Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
+7
கவிப்புயல் இனியவன்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
ahmad78
ராகவா
Nisha
11 posters
Page 1 of 9
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
நான் சின்னவளாய் இருந்தபோது...
நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.
அப்படி ஒருசில பாடல்களை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..
பகிர்ந்துகட்டுமா... அப்படியே அவங்கவங்க அவங்கவங்க வீட்டில் இருக்கும் குட்டிபசங்களுக்கு சொல்லி கொடுக்கணுமாம்..

Last edited by Nisha on Sun 13 Jul 2014 - 23:39; edited 2 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
ஓடு
ஓடு ஓடு ----!
என்ன ஓடு ? நண்டோடு
என்ன நண்டு ? பால்நண்டு
என்ன பால்? கள்ளிப்பால்.
என்ன கள்ளி? சதுரக்கள்ளி
என்ன சதுரம் ? நாய்ச்சதுரம்
என்ன நாய்? வேட்டைநாய்.
என்ன வேட்டை? பன்றிவேட்டை.
என்ன பன்றி? ஊர்ப்பன்றி,
என்ன ஊர்? கீரனூர்.
என்ன கீரை? அறைக்கீரை
என்ன அறை? பொன்னறை.
என்ன பொன்? காக்காய்ப்பொன்.
என்ன காக்காய்? அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? சோற்றண்டம்.
என்ன சோறு? பழஞ்சோறு.
என்ன பழம்? வாழைப்பழம்.
என்ன வாழை? கருவாழை.
என்ன கரு? நத்தைக்கரு.
என்ன நத்தை? குளத்துநத்தை
என்ன குளம்? பெரியகுளம்
ஓடு ஓடு ----!
என்ன ஓடு ? நண்டோடு
என்ன நண்டு ? பால்நண்டு
என்ன பால்? கள்ளிப்பால்.
என்ன கள்ளி? சதுரக்கள்ளி
என்ன சதுரம் ? நாய்ச்சதுரம்
என்ன நாய்? வேட்டைநாய்.
என்ன வேட்டை? பன்றிவேட்டை.
என்ன பன்றி? ஊர்ப்பன்றி,
என்ன ஊர்? கீரனூர்.
என்ன கீரை? அறைக்கீரை
என்ன அறை? பொன்னறை.
என்ன பொன்? காக்காய்ப்பொன்.
என்ன காக்காய்? அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? சோற்றண்டம்.
என்ன சோறு? பழஞ்சோறு.
என்ன பழம்? வாழைப்பழம்.
என்ன வாழை? கருவாழை.
என்ன கரு? நத்தைக்கரு.
என்ன நத்தை? குளத்துநத்தை
என்ன குளம்? பெரியகுளம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
பொங்கலோ பொங்கல்
என்னா பொங்கல் - சக்கரப் பொங்கல்
என்ன சக்கர - நாட்டு சக்கர
என்னா நாடு - வடநாடு
என்னா வட - ஆம வட
என்னா ஆம - குளத்தாம
என்னா குளம் - திரி குளம்
என்னா திரி - விளக்குத்திரி
என்னா விளக்கு - குத்துவிளக்கு
என்னா குத்து - கும்மாங்குத்து
என்னா பொங்கல் - சக்கரப் பொங்கல்
என்ன சக்கர - நாட்டு சக்கர
என்னா நாடு - வடநாடு
என்னா வட - ஆம வட
என்னா ஆம - குளத்தாம
என்னா குளம் - திரி குளம்
என்னா திரி - விளக்குத்திரி
என்னா விளக்கு - குத்துவிளக்கு
என்னா குத்து - கும்மாங்குத்து
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
ஆண்டி ஆண்டி
ஆண்டி ஆண்டி.........
என்ன ஆண்டி? பொன்னாண்டி.
என்ன பொன்? காக்காய்ப்பொன்.
என்ன காக்காய்? அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? பூஅண்டம்
என்ன பூ? பனம்பூ
என்ன பனை? தாள்ப்பானை
என்ன தாள்? நாகதாள்
என்ன நாகம்? சுத்தநாகம்
என்ன சுத்தம்? வீட்டுச் சுத்தம்
என்ன வீடு? ஓட்டுவீடு
என்ன ஓடு? பாலோடு
என்ன பால்? நாய்ப்பால்
என்ன நாய்? வேட்டைநாய்
என்ன வேட்டை? பன்றிவேட்டை
என்ன பன்றி? ஊர்ப்பன்றி
என்ன ஊர்? கீரையூர்
என்ன கீரை? அறைக்கீரை
என்ன அறை? பள்ளியறை
என்ன பள்ளி? மடப்பள்ளி
என்ன மடம்? ஆண்டிமடம்
என்ன ஆண்டி? பொன்னாண்டி
ஆண்டி ஆண்டி.........
