சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Khan11

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

+3
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
7 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by Nisha Wed 23 Dec 2015 - 1:01

நான் சின்னவளாய் இருந்தபோது..

எத்தனை வயதாலும் நாம் நம் சிறுவயதின் நினைவுகளை மறந்திட முடியாதல்லவா?

அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்! 

 என் தமிழ் மொழியுடனான பள்ளி வாழ்வெனவது என் 12- 13 வயதி்ன் பின் தட்டு தடுமாறித்தான் சென்றது.ஆனால அந்த 12. 13 வயதிலேயே நான் முழு வாழ்க்கைகுமாக பெறவேண்டிய மகிழ்ச்சியை அடைந்திருப்பேன்! அத்தோடு ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் எனக்கான முத்திரையை பதிந்திருக்கின்றேன் என்பதை ஊரை விட்டு வந்து 25 வருடங்களாகியும்  எனக்கு கற்பித்த நினைவுகளை ஆசிரியர்கள் என்னுடன் பகிரும் போது உணர்கின்றேன். 

கடந்த வாரம் விடுமுறைக்கு வந்திருந்த என் தங்கை... என் நினைவுகளை மீட்டுச்சென்றாள். அனைத்திலும் திறமையாய் அனைவரிலும் முதலாய்... டாக்டராய் இருக்கும் தம்பியை விடவும் என் அக்கா  பள்ளியில் சிறந்து விளங்கினாள் என என்னை குறித்து தன் கணவரிடம் அறிமுகம் செய்த போது என் கண்களில் நீர்..!  

நாடு விட்டு நாடு புலம் பெயர்தலால் நான் இழந்தைவைகள் எத்தனை? அந்நிய மொழியும், நாட்டிலும் நான்  பெற்றவைகளும் அனேகமாயிருப்பினும் தாய் மொழியில் தாய் நாட்டில்  நாம் பெறக்கூடியவை அனைத்து இழப்புக்கள் தானே?

16 வயதில் சுவிஸ்ஸர்லாந்து நாட்டுக்கு வந்து முதல் ஆறுவருடங்கள் தமிழ் மொழிக்கும் எனக்குமான உறவு வார இறுதிகளில் மட்டும் அதுவும் பேச்சளவில் என்றாகியும் இருந்தது. ஆங்கில எழுத்துக்களை கொண்டு ஆங்கில உச்சரிப்பில்லாத ஜேர்மன் மொழி அதாவது டொச் மொழியை கற்க தமிழ் மொழியை  மட்டுமல்ல அதுவரை உறவாயிருந்த ஆங்கிலமும் கூட விலகித்தான் வைக்க வேண்டி வந்தது!எனினும் தமிழ் மொழி மீதான என் பற்று வளர்ந்ததே தவிர குறையவே இல்லை. கண்டதும் கற்க பண்டிதன் ஆகலாம் என்பதை இன்று வரை என்னில் ஆராய்ந்து கொண்டுள்ளேன்

பதிவில் எதையோ ஆரம்பித்து எங்கோ சென்று கொண்டிருக்கின்றேன். நான் இங்கே பகிர வந்த விடயமே வேறு.. என் சொந்த அனுபவங்களை  வேறொரு பதிவில் பகிர்கின்றேன். 

எனக்குள் என்றுமே பாடசாலை நாள் என்பது எனக்கு இனிக்கும் நினைவலைகள் தான். மீண்டும் வராத இனிய நினைவலைகள்! 

நம் பாடசாலை நாட்களில் நாம் பேச்சு வழக்கிலான பல பாடல்களை  பாடி விளையாடி  இருப்போம். அம்மாதிரியான விளையாட்டு பாடல்களை தொடராக இங்கே பகிரலாம் என நினைக்கின்றேன். 

நான்காம்,ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலே நானும் என் தோழிகளும் பாடசாலை இடைவேளைக்காகவே காத்திருப்போம். என் வகுப்பில் ஆண்பெண் இணைந்து படித்தாலும் பெண்கள் மட்டுமே சேர்ந்து விளையாடகூடிய விளையாட்டில் ஆண்களும்கல்ந்து கொள்வார்கள். அப்படிபட்ட ஒரு விளையாட்டு தான் பெண்களுக்கான பூப்பறிக்க போகிறோம் எனும் பாடலுடன் கூடிய விளையாட்டு. 
ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 35cinig
படம் நன்றி இணையம் 

படத்தில் பையன் துணியை கையில் வைத்திருக்கின்றான் 

ஆனால் நாங்கள் பூக்கொத்து அல்லது இலைக்கொத்தை  வைத்து தான்  விளையாடினோம் 

குறைந்தது 20- 26 பேர் சுற்றி வர பெரிய வட்டமாக நெருங்கி உட்கார்ந்து கொள்ள வேண்டும். யாரும் பின்பக்கம் திரும்பி பார்க்க கூடாது.. விளையாட்டின் ஆரம்பத்தில் ஒருவர் தெரிந்தெடுக்கப்பட்டு அவர் கையில் ஒரு மலர் கொத்து கொடுக்கப்படும். அது மலரோ ஆலமர இலையோ வம்மி மர காயோ பூவரசம் தடியோ எதுவானாலும் அது தான் அந்த வயதில் பூ...

பூவை கையில் வைத்திருப்பவர் பாட வேண்டும். பாடிக்கொண்டே வட்டமாக அமர்ந்திருப்பவர்களை சுத்தி ஓடவும் வேண்டும்.. 

பூப்பறிக்க போகிறோம்..போகிறோம்.. போகிறோம்.. என சுத்தி சுத்தி ஓடிக்கொண்டே பாட அமர்ந்திருப்போர்  யாரைபறிக்க போகிறீர் போகிறீர் 
என எதிர்க்கேள்வி கேட்க வேண்டும்.. 

ஓடுபவர் சிறிது நேரம் அமைதியாக சுத்தி சுத்தி ஓடிய படியே தம் கையில் இருக்கும் மலர்கொத்தை யாராவது ஒருத்தர் பின்னால் மொதுவாக வைத்து விட்டு  ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அவர் விரும்பினால் யார் பின்னால் தான் மலர்கொத்தை வைத்தாரோ அவர் தன்னை எந்த பக்கத்தாலும் துரததிப் பிடிக்க முடியாத இடத்தில் ஓடிய படியே..அவர் பெயரைச்சொல்லி 

உதாரணமாக நிஷாவை  பிடிக்க போகிறோம் போகிறோம் 

என சொல்லி ஓடினால் அந்த நபர் உடனே திரும்பி பார்த்து மலர்கொத்தி்னை எடுத்து கொண்டு முன்னால் ஓடுபவரை அந்த  மலர்க்கொத்தால் தொட முயற்சிக்க வேண்டும். ஆனால் முன்னால் ஓடுபவர் பின்னால் வருபவர் இடத்தில் போய் உட்கார்ந்து வட்டத்தை நிரப்பி விட்டால் மீண்டும் விளையாட்டு ஆரம்பமாகும். 

அதே நேரம் முன்னால் ஓடுபவரை பின்னால் வருபவர் மலரால் தொட்டு விட்டால் மீண்டும் முன்னவரே ஆரம்பிக்க வேண்டும். 

இப்படி நாள் முழுதும் சுவாரஷ்யமாக ஒவ்வொரு பூவின் பெயரோடும் நண்பர்கள் பெயரோடும் விளையாடுவோம். 

அது ஒரு பொற்காலம்தான்...!

இப்படியாக நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.அப்படி ஒருசில பாடலகளை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..
[size=18]ஓடு[/size]

ஓடு ஓடு
[size=13]என்ன ஓடு ? நண்டோடு
என்ன நண்டு ? பால்நண்டு
என்ன பால்? கள்ளிப்பால்.
என்ன கள்ளி? சதுரக்கள்ளி
என்ன சதுரம் ? நாய்ச்சதுரம்
என்ன நாய்? வேட்டைநாய்.
என்ன வேட்டை? பன்றிவேட்டை.
என்ன பன்றி? ஊர்ப்பன்றி,
என்ன ஊர்? கீரனூர்.
என்ன கீரை? அறைக்கீரை
என்ன அறை? பொன்னறை.
என்ன பொன்? காக்காய்ப்பொன்.
என்ன காக்காய்? அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? சோற்றண்டம்.
என்ன சோறு? பழஞ்சோறு.
என்ன பழம்? வாழைப்பழம்.
என்ன வாழை? கருவாழை.
என்ன கரு? நத்தைக்கரு.
என்ன நத்தை? குளத்துநத்தை
என்ன குளம்? பெரியகுளம்.
[/size]

 நட்புக்கள் தங்கள் நினைவலைகளில் தோன்றுவதை பின்னூட்டங்களில் பகிர்ந்தால் மகிழ்வேன். 

இப்பதிவு  தொடராக வரும்.!

Last edited by Nisha on Thu 24 Dec 2015 - 2:16; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by நேசமுடன் ஹாசிம் Wed 23 Dec 2015 - 9:06

அந்தக்காலத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி இன்று அதை விளையாடினால் எப்படி இருக்கும் என்றும் யோசித்துப்பார்த்தேன் கிழுகிழுப்பாக இருக்கிறது நாட்டுக்கு வாருங்கள் கடற்கரை மண்ணில் எம் குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்து இந்த விளையாட்டை விளையாடுவோம்

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by நண்பன் Wed 23 Dec 2015 - 15:27

அருமையான நினைவுகளை மீட்டுள்ளீர்கள் அக்கா  நம்மால் என்றும் மறக்க முடியாத பொற்காலம்தான் அது  பள்ளியில் முதல் மாணவியாய் கெட்டிக்காரியாய் திகழ்ந்த உங்கள் பழைய நினைவுகள் இன்னும் சிறப்பு

புலம் பெயர்ந்து அங்கு நீங்கள் அனுபவித்த சிரமங்கள் அனுபவங்கள் வாரக்கணக்கில் எழுதலாம் என்று நான் நினைக்கிறேன்  இப்போது நீங்கள் இருக்கும் நிலை கண்டு நாங்கள் மகிழ்கிறோம் ஆனால் இந்த நிலை நீங்கள் அடைவதற்கு என்ன பாடு பட்டுரிப்பீர்கள் என்பதை உணர முடிகிறது அறிந்தும் இருக்கிறேன்

பூப்பறிக்க போகிறோம் என்ற விளையாட்டு நான் விளையாடியதில்லை  ஆனால் சிறு வயதுப்பாடல் விளையாட்டுவிளையாடி இருக்கிறோம் அந்த வகையில் நீங்கள் பாடியவாறும் இருக்கும் ஓடு ஓடு என்று நீங்கள் பாடியுள்ளீர்கள் நாங்கள் கிள்ளிக்கிள்ளிப்பிராண்டியாரே என்றும் இன்னும் பல பாடல்கள் பாடியும் இருக்கிறோம்  நினைவுக்கு வருகிறது இருந்தாலும் உங்கள் பதிவுகள் நினைவுகள் அனைத்தும் இங்கு தொடரட்டும் நாங்களும் படிக்கிறோம் எங்கள் நினைவுகளும் அதில் தவழட்டும்
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by paransothi Wed 23 Dec 2015 - 21:21

அருமையான நினைவலைகள் தங்கை

கல்லாறு பள்ளியில் நீங்க விளையாடி இடங்களை காட்டிய போதும், உங்கள் ஆசிரியர்களை நினைவுக்கூர்ந்த போதும் உங்கள் உள்ளத்தின் குதுகலம் உங்கள் பேச்சிலும், கண்களிலும் கண்டேன்.

என்னுடைய சிறுவயது விளையாட்டுகளையும் நினைவுப்படுத்தி விட்டீங்கள். முன்பு இணையத்தில் வேட்டையாடு விளையாடு என்று எழுதிய பதிவுகளை இங்கே கொடுக்க ஆசைப்படுகிறேன்.

paransothi
புதுமுகம்

பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by Nisha Wed 23 Dec 2015 - 21:27

ஆஹா! அண்ணா இன்னும் நினைவு இருக்கின்றதா? தம்பி வெடிங்கில் எனக்கு கணக்கு சொல்லி தந்தேன்னு ஒரு மாஸ்டர் ... நானே மறந்ததை நினைவு படுத்தி என்னை தெரியுமா என தானாய் அறிமுகப்படுத்தி பேசியது நினைவு இருக்கின்றதா?

உங்கள் நினைவலைகளை இங்கே பகிருங்கள் அண்ணா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by paransothi Wed 23 Dec 2015 - 21:29

அது எப்படி மறக்கும், அந்த பள்ளியினை சுற்றி சுற்றி காட்டியது, எனக்கு அங்கே காலடி வைக்கும் போது ஏதோ ஒரு பிறவியில் அந்த இடத்தில் வாழ்ந்திருப்பதாக தோன்றியது.

மேலும் மரத்தடியில் கிரிக்கெட் ஆடியதை மறக்க முடியாது, கூட ஆடிய தாமஸ் தான் இப்போ இல்லை.

paransothi
புதுமுகம்

பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by Nisha Wed 23 Dec 2015 - 21:31

கிரிக்கெட்டும் விளையாடினீர்களா? எனக்கு தெரியாதே? இது எப்போது நடந்தது? 

நாங்கள் தம்பி வெடிங்கில் ஷாப்பிங்க் என அலைய நீங்க இந்தப்பக்கம் அங்கே போயும் கிரிகெட் விளையாடினீர்களா? 

தோமஸ் இல்லை என்பது வலிதான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by Nisha Thu 24 Dec 2015 - 2:15

இது ஒரு தொடர் பதிவு! முதல் பதிவைப்படிக்க லிங்க் இணைத்துள்ளேன்!

நான் சின்னவளாய் இருந்தபோது.- 1 

பள்ளிக்கால வகுப்பு இடைவேளையில் அல்லது மாலை நேரத்தில் தோழிகளோடு ஒன்று சேரும் போது மணலில் வீடு கட்டி,அங்கேயே மணல் சோறுகறி சமைத்து விளையாடிய காலங்கள் இனிப்பானவையே!

நான் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்த ஆரம்ப பாடசாலை முன்பாக ஒரு பெரிய வம்மி மரம் அகன்று விரிந்து வளர்ந்து நிழல் கொடுத்து கொண்டிருக்கும்.அந்த நிழல் தான் எமது விளையாட்டு திடல்

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 294ouma

வம்மி மர நிழலில் தான் விளையாடுவோம்.வம்மி மரம் பூக்கும் காலங்களும் அந்த பூக்கள் குண்டு குண்டாக பூத்து குலுங்கும் போதுஅதை எட்டிப்பறித்து கைக்குள் பிடித்தால் மெதுமையாக இருப்பதனால அதை பந்து போல் உருட்டி விளையாடியதும். பூக்களை ஒவ்வொரு உதிரியாக உதிர்த்தியும் தானாய் உதிரும் போதும் தரையெல்லாம் ஆரஞ்சு, மஞ்சள் வர்ணக்கோலமிட்டது போல் அழகும் அதே வம்மி மர இலை ஆலிலை போல் அகன்று விரிந்திருப்பதால் முன்னாலிருக்கும் பிள்ளையார் கோயில் பிரசாதம் வாங்கவும்,யாராவது நேர்த்தி கடனுக்காய் பொங்கலிட்டால் பொங்கல் வாங்கிச்சாப்பிட தட்டாவதுமான இனி நினைவலைகள் இன்னும் மனதுக்கு இனிமை தருவதாய் இருக்கும். 

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Fm5frs
படம் 
நன்றி இணையம். 

நம் பால்யகால நினைவுகளை கிளரும் இன்னொரு பாடல்...வார்த்தையாடல் எவ்வளவு அழகாக வந்து விழுகின்றது.

நீ எங்கே போனாய்?

ஊருக்குப் போனேன்.
என்ன ஊர்? மயிலாப்பூர்
என்ன மயில்? காட்டுமயில்
என்ன காடு? ஆறுகாடு
என்ன ஆறு? பாலாறு
என்ன பால்? கள்ளீப்பால்
என்ன கள்ளி? இலைக்கள்ளி
என்ன இலை? வாழைஇலை
என்ன வாழை? கற்பூர வாழை
என்ன கற்பூரம்? ரசக்கற்பூரம்
என்ன ரசம்? மிளகு ரசம்
என்ன மிளகு? வால்மிளகு
என்ன வால்? நாய்வால்
என்ன நாய்? மரநாய்
என்ன மரம்? பலாமரம்
என்ன பலா? வேர்ப்பலா
என்ன வேர்? வெட்டிவேர்
என்ன வெட்டி? பனைவெட்டி
என்ன பனை? தாள்பனை
என்ன தாளி? விருந்தாளிi
என்ன விருந்து? நிலாவிருந்து
என்ன நிலா? பிறைநிலா
என்ன பிறை? நெற்றிப்பிறை
என்ன நெற்றி? பெண்நெற்றி 
என்ன பெண்? மணப்பெண்
என்ன மணம்? பூமணம்
என்ன பூ? மாம்பூ
என்ன மா? அம்மா.

பொதுவாகவே ஏட்டிக்குப்போட்டியாக பேசும் போது வாயாடி எனும் பட்டம் தானாகவே ஒட்டிகொள்ளும்.ஆனால் அன்றைய காலகட்டத்தில் வழிவழியாக வந்த பாடல்கள் ஏட்டிக்குபோட்டியாக கேள்விக்கு எதிர்கேள்வியொடு வருவதையும் அவைகள் அறிவை வள்ர்ப்பதாக இருப்பதையும் கவனித்தால் நம் முன்னோர்கள் நமக்கென விட்டு சென்ற பல அரிய பொக்கிஷங்களை நாம் என்ன செய்ய போகிறோம் எனும் கேள்வி ஏழாமல் இல்லை.

அப்படியே மீட்டிப்பாருங்கள். சில நேரம் இந்தப்பாடல் கூட உங்கள் எல்லோருக்கும் நினைவில் வரும்

ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கேமுட்டை வைத்தாய்..
கல்லைபிளந்து கடலருகேமுட்டைவைத்தேன்
வைத்ததுமோ மூண்டுமுட்டை பொரித்ததுமோ ரெண்டுகுஞ்சு
மூத்தகுஞ்சுக்கிரைதேடி மூனுமலைசுற்றிவந்தேன்.
இளையகுஞ்சுக்கு இரைதேடி ஏழுமலைசுற்றிவந்தேன்

நினைவை மீட்ட முடிந்தவர்கள் தங்கள் பின்னூட்டத்தில் தஙகளுக்கு நினைவு வரும் பாடல்களையும் பகிரலாமே!

என்ன தான் தொழில் நுட்பத்தில் நான் வளர்ந்திருந்தாலும் 
நம் நிகழ்கால சந்ததி இழந்திருப்பவை என்ன?
எதிர்கால சந்ததி இழக்கபோவது என்ன?

இன்னும் தொடர்வேன்!

http://alpsnisha.blogspot.ch/2015/12/2.html

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Dec 2015 - 7:24

அருமை அருமை நிச்சயமாக இந்தாக்காலத்திலும் எம் பகுதியில் உள்ள குழந்தைகள் விளையாடக்காண்கிறோம் உங்களைப் போன்று வெளிநாடுகளில் வாழுகின்றவர்களின் குழந்தைகள் இவற்றை அதிகம் மிஸ் பண்ணுகிறார்கள் என்பது உண்மைதான்

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by நண்பன் Fri 25 Dec 2015 - 16:35

பாசமலர்களின் உரையாடல் படிப்பதற்கே இனிமையாக உள்ளது 

சுரேஷ் அண்ணா உங்கள் நினைவுகளை இங்கே பகிருங்கள் மகிழுங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by சே.குமார் Fri 25 Dec 2015 - 19:21

பலைய கால நினைவுகளை கிளறி சந்தோஷங்களை அள்ளித் தெளிக்கும் பகிர்வு அக்கா.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by Nisha Mon 28 Dec 2015 - 2:30

 நான் சின்னவளாய் இருந்தபோது - 3

இப்போது மூன்றுவயதில் நர்சரிக்கு குழந்தையை அனுப்பும் பொழுதே இச்சிறுவயதில் நர்சரியா எனஅங்கலாய்க்கின்றோம். அக்காலத்தில் பாடம் என தெரியாமலே ஆறு மாதக்கைக் குழந்தையிலிருந்தே பாடல்களை பாடி அவர்களுக்காக் கல்வி ஆரம்பித்து விட்டதுஎன்றால் நம்புவீர்களா? 

நினைவாற்றலைபெருக்கிடஆறுமாதக்குழந்தைகளுக்கே அவர்கள் தானாய் அமர ஆரம்பித்ததுமே பாட்டிமார்கள் முதல் அம்மா மார்களின் தாலாட்டும் பாடலும் ஆரம்பித்து விடும்
ஆராரோ ஆரிரரோ 
ஆராரோ ஆரிரரோ... 
ஆரடிச்சு நீ அழுதாய் 
அடிச்சாரை சொல்லியழு 
மாமன் அடிச்சானோ 
மல்லிகைப்பூ செண்டாலே 
தாத்தா அடிச்சாரோ 
தாமரைப்பூ செண்டாலே 
அடித்தாரை சொல்லி அழு
க்கினைகள் செய்திடுவோம்
ஆராரோ ஆரிரரோ.
இப்படி பெரும்பாலான பாடல்கள் பேச்சுத்தமிழில் தான்
பாடப்படும்.எனினும் ஒரிரு தடவை சொல்லிக்கொடுத்தாலே நினைவில் இருக்கும்படி அபி நயங்களோடு விரல்களைஅசைத்து உடலை வளைத்து பாடுவார்கள்.
சப்பாணியாம் பிள்ளை சப்பாணி 

சப்பாணிச்சண்டைக்கு போனாளாம் 
சண்டை செய்யுமாம் சப்பாணி 
முத்துப்பதித்தொரு கையாலே 
முழங்கிக்கொட்டுமாம் சப்பாணி 
என பாடி குழந்தையின்கரங்களை தட்டுவதற்கு பழக்குவார்கள்,குழந்தையும்சப்பாணியாம் பிள்ளை சப்பாணி எனஆரம்பித்தாலே பொக்கைவாய்ச்சிரிப்போடு கைகளை தட்ட ஆரம்பித்து விடும். 
கைவீசம்மா கைவீசு 
கடைக்கு போகலாம் கைவீசு 
மிட்டாய் வாங்கலாம் கை வீசு 
பாடி உண்ணலாம் கை வீசு 
என சொல்லி அமர்ந்திருந்த படியே கைகளை முன்னும் பின்னுமாய் வீசி ஆட்ட சொல்லி தாமும் சேர்ந்து
கைகளை வீசுவார்கள்.

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு 
சாயும் மயிலே சாய்ந்தாடு 
குத்து விளக்கே சாய்ந்தாடு 
கோயில் புறாவே சாய்ந்தாடு 
மானே மயிலே சாய்ந்தாடு
மரகதக் கிளியே சாய்ந்தாடு 
கண்ணே மணியே சாய்ந்தாடு 
கட்டிக் கரும்பே சாய்ந்தாடு 
மயிலே குயிலே சாய்ந்தாடு 
மடியில் வந்து சாய்ந்தாடு
என சொல்லியும் அமர்ந்திருக்கும் குழந்தை தன்னைமுன்னும் பின்னும் அசைக்கும் படியாய் ஆட பழக்குவார்கள். சப்பாணியாம் பிள்ளை சப்பாணி என கைகளை தட்டுவதும். கைகளை வீசி கை வீசம்மா என பாடுவதும் ,சாய்ந்தடம்மா சாய்ந்தாடு என சொல்லி சாய வைத்து ஆட வைப்பதுமாய் குட்டிகுழந்தையிலேயே குழந்தைக்காக உடற்பயிற்சியோடு,குட்டிகுட்டி ரைம்ஸ்களும் கூட கற்பிக்கப்பட்டது. 

அடுத்து ஒரிரு வயதாகியதும். ஒன்று இரண்டு மூன்று சொல்லிக்கொடுக்க ஆரம்பிப்பார்கள். அந்நாட்களில் சின்னஞ்சிறு மழலைகளுக்கு கணக்கு சொல்லிகொடுக்கும் விதமே தனி. ஒண்டு, ரெண்டு மூண்டு என பாடினாலும் தட்டச்சிடும் போது அதை தவிர்க்க முயற்சிக்கிறேன்.
ஒன்றும் ஒன்றும் இரண்டு. 
இரண்டும் ஒன்றும் மூன்று 
மூன்றோடு ஒன்றைசேர்த்தால் நான்கு 
நான்கும் ஒன்றும் ஐந்து 
என் கையின் விரல்கள் ஐந்து 
கையில் இருக்கும் விரல்களை விரித்து காட்டியபடியே என முதல் ஐந்து இலக்கங்களை கைவிரல்களைக் காட்டியே கற்பிப்பார்கள் அதே வரிசையில் இன்னும் சில பாடல்கள்.. 
ஒண்ணு,ரெண்டு மூணு 
ஒணான் என்றே கூறு 
நாலு அஞ்சு ஆறு 
மரத்தின் மேலே பாரு 
ஏழு எட்டு ஒன்பது என்ன 
உந்தன் கையைத்தட்டு
எண்கணக்கு பத்து வரை நினைவுக்கு இருக்க அன்றாட பயன்பாட்டு பொருட்களை பயன் படுத்தும் வித்தையை என்ன வென்போம். 
ஒன்றும் ஒன்றும் இரண்டு 
பூவில் இருப்பது வண்டு 
இரண்டும் இரண்டும் நான்கு
இனிப்பாய் இருக்கும் தேங்காய் 
மூன்றும் முன்றும் ஆறு 
வேலைசெய்தால் சோறு. 
நான்கும் நான்கும் எட்டு 
நன்றாய் பாடுவாள் பட்டு 
ஐந்தும் ஐந்தும் பத்து 
அன்பே நமக்கு சொத்து 
கீழே இருக்கும் பாடலின் வார்த்தையாடலைக்கவனித்தால் ஒவ்வொரு வார்த்தையையும் நம் மூதாதையர் எப்படி அறிவுபூர்வமாக இணைத்திருப்பார்கள் என புரியும். 
கொக்குச்சிக் கொக்கு
ரெட்டை சிலாக்கு 
முக்குச் சிலந்தி 
நாக்குலா வரணம் 
ஐயப்பன் சோலை 
ஆறுமுக தாளம் 
ஏழுக்குக் கூழு 
எட்டுக்கு முட்டி 
ஒன்பது கம்பளம் 
பத்துப் பழம் சொட்டு 
கடந்த வாரம் என் தங்கை தன் ஆறு மாத பெண் குழந்தையோடு வந்து சில நாட்கள் என் வீட்டில் நின்றாள். அவள் குழந்தைக்கு நான் வைத்த செல்லப்பெயரே பார்பி டால் என்பது தான். அத்தனை அமைதி.அனைத்தினையும் கவனித்தாலும் இயல்பான வரக்குடிய சத்தம் கூட இல்லாமல் அமைதியாய் பொம்மை போல் இருக்கின்றாளே என கைகளை பிடித்து சப்பாணி யாம் பிள்ளை சப்பாணி என பாட்டை இரண்டு தடவை பாடினேன். மூன்றாம் தடவை நான் பாட ஆரம்பித்ததும் குழந்தை தானாக கைகளை தட்ட ஆரம்பித்தாள்.. கூடவே கல கலவெனும் பொக்கை வாய் சிரிப்பும்.சத்தமுமாய் கைகளை தட்ட ஆரம்பித்தாள். பிள்ளை அமைதியாய் இருந்ததுக்கு காரணம் தாயோ தகப்பனோ அக்குழந்தையுடன் பேசி, பாடி கலகலப்பாயிராதது தான் எனும் உண்மை புரிந்ததும் எனக்குள் கவலையாய் இருந்தது.

அது வரை நான்கைந்து நாள் அத்தனை அமைதி, சின்னகுழந்தை இருக்கும் வீடா என எனக்குள் ஆச்சரியம் தரும் படி அத்தனை அமைதியாயிருந்தாள், குழந்தைகளுக்கு இம்மாதிரி பாடல்கள், குட்டிக்கதைகளை சொல்லி கொடுக்கும் போது குழந்தையின் பார்த்தல், கேட்டல், கிரகித்தல் குறித்தும் கவனத்தில் கொள்ள முடியும். குழந்தைகள் அந்தந்த வயதுக்கே உரிய குறும்புகள் சத்தங்களோடு வளர்கின்றார்களா என்பதை அனுபவமிக்க தாய்மார்களால் கண்டு பிடிக்க முடியும்.ஆக்டிவிட்டி மற்றும் உடல், உளவியல் குறைபாடுகள் இருந்தால் சிறுவயதில் கண்டு பிடித்து தகுந்த சிகிச்சை செய்யவும் முடியும் என்பதை உணராமல் குழந்தை ஒன்று அது பொம்மை போலிருந்தாலும் போதும் எனும் நிலைமை மாற வேண்டும்.

தங்கைகுழந்தையை பார்த்ததும் தான் எனக்குள் இப்படி ஒரு பதிவு எழுதினால் என்ன என்று தோன்றியது. ஏற்கனவே தமிழ் மன்றம், சேனைத்தமிழ் உலாவில் இப்பாடல்களை நான் தொகுத்திருந்தாலும் சின்ன வயதில் நான் கேட்டு இருந்தவைகளை என் நினைவாற்றலில் இருந்தபடியேயும் தட்டச்சிட்டு பகிர்வதால் இப்பாடல்களில் பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள். 

இக்காலத்தில் அப்பா,அம்மாவும் வேலைக்கு போகும் சூழலில் பெரும்பாலான குழந்தைகள் இம்மாதிரியான வாய்ப்புக்களை இழப்பதனால் பல நேரங்களில் அந்தந்த வயதுக்குரிய அசைவுகள் இன்றி பிடித்து வைத்த பொம்மை போலிருக்கின்றார்கள். பெற்றவர்கள் வீட்டிலிருந்தாலும் வீட்டு வேலை, தொலைக்காட்சி, தொலைபேசி, கணணி என பொழுது போகும் சூழலில் குழந்தைகளை அக்டிவ்வாக வளர்ப்பது எப்படி என அறியாதவர்களாயிருப்பதனால் குழந்தைக்குள் ஒருவித மந்த சக்தியும், ஆர்வமின்மையும் உருவாகிட காரணமாகின்றது.சின்னக்குழந்தைகளோடு பேச வேண்டும், பாட்டு சொல்லி கொடுக்க வேண்டும் என்பதுவும் தெரிவதில்லை. சில தாய்மார்கள் பிள்ளைக்கு பாலூட்டும் போது போனை வைத்து ஏதேனும் பார்த்துக்கொண்டிருப்பார்கள். என் தங்கை மகளும் விதி விலக்கல்ல என நான் புரிந்ததும் நான் சொன்னது ,, தங்கையையும் பிள்ளைகளையும் இரண்டு மாதங்களாவது எங்கள் வீட்டில் விடுங்கள். பிள்ளையை இப்படியே வளர விடாதீர்கள் என்பது தான். என் பிள்ளைகள் சுவிஸில் பிறந்திருந்தாலும் நான் என் நினைவில் இருந்த படி என் பசங்களுக்கு இவைகளை சொல்லி கொடுத்திருந்தேன். அதனால் தானோ என்னமோ என் மகனும் மகளும் எட்டு மாதங்களில் நடக்கவும், ஒரு வயதுக்குள் பேசவும் தொடங்கி இருந்தார்கள்..

விசேசமாககுழந்தைகளாயிருக்கும் போது இருவரையுமே இக்கால வோக்கர் எனப்படும் நடைவண்டியில் விட்டதே இல்லை..  

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 2qai9fb
படம் நன்றி இணையம் 
என்னவர் பிள்ளைகளுக்கு என ஸ்பெஷலாக செய்த நடை வண்டி
ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 34qskux

மகளுடைய ஒரு வயது பிறந்த நாளில் எடுத்த போட்டோ
இப்பதிவை படிக்கும் ஒரு சில தாய்மார்களாவது தமக்குதெரிந்த படியே தம் குழந்தையை ஐந்து மாதம் முடிந்ததுமே இப்பாடல்களை பாடிகுழந்தைகளை உடல், உள ஆரோக்கியத்தோடு அந்தந்த வயதுக்குரிய துடிப்புக்களோடு வளரஉதவிடுமானால் அதை விட மகிழ்ச்சி வேறில்லை தானே?
முழுமையாக்க வேண்டும் என முயன்றதில் கொஞ்சம் நீண்ட பதிவாகி விட்டது. மன்னித்து விட்டு உங்கள் கருத்தினை சொல்லுங்கள். ..
தொடர்வேன்!
http://alpsnisha.blogspot.ch/2015/12/3.html

Last edited by Nisha on Mon 28 Dec 2015 - 12:29; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by நேசமுடன் ஹாசிம் Mon 28 Dec 2015 - 8:05

அருமை அக்கா உண்மையில் இந்தக்கால தாய்மாருக்கு இந்த பாடல்கள் தெரியாது குழந்தை கத்தினால் லப்டொப்பைத் திறந்து ஏதாவது பாப்பாப் பாடல் போட்டுவிடுகிறார்கள் உயிரற்ற ஒரு பொருளிலிருந்து உணர்வை எப்படி அடைய முடியும்

உங்களின் சிறப்பான இந்த ஆக்கம் தெரியாதவர்களுக்கு கற்றுத் தருவதாக அமைந்துவிட்டது பாராட்டுகள்

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by பானுஷபானா Mon 28 Dec 2015 - 13:09

உங்களின் சிறு வயது நினைவலைகள் என்னையும் 1980 க்கு அழைத்துச் சென்று விட்டது...
என் பிள்ளைகளிடம் சிறுவயது நினைவுகளை சொல்லிச் சொல்லி சந்தோஷப்படுவேன்.... அந்தக் காலம் மீண்டும் வராதா என ஏக்க்கம் வருகிறது... இல்லையென்றால் இப்போது நடப்பதெல்லாம் கனவாக இருந்து சின்னப்பிள்ளையாய் மீண்டும் தூக்கத்திலிருந்து எழுந்து விட மாட்டோமா என தோன்றுகிறது....

பூப்பறிக்க வருகிறோம் நாங்களும் விளையாடி இருக்கிறோம்... மற்ற பாடல் தெரியவில்லை. இங்கே இந்தியாவில் வேறு மாதிரி பாடி ஆடுவோம் ... ஆனால் அரைகுறையுமாக நினைவிருக்கு....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by Nisha Mon 28 Dec 2015 - 13:59

மூன்றாவது தொடரையும் படித்து விட்டு சொல்லுங்கள் பானு!

பின்னூட்டத்துக்கு நன்றிப்பா ஹாசிம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by பானுஷபானா Mon 28 Dec 2015 - 15:08

சாய்ந்தாடம்மா கை வீசம்மா இதெல்லாம் நாங்களும் பாடுவோம்...

என்ன இருந்தாலும் நாமெல்லாம் இதை அனுபவித்தவர்கள் என்ற வகையில் குடுத்து வைத்தவர்கள் தான் ...

நம் பிள்ளைகள் இது போல அவர்கள் பிள்ளைகளிடம் பேசவோ நினைத்துப் பார்க்கவோ ஏதுமில்ல எனும்போது வருத்தமாக இருக்கிறது ...

தொடருங்க நிஷா நாங்களும் சிறு வயஹ்டு நினைவோடு உங்களோடு பயணிக்கிறோம்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by நண்பன் Tue 29 Dec 2015 - 11:48

அருமையான ஒரு பதிவு இக்காலத்தில் நிறைய குழந்தைகள் இது போன்ற பல பற்றை மிஸ் பண்ணி விடுகிறார்கள் அதற்கு அவர்களின் குற்றமும் இல்லை பெற்றவர்களின் குற்றமும் இல்லை இன்றய அவசர யுகத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போகிறார்கள் என்றால் குழந்தை இது போன்ற நல்ல பல விடயங்கள் மிஸ்ஸாகித்தான் போகிறது அவர்களின் சந்தர்ப்ப சூழல்

எது எப்படியாக இருந்தாலும் அக்காவின் ஓர்மைத் திறணை மெச்சுகிறேன் அருமையான பல தாய்மார்கள் மறந்த பாடல்கள் இவைகள் இப்போது படிக்கும் போதுதான் எனக்கும் நினைவுக்கு வருகிறது சூப்பர் அக்கா அப்படியே காப்பி எடுத்து எங்கள் வீட்டம்மாவுக்கும் அனுப்பி விடுகிறேன் ஏன் என்றால் எங்க வீட்டம்மா மறந்த பாடல் இது என் குழந்தைகளை இப்படி பாடி சிரி தூங்க வைக்க அதை நான் பார்க்க நிறையவே ஆசைகள் இருந்தது ஆனால் இது வரை நடக்கவே இல்லை அது இனியும் நடக்காது

கணக்குப்பாடல்கள் கேட்டிருக்கிறேன் இருந்தாலும் உங்கள் நினைவுக்கு வந்த வற்றை அருமையாக தந்துள்ளீர்கள் பாராட்டுக்கள் அக்கா அதிலும் சாய்தாடம்மா பாடல் சூப்பர்
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயும் மயிலே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோயில் புறாவே சாய்ந்தாடு
மானே மயிலே சாய்ந்தாடு
மரகதக் கிளியே சாய்ந்தாடு
கண்ணே மணியே சாய்ந்தாடு
கட்டிக் கரும்பே சாய்ந்தாடு
மயிலே குயிலே சாய்ந்தாடு
மடியில் வந்து சாய்ந்தாடு
இது நான் மறந்த பாடல்களில் ஒன்று முழுதாக படித்துப்பார்த்தேன் நன்றி அக்கா உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் இந்தப் பாடல் பாடினிங்களா ? குழந்தைகளின் புகைப்படம் அழகாய் உள்ளது பளய நினைவுகள் மீட்டுத்தந்த அக்காவின் சேவை தமிழ் மண்ணுக்கும் தேவை இன்னும் தொடருங்கள்
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by Nisha Tue 5 Jan 2016 - 18:01

கிறிஸ்மஸுக்கு பின்னராய் புது வருடம் வரை  ரெம்ப பிசியாகி விட்டேன்! அதனால் யாருக்குமே புது வருட வாழ்த்துகள் சொல்ல முடியவே இல்லை!

எங்க ஊரில் ஜனவரி ஆறாம் திகதி முடிவதுக்கிடையில் அனைவருக்கும் வாழ்த்துகள் பரிசில்கள் சொல்லி விடலாம் என்பதனால் இதோ உங்களுக்கும் என் அன்பு வாழ்த்துகளை சொல்லி விட்டேன். கடந்ததில் நடந்தவை என பல பதிவுகள் படித்தாலும்  நானும் அவ்வாறு ஒரு பதிவு எழுத வேண்டும் என தோன்றும் போது உங்கள் ஜோதியில் ஐக்கியமாகி விடுவேனாம்!

இந்த நிமிடம் பதிவு ஒன்று போடலாம் என மனதில் உணர்வுகள் தூண்டினாலும்  காரமான, உணர்வுகளை எழுச்சிக்குரியதாக்கும் பதிவு போடாமல் இனிய நினைவுகளை மீட்டுப்பார்க்கும்  என் சிறுவயது நினைவுகள் தொடரையே இவ்வருட முதல் பதிவாய் ஆரம்பிக்கலாம் என தோன்றுகின்றது! புதுவருட வாழ்த்தோடு என் பதிவுகளுக்கும் தொடர்ந்து வந்து பின்னூட்டமிட்டு  என்னை உற்சாகப்படுத்தி  ஊக்கம் தரும் அனைத்து அன்புள்ளங்களும் இவ்வருடமும் தொடர்ந்தும் அதே உற்சாகத்தினை தருவீர்கள் எனும் நம்பிக்கையோடு தொடர்கின்றேன்!

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Friends

எங்கள் வீட்டில் ஐந்து பெண்கள், ஒரு ஆண், அனைவருக்கும் மூத்தவளாய் நான் என்பதால் தங்கை மாருக்கும் தம்பிக்கும் அனைத்து வழியிலும் வழிகாட்டி நான் என சொல்லியே சின்ன வயதிலிருந்து வளர்த்தார்கள். அதனால் அதிகமாய் வெளியில் போகவெல்லாம் விடாமல்  பாடசாலை, டீயூசன் வீடு எனத்தான் என் பொழுதுகள்  போகும். கோயில் செல்லும் போது தங்கையோ தம்பியோ கூட துணையாய் வந்ததாய் நினைவு.

வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவியாய் இருந்தாலும் சின்ன வயதில் மிகவும் பொறுப்புடன் இருந்ததாலும் தானாய் ஏறியதை விட  நானாய் ஏற்ற சுமைகள் அதிகமே...!

அதிருக்க....... சின்ன வயதில் எங்கள் வீட்டு சமையலறைக்கும் கிணற்றடிக்கும் இடையில்  நீண்டதாய் முற்றம்! அது தான் எங்கள் மாலை நேரத்து விளையாட்டு திடல்...!பக்கத்து வீட்டு நண்பர்கள், நண்பிகள் என  ஓரிரு வயது வித்தியாசத்தில் பத்து பதினைந்து பேர் மதிய உணவுக்கு பின் வெயில் சற்று இறங்கியதும் கூடி விடுவோம்.

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Uunjcal

படம் நன்றி இணையம் 

அதிலும் நாங்கள்   நான்கைந்து தோழியருடன் என் சகோதரிகளையும் இணைத்து எங்கள் வீட்டில் இருந்த லாவுள் மரத்தின் கீழ் கூடுவோம்!

அதே மரத்தில் கயிறு ஊஞ்சல், பலகை ஊஞ்சல் என  ஆளுக்கொரு கிளையில் கட்டி  ஊஞ்சல் ஆடுவதும். மரத்தின் கீழ் உரலை கவிழ்த்தி போட்டு விட்டு மரத்தின் மேலே ஏறி குரங்குகள் போல் தொங்குவதும் தாவுவதும்,இன்னும் மறகக் இயலாத இனிய அனுபவம் தான்.

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Ungal

படம் நன்றி இணையம் 

அந்த லாவுட் மரத்தின் பழம் இனிக்கும் எனில்  பழத்துக்கும் பிஞ்சுக்கும் இடைப்பட்ட பருவம் துவர்ப்பாயும் சுவையாயும் இருக்கும் பால்  ஒட்டும். அந்த பருவத்தில் இருக்கும் காயை  நல்ல புளி மாங்காயோடு  பச்சை மிளகாயும் உப்பும் சேர்த்து உரலில் இட்டு துவையல் போல் இடித்து எடுத்தால்  உப்பும் உறைப்புமாய் அது தான் எங்கள் மாலை நேர டிபன்.

கிணற்றினை ஒட்டி... பரவி விரித்து  கிளைகளோடு வருடம் முழுதும் காயும் பழமுமாய்  அம்மரம்  இருந்ததாகவே என் நினைவு.  எங்கள் பசிக்குசோறாகியதும் அம்மரத்தின் கனிகளே! நீண்ட நெடிய  20 வருடங்களின் பின் 2010 ம் ஆண்டில்  அவ்விடம் சென்று பார்த்த போது மரம் இருந்த இடம் குப்பை மேடாக காட்சி தந்தது மனதுக்கு வேதனையை தரும் ஒன்றாகவே இருக்கின்றது!

அந்த நாட்களில்  மாலை நேர விளையாட்டாக நொண்டியடித்தல், கிட்டிபுள்ளு, ஊஞ்சல் ஆடுதல்,,சிலை போல் நிற்றல், கள்ளன் பொலிஸ் விளையாடுவதும்
மழைக்காலங்களில் வெளியில் சேறும் சக்தியுமாய் இருக்கும் என்பதால் வீட்டின் தாள்வாரத்தில்   அமர்ந்து தாயம் விளையாடுவதும் மறக்க முடியாத நினைவலைகள்.

அக்கா வீட்ட போனேன்
முத்துச்சிப்பி தந்தாள்
கொண்டோடி வந்தேன் 
வழியெல்லாம் பாம்பு
பாம்படிக்கத்தடிக்குப் போனேன் 
தடியெல்லாம் ஊத்தை 
ஊத்தை கழுவ ஆத்துக்கு போனேன் 
ஆறெல்லாம் மீன்
மீ்ன் பிடிக்க வலைக்கு பொனேன் 
வலையெல்லாம் ஓட்டை
ஓட்டை தைக்க ஊசிக்கு போனேன் 
ஊசியெல்லாம் வெள்ளி 
வெள்ளியடி வெள்ளி 
வானத்தில் வெள்ளி 
போயிலைக்காம்பை நுள்ளி
போட்டு வாடி வள்ளி!
விளையாடும் போது வார்த்தை மனனமாக தவறில்லாமல் இம்மாதிரி பாடலை பாடி விட்டால் நாம்  கெட்டிக்காரர் தான்.

அறிவியல் ரிதியாக அக்குப்பிரசர் முறையில் அந்தந்த பாகங்களுக்கான ஆற்றல் தரு புள்ளி அங்காங்கே இருந்தாலும் பொதுவாக மனித உடலில் அனைத்து பகுதிகளுக்குமான ஆற்றல் தரும் புள்ளிகள்
உள்ளங்கைகளிலும், கால்பாதங்களின் நடுவிலும் அமைத்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன!  அப்புள்ளிகளை கண்டு விரல் நுனிகளையும் உள்ளங்கைகளையும் மெதுவாக அழுத்தி விடும் போது  முழு உடலுக்குமான  ஆற்றல்தரும் உந்து சக்தி கிடைப்பதோடு உடல்,உள,அறிவு ரிதியாக  ஆரோக்கியமும் கிடைக்கின்றது. 

அவ்வகையில் அக்கால நண்டூரி நரியூரு எனும்  பாடலுடன் கூடிய விளையாட்டும் இன்னும் பல பாடல்களும் குழந்தைகளுக்கு உடல், உள், அறிவு ரிதியான வளர்ச்சிக்கு உதவிய ஒன்றென்றால் ஆச்சரியப்படுவீர்கள்!

ஆனாலும் அது தான் நிஜம்!

விளையாட்டை  நன்கு கவனித்து பாருங்கள். சின்ன வயதில்’அழும் குழந்தைகளை சிரிக்க வைக்க அவர்கள் கையை நீட்ட சொல்லி விட்டு  கைவிரல்கள் ஐந்தினையும் விரல் நுனிகளை மெதுவாக தொட்டு ஒவ்வொன்றாக மடக்கி இது அம்மாவுக்கு, இது அப்பாவுக்கு ஏன உறவின் அழைப்பையோ,  அல்லது  இது சோறு , இது பருப்பு, இது பொரியல் என உணவுவகைகளில் பெயரையோ சொல்லி  விரல் நுனிகளை பிடித்து மடித்து விடுவார்கள். அதன் பின் மீண்டும் விரல்களை நிமிர்த்தி உள்ளங்கையில்  நமது முழங்கைகளால் பால் கடைவது போல் ஆடைக்கடை, மோடைக்கடை என சொல்லி கடைந்து விட்டு உடனேயே நடுவிரலிலிருந்து நண்டு ஊருவது போல் நண்டூருது நரிஊருது...நண்டூருது நரிஊருது...நண்டூருது நரிஊருது...அக்குளு கிளு கிளு......விரல்களால் ஊர ஆரம்பித்து  அவர்கள் தோள் பட்டை வரை சென்று அக்குளுக்குள் விட்டு கிளுகிளுப்பு ஊட்டி சிரிக்க செய்வார்கள்.அழும் குழந்தை சிரிக்கும் போது நம் மனமும் மகிழும்.

மனித விரல் நுனியோடு உடலிலிருக்கும் அனைத்து நரம்பின் பாகங்களும் தொடர்பு படுவதனால் விரல் நுனியை தொடுவதனால் முழு உடலுக்குமான ஆரோக்கியமும் பேணப்படுகின்றது எனும் போது குழந்தைகளுக்கு சிறு தொடுகை மூலமான இப்பயிற்சி தாய் சேய் அன்புடன் உடல், உள, ஆரோக்கியத்துக்கும் வித்திட்டது என்றால் அதில் தவறில்லை!

இத்தகையை புள்ளிகளை கண்டு தொடுகை மூலம்குணப்
படுத்தலைத்தான்  முற்காலத்தில் நம்ம்சித்தர்களின் வர்மக்கலை எனும் குணப்படுத்தல் இருந்தது. அதைத்தான் அக்குப்பிரசர் என சீனர்கள்  கொண்டு வந்து  இக்காலத்தில் வியாபாராமாக்கி கொண்டிருக்கின்றார்கள்.

சின்ன சின்ன விளையாட்டுக்களில் கூட எத்தனை அறிவியல் சிந்தனையோடு நம் முன் சென்றவர்கள்   நமக்காக பல அரிய விளையாட்டுக்களை கற்று தந்தார்கள் என நினைக்கும் போது மலைப்புதான் தோன்றும். அவைகளையெல்லாம் விட்டு நாம் விலகி வந்ததனால் நாம் கண்ட நன்மை என்ன?

அத்துடன் இன்னொரு விளையாட்டாய் கைகளை விரித்து உள்ளங்கையில் கிள்ளி எடுத்த படியே 
கிள்ளிக் கிள்ளிப் பிறாண்டி
கீயா மாயாப் பிராண்டி
கொப்பன் தலையில் என்ன பூ....
என கேட்கும் போது சொல்லும் பூவை வைத்து விரல்களை மடக்கி  கொண்டு வருவார்கள்.
முருங்கைப்பூ) என சொன்னால் 
முருங்கைப்பூவைத் திண்டவளே
முன்னடிக் கஞ்சி குடிச்சவளே
பாதி விளாங்காய் திண்டவளே
பாவட்டங் கையை ம-ட-க்-கு
என ஒவ்வொரு விரலாய் மடக்கி வருவார்கள், முழு விரல்களும் மடங்கி விட்டால் கைகள் இரண்டையும் சேர்த்து குவித்து பாதி விட்டமாய் பிடித்தபடி
பாட்டன் குத்து 
பறையன் குத்து 
பிள்ளையார் குத்து 
பிடித்து பார் குத்து 
என சொல்லி குத்துவார்கள். அப்படி குத்தும் போது பிடித்து பார் குத்து  என வரும் போது கைகளை குவித்து குத்தும் கையை பிடித்து விட்டால்  நாம் எதிராளியின்  இரு கையையும்  சேர்த்து  கும்பிடுவது போல் ஒட்டி பிடித்த படியே  கூப்ப வேண்டும்
கள்ளப்பூனை நான் எங்க செல்லத்துக்கு சமைத்து வைத்த சோத்தை களவெடுத்து தின்ன வந்தியா? என் செல்லத்தோட சாக்லெட்டை பறிக்க வந்தியா என கேட்டு கேட்டு  கூப்பியபடி இருக்கும் கரங்களில் வெளிப்பக்கமாக செல்லமாய் அடிக்க வேண்டும். அடிக்கும் அடிபடாதவாறு கைகளை எடுத்து விட்டால் விளையாட்டு முடிந்து விடும்.  கைகளில் அடி பட்டு விட்டால்  அடி தொடரும். 

விளையாடும் போது மிகவும் சுவாரஷ்யமாக இருப்பதால் குழந்தைகள் வாய்விட்டு சிரித்து நம்மையும் சிரிக்க வைப்பார்கள்.

இந்த மாதிரி விளையாட்டுக்கள் விரல்களுடனும் கைகளில் முழுப்பாகத்துடனும் தொடர்பு படுத்தி  தொடுகை உணர்வோடு அக்குப்பிரசர் ஆற்றல் தரும் புள்ளிகளையும் தொட்டு செல்வதால் குழந்தையின் வளர்ச்சியானது சீராக பேணப்படுகின்றது. மூளை வளர்ச்சியும் , மன வளர்ச்சியும்  ஆரோக்கியமாயிருக்க இம்மாதிரி விளையாட்டுக்களை நமக்கென சிட்டு சென்ற முன்னோர்களை நாம் அதெல்லாம் பழங்காலம் என கிண்டல் செய்யும் நிலையில் இருக்கின்றோம். 

அன்று உறவின் பெயர்கள், உணவின் பெயர்கள், பூக்கள், பழங்கள், காய்களின் பெயர்கள்,விலங்குகளின் பெயர்கள் எல்லாம்  மனனம் எனும் பெயரில்திணீக்காமல்  குட்டிக்குட்டி பாடல்கள் மூலம் இயல்பாகவே சொல்லிக்கொடுக்கப்பட்டது! இன்று அவையனைத்தையும் மனப்பாடம் எனும் பெயரில் திணிக்கின்றோம். 
 
கடந்த நான் சின்னவளாய் இருந்தபோது.- 3 பதிவின் தொடர்ச்சியாக
எமது சின்னசிறார்கள் எண்களை இலகுவாக கற்கபாவலர் துரை மூர்த்தி அவர்களின் பாட ல் ஒன்றையும் இங்கே பகிர்கின்றேன்! இம்மாதிரி பாடல்களை  சொல்லி கொடுக்கும் போது நம் வீட்டு குழந்தைகள் எண்களோடு பல புதிய விடயங்களையும் கற்பதை காண முடியும்

ஒன்று - எண்ணின் தொடக்கம் ஒன்று
இரண்டு – விழிகள் நமக்கு இரண்டு
மூன்று – முத்துத் தமிழ் மூன்று
நான்கு – விலங்கின் கால் நான்கு
ஐந்து – உலோக வகை ஐந்து
ஆறு - சுவையின் வகை ஆறு
ஏழு – இசையின் வகை ஏழு
எட்டு – சிலந்திக்குக் கால் எட்டு
ஒன்பது - மணியின் வகை ஒன்பது
பத்து – தமிழின் பாட்டு பத்து!

எனது பதிவுகளில் நினைவில் இருப்பதை தட்டச்சிட்டு பகிர்வதனால் பாடல் வரிகளில் தவறுகள் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. பாடல் வரிகளில் மாறுதல்கள் இருந்தால் தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்.  

தொடர்வேன்

Last edited by Nisha on Wed 6 Jan 2016 - 5:02; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by Nisha Tue 5 Jan 2016 - 18:03

உங்கள் கருத்துகள் இங்கும் வேண்டும். 
http://alpsnisha.blogspot.ch/2016/01/4.html

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by சே.குமார் Tue 5 Jan 2016 - 22:03

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க அக்கா...
சின்ன வயது ஞாபகங்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் பகிர்வு.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by நண்பன் Tue 5 Jan 2016 - 23:16

புது வருடம் துடங்கியது முதல் நானும் சேனைப் பக்கமும் வர வில்லை அக்கா நீங்கள் என்றோ கடந்து வந்த பாதையை இன்றும் அதே பொலியுடன் எங்களுக்கு தந்துள்ளீர்கள் மிக் மிக அருமை
அதிலும் பிள்ளைகளை சிரிக்க வைக்க நாம் உபயோகிக்கும் மந்திரி ம்
நண்டூருது நரிஊருது...
நண்டூருது நரிஊருது...
நண்டூருது நரிஊருது...
அக்குளு கிளு கிளு
சூப்பர் அக்கா அருமையா க உங்களுக்கு ஞாபக சக்தி உள்ளது பாராட்டுக்கள்

அக்கா தந்த முத்துச்சிற்பி பாடல் சூப்பர் நாங்களும் விளையாடி இருக்கிறோம்
அத்தோடு வந்த
கிள்ளிக் கிள்ளிப் பிறாண்டி
கீயா மாயாப் பிராண்டி
கொப்பன் தலையில் என்ன பூ.
சூப்பர் அக்கா
அப்றம் இலக்கமும்அதன் விளக்கமும் இன்னும் சிறப்பு வாழ்த்துக்கள் அக்கா இன்னும் தொடருங்கள்
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by Nisha Wed 6 Jan 2016 - 5:03

இடையில் சேர்க்கப்பட்ட விபரம்... 

விளையாடும் போது வார்த்தை மனனமாக தவறில்லாமல் இம்மாதிரி பாடலை பாடி விட்டால் நாம்  கெட்டிக்காரர் தான்.

அறிவியல் ரிதியாக அக்குப்பிரசர் முறையில் அந்தந்த பாகங்களுக்கான ஆற்றல் தரு புள்ளி அங்காங்கே இருந்தாலும் பொதுவாக மனித உடலில் அனைத்து பகுதிகளுக்குமான ஆற்றல் தரும் புள்ளிகள்
உள்ளங்கைகளிலும், கால்பாதங்களின் நடுவிலும் அமைத்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன!  அப்புள்ளிகளை கண்டு விரல் நுனிகளையும் உள்ளங்கைகளையும் மெதுவாக அழுத்தி விடும் போது  முழு உடலுக்குமான  ஆற்றல்தரும் உந்து சக்தி கிடைப்பதோடு உடல்,உள,அறிவு ரிதியாக  ஆரோக்கியமும் கிடைக்கின்றது. 

அவ்வகையில் அக்கால நண்டூரி நரியூரு எனும்  பாடலுடன் கூடிய விளையாட்டும் இன்னும் பல பாடல்களும் குழந்தைகளுக்கு உடல், உள், அறிவு ரிதியான வளர்ச்சிக்கு உதவிய ஒன்றென்றால் ஆச்சரியப்படுவீர்கள்!

ஆனாலும் அது தான் நிஜம்!

விளையாட்டை  நன்கு கவனித்து பாருங்கள். சின்ன வயதில்’அழும் குழந்தைகளை சிரிக்க வைக்க அவர்கள் கையை நீட்ட சொல்லி விட்டு  கைவிரல்கள் ஐந்தினையும் விரல் நுனிகளை மெதுவாக தொட்டு ஒவ்வொன்றாக மடக்கி இது அம்மாவுக்கு, இது அப்பாவுக்கு ஏன உறவின் அழைப்பையோ,  அல்லது  இது சோறு , இது பருப்பு, இது பொரியல் என உணவுவகைகளில் பெயரையோ சொல்லி  விரல் நுனிகளை பிடித்து மடித்து விடுவார்கள். அதன் பின் மீண்டும் விரல்களை நிமிர்த்தி உள்ளங்கையில்  நமது முழங்கைகளால் பால் கடைவது போல் ஆடைக்கடை, மோடைக்கடை என சொல்லி கடைந்து விட்டு உடனேயே நடுவிரலிலிருந்து நண்டு ஊருவது போல் நண்டூருது நரிஊருது...நண்டூருது நரிஊருது...நண்டூருது நரிஊருது...அக்குளு கிளு கிளு......விரல்களால் ஊர ஆரம்பித்து  அவர்கள் தோள் பட்டை வரை சென்று அக்குளுக்குள் விட்டு கிளுகிளுப்பு ஊட்டி சிரிக்க செய்வார்கள்.அழும் குழந்தை சிரிக்கும் போது நம் மனமும் மகிழும்.

மனித விரல் நுனியோடு உடலிலிருக்கும் அனைத்து நரம்பின் பாகங்களும் தொடர்பு படுவதனால் விரல் நுனியை தொடுவதனால் முழு உடலுக்குமான ஆரோக்கியமும் பேணப்படுகின்றது எனும் போது குழந்தைகளுக்கு சிறு தொடுகை மூலமான இப்பயிற்சி தாய் சேய் அன்புடன் உடல், உள, ஆரோக்கியத்துக்கும் வித்திட்டது என்றால் அதில் தவறில்லை!

இத்தகையை புள்ளிகளை கண்டு தொடுகை மூலம்குணப்
படுத்தலைத்தான்  முற்காலத்தில் நம்ம்சித்தர்களின் வர்மக்கலை எனும் குணப்படுத்தல் இருந்தது. அதைத்தான் அக்குப்பிரசர் என சீனர்கள்  கொண்டு வந்து  இக்காலத்தில் வியாபாராமாக்கி கொண்டிருக்கின்றார்கள்.

சின்ன சின்ன விளையாட்டுக்களில் கூட எத்தனை அறிவியல் சிந்தனையோடு நம் முன் சென்றவர்கள்   நமக்காக பல அரிய விளையாட்டுக்களை கற்று தந்தார்கள் என நினைக்கும் போது மலைப்புதான் தோன்றும். அவைகளையெல்லாம் விட்டு நாம் விலகி வந்ததனால் நாம் கண்ட நன்மை என்ன?

அத்துடன் இன்னொரு விளையாட்டாய் கைகளை விரித்து உள்ளங்கையில் கிள்ளி எடுத்த படியே 
கிள்ளிக் கிள்ளிப் பிறாண்டி
கீயா மாயாப் பிராண்டி
கொப்பன் தலையில் என்ன பூ....
என கேட்கும் போது சொல்லும் பூவை வைத்து விரல்களை மடக்கி  கொண்டு வருவார்கள்.
முருங்கைப்பூ) என சொன்னால் 
முருங்கைப்பூவைத் திண்டவளே
முன்னடிக் கஞ்சி குடிச்சவளே
பாதி விளாங்காய் திண்டவளே
பாவட்டங் கையை ம-ட-க்-கு
என ஒவ்வொரு விரலாய் மடக்கி வருவார்கள், முழு விரல்களும் மடங்கி விட்டால் கைகள் இரண்டையும் சேர்த்து குவித்து பாதி விட்டமாய் பிடித்தபடி
பாட்டன் குத்து 
பறையன் குத்து 
பிள்ளையார் குத்து 
பிடித்து பார் குத்து 
என சொல்லி குத்துவார்கள். அப்படி குத்தும் போது பிடித்து பார் குத்து  என வரும் போது கைகளை குவித்து குத்தும் கையை பிடித்து விட்டால்  நாம் எதிராளியின்  இரு கையையும்  சேர்த்து  கும்பிடுவது போல் ஒட்டி பிடித்த படியே  கூப்ப வேண்டும்
கள்ளப்பூனை நான் எங்க செல்லத்துக்கு சமைத்து வைத்த சோத்தை களவெடுத்து தின்ன வந்தியா? என் செல்லத்தோட சாக்லெட்டை பறிக்க வந்தியா என கேட்டு கேட்டு  கூப்பியபடி இருக்கும் கரங்களில் வெளிப்பக்கமாக செல்லமாய் அடிக்க வேண்டும். அடிக்கும் அடிபடாதவாறு கைகளை எடுத்து விட்டால் விளையாட்டு முடிந்து விடும்.  கைகளில் அடி பட்டு விட்டால்  அடி தொடரும். 

விளையாடும் போது மிகவும் சுவாரஷ்யமாக இருப்பதால் குழந்தைகள் வாய்விட்டு சிரித்து நம்மையும் சிரிக்க வைப்பார்கள்.

இந்த மாதிரி விளையாட்டுக்கள் விரல்களுடனும் கைகளில் முழுப்பாகத்துடனும் தொடர்பு படுத்தி  தொடுகை உணர்வோடு அக்குப்பிரசர் ஆற்றல் தரும் புள்ளிகளையும் தொட்டு செல்வதால் உடல், உள வளர்ச்சி ஆரோக்கியம் பேணப்படுகின்றது  இம்மாதிரி விளையாட்டுக்களை நமக்கென விட்டு சென்ற முன்னோர்களை நாம் அதன் அருமைபெருமை அறியாமல் அதெல்லாம் பழங்காலம் என கிண்டல் செய்யும் நிலையில் இருக்கின்றோம். 

அன்று உறவின் பெயர்கள், உணவின் பெயர்கள், பூக்கள், பழங்கள், காய்களின் பெயர்கள்,விலங்குகளின் பெயர்கள் எல்லாம்  மனனம் எனும் பெயரில்திணீக்காமல்  குட்டிக்குட்டி பாடல்கள் மூலம் இயல்பாகவே சொல்லிக்கொடுக்கப்பட்டது! இன்று அவையனைத்தையும் மனப்பாடம் எனும் பெயரில் திணிக்கின்றோம். 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by நேசமுடன் ஹாசிம் Wed 6 Jan 2016 - 7:29

இதே பாடல்களோடு நாங்களும் விளையாடியிருக்கிறோம் அக்கா இப்போதுதான் எனக்குப் புரிகிறது எமது தமிழர் பண்பாட்டு வாழ்க்கை அந்தக்காலத்தில் இவ்வாறு பின்னிப் பிணைந்ததாகவே இருந்திருக்கிறது அதனால்தான் அத்தனை விடயங்களும் பரிமாறப்பட்டிருக்கிறது 

அருமையான பதிவு தொடருங்கள்

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by நண்பன் Wed 6 Jan 2016 - 16:45

Nisha wrote:இடையில் சேர்க்கப்பட்ட விபரம்... 

விளையாடும் போது வார்த்தை மனனமாக தவறில்லாமல் இம்மாதிரி பாடலை பாடி விட்டால் நாம்  கெட்டிக்காரர் தான்.

அறிவியல் ரிதியாக அக்குப்பிரசர் முறையில் அந்தந்த பாகங்களுக்கான ஆற்றல் தரு புள்ளி அங்காங்கே இருந்தாலும் பொதுவாக மனித உடலில் அனைத்து பகுதிகளுக்குமான ஆற்றல் தரும் புள்ளிகள்
உள்ளங்கைகளிலும், கால்பாதங்களின் நடுவிலும் அமைத்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன!  அப்புள்ளிகளை கண்டு விரல் நுனிகளையும் உள்ளங்கைகளையும் மெதுவாக அழுத்தி விடும் போது  முழு உடலுக்குமான  ஆற்றல்தரும் உந்து சக்தி கிடைப்பதோடு உடல்,உள,அறிவு ரிதியாக  ஆரோக்கியமும் கிடைக்கின்றது. 

அவ்வகையில் அக்கால நண்டூரி நரியூரு எனும்  பாடலுடன் கூடிய விளையாட்டும் இன்னும் பல பாடல்களும் குழந்தைகளுக்கு உடல், உள், அறிவு ரிதியான வளர்ச்சிக்கு உதவிய ஒன்றென்றால் ஆச்சரியப்படுவீர்கள்!

ஆனாலும் அது தான் நிஜம்!

விளையாட்டை  நன்கு கவனித்து பாருங்கள். சின்ன வயதில்’அழும் குழந்தைகளை சிரிக்க வைக்க அவர்கள் கையை நீட்ட சொல்லி விட்டு  கைவிரல்கள் ஐந்தினையும் விரல் நுனிகளை மெதுவாக தொட்டு ஒவ்வொன்றாக மடக்கி இது அம்மாவுக்கு, இது அப்பாவுக்கு ஏன உறவின் அழைப்பையோ,  அல்லது  இது சோறு , இது பருப்பு, இது பொரியல் என உணவுவகைகளில் பெயரையோ சொல்லி  விரல் நுனிகளை பிடித்து மடித்து விடுவார்கள். அதன் பின் மீண்டும் விரல்களை நிமிர்த்தி உள்ளங்கையில்  நமது முழங்கைகளால் பால் கடைவது போல் ஆடைக்கடை, மோடைக்கடை என சொல்லி கடைந்து விட்டு உடனேயே நடுவிரலிலிருந்து நண்டு ஊருவது போல் நண்டூருது நரிஊருது...நண்டூருது நரிஊருது...நண்டூருது நரிஊருது...அக்குளு கிளு கிளு......விரல்களால் ஊர ஆரம்பித்து  அவர்கள் தோள் பட்டை வரை சென்று அக்குளுக்குள் விட்டு கிளுகிளுப்பு ஊட்டி சிரிக்க செய்வார்கள்.அழும் குழந்தை சிரிக்கும் போது நம் மனமும் மகிழும்.

மனித விரல் நுனியோடு உடலிலிருக்கும் அனைத்து நரம்பின் பாகங்களும் தொடர்பு படுவதனால் விரல் நுனியை தொடுவதனால் முழு உடலுக்குமான ஆரோக்கியமும் பேணப்படுகின்றது எனும் போது குழந்தைகளுக்கு சிறு தொடுகை மூலமான இப்பயிற்சி தாய் சேய் அன்புடன் உடல், உள, ஆரோக்கியத்துக்கும் வித்திட்டது என்றால் அதில் தவறில்லை!

இத்தகையை புள்ளிகளை கண்டு தொடுகை மூலம்குணப்
படுத்தலைத்தான்  முற்காலத்தில் நம்ம்சித்தர்களின் வர்மக்கலை எனும் குணப்படுத்தல் இருந்தது. அதைத்தான் அக்குப்பிரசர் என சீனர்கள்  கொண்டு வந்து  இக்காலத்தில் வியாபாராமாக்கி கொண்டிருக்கின்றார்கள்.

சின்ன சின்ன விளையாட்டுக்களில் கூட எத்தனை அறிவியல் சிந்தனையோடு நம் முன் சென்றவர்கள்   நமக்காக பல அரிய விளையாட்டுக்களை கற்று தந்தார்கள் என நினைக்கும் போது மலைப்புதான் தோன்றும். அவைகளையெல்லாம் விட்டு நாம் விலகி வந்ததனால் நாம் கண்ட நன்மை என்ன?

அத்துடன் இன்னொரு விளையாட்டாய் கைகளை விரித்து உள்ளங்கையில் கிள்ளி எடுத்த படியே 
கிள்ளிக் கிள்ளிப் பிறாண்டி
கீயா மாயாப் பிராண்டி
கொப்பன் தலையில் என்ன பூ....
என கேட்கும் போது சொல்லும் பூவை வைத்து விரல்களை மடக்கி  கொண்டு வருவார்கள்.
முருங்கைப்பூ) என சொன்னால் 
முருங்கைப்பூவைத் திண்டவளே
முன்னடிக் கஞ்சி குடிச்சவளே
பாதி விளாங்காய் திண்டவளே
பாவட்டங் கையை ம-ட-க்-கு
என ஒவ்வொரு விரலாய் மடக்கி வருவார்கள், முழு விரல்களும் மடங்கி விட்டால் கைகள் இரண்டையும் சேர்த்து குவித்து பாதி விட்டமாய் பிடித்தபடி
பாட்டன் குத்து 
பறையன் குத்து 
பிள்ளையார் குத்து 
பிடித்து பார் குத்து 
என சொல்லி குத்துவார்கள். அப்படி குத்தும் போது பிடித்து பார் குத்து  என வரும் போது கைகளை குவித்து குத்தும் கையை பிடித்து விட்டால்  நாம் எதிராளியின்  இரு கையையும்  சேர்த்து  கும்பிடுவது போல் ஒட்டி பிடித்த படியே  கூப்ப வேண்டும்
கள்ளப்பூனை நான் எங்க செல்லத்துக்கு சமைத்து வைத்த சோத்தை களவெடுத்து தின்ன வந்தியா? என் செல்லத்தோட சாக்லெட்டை பறிக்க வந்தியா என கேட்டு கேட்டு  கூப்பியபடி இருக்கும் கரங்களில் வெளிப்பக்கமாக செல்லமாய் அடிக்க வேண்டும். அடிக்கும் அடிபடாதவாறு கைகளை எடுத்து விட்டால் விளையாட்டு முடிந்து விடும்.  கைகளில் அடி பட்டு விட்டால்  அடி தொடரும். 

விளையாடும் போது மிகவும் சுவாரஷ்யமாக இருப்பதால் குழந்தைகள் வாய்விட்டு சிரித்து நம்மையும் சிரிக்க வைப்பார்கள்.

இந்த மாதிரி விளையாட்டுக்கள் விரல்களுடனும் கைகளில் முழுப்பாகத்துடனும் தொடர்பு படுத்தி  தொடுகை உணர்வோடு அக்குப்பிரசர் ஆற்றல் தரும் புள்ளிகளையும் தொட்டு செல்வதால் உடல், உள வளர்ச்சி ஆரோக்கியம் பேணப்படுகின்றது  இம்மாதிரி விளையாட்டுக்களை நமக்கென விட்டு சென்ற முன்னோர்களை நாம் அதன் அருமைபெருமை அறியாமல் அதெல்லாம் பழங்காலம் என கிண்டல் செய்யும் நிலையில் இருக்கின்றோம். 

அன்று உறவின் பெயர்கள், உணவின் பெயர்கள், பூக்கள், பழங்கள், காய்களின் பெயர்கள்,விலங்குகளின் பெயர்கள் எல்லாம்  மனனம் எனும் பெயரில்திணீக்காமல்  குட்டிக்குட்டி பாடல்கள் மூலம் இயல்பாகவே சொல்லிக்கொடுக்கப்பட்டது! இன்று அவையனைத்தையும் மனப்பாடம் எனும் பெயரில் திணிக்கின்றோம். 

அருமையான விளக்கம் அக்கா நமது முன்னோர்களின் செயற்பாடு தெரிந்து செய்தார்களா அல்லது தெரியாமல் செய்தார்களா என்று நமக்கு தெரியாது ஆனால் அவர்கள் செய்த அனைத்திலும் பல காரணங்களும் காரணிகளும் உண்ணு   அதே போல்தான் அக்குப்பிரசர்  கிள்ளிக் கிள்ளி விளையாட்டும் படிக்கும் போதும் மகிழ்ச்சியாக உள்ளது நானும் பல தடவைகள் குழந்தைகளுடன் இவ்வாறு விளையாடி இருக்கிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by Nisha Mon 11 Jan 2016 - 11:01

நான் ஒன்றிலிருந்து ஐந்து வரை படித்த ஆரம்பப்பாடசாலை.
http://alpsnisha.blogspot.ch/2015/12/blog-post_22.html
நான் சின்னவளாய் இருந்தபோது...2 தொடரில் வரும் வம்மி மர நினைவலைகளும் பூப்பறிக்கபோகின்றோம் பாடலும் இப்பாடசாலையின் முன் தான் விளையாடுவோம்.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் பெரியகல்லாறு பிள்ளையார் கோயிலுக்கு முன் இருக்கும் பாடசாலை!

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 12472257_173631906328588_1953762625815542293_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum