Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
குள்ளநரி கூட்டம் - Kullanari Koottam
Page 1 of 1
குள்ளநரி கூட்டம் - Kullanari Koottam
நடுத்தர மக்களின் யதார்த்தமான வாழ்க்கையை சொல்லும் படம்.
வேலை வெட்டி இல்லாம சுத்திக்கிட்டு இருக்காரு நம்ம ஹீரோ விஷ்ணு. அவங்க அப்பா ரீசார்ஜ் பண்ண கொடுத்த பணத்துல ரீசார்ஜ் பண்ணும் போது தவறுதலா மாத்தி வேறொரு எண்ணுக்கு ரீசார்ஜ் ஆகிருது. அது யாருன்னு பார்த்தா ஹீரோயின் ரம்யா நம்பீசன், அவங்ககிட்ட இருந்து அந்த பணத்த வாங்க ட்ரை பண்றாரு விஷ்ணு, அவங்க முதல்ல தர மாட்டேன்னு சொல்லிடுறாங்க, இவரும் விடாம போன் பண்ணி தொல்லை பண்றாரு.
இப்படி ரெண்டு பேரும் மாத்தி மாத்தி போன் பண்றது கடைசியில காதல்ல போய் முடியுது, அப்புறம் என்ன நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா லவ் பண்ணிட்டு இருக்குறாங்க. அப்புறம் என்ன நடக்கும்? கதாநாயகிக்கு வீட்டுல மாப்பிள்ளை பார்க்குறாங்க. விஷ்ணுவும் அண்ணன கூட்டிட்டு பொண்ணு கேட்க போறாரு. அங்க பார்த்தா வேறொரு மாப்பிள்ளை வந்து நிச்சயம் வரைக்கும் பேசிட்டு போறாங்க.
ஷாக்காகி நிக்குற விஷ்ணுக்கிட்ட பொண்ணோட அப்பா ஒன்னா ராணுவத்துல சேர்ந்துட்டு வா, இல்லைன்னா கடைசிக்கு போலீசாவாவது ஆகிட்டு வா அப்பத்தான் பொண்ண கொடுப்பேன்னு சொல்றாரு, ஏண்ணா அவரு ஒரு பெரிய போலீஸ்காரர், அவரு மட்டுமல்ல அவங்க இருக்குற ஏரியாவே ராணுவத்துக்கு ஆள் சப்ளை பண்ற ஏரியா, சரி அப்புறமென்ன போலீசாகி கல்யாணம் பண்ண வேண்டியதுதானேன்னு நினைச்சீங்கன்னா அது தப்பு.
ஏன்னா விஷ்ணுவோட அப்பாவுக்கு போலீசுன்னாலே ஆகாது, மழைக்கு கூட போலீஸ் பக்கம் ஒதுங்க மாட்டாரு, இந்த டயலாக்க விஷுவலாவே காட்டுறாங்க, அப்படி ஒரு பயம் அவருக்கு போலீஸ் மேல. சரி நம்ம காதல் அவ்வளவுதான் புட்டுக்கிச்சு போலன்னு நினைச்சுகிட்டு இருக்குற விஷ்ணுவுக்கு அவங்க அம்மா வந்து தைரியத்த கொடுக்கறாங்க, மவனே நீ போய் போலீசா ஆகிட்டு வா. உங்கப்பனை நான் பார்த்துகிறேன்னு சொல்றாங்க. அப்புறம் என்ன இவரும் போலீசாக கிளம்பறாரு. போலீசானாரா? காதலியை கைப் பிடித்தாரா? என்பது படத்தோட மீதிக்கதை.
என்ன ஒரு ஆச்சர்யம்! மதுரைக்கதையில ஒரு அருவா இல்ல.. டாட்ட சுமோ இல்ல.. ஒத்த கை சித்தப்பேன் இல்ல.. அழிச்சாட்சியமா பேசும் பொம்பள இல்ல.. அப்பாடி! இப்பதாங்க நிம்மதியா இருக்கு. ஒரு ரெண்டு மூணு வருசமா போட்டு மதுரைய கொண்டு எடுத்துட்டாய்ங்கப்பா!
'வெண்ணிலா கபடிக்குழு', 'துரோகி', 'பலே பாண்டியா' என்று படத்திற்கு படம் உருவத்தில் வித்தியாசத்தை காட்டியிருக்கும் விஷ்ணு, இந்த படத்திலும் ஒரு வித்தியாசத்தை காண்பித்திருக்கிறார். ரீசார்ஜ் கடையில் வேலை செய்யும் பெண்ணிடம் பேசும் காட்சியிலும், 1500 ரூபாய்க்காக ரம்யா நம்பீசனிடம் கெஞ்சும் இடத்திலும் அக்மார்க் மதுரை நடுத்தர குடும்பத்து இளைஞனாக பிரதிபலித்திருக்கிறார்.
போலீஸ் தேர்வில் தனக்கு டார்ச்சர் கொடுக்கும் அதிகாரியை கூட எதிர்த்து பேசாமல் உள்ளுக்குள் வருந்தும் அளவுக்கு யதார்த்தமான நடிப்பால் கவர்கிறார். தகுதியான தனக்கும் நண்பர்களுக்கும் போலீஸ் வேலை மறுக்கப்படும்போது, 'அவங்க நரி கூட்டம்னா நாம குள்ளநரி கூட்டம்' என்று கிளம்பிய பிறகு புத்திசாலித்தனமான அவரது நடவடிக்கைகள் சுவாரஸ்யமானவை.
உடம்பை ஸ்லிம்மாக்கியிருக்கும் கதாநாயகி ரம்யா நம்பீசனின் அழகு திரையில் நிறைந்திருப்பதுபோல அவருடைய அளவான நடிப்பும், அழகிய சிரிப்பும் அவருடைய கதாபாத்திரத்திற்கு நிறைவு சேர்த்திருக்கிறது.
விஷ்ணுவின் நண்பர்களாக, 'வெண்ணிலா கபடிக்குழு' டீம். போலீஸ் கிரவுண்டிலேயே டீ விற்றுக்கொண்டு போலீஸ் வேலைக்கு முயற்சிக்கும் அப்புக்குட்டி, மனைவியின் ஆசைக்காக போலீஸ் வேலைக்கு வந்திருக்கும் பரோட்டா சூரி, அப்பாவின் டார்ச்சரால் செலக்ஷனுக்கு வந்திருக்கும் ஐயப்பன் உள்ளிட்ட நண்பர்கள் குழு, போலீஸ் செலக்ஷனில் அடிக்கும் ரவுசுகள் கலகல ஏரியா. இவர்கள் தவிர புதுமுகங்கள் தேர்வும், அவர்கள் நடிப்பும் ஆச்சர்யம். குறிப்பாக விஷ்ணுவின் தந்தை இயல் இளங்கோ, தாய் பாண்டியம்மாள் ஆகியோரின் நடிப்பு அற்புதம்.
சும்மா போகிற போக்கில் அப்படியே நகைச்சுவையை அள்ளித்தெளித்திருக்கிறார்கள், தொகுதி பக்கமே அஞ்சு வருசமா போகாத ஒரு எம்.எல்.ஏ அடிப்பாருங்க பாருங்க காமெடி சூப்பருங்கோ....! எஸ்.ஐ. செலக்ஷன் எப்படி நடக்குது? என்பதை இவ்வளவு விலாவாரியாக எந்த தமிழ்ப்படத்திலும் காட்டியதில்லை என்ற அளவிலும் இந்தப்படம் முக்கியமான பதிவை பகிர்கிறது.
தேவையான இடத்தில் மட்டும் பாடல்கள் என்ற கோட்பாட்டில் பயணிக்கும் திரைக்கதையும், அதில் இடம்பெறும் வசனங்களும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
செல்ஃபோனுக்கு வாய் இருந்தால், ஓவென அழுதே விடும். முதல் பாதி முழுக்க, விஷ்ணுவும், ரம்யா நம்பீசனும் செல்ஃபோனில் ரத்தம் வரப் பேசி, ரப்சர் பண்ணுகிறார்கள். எஸ்.ஐ. செலக்ஷனில் விஷ்ணு எப்படி ஜொலிக்கிறார் என்பதே இரண்டாம் பாதி! டைட்டிலுக்கு நியாயம் செய்ய, கடைசி பத்து நிமிஷத்தில் ஒரு டிவிஸ்ட்!
'விழிகளிலே...', 'காதல் என்பதை...' பாடல்கள் செல்வகணேஷை நிலைநிறுத்துகின்றன. மதுரையைச் சுற்றியுள்ள இடங்கள் எல்லாம் இவ்வளவு அழகா என்று ஆச்சர்யப்படுத்துகிறது லஷ்மணின் கேமரா.
ரொம்ப நாள்கழிச்சு ஒரு யதார்த்தமான படம் பார்த்த திருப்தி. இயக்குநர் ஸ்ரீபாலாஜிக்கு இது முதல் படம்.. சுசீந்தரனின் அசிஸ்டெண்ட் டைரக்டர் ஒரு கண்ணியமான படம் கொடுத்ததற்குப் பூச்செண்டு கொடுத்துப் பாராட்டலாம்.
குள்ளநரிக் கூட்டம் - அழகு!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ரகசியா கூட்டம்...!
» கூட்டம் – கவிதை
» திட்டம் போட்டு திருடுற கூட்டம்…
» பிரித்தானியாவில் கொள்ளையர் கூட்டம் 2
» இதுதானா சேர்ந்த கூட்டம்…!!
» கூட்டம் – கவிதை
» திட்டம் போட்டு திருடுற கூட்டம்…
» பிரித்தானியாவில் கொள்ளையர் கூட்டம் 2
» இதுதானா சேர்ந்த கூட்டம்…!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|