என்ன ஆண்டி? பொன்னாண்டி.
என்ன பொன்? காக்காய்ப்பொன்.
என்ன காக்காய்? அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? பூஅண்டம்
என்ன பூ? பனம்பூ
என்ன பனை? தாள்ப்பானை
என்ன தாள்? நாகதாள்
என்ன நாகம்? சுத்தநாகம்
என்ன சுத்தம்? வீட்டுச் சுத்தம்
என்ன வீடு? ஓட்டுவீடு
என்ன ஓடு? பாலோடு
என்ன பால்? நாய்ப்பால்
என்ன நாய்? வேட்டைநாய்
என்ன வேட்டை? பன்றிவேட்டை
என்ன பன்றி? ஊர்ப்பன்றி
என்ன ஊர்? கீரையூர்
என்ன கீரை? அறைக்கீரை
என்ன அறை? பள்ளியறை
என்ன பள்ளி? மடப்பள்ளி
என்ன மடம்? ஆண்டிமடம்
என்ன ஆண்டி? பொன்னாண்டி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
"கண்ணாமூச்சி டேடே
காட்டுமூச்சி டேடே
உனக்கொரு பழம் எனக்கொரு பழம்
கொண்டுவா"
காட்டுமூச்சி டேடே
உனக்கொரு பழம் எனக்கொரு பழம்
கொண்டுவா"
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
எத்தனை வயதாலும் நாம் நம் சிறுவயதின் நினைவுகளை மறந்திட முடியாதல்லவா.. அப்படித்தான் என் நினைவுகள்.. என் தமிழ் மொழியுடனான பள்ளி வாழ்வெனவது என் 12- 13 வயதி்ன் பின் தட்டி தடுமாறித்தான் சென்றது.. ஆனால அந்த 12. 13 வயதிலேயே நான் முழு வாழ்க்கைகுமாக பெறவேண்டிய மகிழ்ச்சியை அடைந்திருப்பேன்..
பாடசாலை நாள் என்பது எனக்கு இனிக்கும் நினைவலைகள் தான்.
நான்காம்,ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலே நானும் என் தோழிகளும் பாடசாலை இடைவேளைக்காகவே காத்திருப்போம். என் வகுப்பில் ஆண்பெண் இணைந்து படித்தாலும் பெண்கள் மட்டுமே சேர்ந்து விளையாடகூடிய விளையாட்டில் ஆண்களும்கல்ந்து கொள்வார்கள். அப்படிபட்ட ஒரு விளையாட்டு தான் பெண்களுக்கான பூப்பறிக்க போகிறோம் எனும் பாடலுடன் கூடிய விளையாட்டு.
குறைந்தது 20- 26 பேர் சுற்றி வர பெரிய வட்டமாக நெருங்கி உட்கார்ந்து கொள்ள வேண்டும். யாரும் பின்பக்கம் திரும்பி பார்க்க கூடாது.. விளையாட்டின் ஆரம்பத்தில் ஒருவர் தெரிந்தெடுக்கப்ட்டு அவர் கையில் ஒரு மலர் கொத்து கொடுக்கபடும். அது மலரோ ஆலமர இலையோ வம்மி மர காயோ பூவரசம் தடியோ எதுவானாலும் அது தான் அந்த வயதில் பூ...
பூவை கையில் வைத்திருப்பவர் பாட வேண்டும். பாடிக்கொண்டே வட்டமாக அமர்ந்திருப்பவர்களை சுத்தி ஓடவும் வேண்டும்..
பூப்பறிக்க போகிறோம்..போகிறோம்.. போகிறோம்..
என சுத்தி சுத்தி ஓடிக்கொண்டே பாட.. அமர்ந்திருப்போர் எதிர்க்கேள்வியாக
யாரைபறிக்க போகிறீர் போகிறீர்
என கேட்க வேண்டும்..
ஓடுபவர் சிறிது நேரம் அமைதியாக சுத்தி சுத்தி ஓடிய படியே தம் கையில் இருக்கும் மலர்கொத்தை யாராவது ஒருத்தர் பின்னால் மொதுவாக வைத்டு விடுட் ஓடிகொண்டிருக வேண்டும். அவர் விரும்பினால் யார் பின்னால் தான் மலர்கொத்தை வைத்தாரோ அவர் த்ன்னை எந்த பக்கத்தாலும் துரததிப் பிடிக்க முடியாத இடத்தில் ஓடிய படியே..
தும்பீயை பிடிக்க போகிறோம் போகிறோம்
என சொல்லி ஓடினால் அந்த நபர் உடனே திரும்பி பார்த்து மலர்கொத்தி்னை எடுத்து கொண்டு முன்னால் ஓடுபவரை அந்த மலரால் தொட முயற்சிக்க வேண்டும். ஆனால் முன்னால் ஓடுபவர் பின்னால் வருபவர் இடத்தில் போய் உட்கார்ந்து வட்டத்தை நிரப்பி விட்டால் மீண்டும் விளையாட்டு ஆரம்பமாகும்.
அதே நேரம் முன்னால் ஓடுபவரை பின்னால் வருபவர் மலரால் தொட்டு விட்டால் மீண்டும் முன்னவரே ஆரம்பிக்க வேண்டும்.
இப்படி நாள் முழுதும் சுவாரஷ்யமாக ஒவ்வொரு பூவின் பெயரோடும் நண்பர்கள் பெயரோடும் விளையாடுவோம்.
அது ஒரு பொற்காலம்தான்...
யாருக்காவது நினைவில் வருகின்றதா?

Last edited by Nisha on Sun 13 Jul 2014 - 23:16; edited 3 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
தம்பி தம்பி
என்ன வேண்டும்?
பழம் வேண்டும்
என்ன பழம்?
பலாப்பழம்
என்ன பலா?
வேர்ப்பலா
என்ன வேர்?
வெட்டி வேர்
என்ன வெட்டி?
விறகு வெட்டி
என்ன விறகு?
மர விறகு
என்ன மரம்
மா மரம்
என்ன மா?
அம்மா
என்ன அம்மா
டீச்சரம்மா
என்ன டீச்சர்
கணக்கு டீச்சர்
என்ன கணக்கு
வீட்டு கணக்கு
என்ன வீடு
மாடி வீடு
என்ன மாடி
மொட்ட மாடி
என்ன மொட்டை
பழனி மொட்டை
என்ன பழனி
வட பழனி
என்ன வட
ஆமை வட
என்ன ஆமை
கொளத்து ஆமை
என்ன கொளம்
திரி கொளம்
என்ன திரி
வெளக்குத் திரி
என்ன வெளக்கு
குத்து வெளக்கு
என்ன குத்து
கும்மாங் குத்து
என்ன வேண்டும்?
பழம் வேண்டும்
என்ன பழம்?
பலாப்பழம்
என்ன பலா?
வேர்ப்பலா
என்ன வேர்?
வெட்டி வேர்
என்ன வெட்டி?
விறகு வெட்டி
என்ன விறகு?
மர விறகு
என்ன மரம்
மா மரம்
என்ன மா?
அம்மா
என்ன அம்மா
டீச்சரம்மா
என்ன டீச்சர்
கணக்கு டீச்சர்
என்ன கணக்கு
வீட்டு கணக்கு
என்ன வீடு
மாடி வீடு
என்ன மாடி
மொட்ட மாடி
என்ன மொட்டை
பழனி மொட்டை
என்ன பழனி
வட பழனி
என்ன வட
ஆமை வட
என்ன ஆமை
கொளத்து ஆமை
என்ன கொளம்
திரி கொளம்
என்ன திரி
வெளக்குத் திரி
என்ன வெளக்கு
குத்து வெளக்கு
என்ன குத்து
கும்மாங் குத்து
இது எனக்கு ஞாபகம் இருக்கு....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
“சாஞ்சாடம்மா சாஞ்சாடு
சாயக்கிளியே சாஞ்சாடு
குத்து விளக்கே சாஞ்சாடு
கோயில் புறாவே சாஞ்சாடு
மானே மயிலே சாஞ்சாடு
மரகதக் கிளியே சாஞ்சாடு
கண்ணே மணியே சாஞ்சாடு
கட்டிக் கரும்பே சாஞ்சாடு
மயிலே குயிலே சாஞ்சாடு
மடியில் வந்து சாஞ்சாடு”
நான் சின்னவனாக இருந்தபோது விளையாடிய என் தாய்....
இன்னும் இருக்கு...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
அம்மா குத்து,
அப்பா குத்து,
பாட்டி குத்து,
பேரன் குத்து
பிள்ளையார் குத்து,
பிடிசிக்கோ குத்து.
இந்த பிடிச்சிக்கோ குத்து சொல்லும்பொழுது குழந்தை கையைப் பிடித்துக்கொள்ள வேண்டும். மாற்றி, மாற்றி விளையாடலாம். பிடிக்காமல்விட்டால் அவரின் முறை மாறும். சிறுவர், சிறுமிகளும் விளையாடும் பொழுதுபோக்கு விளையாட்டு.....இன்னும் ஞாபகம் இருக்கு..

வகுப்பில் அல்லது மாலை நேரத்தில் தோழிகளோடு ஒன்று சேரும் போது..மணலில் வீடு கட்டி , அங்கேயே மணல் சோறுகறி சமைத்து சாப்பிட்ட காலங்கள் இனிப்பானவையே.. நான் படித்த பாடசாலை முன்பாக ஒரு பெரிய வம்மி மரம் அகன்று விரிந்து வளர்ந்து நிழல் கொடுத்து கொண்டிருக்கும். அந்த நிழல் தான் எமது விளையாட்டு திடல்..
வம்மி மர நிழல்.. வம்மி மரம் பூக்கும் காலங்களும் அந்த பூக்கள் குண்டு குண்டாக பூத்து குலுங்கும் அழகும், அதை எட்டிப்பறித்து கையால் பிடிக்கும் போது மிக மெதுமையாக இருபதனால அதை பந்து போல் உருட்டி விளையாடியதும்.. அதே வம்மி மர இலை அம்மன்கோயிலில் யாராவது நேர்த்தி கடனுக்காய் பொங்கலிட்டால் பொங்கல் வாங்கிச்சாப்பிட தட்டாவதும்.. ஆலம் விழுதில் ஊஞ்சலாடியதும்.. கள்ளன் பொலிஸ் விளையாட்டில் ஆலமர விழுதுகளும அதன் வேர்களுமே எமக்கு மறைவிடமாகியதும் மறகக் முடியாத இனிய நினைவுகள்.
நம் பால்யகால நினைவுகளை கிளரும் இன்னொரு பாடல்...வார்த்தையாடல் எவ்வளவு அழகாக வந்து விழுகின்றது
நீ எங்கே போனாய்?
ஊருக்குப் போனேன்.
என்ன ஊர்? மயிலாப்பூர்
என்ன மயில்? காட்டுமயில்
என்ன காடு? ஆறுகாடு
என்ன ஆறு? பாலாறு
என்ன பால்? கள்ளீப்பால்
என்ன கள்ளி? இலைக்கள்ளி
என்ன இலை? வாழைஇலை
என்ன வாழை? கற்பூர வாழை
என்ன கற்பூரம்? ரசக்கற்பூரம்
என்ன ரசம்? மிளகு ரசம்
என்ன மிளகு? வால்மிளகு
என்ன வால்? நாய்வால்
என்ன நாய்? மரநாய்
என்ன மரம்? பலாமரம்
என்ன பலா? வேர்ப்பலா
என்ன வேர்? வெட்டிவேர்
என்ன வெட்டி? பனைவெட்டி
என்ன பனை? தாள்பனை
என்ன தாளி? விருந்தாளிi
என்ன விருந்து? நிலாவிருந்து
என்ன நிலா? பிறைநிலா
என்ன பிறை? நெற்றிப்பிறை
என்ன நெற்றி? பெண்நெற்றி
என்ன பெண்? மணப்பெண்
என்ன மணம்? பூமணம்
என்ன பூ? மாம்பூ
என்ன மா? அம்மா.
பொதுவாகவே ஏட்டிக்குப்போட்டியாக பேசும் போது வாயாடி எனும் பட்டம் தானாகவே ஒட்டிகொள்ளும். ஆனால் அன்றைய காலகட்டத்தில் வழிவழியாக வந்த பாடல்கள் ஏட்டிக்குபோட்டியாக கேள்விக்கு எதிர்கேள்வியொடு வருவதையும் அவதானித்தால் நம் முன்னோர்கள் நமக்கென விட்டு சென்ற பல அரிய பொக்கிஷங்களை நாம் என்ன செய்ய போகிறோம் எனும் கேள்வி ஏழாமல் இல்லை.
நம் நிகழ்கால சந்ததி இழந்திருப்பவை
எதிர்கால சந்ததி இழக்கபோவது
என்ன எனும் பாரிய கேள்வி என் மனதில் எழாமல் இல்லை...

அந்நாட்களில் சின்னஞ்சிறு மழலைகளுக்கு கணக்கு சொல்லி கொடுக்கும் விதமே தனி.
பெரும்பாலான பாடல்கள் கொச்சைத்தமிழில் தான் சொல்லப்படும்.
ஒண்டு, ரெண்டு மூண்டு இப்படி பாடுவோம். தட்டச்சிடும் போது அதை தவிர்க்க முயற்சிக்கிறேன்.
கையில் இருக்கும் விரல்களை விரித்து காட்டியபடியே
ஒன்றும் ஒன்றும் இரண்டு.
இரண்டும் ஒன்றும் மூன்று
மூன்றோடு ஒன்றைசேர்த்தால் நான்கு
நான்கும் ஒன்றும் ஐந்து
உந்தன் கையைத்தட்டு
என முதல் ஐந்து இலக்கங்களை கைவிரல்களைக் காட்டியே கற்பிப்பார்கள்
அதே வரிசையில் இன்னும் சில பாடல்கள்..
ஒண்ணு,ரெண்டு மூணு
ஒணான் என்றே கூறு
நாலு அஞ்சு ஆறு
மரத்தின் மேலே பாரு
ஏழு எட்டு ஒன்பது
என்ன அதன் பேரு
ஒணான் என்றே கூறு
பெரும்பாலான பாடல்கள் கொச்சைத்தமிழில் தான் சொல்லப்படும்.
ஒண்டு, ரெண்டு மூண்டு இப்படி பாடுவோம். தட்டச்சிடும் போது அதை தவிர்க்க முயற்சிக்கிறேன்.
கையில் இருக்கும் விரல்களை விரித்து காட்டியபடியே
ஒன்றும் ஒன்றும் இரண்டு.
இரண்டும் ஒன்றும் மூன்று
மூன்றோடு ஒன்றைசேர்த்தால் நான்கு
நான்கும் ஒன்றும் ஐந்து
உந்தன் கையைத்தட்டு
என முதல் ஐந்து இலக்கங்களை கைவிரல்களைக் காட்டியே கற்பிப்பார்கள்
அதே வரிசையில் இன்னும் சில பாடல்கள்..
ஒண்ணு,ரெண்டு மூணு
ஒணான் என்றே கூறு
நாலு அஞ்சு ஆறு
மரத்தின் மேலே பாரு
ஏழு எட்டு ஒன்பது
என்ன அதன் பேரு
ஒணான் என்றே கூறு
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
ஒன்றும் ஒன்றும் இரண்டு
பூவில் இருப்பது வண்டு
இரண்டும் இரண்டும் நான்கு
இனிப்பாய் இருக்கும் தேங்காய்
மூன்றும் முன்றும் ஆறு
வேலைசெய்தால் சோறு.
நான்கும் நான்கும் எட்டு
நன்றாய் பாடுவாள் பட்டு
ஐந்தும் ஐந்தும் பத்து
அன்பே நமக்கு சொத்து
பூவில் இருப்பது வண்டு
இரண்டும் இரண்டும் நான்கு
இனிப்பாய் இருக்கும் தேங்காய்
மூன்றும் முன்றும் ஆறு
வேலைசெய்தால் சோறு.
நான்கும் நான்கும் எட்டு
நன்றாய் பாடுவாள் பட்டு
ஐந்தும் ஐந்தும் பத்து
அன்பே நமக்கு சொத்து
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
எண் வரிசை பாடல்கள் தொடரும் அழகே தனிதான்..
இப்பாடலின் வார்த்தையாடலைக்கவனித்தால் ஒவ்வொரு வார்த்தையையும் நம் மூதாதையர் எப்படி அறிவுபூர்வமாக இணைத்திருப்பார்கள் என புரியும்.
கொக்குச்சிக் கொக்கு
ரெட்டை சிலாக்கு
முக்குச் சிலந்தி
நாக்குலா வரணம்
ஐயப்பன் சோலை
ஆறுமுக தாளம்
ஏழுக்குக் கூழு
எட்டுக்கு முட்டி
ஒன்பது கம்பளம்
பத்துப் பழம் சொட்டு

இன்னும் சில வினா விடைபாடல்கள்.
நிலாநிலா
எங்கே போறாய்?
மண் எடுக்கப் போறேன்.
மண் என்னத்துக்கு?
சட்டிபானை செய்ய.
சட்டிபானை என்னத்துக்கு?
சோறாக்கித் தின்ன.
அதே வரிசையில்
நிலாநிலா
எங்கெங்கேபோனாய் ?
களிமண்ணுக்குப் போனேன்.
களிமண் என்னத்துக்கு? வீடு கட்ட.
வீடு என்னத்துக்கு? மாடு கட்ட.
மாடு என்னத்துக்கு? சாணி போட.
சாணி என்னத்துக்கு? வீடுமெழுக.
வீடு என்னத்துக்கு? பிள்ளைபெற.
பிள்ளை என்னத்துக்கு?
எண்ணெய்க் குடத்திலே போட்டுப்
பிள்ளை துள்ளித் துள்ளி விளையாட
நிலாநிலா
எங்கே போறாய்?
மண் எடுக்கப் போறேன்.
மண் என்னத்துக்கு?
சட்டிபானை செய்ய.
சட்டிபானை என்னத்துக்கு?
சோறாக்கித் தின்ன.
அதே வரிசையில்
நிலாநிலா
எங்கெங்கேபோனாய் ?
களிமண்ணுக்குப் போனேன்.
களிமண் என்னத்துக்கு? வீடு கட்ட.
வீடு என்னத்துக்கு? மாடு கட்ட.
மாடு என்னத்துக்கு? சாணி போட.
சாணி என்னத்துக்கு? வீடுமெழுக.
வீடு என்னத்துக்கு? பிள்ளைபெற.
பிள்ளை என்னத்துக்கு?
எண்ணெய்க் குடத்திலே போட்டுப்
பிள்ளை துள்ளித் துள்ளி விளையாட
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
ஒரு கொத்து ஈச்சங்கொட்டை வறுத்துகொட்டி
ஒன்பதுபேராகக் கூடிகுத்தி
கல்லடிநாச்சிக்குக் கல்யாணமாம்
கருகப்பிலையால் தாலிகட்டி.
என்னதாலி... பொன்தாலி-
என்னபொன்.... காக்காப்பொன்
என்னகாக்கா....அண்டங்காக்கா
என்னஅண்டம...பனையண்டம்
என்னபனை....ஓட்டுப்பனை
என்னஓடு....ஆமைஓடு
என்னஆமை.....பாலாமை
என்னபால்...கள்ளிப்பால்
என்னகள்ளி....சதுரக்கள்ளி
என்னசதுரம.....நாய்ச்சதுரம்
என்னநாய.....வேட்டைநாய்
என்ன வேட்டை....பன்றிவேட்டை
என்னபன்றி....ஊர்பன்றி
என்னஊர்.....கீரையூர்
என்னகீரை....மண்டூர்க்கீரை
என்னமண்டூர்....தில்லைமண்டூர்
தில்லைமண்டூருக்குப் போவோமடி
ஒன்பதுபேராகக் கூடிகுத்தி
கல்லடிநாச்சிக்குக் கல்யாணமாம்
கருகப்பிலையால் தாலிகட்டி.
என்னதாலி... பொன்தாலி-
என்னபொன்.... காக்காப்பொன்
என்னகாக்கா....அண்டங்காக்கா
என்னஅண்டம...பனையண்டம்
என்னபனை....ஓட்டுப்பனை
என்னஓடு....ஆமைஓடு
என்னஆமை.....பாலாமை
என்னபால்...கள்ளிப்பால்
என்னகள்ளி....சதுரக்கள்ளி
என்னசதுரம.....நாய்ச்சதுரம்
என்னநாய.....வேட்டைநாய்
என்ன வேட்டை....பன்றிவேட்டை
என்னபன்றி....ஊர்பன்றி
என்னஊர்.....கீரையூர்
என்னகீரை....மண்டூர்க்கீரை
என்னமண்டூர்....தில்லைமண்டூர்
தில்லைமண்டூருக்குப் போவோமடி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
இந்தப்பாடல் கூட எல்லோருக்கும் நினைவில் வரும்.
ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கமுட்டை வைத்தாய்..
கல்லைபிளந்து கடலருகேமுட்டைவைத்தேன்
வைத்ததுமோ மூண்டுமுட்டை பொரித்ததுமோ ரெண்டுகுஞ்சு
மூத்தகுஞ்சுக்கிரைதேடி மூனுமலைசுற்றிவந்தேன்.
இளையகுஞ்சுக்கு இரைதேடி ஏழமலைசுற்றிவந்தேன்
ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கமுட்டை வைத்தாய்..
கல்லைபிளந்து கடலருகேமுட்டைவைத்தேன்
வைத்ததுமோ மூண்டுமுட்டை பொரித்ததுமோ ரெண்டுகுஞ்சு
மூத்தகுஞ்சுக்கிரைதேடி மூனுமலைசுற்றிவந்தேன்.
இளையகுஞ்சுக்கு இரைதேடி ஏழமலைசுற்றிவந்தேன்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
கடலை கடலை
என்ன கடலை...... உருண்டைக் கடலை
என்னவுருன்டை...... மாவுருண்டை
என்ன மா.....என்னம்மா
வாழைப்பழம்:......
என்னவாழை:.....கப்பல்வாழை
என்னகப்பல்: .......பாய்க்கப்பல்
என்னபாய்: பன்பாய்
என்னபன்:.....குளத்துபன்:
என்னகுளம்: கிரான்குளம்
என்ன கடலை...... உருண்டைக் கடலை
என்னவுருன்டை...... மாவுருண்டை
என்ன மா.....என்னம்மா
வாழைப்பழம்:......
என்னவாழை:.....கப்பல்வாழை
என்னகப்பல்: .......பாய்க்கப்பல்
என்னபாய்: பன்பாய்
என்னபன்:.....குளத்துபன்:
என்னகுளம்: கிரான்குளம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
சுண்டெலிராசனுக்குக் கலியாணமாம்
சோழன்கொட்டைப் பல்லைக்காட்டிசிரித்தார்
இரண்டெலிகூடிக்கொண்டு முக்காலிவைக்குதாம்
நாலெலிகூடிக்கொண்டு முக்காலிவைக்குதாம்
ஜந்தெலிகூடிக்கொண்டு மஞ்சள்அரைக்குதாம்.
ஆறெலிகூடிக்கொண்டு அரிசிஅரிக்குதாம்
ஏழெலிகூடிக்கொண்டு எள்ளுவிளக்குதாம்
எட்டெலிகூடிக்கொண்டு வட்டாரம்போடுதாம்
அதில் ஒரு கிழட்டெலிஒடிவந்து பெண்னை தூக்கிற்றுப்போகுதாம்

எல்லாம் இருக்க ,அந்த கால கிரிக்கெட் என்ன தெரியுமா. கிட்டிபுள் விளையாட்டு தான்.
திறந்த வெளியில் மண்ணில் ஒரு சிறிய கிடங்கு கிண்டி அதில் இருமுனைகளிலும் நன்றாக சீவப்பட்ட சிறிய புள்ளை வைத்து அதை கொட்டனால் தூக்கியெறிந்து அதை பலரோ சிலரோ மறித்து அதை திரும்பவும் அதை கிடங்கு நோக்கி அந்த புள் விழுந்த இடத்திலிருந்து எறிவர், அப்போது அதை திருப்பி அடிப்பதும் அதற்கு "மறுத்தான்" கேட்பதுமாக அந்த விளையாட்டு தொடரும்
புள் திரும்ப வீசும்போது புள்ளை அடித்தால் அடித்தவர் தன் புள்ளிக்கணக்கை பத்து மடங்கால் பெருக்கி எடுத்து கூட்டிகொள்ளலாம் என்பது கதை வேறு.அதை விட "டபிள்" "றிபிள்" என்று எல்லாம் புள்ளை கொட்டனால் தூக்கி எடுத்து தட்டி புள்ளிக்கணக்கை அந்த மடங்காலே பெருக்கியும் தங்கள் கணக்கை கூட்டி கொள்வர்.அப்படியே அந்த கணக்கு கூடி கூடி அது ஒருகுறிப்பிட்ட கணக்கை தாண்டி விட்டால் அதை "கிளம்பி" என்று சொல்வார்கள் பின்னர் ஆட்டமிழந்தாலும் இன்னொருமுறை ஆட முடியும். அது கதை வேறு, அதை விட மறுத்தான் அடிக்கப்படும்போது பிடி எடுக்கப்பட்டால் அது அந்த குழுவிலுள்ள அனைவரையுமே ஆட்டமிழக்கசெய்யும் என்ற சோகக்கதை வேறு.
இந்த விளையாட்டில் கணக்கு பார்க்கிற விசயமும் ரொம்ப முக்கியம்,கணக்கை கூட்டிச்சொல்லும்போது தடுமாறிவிட்டால் அதை எதிர்தரப்பினர் கூழ் ஆக்கி விடுவார்கள்,அதன் பின் திரும்ப தன் கணக்கை ஆரம்பிக்கவேண்டும்,அது பெரிய தலையிடி
ஆலையிலே சோலையிலே
ஆலம்பாடி சந்தையிலே
கிட்டிப்புள்ளூம் பம்பரமும்
கிறுக்கியடி பாலாறு பாலாறு பாலாறு
என்று சொல்லியபடியோ அல்லது "கூகூகூஊஊஊஊஊஊ"
அந்த புள் சென்ற இடத்திலுருந்து ஓடியபடி வரவேண்டும். எதிர்த்தரப்பினர் எதை செய்யச்சொல்லி கேட்பார்களோ அதை செய்யவேண்டும்
இது பெரும்பாலும் கோடைகாலத்தில் விளையாடப்படுவதை அவதானிக்க முடியும்.
கிட்டிபுள் விளையாடும் முறை தெரிந்தவர்களுக்கு அது ஏன் என்றுதெரிந்திருக்கலாம்.ஏன் கோடை காலத்தில் பொதுவாக விளையாடப்படுகிறதுவெனில் கிண்டப்படும் கிடங்கு அப்போது தான் உறுதியாக இருக்கும். மழைகாலத்தில் அது பலமாக இருக்காது, ஆதலால் கிண்டியபடி தூக்கி எறியப்படும் புள் வேகமாகவோ அல்லது கூடிய தூரமோ செல்லாது என்பதனால் தான்.
ஒரு விளையாட்டு ஒன்றை அறிந்து அதை விளையாடி அதில் தேர்ச்சி பெற்று விளையாட எடுக்கும் காலத்தை விட சாதரணமாக இப்போது எல்லோராலும் விளையாடப்படும் விளையாட்டுக்களோடு விளையாடுவது தான் எல்லோரதும் இயல்பு,அந்த வகையில் இன்றையகாலங்களில் கிட்டிப்புள் அல்லது கிட்டிக்கொட்டன் கொஞ்சம் குறைந்து வருகிறது என்று சொல்லலாம். ஆனாலும் அதன் பெயரும் விளையாட்டும் இன்னும் எம்ம்வர்களிடமிருந்து மங்கிவிடவில்லை என்பதும் உண்மைதான்.அதுமட்டுமல்ல
சிலர் இதிலிருந்து தான் மட்டைப்பந்து என்று தமிழில் சொல்லப்படும் கிரிக்கெட் உருவானது என்று பெருமையடைவதும் சொல்லத்தானே வேணும்
கட்டுரை பட உதவி
கிராமிய விளையாட்டுக்கள்

இனிய நினைவலைகள் தொகுப்பிற்கு மிக்க நன்றி.....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
நான் விளையாடிய விளையாட்டுக்கள்-வாங்கோ!!
18 வயசுக்குள் வாழ்ந்த சந்தொசம்
18 வயதிற்குபின் வாழும் வாழ்க்கையில் இல்லாமல் போய்விடுகிறது....
வேலை தேடனும் நல்ல வீடு கட்டனும் இப்படியே பெரும்பாலும் பாதி வாழ்க்கை தேடலிலேயே முடிந்துவிடுகிறது
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
இப்படி தினமும் பத்துப்பேர் விளையாட ரெடியாக இருப்போம்..
பள்ளி முடிந்தவுடன் கடைக்கு சென்றாலும்,விளையாட சென்றாலும் நான்
ஓட்டும் சைக்கிள் ஓட்டும் முன்பு ....
இவைகள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
இப்ப இந்த விளையாட்டில் ஆர்வம் குறைவு...
விடுமுறையில் ஒரு கூட்டமே இங்கு நான் நல்ல விளையாடுவேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
கபடி கபடி....
நாங்கள் பல பரிசும் பெற்ற விளையாட்டு இது..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
சிறு வயது ஞாபகங்களை கொண்டுவந்ததற்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
» யாழில் கடமையில் இருந்தபோது தூங்கிய சிப்பாய்! கடித்து எழுப்பிய நாகபாம்பு!!
» " நாம் "
» நட்புக்குள் நாம்
» நாம் நாமாக
» யாழில் கடமையில் இருந்தபோது தூங்கிய சிப்பாய்! கடித்து எழுப்பிய நாகபாம்பு!!
» " நாம் "
» நட்புக்குள் நாம்
» நாம் நாமாக
Page 1 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum