சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

டி.ஆர். எப்போதும் உற்சாகமான மனிதர். அவருடனான ஒரு சந்திப்பு Khan11

டி.ஆர். எப்போதும் உற்சாகமான மனிதர். அவருடனான ஒரு சந்திப்பு

Go down

டி.ஆர். எப்போதும் உற்சாகமான மனிதர். அவருடனான ஒரு சந்திப்பு Empty டி.ஆர். எப்போதும் உற்சாகமான மனிதர். அவருடனான ஒரு சந்திப்பு

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 1:36

தட்டி பார்த்தேன் கொட்டங்கச்சி...'ன்னு தாளம் தட்டி பாடுகிறார். 'வாசம் இல்லா மலரிது...'ன்னு சொடுக்கு போட்டு ராகம் இழுக்கிறார். காதல் பேசினால் மகிழ்கிறார். அரசியல் பேசினால் சீறுகிறார். கோபம் கலந்து நியாயம் பேசி நெகிழ்கிறார். டி.ஆர். எப்போதும் உற்சாகமான மனிதர். அவருடனான ஒரு சந்திப்பு:

என்னாச்சு உங்களின் 'ஒரு தலை காதல்'?


'ஒரு தலை ராகம்' வந்து முப்பது வருஷம் ஆகிடுச்சு. இப்போ மறுபடியும் 'ஒரு தலை காதல்'. என் படங்கள் எப்போதும் யாருக்கும் மறக்க முடியாத அனுபவம். அதனால்தான் இதையும் அனுபவிச்சு எடுக்குறேன். என் படங்கள் எல்லாமும் பேசியிருக்கு. அன்பு சொல்லி நெகிழ வெச்சிருக்கு. காதல் சொல்லி கிறங்க வெச்சிருக்கு. பாசம் தந்து பாராட்டு வாங்கியிருக்கு. அதனால் இப்ப மறுபடியும் காதலுக்கு வர்றேன். காதல் சினிமாக்களில் என்னைப் பார்த்த ரசிகன், அப்படியே மீண்டும் என்னை அண்ணாந்து பார்ப்பான். நான்தான் ஹீரோ. இதே தாடிதான். வட இந்திய பொண்ணு ஹீரோயின். பெரிய நடிகர், நடிகைகள் பட்டாளமே நடிக்குது. இப்போ இருக்குற எல்லா திறமையான இயக்குநர்களுக்கும் டி.ஆர். சவால் விடுறான். நீங்கள் இதுவரை பார்க்காத, யோசிக்காத படம் இது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

டி.ஆர். எப்போதும் உற்சாகமான மனிதர். அவருடனான ஒரு சந்திப்பு Empty Re: டி.ஆர். எப்போதும் உற்சாகமான மனிதர். அவருடனான ஒரு சந்திப்பு

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 1:36

உங்க பாணியில் படம் எடுத்தா இப்ப ஓடுமா?


சினிமாவை அங்குல அங்குலமாக தெரிஞ்சு வெச்சிருப்பவன் நான். நான் படிச்ச படிப்பு எனக்கு சோறு போடலை. நான் நம்பி வந்த சினிமாதான் சோறு போட்டுச்சு. நான் வாழ்ற இந்த வாழ்வு தமிழ் ரசிகர்கள் தந்தது. சிலர் சொல்லுவது மாதிரி தமிழை நான் வாழ வைக்கலை. தமிழ்தான் என்னை வாழ வெச்சிருக்கு. மீண்டும் அந்த ரசிகனை திருப்திப்படுத்த வர்றேன். ஆனா இப்ப என் பாணியில் கதை சொன்னால் எடுபடாது. தங்கச்சி பாசம், அம்மா பாசம்ன்னு பார்த்து உருக ரசிகன் இல்லைன்னு எனக்குத் தெரியும். அதனால்தான் காதலை மீண்டும் கொண்டு வர்றேன். காதல் சினிமாதான் எனக்குக் கை வந்த கலையாச்சே. எல்லோரும் பாருங்க. இது புது படம். நானும் இப்போ புது ஆள். ரசிகனும் புதுசு. அப்ப என் கணக்கு சரிதானே பாஸ்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

டி.ஆர். எப்போதும் உற்சாகமான மனிதர். அவருடனான ஒரு சந்திப்பு Empty Re: டி.ஆர். எப்போதும் உற்சாகமான மனிதர். அவருடனான ஒரு சந்திப்பு

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 1:37

உங்க பாட்டுக்கும், இசைக்கும் ஒரு கூட்டமே இருந்துச்சே?


இப்பவும் இருக்கு. நிறைய படங்களில் என் பாட்டை ரீமிக்ஸ் பண்றாங்க. பாலிவுட்டிலும் என் பாட்டுக்கு ரீமிக்ஸ் உரிமை வாங்கியிருக்காங்க. எல்லாத்தையும் நானே உருவாக்கினேன். என் தனிப்பட்ட சாம்ராஜ்யம் அது. குத்துப்பாட்டை நான்தான் தூக்கிக் கொண்டு வந்தேன். இப்ப குத்து பாட்டு பச்ச தண்ணி குடிப்பது மாதிரி ஆகிவிட்டது. குழந்தை, அம்மா, மகள், தங்கை, அக்கான்னு எல்லாத்துக்கும் பாட்டு இருக்கு. இப்ப ஒரு பாட்டு அது மாதிரி வருதா? 'ஒரு தலைக் காதலில்' முரட்டுத்தனமா இசையை காதலிச்சு வாழ்ற கேரக்டர். இதுவரைக்கும் 108 பாட்டுக்கு டியூன் போட்டு, எட்டு பாட்டு மட்டுமே படத்தில் வெச்சிருக்கேன். எல்லாம் அதிரப் போகுது. காத்திருங்க.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

டி.ஆர். எப்போதும் உற்சாகமான மனிதர். அவருடனான ஒரு சந்திப்பு Empty Re: டி.ஆர். எப்போதும் உற்சாகமான மனிதர். அவருடனான ஒரு சந்திப்பு

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 1:37

சினிமா மேடைகளில் அடிக்கடி உங்களைப் பார்க்க முடியுதே?


நான் நிறைய மேடைகளைத் தவிர்த்து வந்திருக்கேன். எந்த மேடையும் எனக்காக அலங்கரிக்கப்படவில்லை. நான் போன பின்தான் அந்த மேடை அலங்காரமாகுது. 'உங்க வாழ்த்து வேணும்'னு வீட்டுக்கு வந்து கேட்குறாங்க. மறுக்க முடியலை. போய் வாழ்த்துறேன். நான் எதாவது பேசி பரபரப்பை உண்டாக்குவேன்னு எல்லோரும் காத்திருக்காங்க. யாருக்கும் பயப்படாமல் மனசில் பட்டதை பேசுறேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அதனால் யாருக்கும் பயப்பட வேண்டிய தேவையும் இல்லை. இன்னொரு கலைஞனை அங்கீகரிச்சுப் பேசுவதை என் கடமையாக நினைக்கிறேன். ஏன்னா, நானும் கலைஞன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

டி.ஆர். எப்போதும் உற்சாகமான மனிதர். அவருடனான ஒரு சந்திப்பு Empty Re: டி.ஆர். எப்போதும் உற்சாகமான மனிதர். அவருடனான ஒரு சந்திப்பு

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 1:38

சிம்புவின் இந்த உயரம், நிறைய பேருக்கு பொறாமைன்னு ஒரு விழாவில் பேசுனீங்க?


ஆமாம், நிறைய பேருக்கு சிம்புவைப் பார்த்து பொறாமை இருக்கு. ஆனா அவன் இன்னும் இன்னும் உயரங்களைத் தொடக் காத்திட்டு இருக்கான். சிம்பு இந்த இடத்துக்கு வந்து விடுவான்னு நினைச்சுப் பார்த்தீங்களான்னு கேட்குறாங்க. அவனுக்கு மூணு வயசு இருக்கும் போது லிட்டில் சூப்பர் ஸ்டார்ன்னு படத்துல பாட்டு வெச்சேன். மார்பிலும், தோளிலும் போட்டு வளர்த்து சினிமா சொல்லிக் கொடுத்தேன். இந்த உலகம் புரிய வெச்சேன். எல்லாமும் அவனுக்குத் தெரியும். இப்ப அவனா வந்து மேலே நிற்குறான். எல்லாமும் நல்லதாகவே நடந்திருக்கு. ஸ்கிரிப்ட் ரைட்டரா, சிங்கரா, நடிகரா, டைரக்டரா என்னை மாதிரியே எல்லாமும் தெரியுது. இந்த அப்பாவை மதிக்கிறான். சிம்பு இப்போ ரொம்ப தெளிவு. அவனை யாரும் குழப்ப முடியாது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

டி.ஆர். எப்போதும் உற்சாகமான மனிதர். அவருடனான ஒரு சந்திப்பு Empty Re: டி.ஆர். எப்போதும் உற்சாகமான மனிதர். அவருடனான ஒரு சந்திப்பு

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 1:38

அரசியலில் ஏன் திடீர்ன்னு அமைதியாயிருங்கீங்க?

யாரு சொன்னா? நான் எப்பவும் சீறும் பாம்பு. அதனால்தான் என்னை யாரும் அடக்க முடியலை. அடங்கியிருந்தா இந்த டி.ஆர். எப்பவோ காணாமல் போயிருப்பான். என்னோடு ஓடி வந்தவர்கள் இன்னைக்கு நிறைய பேர் இல்லை. நான் இன்னமும் நிற்கிறேன். அதுக்குக் காரணம் என்ன? சீட் தர்றேன்னு சி.எம். கூப்பிட்டாங்க. நான் போகலை. எம்.ஜி.ஆரை எதிர்த்தவன். கலைஞரை இப்போ எதிர்க்கிறேன். ஒவ்வொருத்தர் திறமையையும் பார்த்து மெய் சிலிர்த்திருக்கேன். அவங்க தவறுகளைப் பயப்படாமல் சுட்டி காட்டியிருக்கேன். பந்தி வைக்கிற இடத்தில் எதுக்கு பதுக்கி வைக்கணும். எந்த சாயத்தையும் நான் எடுத்து பூசிக்கலை. இன உணர்ச்சி உள்ள தமிழன் நான். தமிழனாகவே இந்த அரசியலைப் பார்க்குறேன். அரசியல் செய்றேன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

டி.ஆர். எப்போதும் உற்சாகமான மனிதர். அவருடனான ஒரு சந்திப்பு Empty Re: டி.ஆர். எப்போதும் உற்சாகமான மனிதர். அவருடனான ஒரு சந்திப்பு

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 1:39

ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழர்களின் போராட்டம் இப்ப எப்படியிருக்கு?


சட்டசபையில் தீர்மானம் போட்டிருங்காங்க. அதை மத்திய அரசுதான் எடுத்து போகணும். ஆனால் அவங்க பேசவே இல்லை. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு வேதனைப்படுற மாதிரி சிலர் நீலிக்கண்­ணீர் வடிக்கிறாங்க. ஈழத் தமிழர்களுக்கு கொடுமை செய்ததால்தான் திமுக விழுந்துச்சுன்னு நான் சொல்லுவேன். ஒவ்வொரு தமிழனும் திமுகவை வீழ்த்த காத்திருந்தான். அதைச் சரியாக செய்தும் விட்டான். இன உணர்ச்சி உள்ள தமிழன் இன்னும் உயிரோடு இருக்கான் என்பதற்கு வீழ்த்தப்பட்ட திமுகவே சாட்சி. இது தமிழர்கள் அத்தனை பேருக்கும் தெரியும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

டி.ஆர். எப்போதும் உற்சாகமான மனிதர். அவருடனான ஒரு சந்திப்பு Empty Re: டி.ஆர். எப்போதும் உற்சாகமான மனிதர். அவருடனான ஒரு சந்திப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum