Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
நஞ்சுபுரம் - Nanjupuram
Page 1 of 1
நஞ்சுபுரம் - Nanjupuram
பாம்புகளை பார்த்தால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட பாம்பு படையே இருக்கும் ஒரு ஊரில் நடக்கும் படபட சம்பவங்களே நஞ்சுபுரத்தின் கதை.
நஞ்சுபுரம் என்று ஒரு கிராமம். மலைகளால் சூழப்பட்ட அந்த கிராமத்தில், பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அந்த கிராமத்தை சேர்ந்த பண்ணையார் மகன் ராகவ், ஒரு குழந்தையை காப்பாற்றுவதற்காக பாம்பை அடித்துக் கொல்கிறார். அவரை, நாகதோஷம் பற்றிக்கொண்டதாக பயமுறுத்துகிறார்கள்.
ராகவ்வுக்குக்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மோனிகாவுக்கும் இடையே காதல் துளிர் விடுகிறது. மோனிகாவை கொத்த வந்த இன்னொரு பாம்பை, ராகவ் செருப்பால் மிதித்து நசுக்குகிறார். அந்த பாம்பை அடிப்பதற்குள், அது தப்பி ஓடிவிடுகிறது.
அடிபட்ட பாம்பு, நாற்பது நாட்களுக்குள் அதை அடித்தவனை கடிக்காமல் விடாது என்று பயமுறுத்துகிறார்கள். பாம்பு வைத்தியர் ஆலோசனையின் பேரில், நான்கு தூண்கள் கட்டி அதன் மீது குடில் அமைத்து, ராகவை பாதுகாப்பாக வைக்கிறார்கள். இதற்கிடையில், மோனிகாவுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையுடன் திருமணம் நிச்சயிக்கிறார்கள். விடிந்தால் திருமணம் என்கிற நிலையில், ராகவ்வுக்கு அது நாற்பதாவது நாள். அன்று இரவு கழிந்துவிட்டால், பாம்பிடம் இருந்து அவர் தப்பிவிடலாம் என்கிற நிலை. ராகவ் உயிருக்கு பயந்து காதலை கைவிட்டாரா அல்லது காதலுக்காக உயிரை விட்டாரா? என்பது மீதிக்கதை.
வெறியா..? அல்லது பாம்புகள் பற்றிய நம்பிக்கைகளும் பயமுமா என்ற கேள்வியை பார்வையாளன் மனதில் மறைமுகமாக எழுப்பும் திரைக்கதையின் நேர்த்தியும், உள்ளடக்கமும், நஞ்சுபுரத்தை ஒரு படைப்பாக்குகிறது. ஒரு புரட்சிகரமான அல்லது கலகம் நிறைந்த திரைக்கதை எத்தனை குறைந்த செலவில் படமாக்கப்பட்டிருந்தாலும் அதன் உள்ளடக்கமே பார்வையாளனை தீண்டும் என்பதற்கு நஞ்சுபுரம் நல்ல முன்னுதாரணம்.
பங்கரைத் தலையுடன் சுற்றி வரும் ராகவ்வுக்கு இதுவொரு நல்ல ஆரம்பம். ஊருக்குள் தைரியமாக சுற்றி வரும்போதும் மோனிகாவைக் கரெக்ட் செய்யும் காட்சிகளிலும் கடைசியில் பயத்தால் நடுங்கி சாகும்போதும் நீட்டாகச் செய்திருக்கிறார்.
மோனிகாவுக்கு இந்த படத்திலும் அழுகாச்சி கேரக்டர்தான். ஆனால் அதிலேயும் கூட விதவிதமான சோகங்கள் காட்டி வியக்க வைக்கிறார். அம்மாவை 'சைடில்' வைத்திருக்கும் தம்பி ராமைய்யாவுக்கு தன் கையாலேயே சைட் டிஷ் தயாரித்து தர வேண்டியிருக்கிறதே என்கிற ஆத்திரத்தையும், இயலாமையும் அற்புதமாக வெளிப்படுத்துகிறார் ஒரு காட்சியில்! தனக்கு திருமணம் என்பதை பரணில் இருக்கும் ஹீரோவுக்கு செய்கையாலேயே உணர்த்தி தவிக்கிற வேறொரு காட்சி பரிதாபம்! நல்லவேளை... பாடல் காட்சியிலாவது சிரிக்க விட்டார்கள் இவரை.
வில்லனாகத் தம்பி ராமையா. 'மைனா'வுக்கு முன் ஒத்துக்கொண்ட படம் போல அவரும் இருக்கிறார் அவ்வளவே. மற்றபடி கடைசி காட்சியில் மோனிகாவுக்கு உதவி செய்யும் திருடனாக வருபவர் ஒருவரை நடிகர்களில் குறிப்பிட்டு சொல்லலாம்.
நாகதோஷம் இருக்கும் ஒருவனை பாம்பு கடித்து கண்ணாமுழியைப் பிடுங்கி கொலை செய்யும் முதல் காட்சியிலேயே இது வேறு மாதிரியான முயற்சி என்பதை சொல்லி விடுகிறார்கள். ஆனால் இது திகில் படமா, காதல் படமா, இல்லை சாதி சார்ந்து பேசும் படமா என பல விஷயங்களைப் போட்டுக் குழப்பி அடித்திருப்பதுதான் சிக்கல். முதல் பாதியில் ராகவ், மோனிகா காதலைச் சொல்லி பாம்பு தப்பித்து ராகவ்வை பரணில் ஏற்றுவதுவரை ஓகே. ஆனால் இடைவேளைக்குப் பின்னரும் அதே ரீதியிலான காட்சிகள் தொடர்ந்து வருவதும் கடைசி பதினைத்து நிமிடங்களில்தான் ராகவ்வுக்கு பயம் வருவது போலவும் திரைக்கதை அமைத்திருப்பது ரொம்பவே பொறுமையைச் சோதிக்கிறது.
இந்த கம்ப்யூட்டர் யுகத்தில், ஒருவனை கொல்வதற்கு ஒரு பாம்பு வஞ்சம் வைத்து துரத்துவது, காதில் முழம் கணக்கில் சுற்றப்படும் பூ. ராகவ் மிதித்த அதே பாம்பு மலைப்பிரதேசத்தில் அவரை துரத்துவது திகிலாக இருந்தாலும், நம்பமுடியாத காட்சி.
கதைநாயகி மோனிகாவின் அம்மாவை ஒரு கசாப்புக் கடை பெண்ணாக காட்சிப்படுத்திய வகையிலும், பாம்புகள் நிறைந்த காட்டில் ஆரோக்கியமாக வாழும் காதல் மனம் படைத்த திருடன், பூரான் கடித்து சாகும் போராளி என கதாபாத்திர ரீதியான கட்டுடைப்புக்கள் தமிழ் ரசிகனுக்கு புதிய அனுபவம்.
இடைவேளைக்குப்பின், தம்பி ராமையாவின் காமப்பார்வை மோனிகா பக்கம் திரும்புவது; மோனிகாவுக்கு கட்டாய திருமணம்; பாம்புக்கு பயந்து ராகவ் குடிலை விட்டு இறங்காமல் இருப்பது என காட்சிகள் அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. படத்தின் முடிவில், அந்த குட்டிப்பையன் கம்பை எடுத்து பாம்பை அடிக்கிற காட்சியில், தியேட்டர் அதிர்கிறது.
நடிப்பைப் போலவே ராகவ்வின் மற்றுமொரு ஆச்சர்யகரமான பங்களிப்பு இசை. பாம்பு படத்திற்கான மரபார்ந்த வாத்தியங்கள், மெட்டுக்களை, (மகுடி, முக்கியமாக புன்னாகவராளி) முற்றாக தவிர்த்திருப்பது படத்தை நவீனப்படைப்பாக்கி விடுகிறது. எல்லா பாடல்களுமே சூழ்நிலைக்கான தெரிவுகளாக ஃப்ரெஷ்ஷாக இருக்கின்றன. ராகவ் நினைத்தால் ஒரு முன்னணி இசையமைப்பாளராகவும் மிளிர முடியும் என்பதற்கு சாட்சிகளாக இருக்கின்றன.
ஆண்டனியின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சிகளும் நம்மை பயமுறுத்தியிருக்கிறது. அதுவும் பாம்பின் ஆக்ரோஷமான தாக்குதல் காட்சியை க்ளோஷப்பில் காண்பித்து நல்ல பாம்பை கூட அனகோண்டா பாம்பாக மாற்றியிருக்கிறது இவருடைய கேமரா.
திரைக்கதை அமைத்து இயக்கி இருப்பவர் சார்லஸ். கண்டிப்பாக இலக்கியப் பரிச்சயம் உள்ள மனிதராக இருப்பார் என நினைக்கிறேன். பயம்தான் விஷம் என்கிற விஷயத்தைக் கொண்டு போயிருக்கும் விதம் அழகு. ஐந்தறிவு உள்ள மிருகம் கூட சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு இருக்கிறது ஆனால் மனிதனுக்குள் இருக்கும் மிருகம்? இதுதான் படம் எழுப்பும் அடிப்படைக் கேள்வி. ஆனால் எத்தனை பேரை இது சரியாகப் போய் சேரும் என்று தெரியவில்லை. கடைசியில் சோகமாக முடித்தால்தான் படம் ஹிட்டு என்கிற வலைக்குள் மனுஷன் விழுந்ததும் ஏன் என்று புரியவில்லை. காதல் காட்சிகளைக் கொஞ்சம் குறைத்து திகில் காட்சிகளை இன்னும் கூட்டி இருந்தால் படத்தின் டெம்போ நன்றாக இருந்திருக்கும். இருப்பினும் இது ஒரு நல்ல முயற்சி என்கிற வகையில் இயக்குநருக்குப் பாராட்டுகள்.
நஞ்சுபுரம் - திகில்புரம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|