Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
+7
கவிப்புயல் இனியவன்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
ahmad78
ராகவா
Nisha
11 posters
Page 3 of 9
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
First topic message reminder :
நான் சின்னவளாய் இருந்தபோது...
நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.
அப்படி ஒருசில பாடல்களை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..
பகிர்ந்துகட்டுமா... அப்படியே அவங்கவங்க அவங்கவங்க வீட்டில் இருக்கும் குட்டிபசங்களுக்கு சொல்லி கொடுக்கணுமாம்..

Last edited by Nisha on Sun 13 Jul 2014 - 23:39; edited 2 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
வர சொல்லவா? அண்ணா உங்களை பானு அக்கா இழுத்து வர சொன்னாங்க....பானுஷபானா wrote:ராகவா wrote:அக்கா! எங்கே ஓடுறீங்க..நண்பன் அண்ணா அவங்க வேகத்தை கட்டுப்படுத்துங்க...என்னால முடியல...பானுஷபானா wrote:*#
அவ்ரு தான் இந்தப் பக்கமே வரமாட்டாரே !*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
பானுஷபானா wrote:Nisha wrote:அனைவரும் அவரவர்களுக்கு நினைவில் வரும் நினைவலைகளை இங்கே எழுதுங்கள்.
இங்கே ஒருத்தர் இது என் திரியாம் உங்க திரில நான் ஏன் பதியணும் என வீம்பு சொன்னதோட..தனக்கு வாழ்த்து திரில ஹாசிம் எட்டாம் பக்கம் தான் வாழ்த்தினாராம். நான் அதை ஏன் லேட்டுனு தட்டியே கேட்கல்லையாம் என சொல்லி இந்த திரியும் எட்டுப்பக்கம் போனபின் தான் தன்னோட பின்னூட்டம் தருவாராம் என சொல்லியாகி விட்டது.
அட ம்ம் அப்போ எனக்கு இவரு 3 நாள் கழிச்சு வாழ்த்து சொன்னாரே அதுக்கு நாங்க என்ன செய்வது இவரை.
அவராச்சும் அன்னைக்கு தான் வந்தார் பார்த்தார் பதிவும் போட்டார் எந்தக் குறையும் ஹாசிம் தம்பிய சொல்லவே முடியாது இவரு வாழ்த்து போட்ட அன்னைக்கு ஒரே அரட்டை அடிச்சிருக்கார் ஆனா எனக்கு வாழ்த்து சொல்லல இதை யார் தட்டி கேப்ப்ப்பிங்க...
அதோடு யாருமே என் வாழ்த்து திரிபக்கம் வாழ்த்து சொன்னதோடு திரும்பியே பார்க்கல நான் பேசியதற்கும் பதிலே சொல்லல. எனக்கு எவ்ளோஒ வருத்தம் இருந்துச்சுனு ஆண்டவன் அறிவான். சரி நம்க்கு வாய்ச்சது அவ்ளோ தான் என தேத்திக் கொண்டேன் இதுக்கு உங்களுக்கெல்லாம் என்ன தண்டனை குடுக்கலாம்..
#* #* #* #* #* #* #* #*
புதுசு புதுசா புகார்லாம் கிளம்புதுப்பா!
ஆனால் பானு உங்கள் வாழ்த்து திரி நேரம் தும்பீ சேனை வரவில்லை என்பதோடு மறு நாள் வெள்ளி என்பதால் அவரை இந்த பக்கம் காணவே முடியாமல் இருந்ததே?
எனக்கும் தெரியும்.. நானும் கவனித்தேன். அதே நேரம் தும்பிக்கும் முடியாத நிலை இருந்தது என்பதும் எனக்கு தெரியும்.. ஏன் நான் பதிவுல்ல்லாம் போட்டே்ன் தானே.. என்னை ஏனிதில் இழுக்கிறிங்களாம்..
போய் உங்க அண்ணாத்தே கூட சண்டை போடுங்க மேடம்!
Last edited by Nisha on Tue 4 Nov 2014 - 13:50; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:அனைவரும் அவரவர்களுக்கு நினைவில் வரும் நினைவலைகளை இங்கே எழுதுங்கள்.
இங்கே ஒருத்தர் இது என் திரியாம் உங்க திரில நான் ஏன் பதியணும் என வீம்பு சொன்னதோட..தனக்கு வாழ்த்து திரில ஹாசிம் எட்டாம் பக்கம் தான் வாழ்த்தினாராம். நான் அதை ஏன் லேட்டுனு தட்டியே கேட்கல்லையாம் என சொல்லி இந்த திரியும் எட்டுப்பக்கம் போனபின் தான் தன்னோட பின்னூட்டம் தருவாராம் என சொல்லியாகி விட்டது.
அட ம்ம் அப்போ எனக்கு இவரு 3 நாள் கழிச்சு வாழ்த்து சொன்னாரே அதுக்கு நாங்க என்ன செய்வது இவரை.
அவராச்சும் அன்னைக்கு தான் வந்தார் பார்த்தார் பதிவும் போட்டார் எந்தக் குறையும் ஹாசிம் தம்பிய சொல்லவே முடியாது இவரு வாழ்த்து போட்ட அன்னைக்கு ஒரே அரட்டை அடிச்சிருக்கார் ஆனா எனக்கு வாழ்த்து சொல்லல இதை யார் தட்டி கேப்ப்ப்பிங்க...
அதோடு யாருமே என் வாழ்த்து திரிபக்கம் வாழ்த்து சொன்னதோடு திரும்பியே பார்க்கல நான் பேசியதற்கும் பதிலே சொல்லல. எனக்கு எவ்ளோஒ வருத்தம் இருந்துச்சுனு ஆண்டவன் அறிவான். சரி நம்க்கு வாய்ச்சது அவ்ளோ தான் என தேத்திக் கொண்டேன் இதுக்கு உங்களுக்கெல்லாம் என்ன தண்டனை குடுக்கலாம்..
#* #* #* #* #* #* #* #*
புதுசு புதுசா புகார்லாம் கிளம்புதுப்பா!
ஆனால் பானு உங்கள் வாழ்த்து திரி நேரம் தும்பீ சேனை வரவில்லை என்பதோடு மறு நாள் வெள்ளி என்பதால் அவரை இந்த பக்கம் காணவே முடியாமல் இருந்ததே?
எனக்கும் தெரியும்.. நானும் கவனித்தேன். அதே நேரம் தும்பிக்கும் முடியாத நிலை இருந்தது என்பதும் எனக்கு தெரியும்.. ஏன் நான் பதிவுல்ல்லாம் போட்டே்ன் தானே.. என்னை ஏனிதில் இழுக்கிறிங்களாம்..
போய் உங்க அண்ணாத்தே கூட சண்டிஅ போடுங்க மேடம்!
இல்லை நிஷா நான் கவனிக்காமல் சொல்லவில்லை. பதிவு போட்ட அன்று இரவு அரட்டை அடித்தார் அதைப் பார்த்டுட்டு தான் சொல்கிறேன்...
நீங்களும் தான் நான் பேசியதற்கு பதில் சொல்லவே இல்ல )*
அண்ணாவை இப்பத் தான் அடிச்சிருக்கேன் பலன் இருக்கானு பார்க்கலாம்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
*# *# *# ஐய்யோ நானுமா.. !
பேச்சிடா !
நிஷா ஓடிரூஊஊஊஊஊஊஊஉ
*# *# *# *# *# *# *# *# *# *# *#
பேச்சிடா !
நிஷா ஓடிரூஊஊஊஊஊஊஊஉ
*# *# *# *# *# *# *# *# *# *# *#
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
Nisha wrote:*# *# *# ஐய்யோ நானுமா.. !
பேச்சிடா !
நிஷா ஓடிரூஊஊஊஊஊஊஊஉ
*# *# *# *# *# *# *# *# *# *# *#
எங்க போனாலும் இங்க தான வரனும் வாங்க (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
சிறு வயது நினைவலைகள் தொடர்கின்றது.
பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்பிள்ளைகளை அதிகம் வெளியே விளையாட விட மாட்டார்கள் ! தெருவில் கூட அவசியமின்றி நிற்க விடமாட்டார்கள்,
எனக்கோ வீட்டில் மூத்த பெண் என்பதால் இன்னும் அதிக கட்டுப்பாடு. ஏனெனில் பின் வருவோர் என்னை பார்த்து தொடர்வார்களாம். இருந்தால், நின்றால், ஓடினால் என எதுக்கும் கட்டுப்பாடு தான். பாடசாலை, படிப்பு காரியம் தவிர்த்து வெளியே அதிகம் செல்ல முடியாது!
அதனாலேயே மாலையானதும் நாங்கள் நான்கைந்து தோழியருடன் என் சகோதரிகளையும் இணைத்து எங்கள் வீட்டில் இருந்த லாவுள் மரத்தின் கீழ் கூடி விடுவோம்.
கிணற்றினை ஒட்டி... பரவி விரித்து கிளைகளோடு வருடம் முழுதும் காயும் பழமுமா்ய் அம்மரம் இருந்ததாகவே என் நினைவு. மூன்று வருட்ம முன் கிட்டதட்ட 20 வருடம் பின் அவ்விடம் சென்று பார்த்த போது மரம் இருந்த இடம் குப்பை மேடாக காட்சி தந்தது மனதுக்கு வேதனையை தரும் ஒன்றாகவே இருக்கின்றது!
சரி விடயத்துக்கு வருகின்ரேன்! அந்த லாவுட் மரத்தின் பழம் இனிக்கும் எனில் பழத்துக்கும் பிஞ்சுக்கும் இடைப்பட்ட பருவம் துவர்ப்பாயும் சுவையாயும் இருக்கும் பால் ஒட்டும். அந்த பருவத்தில் இருக்கும் காயை நல்ல புளி மாங்காயோடு ப்ச்சை மிளகாயும் உப்பும் சேர்த்து உரலில் இட்டு துவையல் போல் இடித்து எடுத்தால் உப்பும் உறைப்புமாய் அது தான் எங்கள் மாலை நேர டிபன்.
அதே மரத்தில் கயிறு ஊஞ்சல், பலகை ஊஞ்சல் என ஆளுக்கொரு கிளையில் கட்டி ஊஞ்சல் ஆடுவதும். மரத்தின் உரலை கவ்ழ்த்தி போட்டு விட்டு மரத்தின் மேலே ஏறி குரங்குகள் போல் தொங்குவதும் தாவுவதும் ... இன்னும் மறகக் இயலாத இனிய அனுபவம் தான்.
அனேகமாக மாலை நேர விளையாட்டாக நொண்டியடித்தல், கிட்டிபுள்ளு, ஊஞ்சல் ஆடுதல்,, சிலை போல் நிற்றல், கள்ளன் பொலிஸ், என விளையாடுவதும் மழைக்காலங்களில் வெளியில் சேறும் சக்தியுமாய் இருக்கும் என்பதால் வீட்டின் விறாந்தையில் அமர்ந்து தாயம் விளையாடுவதும் மறக்க முடியாத நினைவலைகள்.

ஞாபகம் இருக்கா...?
பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலில் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
செவ்வந்தி பூவின் நடுவில் பார்த்தேன்
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
இரவில் ஒரு நாள் பௌர்ணமி பார்த்தேன் ஒற்றை நாணயம்
இரவின் ஒரு நாள் பௌர்ணமி பார்த்தேன் .....அப்போது அதாவது என் ஐந்து வயது தொடக்கம் பத்து வயது வரை எங்கள் வீடு வாடகை வீடு தான். ஆனால் ஒழுங்காக வாடகை கொடுக்காத வீடு. வீட்டு சொந்தகாரர்களும் தூர இருந்ததால் வீட்டுக்கு காவலாய் இருக்காங்க எனும் நல்ல எண்ணத்தில் வாடகை கேட்பதில்லை. கல் வீடு ஆனால் ஓடு இல்லை ஓலையால் வேய்ந்திருக்கும்.
இரண்டு வருடம் நிழல் தந்தால் எப்படியும் ஒரு வருடம் சூரியனுடனும் சந்திரனுடனும் போட்டி போட்டு வான் மழையும் கொட்டும். அந்த காலத்தில் எங்கள் இரவு தங்கல்கள் அருகில் இருக்கும் ஓடு வேய்ந்த வீட்டாரின் தாள்வாரமாயிருக்கும். தாள்வாரமாயிருந்தாலும் அந்த வீட்டு ஆண்டி தினம் ஒரு கதை சொல்வதால் அவர் கதை கேட்கவெனவே மழை இல்லா நாளிலும் அவர் வீட்டுக்கு ஒடி விடுவேன்.
அவர் வீட்டில் நிரம்ப பூமரங்கள்.. குரோட்டன்ஸ் செடிகள் இருக்கும். எனக்கு காசு பணம் நகை உடை பொருள் எல்லாம் பார்த்தால் அப்போதிருந்து இப்ப வரை ஆசை வராது. ஆனால் பூமரம் பார்த்தால் மட்டும் என் கை நம நமக்கும். செடியில் அழகான பூ இருந்தால் அங்குமிங்கும் பார்த்துட்டு அப்படியே ஒடிச்சுட்டு வந்திருவேன்.
ஹாஹா இந்த குணம் இப்பவும் இருக்குப்பா.. எங்காச்சும் ரோஜாப்பூவை கண்டால் கை துரு துருன்னும். {_ {_
பாவம்னு பரிதாபட்டு அவங்க இரவு தூங்க இடம் தந்தால் நானோ ஒரு நாள் அவங்க வீட்டு குரோட்டன் செடியிலிருந்து உடைச்சிட்டு வந்திட்டேன்... அந்த ஆண்டி என் பின்னாடியே வந்து... அப்புறம் என்ன நடந்திருக்கும் என நீங்களே கற்பனை பண்னிக்கோங்க..
படங்கள் நன்றி
இணையம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
நான் பெரும்பாலும் டயர் உருட்டுவதும்,கோலி அடிப்பது,ஜான் போட்டு கில்லி அடிப்பது,கிட்டிப்பில்,கோ கோ ,கண்ணாமூச்சி விளையாட்டு ,காய் போட்டு தாண்டுவது,திருடன் போலிஸ்,நொண்டி அடித்து துரத்துவது,ஓளிந்துக்கொண்டு இன்னொருவர் தேடிவது...
அப்பரம் ஐஸ் வைத்து ஒருவர் துரத்துவார் ,மற்றவர்கள் குட்கருவார் அவருகளுக்கு ஐஸ் கொடுக்கனும் இல்லையேல் அவுட்..
இப்படி விளையாடுவோம்.,,,,அப்பரம் நூத்து குச்சி,கல்லாங்காய் விளையாட்டு,நீச்சல் அடித்து தண்ணீரில் தேடுவது..
ஒரு நாள் நானும் என் நண்பனும் விளையாட ஆற்றுக்கு சென்றோம் நானும் ஆற்றை பார்த்தவுடன் நீச்சல் தெரியாத வயது,..இருந்தாலும் ஆற்றில் கரைப்புரண்டு ஓடுகிறது..
அப்போது குதித்து விட்டேன்..அவ்வளவுதான் அடித்துக்கொண்டு போகுது..நான் கபக்,கபக் என்று தண்ணீர் குடித்தேன்..
உடனே என் நண்பன் என் லபக்காக தூக்கினான் இல்லையேல் என் உயிர் அம்போ...
ஒரு நாள் நானும் அதே நண்பனும் தார் போட்டு ரோட்டில் புதிதாக ட்ரம் புள்ளா மழை பெய்து இருந்த சமயம்..
நான் என் கையில் கொஞ்சம் தாரை எடுத்து உருட்டி பலிங்கி போல எடுத்துக்கொண்டு விளையாடிக்கொண்டு வந்தேன்..
அப்போது என் நண்பனின் பக்கத்து வீட்டு ஆடுகள் மேய்த இடத்திற்கு வந்தோம்..
அப்போது நான் விளையாடிய தார் பலிங்கி ஆட்டின் கொட்டையில் ஓட்டிக்கொண்டயது..
அய்யோ....வெயில் வர வர அது உருக தொடங்கியது ஆடோ! ஒரு சொனக்கமாக தொடங்கியது..
உடனே நானும் ,என் நண்பனும் அதை எடுக்க அறும்பாடுபட்டோம்..
அது விடவே இல்ல...அப்படி எடுத்தாலும் நெருப்பு க்கொண்டுதான் எடுக்க முடியும்..
அப்பறம் ஆட்டின் கெதி...
அப்பறம் ஒரு வழியாக அன்று பயந்து பயந்து இருந்தோம்..
இறுதியில் ஆடு கசாப் கடைக்கு கொண்டு சென்றனர்...
அதுமுதல் நான் எதிலும் விளையாட்டில் கூட கவனம் செலுத்தினேன்...
அப்பாடா..என்ன விளையாட்டு....

மேலே இருக்கும் படத்தின் காணப்படும் பல்லாங்குழி விளையாட்டு, கல்லங்காய் விளையாட்டு, தாயம் விளையாட்டு எல்லாம் வீட்டில் இருக்கும் பெண்கள் விளையாடுவது..
கல்லாங்காய் விளையாட்டில் ஐந்து கல் , ஏழு கல் என நல்ல அளவான கூழாங்கற்களை தெரிந்தெடுத்து அனைத்தையும் உள்ளங்கையில் வைத்து குலுக்கி விட்டு ஒரு கலலை மேலே அனுப்பி விட்டு மீதி கீழே விழுந்த கல்லில் முதலில் ஒன்றை.. மீண்டும் கல் மேலே எறிந்து இரண்டாது தடவை இரண்டு கல் என கல் எடுக்கும் போதும் கீழிருக்கும் மீதி கல்லுடன் கல்லும் நம் கையும் உராயாமல் எடுக்க வேண்டும்.இப்படி முழு கல்லையும் எடுத்தால் நாமென்று விடுவோம். எழுதும் போது தெரியும் இலகு விளையாடும் போது இருக்காது. நிரம்ப பிரக்டிஸ் தேவைப்படும் விளையாட்டு இது.
மிக சுவாரஷ்யமாக இருக்கும். சண்டையும் வரும்.
பல்லாங்குழி விளையாட்டில் ஆறு சோழி இல்லாவிடில் பன்னிரெண்டு சோழி ஆட்டம் உண்டு. ஒவ்வொரு குழியிலும் ஆறு சோழிகள் அல்லது பன்னிரெண்டு சோழிகளை போட்டுக்கொள்ள வேண்டும். ஏழு, ஏழு குழிகள் இருபக்கமும் இருக்கும். விளையாடுபவர் அப்படியே சோழிகளை எடுத்து ஒவ்வொன்றிலும் போட்டுக்கொண்டே வரவேண்டும். கையில் இருப்பது முடிந்தவுடன் திரும்ப அடுத்த குழி காயை எடுத்துப் போடவேண்டும். அடுத்த குழியில் காய் இல்லாதபோது, முதல் குழி சோழிகள் ஆடுபவருக்கு. இப்படி அடுத்தவரின் காய் தீரும் வரை விளையாடலாம். ஒவ்வொரு பகுதியிலும் சிறிது ஆட்ட முறைகள் மாறுவதுண்டு. வாய்ப்பேசிக் கொண்டே பாட்டி கணக்கு மாறாமல் அருமையாக ஆடுவார்கள். கணக்கு பாடங்களைச் சொல்லி கொடுக்க பல்லாங்குழியும் ஓர் அருமையான விளையாட்டுப் பாடமே,
கல்லாங்காய் விளையாட்டில் ஐந்து கல் , ஏழு கல் என நல்ல அளவான கூழாங்கற்களை தெரிந்தெடுத்து அனைத்தையும் உள்ளங்கையில் வைத்து குலுக்கி விட்டு ஒரு கலலை மேலே அனுப்பி விட்டு மீதி கீழே விழுந்த கல்லில் முதலில் ஒன்றை.. மீண்டும் கல் மேலே எறிந்து இரண்டாது தடவை இரண்டு கல் என கல் எடுக்கும் போதும் கீழிருக்கும் மீதி கல்லுடன் கல்லும் நம் கையும் உராயாமல் எடுக்க வேண்டும்.இப்படி முழு கல்லையும் எடுத்தால் நாமென்று விடுவோம். எழுதும் போது தெரியும் இலகு விளையாடும் போது இருக்காது. நிரம்ப பிரக்டிஸ் தேவைப்படும் விளையாட்டு இது.
மிக சுவாரஷ்யமாக இருக்கும். சண்டையும் வரும்.
பல்லாங்குழி விளையாட்டில் ஆறு சோழி இல்லாவிடில் பன்னிரெண்டு சோழி ஆட்டம் உண்டு. ஒவ்வொரு குழியிலும் ஆறு சோழிகள் அல்லது பன்னிரெண்டு சோழிகளை போட்டுக்கொள்ள வேண்டும். ஏழு, ஏழு குழிகள் இருபக்கமும் இருக்கும். விளையாடுபவர் அப்படியே சோழிகளை எடுத்து ஒவ்வொன்றிலும் போட்டுக்கொண்டே வரவேண்டும். கையில் இருப்பது முடிந்தவுடன் திரும்ப அடுத்த குழி காயை எடுத்துப் போடவேண்டும். அடுத்த குழியில் காய் இல்லாதபோது, முதல் குழி சோழிகள் ஆடுபவருக்கு. இப்படி அடுத்தவரின் காய் தீரும் வரை விளையாடலாம். ஒவ்வொரு பகுதியிலும் சிறிது ஆட்ட முறைகள் மாறுவதுண்டு. வாய்ப்பேசிக் கொண்டே பாட்டி கணக்கு மாறாமல் அருமையாக ஆடுவார்கள். கணக்கு பாடங்களைச் சொல்லி கொடுக்க பல்லாங்குழியும் ஓர் அருமையான விளையாட்டுப் பாடமே,
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
எமது சின்னசிறார்கள் எண்களை இலகுவாக கற்க...
என பாவலர் துரை மூர்த்தி அவர்களின் பாடலை கற்பிப்பதால் நம் வீட்டு குழந்தைகள் எண்களோடு பல புதிய விடயங்களையும் கற்பதை காண முடியும்
ஒன்று - எண்ணின் தொடக்கம் ஒன்று
இரண்டு – விழிகள் நமக்கு இரண்டு
மூன்று – முத்துத் தமிழ் மூன்று
நான்கு – விலங்கின் கால் நான்கு
ஐந்து – உலோக வகை ஐந்து
ஆறு - சுவையின் வகை ஆறு
ஏழு – இசையின் வகை ஏழு
எட்டு – சிலந்திக்குக் கால் எட்டு
ஒன்பது - மணியின் வகை ஒன்பது
பத்து – தமிழின் பாட்டு பத்து!
இரண்டு – விழிகள் நமக்கு இரண்டு
மூன்று – முத்துத் தமிழ் மூன்று
நான்கு – விலங்கின் கால் நான்கு
ஐந்து – உலோக வகை ஐந்து
ஆறு - சுவையின் வகை ஆறு
ஏழு – இசையின் வகை ஏழு
எட்டு – சிலந்திக்குக் கால் எட்டு
ஒன்பது - மணியின் வகை ஒன்பது
பத்து – தமிழின் பாட்டு பத்து!
என பாவலர் துரை மூர்த்தி அவர்களின் பாடலை கற்பிப்பதால் நம் வீட்டு குழந்தைகள் எண்களோடு பல புதிய விடயங்களையும் கற்பதை காண முடியும்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
நானும் பல்லாங்குலி ஆடி இருக்கேன்..அது கடலை அரிசி..சிறிய கற்கள்,புளியம் கொட்டை,வேப்பம் காய் இப்படி நிறைய வைத்து விளையாடி உள்ளேன்..
அதும் நான் ஆறுக்கு ஆறு குழிகள் இருக்கும்..அதில் ஐந்து காய்கள்,பன்னிரண்டு காய்கள் கட்டனும்..அதில் பன்னிரண்டு என்றால் ஆறு முத்து எடுக்கலாம்..
ஐந்து என்றால் நான்கு முத்து எடுக்கலாம்..அப்படி வரிசையக விளையாடுவோம்..இடையில் இரு குழிகள் விட்டும் விளையாடுவோம் அதற்கு கன்னு என்போம்..
இப்படி நாங்கள் அவர் தெரியாம பொய் பேசி விளையாடி சண்டை வந்துவிடும் ஆமா..
நாங்கள் அடித்து அடித்து பிறகு சமதானம் என் அம்மா அவருவார்..
அதே போல பள்ளிக்கு செல்லும் போது ஒரு குட்காரும் சுவற்றில் குழி பறித்தும் விளையாடுவோம்...
அப்போது பெட் கட்டியும் விளையாடி விளையாடி களைத்து போகுவரை இப்படி போகும்..
அதும் நான் ஆறுக்கு ஆறு குழிகள் இருக்கும்..அதில் ஐந்து காய்கள்,பன்னிரண்டு காய்கள் கட்டனும்..அதில் பன்னிரண்டு என்றால் ஆறு முத்து எடுக்கலாம்..
ஐந்து என்றால் நான்கு முத்து எடுக்கலாம்..அப்படி வரிசையக விளையாடுவோம்..இடையில் இரு குழிகள் விட்டும் விளையாடுவோம் அதற்கு கன்னு என்போம்..
இப்படி நாங்கள் அவர் தெரியாம பொய் பேசி விளையாடி சண்டை வந்துவிடும் ஆமா..
நாங்கள் அடித்து அடித்து பிறகு சமதானம் என் அம்மா அவருவார்..
அதே போல பள்ளிக்கு செல்லும் போது ஒரு குட்காரும் சுவற்றில் குழி பறித்தும் விளையாடுவோம்...
அப்போது பெட் கட்டியும் விளையாடி விளையாடி களைத்து போகுவரை இப்படி போகும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
சூப்பர் தொடருங்கள் ராகவன்!
நண்பன் சார்... ஹாசிம்சார். இன்னும் இலங்கை பாடதிட்டத்தில் படித்தவர்களுக்கு கீழே வரும் பாடல்கள் நினைவு வருகின்றதா என சொல்லுங்கள் பார்க்கலாம்.
தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு!
அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி!
அம்மா என்கிறது வெள்ளைப் பசு!
அதன் அண்மையில் ஓடுது கன்று குட்டி!
நாவால் நக்குது வெள்ளைப் பசு!
அதை முட்டிக் குடிக்குது கன்றுக் குட்டி!
ஐந்தாம் ஆண்டு தமிழ் பாடபுத்தக பாட்டு இதுவென நினைக்கின்றேன் என் நினைவாற்றல் சரியா என நீங்கள் சொல்லணும்.
கத்தரி தோட்டத்து மத்தியிலே
நின்று காவல் புரிகின்ற சேவகா
மெத்தக் கவனமாய்க்
கூலியும் வாங்காமல்
சேவை புரிபவன் வேறு யார்?
உன்னைப் போல்
சேவை புரிபவன் வேறு யார்?
வட்டமான பெரும் பூசணிக்காய் போல
வெள்ளை நிற உரு மாலைப்பார்..
மீதி பாட்டு நினைவில் வரவில்லைப்பா... !
நண்பன் சார்... ஹாசிம்சார். இன்னும் இலங்கை பாடதிட்டத்தில் படித்தவர்களுக்கு கீழே வரும் பாடல்கள் நினைவு வருகின்றதா என சொல்லுங்கள் பார்க்கலாம்.
தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு!
அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி!
அம்மா என்கிறது வெள்ளைப் பசு!
அதன் அண்மையில் ஓடுது கன்று குட்டி!
நாவால் நக்குது வெள்ளைப் பசு!
அதை முட்டிக் குடிக்குது கன்றுக் குட்டி!
ஐந்தாம் ஆண்டு தமிழ் பாடபுத்தக பாட்டு இதுவென நினைக்கின்றேன் என் நினைவாற்றல் சரியா என நீங்கள் சொல்லணும்.
கத்தரி தோட்டத்து மத்தியிலே
நின்று காவல் புரிகின்ற சேவகா
மெத்தக் கவனமாய்க்
கூலியும் வாங்காமல்
சேவை புரிபவன் வேறு யார்?
உன்னைப் போல்
சேவை புரிபவன் வேறு யார்?
வட்டமான பெரும் பூசணிக்காய் போல
வெள்ளை நிற உரு மாலைப்பார்..
மீதி பாட்டு நினைவில் வரவில்லைப்பா... !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
பாலர் வகுப்பில் படித்தவை நினைவில் வருகின்றதா என பாருங்கள்..
புள்ளிப் புள்ளி மானே
துள்ளித் துள்ளிப் போகிறாய்!
அள்ளி இந்த புள்ளிகளை
யார் உனக்குத் தந்தது?
பென்னம் பெரும் காட்டில்
தன்னந் தனி போகையில்
உன்னுடலில் முள்ளுகள்
உறுத்துவதுமில்லையோ?
தப்பி எட்டி ஓடும் மானே
என்னிடம் நீ வந்தால்
புட்டிப்பாலும் தந்து போட்டு
உன்னை வளர்ப்பேன்..
கட்டி முத்தம் தருவேன்
காதணிகள் தருவேன்
குட்டிப்புள்ளி மானே
குதித்து ஓடி வாராய்!
புள்ளிப் புள்ளி மானே
துள்ளித் துள்ளிப் போகிறாய்!
அள்ளி இந்த புள்ளிகளை
யார் உனக்குத் தந்தது?
பென்னம் பெரும் காட்டில்
தன்னந் தனி போகையில்
உன்னுடலில் முள்ளுகள்
உறுத்துவதுமில்லையோ?
தப்பி எட்டி ஓடும் மானே
என்னிடம் நீ வந்தால்
புட்டிப்பாலும் தந்து போட்டு
உன்னை வளர்ப்பேன்..
கட்டி முத்தம் தருவேன்
காதணிகள் தருவேன்
குட்டிப்புள்ளி மானே
குதித்து ஓடி வாராய்!
Last edited by Nisha on Mon 14 Jul 2014 - 19:38; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
என்ன ஞாபகம் அக்கா...பாராட்டுக்கள்...Nisha wrote:சூப்பர் தொடருங்கள் ராகவன்!
நண்பன் சார்... ஹாசிம்சார். இன்னும் இலங்கை பாடதிட்டத்தில் படித்தவர்களுக்கு கீழே வரும் பாடல்கள் நினைவு வருகின்றதா என சொல்லுங்கள் பார்க்கலாம்.
தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு!
அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி!
அம்மா என்கிறது வெள்ளைப் பசு!
அதன் அண்மையில் ஓடுது கன்று குட்டி!
நாவால் நக்குது வெள்ளைப் பசு!
அதை முட்டிக் குடிக்குது கன்றுக் குட்டி!
ஐந்தாம் ஆண்டு தமிழ் பாடபுத்தக பாட்டு இதுவென நினைக்கின்றேன் என் நினைவாற்றல் சரியா என நீங்கள் சொல்லணும்.
கத்தரி தோட்டத்து மத்தியிலே
நின்று காவல் புரிகின்ற சேவகா
மெத்தக் கவனமாய்க்
கூலியும் வாங்காமல்
சேவை புரிபவன் வேறு யார்?
உன்னைப் போல்
சேவை புரிபவன் வேறு யார்?
வட்டமான பெரும் பூசணிக்காய் போல
வெள்ளை நிற உரு மாலைப்பார்..
மீதி பாட்டு நினைவில் வரவில்லைப்பா... !
பாடல்கள் இவ்வளவு இன்னும் வருவது மிகவும் ஆச்சிரியம்...
தொடருங்கள் நானும் வருகிறேன் உங்கள் பதிவில் ஓரத்தோடு.....
தொடரட்டும்....எல்லோரும் வந்து பதிந்தால் அவர் அவர் விளையாட்டுக்கள் விளிவரும்....
எனக்கு ஞாபகம் இருக்கு இங்கும் இப்படிதான் பாடல்கள் வரும் அக்கா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
தோ தோ நாய்க் குட்டி
துள்ளி ஓடும் நாய்க் குட்டி.
வெள்ளை நிற நாய்க் குட்டி.
வீரமான நாய்க் குட்டி!
எலியைப் பிடிக்க ஓடும்.
புலியைப் போல பாயும்!
திருடன் வந்தால் குலைக்கும்!
நன்றி உள்ள நாய்க் குட்டி!
நான் வளர்க்கும் நாய்க் குட்டி
இது நர்சரியில் படிச்சிருப்போம் தானே!
துள்ளி ஓடும் நாய்க் குட்டி.
வெள்ளை நிற நாய்க் குட்டி.
வீரமான நாய்க் குட்டி!
எலியைப் பிடிக்க ஓடும்.
புலியைப் போல பாயும்!
திருடன் வந்தால் குலைக்கும்!
நன்றி உள்ள நாய்க் குட்டி!
நான் வளர்க்கும் நாய்க் குட்டி
இது நர்சரியில் படிச்சிருப்போம் தானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
பட்டம் விடுவோம்
பட்டம் விடுவோம்
பாலா ஓடி வா!
பாடிப் பாடி
பட்டம் விடுவோம்
பாலா ஓடி வா!.
இன்னும் கீழே ஓரிரு அடி வரும் என நினைக்கின்றேன்..
அன்வர் குமார் சேர்ந்து வாருங்கள் எனபது போல் சமத்துவம் பேணும் வரி வரும்.
பாலர் வகுப்பு அல்லது முதலாம் வகுப்பு பாடப்புத்தகப்பாட்டு இது !

காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி குழந்தைக்கு மணி கொண்டு வா
பசுவே கிண்ணத்தில் பால் கொண்டு வா
பச்சைக்கிளியே பழம் கொண்டுவா
குருவி குழந்தைக்கு மணி கொண்டு வா
பசுவே கிண்ணத்தில் பால் கொண்டு வா
பச்சைக்கிளியே பழம் கொண்டுவா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
அணிலே அணிலே ஓடி வா,
அழகு அணிலே ஓடி வா,
கொய்யா மரம் ஏறி வா
குண்டுப் பழம் கொண்டு வா
பாதிப் பழம் உன்னிடம்
பாதிப் பழம் என்னிடம்
பங்கு போட்டு இருவரும்
கொரித்து கொரித்து தின்னலாம்!
அழகு அணிலே ஓடி வா,
கொய்யா மரம் ஏறி வா
குண்டுப் பழம் கொண்டு வா
பாதிப் பழம் உன்னிடம்
பாதிப் பழம் என்னிடம்
பங்கு போட்டு இருவரும்
கொரித்து கொரித்து தின்னலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
விளையாட்டுக்கள் இன்னும் நிறைய இருக்கு அடுத்து..
தெருவில் சென்று கோலி, பம்பரம், கில்லி, காத்தாடி, டயர்வைத்து பஸ் ஓட்டுதல், சிகரெட்அட்டை விளையாட்டு, லக்கி பிரைஸ் விற்பது, கோகோ, கபாடி, குதிரையேற்றம், கள்ளன் போலீஸ் இன்னும் நிறைய விளையாட்டுகள் விளையாடுவது உண்டு.
சிறு இடைவெளியில் நம்முடைய பழைய நினைவுகளை நினைத்துப் பார்க்கும்போது எவ்வளவு சந்தோசமாக உள்ளது. அதுவும் சிறுவயது ஞாபகங்கள் என்றென்றும் பசுமைமாறாத நினைவுகள். அதை எந்த காலத்திலும் நினைத்துப்பார்த்தால் நம்முடைய கவலைகள், இடறுகள், மனஅழுத்தம் இதிலிருந்து கொஞ்சம் விடுதலைதான்.
சிறுமிகளும் பல்லாங்குழி, பாண்டி, தாயம், சிட்டிக்கல் இன்னும் பல விளையாட்டுகள் விளையாடுவதை இன்று காணமுடிவதில்லை. .
கோலிக்கா என்றுகூட சொல்வார்கள். விதவிதமான கோலிக்காவை கடையில் வாங்குவதற்கு கடும்போட்டி.., கடையில் உள்ள ஒரு டப்பா கோலிக்கா சீக்கிரம் விற்றுவிடும். கோலிக்கா உருண்டையில் உள்ளே தெரியும் கண்ணை கவரும் வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் சிறுவர்களை அதிசயக்க வைக்கும். அந்த கோலிக்காவில் ஒரு உலகம் உண்டென்று நம்பி அவர்களை வழிநடத்தி செல்லும் கோலிக்காவை எவராலும் மறக்க இயலாது.
கோலிக்கா விளையாட்டில் மூணுகுழி, பேந்தான், ஒத்தகுழி, வட்டடிஸ், பொட்டல், இரட்டகோடு போன்றவை ரொம்ப இன்ரஸ்டிங்கான விளையாட்டுகள். பள்ளிக்கூடம் முடிந்தஉடனே பைக்கட்டை வீட்டில் போட்டு போறதுதான்., கருக்கலான (இருட்டியபின்) அப்புறம் அம்மா தேடிவரும்வரை கோலிக்கா விளையாட்டுதான். எங்கிருந்தாலும் குறிபார்த்து அடிப்பதில் கில்லாடியாக இருப்பவர்கள் இந்த விளையாட்டில் ஜொலிப்பார்கள்....
விதவிதமான கலர்களில் விற்கப்படும் பம்பரங்களை வாங்கிவந்து முதல்வேலையாக அதிலிருக்கும் சின்ன ஆணிய எடுத்துட்டு ஒரு பெரிய ஆணியை சைக்கிள் கடையில் கொடுத்து அடித்து அதில் சுழற்றிவிடும் பம்பரம் ஆடும் அழகு அழகுதான். உள்குத்து, ஆக்கர் போட்டு குத்துவாங்காத பம்பரமே கிடையாது.
விளையாடும்போது ரொம்ப ஜாலியாக இருக்கும். கிரிக்கெட்டின் முன்னோடியான இதில் எதிர்த்து விளையாடுபவனுக்கு கொடுக்கப்படும் மூணு சான்ஸில் அவன் அடிக்காதபோது வரும் குதூகலம் ரொம்ப அருமையாக இருக்கும். அவன் அடிக்க ஆரம்பிக்கபோகும்போது ஒண்ணு காக்கா, இரண்டு குருவி, மூணு கொக்கு என்று சொல்லி அவனது கவனத்தை திசைதிருப்பும்போது அவனால் அடிக்கமுடியாதபோது ரொம்ப சந்தோசமாக இருக்கும்.
காத்தாடி விளையாடுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். பனை ஓலையில் காஞ்சரம் முள்ளை சொருகி காத்தாடி காத்தாடி அழகாக சுத்து சுத்து என்று காற்றடிக்கும் திசையில் வைத்து காத்தாடியை சுற்றவைப்பது மகிழ்வான விளையாட்டு.
அப்பபா இன்னும் நிறைய இருக்கு வருகிறேன் இன்னும் ஞாபகம் உள்ளதை சொல்கிறேன்..

ம்ம் இன்னும் நிரமப் இருக்கின்றது ராகவன்.
முன் இரு பக்கம் வந்த வினா விடைப்பாடல் நான் ஏற்கனவே தொகுத்தவை தான். மீதி பக்கங்கள் வருவது சேனைக்கென தட்டச்சிட்டு பகிர்கின்றேன். சில நினைவலைகளை மீட்டி பார்க்கும் போது பாடல்களும் பாடங்களும் மீள நினைவுக்கு வரத்தான் செய்கின்றது.
அவ்வப்போது பகிர்கின்றேன்! மற்றவர் பகிர்தல் குறித்து அவ்ர்கள் தானே முடிவு செய்ய வேண்டும்.
முன் இரு பக்கம் வந்த வினா விடைப்பாடல் நான் ஏற்கனவே தொகுத்தவை தான். மீதி பக்கங்கள் வருவது சேனைக்கென தட்டச்சிட்டு பகிர்கின்றேன். சில நினைவலைகளை மீட்டி பார்க்கும் போது பாடல்களும் பாடங்களும் மீள நினைவுக்கு வரத்தான் செய்கின்றது.
அவ்வப்போது பகிர்கின்றேன்! மற்றவர் பகிர்தல் குறித்து அவ்ர்கள் தானே முடிவு செய்ய வேண்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
அக்கால விளையாட்டுக்கள் விட்டுகொடுத்தலையும் , சுய நலமின்றி பொதுனலமாய் சிந்திக்கும் படியும் உள ரிதியான பல மாற்றங்களையும் எமக்குள் விதைத்தது எனலாம்.
கிளித்தட்டு மறித்தல்,
கெந்தியடித்தல்,
கிட்டிப்புள்ளு அடித்தல்,
சடு குடு விளையாட்டு,
உச்சரிப்பு விளையாட்டு,
போர்த்தேங்காய் அடித்தல்,
ஊஞ்சல் பாட்டு விளையாட்டு,
கிச்சி மாச்சி தம்பலம்,
ஆடு புலி ஆட்டம்,
சங்கு விளையாட்டு,
ஆலாப்பறத்தல் விளையாட்டு,
எவடம் எவடம் விளையாட்டு,
கிள்ளுப்பிராண்டி விளையாட்டு,
பாட்டன் குந்து விளையாட்டு,
கொம்புமுறி விளையாட்டு,
பூசணிக்காய் விளையாட்டு அல்லது சுரக்காய் விளையாட்டு.
பூப்பறிக்கப் போதல் விளையாட்டு
என பல வகை விளையாட்டிக்களை நாம் விளையாடி இருப்போம்.
கிட்டிபுள் விளையாட்டு விளையாடி கன்னத்தில் தடியடி படாதோரை காண்பதரிதான காலம் அது!
கிட்டிபுள் எப்படி விளையாடுவார்கள் என பார்க்கலாமா?
கிளித்தட்டு மறித்தல்,
கெந்தியடித்தல்,
கிட்டிப்புள்ளு அடித்தல்,
சடு குடு விளையாட்டு,
உச்சரிப்பு விளையாட்டு,
போர்த்தேங்காய் அடித்தல்,
ஊஞ்சல் பாட்டு விளையாட்டு,
கிச்சி மாச்சி தம்பலம்,
ஆடு புலி ஆட்டம்,
சங்கு விளையாட்டு,
ஆலாப்பறத்தல் விளையாட்டு,
எவடம் எவடம் விளையாட்டு,
கிள்ளுப்பிராண்டி விளையாட்டு,
பாட்டன் குந்து விளையாட்டு,
கொம்புமுறி விளையாட்டு,
பூசணிக்காய் விளையாட்டு அல்லது சுரக்காய் விளையாட்டு.
பூப்பறிக்கப் போதல் விளையாட்டு
என பல வகை விளையாட்டிக்களை நாம் விளையாடி இருப்போம்.
கிட்டிபுள் விளையாட்டு விளையாடி கன்னத்தில் தடியடி படாதோரை காண்பதரிதான காலம் அது!
கிட்டிபுள் எப்படி விளையாடுவார்கள் என பார்க்கலாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
அப்பப்பா பழைய ஞாபகங்களை நினைவுக்கு கொண்டு வந்தீர்கள் நன்றி அக்கா
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
கிரிகெட் ஸ்டாம்ப் வித்தியாசமாய் இருக்கின்றதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
நண்டூருது நரிஊருது...
நண்டூருது நரிஊருது...
நண்டூருது நரிஊருது...
அக்குளு கிளு கிளு
கிள்ளிக் கிள்ளிப் பிறாண்டி
கீயா மாயாப் பிராண்டி
கொப்பன் தலையில் என்ன பூ....
{முருங்கைப்பூ)
முருங்கைப்பூவைத் திண்டவளே
முன்னடிக் கஞ்சி குடிச்சவளே
பாதி விளாங்காய் திண்டவளே
பாவட்டங் கையை ம-ட-க்-கு
நினைவிருக்கா?
நண்டூருது நரிஊருது...
நண்டூருது நரிஊருது...
அக்குளு கிளு கிளு
கிள்ளிக் கிள்ளிப் பிறாண்டி
கீயா மாயாப் பிராண்டி
கொப்பன் தலையில் என்ன பூ....
{முருங்கைப்பூ)
முருங்கைப்பூவைத் திண்டவளே
முன்னடிக் கஞ்சி குடிச்சவளே
பாதி விளாங்காய் திண்டவளே
பாவட்டங் கையை ம-ட-க்-கு
நினைவிருக்கா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
» யாழில் கடமையில் இருந்தபோது தூங்கிய சிப்பாய்! கடித்து எழுப்பிய நாகபாம்பு!!
» " நாம் "
» நட்புக்குள் நாம்
» நாம் நாமாக
» யாழில் கடமையில் இருந்தபோது தூங்கிய சிப்பாய்! கடித்து எழுப்பிய நாகபாம்பு!!
» " நாம் "
» நட்புக்குள் நாம்
» நாம் நாமாக
Page 3 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum