சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

நர்த்தகி - Narthagi Khan11

நர்த்தகி - Narthagi

Go down

நர்த்தகி - Narthagi Empty நர்த்தகி - Narthagi

Post by நண்பன் Fri 29 Jul 2011 - 22:23

நர்த்தகி - Narthagi Narthagi-649

திருநங்கைகளின் வாழ்க்கை போராட்டத்தை சித்தரிக்கும் கதை.
குடும்பத்தினராலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்ட பெரும்பாலான திருநங்கைகளைப்போல தெருவோரங்களில் பிச்சையெடுத்துக் கொண்டிருக்காமல் பாலியல் தொழிலுக்கு யாரையும் அழைத்துக் கொண்டிருக்காமல் தான் படித்த படிப்பின் துணைகொண்டு சமுதாயத்தில் கௌரவமாக வாழ்ந்து கொண்டும் தன்னைச் சேர்ந்த சக திருநங்கைகளையும் கைதூக்கி விட்டுக் கொண்டிருக்கும் திருநங்கை கல்கியின் உணர்வுகள், பாசத்திற்கான ஏக்கங்கள், காதல் ஆகியற்றைச் சொல்லும் படம் தான் இந்த 'நர்த்தகி'.
தஞ்சாவூரில் ஒரு சிறிய கிராமத்தில் சிலம்பு வாத்தியாருக்கும், நாட்டியப் பெண்மணிக்கும் பிறந்தவன் சுப்பு. சிறுவயதில் அம்மாவின் பரத நாட்டியத்தைப் பார்த்து தானும் ஆடுகிறான். இதற்கிடையே மீனா என்ற அத்தைப் பெண்ணுக்கும் சுப்புவுக்கும் எதிர்காலத்தில் திருமணம் என்று பெற்றோர் முடிவு கட்டுகின்றனர்.
"நான் எனக்குள் பெண்மையை உணர்கிறேன் அம்மா... சில சமயங்களில் பெண்களின் ஆடைகளை அணிந்து ரசிக்கிறேன்... என பெற்றோரிடம் சொல்ல, அவர்களோ அவனை துரத்தியடிக்கின்றனர். அதன்பிறகு சுப்புவின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தது என ஆணாகப் பிறந்த ஒரு திருநங்கையின் (அரவாணி) வாழ்க்கைக் கதையை வண்ணம் குறையாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விஜயபத்மா.
சிறுவயதில் சுப்புவாக வந்து அந்தப் பையன் நளினமாக கலக்குகிறான். உடன் படிக்கும் பையன் பாஸ்கரனின் உடம்பு தன் மேல் உராயும்போது ஒரு பெண் என்னவிதமான உணர்ச்சிகளை வெளிக்காட்டுவாளோ அதை அப்படியே கொண்டுவந்திருக்கிறான் அந்த விடலை பையன்.
"நான் ஒரு அரவாணி... நீ என் பக்கத்துல வந்தா எனக்கு... எந்த உணர்ச்சியும் வரமாட்டேங்குது மீனா... என்று படாரென சுப்பு, நாயகியிடம் விஷயத்தைப் போட்டு உடைக்கும்போது நமக்கே சங்கடமாக இருக்கிறது. அரவாணி எனத் தெரிந்தபின்னும் மாமா பையனுடன் அந்த மீனா கேரக்டர் கட்டிப் புரள ஏங்குவது டூ மச். தவிர்த்திருக்கலாம்.
திருநங்கை ஒருவரே முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது இதுவே முதல் முறை. கல்கியாக நடித்திருக்கும் கல்கி சுப்ரமணியம் காதல், பாசம், கடமை, சோகம் என்று தன்னுடைய உணர்வுகளை அழகாகப் பிரதிபலித்திருக்கிறார். ஒரு திருநங்கை என்று பரிதாபப்பட துளியும் இடம் கொடுக்காமல் மிகுந்த தன்னம்பிக்கையோடு நடித்திருக்கிறார். அவரது தன்னம்பிக்கை படத்தின் பிற்பாதியில் வரும் அத்துனை நிஜ திருநங்கை கதாபாத்திரங்களையும் தொற்றிக்கொள்கிறது. அவர்களிடத்தில் மனித இனம் கற்றுக்கொள்வதற்கு மிகப்பெரிய பாடம் ஒன்று இருக்கிறது. திருநங்கைகளில் ஜாதி, மதம் கிடையாது. எல்லோருமே ஒரே குடும்பமாகப் பாவித்துக்கொள்கிறார்கள். கூட்டமாக அமர்ந்து இருப்பதைப் பகிர்ந்து சாப்பிடுகிறார்கள். சமூகத்தால் புறக்கணிக்கப்படும் திருநங்கைகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டி அரவணைத்து தன் குடும்பத்தில் ஒருவராக சேர்த்துக்கொள்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் தன்னைப் புறக்கணித்தவரென்றும் பாராமால், எந்தக் குறையுமின்றி நீடுழி வாழ மனித சமூகத்தை ஆசீர்வதிக்கிறார்கள்.
சோப்பு மாமா வி.கே.ஆர்.ரகு, பரதநாட்டிய குரு கிரிஷ் கர்னாட், மதிவாணனாக வரும் விவின், சிலம்ப வாத்தியாராக சுப்புவின் அப்பாவாக வரும் கராத்தே வெங்கடேஷ், சுப்புவின் அம்மாவாக வரும் 'மைனா' சூசன் உள்ளிட்ட அனைவரும் நர்த்தகிக்கு நன்மதிப்பையும், நம் மதிப்பையும் கூட்டும் வகையில் நடித்துள்ளனர்.
காவிரி பாயும் விளார் கிராமம், சிரபுஞ்சி போல எப்பொழுதும் மழை வேறு. சென்னை வெயிலுக்கு அந்த கிராமத்தைத் திரையில் பார்க்கும் போதே நமக்கு ஜில்லென்கிற உணர்வு ஒட்டிக்கொள்கிறது.. யதார்த்தமான குடும்பம் அதிலும் கோபம், பாசம் அதைவிட, ஆட்டெலும்புக்குள்ள இருந்த மஜ்ஜையினை உறிஞ்சித் தருமாறு மகள் கேட்க தந்தை, தாயிடம் கேட்கச் சொல்ல அவர் அதனை உறிய அழகான ஒரு 'ரொமான்ஸ்' தமிழ்சினிமா ரசிகன் இதுவரை பார்த்திருக்க வாய்ப்பில்லை. அழுகை வந்தால் ஒரு செம்பு தண்ணீர் குடித்து அதனை அடக்கும் அம்மா.. நூலைப்போல சீலை தாயைப்போல பிள்ளை க்ளைமாக்ஸில் கல்கி அப்படிச் செய்யும் போது டைரக்டர் டச் நல்லாவே தெரிகிறது.
ஒளிப்பதிவாளர் கேசவன் தஞ்சை மண்ணையும், மும்பை நெரிசலையும் அழகாக கேமிராவில் கொண்டுவந்திருக்கிறார். ஜீ.வி பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்கள் இதமாக இருக்கின்றன. அரவாணி கல்கியின் பால்ய கால ஃப்ளாஷ்பேக்கை ஜவ்வு மிட்டாய் கணக்காக இழுத்திருக்க வேண்டாம். கல்கி என்ன சாதித்தார் என்பதை தெளிவாக விளக்காதது குறை. இருந்தாலும் அவன் அவளானதும், மும்பை சென்று அரவாணிகளால் அரவாணியாக அறுத்துக்கொள்ளும் காட்சி ஒன்று போதும்... பெண் இயக்குநர் ஜி.விஜயபத்மாவின் துணிச்சலையும், டைரக்டர் டச்சையும் சொல்ல...!
நர்த்தகி - புதுமைப்பெண்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum