பெண்கள் பொறுமை இல்லை,புரிதல்இல்லை,விட்டுகொடுத்தல் இல்லை,அன்பில்லை.அடக்கமில்லை எல்லாமே தங்கள் இஷ்டப்படி நடக்க வேண்டும் எனும் போக்கு மொத்தத்தில் சுயநலத்தின் முழுவடிவமாய் தனக்கு மட்டும் தான் என நடந்து கொள்கி்றார்கள்!இல்லையில் தம் இயலாமையை நிறைத்து நிற்கின்றார்கள். 

முற்காலத்தில் படிப்பறியாது வீட்டுக்குள் இருக்கும் பெண்களிடம்இருந்த நற்குணங்கள் எல்லாம் மாயமாகிப் போனது.பாரதியின் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்டபார்வையும்.
அச்சம்,பயிர்ப்பு,நாணம்,மடமென சொல்லப்பட்ட
நாற்குணங்களும் தப்புத்தப்பாய் புரிந்து கொள்ளப்பட்டு இன்றைய எதிர்கால பெண்கள் சந்ததி எதை நோக்கிp போகிறது என
அவர்களுக்கேதெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது

எங்கே நிமிர்ந்த பார்வை,நேர்கொண்ட
நன்னடைவேண்டுமோ அங்கே மீறப்படுகிறது. எங்கே அச்சமும்,மடமும்,நாணமும் தேவையோஅங்கே அவையனைத்தும் காலில் மிதிபடுகின்றது!

பெண் சுதந்திரம்,பெண்கல்வி எனபதை தவறாக புரிந்து கொண்டு  தன்னம்பிக்கை இல்லாதோராய் ஒடிந்து விழுவோராய் இக்கால பெண்கள் 
இருக்கிறார்கள்!புலியை முறத்தால் அடித்து விரட்டினாள் என நம் பெண்களை சொல்வார்கள்.இன்றைக்கு அப்படி யார் இருக்கின்றார்கள்?

அன்பும்,அறிவும் ஆளுகை, பொறுமையும் ஆளுகை செய்ய வேண்டியவளிடம் ஆணவமும்,
பொறாமையும்,பெருமையுமே குடிகொண்டுள்ளது!

ஒரு பெண்ணால் முடியாதது எதுவுமே இல்லை. தாயின் கருவின்றி எவரும் வெளியே வருவதுமில்லை எனும் போது தன்னிடம் இருப்பது என்ன?தனக்கான தேவை என்ன 
வென்பதைபெண்ணேஉணராதவளாயிருக்கிறாள்.

பெண் என்பவள் அன்பால் அக்குடும்பத்தினை கட்டியாள வேண்டுமே தவிர ஆணவத்தினால் அடக்க ஆளநினைக்கக்கூடாது.அன்பு எனும் அருமையான ஆயுதம் தங்களிடம் இருப்பதை புரிந்திடாமல் அதிகாரம் செய்து சாதிக்க முற்படும் போது குடும்பங்கள் உடைகின்றன்.
வேற்றுமைகள் தோன்றுகின்றன.

பெண் நம்பத்தகுந்தவளாக தான் இருப்பதோடு மட்டுமல்ல  தன்னை சார்ந்தோரையும் நம்புபவளாக் தவறுகண்டு கண்டித்து மன்னிப்பவளாக் இருக்க வேண்டும்.சந்தேகம் வாழ்க்கைக்கே கேடு! 

அவள் அணியும் ஆடைகள் தான் அவள் மதிப்புக்குரியவள் என்பதை காட்டும்.அவன் புன்னகைதான் அவளுக்கு கிரீடம்.ஆனால் இப்போதெல்லாம் பாதி உடல் வெளியே தெரியும் படியாய் ஆடைகள் இருப்பதும்.அதுவே பல விபரீதங்களுக்குகாரணமாய்இருப்பதும்றியாமலா இருக்கின்றார்கள்?அவள் அணியும் ஆடை அவள் மீதான மதிப்பை தருவதாய் இல்லையே! உடல் அழைகினை வெளிக்காட்டும் இறுக்கிப
பிடித்த ஆடைகளும் முன்பின் உடலழகை வெளிக்காட்டும் படியாய் உடையமைப்புமாய் தன் கவரிச்சியினால் தன்னையே கேலிப்பொருளாக்கு
பவளாயும் தான் பெண் இருக்கின்றாள்! 

பொதுவாகவே பெண்களிடம் கூரிய அறிவும்,கவனிக்கும் திறனும் ஆண்களை விட அதிகமாய் இருக்கும் போது  தன்னுடன் பழகும் ஆண் எப்படிபட்டவன் என்பதை பல காலம் பழகித்தான் தெரிந்து கொள்ளலாம என்பதில்லை. ஒருசில வார்த்தை,சில செயல்கள்,கண் பார்வை போகுமிடம் என ஒரு சில நொடிகளிலேயே ஒரு ஆண்  நம்பதகுந்தவனா இல்லையா என முடிவெடுத்து விலகிச்செல்ல முடியும்.அக்கால பெண்களிடம் காணப்படும் இந்த அகக்கண் உணரும் தன்மை இக்கால பெண்களிடம் இல்லை!அத்தனை கூரிய சக்தியை கடவுள் பெண்ணீன் படைப்புடனே இணைத்தே படைத்திருக்கும் போது விளக்கினை தேடிப்போய் விழும் விட்டீல்களாய் இருக்கின்றார்களே?

இறைவன் படைப்பில் பெண் பலவீனமான
வளாய்தான் படைக்கப்பட்டிருகிறாள்! எனினும் உலகில் இருக்கும் வலிகளை விட மிகபெரிய வலியாம் பிரசவ வலியை தாங்குமவள் சின்ன விடயங்களில் சோர்ந்து தடம் மாறுகின்றாள். அவளுக்கான மன் உடல் ரிதியான் பிரச்சனைகள் அனேகம்! தாய்மையெனும் நிறைவு அவளிடமிருப்பதால் அவளுக்கான் பணி உணர்ந்து அவள் செயல் பட வேண்டும். 

யாரானாலும்  பெண்கள் தங்கள்  குடும்ப விடயம், அந்தரங்கம் எல்லை மீறிப் பேசக்கூடவே கூடாது. அது போல் எடுத்தவுடன் தன் மனைவி தன் வீட்டுபெண்களை குறைவாய் சொல்லி அனுதாபம் தேட முயல்வோர். தன்மீது அனுதாபம் வேண்டி பழையை கதை சொல்ல முயலும் அந்நிய ஆண்களிடம் கவனமாகவே இருக்க வேண்டும் என்பதை விட அப்படிபட்டவர்களை ஆரம்பத்தில் இனம் கண்டு விலகி விட வேண்டும்.பாவம் பரிதாபம் பச்சாதாபம் பார்த்து தம் வாழ்க்கையை அழித்து கொள்ளல் கூடாது. 

ஒரு பெண் ஒரு ஆணை நம்பி பாசம்,நட்பு பாராட்டி விட்டால் அவ்வளவு சீக்கிரம் அந்த நட்பை அன்பை உதறிச் எல்லாத  உறுதியுடையவளாய் இருந்தால் அவனிடம் இருக்கும் கெட்ட சுபாவங்கள் கூட நல்லதாக மாற வாய்ப்பிருக்கும். வாழ்வில் மன உறுதி, மன திடம் நம்பிக்கை  வேண்டும்  

அன்புக்கு அடங்கலாம், அதுவோ கழுத்தை இறுக்கும் கயிறாகாது  அடக்கியாளாது பொஷிசிவ்  தன்மை யாக்காது அன்னிய ஆடவருடனான பழக்கங்களுக்கு எல்லை கட்டாயம் வேண்டும்.

அதையும் மீ்றி நம்பிக்கை  துரோகங்களானால் எதிர்த்து நிற்க தெரிய வேண்டும். பயந்து ஒளியகூடாது. சட்டங்கள் பெண்களுக்கு சாதகமாய் இருப்பதால் தனனைபோல் இன்னொரு பெண் பாதிக்கப்படகூடாது எனும் நல்லெண்னம் கொண்டு  போராட முயல வேண்டும். தன் வாழ்க்கையில் நடந்தவைகள் இன்னொரு பெண்ணுக்கும் நேரிடாமல் காத்திட வேண்டும் எனும் பொது சிந்தையோடு அவள் செயல் இருக்க வேண்டும். 

35 வயதுக்கும் மேல் குழந்தைகள் வளர்ந்த பின் தனனை யாரும் புரிந்துக்கவிலலையே? மனம் விட்டு பேச யாருமில்லையே என்பதால் தான் அவள் மனம் அல்லல் அடைகிறது.வழி தடுமாறி அன்னிய ஆடவர் அன்பை நாட காரணம் ஆகின்றது. அந்த சூழலில் கணவன் அன்பும் வீட்டார் அரவணைப்பும் கிடைத்தாலே போதும். ஆனால் பெரும்பாலான வீட்டுஆண்கள் இதை உணர்வதே இல்லை என்பது தான் சோகமானது. 

முற்காலத்தில்கூட்டுக்குடும்பமாயிருந்தார்கள்,ஆயிரம் சண்டைசச்சரவு இருந்தாலும் மனம் விட்டு பேச ஆளிருக்கும்.இப்போது அப்படி இல்லையே.35 வயதிலிருந்து 40,45 வயது வரையான கால கட்டம் பெண்கள் தாண்டவேண்டிய கடுமையான காலம்.
குழந்தை வளர்ப்பு,வீட்டுவேலை,வெளிவேலை,
பள்ளிகாரியம், உடல் சோர்வு என வாட்டி எடுக்கும்.அந்த நேரம் அவளை புரிந்து தாங்கிட்டால் போதும்.அவளை ஜெயிக்க யாராலும் முடியாதே!அவளை உணரும் குடும்ப சூழலும் இன்றில்லாமல் தான் போகின்றது!

பெண் என்பவள் காற்று மாதிரி,சுழன்று அடித்தால் வீடும் நாடும் நாசம்.இனிய சாமரமாய் அவள் விசினால் வீடும் நாடும் வளம்பெறும். இதை அவள் உணர்ந்து  தன் தேவை எதுவென் கேட்டு பெற முயலாத வரை அவள் கற்ற கல்வியும், அவளுக்காக சட்ட ஒதுக்கீடும் பயனற்றதாயே இருக்கும்.
.
ஒருபெண்ணின்அன்பு,தாயாய்,தங்கையாய்,தோழியாய், மனைவியாய்,மகளாய்  எந்த ரூபத்தில் வந்தாலும் அவள் அன்புக்கு அடங்காத ஆண் இந்த உலகில் இல்லைவே இல்லை எனும் போது தாய்மையோடு அன்பெனும் ஆயுதம்  அவளிடம் உண்டு.சரியாத புரிதல் இருந்து விட்டால் எந்த ரூபத்திலாவது நல்ல பெண் அன்பை பெற்ற ஆண்மகள் வாழ்க்கையில்தோல்வியை சந்திக்கவே மாட்டான். 

பெண்  என்பவள் யாருக்கும் அடிமையாக இல்லை.தன் குடும்ப நலன் வேண்டி அவளாகவே அடங்கிவாழ்ந்தாள் என உணர்ந்து இல்லறத்தினை நல்லறமாக்கி 
அன்புக்கு அடங்கி அன்பால்ஆளவேண்டும்!

சேனைத்தமிழ் உலாவில் ஒரு கேள்வி பதில் திரியில்   இன்றைய சூழலில் பெண்கள் வீட்டிலும்(குடும்பத்திலும்) வீட்டிற்கு வெளியேயும் எப்படி நடந்துகொள்கிறார்கள்? எப்படி நடந்துகொள்ளவேண்டும்? என ஒரு கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது? 

அங்கே இட்ட பதிலை கொஞ்சமாய் திருத்தி இங்கே பதிந்துள்ளேன்!

உங்கள் கருத்தினை சொல்லுங்கள் நட்பூக்களே!

http://alpsnisha.blogspot.ch/2015/11/blog-post_22.html#comment-form

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by நண்பன் Mon 23 Nov 2015 - 20:35

இன்றைய  பெண்கள் எப்படி இருக்கின்றார்கள்  அன்றய பெண்கள் எப்படி இருந்தார்கள்   இன்றய பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என   அனைத்தையும் உள்ளடக்கியதாக அமைந்த உங்கள்  கட்டுரை மிக மிக அருமை.  அதிக பயனுள்ள ஒவ்வொரு விளக்கங்களும்  நீங்கள் ஒரு பெண் என்பதை மறந்து   நீங்கள் மாமேதை என்பதை உணர்த்தி நிற்கிறது.

நாகரீகம் என்ற பெயரில் இன்றய பெண்கள் சீரழிவதையும் அழகாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள்  அன்பாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள் பல மங்கையர்கள் இதைப் படிக்க வேண்டும் பயன் பெற வேண்டும்.  

இன்றைய சூழலில் பெண்கள் பொறுமை இல்லை,புரிதல்இல்லை,விட்டுகொடுத்தல் இல்லை,அன்பில்லை.அடக்கமில்லை எல்லாமே தங்கள் இஷ்டப்படி நடக்க வேண்டும் எனும் போக்கு மொத்தத்தில் சுயநலத்தின் முழுவடிவமாய் தனக்கு மட்டும் தான் என நடந்து கொள்கி்றார்கள்!
இல்லையில் தம் இயலாமையை நிறைத்து  மறைத்து நிற்கின்றார்கள்.

அருமையான ஒரு விளக்கம் சொல்லியுள்ளீர்கள்   தன் கணவனை பிள்ளைகளை குடும்பத்தை ஒரு பெண் என்பவள் அன்பால்  கட்டியாள வேண்டுமே தவிர ஆணவத்தினால் அடக்க ஆள நினைக்கக்கூடாது. அன்பு எனும் அருமையான ஆயுதம் தங்களிடம் இருப்பதை புரிந்திடாமல் அதிகாரம் செய்து சாதிக்க முற்படும் போது குடும்பங்கள் உடைகின்றன  வேற்றுமைகள் தோன்றுகின்றன  உண்மை உண்மையான விளக்கம் அதிகாரம் செய்ய நினைத்து  சில  நேரங்களில் பல பெண்கள் தோற்றே போகிறார்கள் இந்த விடயத்தில் .

இந்தப் பதிவில்  நான்  பல படிப்பினைகள் பெற்று விட்டேன்!  ஒரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய அன்பு அவள் எதிர் பார்க்கும் நேரம் நாம் கொடுத்தால் அதை விட அவளுக்கு வேறன்ன சந்தோசம் இருக்கப்போகிறது  என்று நீங்கள் எழுதிய அனைத்தும் அருமையாக உள்ளது  

பெண் என்பவள் காற்று மாதிரி என்று சொன்ன விதம் அதன் விழைவு எப்படி இருக்கும் சாந்தம் சீற்றம் என சொன்னது  பெண்  என்பவள் யாருக்கும் அடிமையாக இல்லை  தன் குடும்ப நலன் வேண்டி அவளாகவே அடங்கிவாழ்ந்தாள் என்றும் இல்லறத்தினை நல்லறமாக்கி அன்புக்கு அடங்கி அன்பால்  ஆளவேண்டும்  என்றும் நீங்கள் முடித்த விதம் மிகவும் சிறப்பு

ஒவ்வொரு வரி வரியாக பிரித்தெடுத்து கருத்துக்களை நான் தரவேண்டும் அப்படி அருமையான பயனுள்ள ஒரு கட்டுரை தந்த உங்களுக்கு நலிவற்ற நலமும் குறைவற்ற செல்வமும் பெற்று சந்தோசமாய் வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்
நன்றியுடன் நண்பன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by Nisha Tue 24 Nov 2015 - 9:12

நண்பன் wrote:இந்தக் கதை நமக்கு சொல்லும் உண்மை இதுதான் சொர்க்கமாயிருந்தாலும்  நம்மூரு போல வருமான்னு நீங்க  நினைக்கிறிங்க தானே?

இந்தக் கதை பட்டணத்திற்கு தொழிலுக்கு வந்த நமக்கும் பொருந்தும் நமக்கு இஸ்டப்பட்டதை இஸ்டப்பட்ட நேரம் செய்ய முடியாத  அடிமை வாழ்வும் உண்டு

வந்து பாருங்கள் எங்கள் கிராமப் புரங்களில் எவ்வளவு சுதந்திரம் எவ்வளவு மகிழ்வு எவ்வளவு ஒற்றுமை 

கதை கற்றுத்தந்த பாடம்

சொர்க்கமாயிருந்தாலும்  நம்மூரு போல வருமா?
என்பதுதான்
நன்றி அக்கா இன்னும் தொடருங்கள் இது போன்ற பயனுள்ள வற்றை

ரெம்ப நன்றிப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by Nisha Tue 24 Nov 2015 - 9:14

சே.குமார் wrote:எலிக் கதை நன்று...
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமான்னு சொல்லிடுச்சு...

எனக்கு நானிருக்கும் எங்கூரு தான் சொர்க்கமா தெரீது சார்!

ஹாஹா நன்றி குமார்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by Nisha Tue 24 Nov 2015 - 9:15

நண்பன் wrote:இன்றைய  பெண்கள் எப்படி இருக்கின்றார்கள்  அன்றய பெண்கள் எப்படி இருந்தார்கள்   இன்றய பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என   அனைத்தையும் உள்ளடக்கியதாக அமைந்த உங்கள்  கட்டுரை மிக மிக அருமை.  அதிக பயனுள்ள ஒவ்வொரு விளக்கங்களும்  நீங்கள் ஒரு பெண் என்பதை மறந்து   நீங்கள் மாமேதை என்பதை உணர்த்தி நிற்கிறது.

நாகரீகம் என்ற பெயரில் இன்றய பெண்கள் சீரழிவதையும் அழகாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள்  அன்பாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள் பல மங்கையர்கள் இதைப் படிக்க வேண்டும் பயன் பெற வேண்டும்.  

இன்றைய சூழலில் பெண்கள் பொறுமை இல்லை,புரிதல்இல்லை,விட்டுகொடுத்தல் இல்லை,அன்பில்லை.அடக்கமில்லை எல்லாமே தங்கள் இஷ்டப்படி நடக்க வேண்டும் எனும் போக்கு மொத்தத்தில் சுயநலத்தின் முழுவடிவமாய் தனக்கு மட்டும் தான் என நடந்து கொள்கி்றார்கள்!
இல்லையில் தம் இயலாமையை நிறைத்து  மறைத்து நிற்கின்றார்கள்.

அருமையான ஒரு விளக்கம் சொல்லியுள்ளீர்கள்   தன் கணவனை பிள்ளைகளை குடும்பத்தை ஒரு பெண் என்பவள் அன்பால்  கட்டியாள வேண்டுமே தவிர ஆணவத்தினால் அடக்க ஆள நினைக்கக்கூடாது. அன்பு எனும் அருமையான ஆயுதம் தங்களிடம் இருப்பதை புரிந்திடாமல் அதிகாரம் செய்து சாதிக்க முற்படும் போது குடும்பங்கள் உடைகின்றன  வேற்றுமைகள் தோன்றுகின்றன  உண்மை உண்மையான விளக்கம் அதிகாரம் செய்ய நினைத்து  சில  நேரங்களில் பல பெண்கள் தோற்றே போகிறார்கள் இந்த விடயத்தில் .

இந்தப் பதிவில்  நான்  பல படிப்பினைகள் பெற்று விட்டேன்!  ஒரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய அன்பு அவள் எதிர் பார்க்கும் நேரம் நாம் கொடுத்தால் அதை விட அவளுக்கு வேறன்ன சந்தோசம் இருக்கப்போகிறது  என்று நீங்கள் எழுதிய அனைத்தும் அருமையாக உள்ளது  

பெண் என்பவள் காற்று மாதிரி என்று சொன்ன விதம் அதன் விழைவு எப்படி இருக்கும் சாந்தம் சீற்றம் என சொன்னது  பெண்  என்பவள் யாருக்கும் அடிமையாக இல்லை  தன் குடும்ப நலன் வேண்டி அவளாகவே அடங்கிவாழ்ந்தாள் என்றும் இல்லறத்தினை நல்லறமாக்கி அன்புக்கு அடங்கி அன்பால்  ஆளவேண்டும்  என்றும் நீங்கள் முடித்த விதம் மிகவும் சிறப்பு

ஒவ்வொரு வரி வரியாக பிரித்தெடுத்து கருத்துக்களை நான் தரவேண்டும் அப்படி அருமையான பயனுள்ள ஒரு கட்டுரை தந்த உங்களுக்கு நலிவற்ற நலமும் குறைவற்ற செல்வமும் பெற்று சந்தோசமாய் வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்
நன்றியுடன் நண்பன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

அம்மாடியோவ்! எம்மாம் பெரிய்ய்ய்ய்ய்ய்ய் பின்னூட்டம். நன்றிங்கோ தும்பி சார். உங்க ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by சே.குமார் Tue 24 Nov 2015 - 20:51

இன்னும் முழுதாய் வாசிக்கலை அக்கா...
வாசித்து பின்னர் கருத்திடுகிறேன்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by சே.குமார் Wed 25 Nov 2015 - 21:34

//எங்கே நிமிர்ந்த பார்வை,நேர்கொண்டநன்னடைவேண்டுமோ அங்கே மீறப்படுகிறது. எங்கே அச்சமும்,மடமும்,நாணமும் தேவையோஅங்கே அவையனைத்தும் காலில் மிதிபடுகின்றது! நிமிர்ந்து தைரியமாக நிற்க வேண்டிய இடத்தில் அவை வெளிப்பட்டு பெண் எனில் பேதைகளோ என எண்ணும் படி அவர்களின் மேதைத்தனம் மறுதலிக்கப்படுகின்றது. //

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் மேலே எடுத்துப் போட்டிருக்கும் பாரா... எல்லாப் பாராவையும் குறிப்பிட வேண்டும்... அவ்வளவு அருமை...

கூட்டுக் குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பதை 35-40 வயதில் தணித்திருக்கும் பெண்கள் உணர வேண்டும்.

பெண்களின் ஆணவம், உடை, சோர்ந்து போகும் மனநிலை என விரிவாகப் பேசி விரிந்து செல்கிறது கட்டுரை....

என்னக்கா... குமார் ரொம்ப நீளமான பதிவாப் போடுறீங்கன்னு சொல்லிக்கிட்டு மூணு பதிவை ஒண்ணாச் சேர்த்துப் போட்டிருக்கீங்க...

அருமை... தொடர்ந்து கலக்குங்க...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by Nisha Sat 19 Dec 2015 - 3:04

நீ என்ன இறையென்றெனக்கு
இன்றுவரை புரியவில்ல்லை. 

இருப்போருக்கு இன்னும் கொடுக்கிறாய்,
இரப்போரிடம் இருப்பதை எடுக்கிறாய் 
இரப்போரைபார்த்து இரங்காது
இருப்போருக்கு இன்னும் இரங்குவதால் 
நீ என்ன இறை யென்றெனக்கு புரியவில்லை

நோயினால் நோகடிப்பதும் வாதையால் வதைப்பதும். 
செல்லும் பாதையில் தடைகல்லென அறிவாயோ?
நல்லது செய்வோர் அல்லல்களாலே 
துன்புறுவதும்.. தீயவரெல்லாம் தித்திக்கும் வாழ்வில் 
இன்புறுவதுவதும் உன் வஞ்சனைகள் 
ஏனென்றெனக்கென்றுமே புரிவதில்லை !

ஏன் என்ற கேள்விகள்  என்னுள் எழும் போதெல்லாம் 
நானுந்தன் தெய்வம் என்றே நீ சொன்னாலும் 
உன் சேயுறும் துயருன்னை  சேரவே இல்லையோ?
சொரிந்திடும் கண்ணீரை உண்ர்ந்திடாமலே
தூரமாய் நிறுத்தியே துயருர செய்வதேன்?
எனக்கு புரியவே இல்லையே!

துயறுரும் மானிடன் துயர் துடைக்க 
துடிக்கும் கரங்களை  துயரிலாழ்த்துவதும் 
துஷ்டராய்  துணிகர துன்பம் தருவோரை 
தூணில் உயர்த்துவதுமாய் -உன் 
நியாயங்களும், நீதிகளும், நியாயத்தீர்ப்புக்களும் 
எனக்கு புரியவே இல்லை. 

உள்ளத்தில் உனை இருத்தி . 
உணர்விலே உன்னுடன் இயைந்து 
உச்சி வானை தொட்டிட வேண்டாம். 
உள்ளம்துடிக்க கலங்கிடாமல் 
காத்திடாமல் கலங்கடிப்பதேன் 
என்றெனக்கு புரியவே இல்லையே! 

புரியாமல் புரிந்திட, புரிந்ததை புரியாமல் 
புரிந்ததாய்  புகழ் பாடி உனை நம்பிடும் 
வித்தையே உன் சொத்தும் பத்துமாய் 
நித்தமும் பித்தனாய் உனை தேடிட செய்திடும்  
பகதனை பைத்தியம் என்பதேன் 
என்றெனக்கும் புரியவும் இல்லைத்தான்! 

புரியாதவை புரியாதைவையாகவே இருக்கட்டும். 
புரிந்தவை புரியாதவைகளாகட்டும். 
புரிதலும் பிரிதலும் உனை சேர்த்லாய் மாறட்டும் 
பிறப்பும் இறப்புமே பக்குவப்படுத்தட்டும்

உங்கள் கருத்துக்கள்  http://alpsnisha.blogspot.ch/2015/12/blog-post_19.html இலும் வந்தால் மகிழ்வேன். 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by நண்பன் Sat 19 Dec 2015 - 17:51

இந்தக்கவிதையினைப் படிக்கும் போது கண் கலங்கி விட்டேன்
இதே  கவிதைதனை நீங்கள் ஒரு  பத்திரிகையில் எழுதியிருந்தால் நிச்சியமாக பத்திரிகை உங்கள் கண்ணீரிலே கரைந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்

ஆழமாக சிந்தித்தேன் எவ்வளவு மனவேதனை அவ்வளவையும் படைத்தவனிடத்திலே முறையிடும் விதம் மிக மிக அருமையாக உள்ளது  ஒரு வினாவாக உங்கள் கவிதை வரிகள் அமைந்திருக்கறது   அத்தோடு  

ஏன் என்ற கேள்விகள்  என்னுள் எழும் போதெல்லாம்
நானுந்தன் தெய்வம் என்றே நீ சொன்னாலும்
உன் சேயுறும் துயருன்னை  சேரவே இல்லையோ?
சொரிந்திடும் கண்ணீரை உண்ர்ந்திடாமலே
தூரமாய் நிறுத்தியே துயருர செய்வதேன்?
எனக்கு புரியவே இல்லையே!

தயாக இருந்தால் கண் முன்னே சேயுறும் துயர்தனை துடைத்தெறிவாள்  அதற்குமேலோனான படைத்தவன் நின்றுதுான் துயர் துடைப்பான்  அவனுக்கு நீங்கள் சேயுமில்லை அவன் உங்களுக்கு தாயுமில்லை  அவன் யாரயும் பெறவும் இல்லை பெறப்படவுமில்லை

துயறுரும் மானிடன் துயர் துடைக்க
துடிக்கும் கரங்களை  துயரிலாழ்த்துவதும்
துஷ்டராய்  துணிகர துன்பம் தருவோரை
தூணில் உயர்த்துவதுமாய் -உன்
நியாயங்களும், நீதிகளும், நியாயத்தீர்ப்புக்களும்
எனக்கு புரியவே இல்லை.

உள்ளத்தில் உனை இருத்தி .
உணர்விலே உன்னுடன் இயைந்து
உச்சி வானை தொட்டிட வேண்டாம்.
உள்ளம்துடிக்க கலங்கிடாமல்
காத்திடாமல் கலங்கடிப்பதேன்
என்றெனக்கு புரியவே இல்லையே!

அருமையான வரிகள் இந்த வரிகள்தான் என்னைக் கண்ணீர் வர வைத்தது  படைத்தவனிடம் மண்டியிட்டு நீங்கள் கரைந்துள்ளீர்கள் நிச்சியமாக  உங்கள் மனமுருகி நீங்கள் வைத்த கோரிக்கைகள்  அவன் அறிந்திருப்பான்  காத்திருங்கள்  காலம் கனியும்  இவனும் இரங்குவான்  இரக்கமுள்ளவன்  நல்லவர்களை  சோதிப்பான் கைவிட மாட்டான் கெட்டவர்களுககு நிறைய கொடுப்பான் கை விட்டு விடுவான்
கொஞ்சம் காத்திருங்கள் உங்கள் வேதனை மாறி காலம் கனியும்
உங்கள் உள்ளமும் குளிரும் பிராத்தித்தவனாக
மாறா அன்புடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum