Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
வர்மம் - Varmam
2 posters
Page 1 of 1
வர்மம் - Varmam
பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துபவர்களை கொலை செய்யும் ஒரு பெண்ணின் கதை.
ஒரு பெண் முக்கியமான ஆட்களையெல்லாம் வரிசையாக போட்டுத் தள்ளுகிறாள். இடைவேளை நேரத்தில் அவிழ்க்கிறார்கள் ஜாக்கெட்டை! அதுவரைக்கும் நாம் நினைத்துக் கொண்டிருந்த அவள், அவளல்ல.... அவன்! ஏன்? எதற்கு? என்று விரிகிற பிளாஷ்பேக் 'போட்டு தள்றது சரிதாண்டா' என்ற எண்ணத்தை விதைக்கிறது ரசிகனின் மனசில்.
அது என்னமோ தெரியலை. இப்போ கோடம்பாக்கத்துல ஒரு புது ட்ரெண்ட் பரவிட்டு இருக்கு... அது என்னன்னா ஒரு பொண்ணு டிரஸ் மாத்தறதை செல்ஃபோன் மூலமா படம் பிடிச்சு மிரட்டி அவளை அடி பணிய வைப்பதும், அந்த வில்லனை சம்பந்தப்பட்ட பொண்ணோட ரிலேஷன் பழி வாங்கறதும்.. சமீபத்தில் ஹிட் ஆன 'யுத்தம் செய்' முதல் 'ஈசன்' வரை நிறைய உதாரணங்கள் சொல்லலாம். (எல்லாருக்குமே ஏதோ ஒரு இங்கிலீஷ் படம் இன்ஸ்பிரேஷன் போல)
ஆனா ஒரு விஷயத்தை பாராட்டணும். உல்டா பண்றவங்க, காப்பி அடிக்கறவங்க எல்லாருமே அவங்கவங்க ஸ்டைல்ல திரைக்கதைல அமைச்சு புது கதையோன்னு ஒரு பிரமையை ஏற்படுத்திடறாங்க.
ஹீரோ அகிலனை சதா சர்வ காலமும் விரட்டிக் கொண்டிருக்கும் ஹீரோயின் அனகா. இருவருமே புதுமுகம்! கெமிஸ்ட்ரி, பயாலஜி, ஸ்வாலஜி ஏதோ ஒன்று வரட்டுமே என்று நாம் காத்துக்கொண்டிருந்தால் இரண்டே இரண்டு டூயட்டோடு நமது எண்ணத்தையும், ஹீரோயினையும் நட்டாற்றில் விட்டு விட்டு கொலை செய்ய கிளம்பிவிடுகிறார் ஹீரோ.
பறந்து பறந்து சண்டை, பல டிகிரி உஷ்ணத்தில் முகம் என்று ஆக்ஷன் ஹீரோவுக்குரிய அத்தனை லட்சணங்களும் இருக்கிறது அகிலனுக்கு. குணச்சித்திர நடிப்புக்கு மட்டும் கொஞ்சம் பயிற்சி எடுக்கணும்.
குறும்பு கொப்பளிக்கிறது ஹீரோயின் அனகாவிடம். பைக்கில் சேறு அடித்துவிட்டு போகும் அவனை மடக்கி அவன் வீட்டுக்கே போய் அதையெல்லாம் அவிழ்த்து போட்டு துவைக்க சொல்லும் காட்சிகளில் ரொமான்ஸ் வழிகிறது தியேட்டரில்.
ஹாஸ்டல் பெண்களை ஸ்டேஷனில் வைத்து விசாரிக்கும் அதிகாரியிடம், எஸ்.ஐ. செய்யும் அட்வைஸ் நிஜ காவலர்களின் கவனத்திற்கு செல்ல வேண்டிய நல்ல மெசேஜ். திருநங்கைகள் சீன்களும் அவர்கள் பேசும் வசனங்களும் சலிப்பு. வில்லனாக பாலாசிங் நடித்திருக்கிறார். நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், புவனா ஆகியோரும் உள்ளனர்.
படத்தில் காமெடிக்கென்று கிரேன் மனோகர், பரோட்டா சூரி, சிசர் மனோகர் ஆகியோரெல்லாம் இருக்கிறார்கள். ஆனால் காமெடியைதான் காணோம். மீரா லால் என்ற புதியவர் இசையமைத்திருக்கிறார், பாடல்கள் பரவாயில்லை.
இடைவேளைக்குப்பிறகு காட்டிய அக்கறையையும், கவனத்தையும், படத்தோட ஓப்பனிங்ல காட்டத் தவறிட்டாரு இயக்குநர்.
லேடீஸ் ஹாஸ்டல்ல ஒரு ஆண் பெண் வேஷம் போட்டு ஒரு நைட் தங்கறதும், அங்கே ஹால்ல 8 பேர் வரிசையா படுத்திருக்கறப்ப ஒரு பொண்ணுக்கிட்டே போய் கட்டிப்புடிக்கற மாதிரி ஃபோட்டோ எடுத்துக்கறதும் நடைமுறைல சாத்தியமே இல்லாத விஷயங்கள்.
லேடீஸ் ஹாஸ்டலில் வார்டன் அஜாக்கிரதையாக இருந்தால் என்ன பின் விளைவுகள் ஏற்படும் என்பதை வைத்து ஒரு க்ரைம் த்ரில்லர் தர முயற்சி செய்திருக்கும் இயக்குநர், சஸ்பென்ஸ் வைக்கிறேன் பேர்வழி என நம்மை முட்டாளாக்கியிருக்கிறார்.
வர்மம் - பழிதீர்த்தல்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வர்மம் - Varmam
வரிசையா படுத்திருக்கறப்ப ஒரு பொண்ணுக்கிட்டே போய் கட்டிப்புடிக்கற மாதிரி ஃபோட்டோ எடுத்துக்கறதும் நடைமுறைல சாத்தியமே இல்லாத விஷயங்கள்.
லேடீஸ் ஹாஸ்டலில் வார்டன் அஜாக்கிரதையாக இருந்தால் என்ன பின் விளைவுகள் ஏற்படும் என்பதை
விமரிசனம் அருமை....
லேடீஸ் ஹாஸ்டலில் வார்டன் அஜாக்கிரதையாக இருந்தால் என்ன பின் விளைவுகள் ஏற்படும் என்பதை
விமரிசனம் அருமை....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|