Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
+7
கவிப்புயல் இனியவன்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
ahmad78
ராகவா
Nisha
11 posters
Page 4 of 9
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
First topic message reminder :
நான் சின்னவளாய் இருந்தபோது...
நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.
அப்படி ஒருசில பாடல்களை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..
பகிர்ந்துகட்டுமா... அப்படியே அவங்கவங்க அவங்கவங்க வீட்டில் இருக்கும் குட்டிபசங்களுக்கு சொல்லி கொடுக்கணுமாம்..
நான் சின்னவளாய் இருந்தபோது...
நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.
அப்படி ஒருசில பாடல்களை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..
பகிர்ந்துகட்டுமா... அப்படியே அவங்கவங்க அவங்கவங்க வீட்டில் இருக்கும் குட்டிபசங்களுக்கு சொல்லி கொடுக்கணுமாம்..
Last edited by Nisha on Sun 13 Jul 2014 - 23:39; edited 2 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
அப்படி அதற்குள் அத்தனையும் படித்தாகி விட்டதா?
இடை நடுவே உங்களுக்கும் கேள்விகள் இருந்ததே?
இடை நடுவே உங்களுக்கும் கேள்விகள் இருந்ததே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
எல்லா விளையாட்டையும் நீங்களே சொல்லிட்டிங்க அப்புறம் நாங்க எப்படி சொல்வதாம்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
யோசித்தால் இன்னும் கிடைக்கும்.
பாடலோடு கூடிய நினைவு அலைகளை சொல்லுங்க மேடம்!
எனக்கு இப்படி நான் மட்டும் தனியே பேசிட்டிருப்பது பிடிக்கல்லை.. யாருமே கம்பெனி தருவதில்லை ஏன்?
ராகவன் மட்டுமே வரான்!
பாடலோடு கூடிய நினைவு அலைகளை சொல்லுங்க மேடம்!
எனக்கு இப்படி நான் மட்டும் தனியே பேசிட்டிருப்பது பிடிக்கல்லை.. யாருமே கம்பெனி தருவதில்லை ஏன்?
ராகவன் மட்டுமே வரான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
Nisha wrote:யோசித்தால் இன்னும் கிடைக்கும்.
பாடலோடு கூடிய நினைவு அலைகளை சொல்லுங்க மேடம்!
எனக்கு இப்படி நான் மட்டும் தனியே பேசிட்டிருப்பது பிடிக்கல்லை.. யாருமே கம்பெனி தருவதில்லை ஏன்?
ராகவன் மட்டுமே வரான்!
நீங்க சொன்ன விளையாட்டு எல்லாம் நாங்களும் விளையாடுவோம் நிஷா. நான் எங்க தாத்தா பாட்டி கிட்ட ஊர்ல தான் 12 வயசு வரை இருந்தேன். புளியங்காய் பறிச்சு அதுல உப்பு வச்சு அரைச்சு சாப்பிடுவோம். கொஞ்ச பெரிய காயா இருந்தா சுட்டு சாப்பிடுவோம்.
எங்க தாத்தா மதியம் நேரம் விளையாட விடமாட்டாங்க. அவுங்ககிட்ட கெஞ்சுவேன் கொஞ்ச நேரத்துல வந்துடுவேனு. விடமாட்டாங்க எங்க சித்தி தான் அவ போய் தான் விளையாடட்டுமெ இங்க இருந்து என்ன செய்யபோறானு சொல்வாங்க. அதுக்கப்புறமா எங்க தாத்தா சொல்வாங்க முற்றத்துல எச்சில் துப்பி இந்த எச்சில் காயுறதுக்குள்ள வந்துடனும்னு சொல்வாங்க.
நாம ஏன் அதைக் கேட்க்கப் போறோம். எங்க தாத்தா கடைதெருவுக்கு 4.30 மணிக்கு கெளம்புவாங்க. அதுக்கப்புறமா வீட்டுக்கு வந்து டீ குடிச்சிட்டு திரும்பவும் கெளம்பிடுவேன். ஆனா எங்க தாத்தா வருவதற்குள் வீட்டுக்கு வந்து தூங்குவது போல நடிப்பேன்.
அதெல்லாம் மீண்டும் வருமா? )*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
எங்களுக்கு அம்மா அப்பா சைட் இரண்டிலும் தாத்தா இல்லை. ஆனால் அப்பாவின் மாமா வை தாத்தா என்போம்.
அப்பவே அவருக்கு ரெம்ப வயது. முடியெல்லாம் வெள்ளையாய் இருக்கும். ஆனாலும் எனக்காக தினம் ஒரு இடம் என அழைத்து போய் ஒவ்வொரு இடமாய் காட்டுவார். ஐஸ்கிரிம்லாம் வாங்கித்தருவார்.
எங்க வீட்டில் இந்த வெளியில் விளையாட தடா அப்பா வீட்டில் இருக்கும் நாட்களில் வரும்.வீட்டை விட்டு போகவே விட மாட்டார்.
அப்பவே அவருக்கு ரெம்ப வயது. முடியெல்லாம் வெள்ளையாய் இருக்கும். ஆனாலும் எனக்காக தினம் ஒரு இடம் என அழைத்து போய் ஒவ்வொரு இடமாய் காட்டுவார். ஐஸ்கிரிம்லாம் வாங்கித்தருவார்.
எங்க வீட்டில் இந்த வெளியில் விளையாட தடா அப்பா வீட்டில் இருக்கும் நாட்களில் வரும்.வீட்டை விட்டு போகவே விட மாட்டார்.
Last edited by Nisha on Mon 28 Jul 2014 - 23:52; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
Nisha wrote:எங்களுக்கு அம்மா அப்பா சைட் இரண்டிலும் தாத்தா இல்லை. ஆனால் அப்பாவின் மாமா வை தாத்தா என்போம்.
அப்பவே அவருக்கு ரெம்ப வயது. முடியெல்லாம் வெள்ளையாய் இருக்கும். ஆனாலும் எனக்காஅக் தினம் ஒரு இடம் என அழைத்து போன் காட்டுவார். ஐஸ்கிரிம்லாம் வாங்கித்தருவார்.
எங்க வீட்டில் இந்த வெளியில் விளையாட தடா அப்பா வீட்டில் இருக்கும் நாட்களில் வரும்.வீட்டை விட்டு போகவே விட மாட்டார்.
எங்களுக்கு எந்த தடையும் எங்க அப்பா அம்மாவும் கூட போடல... சென்னைக்கு வந்தும் எங்கெல்லாம் சுத்தனுமோ சுத்திட்டு தான் வீட்டுக்கு வருவோம்.
இங்க பெரிய கிரவுண்ட்ல சின்னதா முருகன் கோயில் இருக்கும். ஆலமரம் அரசமரம் இருக்கும் அங்க தான் ரொம்ப விளையாடுவோம். ஆனா இப்போ அதை பெருசா கட்டி யாரையும் விளையாட விடுவதில்லை.
ஆனாலும் ஏன் சென்னை வந்தோம் என இன்னும் கூட நினைத்து வருந்துவேன் அவ்வளவு பிடிக்கும் என் ஊரை. 9 வயசுலலாம் நல்ல்லா புத்தகம் படிப்பேன். எங்க தாத்தா குமுதம் ராணி வாங்கிப் போடுவாங்க. எங்க மாமா லைப்ரரில இருந்து கதை புத்தகம் எடுத்துப் போடுவாங்க. எல்லாத்தையும் படிச்சிக்கிட்டு இருப்பேன். இதெல்லாம் நினைத்தால் பெருமூச்சு தான் வருது.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
இந்த விளையாட்டு நான் அதிகமாகவே விளையாடி இருக்கேன் i* i*ராகவா wrote:
இப்படி தினமும் பத்துப்பேர் விளையாட ரெடியாக இருப்போம்..
பள்ளி முடிந்தவுடன் கடைக்கு சென்றாலும்,விளையாட சென்றாலும் நான்
ஓட்டும் சைக்கிள் ஓட்டும் முன்பு ....
இவைகள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
எங்க வீட்டில் அப்பா ரெம்ப கட்டுப்பாடு பானு! சொன்னால் நம்ப மாட்டீர்கள் திருமண மாகி பசங்க பிறந்து இத்தனை வயதாகியும் அப்பான்னால் கொஞ்சம் பயம் தான். ரெம்ப திட்டிருவார்.. அப்பா என் கூட இருக்கும் வரை அவரிடம் கேட்டுத்தான் எல்லாம் செய்வேன்.
சின்ன வயதில் சைக்கிள் ஓட பழகக்கூட விட மாட்டார்.பெண்னுங்களுக்கு எதுக்கும்பார்! அதுக்காக பழமைத்தனம் என்பதில்லை. ஏனோ தடுப்பார். மத்த படி இன மத பேதம் பார்க்காமல் எல்லோருடனும் சகஜமாக பழகுவதை அவரிடம் தான் கற்றேன்.
எனக்கு சின்ன வயதில் ரெம்ப கட்டுப்பாடுதான். ஸ்கூல் டீயூசன்.. படிப்பு சம்பந்தமான விடயம் தவிர்த்து வேறு எங்கு செல்வதுன்னாலும் காவல் வரும்.
ஆனால் நான் ஸ்கூல் ஸ்போர்ட் டீம் கப்டனும் என்பதால் அதையே சாக்காக வைத்து ஸ்கூல் மைதானத்தில் பசங்களுக்கு சமமா பந்து விளையாடிட்டிருப்பேன்.
சின்ன வயதில் சைக்கிள் ஓட பழகக்கூட விட மாட்டார்.பெண்னுங்களுக்கு எதுக்கும்பார்! அதுக்காக பழமைத்தனம் என்பதில்லை. ஏனோ தடுப்பார். மத்த படி இன மத பேதம் பார்க்காமல் எல்லோருடனும் சகஜமாக பழகுவதை அவரிடம் தான் கற்றேன்.
எனக்கு சின்ன வயதில் ரெம்ப கட்டுப்பாடுதான். ஸ்கூல் டீயூசன்.. படிப்பு சம்பந்தமான விடயம் தவிர்த்து வேறு எங்கு செல்வதுன்னாலும் காவல் வரும்.
ஆனால் நான் ஸ்கூல் ஸ்போர்ட் டீம் கப்டனும் என்பதால் அதையே சாக்காக வைத்து ஸ்கூல் மைதானத்தில் பசங்களுக்கு சமமா பந்து விளையாடிட்டிருப்பேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
ahmad78 wrote:
அடடாடடடடடா!
உங்க ஊரிலும் இந்த மாதிரில்லாம் விளையாட்டு இருந்ததா? நாங்களும் விளையாடி இருக்கோமே! ^_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
தென்னோலை கண்ணாடி, விசிறி, மணிக்கூடுல்லாம் இப்ப ரெம்ப பெறுமதியானது அல்லவா..
ராகவன் இந்த திரியை சிறுவயது நினைவலைகள் எனும் திரியுடன் இணைத்தால் என்ன? மொத்தமாய் பகிர்ந்து விட்டு ஒட்டியாக்கி விடலாம்ல..
ராகவன் இந்த திரியை சிறுவயது நினைவலைகள் எனும் திரியுடன் இணைத்தால் என்ன? மொத்தமாய் பகிர்ந்து விட்டு ஒட்டியாக்கி விடலாம்ல..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
கில்லி
(Gilli –Danda)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பாடல்
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
இனிய நினைவலைகள்!இதெல்லாம் கூட நினைவில் வருமே!
இதெல்லாம் கூட நினைவில் வருமே!
பவளக்கொடி
பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்
பாவைதனை ஒப்பாள் பாலெடுத்து விற்பாள்
அங்கவட்டோர் நாளில் அடுத்த கதை கேளீர்
சந்தைக்கு போம்போது தான் நினைத்தாள் மாது
பாலை இன்று விற்பேன் காசை பையில் வைப்பேன்
முருகரப்பா வீட்டில் முட்டை விற்பாள் பாட்டி
கோழி முட்டை வாங்கி குஞ்சுக்கு வைப்பேனே
புள்ளிக் கோழிக்குஞ்சு பொரிக்கும் இரண்டஞ்சு
குஞ்சுகள் வளர்ந்து கோழியாகும் விரைந்து
விரைந்து வளர்ந்திடுமே வெள்ளை முட்டை இடுமே
முட்டை விற்ற காசை முழுவதும் எடுத்தாசை
வண்ணச்சேலை சட்டை மாதுளம்பூ தொப்பி
வாசனை செருப்பு வாங்குவேன் விருப்பு
வெள்ளைப்பட்டுத்தி மினுங்கல் தொப்பி தொடுத்து
கை இரண்டும் வீசி சந்தைக்கு போவேனே
அரிய மலரும் பார்ப்பாள் அம்புஜமும் பார்ப்பாள்
பூமணியும் பார்ப்பாள் பொற்கொடியும் பார்ப்பாள்
சரிகைச்சேலை பாரீர் தாவணியை பாரீர்
பாரும் பாரும் என்று பவளக்கொடி நின்று
சற்றுத்தலை நிமிர்ந்தாள் தையல் என்ன செய்வாள்
பாலும் எல்லாம் போச்சு பாற்குடமும் போச்சு
மிக்கத்துயரோடு வீடு சென்றாள் மாது
கைக்கு வரும் முன்னே நெய்க்கு விலை பேசேல்
ஆக்கம் : கல்லடி வேலுப்பிள்ளை
பவளக்கொடி
பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்
பாவைதனை ஒப்பாள் பாலெடுத்து விற்பாள்
அங்கவட்டோர் நாளில் அடுத்த கதை கேளீர்
சந்தைக்கு போம்போது தான் நினைத்தாள் மாது
பாலை இன்று விற்பேன் காசை பையில் வைப்பேன்
முருகரப்பா வீட்டில் முட்டை விற்பாள் பாட்டி
கோழி முட்டை வாங்கி குஞ்சுக்கு வைப்பேனே
புள்ளிக் கோழிக்குஞ்சு பொரிக்கும் இரண்டஞ்சு
குஞ்சுகள் வளர்ந்து கோழியாகும் விரைந்து
விரைந்து வளர்ந்திடுமே வெள்ளை முட்டை இடுமே
முட்டை விற்ற காசை முழுவதும் எடுத்தாசை
வண்ணச்சேலை சட்டை மாதுளம்பூ தொப்பி
வாசனை செருப்பு வாங்குவேன் விருப்பு
வெள்ளைப்பட்டுத்தி மினுங்கல் தொப்பி தொடுத்து
கை இரண்டும் வீசி சந்தைக்கு போவேனே
அரிய மலரும் பார்ப்பாள் அம்புஜமும் பார்ப்பாள்
பூமணியும் பார்ப்பாள் பொற்கொடியும் பார்ப்பாள்
சரிகைச்சேலை பாரீர் தாவணியை பாரீர்
பாரும் பாரும் என்று பவளக்கொடி நின்று
சற்றுத்தலை நிமிர்ந்தாள் தையல் என்ன செய்வாள்
பாலும் எல்லாம் போச்சு பாற்குடமும் போச்சு
மிக்கத்துயரோடு வீடு சென்றாள் மாது
கைக்கு வரும் முன்னே நெய்க்கு விலை பேசேல்
ஆக்கம் : கல்லடி வேலுப்பிள்ளை
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
வீமா! வீமா! ஓடி வாவா - அணில்
வேட்டை ஆடிப்பிடித் தூட்டுவேன் வாவா
தேமா மரத்திற் பதுங்கி - மாங்காய்
தின்னும் அணிலைப் பிடிப்போம் ஒதுங்கி
மரத்தில் இருந்து குதித்தே - அடடா
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே பார்பார்
துரத்திப் பிடிபிடி வீமா - உச்சு
சூச்சூஅணில் எம்மைத் தப்பியும் போமா?
பொந்துக்குட் புகுந்தது வீமா - உந்தப்
புறத்தில்நில் அந்தப் புறத்தினில் வருவேன்
அந்தோஎன் தாடியை விடுவாய் - அந்த
அணில்தப்பி ஓடிய தையையோ கெடுவாய்
வேட்டை ஆடிப்பிடித் தூட்டுவேன் வாவா
தேமா மரத்திற் பதுங்கி - மாங்காய்
தின்னும் அணிலைப் பிடிப்போம் ஒதுங்கி
மரத்தில் இருந்து குதித்தே - அடடா
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே பார்பார்
துரத்திப் பிடிபிடி வீமா - உச்சு
சூச்சூஅணில் எம்மைத் தப்பியும் போமா?
பொந்துக்குட் புகுந்தது வீமா - உந்தப்
புறத்தில்நில் அந்தப் புறத்தினில் வருவேன்
அந்தோஎன் தாடியை விடுவாய் - அந்த
அணில்தப்பி ஓடிய தையையோ கெடுவாய்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
அக்கா வீட்ட போனேன்
பழம் அரிசி தந்தாள்
வேண்டாம் என்று வந்தேன்
வந்த வழியில் பாம்பு
பாம்படிக்கத் தடிக்குப் போனேன்
தடியெல்லாம் ஊத்தை.
ஊத்தை கழுவ தண்ணிக்குப் போனேன்
தண்ணி எல்லாம் மீன்
மீன் பிடிக்க வலைக்குப் போனேன்
வலையெல்லாம் ஓட்டை
ஓட்டை தைக்க ஊசிக்குப் போனேன்
ஊசி எல்லாம் வெள்ளி
வெள்ளி எல்லாம்(அம்மா?) வெள்ளி
பொயிலைக் காம்பை நுள்ளி
வாய்க்கை போடடி கள்ளி.
பழம் அரிசி தந்தாள்
வேண்டாம் என்று வந்தேன்
வந்த வழியில் பாம்பு
பாம்படிக்கத் தடிக்குப் போனேன்
தடியெல்லாம் ஊத்தை.
ஊத்தை கழுவ தண்ணிக்குப் போனேன்
தண்ணி எல்லாம் மீன்
மீன் பிடிக்க வலைக்குப் போனேன்
வலையெல்லாம் ஓட்டை
ஓட்டை தைக்க ஊசிக்குப் போனேன்
ஊசி எல்லாம் வெள்ளி
வெள்ளி எல்லாம்(அம்மா?) வெள்ளி
பொயிலைக் காம்பை நுள்ளி
வாய்க்கை போடடி கள்ளி.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
» யாழில் கடமையில் இருந்தபோது தூங்கிய சிப்பாய்! கடித்து எழுப்பிய நாகபாம்பு!!
» " நாம் "
» நட்புக்குள் நாம்
» நாம் நாமாக
» யாழில் கடமையில் இருந்தபோது தூங்கிய சிப்பாய்! கடித்து எழுப்பிய நாகபாம்பு!!
» " நாம் "
» நட்புக்குள் நாம்
» நாம் நாமாக
Page 4 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum