Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
கூகுளின் ‘மொழிபெயர்க்கும்’ வசதி! - சற்று விரிவான பார்வை
5 posters
Page 1 of 1
கூகுளின் ‘மொழிபெயர்க்கும்’ வசதி! - சற்று விரிவான பார்வை
கூகுளின் ‘மொழிபெயர்க்கும்’ வசதி! - சற்று விரிவான பார்வை
இணைய உலகில் கூகுளின் சேவை அளப்பரியது. ஆப்பிள் போன்ற பணக்கார நிறுவனங்கள், தங்களது முக்கிய மென்பொருட்களையும், சேவைகளையும் தனது பாவனையாளர்களிடம் அநியாய விலைக்கு விற்று பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் வேளையில், கூகிள் நிறுவனம் மட்டுமே இணைய பயன்பாட்டாளர்களுக்கு தனது பெரும்பாலான சேவைகளை இலவசமாக தந்து கொண்டு இருக்கிறது.
கூகுளின் அசைக்க முடியாத Number-1, இடத்தை மைக்ரோசாப்ட், யாஹூ உட்பட மற்ற இணைய உலகின் ஜாம்பவான்களாலும் தோற்கடிக்க முடியவில்லை. அதற்கு காரணம் கூகுளின் சேவைத்தரம் மற்றும் இலவச சேவைகளினாலுமே.
எப்போதும், எதிலும் இலவசங்களையே அதிகமாக விரும்பும் இந்தியா போன்ற பல நாடுகளில், கூகுளின் ஆதிக்கம் சற்றும் குறையாமல் இருக்கக் காரணமும் கூகுளின் இலவச சேவைகளினால் தான் என்பதை மறுக்கவியலாது.
குறிப்பாக, இணையதளத்தில் தமிழில் எழுதுவது என்பது குதிரைக்கு கொம்பு முளைக்கும் கதையாகவே இருந்து வந்தது. அதற்காக தமிழ் - தட்டெழுத்து பயிற்சியில் முறையாக தேர்ந்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்த நேரத்தில் கூகுள் அதிரடியாக google transliteration என்ற சேவையை தொடங்கியது.
அமெரிக்க பிரபல நாளிதழான Wall Street Journal - தமிழ் வடிவம் |
இந்த google transliteration என்பது, நாம் பேச்சு வழக்கில் தமிழில் பேசுவதை - ஆங்கிலத்தில் டைப் செய்யும்போது , அப்படியே தமிழில் மாற்றி தரும். அதாவது ‘வணக்கம்’ என்று நாம் பேச்சு வழக்கில் பேசுவதை ‘vanakkam’ என்று டைப் செய்தால் ‘வணக்கம்’ என்று தமிழில் மாற்றித்தரும். இதன் மூலம் முறையாக தமிழ் டைப்பிங் தெரியாதவர்கள் கூட மிக எளிதாக கணினியில் தமிழில் எழுத முடிந்தது.
ஆரம்பத்தில் இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் கூகுள் அதையும் எளிதாக மாற்றி google transliteration சேவையை ஒரு இலவசமென்பொருளாக மாற்றி நமக்கு தந்தது. அதை நாம் தரவிறக்கம் செய்து நமது கணினியில் நிறுவிக்கொண்டால் இணைய இணைப்பு இல்லாமல் எந்நேரமும் நம் கணினியில் தமிழ் மொழியில் டைப்பிங் செய்யலாம்.
தமிழ் தவிர மலையாளம்,கன்னடம்,தெலுங்கு,ஹிந்தி,பஞ்சாபி,மராத்தி,
ஒரியா,குஜராத்தி போன்ற பல இந்திய மொழிகளிலும் கூகுள் இந்த சேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.
இச்சேவையின் பலனால், இன்றைக்கு இணையத்தில் பிளாக்கர்கள் உட்பட பல தொழில்முறை சார்ந்த எழுத்தாளர்கள் பலரும் google transliteration மென்பொருளைப் பயன்படுத்தி எழுதி வருவது அப்பட்டமான உண்மை!
ஒரு ஆங்கில வலைப்பூ |
இப்படி எந்த சேவையை எடுத்துக்கொண்டாலும் அதில் தனக்கென ஒரு முத்திரை பதித்து, இணைய
பயன்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு தனி அங்கீகாரத்தை தக்கவைத்து கொண்டிருகிறது - கூகுள் நிறுவனம்.
சமீபத்தில் அறிமுகம் செய்திருக்கும் ஒரு மகத்தான புதிய சேவை தான் google translate என்கிற சேவை. அதாவது “ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு .... மொழிபெயர்க்கும் வசதி”.
வேறு எந்த நிறுவனங்களாலும் செய்யமுடியாத, இப்புதிய சேவையினால் கூகுள் உச்சத்தை எட்டும் அளவுக்கு தமிழ் இணைய ரசிகர்களின் மத்தியில் ஒரு மகத்தான வரவேற்பையும், வெற்றியையும் பெறும்
என்பதில் சற்றும் சந்தேகமில்லை.
காரணம், இச்சேவையினால் ஆங்கிலம், அரபி உட்பட ஏனைய மொழிகளில் இருக்கும் இணையதளங்களை நாம் இனிய தமிழில் வாசிக்க முடியும். அதேபோல நாம் தமிழில் எழுதுவதை அப்படியே ஆங்கிலம் உட்பட மற்ற மொழிகளிலும் மொழிபெயர்க்கவும் செய்யலாம்.
உதாரணமாக BBC News, USA Today, The Washington Post போன்ற உலக அளவில் பிரபலமான இணைய தினசரி பத்திரிகைகளையும், உலக அளவில் பிரபலமான எழுத்தாளர்களின் நூல்களையும் நாம் தமிழில் வாசிக்க முடியும்.
ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பெங்காலி
உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் கூகுள் இந்த சேவையை வழங்குவதால்
இது சாத்தியமாகிறது.
முதலில் http://translate.google.com
என்ற இந்த இணையதள முகவரிக்கு சென்று, எந்த மொழியிலிருந்து எந்த
மொழிக்கு மாற்ற வேண்டும் என்பதை தேர்வு செய்து அங்குள்ள காலி
பெட்டியில் இணையதள முகவரியை கொடுத்தால், அது நீங்கள் மாற்ற
நினைக்கும் மொழிக்கு மொழிபெயர்த்து காட்டும்.
நண்பர் நூருல் அமீன் எழுதிய தமிழும்- அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் |
உதாரணமாக From: English To: Tamil என்று தேர்வு செய்து கொண்டு ஒரு ஆங்கில
இணையதளத்தின் முகவரியை கொடுத்தால் அடுத்த சில நொடிகளில் அந்த ஆங்கில இணைய
தளம் வெகுஅழகாக தமிழில் காட்சி தரும்.
அதேபோல From: Tamil To: English என்று தேர்வு செய்து கொண்டு அந்த காலி
பெட்டியில் நீங்கள் தமிழ் மொழியில் எழுதினால் நீங்கள் எழுதியவை ஆங்கிலமாக
மாறிவிடும். அதுவே நீங்கள் எழுதியதை ஹிந்தியில் மொழிபெயர்க்க விரும்பினால் ஹிந்தி மொழியை தேர்வு செய்தால் போதும். இப்படியாக நீங்கள் எழுதியதை ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கலாம்.
இன்னும் சில கூடுதல் வசதிகள் :
* தமிழில் உள்ள ஒரு வார்த்தைக்கு கொரிய மொழியில் என்ன அர்த்தம்? என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
** கூகுளில் நமது தேடலை எந்த மொழியிலும் மேற்கொள்ளலாம்.
*** பல மொழிகளில் உள்ள யூ-ட்யூப் வீடியோக்களை உங்களுக்கு தெரிந்த மொழியில்
சப்-டைட்டிலோடு பார்த்து ரசிக்கலாம்.இந்திய மொழிகளில் இப்போதைக்கு ஹிந்தி
மொழி மட்டுமே சப்போர்ட் செய்கிறது.
**** இந்த பக்கத்துக்கு சென்று தான் நாம் எழுத வேண்டும் என்ற அவசியமில்லை. Word Pad- இல் எழுதியதை டாகுமெண்ட் பைலாக மாற்றி கொடுத்தாலும் போதும். சில நொடியில் - நாம் விரும்பிய மொழியில் மொழிபெயர்த்து கொடுக்கும். .இப்படியாக இன்னும் பல வசதிகளை கூகுள் நிறுவனம் மெருகேற்றித்தர இருக்கிறது.
இந்த சேவை இப்போது சோதனை முறைக்காக என்பதால் மொழிபெயர்ப்புகள்
முழுமையானதாக இல்லை. குறிப்பாக பிறமொழிகளின் பக்கங்களை தமிழில்
மொழிபெயர்க்கும் போது, நாம் எளிதாக புரிந்து படிக்கக்கூடிய
அளவில் முழுமையானதாக இல்லை. பெரும்பாலான பக்கங்கள் ‘தங்கிலிஷ்’ போலவே
இருக்கிறது.
என்றாலும் வரும் காலங்களில்,
கூகுள், இக்குறைகள் அனைத்தையும் நீக்கி இந்த
‘மொழிபெயர்ப்பு’ சேவையை முழுமையானதாக மாற்றித்தரும் என்பதில் எந்த
சந்தேகமும் இல்லை என்றே சொல்லலாம்.
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
Re: கூகுளின் ‘மொழிபெயர்க்கும்’ வசதி! - சற்று விரிவான பார்வை
அன்புடன் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
இதனை இங்கு பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்களும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
##* :”@: :”@:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
இதனை இங்கு பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்களும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
##* :”@: :”@:
Re: கூகுளின் ‘மொழிபெயர்க்கும்’ வசதி! - சற்று விரிவான பார்வை
அறிந்திடாத புதிய தகவல் நன்றி உறவே
உங்கள் ஆதரவு சேனைக்கு என்றும் தேவை
தொடருங்கள் என்றும்
நன்றியுடன்
நண்பன்
உங்கள் ஆதரவு சேனைக்கு என்றும் தேவை
தொடருங்கள் என்றும்
நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கூகுளின் ‘மொழிபெயர்க்கும்’ வசதி! - சற்று விரிவான பார்வை
நண்பன் wrote:அறிந்திடாத புதிய தகவல் நன்றி உறவே
உங்கள் ஆதரவு சேனைக்கு என்றும் தேவை
தொடருங்கள் என்றும்
நன்றியுடன்
நண்பன்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கூகுளின் ‘மொழிபெயர்க்கும்’ வசதி! - சற்று விரிவான பார்வை
புதிய தகவலை பகிர்ந்த தோழரே நன்றி தொடருங்கள் ...........
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அண்ட்ரோய்ட்: சற்று விரிவான பார்வை.
» கம்ப்யூட்டர் துறை வேலைவாய்ப்பு – சற்று விரிவான பார்வை!
» Search by Image: கூகுளின் பயனுள்ள புதிய வசதி
» கணினி துறையினருக்கான கூகுளின் பயனுள்ள வசதி [Programmers,Students]
» என்ன பார்வை உந்தன் பார்வை...!!
» கம்ப்யூட்டர் துறை வேலைவாய்ப்பு – சற்று விரிவான பார்வை!
» Search by Image: கூகுளின் பயனுள்ள புதிய வசதி
» கணினி துறையினருக்கான கூகுளின் பயனுள்ள வசதி [Programmers,Students]
» என்ன பார்வை உந்தன் பார்வை...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|