சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

பிள்ளையார் தெரு கடைசிவீடு - Pillaiyar Theru Kadaisi Veedu Khan11

பிள்ளையார் தெரு கடைசிவீடு - Pillaiyar Theru Kadaisi Veedu

2 posters

Go down

பிள்ளையார் தெரு கடைசிவீடு - Pillaiyar Theru Kadaisi Veedu Empty பிள்ளையார் தெரு கடைசிவீடு - Pillaiyar Theru Kadaisi Veedu

Post by நண்பன் Wed 27 Jul 2011 - 22:26

பிள்ளையார் தெரு கடைசிவீடு - Pillaiyar Theru Kadaisi Veedu Pillaiyar-theru-kadaisi-veedu-656

பிள்ளையார் தெரு கடைசி வீட்டில் வசிக்கும் ஒரு இளைஞனை பற்றிய கதை இது.
எண்பதுகளில் வந்த குடும்பக் கதை பார்முலா தான் இந்த படத்தின் ஆரம்ப ஒரு மணி நேர கதை. வேலை வெட்டி இல்லாமல் நான்கு நண்பர்களுடன் சுற்றும் ஹீரோ, நகரத்தில் கல்லூரியில் படிக்கும் (எப்போதும் அவனை திட்டிக்கொண்டே இருக்கும்) அவனது தங்கை அகிலா, மகன் செய்யும் தவறுகளை எப்போதும் மன்னிக்கும் அன்பு மிகுந்த தாய் (துளசி மேடம் இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள்?), கண்டிப்பான ஆனால் மகன் மீது மிகுந்த பாசம் கொண்ட அப்பா (ஜெயப்பிரகாஷ்), வெகுளியான மாமா என்று ஒரு அக்மார்க் தமிழ் கிராம குடும்பம். இவர்கள் வசிப்பது பிள்ளையார் தெருவின் கடைசி வீட்டில். இதை தவிர ஜெயப்பிரகாஷின் தங்கையை மணந்து கொண்ட பொறுப்பில்லாத குடிகார தந்தையாக இளவரசு, அவரது மகளாகிய சுஹாசினி என்று தனி டிராக் வேறு.
இப்படி அமைதியாக செல்லும் கதையில் கல்லூரி விடுமுறைக்காக தங்கையின் தோழி (சஞ்சிதா படுகோனே) ஊரில் வந்து தங்க, அப்போதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. தமிழ் சினிமா இலக்கணப்படி அவரிடம் காதல்கொள்கிறார் ஹீரோ. அதே சமயம் இளவரசு தன்னுடைய கடன்களை கட்டிய போஸ் வெங்கட்டுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்ய முடிவெடுக்க, (ஜித்தன் ரமேஷை கேட்காமலேயே) தன்னுடைய தங்கை மகளை மருமகளாக்க முடிவெடுக்கிறார் ஜெயப்பிரகாஷ். தந்தை சொல்லை தட்டவும் இயலாமல், தன்னுடைய காதலை சொல்லவும் இயலாமல் தவிக்கும் ரமேஷ், திடீரென்று சஞ்சிதாவை திருமணம் செய்துகொண்டு வந்து அனைவரையும் திகைக்க வைக்கிறார். ஆனால் அவர் திருமணம் செய்துகொண்டது வெறும் காதலுக்காக மட்டும் அல்ல என்பதே கதையை தூக்கி நிறுத்தும் ட்விஸ்ட். அது என்ன ட்விஸ்ட் என்பது சஸ்பென்ஸ்.
கதையின் தலைப்புக்கும் படத்திற்கும் முக்கியமான தொடர்பு இல்லையென்றாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வந்த படங்களிலேயே வித்தியாசமான தலைப்பை கொண்டது இந்த படமே என்பதை மறுக்கவியலாது. முதல் ஒரு மணி நேரம் வழக்கமான தமிழ் படம் தான். ஹீரோ எதற்காக டி.ராஜேந்தரின் விசிறி ஆக வருகிறார் என்பது கதைக்கு சம்பந்தம் இல்லையென்றாலும் ஓரிரு காட்சிகளை நகர்த்த உதவுகிறது. நண்பர்கள் காமெடி, படத்தின் ஆரம்ப காட்சி, ஹீரோ வருகை, நாயகியை சந்திப்பது, காதலை சொல்ல முயலும் காட்சிகள் என்று தொடர்ந்து பல காட்சிகள் மொக்கை என்றாலும் விறுவிறுப்பான இரண்டாம் பகுதி காரணமாக இவற்றை மன்னிக்கலாம்.
'ஜித்தன்' ரமேஷுக்கு இந்த படம் ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு மறு அவதாரம் என்றே கூற வேண்டும். அவர் ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது.
கதாநாயகி - சஞ்சிதா படுகோனே 'வேட்டைக்காரன்' படத்தில் விஜய்யின் தங்கையாக வருவாரே, அவர்தான் இவர். இந்த படத்தில் இவர் ஆரம்பத்தில் மொக்கையாக தெரிந்தாலும் படம் முன்னேற முன்னேற, தன்னுடைய நடிப்பிலும் முன்னேற்றத்தை காண்பித்துள்ளார், குறிப்பாக ரமேஷிடம் தன்னுடைய காதலை ஒப்புக் கொள்ளும்போதும், க்ளைமேக்சிலும் இவரது நடிப்பு அற்புதம். இந்த படம் இவருக்கு ஒரு முக்கியமான மைல்கல். ஆனால் அநேகமாக தமிழ் சினிமா இலக்கணப்படி இனிமேல் இவர் ஹீரோவின் தங்கையாகவோ, மாமனை கட்டிக்கொள்ள ஆசைப்படும் இரண்டாவது முறைப்பெண் ஆகவோ கூட மாறக்கூடும்.
'அத்தை மகனை எனக்கு கட்டி வச்சிடாத தாயி' என்று சாமியை வேண்டுவதாக சுஹாசினி கேரக்டர் உற்சாகமாக தொடங்கி, பிறகு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கேரக்டராக கரைகிறது.
ஜெயப்பிரகாஷ் தன்னுடைய டிரேட் மார்க் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மாமாவாக வரும் இளவரசு, தனது இயல்பான நகைச்சுவை கலந்த வில்லத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார். போஸ் வெங்கட் வில்லன் போஸ் கொடுத்து விட்டு கடைசியில் ரமேஷின் இரண்டு குத்தில் குப்புற படுத்துவிடுகிறார். சூரியின் காமெடி அவ்வப்போது சிரிக்க வைக்கிறது. பல காட்சிகளில் பேசியே வெறுப்பேற்றுகிறார்.
ரமேஷின் தங்கையாக வரும் அகிலாவும், அம்மாவாக வரும் துளசியும் ஆரம்ப காட்சிகளில் வழக்கமாக தெரிந்தாலும் படத்தின் க்ளைமேக்சில் அட்டகாசமாக ஸ்கோர் செய்கிறார்கள். அந்த நாற்பது நிமிடமும் படத்தின் உச்சகட்டம். பிரகாஷ்ராஜ் ஒரே ஒரு நாள் மட்டும் கால்ஷீட் கொடுத்தாரா என்ன என்பது தெரியவில்லை. ஆனால் அவர் வரும் அந்த இரண்டு காட்சிகளும் படத்தின் திருப்புமுனை.
பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு ஒரு கிராமத்தின் வனப்பையும், செழுமையையும் மிக சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது. ஏ.ஆர். மோகனின் கலைத்தன்மையின் அமைந்த வீடே படத்தின் தலைப்பாக கிடைத்தது பெருமை. பாடல்கள் எதிர்பார்த்த அளவிற்கு நமது செவிகளில் ரீங்காரம் இடவில்லை.
கலகலப்பாக கதை சொல்லி, கடைசியில் அழ வைத்து அனுப்ப வேண்டும் என்கிற முடிவோடு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் திருமலை கிஷோர். ஆனால் அதை திரையில் கொண்டு வர தடுமாறியிருக்கிறார். படத்தின் முக்கிய திருப்பங்களில் அதிர்ச்சி, ஆச்சர்யம் இருப்பது உண்மைதான், ஆனால் லாஜிக் இல்லையே. கதைக்கு ஜீவநாடியாக இருக்கும் அந்த உண்மைகளை அவர்கள் மறைத்து வைக்க வேண்டிய எந்த அவசியமும் இருப்பதாக தெரியவில்லை.
பிள்ளையார் தெரு கடைசி வீடு - வாஸ்து சரியில்லை!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிள்ளையார் தெரு கடைசிவீடு - Pillaiyar Theru Kadaisi Veedu Empty Re: பிள்ளையார் தெரு கடைசிவீடு - Pillaiyar Theru Kadaisi Veedu

Post by kalainilaa Wed 27 Jul 2011 - 22:36

பிள்ளையார் தெரு கடைசி வீடு - வாஸ்து சரியில்லை!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பிள்ளையார் தெரு கடைசிவீடு - Pillaiyar Theru Kadaisi Veedu Empty Re: பிள்ளையார் தெரு கடைசிவீடு - Pillaiyar Theru Kadaisi Veedu

Post by நண்பன் Wed 27 Jul 2011 - 22:38

kalainilaa wrote:பிள்ளையார் தெரு கடைசி வீடு - வாஸ்து சரியில்லை!
படம் பார்த்து விட்டீர்களா மாஸ்டர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிள்ளையார் தெரு கடைசிவீடு - Pillaiyar Theru Kadaisi Veedu Empty Re: பிள்ளையார் தெரு கடைசிவீடு - Pillaiyar Theru Kadaisi Veedu

Post by kalainilaa Wed 27 Jul 2011 - 22:43

நண்பன் wrote:
kalainilaa wrote:பிள்ளையார் தெரு கடைசி வீடு - வாஸ்து சரியில்லை!
படம் பார்த்து விட்டீர்களா மாஸ்டர்

சேனையில் இருப்பதால் பார்க்கவில்லை .
அந்த வார்த்தை பிடித்து இருந்தது ,அதனால் பதிவு செய்தேன் தோழரே .
நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பிள்ளையார் தெரு கடைசிவீடு - Pillaiyar Theru Kadaisi Veedu Empty Re: பிள்ளையார் தெரு கடைசிவீடு - Pillaiyar Theru Kadaisi Veedu

Post by நண்பன் Wed 27 Jul 2011 - 22:44

kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:பிள்ளையார் தெரு கடைசி வீடு - வாஸ்து சரியில்லை!
படம் பார்த்து விட்டீர்களா மாஸ்டர்

சேனையில் இருப்பதால் பார்க்கவில்லை .
அந்த வார்த்தை பிடித்து இருந்தது ,அதனால் பதிவு செய்தேன் தோழரே .
நன்றி .
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிள்ளையார் தெரு கடைசிவீடு - Pillaiyar Theru Kadaisi Veedu Empty Re: பிள்ளையார் தெரு கடைசிவீடு - Pillaiyar Theru Kadaisi Veedu

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum