சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Khan11

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

+7
கவிப்புயல் இனியவன்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
ahmad78
ராகவா
Nisha
11 posters

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Sun 13 Jul 2014 - 23:02

First topic message reminder :

நான் சின்னவளாய் இருந்தபோது...
 
நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.
 
அப்படி ஒருசில பாடல்களை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..
 
பகிர்ந்துகட்டுமா... அப்படியே அவங்கவங்க அவங்கவங்க வீட்டில் இருக்கும் குட்டிபசங்களுக்கு சொல்லி கொடுக்கணுமாம்..

Last edited by Nisha on Sun 13 Jul 2014 - 23:39; edited 2 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Mon 28 Jul 2014 - 19:49

என்ன?
அன்னம்
என்ன அன்னம்?
சோற்று அன்னம்
என்ன சோறு
பழஞ்சோறு
என்ன பழம்
மாம்பழம்
என்ன மா
அரிசி மா
என்ன அரிசி
குத்தரிசி
என்ன குத்து
வயிற்றுக் குத்து.
என்ன வயிறு
பேத்த வயிறு
என்ன பேத்த
வால்ப் பேத்த
என்ன வால்
நரி வால்
என்ன நரி
குள நரி
என்ன குள
வாழைக் குள
என்ன வாழை
திரி வாழை
என்ன திரி
விளக்குத் திரி
என்ன விளக்கு
குத்து விளக்கு
என்ன குத்து

இந்தக் குத்து
என்று எதிர் பாராத விதமாக ஒரு குத்து ஒன்று கொடுத்து விடுவோம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Mon 28 Jul 2014 - 19:52

ராகவா wrote:அக்கா வீட்ட போனேன்
பழம் அரிசி தந்தாள்
வேண்டாம் என்று வந்தேன்
வந்த வழியில் பாம்பு
பாம்படிக்கத் தடிக்குப் போனேன்
தடியெல்லாம் ஊத்தை.
ஊத்தை கழுவ தண்ணிக்குப் போனேன்
தண்ணி எல்லாம் மீன்
மீன் பிடிக்க வலைக்குப் போனேன்
வலையெல்லாம் ஓட்டை
ஓட்டை தைக்க ஊசிக்குப் போனேன்
ஊசி எல்லாம் வெள்ளி
வெள்ளி எல்லாம்(அம்மா?) வெள்ளி
பொயிலைக் காம்பை நுள்ளி
வாய்க்கை போடடி கள்ளி.

வர்ரே வா!

இதுவும் சோமசுந்தரப்புலவர் பாடலா.. எனக்கு இது புதிய செய்தியாக்கும். இந்த திரியில் வரும் புலவர் பாடல்கள் இலங்கை பாடத்திட்டத்தில் நான்காம் ஐந்தாம் வகுப்பில் படித்திருக்கின்றோமே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Mon 28 Jul 2014 - 19:54

Nisha wrote:

அப்படியாக்கும்....நான் கொஞ்சம் ஞாபகம் உள்ளதை அள்ளி விட்டேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Mon 28 Jul 2014 - 19:55

கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று
காவல் புரிகின்ற சேவகா! - நின்று
காவல் புரிகின்ற சேவகா!
மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார்! - உன்னைப்போல்
வேலை புரிபவன் வேறுயார்?

கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்
காவல் புரிகின்ற சேவகா! - என்றும்
காவல் புரிகின்ற சேவகா!
எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக
ஏவல் புரிபவன் வேறுயார்? - என்றும்
ஏவல் புரிபவன் வேறுயார்?

வட்டமான பெரும் பூசினிக்காய் போல
மஞ்சள் நிற உறு மாலைப்பார்!- தலையில்
மஞ்சள் நிற உறு மாலைப்பார்!
கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!-இரு
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!

தொட்டு முறுக்காத மீசையைப்பார்! கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்! - கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்!
கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய
கட்டை உடைவாளின் தேசுபார்! - ஆகா
கட்டை உடைவாளின் தேசுபார்!

பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்
பொல்லாத பார்வையுங் கண்டதோ ? - உன்றன்
பொல்லாத பார்வையுங் கண்டதோ ?
வாட்ட மில்லாப்பயிர் மேயவந்த பசு
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே - வெடி
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே

கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக்கண்டு
கத்திக் கத்திக் கரைந்தோடுமே - கூடிக்
கத்திக் கத்திக் கரைந்தோடுமே
நள்ளிரவில் வருகள்வனுனைக் கண்டு
நடுநடுங்கி மனம் வாடுமே - ஏங்கி
நடுநடுங்கி மனம் வாடுமே

ஏழைக் கமக்காரன் வேளைக் குதவிசெய்
ஏவற்காரன் நீயே யென்னினும் - நல்ல
ஏவற்காரன் நீயே யென்னினும்
ஆளைப்போலப் போலி வேடக்காரன் நீயே
ஆவதறிந்தன னுண்மையே - போலி
ஆவதறிந்தன னுண்மையே

தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்
சேரச் சேரப் போலி வேடக்காரனென்று
தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று
தெரிய வந்ததுன் வஞ்சகம்

சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்
தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்
தேசத்திலே பலர் உண்டுகாண்
அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா
அறிவு படைத்தனன் இன்றுநான் - உன்னில்
அறிவு படைத்தனன் இன்றுநான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Mon 28 Jul 2014 - 19:58

புறப்படுவோமே மச்சான் புறப்படுவோமே
கட்டுவலை எடுத்துக் கிட்டுப் புறப்படுவோமே
கடல் கடந்து செல்வதற்குத் தோணியும் உண்டு
கட்டை சுறா உழுவைமீன் கடலிலே உண்டு

கடவுள் தந்த கைகளே முழுப்பட உண்டு
மச்சான் முழுப்பட உண்டு
கடல் கடந்து மீன்பிடிப்போமே - வீண்
கவலையற்று வாழ்ந்திடுவோமே

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Mon 28 Jul 2014 - 20:00

தைத்திருநாள்

தைத்திருநாள் இல்லமெல்லாம்
தளிர்த்திடும் தைப்பொங்கல்
இத்தனை நாள் காத்திருந்தோம்
இனிய தமிழ்ப்பொங்கல்

கூவி அழைத்திடும் சேவல்
குதித்தெழுவோம் குளிப்போம்
பூவெடுப்போம் புதிதணிவோம்
பொங்கலன்று நாங்கள்

கோலமிட்டு விளக்கேற்றிக்
கும்பிடுவாள் அம்மா
பாலெடுத்துப் பொங்கலுக்குப்
பானை வைப்பார் அப்பா

விரும்பிய மா வாழை பலா
விதவிதமாய்க் கனிகள்
கரும்பிளனீர் படைத்து மனம்
களித்திடுவோம் நாங்கள்

வெண்ணிறப்பால் பொங்கி வர
வெடி சுடுவோம் நாங்கள்
இன்னமுதப் பொங்கலுண்ண
இணைந்து நிற்போம் நாங்கள்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Mon 28 Jul 2014 - 20:02

காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்..
காணாத இடமெல்லாம் காணப்போனேன்..

கண்டு வந்த புதுமைகள்சொல்லக் கேழும்...
செட்டியார் வீட்டில் கல்யாணம்..
சிவனார் கோவிலில் விழாக்கோலம்..
மீன் பிடி துறையில் சனக்க்கூட்டம்...
மேரியின் வீட்டில் கொண்டாட்டம்..
கண்டிப்பக்கம் குளிரோ கடுமை..
காங்கேசந்துறையில் வெயிலோ கொடுமை
அப்பா மாமா அத்தான் கொழும்பில்
அவர்கள் சுகத்தை அறிவீரோ....
பொங்கல் அன்று வருவாராம்
புத்தகம் கொண்டு வருவாராம்
பந்தும் கொண்டு வருவாராம்
பாவை உனக்கு தருவாராம்...

காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்..
காணாத இடமெல்லாம் காணப்போனேன்..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Mon 28 Jul 2014 - 20:05

ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மானே மரகதமே - என் கண்ணே
மாசிலாக் கண்மணியே!

ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அப்பா வருவாரே – என் கண்ணே
ஆசமுத்தம் தருவாரே!

ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
மாமன் வருவாரே – என் கண்ணே
மாங்கனிகள் தருவாரே!

ஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணே
ஆராரிரோ ஆரிரரோ
அத்த வந்தாக்கா – என் கண்ணே
அல்லிப்பூ தருவாளே!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Mon 28 Jul 2014 - 20:06

ஞாயிற்றுக்கிழமை நகையைக் கானோம்
திங்கள் கிழமை திருடன் கிடைத்தான்
செவ்வாய்க் கிழமை செயிலுக்குப் போனான்
புதன் கிழமை புத்தி வந்தது
வியாழக் கிழமை விடுதலை ஆனான்
வெள்ளிக் கிழமை வீட்டுக்கு வந்தான்
சனிக்கிழமை சாப்பிட்டு படுத்தான்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Mon 28 Jul 2014 - 20:07

அதோ பாரு மாப்பிள
காசு கேட்டா குடுக்கல
உட்டான் பாரு வைத்துல
உழுந்தான் பாரு சேத்துல
தூக்கி உட்டான் மேடுல
'தெரிமா காசே' சொல்லல
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by ராகவா Mon 28 Jul 2014 - 20:19

பறவை எல்லாம் பாடுச்சு
பக்கம் வந்து தேடுச்சு

கறவை மாடு சிரிச்சுச்சு
கறந்து பாலும் தந்துச்சு..!

குடிச்சி பறவை மகிழ்ந்துச்சு
கூட்டம் சேர கத்துச்சு

பசிக்கு இங்கே வந்திட
பாடிப் பாடி அழைச்சிச்சு..!

எங்கிருக்கும் பறவையும்
எகிறிப் பறந்து வந்துச்சு

இனத்தின் குரலைக் கேட்டுச்சு
இறங்கி வந்து பார்த்துச்சு..!

கோமாதா நமக்கு எல்லாம்
குடிக்க பாலும் தந்துச்சு

கூடி நாமும் கூட்டம் போட்டு
`அன்னை' யென்று சொல்லுச்சு..!

பாதுகாக்கும் தாயாக
பட்டி தொட்டி சொல்லுது

சாதுவாக இருந்த அதுவும்
சினந்து காடு வெல்லுது..!

பறவைக் கூட்டம் நாமெல்லாம்
போற்றி அதை வணங்குவோம்

சிறகாய் நாமும் இருந்துமே
பறக்க வைத்து மகிழுவோம்..!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by நண்பன் Wed 6 Aug 2014 - 10:37

ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா.

காலை எழுந்ததும் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு
என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

சின்னஞ்சிறு குருவி போலே
நீ திரிந்து பறந்து வா பாப்பா
வண்ண பறவைகளைக்கண்டு நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா.

பாரதியார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Wed 6 Aug 2014 - 10:40

ஹைய் தும்பிக்கும் பாட்டுல்லாம் தெரியிதுப்பா!

பட்டம் விடுவோம் பட்டம் விடுவோம்
பாலா ஓடி வா..

பாடிப்பாடி பட்டம் விடுவோம் பாலா ஓடிவா..

அப்புறம் என்னன்னு உங்க மகள் கிட்ட கேட்டு எழுதுங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Wed 6 Aug 2014 - 10:43

கடகட வண்டி ரயில் வண்டி விரைவா போகும் ரயில் வண்டின்னு ஒரு பாட்du பாலர் வகுப்பு புத்தகத்தில் இருக்குதே..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by நண்பன் Wed 6 Aug 2014 - 10:45

சிறு வயது பள்ளிப்பாடல் பாடப்புத்தகத்திலுமுண்டு

கத்தரித் தோட்டத்து மத்தியில் நின்று
காவல் புரிகின்ற சேவகா – நன்று
காவல் புரிகின்ற சேவகா
மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார் - உன்னைப் போல்
வேலை புரிபவன் வேறுயார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Wed 6 Aug 2014 - 10:48

ராகவா wrote:அக்கா வீட்ட போனேன்
பழம் அரிசி தந்தாள்
வேண்டாம் என்று வந்தேன்
வந்த வழியில் பாம்பு
பாம்படிக்கத் தடிக்குப் போனேன்
தடியெல்லாம் ஊத்தை.
ஊத்தை கழுவ தண்ணிக்குப் போனேன்
தண்ணி எல்லாம் மீன்
மீன் பிடிக்க வலைக்குப் போனேன்
வலையெல்லாம் ஓட்டை
ஓட்டை தைக்க ஊசிக்குப் போனேன்
ஊசி எல்லாம் வெள்ளி
வெள்ளி எல்லாம்(அம்மா?) வெள்ளி
பொயிலைக் காம்பை நுள்ளி
வாய்க்கை போடடி கள்ளி.

நாங்கள் இந்த பாடலை சிறு சிறு மாற்றங்களோடு பாடுவோம்

அக்கா வீட்ட போனேன்
முத்துச்சிப்பி தந்தாள்
கொண்டோடி வந்தேன்
வழியெல்லாம் பாம்பு
பாம்படிக்கத்தடிக்குப் போனேன்
தடியெல்லாம் ஊத்தை
ஊத்தை கழுவ ஆத்துக்கு போனேன்
ஆறெல்லாம் மீன்
மீ்ன் பிடிக்க வலைக்கு பொனேன்
வலையெல்லாம் ஓட்டை
ஓட்டை தைக்க ஊசிக்கு போனேன்
ஊசியெல்லாம் வெள்ளி
வெள்ளியடி வெள்ளி
வானத்தில் வெள்ளி
போயிலைக்காம்பை நுள்ளி
போட்டு வாடி வள்ளி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Wed 6 Aug 2014 - 10:51

நான்காம் வகுப்பு ஐந்தாம் ஆண்டு தமிழ் பாடபுத்தகம்!
முதல் பாட்டும் பருத்தித்துறை ஊராம் பாட்டும் மூன்றாம் வகுப்பில் வரும்னு நினைக்கின்றேன்.

ரெம்ப ஆசைபடக்கூடாது, பெருமைபடக்கூடாது என்பது போல் அறிவுரையோடு வரும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by நண்பன் Wed 6 Aug 2014 - 10:53

அதோ பார் ரோடு
ரோட்டு மேல காரு
காருக்குள்ள யாரு?
நம்ம மாமா நேரு
நேரு என்ன சொன்னாரு?
எழுதப்படிக்க சொன்னாரு!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by நண்பன் Wed 6 Aug 2014 - 10:54

Nisha wrote: நான்காம் வகுப்பு ஐந்தாம் ஆண்டு தமிழ் பாடபுத்தகம்!
முதல் பாட்டும்  பருத்தித்துறை ஊராம் பாட்டும்  மூன்றாம் வகுப்பில் வரும்னு நினைக்கின்றேன்.

ரெம்ப ஆசைபடக்கூடாது, பெருமைபடக்கூடாது என்பது போல் அறிவுரையோடு வரும்.
கொஞ்சம்தான் நினைவிருக்கிறது அக்கா  *_ *_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Wed 6 Aug 2014 - 11:03

ஆமாமா! வயதானாலே எல்லாம் மறந்திரும் என் செல்லத்தாடித்தாத்தா!  :king: 

படித்தால் தானே நினைவுக்கு வரும் பள்ளிக்கூடம் போயிட்டு  பந்தடிச்சிட்டு வந்தால் பாடம் எங்கே நினைவில் இருக்கும் !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by நண்பன் Wed 6 Aug 2014 - 11:03

அடடடா அருமையான திரிகளைப் பார்க்கக் கிடைக்கிறது சிறு பிராயத்திற்கே அழைத்துச்செல்கிறீர்கள் அக்கா ராகவா பாராட்டுக்கள் தொடருங்கள் ஒரு திரியாக தொடர்ந்தால் இன்னும் இலகுவாக இருக்கும் எல்லாரும் அங்கயே பதியலாம் தொடருங்கள் உறவுகளே
நன்றியுடன் நண்பன்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by நண்பன் Wed 6 Aug 2014 - 11:09

மியா மியா பூனை
வீட்டை சுற்றும் பூனை
பாலை குடிக்கும் பூனை
பாய்ந்து செல்லும் பூனை
இடறு செய்யும் எலிகள்
இதனை கண்டால் நடுங்கும்
அடுத்த வீடும் ஓடும்
அங்கும் திருடித்தின்னும்
மடியில் அமர்ந்து கொண்டு
வாஞ்சையுடனே பார்க்கும்
பாப்பாவோடும் புரளும்
பாசம் காட்டி கொஞ்சும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by நண்பன் Wed 6 Aug 2014 - 11:10

சின்னத்தம்பி சின்னத்தம்பி.
சின்னத்தங்கை நித்திரையோ
நித்திரையோ நித்திரையோ
மணி அடிக்கிறது மணி அடிக்கிறது
எழும்புங்கோ எழும்புங்கோ

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Nisha Wed 6 Aug 2014 - 11:12

நண்பன் wrote:அடடடா அருமையான திரிகளைப் பார்க்கக் கிடைக்கிறது சிறு பிராயத்திற்கே அழைத்துச்செல்கிறீர்கள் அக்கா ராகவா பாராட்டுக்கள் தொடருங்கள் ஒரு திரியாக தொடர்ந்தால் இன்னும் இலகுவாக இருக்கும் எல்லாரும் அங்கயே பதியலாம் தொடருங்கள் உறவுகளே
நன்றியுடன் நண்பன்...

தலைமை நடத்துனராய் ஆலோசனை சொன்ன பின் கேட்காமல் இருப்போமா? ஒரே திரியாய் ஆக்கியாச்சு! அப்பாடா இப்பத்த்தான் எனக்கும் நிம்மதியாச்சு! !_ !_ 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by நண்பன் Wed 6 Aug 2014 - 11:13

தோ தோ நாய்க்குட்டி

துள்ளிவா நாய்க்குட்டி

வெள்ளை நிற நாய்க்குட்டி

நான் வளர்க்கும் நாய்க்குட்டி

கள்வன் வந்தால் குரைக்கும்
லொள் லொள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. ! - Page 5 Empty Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum