Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
+3
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
7 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
First topic message reminder :
அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்!
என் தமிழ் மொழியுடனான பள்ளி வாழ்வெனவது என் 12- 13 வயதி்ன் பின் தட்டு தடுமாறித்தான் சென்றது.ஆனால அந்த 12. 13 வயதிலேயே நான் முழு வாழ்க்கைகுமாக பெறவேண்டிய மகிழ்ச்சியை அடைந்திருப்பேன்! அத்தோடு ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் எனக்கான முத்திரையை பதிந்திருக்கின்றேன் என்பதை ஊரை விட்டு வந்து 25 வருடங்களாகியும் எனக்கு கற்பித்த நினைவுகளை ஆசிரியர்கள் என்னுடன் பகிரும் போது உணர்கின்றேன்.
கடந்த வாரம் விடுமுறைக்கு வந்திருந்த என் தங்கை... என் நினைவுகளை மீட்டுச்சென்றாள். அனைத்திலும் திறமையாய் அனைவரிலும் முதலாய்... டாக்டராய் இருக்கும் தம்பியை விடவும் என் அக்கா பள்ளியில் சிறந்து விளங்கினாள் என என்னை குறித்து தன் கணவரிடம் அறிமுகம் செய்த போது என் கண்களில் நீர்..!
நாடு விட்டு நாடு புலம் பெயர்தலால் நான் இழந்தைவைகள் எத்தனை? அந்நிய மொழியும், நாட்டிலும் நான் பெற்றவைகளும் அனேகமாயிருப்பினும் தாய் மொழியில் தாய் நாட்டில் நாம் பெறக்கூடியவை அனைத்து இழப்புக்கள் தானே?
16 வயதில் சுவிஸ்ஸர்லாந்து நாட்டுக்கு வந்து முதல் ஆறுவருடங்கள் தமிழ் மொழிக்கும் எனக்குமான உறவு வார இறுதிகளில் மட்டும் அதுவும் பேச்சளவில் என்றாகியும் இருந்தது. ஆங்கில எழுத்துக்களை கொண்டு ஆங்கில உச்சரிப்பில்லாத ஜேர்மன் மொழி அதாவது டொச் மொழியை கற்க தமிழ் மொழியை மட்டுமல்ல அதுவரை உறவாயிருந்த ஆங்கிலமும் கூட விலகித்தான் வைக்க வேண்டி வந்தது!எனினும் தமிழ் மொழி மீதான என் பற்று வளர்ந்ததே தவிர குறையவே இல்லை. கண்டதும் கற்க பண்டிதன் ஆகலாம் என்பதை இன்று வரை என்னில் ஆராய்ந்து கொண்டுள்ளேன்
பதிவில் எதையோ ஆரம்பித்து எங்கோ சென்று கொண்டிருக்கின்றேன். நான் இங்கே பகிர வந்த விடயமே வேறு.. என் சொந்த அனுபவங்களை வேறொரு பதிவில் பகிர்கின்றேன்.
எனக்குள் என்றுமே பாடசாலை நாள் என்பது எனக்கு இனிக்கும் நினைவலைகள் தான். மீண்டும் வராத இனிய நினைவலைகள்!
நம் பாடசாலை நாட்களில் நாம் பேச்சு வழக்கிலான பல பாடல்களை பாடி விளையாடி இருப்போம். அம்மாதிரியான விளையாட்டு பாடல்களை தொடராக இங்கே பகிரலாம் என நினைக்கின்றேன்.
நான்காம்,ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலே நானும் என் தோழிகளும் பாடசாலை இடைவேளைக்காகவே காத்திருப்போம். என் வகுப்பில் ஆண்பெண் இணைந்து படித்தாலும் பெண்கள் மட்டுமே சேர்ந்து விளையாடகூடிய விளையாட்டில் ஆண்களும்கல்ந்து கொள்வார்கள். அப்படிபட்ட ஒரு விளையாட்டு தான் பெண்களுக்கான பூப்பறிக்க போகிறோம் எனும் பாடலுடன் கூடிய விளையாட்டு.
குறைந்தது 20- 26 பேர் சுற்றி வர பெரிய வட்டமாக நெருங்கி உட்கார்ந்து கொள்ள வேண்டும். யாரும் பின்பக்கம் திரும்பி பார்க்க கூடாது.. விளையாட்டின் ஆரம்பத்தில் ஒருவர் தெரிந்தெடுக்கப்பட்டு அவர் கையில் ஒரு மலர் கொத்து கொடுக்கப்படும். அது மலரோ ஆலமர இலையோ வம்மி மர காயோ பூவரசம் தடியோ எதுவானாலும் அது தான் அந்த வயதில் பூ...
பூவை கையில் வைத்திருப்பவர் பாட வேண்டும். பாடிக்கொண்டே வட்டமாக அமர்ந்திருப்பவர்களை சுத்தி ஓடவும் வேண்டும்..
பூப்பறிக்க போகிறோம்..போகிறோம்.. போகிறோம்.. என சுத்தி சுத்தி ஓடிக்கொண்டே பாட அமர்ந்திருப்போர் யாரைபறிக்க போகிறீர் போகிறீர்
என எதிர்க்கேள்வி கேட்க வேண்டும்..
ஓடுபவர் சிறிது நேரம் அமைதியாக சுத்தி சுத்தி ஓடிய படியே தம் கையில் இருக்கும் மலர்கொத்தை யாராவது ஒருத்தர் பின்னால் மொதுவாக வைத்து விட்டு ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அவர் விரும்பினால் யார் பின்னால் தான் மலர்கொத்தை வைத்தாரோ அவர் தன்னை எந்த பக்கத்தாலும் துரததிப் பிடிக்க முடியாத இடத்தில் ஓடிய படியே..அவர் பெயரைச்சொல்லி
உதாரணமாக நிஷாவை பிடிக்க போகிறோம் போகிறோம்
என சொல்லி ஓடினால் அந்த நபர் உடனே திரும்பி பார்த்து மலர்கொத்தி்னை எடுத்து கொண்டு முன்னால் ஓடுபவரை அந்த மலர்க்கொத்தால் தொட முயற்சிக்க வேண்டும். ஆனால் முன்னால் ஓடுபவர் பின்னால் வருபவர் இடத்தில் போய் உட்கார்ந்து வட்டத்தை நிரப்பி விட்டால் மீண்டும் விளையாட்டு ஆரம்பமாகும்.
அதே நேரம் முன்னால் ஓடுபவரை பின்னால் வருபவர் மலரால் தொட்டு விட்டால் மீண்டும் முன்னவரே ஆரம்பிக்க வேண்டும்.
இப்படி நாள் முழுதும் சுவாரஷ்யமாக ஒவ்வொரு பூவின் பெயரோடும் நண்பர்கள் பெயரோடும் விளையாடுவோம்.
அது ஒரு பொற்காலம்தான்...!
இப்படியாக நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.அப்படி ஒருசில பாடலகளை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..
ஓடு ஓடு
நான் சின்னவளாய் இருந்தபோது..
எத்தனை வயதாலும் நாம் நம் சிறுவயதின் நினைவுகளை மறந்திட முடியாதல்லவா?அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்!

படம் நன்றி இணையம்
படத்தில் பையன் துணியை கையில் வைத்திருக்கின்றான்
ஆனால் நாங்கள் பூக்கொத்து அல்லது இலைக்கொத்தை வைத்து தான் விளையாடினோம்
குறைந்தது 20- 26 பேர் சுற்றி வர பெரிய வட்டமாக நெருங்கி உட்கார்ந்து கொள்ள வேண்டும். யாரும் பின்பக்கம் திரும்பி பார்க்க கூடாது.. விளையாட்டின் ஆரம்பத்தில் ஒருவர் தெரிந்தெடுக்கப்பட்டு அவர் கையில் ஒரு மலர் கொத்து கொடுக்கப்படும். அது மலரோ ஆலமர இலையோ வம்மி மர காயோ பூவரசம் தடியோ எதுவானாலும் அது தான் அந்த வயதில் பூ...
பூவை கையில் வைத்திருப்பவர் பாட வேண்டும். பாடிக்கொண்டே வட்டமாக அமர்ந்திருப்பவர்களை சுத்தி ஓடவும் வேண்டும்..
பூப்பறிக்க போகிறோம்..போகிறோம்.. போகிறோம்.. என சுத்தி சுத்தி ஓடிக்கொண்டே பாட அமர்ந்திருப்போர் யாரைபறிக்க போகிறீர் போகிறீர்
என எதிர்க்கேள்வி கேட்க வேண்டும்..
ஓடுபவர் சிறிது நேரம் அமைதியாக சுத்தி சுத்தி ஓடிய படியே தம் கையில் இருக்கும் மலர்கொத்தை யாராவது ஒருத்தர் பின்னால் மொதுவாக வைத்து விட்டு ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அவர் விரும்பினால் யார் பின்னால் தான் மலர்கொத்தை வைத்தாரோ அவர் தன்னை எந்த பக்கத்தாலும் துரததிப் பிடிக்க முடியாத இடத்தில் ஓடிய படியே..அவர் பெயரைச்சொல்லி
உதாரணமாக நிஷாவை பிடிக்க போகிறோம் போகிறோம்
என சொல்லி ஓடினால் அந்த நபர் உடனே திரும்பி பார்த்து மலர்கொத்தி்னை எடுத்து கொண்டு முன்னால் ஓடுபவரை அந்த மலர்க்கொத்தால் தொட முயற்சிக்க வேண்டும். ஆனால் முன்னால் ஓடுபவர் பின்னால் வருபவர் இடத்தில் போய் உட்கார்ந்து வட்டத்தை நிரப்பி விட்டால் மீண்டும் விளையாட்டு ஆரம்பமாகும்.
அதே நேரம் முன்னால் ஓடுபவரை பின்னால் வருபவர் மலரால் தொட்டு விட்டால் மீண்டும் முன்னவரே ஆரம்பிக்க வேண்டும்.
இப்படி நாள் முழுதும் சுவாரஷ்யமாக ஒவ்வொரு பூவின் பெயரோடும் நண்பர்கள் பெயரோடும் விளையாடுவோம்.
அது ஒரு பொற்காலம்தான்...!
இப்படியாக நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.அப்படி ஒருசில பாடலகளை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..
[size=18]ஓடு[/size]
ஓடு ஓடு
[size=13]என்ன ஓடு ? நண்டோடு
என்ன நண்டு ? பால்நண்டு
என்ன பால்? கள்ளிப்பால்.
என்ன கள்ளி? சதுரக்கள்ளி
என்ன சதுரம் ? நாய்ச்சதுரம்
என்ன நாய்? வேட்டைநாய்.
என்ன வேட்டை? பன்றிவேட்டை.
என்ன பன்றி? ஊர்ப்பன்றி,
என்ன ஊர்? கீரனூர்.
என்ன கீரை? அறைக்கீரை
என்ன அறை? பொன்னறை.
என்ன பொன்? காக்காய்ப்பொன்.
என்ன காக்காய்? அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? சோற்றண்டம்.
என்ன சோறு? பழஞ்சோறு.
என்ன பழம்? வாழைப்பழம்.
என்ன வாழை? கருவாழை.
என்ன கரு? நத்தைக்கரு.
என்ன நத்தை? குளத்துநத்தை
என்ன குளம்? பெரியகுளம்.[/size]
என்ன நண்டு ? பால்நண்டு
என்ன பால்? கள்ளிப்பால்.
என்ன கள்ளி? சதுரக்கள்ளி
என்ன சதுரம் ? நாய்ச்சதுரம்
என்ன நாய்? வேட்டைநாய்.
என்ன வேட்டை? பன்றிவேட்டை.
என்ன பன்றி? ஊர்ப்பன்றி,
என்ன ஊர்? கீரனூர்.
என்ன கீரை? அறைக்கீரை
என்ன அறை? பொன்னறை.
என்ன பொன்? காக்காய்ப்பொன்.
என்ன காக்காய்? அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? சோற்றண்டம்.
என்ன சோறு? பழஞ்சோறு.
என்ன பழம்? வாழைப்பழம்.
என்ன வாழை? கருவாழை.
என்ன கரு? நத்தைக்கரு.
என்ன நத்தை? குளத்துநத்தை
என்ன குளம்? பெரியகுளம்.[/size]
நட்புக்கள் தங்கள் நினைவலைகளில் தோன்றுவதை பின்னூட்டங்களில் பகிர்ந்தால் மகிழ்வேன்.
இப்பதிவு தொடராக வரும்.!
Last edited by Nisha on Thu 24 Dec 2015 - 2:16; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
நிஷா நிஷா நிஷா நிஷாNisha wrote:அதான் யாரு?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
அழ வைக்கவா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
மறுபடியும்Nisha wrote:அழ வைக்கவா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
நண்பன் wrote:அவள் குழந்தைத் தனத்தை நான் எதிர் பார்க்கிறேன்
அவள் தாயின் பாசத்தை நான் அவளுக்கு தருவேன்
ஷப்பே இப்பவே கண்ணக் கட்டுதே
இத முதல்லயே சொல்ல வேண்டியது தான பதிவை கூட்டனும்னு எப்படியெல்லாம் மூக்கைத் தொடுறிங்க...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
சின்னவளாய் இருந்த போதான என் நினைவுபெட்டகத்தில் நான் கற்றவைகள், பெற்றவைகளில் என் நான்காவது வயதிலிருந்து நடந்த சம்பவங்கள் இன்றும் நினைவுக்கு வருவது ஆச்சரியமானது தான்.
எங்கள் வீட்டில் நான் மூத்த பெண் என சொல்லி இருக்கின்றேன், எனக்கு அடுத்து மூன்று தங்கைகள், அதைத்தொடர்ந்து தம்பி, கடைசியாய் ஒரு தங்கை, ஐந்து பெண்கள், ஒரு ஆண் என மிகப்பெரிய குடும்பம் எங்களுடையது,
எனக்கும் என் தங்கைகளுக்கும் ஒன்றரை வயது தான் வித்தியாசப்படும் என்பதோடு நான் பிறந்த பொழுதினில் மட்டக்களப்பு அமிர்தகளியில் மாமாங்க கோயில எனும் பிரசித்தி பெற்ற கோயிலை ஒட்டி சொந்தமாய் வீடு மற்றும் வசதியாக இருந்திருக்கின்றோம். அந்த வீட்டை விட்டு என் ஆறாவது வயதுக்கு முன்பு புறப்பட்டு விட்டாலும் அதன் பின் அந்த வீட்டுக்கு திரும்பி போகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் எனக்குள் அந்த வீடும், நினைவுகளும் இன்றைக்கும் ஏக்கம் தரும் ஒன்றுதான் ,சந்தர்ப்பம் கிடைத்தால் என் வாழ்க்கையில் ஒரு தடவையாகிலும் அந்த இடத்தை சென்று பார்க்க வேண்டும் எனும் ஏக்கம் என்னுள் உண்டு.
அந்த வீட்டை அம்மாவுக்கு சீதனமாக கொடுத்த தாத்தா சொந்த தாத்தா இல்லை. அம்மா மேல் பாசம் வைத்ததால் தன் சொந்த பிள்ளைகளுக்கு கொடுக்காமல் அம்மாவுக்கு கொடுத்தாராம். என்னிடமும் பாசமாக இருந்திருகின்றார்.
நடுவில் இரு அறைகளுடன்,இருபக்கங்களும் தாழ்வாரம் போன்ற நீண்ட பகுதியும், பெரிய கடையுமாய் திருவிழாக்காலங்களில் சர்பத் போன்ற இனிப்பு பதார்த்தங்கள் விற்கும் கடையாய் அவை பயன் பட்டதும், சர்பத்தின் சுவையும்,அதில் மிதக்கும் கசகசா,சேமியா போன்றவைகளின் சுவையும் தென்னை மரங்களும் கூட எனக்குள் நினைவு இருப்பது ஆச்சரியமே!
விட்டுக்கு முன்னே கோயிலுக்கும் சற்று முற்பகுதியில் மைதானம் போன்ற வெள்ளை மணல் பரப்பு இருந்ததில் அதில் பெரியவர்கள் நிலவு ஒளியில் அமர்ந்து பேசுவதும் நான் குமார், தேவி என எனை ஒத்த நண்பர்களுடன்
விளையாடிய நினைவும்
குமார் குமார் லைட் அடி
கோழிக்கூட்டுக்கு லைட் அடி,
எத்தனை மாதம் சம்பளம்,
மூன்று மாதம் சம்பளம். .
மாமா எங்கே படுக்கின்றார்,
மாடி வீட்டில் படுக்கின்றார்
அத்தை எங்கே இருக்கின்றாள்
அடுத்த வீட்டில் இருக்கின்றாள்
நம்ம வீட்டில் கல்யாணம்
தெருவிலெல்லாம் ஊர்க்கோலம்
டொம் டொம் டொம் என குமாரை கேலி செய்து பாட்டு சொல்லி தந்ததும் நினைவில் இருக்கின்றது.
1977 ல் இலங்கையில் கிழக்கு மாகாணத்தை தாக்கிய சூறாவளியில்,வீட்டின் ஓடுகள் உடைந்து விழுந்ததும் , மேசைக்கு கீழாய் என்னை பாதுகாத்ததும், ஓடு விழுந்ததனால் ஓடு வீடு எனும் நம்பிக்கையில் எங்கள் வீட்டில் வந்து இருந்த பக்கத்து வீட்டு ஆண்டியின் முழங்காலில் ஓடு விழுந்ததும் புயல் பலமாகி தென்னை மரங்கள் வீட்டின் மேல் விழ ஆரம்பித்த போது அனைவரும் மாமாங்க கோயிலுக்கு செல்ல இடுப்பளவு நீரில் நடந்ததும் நடக்கும் போது என்னை தாத்தாவும், தங்கையை சித்தப்பாவும் தூக்கி தோளில் வைத்து பாதுகாப்பாய் அணைத்து சென்றதும், அம்மா என் மூன்றாவது தங்கையை வயிற்றில் சுமந்ததுமாய் என் நினைவுகள் கூடவே வருகின்றது.
அன்றைய தினம் என் அப்பா வேலை நிமித்தம் சென்று விட்ட சூழலில் அப்பாவின் தம்பி சித்தப்பா, தாத்தா என எங்களுடன் இருந்தது, என் இரண்டாவது தங்கை ஹேமா சித்தப்பாவின் செல்லப்பெண் என்பதால் அவர் அவளை தூக்கிட்டு திரிந்ததும் புயலுக்கு மறு நாள் பதறி அடித்து ஓடி வந்த அப்பா புயலாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுக்கின்றார்களாம் என அறிந்து என்னை தூக்கி கொண்டும் சித்தப்பா தங்கையை தூக்கிக்கொண்டும் போய் கோதுமை மா, பேரிச்சம் பழம் வாங்கி வந்ததும் புயலாய் விழுந்த தென்னை மரங்களின் குருத்துக்கள் இளனீர்களை சாப்பிட ஓடித்திரிந்ததும் . சின்னக்குழந்தைகளுக்கு முதலிடம் என்பதால் பக்கத்து வீட்டு மாமாக்களும் மாறி மாறி எங்களை தூக்கிட்டு போய் நிவாரணப்பொருட்களை வாங்கியதும் நீங்காத நினைவில்.!
சின்ன வயதில் என்னை தரையில் நடக்கவே விடாத படி அப்பாவுக்கு தெரிந்த நண்பர்கள் முன்று மாமாக்கள் என்னை தூக்கியே வைத்திருந்ததும், அவர்கள் என் பத்தாவது வயது வரை அதை சொல்லி என்னை தம் மடியில் இருத்தி கொள்வதும், அம்மாவின் ஒன்று விட்ட அக்கா பூமணி பெரியம்மா, கிட்டப்பா பெரியப்பாவையே நான் முதன் முதலில் அம்மா, அப்பா என அழைத்ததும், அவர்கள் என்னை வளர்த்ததும் திருகோணமலையில் பெரியப்பாவின் கடையில் நான் செல்லப்பெண்ணாக அவர் மடியில் அமர்ந்து தேன் குழல்களை சாப்பிட்டதும் என் அம்மா என் சின்ன தங்கையை பெரியம்மா வீட்டுக்கு கூட்டி வந்த போது நான் பெரியம்மாவிடம் அம்மா அம்மா சித்தி குட்டிப்பாப்பா வாங்கி வந்திருக்கிறா, அவள் வேண்டாம் என சொல்லி அழுததாக சொல்வதும் எனக்குள் மறக்கவே இல்லை.
இந்த நினைவுகள் அனைத்துமே என் ஐந்து வயதுக்குள் என சொன்னால் நம்புவீர்களா?
பிள்ளைகள் இல்லாததால் பெரியப்பா பெரியம்மா என்னை வளர்த்ததனால் தானோ என்னமோ எனக்கு இன்று வரை என்னை பெற்ற அம்மாவுடன் ஒட்டுதலில்லாமலேயே இருக்கின்றேன்.
எனக்கு என் தங்கை தம்பி ,அவர்களை தூக்கியது, விளையாடியதான நினைவுகள் தம்பி பிறக்க வேண்டும் என்பதற்காக அம்மா இலங்கையில் கதிர்காம கோயிலுக்கு நேர்த்திக்கடன் வைத்து கந்த சஷ்டி விரதம் இருந்ததில்ருந்து தான் ஆரம்பமாகின்றது.
அது வரை அல்லது நான் பள்ளி செல்லும் வயது வரை என் தங்கைகளுடன் இருக்க வில்லை என்பதோடு மீண்டும் 10 வயதின் பின் நான் என் சகோதரிகளுடன் இல்லை என்பதனால் என் மொத்த வாழ்க்கையில் நாங்கள் வெறும் ஐந்து வருடங்கள் மட்டுமே ஒன்றாய் இருந்தோம்.
நான் என் குடும்பத்தினை விட்டு அதிக நாட்கள் பிரிந்தே இருந்திருக்கின்றேன் அதனால் அம்மா, அப்பா, சகோதர சகோதரிகளுக்குள் இயல்பாய் வரவேண்டிய ஒட்டுதல் பாசம் எனக்கு மட்டும் கிடைக்காமல் இருப்பதும், மற்ற அனைவரும் தமக்குள் ஒன்று பட்டு இருக்க நான் என்றும் வேற்று ஆளாய் தோன்றுவதும் என் சின்ன வயது சூழலால் தான் என நான் நினைக்கின்றேன்.
மட்டக்களப்பு அமிர்தகளி மாமாங்க கோயில் முன்பாக என்னுடைய ஆறாவதுவயதிற்குள் என் குடும்பத்தின் வளர்ச்சியை போட்டோவில் பாருங்கள்.
நான் குட்டிப்பெண்ணாய் இருக்கும் போது கன்னம் வைத்து புஷ்ஷுனு குண்டாய் தான் இருப்பேனாம், எப்பவும், இப்பவும் குண்டு குண்டு பூசணிக்காய்தான்!
இன்றைக்கு இந்த படத்தில் இருக்கும் நால்வரும் ஆளுக்கொரு திசையில் சிதறடிக்கப்பட்டு விட்டோம். ஒரே வெள்ளைவர்|ண துணி சட்டை போட்டிருக்கும் நானும் தங்கையும் சுவிஸர் லாந்திலும் ஆரஞ்சு சட்டை அவுஸ்ரேலியா சிட்னியிலும், அம்மா கையில் இருக்கும் குட்டிப்பாப்பா ஜேர்மனியிலுமாய் புலம் பெயர்ந்தும் விட்டோம். என்னுடைய பத்தாவது வயதில் அப்பா எங்களை விட்டு சுவிஸ் வர புறப்பட்டதிலிருந்து இன்று வரை நாங்கள் மொத்தக்குடும்பமும் ஒன்று சேரவும் இல்லை. கடைசித்தங்கை, தம்பி திருமணம் என நடந்த போதும் யாரோ ஒரு தங்கை கலந்து கொள்ள முடியாமல் போகும் சூழல் தான் இருக்கிறது.
படிப்பு நிமித்தமோ.குடும்பம் பெரிதானதாலோ மட்டக்களப்பை விட்டு பெரிய கல்லாறுக்கு வாடகை வீடு மாறி என் ஆறாவது வயதில் முதல் முதலாக பாடசாலை பெரியகல்லாறு வினாயகர் வித்தியாலயம் போன நினைவு கூட என் நினைவில் இருக்கின்றது. அக்காலங்கள் தான் என் வாழில் பொற்காலங்கள் என்பேன்.
அந்த வீட்டில் பதினொரு வயது வரை இருந்த போதான நினைவுகளை நான் சின்னவளாய் இருந்தபோது.-4 காணலாம்
என் பாடசாலை அனுபவங்களை. நான் சின்னவளாய் இருந்தபோது.- 2 சென்றும் காணலாம்.
முதலாம் வ்குப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை கற்ற பாடசாலை.
சின்ன வயதில் நாங்கள் விளையாடிய வினா விடை பாடல்கள் பல புதிய சொற்களை கற்றிடவும் நினைவாற்றல் பெருக்கிடவும் உதவியது எனலாம்.
அப்படிப்பட்ட சில பாடல்ளை இந்த தொடரிலும் பார்க்கலாமா?
நிலாநிலா
எங்கே போறாய்?
மண் எடுக்கப் போறேன்.
மண் என்னத்துக்கு?
சட்டிபானை செய்ய.
சட்டிபானை என்னத்துக்கு?
சோறாக்கித் தின்ன.
இந்த மாதிரி பாடல்களை கேட்டு விளையாடிய நினைவு இருக்கின்றதா உறவுகளே!
நிலாநிலா
எங்கெங்கேபோனாய் ?
களிமண்ணுக்குப் போனேன்.
களிமண் என்னத்துக்கு? வீடு கட்ட.
வீடு என்னத்துக்கு? மாடு கட்ட.
மாடு என்னத்துக்கு? சாணி போட.
சாணி என்னத்துக்கு? வீடுமெழுக.
வீடு என்னத்துக்கு? பிள்ளைபெற.
பிள்ளை என்னத்துக்கு?
எண்ணெய்க் குடத்திலே போட்டுப்
பிள்ளை துள்ளித் துள்ளி விளையாட
இதையும் படித்து பாருங்கள். உங்கள் நினைவுகளில் மீட்ட முடிந்தால் அதையும் பகிழுங்கள்.
ஒரு கொத்து ஈச்சங்கொட்டை வறுத்துகொட்டி
ஒன்பதுபேராகக் கூடிகுத்தி
கல்லடிநாச்சிக்குக் கல்யாணமாம்
கருகப்பிலையால் தாலிகட்டி.
என்னதாலி... பொன்தாலி-
என்னபொன்.... காக்காப்பொன்
என்னகாக்கா....அண்டங்காக்கா
என்னஅண்டம...பனையண்டம்
என்னபனை....ஓட்டுப்பனை
என்னஓடு....ஆமைஓடு
என்னஆமை.....பாலாமை
என்னபால்...கள்ளிப்பால்
என்னகள்ளி....சதுரக்கள்ளி
என்னசதுரம.....நாய்ச்சதுரம்
என்னநாய.....வேட்டைநாய்
என்ன வேட்டை....பன்றிவேட்டை
என்னபன்றி....ஊர்பன்றி
என்னஊர்.....கீரையூர்
என்னகீரை....மண்டூர்க்கீரை
என்னமண்டூர்....தில்லைமண்டூர்
தில்லைமண்டூருக்குப் போவோமடி
ஆச்சரியம் தரும் விடயம் என்ன தெரியுமா? இப்பாடல்களில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் கல்லடி நாச்சி, மண்டூர், கிரான் குளம் எல்லாமே இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் அமைந்திருக்கும் ஊர்களில் பெயர்கள்.கல்லடி நாச்சி என்பது கல்லடி எனும் ஊரில் இருக்கும் அம்மன் கோயிலையும், தில்லை மண்டூர் என்பது சின்னக்கதிர் காமமென அழைகப்படும் முருகன் கோயிலை கொண்ட பிரசித்தி பெற்ற இடமாகவும்.
கிரான் குளம் எனும் ஓரு முந்திரியம் பழக்களுக்கு பெயர் போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பாடல்களை இயற்றியவர்கள் யார் என தெரியாவிட்டாலும் செவி வழியாக தொடர்ந்துகேட்டுப்பாடியே வருவது தான் இங்கே கவனிக்கத்தக்கது
ஒருவர் கேள்வியாய் கேட்க.. அடுத்தவர் சட்டென பதில் சொல்ல சிறுவர்கள் இருக்கும் இடத்தில் ஒரே கூச்சலும் கும்மாளமுமாய் குதுகலம் தரும் விளையாட்டும் இது!
கடலை கடலை
என்ன கடலை...... உருண்டைக் கடலை
என்னவுருன்டை...... மாவுருண்டை
என்ன மா.....என்னம்மா
வாழைப்பழம்:......
என்னவாழை:.....கப்பல்வாழை
என்னகப்பல்: .......பாய்க்கப்பல்
என்னபாய்: பன்பாய்
என்னபன்:.....குளத்துபன்:
என்னகுளம்: கிரான்குளம்
i
இது என்ன விளையாட்டு என நினைவிருக்கின்றதா உறவுகளே! இவ்விளையாட்டு குறித்த என் நினைவுகள் அடுத்த பதிவில் பார்க்கலாம்!
தொடர்வோம்>>>>>>>>>

பட உதவி நன்றி பேஸ்புக் தமிழ் பிரியன்

சூப்பர் நிஷா 5 வயதில் நடந்ததை இவ்வளவு தெளிவா நினைவு வச்சிருக்கிங்க உங்க நினைவாற்றல் அபாரம்...
இப்பொது அந்த வீடு இருக்குமா நிஷா இந்நேரம் பெரிய மாளிகையே கட்டி இருப்பாங்க அந்த இடத்துல போனால் கூட தெருவே அடையாளம் தெரியாம மாறி இருக்கும்.
பதிவைப் படிக்கும் போது மீண்டும் அந்த காலத்துக்கே சென்று விடமாட்டோமா என ஏக்கம் வருகிறது.
எங்களுக்கும் சிறுவயது மலரும் நினைவுகள் மலர்கிறது.
இப்பொது அந்த வீடு இருக்குமா நிஷா இந்நேரம் பெரிய மாளிகையே கட்டி இருப்பாங்க அந்த இடத்துல போனால் கூட தெருவே அடையாளம் தெரியாம மாறி இருக்கும்.
பதிவைப் படிக்கும் போது மீண்டும் அந்த காலத்துக்கே சென்று விடமாட்டோமா என ஏக்கம் வருகிறது.
எங்களுக்கும் சிறுவயது மலரும் நினைவுகள் மலர்கிறது.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
பானுஷபானா wrote:சூப்பர் நிஷா 5 வயதில் நடந்ததை இவ்வளவு தெளிவா நினைவு வச்சிருக்கிங்க உங்க நினைவாற்றல் அபாரம்...
இப்பொது அந்த வீடு இருக்குமா நிஷா இந்நேரம் பெரிய மாளிகையே கட்டி இருப்பாங்க அந்த இடத்துல போனால் கூட தெருவே அடையாளம் தெரியாம மாறி இருக்கும்.
பதிவைப் படிக்கும் போது மீண்டும் அந்த காலத்துக்கே சென்று விடமாட்டோமா என ஏக்கம் வருகிறது.
எங்களுக்கும் சிறுவயது மலரும் நினைவுகள் மலர்கிறது.
அக்கா 4 வயதிலிருந்து நினைவு உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள் மீண்டும் பாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
1977 ம் ஆண்டு தானே இலங்கையில் சூறாவளி,
அப்ப எனக்கு நான்கு வயது தான் இருக்கும். எனக்கு சூறாவளி நாள் நினைவு இருக்கு ஓடுகள் உடைந்து விழுந்தது, குளத்தில் தண்ணீர் நிரம்பி இருக்க நடந்து போனதெல்லாம் கூட?
தென்னை மரங்கள் விழுந்து.. இளனீர்களும் ,, வழுக்கல்களும், அப்புறம் தென்னம்பாளை வரும் போது குரும்பை போல் வருமல்லவா? அதனுள்ளே இருக்கும் வெள்ளைக்கலர் குரும்பு ரெம்ப சுவை.. நான் அதன் பிறகு அப்படி சாப்பிட்டதில்லை.
அப்ப எனக்கு நான்கு வயது தான் இருக்கும். எனக்கு சூறாவளி நாள் நினைவு இருக்கு ஓடுகள் உடைந்து விழுந்தது, குளத்தில் தண்ணீர் நிரம்பி இருக்க நடந்து போனதெல்லாம் கூட?
தென்னை மரங்கள் விழுந்து.. இளனீர்களும் ,, வழுக்கல்களும், அப்புறம் தென்னம்பாளை வரும் போது குரும்பை போல் வருமல்லவா? அதனுள்ளே இருக்கும் வெள்ளைக்கலர் குரும்பு ரெம்ப சுவை.. நான் அதன் பிறகு அப்படி சாப்பிட்டதில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
Nisha wrote:1977 ம் ஆண்டு தானே இலங்கையில் சூறாவளி,
அப்ப எனக்கு நான்கு வயது தான் இருக்கும். எனக்கு சூறாவளி நாள் நினைவு இருக்கு ஓடுகள் உடைந்து விழுந்தது, குளத்தில் தண்ணீர் நிரம்பி இருக்க நடந்து போனதெல்லாம் கூட?
தென்னை மரங்கள் விழுந்து.. இளனீர்களும் ,, வழுக்கல்களும், அப்புறம் தென்னம்பாளை வரும் போது குரும்பை போல் வருமல்லவா? அதனுள்ளே இருக்கும் வெள்ளைக்கலர் குரும்பு ரெம்ப சுவை.. நான் அதன் பிறகு அப்படி சாப்பிட்டதில்லை.
சூப்பர் தென்னங்குருத்து நல்ல ருஷி ஆனால் கெரந்தி என்று சொல்வார்கள் நானும் நிறையவே சாப்பிட்டிருக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
அதே அதே.. அப்ப சாப்பிட்டது, சுவை இப்பவும் என் நாவில் இருக்கு, கரும்பு போல சுவை, அதன் பின் எங்கும் சாப்பிட வாய்ப்பு கிடைக்கல்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
ஐந்து வயது நினைவுகளை எல்லாம் அப்படியே ஞாபகத்தில் வைத்து அசை போட்டிருக்கிறீர்கள் அக்கா...
சொந்த ஊரில் நாம் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு விலகி அதை மீண்டும் பார்க்க முடியாமல் போவதைவிட வேதனை வேறொன்றும் இல்லை...
எங்கள் வீடு கூட தம்பிக்கு கொடுக்கப்பட்டு இப்போ இடிக்கப்பட்டு விட்டது. நான் என் அண்ணன் மகன் எடுத்து வைத்திருந்த போட்டோவை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். நாங்கள் அண்ணன் தம்பிகள் நால்வரும் (அக்காள்கள் இதில் கலக்க மாட்டார்கள்) அம்மா மடியில் தலைவைத்து படுத்திருப்போம். ஒருவர் மீது ஒருவர் தலைவைத்துப் படுத்திருப்போம்.
என் சட்டையை அண்ணன் போடுவார்... அவர் சட்டையை நான் போடுவேன்.. இப்படித்தான் இருந்தோம்... இப்ப காலம் நிறைய பிரிச்சி வச்சிடுச்சு... என்னத்தைச் சொல்ல...
விளையாட்டுக்கள், பெரியம்மா பெரியப்பாவிடம் ஒட்டுதல், அம்மா தங்கைகளுடன் போட்டோ என பதிவில் பாசம் மிளிர்கிறது...
அட அப்பவும் ஒரு குமார் உங்க தோழனாய் விளையாடியிருக்கான்.... அதான் இப்பவும் தொடருது போல இந்தக் குமார் ரூபத்துல...
பாடல்கள் நன்று.

சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
ஹாஹா! ஆமாம்ல! நீங்க சொல்லும் வரை நான் யோசிக்கவே இல்லையே!
குமார்,
செல்வகுமார் ..? குமார் எனும் பெயர் தொடர்கதையோ?
எனக்கும் ஆச்சரியம் அது தான் குமார். இத்தனை நினைவிருக்குமெனக்கு என் தங்கைகள் குறித்த சின்ன வயது நினைவு ஏதும் இல்லை. தம்பி பிறந்த பின் தான் அனைத்தும் நினைவில் இருக்கின்றது. ஏன் என்பது புதிர் தான்?
குமார்,
செல்வகுமார் ..? குமார் எனும் பெயர் தொடர்கதையோ?
எனக்கும் ஆச்சரியம் அது தான் குமார். இத்தனை நினைவிருக்குமெனக்கு என் தங்கைகள் குறித்த சின்ன வயது நினைவு ஏதும் இல்லை. தம்பி பிறந்த பின் தான் அனைத்தும் நினைவில் இருக்கின்றது. ஏன் என்பது புதிர் தான்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
சே.குமார் wrote:ஐந்து வயது நினைவுகளை எல்லாம் அப்படியே ஞாபகத்தில் வைத்து அசை போட்டிருக்கிறீர்கள் அக்கா...
சொந்த ஊரில் நாம் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு விலகி அதை மீண்டும் பார்க்க முடியாமல் போவதைவிட வேதனை வேறொன்றும் இல்லை...
எங்கள் வீடு கூட தம்பிக்கு கொடுக்கப்பட்டு இப்போ இடிக்கப்பட்டு விட்டது. நான் என் அண்ணன் மகன் எடுத்து வைத்திருந்த போட்டோவை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். நாங்கள் அண்ணன் தம்பிகள் நால்வரும் (அக்காள்கள் இதில் கலக்க மாட்டார்கள்) அம்மா மடியில் தலைவைத்து படுத்திருப்போம். ஒருவர் மீது ஒருவர் தலைவைத்துப் படுத்திருப்போம்.
என் சட்டையை அண்ணன் போடுவார்... அவர் சட்டையை நான் போடுவேன்.. இப்படித்தான் இருந்தோம்... இப்ப காலம் நிறைய பிரிச்சி வச்சிடுச்சு... என்னத்தைச் சொல்ல...
விளையாட்டுக்கள், பெரியம்மா பெரியப்பாவிடம் ஒட்டுதல், அம்மா தங்கைகளுடன் போட்டோ என பதிவில் பாசம் மிளிர்கிறது...
அட அப்பவும் ஒரு குமார் உங்க தோழனாய் விளையாடியிருக்கான்.... அதான் இப்பவும் தொடருது போல இந்தக் குமார் ரூபத்துல...
பாடல்கள் நன்று.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
அக்காவுக்கு தம்பி மேல்தான் அதிக பாசம் போல...Nisha wrote:ஹாஹா! ஆமாம்ல! நீங்க சொல்லும் வரை நான் யோசிக்கவே இல்லையே!
குமார்,
செல்வகுமார் ..? குமார் எனும் பெயர் தொடர்கதையோ?
எனக்கும் ஆச்சரியம் அது தான் குமார். இத்தனை நினைவிருக்குமெனக்கு என் தங்கைகள் குறித்த சின்ன வயது நினைவு ஏதும் இல்லை. தம்பி பிறந்த பின் தான் அனைத்தும் நினைவில் இருக்கின்றது. ஏன் என்பது புதிர் தான்?
நீங்களே தூக்கி வளர்த்திருப்பீர்கள்... அதான்...
குமார்...
செல்வகுமார்...
அடுத்து
எந்தக் குமார்...???
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
பசுமையான நினைவுகளை ஒன்று விடாமல் எங்களுடன் பகிர்ந்தளிக்கு மட்டக்களப்பின் மாங்குயிலே உங்கள் நினைவுத்திறணை எண்ணி வியக்கிறேன் மிகவும் சந்தோசமாக உள்ளது உங்கள் நினைவுகளைப் படிக்கும் போது
எனக்கும் பல நினைவுகள் உள்ளது ஆனால் உங்களைப் போன்று எழுத மட்டும் என்னால் முடியாது முயற்ச்சிக்கிறேன் முடிந்தால் நானும் எழுதுகிறேன்
நன்றியுடன் நண்பன்
எனக்கும் பல நினைவுகள் உள்ளது ஆனால் உங்களைப் போன்று எழுத மட்டும் என்னால் முடியாது முயற்ச்சிக்கிறேன் முடிந்தால் நானும் எழுதுகிறேன்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
சே.குமார் wrote:அக்காவுக்கு தம்பி மேல்தான் அதிக பாசம் போல...Nisha wrote:ஹாஹா! ஆமாம்ல! நீங்க சொல்லும் வரை நான் யோசிக்கவே இல்லையே!
குமார்,
செல்வகுமார் ..? குமார் எனும் பெயர் தொடர்கதையோ?
எனக்கும் ஆச்சரியம் அது தான் குமார். இத்தனை நினைவிருக்குமெனக்கு என் தங்கைகள் குறித்த சின்ன வயது நினைவு ஏதும் இல்லை. தம்பி பிறந்த பின் தான் அனைத்தும் நினைவில் இருக்கின்றது. ஏன் என்பது புதிர் தான்?
நீங்களே தூக்கி வளர்த்திருப்பீர்கள்... அதான்...
குமார்...
செல்வகுமார்...
அடுத்து
எந்தக் குமார்...???
அதென்னமோ நிஜம். தம்பி இப்பவும் இதை சொல்வான். நான் என் 12, 13 வயதில் அவனை குளிப்பாட்டி, காலையில் எழும்பி சமைத்து சாப்பாடு ஊட்டி விடுவது பாடம் சொல்லி கொடுப்பது என.. கடைசி தங்கையும் தம்பியும் மற்ற மூவரை விட அதிக காலம் என்னுடன் இருந்தார்கள்.
தம்பி என் சகோதரன் என்பதை விட நான் வயிற்றில் சுமக்காத என் மகன். அவன் என்னை உதைத்தாலும் எனக்கு வலிக்காது. அவன் எனக்கு கப்ரியேல் போல் தான் என் மகன். அவனை நான் தம்பி என்பதில்லை என்பது கண்ணா,செல்லா என தான் அழைப்பேன், என் மகனே தான். ஐ லவ் மை தம்பி. எப்படியும் இந்த வருடம் அவனை போய் பார்க்கணும், மனசு கஷ்டப்படுறான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
என்ன தான் ஆனாலும் நாம் சிறுவயதில் விளையாடிய இடம் ஊர் எப்போதுமே நம் நினைவில் நிலைத்திருக்கும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஆல்ப்ஸ் தென்றலில்.....நான் சிரித்தால் தீபாவளி!
» ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!
» ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3
» ஆல்ப்ஸ் தென்றலில்---தமிழ்க்'கனம்' வேண்டாமே!
» நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum