சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Khan11

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

+3
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by Nisha Sat 14 Nov 2015 - 3:18

First topic message reminder :

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Download

ஆம் ஒரே வார்த்தையாய் ... பேசாதே! பாராதே! செய்யாதே! இப்படி தே தே என தேவைக்கும் மேலேசொல்லும் போது சொல்லும் நமக்கு  நம் சொல் தேனாய் தான் இனிக்கின்றது. அதை நாமே செயல் படுத்தி பார்க்கும் போது தான் அதன் கஷ்ட நஷ்டம் புரிகின்றது...!

ஆனாலும்??

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி.என்பர்.அது எனக்கு இச்சூழலில் நன்கு பொருந்தும் எங்கேயோ எப்படியோ இருந்த நான் இந்தபக்கம் வந்து .. கண்ணை கட்டி காட்டில் விட்டது போல திக்குதெரியாமல்அலையும் படி ஆனதே என  முதல் நாள் நொந்தே போனேன்! வலையும் வேண்டாம், மீனும் வேண்டாம் ஆளை விடுங்கப்பா என சம்ஸிடம் சொல்லியும் ஆனது! 

ஆனாலும் குமார்  விடுவதாயில்லையே! தளம் திறந்ததோடு தன் வேலை முடிந்தது என செல்லாமல் என்னை ஊக்கப்படுத்தி அதை போடுங்க அக்கா இப்படி எழுதுங்க அக்கா என பதிவும் போட வைத்து... அதுக்கு விளம்பரமும் செய்து... இன்னும் கடவுட்,பேனர் தான் பாக்கி...எனும்படிக்கு  என்னை  பதிய வைக்க தன் சிந்தனை சிறகை விரித்து என் மனசெல்லாம் பரந்து பறக்கும் குமார் இருக்க என் மனதில் தோன்றுவதை பதிவதற்கு பயம் ஏன் எனும் தைரியத்தினையும் தந்து விட்டார். 

தம்பியுடையான் சண்டைக்கஞ்சானாம்.. நானும் அஞ்ச மாட்டேன்பா.. அதான் எங்க சேனைப்படை எனக்கு பாதுகாப்பா தினம் தினம்  திட்டி திட்டி, தட்டிக் கொட்டி .. அப்படி செய்யக்கா.. இப்படி செய்யக்கா உன் கூட யாமிருக்க பயமேனக்கா என வழி நடத்துகின்றதே! என் கைவிரலை பிடித்து வழி நடத்தி எழுத வைக்காதது தான் பாக்கி! 

நினைத்து பார்க்கின்றேன்.. இத்தனைக்கும்  நான் என்ன தவம் செய்தேன்? எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து வாழ்ந்து... இது வரை முகம் பாராமலே... மனம் உணர்ந்து என்னை உயிர்ப்பிக்கும் இவர்கள் அன்புக்கு நான் என்ன செய்து விட்டேன்?அபிப்ராய பேதங்களும் புரிதலின்மையும்.... உடன் பிறந்தோரையேயே விரோதியாக்கும் இக்காலத்தில் நிஷா அக்கா என அழைத்து அன்னையைபோல் பாசம் காட்டி என்னுள் அடங்கி என்னை அடக்கும் அன்பை கொட்டும் இவர்கள் யார்?

சொல்லத்தானே வேண்டும்!

எங்கள் சேனையில் அன்பு மட்டும் தான் பேசும். மதமும்,இனமும் மொழியும் பேசுவது என்ன.. உரசக்கூடச்செய்யாது. எம் அன்பு புரியாதோருக்கு புதிர் தான். புரிந்தோரோ... எம் ஜோதியில் தாமும் ஒருவராகி என்னுள் உயிர்ப்பர்!

ஆம் உயிர்ப்புத்தான்... மனிதம் மறந்த இப்பூவுலகில் மனிதராய் வாழ நாம் ஒவ்வொரு நொடியும் உயிர்க்க வேண்டி இருக்கின்றதே! எனக்கு மட்டும் விதிவிலக்காகுமா? 

என்னை சுற்றி ஒரு வட்டம் என்னை உயிர்ப்பிக்க.... இரவும் பகலும் இருபத்தி நான்கு மணி நேரமும் பாதுகாப்பாய் இருக்கின்றார்கள் என்பதே என்னை வானுயரும் உயரத்தில் கொண்டு போய் விட்டிருக்கின்றது என சொல்வேன்..! 

நாடோடியாய் புகலிடம் தேடி வந்த நாட்டில். நாலு பேர் பார்த்து ஆச்சரியப்பட நான் ஏதேனும் சாதித்தேன் எனில் அதற்கு முதல் காரணம் நான் கொண்ட இறை நம்பிக்கை எனில் இறையின் வழிகாட்டலாய் என்னை வழி நடத்தியதெல்லாம் என்சுரேஷ் அண்ணா,சுதா அண்ணா,முஸம்மில், சம்ஸ், ஹாசிம்,, குமார், பானு, ஜானி எனும்பெரும்படையணி தரும் உந்து சக்தி தான். இவர்களின் உற்சாகம் தரும் வார்த்தைகள் தான் என்னை இத்தனை நாளும் இயக்கியது என்பேன். 

பூஜ்ஜியமாயிருந்த என்னை... உன்னால் முடியும்மா.. நீ சாதிப்பே என என்னை உயர்த்திய ஒவ்வொருவர் பற்றீயும் அவர்கள் எனக்காக செய்தவை பற்றியும் தான் நான் முதலில் உங்களுடன் பகிரபோகின்றேன்.. 

நானும் பிறந்தேன், வாழ்ந்தேன், மறைந்தேன் என்றில்லாமல் எதையேனும் செய்தேன் என எவரேனும் சொன்னால் அதன் பின்னால் இறைவனின் கருணையோடு.. என் மேல் நான் கொண்ட நம்பிக்கையோடு ,என்னவர்,என் மகன், மகள்  துணை மட்டுமல்ல... என்னை சுற்று பூச்சரமாய் சூழ்ந்து நிற்கும் என் அன்பு பாசமலர்களும் தான் காரணம்..! 

எதையும் சொல்தல் எளிது தான்..அதை செய்தல் செந்தணலை கடப்பது  போலிருந்தாலும்... என் பாதம் படும் இடமெல்லாம் குளுமையாயிருக்க வேண்டுமே என எனக்காக பாடு படும் என் உடன் பிற்வாமல் என்னுடன் பிறப்பாய் ஆனோருக்கு இந்த வலைப்பூவும் பதிவுகளும் சமர்ப்பணம்!

இப்பட்டியலில் இனிமேல் இதை படிக்கும் நீங்களும் சேரலாம்.
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு

http://alpsnisha.blogspot.ch/2015/11/blog-post_14.html

Last edited by Nisha on Sat 14 Nov 2015 - 14:38; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by சே.குமார் Sat 19 Dec 2015 - 21:58

மிகச் சிறப்பான வரிகள் அக்கா...
வரிக்கு வரி எத்தனை தீவிரமாய்...
அவனை நொந்தும் பயனில்லை அக்கா...
அவன் நம்மை ஆட்டுவிக்கிறான்...
நாம்தானே ஆடுகிறோம்...
நம் ஆட்டத்தில்தான் ஏற்றத் தாழ்வுகள்...
அவனின் செயலில் அல்லவே...
கெட்டவனுக்கு கொடுத்தாலும்
நல்லவனை அவன் ஆபத்து சமயத்தில்
கைவிடுவதில்லை என்பதுதானே உண்மை...

கண்ணீர் கசிய வைக்கும் கவிதை...

நண்பன் சொன்னது போல் பத்திரிக்கைகளுக்கு எழுதுங்கள்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by நண்பன் Sat 19 Dec 2015 - 22:14

சே.குமார் wrote:மிகச் சிறப்பான வரிகள் அக்கா...
வரிக்கு வரி எத்தனை தீவிரமாய்...
அவனை நொந்தும் பயனில்லை அக்கா...
அவன் நம்மை ஆட்டுவிக்கிறான்...
நாம்தானே ஆடுகிறோம்...
நம் ஆட்டத்தில்தான் ஏற்றத் தாழ்வுகள்...
அவனின் செயலில் அல்லவே...
கெட்டவனுக்கு கொடுத்தாலும்
நல்லவனை அவன் ஆபத்து சமயத்தில்
கைவிடுவதில்லை என்பதுதானே உண்மை...

கண்ணீர் கசிய வைக்கும் கவிதை...

நண்பன் சொன்னது போல் பத்திரிக்கைகளுக்கு எழுதுங்கள்...

அண்ணா நான் சொன்னதை நீங்கள் புரிந்து கொள்ள வில்லை என்று நினைக்கிறேன் கணனியில் அக்கா ஈசியாக டைப் பண்ணி விட்டார்கள் ஆனால் நீங்கள் அக்காவிடம் கேழுங்கள் இந்தக் கவிதை எழுதும் போது கொஞ்சமாவது கண்ணீர் வர வில்லையா என்று

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by Nisha Mon 21 Dec 2015 - 1:38

நண்பன் wrote:இந்தக்கவிதையினைப் படிக்கும் போது கண் கலங்கி விட்டேன்
இதே  கவிதைதனை நீங்கள் ஒரு  பத்திரிகையில் எழுதியிருந்தால் நிச்சியமாக பத்திரிகை உங்கள் கண்ணீரிலே கரைந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்

ஆழமாக சிந்தித்தேன் எவ்வளவு மனவேதனை அவ்வளவையும் படைத்தவனிடத்திலே முறையிடும் விதம் மிக மிக அருமையாக உள்ளது  ஒரு வினாவாக உங்கள் கவிதை வரிகள் அமைந்திருக்கறது   அத்தோடு  

ஏன் என்ற கேள்விகள்  என்னுள் எழும் போதெல்லாம்
நானுந்தன் தெய்வம் என்றே நீ சொன்னாலும்
உன் சேயுறும் துயருன்னை  சேரவே இல்லையோ?
சொரிந்திடும் கண்ணீரை உண்ர்ந்திடாமலே
தூரமாய் நிறுத்தியே துயருர செய்வதேன்?
எனக்கு புரியவே இல்லையே!

தயாக இருந்தால் கண் முன்னே சேயுறும் துயர்தனை துடைத்தெறிவாள்  அதற்குமேலோனான படைத்தவன் நின்றுதுான் துயர் துடைப்பான்  அவனுக்கு நீங்கள் சேயுமில்லை அவன் உங்களுக்கு தாயுமில்லை  அவன் யாரயும் பெறவும் இல்லை பெறப்படவுமில்லை

துயறுரும் மானிடன் துயர் துடைக்க
துடிக்கும் கரங்களை  துயரிலாழ்த்துவதும்
துஷ்டராய்  துணிகர துன்பம் தருவோரை
தூணில் உயர்த்துவதுமாய் -உன்
நியாயங்களும், நீதிகளும், நியாயத்தீர்ப்புக்களும்
எனக்கு புரியவே இல்லை.

உள்ளத்தில் உனை இருத்தி .
உணர்விலே உன்னுடன் இயைந்து
உச்சி வானை தொட்டிட வேண்டாம்.
உள்ளம்துடிக்க கலங்கிடாமல்
காத்திடாமல் கலங்கடிப்பதேன்
என்றெனக்கு புரியவே இல்லையே!

அருமையான வரிகள் இந்த வரிகள்தான் என்னைக் கண்ணீர் வர வைத்தது  படைத்தவனிடம் மண்டியிட்டு நீங்கள் கரைந்துள்ளீர்கள் நிச்சியமாக  உங்கள் மனமுருகி நீங்கள் வைத்த கோரிக்கைகள்  அவன் அறிந்திருப்பான்  காத்திருங்கள்  காலம் கனியும்  இவனும் இரங்குவான்  இரக்கமுள்ளவன்  நல்லவர்களை  சோதிப்பான் கைவிட மாட்டான் கெட்டவர்களுககு நிறைய கொடுப்பான் கை விட்டு விடுவான்
கொஞ்சம் காத்திருங்கள் உங்கள் வேதனை மாறி காலம் கனியும்
உங்கள் உள்ளமும் குளிரும் பிராத்தித்தவனாக
மாறா அன்புடன் நண்பன்

அம்மாடியோவ்! எம்மாம் பெரிய பின்னூட்டம்!கண் கலங்க வைக்கும் பின்னூட்டம் தும்பியே! எனக்காக உங்கள் நேரத்தினை ஒதுக்கி படித்து கருத்திட நான் கொடுத்து வைத்துள்ளேன்பா. ரெம்ப நன்றி. எனக்கென வேண்ட நீங்களிருக்க நான் ஏன் கவலைப்படணுமாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by Nisha Mon 21 Dec 2015 - 1:43

உங்கள் பின்னூட்டம் என் கவிதையை விட அதிகம் சிந்திக்க வைக்கின்றதுப்பா!  அனைத்திலும் நிறைவாய் படைக்காமல் குறைகளோடு நடத்துவதனால் தான் நாம் இறைவனொருவன் இருக்கின்றான் என தேடுகின்றோம். நானும் கூடத்தான் அனைத்தும் நிறையாயிருந்தால் அவனை தேடுவேனோ என்னமோ?

ஆனாலும் எனக்குள் நெருடலாய் தகிப்பு தரும் விடயம்.. நல்லது நினைக்கும் நம்மைசோதிக்கும் இறைவன் சுயனலமாய் தமக்கு தமக்கென வாழ்ந்து சேமித்து  இரக்கம் காட்டாதோரை  மிக மிக வசதிவாய்ப்பில் உயர்த்தி வைப்பது ஏன் என தெரியவே இல்லையேப்பா. 

நம்மால்  உதவ முடியல்லயே எனும் கவலை மனதை அரிக்க.... இருப்பவர்களோ ஏன் உதவ வேண்டும் என நினைத்து வாழ்கின்றார்களேப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by Nisha Mon 21 Dec 2015 - 1:47

சே.குமார் wrote:மிகச் சிறப்பான வரிகள் அக்கா...
வரிக்கு வரி எத்தனை தீவிரமாய்...
அவனை நொந்தும் பயனில்லை அக்கா...
அவன் நம்மை ஆட்டுவிக்கிறான்...
நாம்தானே ஆடுகிறோம்...
நம் ஆட்டத்தில்தான் ஏற்றத் தாழ்வுகள்...
அவனின் செயலில் அல்லவே...
கெட்டவனுக்கு கொடுத்தாலும்
நல்லவனை அவன் ஆபத்து சமயத்தில்
கைவிடுவதில்லை என்பதுதானே உண்மை...

கண்ணீர் கசிய வைக்கும் கவிதை...

நண்பன் சொன்னது போல் பத்திரிக்கைகளுக்கு எழுதுங்கள்...

ஆமாம் திருந்தத்தான் வேண்டும் குமார். நன்றிப்பா.

அவர் சொன்ன பத்திரிகை காகிதமாக்கும். நான் காகிதத்தில் எழுதி இருந்தால் கண்ணீரில் காகிதம் கரைந்திருக்கும் என்கின்றார். ஹாஹா.. கொஞ்சூண்டு நிஜமும் தானே.. என் நிலை எண்ணி  நான் சிரிக்கவா முடியும். ஆனால் அழுதும் என்ன பலன் சொல்லுங்கள். 

சிலருக்கு வாழ்க்கையில் போராட்டம்.. எனக்கோ வாழ்க்கையே போராட்டம்.. போராட்டமே வாழ்க்கை.  ஏன் ஏன் இறைவனே என கேட்டாலும் என் காதை போல் அவன் காதையும் மூடிகொண்டு தான் இருக்கின்றான் போலும். 

Post by நண்பன் Mon 21 Dec 2015 - 8:42

Nisha wrote:
நண்பன் wrote:இந்தக்கவிதையினைப் படிக்கும் போது கண் கலங்கி விட்டேன்
இதே  கவிதைதனை நீங்கள் ஒரு  பத்திரிகையில் எழுதியிருந்தால் நிச்சியமாக பத்திரிகை உங்கள் கண்ணீரிலே கரைந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்

ஆழமாக சிந்தித்தேன் எவ்வளவு மனவேதனை அவ்வளவையும் படைத்தவனிடத்திலே முறையிடும் விதம் மிக மிக அருமையாக உள்ளது  ஒரு வினாவாக உங்கள் கவிதை வரிகள் அமைந்திருக்கறது   அத்தோடு  

ஏன் என்ற கேள்விகள்  என்னுள் எழும் போதெல்லாம்
நானுந்தன் தெய்வம் என்றே நீ சொன்னாலும்
உன் சேயுறும் துயருன்னை  சேரவே இல்லையோ?
சொரிந்திடும் கண்ணீரை உண்ர்ந்திடாமலே
தூரமாய் நிறுத்தியே துயருர செய்வதேன்?
எனக்கு புரியவே இல்லையே!

தயாக இருந்தால் கண் முன்னே சேயுறும் துயர்தனை துடைத்தெறிவாள்  அதற்குமேலோனான படைத்தவன் நின்றுதுான் துயர் துடைப்பான்  அவனுக்கு நீங்கள் சேயுமில்லை அவன் உங்களுக்கு தாயுமில்லை  அவன் யாரயும் பெறவும் இல்லை பெறப்படவுமில்லை

துயறுரும் மானிடன் துயர் துடைக்க
துடிக்கும் கரங்களை  துயரிலாழ்த்துவதும்
துஷ்டராய்  துணிகர துன்பம் தருவோரை
தூணில் உயர்த்துவதுமாய் -உன்
நியாயங்களும், நீதிகளும், நியாயத்தீர்ப்புக்களும்
எனக்கு புரியவே இல்லை.

உள்ளத்தில் உனை இருத்தி .
உணர்விலே உன்னுடன் இயைந்து
உச்சி வானை தொட்டிட வேண்டாம்.
உள்ளம்துடிக்க கலங்கிடாமல்
காத்திடாமல் கலங்கடிப்பதேன்
என்றெனக்கு புரியவே இல்லையே!

அருமையான வரிகள் இந்த வரிகள்தான் என்னைக் கண்ணீர் வர வைத்தது  படைத்தவனிடம் மண்டியிட்டு நீங்கள் கரைந்துள்ளீர்கள் நிச்சியமாக  உங்கள் மனமுருகி நீங்கள் வைத்த கோரிக்கைகள்  அவன் அறிந்திருப்பான்  காத்திருங்கள்  காலம் கனியும்  இவனும் இரங்குவான்  இரக்கமுள்ளவன்  நல்லவர்களை  சோதிப்பான் கைவிட மாட்டான் கெட்டவர்களுககு நிறைய கொடுப்பான் கை விட்டு விடுவான்
கொஞ்சம் காத்திருங்கள் உங்கள் வேதனை மாறி காலம் கனியும்
உங்கள் உள்ளமும் குளிரும் பிராத்தித்தவனாக
மாறா அன்புடன் நண்பன்

அம்மாடியோவ்! எம்மாம் பெரிய பின்னூட்டம்!கண் கலங்க வைக்கும் பின்னூட்டம் தும்பியே! எனக்காக உங்கள் நேரத்தினை ஒதுக்கி படித்து கருத்திட நான் கொடுத்து வைத்துள்ளேன்பா. ரெம்ப நன்றி. எனக்கென வேண்ட நீங்களிருக்க நான் ஏன் கவலைப்படணுமாம்?
அப்படியா அப்ப சரி ரோஜா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by நண்பன் Mon 21 Dec 2015 - 8:49

Nisha wrote:உங்கள் பின்னூட்டம் என் கவிதையை விட அதிகம் சிந்திக்க வைக்கின்றதுப்பா!  அனைத்திலும் நிறைவாய் படைக்காமல் குறைகளோடு நடத்துவதனால் தான் நாம் இறைவனொருவன் இருக்கின்றான் என தேடுகின்றோம். நானும் கூடத்தான் அனைத்தும் நிறையாயிருந்தால் அவனை தேடுவேனோ என்னமோ?

ஆனாலும் எனக்குள் நெருடலாய் தகிப்பு தரும் விடயம்.. நல்லது நினைக்கும் நம்மைசோதிக்கும் இறைவன் சுயனலமாய் தமக்கு தமக்கென வாழ்ந்து சேமித்து  இரக்கம் காட்டாதோரை  மிக மிக வசதிவாய்ப்பில் உயர்த்தி வைப்பது ஏன் என தெரியவே இல்லையேப்பா. 

நம்மால்  உதவ முடியல்லயே எனும் கவலை மனதை அரிக்க.... இருப்பவர்களோ ஏன் உதவ வேண்டும் என நினைத்து வாழ்கின்றார்களேப்பா!

உண்மைதான் படிக்கும் போது புரிந்தேன் நானும் இறைவனிடம் கேட்கிறோன் கொடுப்போருக்கு கொடு அமுக்குவோருக்கு கொடுக்காதே இது இன்று இப்போது வேண்டியது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Dec 2015 - 9:39

மனது கனக்கிறது வரிகள் பிரமாதம் வாழ்த்துகள் 

இறைவன் எமை ஆழ்கின்றவன் அவன் நாடியதை நாடியவருக்கு கொடுக்கிறான் அவன் நாடாதது எதையும் எம்மால் செய்திட முடிவதில்லை இவ்வுலகம் எமது பரிட்சைக் களம் அதில் உள்ள சிக்கல்களுக்கு நாம்தான் விடைதரவேண்டும் அதில் உள்ள அத்தனை சோதனைகளையும் சந்தித்தாக வேண்டும் அத்தனையிலும் வெற்றிகொண்டால்தான் இறைவனின் சன்னிதானத்தில் நாம் நல்லவர்களாய் திகழ்வோம் என்பது கோட்பாடு 

அருமையான கவிதைப் பகிர்வு தாமதமான பின்னூட்டத்திற்கு வருந்துகிறேன் நன்றி

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by சே.குமார் Tue 22 Dec 2015 - 20:37

நண்பன் wrote:
சே.குமார் wrote:மிகச் சிறப்பான வரிகள் அக்கா...
வரிக்கு வரி எத்தனை தீவிரமாய்...
அவனை நொந்தும் பயனில்லை அக்கா...
அவன் நம்மை ஆட்டுவிக்கிறான்...
நாம்தானே ஆடுகிறோம்...
நம் ஆட்டத்தில்தான் ஏற்றத் தாழ்வுகள்...
அவனின் செயலில் அல்லவே...
கெட்டவனுக்கு கொடுத்தாலும்
நல்லவனை அவன் ஆபத்து சமயத்தில்
கைவிடுவதில்லை என்பதுதானே உண்மை...

கண்ணீர் கசிய வைக்கும் கவிதை...

நண்பன் சொன்னது போல் பத்திரிக்கைகளுக்கு எழுதுங்கள்...

அண்ணா நான் சொன்னதை நீங்கள் புரிந்து கொள்ள வில்லை என்று நினைக்கிறேன்  கணனியில் அக்கா ஈசியாக டைப் பண்ணி விட்டார்கள் ஆனால் நீங்கள் அக்காவிடம் கேழுங்கள் இந்தக் கவிதை எழுதும் போது கொஞ்சமாவது கண்ணீர் வர வில்லையா என்று  
தங்கள் கருத்தில் பத்திரிக்கை என்றதும் நான் காகிதத்தில் எழுதுங்கள் என்று அர்த்தம் கொள்ளவில்லை...

அக்காவின் எழுத்துக்கள் பத்திரிக்கையிலும் வரணும் என்றுதான் அப்படிச் சொன்னேன்...

இப்போ அக்காவின் விளக்கம் மூலம் புரிந்து கொண்டேன்...

நன்றி நண்பா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by நண்பன் Tue 22 Dec 2015 - 20:48

நன்றி அண்ணா மிக்க மகிழ்ச்சி
புரிதலுக்கு நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by Nisha Tue 22 Dec 2015 - 20:49

இருப்பதில் எழுதவே நேரம் இல்லை.  இதில் இன்னும்  எழுதணுமா? ஆளை விடுங்கோப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by சே.குமார் Tue 22 Dec 2015 - 21:07

Nisha wrote:
சே.குமார் wrote:மிகச் சிறப்பான வரிகள் அக்கா...
வரிக்கு வரி எத்தனை தீவிரமாய்...
அவனை நொந்தும் பயனில்லை அக்கா...
அவன் நம்மை ஆட்டுவிக்கிறான்...
நாம்தானே ஆடுகிறோம்...
நம் ஆட்டத்தில்தான் ஏற்றத் தாழ்வுகள்...
அவனின் செயலில் அல்லவே...
கெட்டவனுக்கு கொடுத்தாலும்
நல்லவனை அவன் ஆபத்து சமயத்தில்
கைவிடுவதில்லை என்பதுதானே உண்மை...

கண்ணீர் கசிய வைக்கும் கவிதை...

நண்பன் சொன்னது போல் பத்திரிக்கைகளுக்கு எழுதுங்கள்...

ஆமாம் திருந்தத்தான் வேண்டும் குமார். நன்றிப்பா.

அவர் சொன்ன பத்திரிகை காகிதமாக்கும். நான் காகிதத்தில் எழுதி இருந்தால் கண்ணீரில் காகிதம் கரைந்திருக்கும் என்கின்றார். ஹாஹா.. கொஞ்சூண்டு நிஜமும் தானே.. என் நிலை எண்ணி  நான் சிரிக்கவா முடியும். ஆனால் அழுதும் என்ன பலன் சொல்லுங்கள். 

சிலருக்கு வாழ்க்கையில் போராட்டம்.. எனக்கோ வாழ்க்கையே போராட்டம்.. போராட்டமே வாழ்க்கை.  ஏன் ஏன் இறைவனே என கேட்டாலும் என் காதை போல் அவன் காதையும் மூடிகொண்டு தான் இருக்கின்றான் போலும். 
எல்லாம் சரியாகும் அக்கா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by சே.குமார் Tue 22 Dec 2015 - 21:08

Post by paransothi Wed 23 Dec 2015 - 21:50

சாதிக்க பிறந்தவர்களுக்கு எப்போவும் நல்ல துணைகளும் வழிகாட்டிகளும் கிடைப்பார்கள், அவர்களை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து செயல்படும் போது வெற்றிக்கான இலக்கு அருகில் வரும்.

நீங்க ஒரு சாதனையாளர்.

paransothi
புதுமுகம்

பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by Nisha Wed 23 Dec 2015 - 22:00

paransothi wrote:சாதிக்க பிறந்தவர்களுக்கு எப்போவும் நல்ல துணைகளும் வழிகாட்டிகளும் கிடைப்பார்கள், அவர்களை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து செயல்படும் போது வெற்றிக்கான இலக்கு அருகில் வரும்.

நீங்க ஒரு சாதனையாளர்.

நான் ஏதேனும் சாதித்தேன் என நீங்கள் சொன்னால் எனக்கு பின்னால் நீங்கள் என்னோடு இருந்ததும் முக்கிய காரணம் அண்ணா! என் பின்னாலிருந்து நீங்கள் காட்டிய ஊக்கம்,உதவிகள் மற்றும் முதலீடுகள் அனைத்தும் தான் காரணம். 

எமது ஈவன்ஸுக்கான முதல் விளம்பர நோட்டிஸ், விசிட்டிங்காட் உங்களால் தான் அடிக்கப்பட்டது. அப்படி நீங்கள் செய்தது தான் இன்று இத்தனைக்கும் வளர தூண்டுதலானது. அத்தோடு என் உடன் பிறப்புக்கள் தம் தேவைக்கு என்னை பயன் படுத்தி எம் தேவைக்கு விலகி நின்ற போதும்  ஹோட்டல் திறப்புக்கு என பணம் அனுப்பி வைத்தவரும் நீங்கள் தான் அண்ணா. நீங்களில்லா பொழுதில் நான் தனித்து அந்தரித்து போனேன் என்பது உங்களுக்கும் தெரியுமா? 

என்றும் போல்  நாம் தொடர்ந்திருந்தால் இன்னும் இன்னும்  உயர்ந்திருப்பொம் என்பது நிச்சயம். எனினும். நான் ஏதேனும் சாதித்தேன் எனில் அதற்கான பாராட்டு உனக்குரியது அண்ணா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Dec 2015 - 8:04

வாழ்க இருவரும் பல்லாண்டு பல பேறுகளுடன்

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by நண்பன் Thu 24 Dec 2015 - 9:14

பாச மலர்களின் உறவாடலைப் பார்க்கும் போது உள்ளம் குளிர்கிறது கண்கள் குளமாகிறது அவ்வளவுதான்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by நண்பன் Thu 24 Dec 2015 - 9:16

paransothi wrote:சாதிக்க பிறந்தவர்களுக்கு எப்போவும் நல்ல துணைகளும் வழிகாட்டிகளும் கிடைப்பார்கள், அவர்களை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து செயல்படும் போது வெற்றிக்கான இலக்கு அருகில் வரும்.

நீங்க ஒரு சாதனையாளர்.
நிஷா அக்காவின் சாதனையின் சூத்ரதாரி நீங்கள்தான் என்று அக்கா பல தடவை ஏன் நான் பேசும் ஒவ்வொரு தடவையும் சொல்லி இருப்பார் அண்ணா அண்ணா அண்ணா எத்தனை அண்ணா அத்தனையும் அண்ணாவிலும் உங்கள் பெயர்தான் வந்தது மிகவும் சந்தோசம் அண்ணா உங்கள் அன்பிற்கும் பண்பிற்கும்
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by Nisha Tue 5 Jan 2016 - 17:59

வா வா என்ற போது வராதே ஒளிந்து கொண்டாய் 
போய் வா என்ற போதும் திடமாய் பொழிந்தே தீர்த்தாய்
போதும் போதும் என்றோம், பொங்கிப்புலம்பித்தீர்த்தாய் 

வான்மகள் உன் சீற்றம் கண்டு பூமகளே கலங்கி நின்றாள்!

போகும் வழியெல்லாம்  உனதெனும் உரிமையினால் 
மடை திறந்தவளாய் தடைகளை தகர்த்தெறிந்தாய்! 

சென்ற வழிகளிலெல்லாம் தடுமாற்றம் தள்ளாட்டும்,
தடம் புரண்ட தேராட்டமாய சைந்தே தவிக்க வைத்தாய்! 

அகங்களில் கலக்கங்கள் அடைசலாய் நிறைத்திடவே 

ஏளியவர், ஏழைகள்,பணம் கொண்ட செல்வந்தர் 
பேதங்கள் மறைய,பசியெனும் கொடியோன் முன் 
அனைவரும் சமமென உணரச்செய்தாய்!

பாலுக்கும் பருப்புக்கும்  பாலகன் உணவுக்கும் 
பதறித்தவித்தே பல கை ஏந்த வைத்தாய் 
தண்ணீரால் எம்மை தனிமைச்சிறையிலிட்டாய் 
தாகம் தாகம் என்றே  நீருக்காய் தவிக்க வைத்தாய்!
 
சொந்தங்கள், பந்தங்கள் படை சூழ் வாழ்விலே 
கவலை எமக்கில்லை  கடனும் இனியில்லை 
பத்திரமாய் நாமிருக்கின்றோமெனும் பகற்கனவுக்கும் 
இடியாய் இறங்கி வந்தே அடி மேல் அடி அடித்தாய்!

இரத்தத்தில் ஊறிய உறவெனும் பந்தம் 
உள்ளத்தால் உரிமையாய் பதறியே துடித்திட
பிரமைகள்  மறைந்தே உணர்வுகள் எரிந்திட
மன்னிப்பின் மகிமையை மகத்துவமாக்கிட்டாய்!

வெள்ளமாய் வந்தே கசடுகள் களைந்து சென்றாய்! 
வெல்லமாய் இனித்த தீயோரை இனம் காட்டினாய்!
நல்லோர் யாரென்றே நலமாய் புரிய வைத்தாய்!
நாளைய தேவையதை நச்சென உணர்த்தி சென்றாய்!

தன்னலம் கருதாத  தன்னார்வத்தொண்டர்களின் 
எழுச்சிப்படையெடுப்பில் இளையோரை இனம் காட்டினாய்!
அகமதில் இகழ்ந்தவர்கள் மனக்குன்றில் உயர வைத்தே 
நாளைய  தலைவர்களை நயமாய் எடுத்துரைத்தாய்!
 
பணம் பொருள், நகை நட்டு, வீடு வாசல், பாத்திரம் பண்டமெனும்
பகட்டான வாழ்க்கையெல்லாம், பட்டென பறந்தோட
மந்தம் பிடித்தாட்டும் மதமும் மறைந்து போக
மனிதம் தளைத்ததனால் மனங்களை குளிர செய்தாய் !

மதங்களை மறைத்து,மனிதம் ஒளிர்ந்திடவே
மனங்கள் இணைந்ததால் சடுதியில் மாற்றங்கள்
இது தான் நிஜமெனும் உண்மை தனை உணர்த்தி
கனவுகளை கலைத்து,  நிதர்சனம் புரிய வைத்தாய்!
http://alpsnisha.blogspot.ch/2016/01/blog-post_5.html

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by சே.குமார் Tue 5 Jan 2016 - 22:02

கவிதை அருமை அக்கா...
வலிகளும் வேதனையும் ஆற்றாமையும் நிறைந்த நிதர்சனம்...

கவிதாயினி என்பதை நிரூபித்து விட்டீர்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 6 Jan 2016 - 7:38

உண்மை அருமையான வரிகள் பாடம் போட்ட கவிதை வாழ்த்துகள் அக்கா

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty வாழ்க்கை என்பது வரமாகட்டும்!

Post by Nisha Thu 14 Jan 2016 - 3:48

அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்!

சோதனைகள்  நேரம் சோர்ந்திடாதீர்கள் 
வாதைகள் கண்டு பயந்திடாதீர்கள்!
தோல்விகள் கண்டு துவண்டு விடாதீர்கள்!
சாதனைகளே தொடந்து வந்திட்டால்
வாழ்க்கை என்றுமே வரமாகாது!

வாழ்க்கைப்பாதையில் பயணம் செய்திட
துள்ளும் மனமதை அடக்கி வெல்லணும்
எள்ளல் வார்த்தையை எரிக்க தெரியணும்

வல்லவனே நீ செல்லுமிடமறிந்திடாவிட்டால் 
வாழ்க்கை என்பதுன் வரமாகாதே!

வெற்றி எனும் ஏணிப்படியில்
தோல்வி என்பது வேகத்தடை தானே!
சோதனை நேரம்  கலங்கி நின்றிட்டால்
சாதனை உன்னை கிட்டிச்சேராதே! 
வாழ்க்கை என்பதுன் வரமாகாதே!

சோதனை நேரம் ஒடுங்கி இருக்காமல் 
வேதனைகளை தாண்டி சென்றிட்டால்
வாழ்க்கை என்பதும் வரமாகுமே!

மனமார வாழ்த்துகின்றேன் , மனம் போல் வாழுங்கள்!

ஆரம்பமே அட்வைஸாக இருக்கின்றதே என என்னை திட்டாமல் பதிவை முழுமையாக படியுங்கள், பதிவின் இறுதி பகுதியில் இதற்கான பதில் உங்களுக்கு கிடைக்கும்,

அன்பானவர்களே! பிரச்சனைகளை கண்டு ஓடி ஒளியாதீர்கள், எனக்கு மட்டும் தானே  என உங்கள் நிலையில் மட்டும் பிரச்சனைகளின் சவால்கள் நேரம் சிந்திக்காமல் உங்களை காட்டிலும் கோடானும் கோடி மக்கள் உங்களுக்கு கிடைத்த வரம் இன்றி தவிக்கின்றார்கள் என உணர்ந்திடுங்கள்.  நமக்குக்கீழே உள்ளவர் கோடி என நினைத்து பார்த்து நிம்மதி தேடுங்கள்!

உங்களிடமிருப்பதை உணராமல் இல்லாததை தேடி ஓடாதீர்கள். கடவுள் நம்மிடமிருந்து ஒன்றை எடுத்தால் இன்னும் பலதை நமக்குள் மறைத்து வைத்திருப்பான் என புரிந்து மறைவாயிருப்பதை தேடி வெளிக்கொண்டு வந்து உங்களை நிலை நிறுத்துங்கள்.

நம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சவால் உண்டு. நமக்கெனும் இலக்கு உண்டு, பிறந்தோம்,வளர்ந்தோம், மறைந்தோம் என்றில்லாமல் நாம் வாழ்ந்தோம் என்பதற்கு சாட்சியாய் எதை விட்டு செல்ல போகின்றோம் என யோசிப்போம்.

நிர்வாணியாய் வந்தோம், அதே நிர்வாணியாய்  போவோம் எனும் நிலையில் கொண்டு வந்ததும் இல்லை , எடுத்து செல்லப்போவதுமில்லை என்பதை உணர்ந்து இப்பூமியின் பொக்கிஷ்ங்களும், வீடுவாசல்களும், நகை நட்டுக்களும், கற்கும் கல்விகளும் கூட நம்முடன் வராது எனும் போது நம்மிடம் இல்லாததை குறித்து ஏன் கவலைப்பட வேண்டும்.

நாம் சாதிக்கப்பிறந்தவர்கள் அன்பானவர்களே! சோதனைகள் தொடர்வதில்லை என உணர்ந்து சாதனையாளர்களாகுங்கள்.தயக்கங்கள் தடைகளை சுட்டுப்பொசுக்கி தைரியமாய் தன்னம்பிக்கையோடு வெளி வாருங்கள்.! உங்களால் முடியும்!

இன்னாளில் கவலைகள் மறையட்டும், கண்ணீர்கள் நீங்கட்டும், அன்பும் ஆரோக்கியமும் உங்களுக்குள் பொங்கட்டும்!

என்னுடைய 13  ஆவது வயதில்  இரண்டாம்  மாடியிலிருந்து  புதிதாய் கட்டடம் கட்ட அஸ்திவாரம் போடப்பட்டிருந்த  நிலத்துக்கு கீழான கான்கிரிட் தரையின் மேல் விழுந்ததனால் ஏற்பட்ட  உடல் உபாதைகள், தலைவலிகள், மன வலிகளில் தொடர்பாய். வாழ்க்கையே போராட்டமாய் ஆனாலும்... வாழ்ந்து காட்டும் வரம் தந்தேன் என எனை வாழ வைக்கும் இறைவனுக்கு நன்றி!

ஏற்கனவே ஐந்தாறு வயதில் கோயில் குளத்தில் குளிக்கும் போது பின்னந்தலை அடி பட விழுந்திருக்கின்றேன். அதன் பின் மீண்டும் பதிமூன்றாம் வயதிலும் விழுந்ததனால் மரணித்து போயிருக்க வேண்டிய என்னை மரணத்தின் பிடியிலிருந்து காத்து. என்னை சாதனையாளராக்கிய இறைவனுக்கும் நற்பழக்கவழக்கங்களை கற்பித்து அன்பு செய்யவும் அரவணக்கவும் கற்பித்த என் பெற்றாருக்கும், அறிவில்சிறந்து விளங்க காரணமான  ஆசிரியர்களுக்கும், உன்னால் முடியும் என சொல்லி என்னை ஊக்குவிக்கும் என் அன்பு கணவருக்கும், சோர்ந்து விழும் போதெல்லாம் தனக்கேற்ற படி.. என்னம்மா ஆச்சு கவலைப்படாதேம்மா ஜீசஸ் கிட்ட எல்லாம் சொல்லம்மா! அவர் எல்லாமே தீர்த்து வைப்பார் என சொல்லும் என் அன்பு செல்வங்கள் கப்ரியேல், எப்சிக்கும்....... 

எனக்கே எனக்குள் மறைந்திருந்த திறமைகளை வெளிகொணர செய்துஎன்னை ஈவன்ஸ் மனேஜ்மெண்டில் ஈடுபடுத்தி பின்னாலிருந்து வழி நடத்திய  முத்தமிழ் மன்ற சுதாகர் அண்ணாவுக்கும். தொடர்ந்து வழி நடத்தி வரும் அன்பு சுரேஷ் எனப்படும் பரஞ்சோதி அண்ணாவுக்கும்.. இற்றளவில் எனக்கொண்றென்றால் பதறித்துடித்து அன்னையாய் அரவணைக்கும்அன்பு செல்லத்தும்பி கட்டாரில்’இருக்கும் முஸம்மிலுக்கும்  என் பதிவுகள் மூலம் நன்றி செலுத்துகின்றேன்.

இந்த வலைப்பூவை நான் தொடங்க  என் இன்னொரு பரிமாணத்தினை வெளிப்படுத்த ஊக்க சக்தியாய் இருந்த மனசு குமாருக்கும், வலைப்பூ வடிவமைத்து தந்த அன்பு நண்பன் சேனைத்தமிழ் உலா சம்ஸுக்கும் என் நன்றிகள்!

இன்றில்லாவிடில் என்றேனும் நன்றி சொல்ல வாய்ப்புக்கிடைக்குமா எனும் நிலையில்லாத வாழ்க்கையை நாம் வாழ்வதனால் இப்பதிவில் நன்றி சொல்லி விட மனம் விளைகின்றது.

விபத்தின் தொடர்ச்சியாய் விளைவுகள் வினையாய் என்னை சுழட்டி அடித்தாலும் வாழ்ந்து தான் பார்க்கலாம் எனும் வைராக்கியத்தோடு  இற்றை வரை என் தன்னம்பிக்கையை தளர விடாது காத்துவர முடிவது இறைவன் அருளே!

விபத்தில் விளைவாய் வலிகள் என்னை தொடர்ந்தாலும் வாதைகள் என்னை வதைத்தாலும் என்னுடனிருக்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் என்றும் என்னுடன் வருவது போல் உங்கள் ஒவ்வொருவருடனும் வர வேண்டுகின்றேன்.!

மனமார வாழ்த்துகின்றேன் , மனம் போல் வாழுங்கள்!
அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்!

http://alpsnisha.blogspot.ch/2016/01/blog-post_14.html

Last edited by Nisha on Thu 14 Jan 2016 - 6:48; edited 3 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by *சம்ஸ் Thu 14 Jan 2016 - 3:57

நல்ல மனசும் தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் எதையும் செய்திடலாம் என்னாலும் முடியும் நானும் செய்வேன் என்று முயற்சி செய் வெற்றி நிச்சயம் என ஊக்கப்படுத்தும் பதிவுகள்!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by நண்பன் Thu 14 Jan 2016 - 19:13

அக்கா நீங்கள் கடந்து வந்த பாதையை சுருக்கமாக நீங்கள் தந்தாலும் அந்த சிறிய கட்டுரையில் பல ஆண்டுகளைக் கடந்துள்ளீர்கள் அதில் நீங்கள் பட்ட இன்னல்கள் சங்கடங்கள் கஷ்டங்கள் எல்லாவற்றையும் தாங்கி பொறுமையாக என்னாலும் முடியும் என்று நீங்கள் சாதித்துக் காட்டிய உயரம் இப்போது எங்களால் அன்னாந்து பார்க்க முடிகிறது மிக்க மகிழ்சியாக உள்ளது

உங்கள் மன தைரியம் தன்னம்பிக்கை உங்களை ஊக்கப்படுத்திய உங்கள் உறவுகள் குடும்பம் நண்பர்கள் அனைவருக்கும் இந்த நேரம் நானும் எனது சார்பாகவும் சேனைத் தமிழ் உலா சார்பாகவும் நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் முயற்சிகள் உங்களுடையதாய் இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு உரமூட்டிய உங்கள் உறவுகளுக்கு மீண்டும் நன்றி

சோதனைகள் நேரம் சோர்ந்திடாதீர்கள்
வாதைகள் கண்டு பயந்திடாதீர்கள்!
தோல்விகள் கண்டு துவண்டு விடாதீர்கள்!
சாதனைகளே தொடந்து வந்திட்டால்
வாழ்க்கை என்றுமே வரமாகாது!

வாழ்க்கைப்பாதையில் பயணம் செய்திட
துள்ளும் மனமதை அடக்கி வெல்லணும்
எள்ளல் வார்த்தையை எரிக்க தெரியணும்

வல்லவனே நீ செல்லுமிடமறிந்திடாவிட்டால்
வாழ்க்கை என்பதுன் வரமாகாதே!

வெற்றி எனும் ஏணிப்படியில்
தோல்வி என்பது வேகத்தடை தானே!
சோதனை நேரம் கலங்கி நின்றிட்டால்
சாதனை உன்னை கிட்டிச்சேராதே!
வாழ்க்கை என்பதுன் வரமாகாதே!

சோதனை நேரம் ஒடுங்கி இருக்காமல்
வேதனைகளை தாண்டி சென்றிட்டால்
வாழ்க்கை என்பதும் வரமாகுமே

இந்த அனைத்தையும் நான் மீண்டும் மீண்டும் படித்துப்பார்க்கிறேன் என் அண்ணனுக்கு இந்த வரிகளை காப்பி எடுத்து அனுப்பவுள்ளேன் தோல்வியில் சோந்து போகும் என் அண்ணனுக்கு இந்த வரிகள் மிகவும் பயனுள்ளதாய் அமையும்

அருமையான பாடல்களுடன் அற்புதமாக தன்னம்பிக்கை வரிகளை சுமந்து வந்த இந்தப் பாதை எனக்குப் பிடித்திருக்கிறது
பெரிய லைக் போட்டுள்ளேன் தொடருங்கள் அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by சே.குமார் Mon 18 Jan 2016 - 21:41

அன்பின் அக்கா...
கட்டுரை வலி தந்தது என்றாலும் அந்த வலியைக் கடக்கும் மனதைரியம் வேண்டும் என்பதையும் சொன்னது.

எனக்கு இணையம் கொடுத்த இணையற்ற நட்புக்களில் அக்காவாய் மலர்ந்தவர் நீங்கள். எனக்கு உங்களை சேனை வந்த பிறகுதான் தெரியும்... ஆனால் அதற்கு முன்னே என் எழுத்துக்களை தாங்கள் வாசீத்தீர்கள் என்பதை சேனை அறிமுகத்தில் நீங்க மனசு சே.குமாரா...? உங்களை நான் தொடர்ந்து வாசிக்கிறேன் என்ற வார்த்தைகளின் மூலமாகத்தான் என்னை தாங்கள் சில ஆண்டுகளாக தொடர்கிறீர்கள் என்று அறிந்தேன்

உங்களின் எழுத்துக்கள் சிறகில்லாப் பறவை... அதற்கு வானமே எல்லை என்பதை உணர்ந்துதான் வலைப்பூ ஆரம்பியுங்கள் என்று ஈவன்ட் மேனேஜ்மெண்ட் நடத்தி பிஸியாக இருக்கும் உங்களை நச்சரித்தோம்... அதில் வெற்றியும் கண்டோம்... இதற்கெல்லாம் நன்றி எதற்கு...?

உங்களின் வலிசார்ந்த வாழ்க்கையை நானும் அறிந்தவன் என்பதால் உங்கள் தன்னம்பிக்கை குறித்து வியப்படைவேன்... எத்தனை வலி என்றாலும் அதையும் சுகமாய் மாற்றி எங்களை... எங்களின் எழுத்துக்களை வாசித்து தட்டிக் கொடுத்து சுட்டிக்காட்டி மெருகேற்றும் தீபம் நீங்கள்.

உங்கள் வழிகாட்டுதலே எங்களுக்கு பலவிதத்தில் உதவியிருக்கிறது. என் அண்ணன் (மூத்த அண்ணன்) அவரின் திருமணத்துக்கு முன் லாரி ஆக்ஸிடெண்டில் தூக்கி வீசப்பட்டு தலை முழுவதும் தையல் போடப்பட்டது... அதன் பிறகு சிங்கப்பூர் போய் கன்ஸ்ட்ரக்சன் வேலையில் 7 வது மாடியில் இருந்து விழுந்து அதிர்ஷ்டவசமாக 5 வது மாடியில் கட்டைதட்டி உள்ளே விழுந்து கால் முறிவோடு பிழைத்துக் கொண்டவர்... இரண்டு வருடங்களுக்கு முன்னர் மைன்ஸில் வேலை பார்ப்பவர்களுக்கு தனது வண்டியில் நின்றபடி வேலை சொல்லிக் கொண்டிருக்கும் போது மேட்டில் நின்ற லாரி எப்படியோ இறங்கி வந்து வண்டியைத் தள்ளி வண்டியின் மீது ஏறி இவரின் இடது தொடையில் ஏறி நின்றது. பிழைப்பாரா.. மாட்டாரா என தவிப்பில் நாங்கள் எல்லாம் இறைவனிடம் வேண்டி, அழுது புலம்பி மீண்டும் எழுந்து வந்தார். இன்று அதே வேலைதான் பார்க்கிறார்... அவரிடமும் இருந்தது தன்னம்பிக்கை.

தன்னம்பிக்கை மிகுந்த ஒருவரால் எத்தனை பிரச்சினை என்றாலும் சாதிக்க முடியும்... அந்த தன்னம்பிக்கை உங்களிடம் நிறைய இருக்கிறது. நீங்கள் சாதிப்பீர்கள்... கண்டிப்பாக வலிகளை மறக்கும் சாதனைகளைச் செய்வீர்கள்...

எனக்கு இப்போதைய பிரச்சினைகளில் பிடி எழ விடாமல் பிடித்து வைத்திருப்பதை தாங்கள் அறிவீர்கள்... எப்பவும் கவலைப்படாதேப்பா... என்று சொல்லி என்னைத் தேற்றுவீர்கள்... உங்கள் நல்ல மனதுக்கு எதுவும் வராது அக்கா...

எல்லாம் சுகமே... இனி எல்லாம் உங்கள் வளர்ச்சியின் வாசல்களே....

அக்கா சும்மா அடித்து ஆடுங்கள்... வலி எல்லாம் போய் வசந்தம் விளையாடட்டும்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்! - Page 2 Empty Re: ஆல்ப்ஸ் தென்றலில்..... காதலை காதலோடு காதலியுங்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum