சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

எத்தன் - Ethan Khan11

எத்தன் - Ethan

Go down

எத்தன் - Ethan Empty எத்தன் - Ethan

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 1:46

எத்தன் - Ethan Ethan-650

ஆயுள் நாட்களில் பாதியை கடனிலே கழிக்கும் இந்தச் சமுதாயத்தில், கடன் தொல்லையால் அவதிப்படும் ஒரு இளைஞனின் கதை.
தந்தையின் அறிவுரையை காது கொடுத்து கேட்காமல், கடன் வாங்கி தொழில் செய்து பெரிய நிலைமைக்கு வர துடிக்கும் இளைஞன் அந்த கடன்களாலேயே பாதிப்புக்கு உள்ளாகிறான்.
இதற்கிடையில், தன்னுடைய மாமன் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்லூரி மாணவி கேரக்டரில் சனுஷா. சனுஷாவின் தங்க செயினை விளையாட்டாக எடுத்து வைத்துக்கொண்டு கலாய்க்கும் விமல், அதை திருப்பி கொடுப்பதற்குள் ஏற்படும் விபரீதங்கள்.. அதிலிருந்து மீண்டு லட்சியத்தை எப்படி அடைகிறான் என்பது மீதிக்கதை.
விமலுக்கு அப்பாவாக ஜெயப்பிரகாஷ். அவர் பாடி லாங்வேஜ் மற்றும் டயலாக் டெலிவரி அசத்தல். பையனை பற்றி பெருமையாக மனைவியிடம் பேசும் காட்சி, இரவில் திருட்டு தனமாக சாப்பிடும் மகனிடம் பேசிக்கொள்ளும் காட்சி மிக எதார்த்தம். ஒரு அப்பாவின் மனநிலை என்னவென்று மிக அழகாக நடித்திருக்கிறார்.
விமல் - பிஸினஸ் செய்கிறேன், மிமிக்ரிக்காகவே தனியாக ஒரு லோக்கல் சேனல் ஆரம்பிக்க போகிறேன் பேர்வழி என்று ஊரெல்லாம் கடன் வாங்கிவிட்டு, கடன்காரன்கள் துரத்த ஓடிக்கொண்டே இருக்கும் கேரக்டர். யாரைப் பார்த்தாலும், தனது பார்வையாலேயே ஸ்கேன் செய்து அவரிடம் எவ்வளவு பணம் தேறும் என அவரிடமே சொல்லும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
கதாநாயகியாக வருகிறார் 'ரேணிகுண்டா' சனுஷா அழகாய் இருக்கிறார். விமல், சனுஷா ஜோடி நன்றாக இருக்கிறது. சில இடங்களில் நடிக்க சான்சு கிடைத்திருக்கு. மற்றபடி தாவணி பாவாடையில் மிக அழகாக வலம்வருகிறார்.
விமல் பேசும் அநேக வசனங்கள் அப்போதுதான் நெருப்பில் போட்டு எடுத்த மாதிரி அவ்வளவு சுடச்சுட... ஆயிரம் கோடி லோன் வாங்குனவனை விட்டுட்டு ஆடு, மாடு லோன் வாங்குனவனை சாகடிக்கிறீங்க. ஒவ்வொரு இந்தியனுக்கும் இவ்வளவு கடன் இருக்கு என்று புள்ளிவிபர புலியாக சீறுகிறார். ஜகஜ்ஜால கில்லாடியாக கடன் வாங்கும் அவர், அதே வேகத்தில் எஸ்கேப் ஆவதும் கூட ரசிக்கும்படியாக இருக்கிறது. மண்ணெண்ணை குளியல் போட்டு கடன்காரர்களை மிரட்டலாம் என்று நினைத்தால், தீப்பெட்டியோடு வேறொருவன் துரத்துவது அநியாய அதிர்ச்சி.
காமெடிக்கு விமலுடன் கூட்டு சேர்ந்தும், சேராமலும் அட்டகாசம் செய்கிறார் சிங்கம் புலி. இவர்களது காமெடியை வைத்தே பாதிப் படத்தை ஓட்டி விடுகிறார்கள். அதுவும் கலகலப்போடு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதுபோல இப்படம் முழுக்க அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கும் காமெடிகளிலிருந்து ஒரு காமெடி..
விமல் தனது நண்பனிடம்
'மாப்ளே.. ரெண்டு அம்பது வெச்சிருக்கியா?'
'ம்.. இந்தா..'
'சரி ஒரு அம்பதைக்குடு.. நாளைக்கு தர்றேன்..'
'அடப்பாவி.. சேஞ்ச் தானே கேட்டே..?'
'கடன்னு கேட்டா குடுத்திருக்கவா போறே?' 'சரி சரி விடு.. 50,000 குடுத்தவனே சும்மா போறான்.. வெறும் அம்பதை குடுத்துட்டு ஏன் முறைக்கிறே?'
நன்றாக நடிக்கும் மயில்சாமி டம்மியாகியிருக்கிறார். அவருக்கு பக்கத்திலிருக்கும் வில்லன் குடம் குடமாக பேசி கொந்தளிக்க வைக்கிறார். போங்க டைரக்டரே.... தனது மனைவியை உதாரணமாக்கி சாமியாரின் பெருமையை அடுக்கும் போது மட்டும் மயிலு சிரிப்பு வெடி போடுகிறார். எம்.எஸ்.பாஸ்கர் மட்டும் என்னவாம்? திரி ரொம்ப முக்கியம். இந்த ஒரு டயலாக் போதும். திடுதிடுக்கிறது தியேட்டர்.
கடன் கொடுப்பதற்கு முன்பு தனியார் வங்கிகள், தங்களது வாடிக்கையாளர்களிடம் தொங்கி விட்டு பின் கடனை வசூல் பண்ணும்போது அடாவடி செய்வதை படம் பிடித்துக்காட்டிய இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆனால் யார் தான் கடன்வாங்காமல் இருக்கப் போகிறார்கள்..?
'மழை உதிர் காலம்...' பாடல் நம்மை தாளமிட வைக்கிறது. இப்பாடலை மிகவும் அட்டகாசமாக பதிவு செய்திருக்கிறார் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கே.பி.ஆர். ரமேஷ். தாஜ்நூரின் இசை முதல் பாதியில் பின்னணி இசை மகா சொதப்பல். இரண்டாம் பாதி ஓரளவுக்கு ஓகே ரகம்.
கதாநாயகன் ஊர் முழுக்க கடன் வாங்கி என்ன செய்கிறார்? எந்த தொழில் செய்கிறார், எதனால் நட்டமடைகிறார் என்பதை சொல்லாமல் விட்ட இயக்குநர் க்ளைமாக்ஸை ஜவ்வு இழுப்பு இழுத்திருக்கிறார். இதை சரி செய்திருக்கலாம். சரி.. இயக்குநர் சுரேஷ் புதுசு என்பதால் மன்னித்து விட்டுவிடுவோம். கொஞ்சம் சிரித்து மகிழ எத்தனை ஒரு முறை பார்க்கலாம். காமெடிக்கு வாரண்டி! கரன்சிக்கு நோ கியாரண்டி!!
எத்தன் - காமெடி வசூல்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum