Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
+3
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
7 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
First topic message reminder :
ஆம் ஒரே வார்த்தையாய் ... பேசாதே! பாராதே! செய்யாதே! இப்படி தே தே என தேவைக்கும் மேலேசொல்லும் போது சொல்லும் நமக்கு நம் சொல் தேனாய் தான் இனிக்கின்றது. அதை நாமே செயல் படுத்தி பார்க்கும் போது தான் அதன் கஷ்ட நஷ்டம் புரிகின்றது...!
ஆனாலும்??
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி.என்பர்.அது எனக்கு இச்சூழலில் நன்கு பொருந்தும் எங்கேயோ எப்படியோ இருந்த நான் இந்தபக்கம் வந்து .. கண்ணை கட்டி காட்டில் விட்டது போல திக்குதெரியாமல்அலையும் படி ஆனதே என முதல் நாள் நொந்தே போனேன்! வலையும் வேண்டாம், மீனும் வேண்டாம் ஆளை விடுங்கப்பா என சம்ஸிடம் சொல்லியும் ஆனது!
ஆனாலும் குமார் விடுவதாயில்லையே! தளம் திறந்ததோடு தன் வேலை முடிந்தது என செல்லாமல் என்னை ஊக்கப்படுத்தி அதை போடுங்க அக்கா இப்படி எழுதுங்க அக்கா என பதிவும் போட வைத்து... அதுக்கு விளம்பரமும் செய்து... இன்னும் கடவுட்,பேனர் தான் பாக்கி...எனும்படிக்கு என்னை பதிய வைக்க தன் சிந்தனை சிறகை விரித்து என் மனசெல்லாம் பரந்து பறக்கும் குமார் இருக்க என் மனதில் தோன்றுவதை பதிவதற்கு பயம் ஏன் எனும் தைரியத்தினையும் தந்து விட்டார்.
தம்பியுடையான் சண்டைக்கஞ்சானாம்.. நானும் அஞ்ச மாட்டேன்பா.. அதான் எங்க சேனைப்படை எனக்கு பாதுகாப்பா தினம் தினம் திட்டி திட்டி, தட்டிக் கொட்டி .. அப்படி செய்யக்கா.. இப்படி செய்யக்கா உன் கூட யாமிருக்க பயமேனக்கா என வழி நடத்துகின்றதே! என் கைவிரலை பிடித்து வழி நடத்தி எழுத வைக்காதது தான் பாக்கி!
நினைத்து பார்க்கின்றேன்.. இத்தனைக்கும் நான் என்ன தவம் செய்தேன்? எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து வாழ்ந்து... இது வரை முகம் பாராமலே... மனம் உணர்ந்து என்னை உயிர்ப்பிக்கும் இவர்கள் அன்புக்கு நான் என்ன செய்து விட்டேன்?அபிப்ராய பேதங்களும் புரிதலின்மையும்.... உடன் பிறந்தோரையேயே விரோதியாக்கும் இக்காலத்தில் நிஷா அக்கா என அழைத்து அன்னையைபோல் பாசம் காட்டி என்னுள் அடங்கி என்னை அடக்கும் அன்பை கொட்டும் இவர்கள் யார்?
சொல்லத்தானே வேண்டும்!
எங்கள் சேனையில் அன்பு மட்டும் தான் பேசும். மதமும்,இனமும் மொழியும் பேசுவது என்ன.. உரசக்கூடச்செய்யாது. எம் அன்பு புரியாதோருக்கு புதிர் தான். புரிந்தோரோ... எம் ஜோதியில் தாமும் ஒருவராகி என்னுள் உயிர்ப்பர்!
ஆம் உயிர்ப்புத்தான்... மனிதம் மறந்த இப்பூவுலகில் மனிதராய் வாழ நாம் ஒவ்வொரு நொடியும் உயிர்க்க வேண்டி இருக்கின்றதே! எனக்கு மட்டும் விதிவிலக்காகுமா?
என்னை சுற்றி ஒரு வட்டம் என்னை உயிர்ப்பிக்க.... இரவும் பகலும் இருபத்தி நான்கு மணி நேரமும் பாதுகாப்பாய் இருக்கின்றார்கள் என்பதே என்னை வானுயரும் உயரத்தில் கொண்டு போய் விட்டிருக்கின்றது என சொல்வேன்..!
நாடோடியாய் புகலிடம் தேடி வந்த நாட்டில். நாலு பேர் பார்த்து ஆச்சரியப்பட நான் ஏதேனும் சாதித்தேன் எனில் அதற்கு முதல் காரணம் நான் கொண்ட இறை நம்பிக்கை எனில் இறையின் வழிகாட்டலாய் என்னை வழி நடத்தியதெல்லாம் என்சுரேஷ் அண்ணா,சுதா அண்ணா,முஸம்மில், சம்ஸ், ஹாசிம்,, குமார், பானு, ஜானி எனும்பெரும்படையணி தரும் உந்து சக்தி தான். இவர்களின் உற்சாகம் தரும் வார்த்தைகள் தான் என்னை இத்தனை நாளும் இயக்கியது என்பேன்.
பூஜ்ஜியமாயிருந்த என்னை... உன்னால் முடியும்மா.. நீ சாதிப்பே என என்னை உயர்த்திய ஒவ்வொருவர் பற்றீயும் அவர்கள் எனக்காக செய்தவை பற்றியும் தான் நான் முதலில் உங்களுடன் பகிரபோகின்றேன்..
நானும் பிறந்தேன், வாழ்ந்தேன், மறைந்தேன் என்றில்லாமல் எதையேனும் செய்தேன் என எவரேனும் சொன்னால் அதன் பின்னால் இறைவனின் கருணையோடு.. என் மேல் நான் கொண்ட நம்பிக்கையோடு ,என்னவர்,என் மகன், மகள் துணை மட்டுமல்ல... என்னை சுற்று பூச்சரமாய் சூழ்ந்து நிற்கும் என் அன்பு பாசமலர்களும் தான் காரணம்..!
எதையும் சொல்தல் எளிது தான்..அதை செய்தல் செந்தணலை கடப்பது போலிருந்தாலும்... என் பாதம் படும் இடமெல்லாம் குளுமையாயிருக்க வேண்டுமே என எனக்காக பாடு படும் என் உடன் பிற்வாமல் என்னுடன் பிறப்பாய் ஆனோருக்கு இந்த வலைப்பூவும் பதிவுகளும் சமர்ப்பணம்!
இப்பட்டியலில் இனிமேல் இதை படிக்கும் நீங்களும் சேரலாம்.

http://alpsnisha.blogspot.ch/2015/11/blog-post_14.htmlஅன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு
Last edited by Nisha on Sat 14 Nov 2015 - 14:38; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
நன்றி சம்ஸ், நன்றி நண்பன், நன்றி குமார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
என்னகம் கொன்று உன்னை யார் வெல்வது?
நட்பா? காதலா? என பல முறை பல இடங்களில் விவாதித்தாகி விட்டது.. என் ஒட்டு காதலை விட நட்புக்கே இருப்பதும் ஆண் பெண் நட்பை நல்ல மெல்லிய நூலால் கட்டும் போது இயல்பாய் இருவருக்குமிடையிலான ஏதோ ஒன்று அங்கே இழையோடுவதும்அந்த இழையே நட்பின் வெற்றிக்கு பின் இருபப்தும் நிஜம் என்பதை உணர்ந்தவர் புரிந்து இருப்பார்கள்..
ஆங்கிலத்தில் LOVE என்பதை அன்பினை தாண்டிய எதிர்பார்ப்பில்லாத பிரியத்தை சொல்ல பயன்படுத்து வார்கள். ஐ லவ் அம்மா, ஐ லவ்அப்பா என அனைவரையும் LOVE எனும் அன்பால் கட்டுவார்கள். ஆம நேசிப்பு...... அனைவருக்கும் பொதுவானது.அனைவரையும் லவ் செய்யலாம்.அனைத்தையுமே நேசிக்கலாம்!
ஆனால் நம் சினிமாக்கள் LOVE என்பதை ஆணுக்கும் பெண்ணுக்குமே உரியதான காதல் எனும் வட்டத்தினுள் நிறுத்துவதால் LOVE சொன்னாலே ஏதோ பெரிய தப்பு எனும் உணர்வு இன்னும் நம்மவர்களிடம் உண்டு.
காதல் ஒரு காலத்தில் பூத்து சிலகாலத்தில் மறையும், நேசிப்பு மரணம் வரை கூட தொடரும்.
நீ என்னை நேசிக்கிறாயா? நீ என்னை LOVE பண்ணுகின்றாயா என கேட்டால் ஆமாம் I LOVE YOU என சட்டென சொல்லிட முடிவது போல் காதலை சொல்ல முடியதில்லை. காதலில் காமம் சேரும் போது அதிலிருக்கும் LOVE சில நாட்களில் சாதலை அடைவதும் உண்டு.
அதிலும் இந்த நட்பெனும் ஆண்பெண் நூலிழை இழைவில்.... நேசிப்புக்கும் காதலுக்கும் மெல்லிய கோடு தான்.அந்த கோட்டை நிர்ணயிப்பது நம் உணர்வுகள் தான்!. தமக்குள் இருப்பதை நேசிப்பாக்குவதும் காதலாக்குவதும் அவரவர் கைகளில் தான் என்பேன்! காதலுக்கு எல்லை உண்டு, ஆனால் நட்புக்கு எல்லை இல்லை!
காந்தந்தின் இரு துருவங்களை நாம் அருகருகே வைத்து விட்டு ஈர்ப்பே இல்லை என சொன்னால் அது எப்படி தவறாகுமோ அப்படித்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான நட்பும் , பெண்ணுக்கு பெண்ணும் , ஆணுக்கு ஆணும் பழகும் போது இல்லாத ஏதோ ஒன்று ஆண் பெண் நட்பில் இருந்தாலும் அதையும் அவர்களில் புரிதலுடனான நேசிப்பாய் இறுதி வரை தொடர முடியும். என நான் நினைக்கின்றேன்?
பெரும் பாலான பெண்கள் சட்டென அறிமுகமாகும் வேற்று ஆண்களை அண்ணனாய், தம்பியாய் அழைப்பதும் தமக்கான பாதுகாப்பு வளையம் இறுகவே.. ஆண்களை நம்ப இயலாமை அல்லது தன்னில் நம்பிக்கை இல்லாமை ஆண்களை பெண்களை சகோதர உறவில் தூரமாய் வைத்து விடச்செய்கின்றது.
இதையெல்லாம் தாண்டி ஜெயிக்கும் ஆண் பெண் நட்பூ.... பல ஆண்டுகளானாலும் தொடர செய்யும் நட்பூவாய் வாடாமல் மரணம் வரிஅ கூட வரும் என்பது என் கருத்து!
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
நட்பா? காதலா? எது சிறந்தது?
உன்னகம் கொன்று என்னகம் ஜெயிப்பதும்
என்னகம் கொன்று உன்னகம் வெல்வதும்
விண்ணகம் சென்றிட தூண்டிடும் வலியடா?
துன்பமா இன்பமா,,, சகலமும் நம்முள்ளே
தாயிவள் சேயாவதும் சகலமும் சரணென
சொல்லிடும் உணர்வினில் ...
சவாலென விலகியே சடுதியாய் செல்கின்றாய்?
எப்படி உனை கொன்று உன்னை நான் வெல்லுவேன்?!
தரணியில் தோல்விகள் துவண்டேனே தோழியே என்றதும்
தொட்டதும் தொல்லை தான் என்று நீ உரைத்ததும்
தாங்கிடும் மனமின்றி தவிப்பவள் தாயடா!
தோல்வியில் துவண்டிட்டால் தோள் தந்து
தாங்கிடும உன்னவள் உனக்கென்றும் சேயடா!
தோள் தர துணை நிற்கும் தோழியும் அவளடா!
காதலை மிஞ்சிய பாசமும் நேசமும்
யுகத்திலே உண்டென புரிந்தவள் பெண்ணடா!
அனைத்தையும் வெல்லுவேன் அன்று நான் சொல்லுவேன்
அனைத்திலும் இருந்தவள் அன்பான தோழி நீ என்றவன்
என் மனமுணராமல் போனதேன் தோழா?
விழித்தெழு, ஜெயித்திடு சொல்லிடும் உன் தோழி
தன்னிலே உன்னை நீ தோற்கணும் என்பாளோ?
நீயா நானா சவால்கள் வந்திட்டால் - உன்
அன்பினுள் அடங்கியே ஜெயித்திடும்
சேயுந்தன் தாயுமானானவள் தோழியாம்!
வரமென சொன்னவன் தூரமாய் செல்கின்றான்
வீம்புடன் வார்த்தையை வீசித்தான் கொல்கின்றான்
பெண்மையோ மௌனமாய் கண்ணீரை வடிக்குதே!
மென்மையாம் மனதினில் உருகிடும் உணர்விலே
ஜெயிப்பவன் என்றுமே நீயாய்த்தானிருக்கணும்
வானமே எல்லையாய் அனைத்தையும் ஜெயிக்கணும்!
வஞ்சியின் வாஞ்சையில் வஞ்சனையில்லையே!
நெஞ்சத்தின் வேதனை புரிந்திடும் நாளேது?
காதலும், காமமும் கலந்திடும் இகத்திலே
காதலை தாவென கசிந்து நீ வேண்டினால்
கறைகளும் வாழ்க்கையை கலைத்து வைக்குமே!
காதலே வேண்டாமே கசக்குமே என்றிட்டால்
காதலித்துப்பார் உனக்கது புரியும் என்கிறாய் !
நட்புக்கோர் இலக்கணம் பிசிராந்தையார் நட்பாம்
பாராமல் மனமுணர்ந்தவர் உயிரையும் விட்டாராம்
என்றோ உரைத்ததை இன்று நீ மறந்ததேன்?
பின் குறிப்பு
அனவருக்கும் அன்பு வணக்கம்,!
வலையுலகிற்கு புதியவளாய் தமிழுக்கு சிறு மழலையாய் உங்கள் முன் தவழ்ந்திடும் என்னை தட்டிக்கொடுத்து தாலாட்டி, சீராட்டி நான் நடைபயில உதவிடும் அனைத்து வலைத்தமிழ் நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!
ஆல்ப்ஸ் தென்றலில் பதிவாகும் என் எழுத்துக்கள் புதியவைகள் அல்ல என்பதையும், அதில் இருக்கும் சோகங்கள் சோர்வுகள் இன்றைய என் நிலையை சொல்லும் சொந்தக்கதையல்ல என்பதையும். நான் பகிரும் பல கவிதைகள் 2009ம் ஆண்டிலேயே எழுதப்பட்டு முத்தமிழ் மன்றம், தமிழ் மன்றம், சேனைத்தமிழ் உலாக்களில்பதிவாக்கப்பட்டிருக்கின்றது என்பதோடு...அங்கொன்றும் இங்கொன்றுமாய் பரவி இருப்பதை ஒரே தொகுப்பாக்கிட ஆலோசனை சொல்லி என் வலைப்பூ வழி காட்டியாம் மனசு குமாரின் ஆலோசனையில் ஒவ்வொன்றாக இங்கே பதிவாக்குகின்றேன்.
புரிதலுக்கு நன்றி!
http://alpsnisha.blogspot.ch/2016/01/blog-post_18.htm
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
அப்போ இது சேனையில் எழுதியதல்ல ஆல்ப்ஸ்தென்றிலிருந்து காப்பி பண்ணிப்போட்டுள்ளீர்கள் அப்படிப்போட்டாலும் காட்டிக்கொடுத்து விட்டீர்கள் இது ஆல்ப்ஸ் தென்றில் எழுதியது என்று அடுத்த தடவை கவனமாக இருங்கள் சேனைக்கும் எங்களுக்கும் நீங்கள் புதியவர் அல்ல என்பதை மறக்க வேண்டாம
தரணியில் தோல்விகள் துவண்டேனே தோழியே என்றதும்
தொட்டதும் தொல்லை தான் என்று நீ உரைத்ததும்
தாங்கிடும் மனமின்றி தவிப்பவள் தாயடா!
தோல்வியில் துவண்டிட்டால் தோள் தந்து
தாங்கிடும உன்னவள் உனக்கென்றும் சேயடா!
தோள் தர துணை நிற்கும் தோழியும் அவளடா!
காதலை மிஞ்சிய பாசமும் நேசமும்
யுகத்திலே உண்டென புரிந்தவள் பெண்ணடா!
அருமையாக புரிதல் ஆல்ப்ஸ் தென்றலில் பதிவாகும் உங்கள் எழுத்துக்கள் புதியவைகள் அல்ல என்பதையும், அதில் இருக்கும் சோகங்கள் சோர்வுகள் இன்றைய உங்கள் நிலையை சொல்லும் சொந்தக்கதையல்ல என்பதையும். நாங்கள் அறிகிறோம் இருந்தாலும் இன்று நீங்கள் வரைந்துள்ளவைகள் ஒன்றும் அப்படியாக எண்ணத் தோன்ற வில்லை
வரமென சொன்னவன் தூரமாய் செல்கின்றான்
வீம்புடன் வார்த்தையை வீசித்தான் கொல்கின்றான்
பெண்மையோ மௌனமாய் கண்ணீரை வடிக்குதே!
மென்மையாம் மனதினில் உருகிடும் உணர்விலே
ஜெயிப்பவன் என்றுமே நீயாய்த்தானிருக்கணும்
வானமே எல்லையாய் அனைத்தையும் ஜெயிக்கணும்!
வஞ்சியின் வாஞ்சையில் வஞ்சனையில்லையே!
நெஞ்சத்தின் வேதனை புரிந்திடும் நாளேது?
இந்த வரிகள் அனைத்தும் என்னை அதிகமாக சிந்திக்க வைக்கிறது அனைத்தையும் புரிந்திடும் நாழும் வரும் வஞ்சியின் இன்றய தூருமும் அண்மித்தும் போகும் கவலை வேண்டாம் எல்லாம் காலத்தின் கோலம் அதற்கேற்றாப்போல் நாமும் வாழ்வோம்
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
குறிப்பாய் கொடுத்தது என் அனைத்து பதிவுகளுக்குமானது தான். இதோ இந்த பதிவிலிருந்தும் நட்பை குறித்த கருத்தும் கூட முத்தமிழ் மன்றத்திலும் சேனைத்தமிழ் உலாவிலும் இருப்பதே!
ஆல்ப்ஸ் தென்றலில் இதற்கு முன் இட்ட கவிதைகளுக்கு வந்தபின்னூட்டங்கள் சில என்னுடைய கவிதைகளில் தொடரும் சோகங்கள் இன்றையதென நினைத்து ஆறுதல் வார்த்தைகளாய் வந்ததால் பொதுவாக அக்கருத்தினை இட்டேன்.
எழுதுவதையெல்லாம் சொந்த வாழ்க்கையோடு இணைத்து பார்த்தால் ஒன்றுமே எழுத முடியாது.
எழுதும் போது நாம் ஒரு கருவை எடுத்து அக்கருவுக்குள் நாம் வாழ்ந்து எழுதும் போது வார்த்தைகள் இயல்பாய் வரும்.
நான் கேட்கும், பார்க்கும் சம்பவங்களின் அடிப்படையிலும் என் எழுத்துக்கள் வரும்.
புரியுமென நம்புகின்றேன்! விமர்சனத்துக்கு நன்றி.
ஆல்ப்ஸ் தென்றலில் இதற்கு முன் இட்ட கவிதைகளுக்கு வந்தபின்னூட்டங்கள் சில என்னுடைய கவிதைகளில் தொடரும் சோகங்கள் இன்றையதென நினைத்து ஆறுதல் வார்த்தைகளாய் வந்ததால் பொதுவாக அக்கருத்தினை இட்டேன்.
எழுதுவதையெல்லாம் சொந்த வாழ்க்கையோடு இணைத்து பார்த்தால் ஒன்றுமே எழுத முடியாது.
எழுதும் போது நாம் ஒரு கருவை எடுத்து அக்கருவுக்குள் நாம் வாழ்ந்து எழுதும் போது வார்த்தைகள் இயல்பாய் வரும்.
நான் கேட்கும், பார்க்கும் சம்பவங்களின் அடிப்படையிலும் என் எழுத்துக்கள் வரும்.
புரியுமென நம்புகின்றேன்! விமர்சனத்துக்கு நன்றி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
Nisha wrote:குறிப்பாய் கொடுத்தது என் அனைத்து பதிவுகளுக்குமானது தான். இதோ இந்த பதிவிலிருந்தும் நட்பை குறித்த கருத்தும் கூட முத்தமிழ் மன்றத்திலும் சேனைத்தமிழ் உலாவிலும் இருப்பதே!
ஆல்ப்ஸ் தென்றலில் இதற்கு முன் இட்ட கவிதைகளுக்கு வந்தபின்னூட்டங்கள் சில என்னுடைய கவிதைகளில் தொடரும் சோகங்கள் இன்றையதென நினைத்து ஆறுதல் வார்த்தைகளாய் வந்ததால் பொதுவாக அக்கருத்தினை இட்டேன்.
எழுதுவதையெல்லாம் சொந்த வாழ்க்கையோடு இணைத்து பார்த்தால் ஒன்றுமே எழுத முடியாது.
எழுதும் போது நாம் ஒரு கருவை எடுத்து அக்கருவுக்குள் நாம் வாழ்ந்து எழுதும் போது வார்த்தைகள் இயல்பாய் வரும்.
நான் கேட்கும், பார்க்கும் சம்பவங்களின் அடிப்படையிலும் என் எழுத்துக்கள் வரும்.
புரியுமென நம்புகின்றேன்! விமர்சனத்துக்கு நன்றி.
இந்த வரிகளுக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கள் தாயே
வரமென சொன்னவன் தூரமாய் செல்கின்றான்
வீம்புடன் வார்த்தையை வீசித்தான் கொல்கின்றான்
பெண்மையோ மௌனமாய் கண்ணீரை வடிக்குதே!
மென்மையாம் மனதினில் உருகிடும் உணர்விலே
ஜெயிப்பவன் என்றுமே நீயாய்த்தானிருக்கணும்
வானமே எல்லையாய் அனைத்தையும் ஜெயிக்கணும்!
வஞ்சியின் வாஞ்சையில் வஞ்சனையில்லையே!
நெஞ்சத்தின் வேதனை புரிந்திடும் நாளேது?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
என்னிடம் ஒரு குணம் உண்டு. எனக்குன்னு நேரடியாக நடந்தால் போனால் போகட்டும் என பேசாமல் போயிருவேன் அதே போல் இன்னொருவருக்கு நடந்தால் அட நமக்கும் இப்படி ஆனதே என நாலு வரி நச்சுன்னு கேட்கும் யோசனை வரும்.
அப்படி எழுதியது தான் என் தமிழ்க்கனம் வேண்டாமே எனும் கட்டுரை!என்னை வைத்து இன்னொரு பிரச்சனைக்காக தட்ட வேண்டியவர்களை தட்டியது தான் அந்த கட்டுரையின் சாரம்!
அதே போல் இதுவும்.... சில விடயங்களை படித்து கேட்டு பேசி கேட்கும் போது இப்படியும் நடக்குமா என தோன்றும். அதிலும் இந்த நட்பு விடயத்தில் ... பழகிய புதிதில் உன் அன்பு நட்பு எனக்கு வரம் , பொக்கிசம் என்பர், தலையில் தூக்கி வைத்த் கொண்டாடுவார்கள். கொஞ்ச நாளில் எல்லாம் மாறும்.
சாதாரணமாய் பெண்ணுக்குள் இருக்கும் தாய்மை தன்னை நேசிப்பவர்கள் அனைவரும் ஜெயிக்கணும் என நினைக்கும், நினைக்கும் என்ன தானே விட்டு கொடுத்து தோற்று போகும். அதை பல ஆண் கள் புரிந்திடுவதில்லை ஒரு நொடியில் அன்பை கொட்டுவது போல் அக்னியும் கொட்டப்படும். அதை கருவாக்கி.... என் தமிழ் நடையில் எழுதினேன்.
வஞ்சியின் வாஞ்சை வஞ்சனை , நெஞ்சம் எல்லாம் படிக்கும் போது சுவை தர எதுகையாய் சேர்த்தவை!
புரிதலில்லாத நட்புக்கு குறைகள் தான் தெரியும், ஆயுசும் கம்மி. மாறி மாறி குற்றம் சொல்ல தோன்றும், கேள்விகள் வரும்.
நான் அனைத்தையும் எழுதுவேன், இன்னும் எழுதுவேன், என்னை பொறுத்த வரை நான் எழுதுவது மட்டும்தான் எனக்காக நான் சேர்க்கும்பொக்கிசம்.யார் என்ன நினைத்தாலும் என்னில் தோன்றுவதை எழுதுவேன்.
உங்க அன்பு எனக்குள் உயிர்ப்பானது போல் வலி தந்தால் அதையும் எழுதுவேன். தயாராக இருங்கள்.
அப்படி எழுதியது தான் என் தமிழ்க்கனம் வேண்டாமே எனும் கட்டுரை!என்னை வைத்து இன்னொரு பிரச்சனைக்காக தட்ட வேண்டியவர்களை தட்டியது தான் அந்த கட்டுரையின் சாரம்!
அதே போல் இதுவும்.... சில விடயங்களை படித்து கேட்டு பேசி கேட்கும் போது இப்படியும் நடக்குமா என தோன்றும். அதிலும் இந்த நட்பு விடயத்தில் ... பழகிய புதிதில் உன் அன்பு நட்பு எனக்கு வரம் , பொக்கிசம் என்பர், தலையில் தூக்கி வைத்த் கொண்டாடுவார்கள். கொஞ்ச நாளில் எல்லாம் மாறும்.
சாதாரணமாய் பெண்ணுக்குள் இருக்கும் தாய்மை தன்னை நேசிப்பவர்கள் அனைவரும் ஜெயிக்கணும் என நினைக்கும், நினைக்கும் என்ன தானே விட்டு கொடுத்து தோற்று போகும். அதை பல ஆண் கள் புரிந்திடுவதில்லை ஒரு நொடியில் அன்பை கொட்டுவது போல் அக்னியும் கொட்டப்படும். அதை கருவாக்கி.... என் தமிழ் நடையில் எழுதினேன்.
வஞ்சியின் வாஞ்சை வஞ்சனை , நெஞ்சம் எல்லாம் படிக்கும் போது சுவை தர எதுகையாய் சேர்த்தவை!
புரிதலில்லாத நட்புக்கு குறைகள் தான் தெரியும், ஆயுசும் கம்மி. மாறி மாறி குற்றம் சொல்ல தோன்றும், கேள்விகள் வரும்.
நான் அனைத்தையும் எழுதுவேன், இன்னும் எழுதுவேன், என்னை பொறுத்த வரை நான் எழுதுவது மட்டும்தான் எனக்காக நான் சேர்க்கும்பொக்கிசம்.யார் என்ன நினைத்தாலும் என்னில் தோன்றுவதை எழுதுவேன்.
உங்க அன்பு எனக்குள் உயிர்ப்பானது போல் வலி தந்தால் அதையும் எழுதுவேன். தயாராக இருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
இதற்கு விளக்கம் என்ன சொல்வது என தெரியாமல் ஏதோ தோணீயதை சொல்லி வைக்கிறேன். சரியா தவறானு சொல்லிடுங்க.ஆணுக்கு ஆணும் பெண்ணுக்கு பெண்ணும் நட்பு கொள்வதை ஏன் நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை?பேசுவதில்லை?அங்கே ஈர்ப்பு இருக்காது. ஆண்,பெண் நட்பில் ஈர்ப்பு வந்து விடுகிறது. பேச்சில், செயலில் ஏதோ ஒன்று இவன், இவள் நம் வாழ்க்கை முழுதும் இருந்தால் சந்தோசமாக இருக்கலாம் என்ற ஆசை துளிர் விடுகிறது.
எல்லாக் காதலும் முதலில் நட்பில் ஆரம்பித்து காதலில் தான் முடியுது. மனசு தடம் புரண்டால் காதல்...தடம் புரளாமல் நின்றால் நட்பு.
நட்பில் நல்லவர்களாய் இருப்பவர்கள் காதலில் அதை கடைபிடிக்க முடியாமல் போய் விடுகிறது.
எது எப்படியோ நட்பும் , காதலும் அளவோடு இருந்தால் அமிர்தம் தான்.

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
மண்ணென்பர், பொன்னென்பர்,தரணியாளும் பெண்ணென்பர்
தாய்க்கு நிகர் நீயென்பர், தரத்திலென்றும் தங்கமென்பர்
பொன்னுடனே பெண் வந்தால் தேவதையே நீ என்பர்!
தாரமாய் அவளானால் தரித்திரமே யெனவும் வதைப்பர்!
தட்டிப்பார்த்து தரமறியும் மந்தைக்கும் நிகராக்குவர்
சந்தையிலே விலை பேசும் சங்கதியும் இவளென்பர்
சகலத்திலும் நிகராகினும் சங்கடமும் அதுவென்பர்.
விலையேறா பண்டமென வீட்டினுள்ளே பதுக்கி வைப்பர்!
சன்னிதியில் நிற்க வைத்து சந்தனமும் பூசிடுவர்,
சர்வமும் நீயேனவே தாழ் பணிந்தே சரணடைவர்
தங்கத்தின் நிறைக்கேற்ப தகுதியுயர்ந்தாலும்
தலை குனிவதேயுந்தன் தலைச்சிகரம் தானென்பர்!
வானுயர பறந்தாலும் தானுயரா பெண்ணிவளாய்
நாலு சுவர்க்குள்ளே அடங்கி துவண்டு போனாலும்
நாணம், மடம், அச்சமெல்லாம் நாய்க்கு நிகராக்கிடுவர்
இலட்சங்களின் முன்னே இலட்சியங்கள் தூசியென்பர்,
காதல் எனும் வேஷமிட்டு கன்னி மனம் கவர்ந்திட்டாலும்
காளையவன் கடிவாளம் காலம் காலமாய் தொடர
பொன்னும் பொருளுமிலாரெல்லாம் விழி வழியே
வழிந்தோடும் கண்ணீருடன் வழியோரம் ஒதுங்கி நிற்பர்
சாஸ்திரங்கள் கற்றென்ன, சாதனைகள் செய்தென்ன
வானுயப்பறந்தென்ன,வாக்குரிமை பெற்றென்ன
சீதனக்கொடுமை யெனும் மூடக்கட்டுக்கள் கொண்டே
அடிமையாக்கிட முயல்பவர் பலரிங்குண்டாமே!
சீர் கொண்டு வா என்றால் சிரம் தாழ்த்தி கரம் குவிக்காமல்
நேர் கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையும் அஞ்சா
நெஞ்சுரம் அடங்கிடும் ஆணவமே யுந்தன் சீரென்றுரைக்கும்
நாளென்றோ யன்றே நன்னாளென்று ணர்வதெப்போ பெண்ணே!
படங்கள் இணையத்தேடலில் கிடைத்தது
நன்றி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
எத்தனை உயரப் பெண்ணிருந்தாலும் அத்தனையையும் மீறி சீதனம் கேட்கும் வழமை உண்டு அருமையான கவிதை அசத்திட்டிங்க பாராட்டுகள் அக்கா
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
நேசமுடன் ஹாசிம் wrote:எத்தனை உயரப் பெண்ணிருந்தாலும் அத்தனையையும் மீறி சீதனம் கேட்கும் வழமை உண்டு அருமையான கவிதை அசத்திட்டிங்க பாராட்டுகள் அக்கா
உங்கள் கருத்தினை என் தளத்திலும் தரலாமே! இலங்கையில் இன்றைய நிலவரம் அங்கே தந்தால் மகிழ்ச்சி. என் தளவிடயத்தில் நான் உங்களிடமிருந்து எதிர்பார்த்த வைகள் மிஸ்ஸிங்க் தான். எனினும் நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
அருமையான கவிதை அக்கா...
சீதனங்கள் கேட்பது இப்போ ரொம்பக் குறைந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்...
இவ்வளவு நகை இவ்வளவு பணம் என்பதெல்லாம் எங்கள் பக்கம் குறைந்திருக்கிறது.... பெரும்பாலும் விருப்பத்தின் பேரில்தான் செய்யப்படுகிறது...
உறவுகள் சமூகம் தங்களைப் பற்றி பெருமையாக நினைக்க வேண்டுமென பெண் வீட்டாரே அதிகம் செய்கிறார்கள் என்பதே உண்மை.

சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
அருமையான விடயங்கள் பற்றி நீங்கள் கடந்து வந்த பாதையில் எழுதி உள்ளீர்கள் அவைகள் மிகவும் சிறப்பு
சீச்சீ சீதனம் பற்றி எழுதியது இன்னும் சிறப்பு நல்ல சமூக சிந்தனைகள் உங்கள் நடைமுறையில் மட்டுமில்லை உங்கள் ஒவ்வொரு எழுத்திலும் காண்கிறேன் பாராட்டுக்கள் தாயே இன்னுமின்னும் நிறைய எழுதி சமூக சிந்தனை மக்கள் மனதிலும் ஊட்ட வேண்டும்
வாழ்க வளமுடன்
நன்றியுடன் நண்பன்
சீச்சீ சீதனம் பற்றி எழுதியது இன்னும் சிறப்பு நல்ல சமூக சிந்தனைகள் உங்கள் நடைமுறையில் மட்டுமில்லை உங்கள் ஒவ்வொரு எழுத்திலும் காண்கிறேன் பாராட்டுக்கள் தாயே இன்னுமின்னும் நிறைய எழுதி சமூக சிந்தனை மக்கள் மனதிலும் ஊட்ட வேண்டும்
வாழ்க வளமுடன்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
ஆக்குவதும் அழிப்பதுவும் அவளேயன்றி யாருமில்லை
பெண்ணில்லா வீடு என்றும் பாழபட்டதென்றோ செப்பி
பெண் இன்றி பெருமை இல்லை, கண் இன்றி காட்சியில்லை
உன் கண்ணீரை போல ஒரு ஆயுதமும் வேறில்லை
அடக்கிடவும் அடங்கிடவும் அங்குசமாய் இருப்பவளே!
கருவில் உயிர்த்த நொடி முதலாய் மண்ணோடு மண்ணாய்
மக்கிப்போகும் நாள் வரைக்கும் தான் வாழ போராடும்
சுமை தாங்கியானவளின் மனக்காயங்கள் ஒன்றிரண்டா?
தன்னலமின்றி உருகி வெளிச்சம் தரும் மெழுகினைப்போல
தன்னை உருக்கிடுமவள் வலிகள் எண்ணுள்ளடங்கிடுமா?
தலைசுற்று, வாந்தி முதல் தனை வெறுக்கும் உணர்வுணர்ந்து
யாருமுணரா வலி தாங்கி தன் உதிரப்பாலை புகட்டி பத்திரமாய்
பாதுகாத்து பவித்திரமாய் பேணி டுமவள் வாழ்க்கையின்
சோதனை தான் வேதனையா? வேதனைதான் சாதனையோ?
தையலவள் காயம் தனை தைத்து விட்டால் அடங்கிடுமா?
ஆணென்றால் உயரும் தட்டும் பெண்ணென்றால் தாழ்வதுடன்
கண்ணாய் நீ யிருந்தாலும் பெண்ணே உன் பணி யிவைகள்
சொல்லி விளையாடிடத்தான் விளையாடு பொருள் சட்டி பானை!
ஓர் வயதில் ஆரம்பிக்கும் ஓர்மை தனை என்ன வென்பேன்?
ஆரம்பிக்கும் சேட்டைத்தனம் அடக்கியாளல் சரியோ?
மூவிரண்டு வயதானால் ஆரம்பிக்கும் ஆக்கினைகள்,
ஐயிரண்டு மாதம் சுமந்திடாமலே சேயிரண்டுக்கவள்
தாயாகும் பாக்கியங்கள்,அன்னையாய் அரவணைத்து
தந்தையாய் வழிகாட்டி அனைத்திலும் தலைமகளாய்
தன்னையே சீர்ப்படுத்த ஏவிடுவர் நாள் தோறும்!
நாலிரண்டு வயதினிலே அடுப்படியில் அடங்கிடுவாள்
அந்தி சந்தி வேளையிலே அன்னமூட்டும் தாயாவாள்
அத்தனைக்கும் அவள் வேண்டும் சிந்தனைக்கு நேரமில்லை
வீடு கூட்டி பெருக்கி விளக்கேற்றி வைக்க வேண்டும்
பெண்ணே உன் பணியிவைகள் என்றும் சொல்வர்!
ஐயிரண்டு வயதினிலே கன்றாய் துள்ளி ஓடி விட்டால்
காலிரண்டில் சலங்கையிட்டு துள்ளல் அடக்கிடுவர்
அன்னையவள் பூமியுந்தன் துள்ளல் தாங்கமாட்டாள்
அடக்கமாயிரு பெண்ணே என்றே சொல்லி குட்டிடுவர்
தட்டுவதும் குட்டுவதும் கொடுக்குகளாய் அவள் மேலே!
ஆறிரண்டு வயதானால் நாலு சுவர் உந்தன் சொந்தம்
வாயிற்படி வந்து விட்டால் அமிலமாய் ஏச்சுப்பேச்சு
பூமிப்படி அதிராது அனன் நடை அவள் பயில அச்சம், மடம்
நாணமெல்லாம் இலவசமாய் இணைந்து விடும்
இயைந்தால் என்று அறிந்தாலே அர்ச்சனைகள் தொடங்கி விடும
குனிந்த நடை தானே குமரி உனக்கழகெனச்சொல்லி
முழுமை யடையாத அவள் உள்ளம் மூடி முடங்கும்
தன்னைத்தொலைத்து தன் பெயர் மறந்து அமிழ்ந்தாலும்
மாதந்தோறும் வலிகள் உயிர் வதை உணர வைத்தே
நீயும் பெண்ணெனெவே சத்தமாய் கூச்சலிடும்!
மங்கையவள் சிந்தனைகள் சிறகடித்து பறந்து சென்றால்
சிறகொடித்து விறகாக்கி சீர் கொட்டி சிறையாக்கி
சித்திரம் போல் சிலையாக்கி சிந்தைதனை கொய்து
சிலுவையிலும் அறைவர்! இதுவே நியதியுமென்பர்
சிக்கிச்சீரழித்திடுவார் சின்னவளே நீ என்பர்!
பத்திரண்டு வயதானால் கற்பனைக்கோர் கடிவாளம்
கட்டி விட்டே ஓய்ந்திடுவர், தாய்மை அவள் சொத்தாகி
மீண்டும் அவள் உயிர்ப்பாள்,மீளவும் பிறப்பாள்,
தாலி கட்டும் மணாளன் மனம் கவரும் மங்கையவள்
அன்னையாகும் அவளன்பிலெ ன்றும் பேதமில்லை!
இத்தனைக்கும் அவள் வாழ்வில் பத்திரமாய் தான் இருப்பாள்
வேடன் போல வந்திறங்கி வேட்டை யாடும் மிருகங்களின்
பாலியல் வக்கிரங்கள் பாவையவள் வாழ்வினிலே
பாதாளம் செல்ல வைக்கும் பாடுகளை தந்திடுமே!
பாலூட்டும் நெஞ்சமதை பாழாக்கும் மாமனிதா!
காமுகனாய் ஆனதேனோ குத்திக்குதறியதேனோ?
தாலாட்டும் தாயுந்தன் தாய்மை உணராதவனே!
பெண்ணின்றி ஏதுமில்லை,அவளின்றி நீயுமில்லை
அமிலத்தால் அவளுடலை உருக்குலைக்க நீ யார் சொல்?
அகமுணரா கொடூரம் உன் தாகம் தீர்த்ததோ மனிதா?
பட்டுபோல பட்டாம் பூச்சியை பிடித்து நூல் கட்டி
பறக்கச்சொன்னால் எது வரை தான் பறக்கும்?
எப்படித்தான் துடிக்கும் பார்த்து மனம் ரசிப்பவனை
தட்டிக்கேளா தாயவளே தண்டனைக்குரியவளென்று
தனயனவன் தவறுகளும் தாயவளின் தலை மேலே!
நாடாள பிறந்தானென போற்றி வளர்த்திடு தல் தப்பென்று
நான் சொல்லேன்! ஆணுக்கொரு நீதி சொல்லிடுமுன் கேளீர்!
ஆணுமில்லை பெண்ணுமில்லை, ஒருவரின்றி எவருமில்லை
ஆணும் பெண்ணும் விண்ணூக்கும் மண்ணுக்கும் செல்லுதல்
சாத்தியமே சொல்லி வளர்ப்பீர்! வாதைகளை தவிர்ப்பீர்!
படங்கள்இணையத்தேடலில் கிடைத்தது
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
வதைகளுக்குள்ளாகும் பெண்ணை கண்முன்னே கொண்டு வந்த கவிதை வரிகள் பெண்ணின் வளர்ச்சிப்படிகளில் உள்ள நிலைகளை விவரித்திட்ட வர்ணனை உங்கள் கவிதை மிக மிக அருமை அக்கா பாராட்டுகள்
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
கவிதையும் அதற்குப் பொருத்தமான ஓவியர் இளையராஜாவின் படங்களுமாய்...
மிக நல்ல கவிதை அக்கா...
மிக நல்ல கவிதை அக்கா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
உலகம் போற போக்கைப்பாத்து
ஒளிஞ்சி கொண்ட எங்க ஆண்டவரே!
கொஞ்ச மனமிரங்கி எங்கள பாருங்க!
வியர்வை சிந்த மண்ணக்கொத்தி
பசள போட்டு பதப்படுத்தி
வித விதமா விதை விதைச்சி
ஊருக்கெல்லாம்
சோறும் போட்டேங்க!
இப்ப நானு வாழ சோறு கேட்டு
நாயி மாதி அலையிறேனுங்க
நானு செய்த பாவம் என்னங்க?
உயிரக்குடுத்து காடு கழனி
வெட்டிக்கிட்டோமுங்க,
வாயைகட்டி வயித்தக்கட்டி
வீடு ஒண்ணும் கட்டிக்கிட்டோமுங்க!
நாங்க தாங்க படிக்கல்ல
நம்ம புள்ளயாச்சும் படிக்கணுமிண்ணு
ஊரெல்லாம் ஒண்ணு சேர்ந்து
பள்ளிக்கூடமும் கட்டிக்கிட்டோமுங்க!
கோவில் குளம் எல்லாம் கட்டி
கோபுரமும் பெரிசாக்கட்டி
நோய் நொடின்னு வந்திட்டா
வைத்தியரு ஆசுப்பத்திரி
எல்லாமே இருந்திச்சிங்க.
நாடுதாங்க நமக்கில்ல
வீடாச்சும் இருக்குதேண்ணு
நிம்மதியா தூங்கினேனுங்க!
வயசான காலத்தில ஓய்ஞ்சிருக்க
நினைச்சி நானும் கோட்டை
எல்லாம் கட்டிகிட்டேனுங்க.
இப்ப நம்ம வாழ்வே சிதைஞ்சி போச்சிங்க
வீடும் இல்ல வாசலும் இல்ல
பெண்டு பிள்ளைக படும்பாட
பாத்து நமக்குக்கண்ணீர் வரல்லங்க!
கண்ணீரெல்லாம் வத்திப்போச்சுங்க!
எண்ட ரத்தத்தால நிறஞ்சி போச்சிங்க.
ராசா மாதி இருந்தேனுங்க.
எல்லாமே இருந்திச்சிங்க
இப்ப எல்லாமிருந்தும் ஒண்ணுமில்லாம
நாதியத்துப்போயித்தேனுங்க
நா வறண்டு தவிச்சிப்போய்
நா தினமும் சாகுறேனுங்க. .
நானு செய்த பாவம் என்னங்க?
கல்லுப்போல கிடக்குற ஐயாசாமி
பெரிய சாமி,சின்னச்சாமி
எல்லாச்சாமியும் ஒண்ணு சேருங்க!
எங்க மேல இரக்கம் காட்டுங்க
சீக்கிரமா வழியக்காட்டுங்க.
நானு நிம்மதியா சாகணுமுங்க.
படங்கள் இணையத்தில் எடுத்தவை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
வேதனை நிறைந்த கவிதை...
விவசாயியின் வலியைச் சொல்லும் கவிதை...
உண்மையை உரைக்கும் கவிதை...
மிக அருமையான கவிதை...
படங்கள் சொல்லும் கவிதை...
படத்துக்கான கவிதை...
அருமையான கவிதை...
வாழ்த்துக்கள் அக்கா.
விவசாயியின் வலியைச் சொல்லும் கவிதை...
உண்மையை உரைக்கும் கவிதை...
மிக அருமையான கவிதை...
படங்கள் சொல்லும் கவிதை...
படத்துக்கான கவிதை...
அருமையான கவிதை...
வாழ்த்துக்கள் அக்கா.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
சூரியன் மறையலாம்;
ஆனால் நிலையான காதல் மறைவதில்லை
விசாலமான மனதில் நிர்பந்தங்களின்றி உதயமானதே காதல், இரண்டான இதயங்கள் ஒன்றாகிடும் போது அன்பானது அங்கே முழுமை அடைகின்றது!
உண்மைக் காதல் இதமானது, நம் மனக்காயங்கள் தீர்க்கும் மருந்து, தாலாட்டும் தென்றல், உற்சாகத்தின் ஊற்று, இதமான போர்வை என நம்மையே நம்மில் உயிர்ப்பிக்கும் வித்தையை உணர்த்தும்!
இப்படி காதலிப்போருக்கு எல்லா நாளும் காதலர் தினம் தான்
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே !
காதலும் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படிப்பட்ட காதலுடன் தான் நாம் கடவுளை வேண்டுகின்றோமா?உள்ளம் உருகி வேண்டிடும் கடவுளில் மீதான காதலுக்கு ஈடிணை உண்டா? எத்துணை அற்புதமான காதல் இது,
இறைவனிடம் பக்தி கொண்டு தன் கண்ணையே கொடுத்த பக்தனின் பக்தியே காதலின் முழுமையை உணர செய்யும்போது இவ்வுலகின் போலித்தனமான அன்புக்கு காதலென எப்படி சொல்வேன்.
நிர்மலமான மனதுடன் எதிர்பார்ப்பில்லாமல் சுய நயலமற்றதான நேசிப்பை இவ்வுலக காதலுடன் ஒப்பிட்டு அனர்த்தமாய் சிந்திக்கும் மனநிலையை என்னவென்பேன்?
காதலில் கரைய மடி கொடுத்து
என் கற்பனைகள் உயிர்க்க
திடம் கொடுத்து
மண்ணான என்னை
பொன்னாக மாற்றும்
மெய் ஞானம் தேடி
கல்லான மனதை
கற்பூரமாக்கி
நான் பெற்ற ஞானம்
கண் தூங்கும் முன்னே
என் முன்னே வந்து
காணாத இன்பம்
நான் காண செய்த
காதலே உமக்கு நன்றி!
காதல் ஆணின் வாழ்க்கையில் ஓர் அதிகாரம் மட்டுமே;
ஆனால் பெண்ணின் வாழ்க்கையில் முழு வரலாறு-
எதிர்பார்ப்பில்லாத அன்பு முழுமையடைதலே காதலில் வெற்றி!
நான் உனக்கு இதை செய்தேனே ஏனக்கு நீ அதை கொடு எனும் எதிர்பார்ப்பின்றி எங்கெல்லாம் அன்பு செலுத்துகிறோமோ அங்கெல்லாம் நம் அன்பு காதலாகிறது.
நான் உன்னை நேசிக்கிறேன், நீ என்னை நேசிக்கிறாயா என கேட்டு செலுத்தும் எதிர்பாப்புடனான அன்பை காதலென்று எப்படி சொல்வேன்.?
தடைகள் தான், காதலுக்கு அதிக மதிப்பைத் தருகிறது
காதலோடு.....!
நான் சென்ற இடமெல்லாம் காதல்
நான் காண்பவை எல்லாம் காதல்
காணாத உங்களில் காதல்
கண்ட உங்கள் பதிவிலே காதல்
அன்பு செலுத்துவோர் மீது காதல்
அன்பு செலுத்தாதோர் மீதும் காதல்
இருப்போர் மேலே காதல்
இல்லாதோரிடம் அதிக காதல்
ஏழையை கண்டால் காதல்
எதிரியின் மீதும் காதல்
கற்றோரை கண்டால் காதல்
கல்லாதோர் மீது
இரக்கம் கொள்ளும் காதல்
உலக ஞானத்தின் மேலே காதல்
மெய்ஞானத்தின் மீதும் காதல்
நான் சென்ற இடமெல்லாம் காதல்
இன்று முதல்
காதலின் மேலும் காதல்!
எதிர்பார்த்து விதைப்பதைக் காதல் அறுவடை செய்யாது
மண்ணில் இந்தக்காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எனக்கு வானத்தின் மேலே காதல்
வான் மேகத்தின் மேலே காத்ல்
மலைகளின் மேலே காதல்
பூக்கும் மலர்களின் மேலும் காதல்
உயிர்களின் மேலே காதல்
இந்த உலகத்தின் மேலே காதல்
இன்னும் கொஞ்சம் உலகத்தில் வாழக்காதல்
என் குடும்பத்தின் மேலே காதல்
முத்தமிழ்மன்றக்குடும்பத்தின் மேலும் காதல்
பணத்தின் மேலே காதல்
அது தரும் பகட்டின் மேலும் காதல்
படிப்பின் மேலே காதல்
அதனால் வரும் மகிமையின் மேலும் காதல்
என் கடமையின் மேலே காதல்
படைத்த கடவுளின் மேலும் காதல்
என் எழுத்துக்கள் மீதும் காதல்
இதைபடிக்கும் உங்கள் மேலும் காதல்
காதலின்றி நான் இந்த உலகத்திலேது?
இதயத்தைத் தவிர காதலுக்கு குடியிருக்க வேறிடம் இல்லை
காதலையும் காதலித்து உங்களையும் நீங்களே காதலித்து பாருங்கள்!
மனதில் பட்டாம் பூச்சி பறப்பதையும், கவலைகள் பறந்தோடுவதையும்
தினம் தினம் புதிதாய் பிறந்த உணர்வையும் அடைவீர்கள்!

காதல் பற்றியும் இதயத்தைத் தவிர காதலுக்கு குடியிருக்க வேறிடம் இல்லை
காதலையும் காதலித்து உங்களையும் நீங்களே காதலித்து பாருங்கள்!
மனதில் பட்டாம் பூச்சி பறப்பதையும், கவலைகள் பறந்தோடுவதையும்
தினம் தினம் புதிதாய் பிறந்த உணர்வையும் அடைவீர்கள்!
இன்றய காதலர்கள் பற்றியும்
நான் உனக்கு இதை செய்தேனே ஏனக்கு நீ அதை கொடு எனும் எதிர்பார்ப்பிள்தான் இன்றய காதல் உள்ளது
எப்படி காதலிக்க வேண்டும் என்றும்
விசாலமான மனதில் நிர்பந்தங்களின்றி உதயமானதே காதல், இரண்டான இதயங்கள் ஒன்றாகிடும் போது அன்பானது அங்கே முழுமை அடைகின்றது!
உண்மைக் காதல் இதமானது, நம் மனக்காயங்கள் தீர்க்கும் மருந்து, தாலாட்டும் தென்றல், உற்சாகத்தின் ஊற்று, இதமான போர்வை என நம்மையே நம்மில் உயிர்ப்பிக்கும் வித்தையை உணர்த்தும்! இதமான கீதமே காதல் வாழ்க காதல் வளர்க காதலர்கள் .
காதலர் தினத்தில் நீங்கள் இட்ட பதிவு இன்றுதான் முழுமையாக படித்தேன்
நன்றியுடன் நண்பன்
காதலையும் காதலித்து உங்களையும் நீங்களே காதலித்து பாருங்கள்!
மனதில் பட்டாம் பூச்சி பறப்பதையும், கவலைகள் பறந்தோடுவதையும்
தினம் தினம் புதிதாய் பிறந்த உணர்வையும் அடைவீர்கள்!
இன்றய காதலர்கள் பற்றியும்
நான் உனக்கு இதை செய்தேனே ஏனக்கு நீ அதை கொடு எனும் எதிர்பார்ப்பிள்தான் இன்றய காதல் உள்ளது
எப்படி காதலிக்க வேண்டும் என்றும்
விசாலமான மனதில் நிர்பந்தங்களின்றி உதயமானதே காதல், இரண்டான இதயங்கள் ஒன்றாகிடும் போது அன்பானது அங்கே முழுமை அடைகின்றது!
உண்மைக் காதல் இதமானது, நம் மனக்காயங்கள் தீர்க்கும் மருந்து, தாலாட்டும் தென்றல், உற்சாகத்தின் ஊற்று, இதமான போர்வை என நம்மையே நம்மில் உயிர்ப்பிக்கும் வித்தையை உணர்த்தும்! இதமான கீதமே காதல் வாழ்க காதல் வளர்க காதலர்கள் .
காதலர் தினத்தில் நீங்கள் இட்ட பதிவு இன்றுதான் முழுமையாக படித்தேன்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
Nisha wrote:
ஆக்குவதும் அழிப்பதுவும் அவளேயன்றி யாருமில்லை
பெண்ணில்லா வீடு என்றும் பாழபட்டதென்றோ செப்பி
பெண் இன்றி பெருமை இல்லை, கண் இன்றி காட்சியில்லை
உன் கண்ணீரை போல ஒரு ஆயுதமும் வேறில்லை
அடக்கிடவும் அடங்கிடவும் அங்குசமாய் இருப்பவளே!
கருவில் உயிர்த்த நொடி முதலாய் மண்ணோடு மண்ணாய்
மக்கிப்போகும் நாள் வரைக்கும் தான் வாழ போராடும்
சுமை தாங்கியானவளின் மனக்காயங்கள் ஒன்றிரண்டா?
தன்னலமின்றி உருகி வெளிச்சம் தரும் மெழுகினைப்போல
தன்னை உருக்கிடுமவள் வலிகள் எண்ணுள்ளடங்கிடுமா?
தலைசுற்று, வாந்தி முதல் தனை வெறுக்கும் உணர்வுணர்ந்து
யாருமுணரா வலி தாங்கி தன் உதிரப்பாலை புகட்டி பத்திரமாய்
பாதுகாத்து பவித்திரமாய் பேணி டுமவள் வாழ்க்கையின்
சோதனை தான் வேதனையா? வேதனைதான் சாதனையோ?
தையலவள் காயம் தனை தைத்து விட்டால் அடங்கிடுமா?
ஆணென்றால் உயரும் தட்டும் பெண்ணென்றால் தாழ்வதுடன்
கண்ணாய் நீ யிருந்தாலும் பெண்ணே உன் பணி யிவைகள்
சொல்லி விளையாடிடத்தான் விளையாடு பொருள் சட்டி பானை!
ஓர் வயதில் ஆரம்பிக்கும் ஓர்மை தனை என்ன வென்பேன்?
ஆரம்பிக்கும் சேட்டைத்தனம் அடக்கியாளல் சரியோ?
மூவிரண்டு வயதானால் ஆரம்பிக்கும் ஆக்கினைகள்,
ஐயிரண்டு மாதம் சுமந்திடாமலே சேயிரண்டுக்கவள்
தாயாகும் பாக்கியங்கள்,அன்னையாய் அரவணைத்து
தந்தையாய் வழிகாட்டி அனைத்திலும் தலைமகளாய்
தன்னையே சீர்ப்படுத்த ஏவிடுவர் நாள் தோறும்!
நாலிரண்டு வயதினிலே அடுப்படியில் அடங்கிடுவாள்
அந்தி சந்தி வேளையிலே அன்னமூட்டும் தாயாவாள்
அத்தனைக்கும் அவள் வேண்டும் சிந்தனைக்கு நேரமில்லை
வீடு கூட்டி பெருக்கி விளக்கேற்றி வைக்க வேண்டும்
பெண்ணே உன் பணியிவைகள் என்றும் சொல்வர்!
ஐயிரண்டு வயதினிலே கன்றாய் துள்ளி ஓடி விட்டால்
காலிரண்டில் சலங்கையிட்டு துள்ளல் அடக்கிடுவர்
அன்னையவள் பூமியுந்தன் துள்ளல் தாங்கமாட்டாள்
அடக்கமாயிரு பெண்ணே என்றே சொல்லி குட்டிடுவர்
தட்டுவதும் குட்டுவதும் கொடுக்குகளாய் அவள் மேலே!
ஆறிரண்டு வயதானால் நாலு சுவர் உந்தன் சொந்தம்
வாயிற்படி வந்து விட்டால் அமிலமாய் ஏச்சுப்பேச்சு
பூமிப்படி அதிராது அனன் நடை அவள் பயில அச்சம், மடம்
நாணமெல்லாம் இலவசமாய் இணைந்து விடும்
இயைந்தால் என்று அறிந்தாலே அர்ச்சனைகள் தொடங்கி விடும
குனிந்த நடை தானே குமரி உனக்கழகெனச்சொல்லி
முழுமை யடையாத அவள் உள்ளம் மூடி முடங்கும்
தன்னைத்தொலைத்து தன் பெயர் மறந்து அமிழ்ந்தாலும்
மாதந்தோறும் வலிகள் உயிர் வதை உணர வைத்தே
நீயும் பெண்ணெனெவே சத்தமாய் கூச்சலிடும்!
மங்கையவள் சிந்தனைகள் சிறகடித்து பறந்து சென்றால்
சிறகொடித்து விறகாக்கி சீர் கொட்டி சிறையாக்கி
சித்திரம் போல் சிலையாக்கி சிந்தைதனை கொய்து
சிலுவையிலும் அறைவர்! இதுவே நியதியுமென்பர்
சிக்கிச்சீரழித்திடுவார் சின்னவளே நீ என்பர்!
பத்திரண்டு வயதானால் கற்பனைக்கோர் கடிவாளம்
கட்டி விட்டே ஓய்ந்திடுவர், தாய்மை அவள் சொத்தாகி
மீண்டும் அவள் உயிர்ப்பாள்,மீளவும் பிறப்பாள்,
தாலி கட்டும் மணாளன் மனம் கவரும் மங்கையவள்
அன்னையாகும் அவளன்பிலெ ன்றும் பேதமில்லை!
இத்தனைக்கும் அவள் வாழ்வில் பத்திரமாய் தான் இருப்பாள்
வேடன் போல வந்திறங்கி வேட்டை யாடும் மிருகங்களின்
பாலியல் வக்கிரங்கள் பாவையவள் வாழ்வினிலே
பாதாளம் செல்ல வைக்கும் பாடுகளை தந்திடுமே!
பாலூட்டும் நெஞ்சமதை பாழாக்கும் மாமனிதா!
காமுகனாய் ஆனதேனோ குத்திக்குதறியதேனோ?
தாலாட்டும் தாயுந்தன் தாய்மை உணராதவனே!
பெண்ணின்றி ஏதுமில்லை,அவளின்றி நீயுமில்லை
அமிலத்தால் அவளுடலை உருக்குலைக்க நீ யார் சொல்?
அகமுணரா கொடூரம் உன் தாகம் தீர்த்ததோ மனிதா?
பட்டுபோல பட்டாம் பூச்சியை பிடித்து நூல் கட்டி
பறக்கச்சொன்னால் எது வரை தான் பறக்கும்?
எப்படித்தான் துடிக்கும் பார்த்து மனம் ரசிப்பவனை
தட்டிக்கேளா தாயவளே தண்டனைக்குரியவளென்று
தனயனவன் தவறுகளும் தாயவளின் தலை மேலே!
நாடாள பிறந்தானென போற்றி வளர்த்திடு தல் தப்பென்று
நான் சொல்லேன்! ஆணுக்கொரு நீதி சொல்லிடுமுன் கேளீர்!
ஆணுமில்லை பெண்ணுமில்லை, ஒருவரின்றி எவருமில்லை
ஆணும் பெண்ணும் விண்ணூக்கும் மண்ணுக்கும் செல்லுதல்
சாத்தியமே சொல்லி வளர்ப்பீர்! வாதைகளை தவிர்ப்பீர்!படங்கள்இணையத்தேடலில் கிடைத்தது
பெண்மையின் (மே)மென்மையும் அவளின் புகழும் அவள் படும் வேதனையும் என்பது வரிகளில் எழுதி முடித்தீர்கள்
பல வரிகள் கேள்விகளாகவே முடிந்துள்ளது பதில் கிடைக்குமா அத்தனை வரிகளும் அருமையானவையே வாழ்க தாய்க்குலம்
ருவில் உயிர்த்த நொடி முதலாய் மண்ணோடு மண்ணாய்
மக்கிப்போகும் நாள் வரைக்கும் தான் வாழ போராடும்
சுமை தாங்கியானவளின் மனக்காயங்கள் ஒன்றிரண்டா?
தன்னலமின்றி உருகி வெளிச்சம் தரும் மெழுகினைப்போல
தன்னை உருக்கிடுமவள் வலிகள் எண்ணுள்ளடங்கிடுமா?
தலைசுற்று, வாந்தி முதல் தனை வெறுக்கும் உணர்வுணர்ந்து
யாருமுணரா வலி தாங்கி தன் உதிரப்பாலை புகட்டி பத்திரமாய்
பாதுகாத்து பவித்திரமாய் பேணி டுமவள் வாழ்க்கையின்
சோதனை தான் வேதனையா? வேதனைதான் சாதனையோ?
தையலவள் காயம் தனை தைத்து விட்டால் அடங்கிடுமா?
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
அனைத்தையும் காதலிக்கச் செய்யும் உங்களின் படைப்பு அருமையானது அக்கா வாழ்த்துகள்
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
எனக்கு காதலைப் பற்றி தெரியாதுப்பா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
» ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3
» ஆல்ப்ஸ் தென்றலில்---தமிழ்க்'கனம்' வேண்டாமே!
» ஆல்ப்ஸ் தென்றலில்.....நான் சிரித்தால் தீபாவளி!
» மனைவியை காதலியுங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum