Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மத வன்முறை தடுப்பு சட்டம் மாநில அரசு உரிமைக்கு எதிரானது: ஜெயலலிதா
Page 1 of 1

மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள மத வன்முறை தடுப்பு சட்டம் மாநில அரசு உரிமைக்கு எதிரானது என்று தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதக்கலவரம் மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதாவை வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த மசோதாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பாகவும், அ.தி.மு.க. சார்பிலும் எனது ஆட்சேபனையை தெரிவிக்க விரும்புகிறேன்.
மசோதாவின் நோக்கம் புரிந்து கொள்ள கடினமானதாகவும், பல்வேறு யூகங்களுக்கு வழி வகுப்பதாகவும் இருக்கின்றது. இந்த மசோதாவை மேலோட்டமாக படித்த போதே, மசோதாவில் குறிப்பிட்டுள்ள அடைய வேண்டிய நோக்க வழிமுறைகளில் நிறைய தவறுகள் காணப்படுகின்றன. பல்வேறு மதங்களையும், மொழிகளையும், பன்முக கலாச்சாரங்களையும், மதச்சார்பின்மையும் கொண்ட இந்தியாவில், மதம் மற்றும் திட்டமிட்ட வன்முறைக்கு இடமில்லை என்பதை அமைதியை விரும்புபவர்களும், மதச்சார்பின்மை வாதிகளும் ஒப்புக்கொள்ளவே செய்வார்கள். ஆனால் இந்த மசோதா நாம் விரும்பிய இலக்கை, நோக்கத்தை நிறைவேற்றாது. மாறாக பல்வேறு குழுக்களிடையே நம்பிக்கை இன்மையை வளர்க்கவே உதவும். சுருக்கமாக சொன்னால் இந்த மசோதா மதம் மற்றும் திட்டமிட்ட வன்முறை என்ற நோய்க்கு தீர்வு அளிக்காமல் மேலும் மோசமாக்கும்.
சட்ட மசோதாவின் 3-வது பிரிவு ஆண் அல்லது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமைகளை பாதிப்பதாக அமைந்துள்ளது. மதம் மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்டம் பிரிவுகள் 7 முதல் 12 வரை இந்த சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் கூறப்பட்டுள்ள விசயங்கள், அதிகார வர்க்கத்தினரால் துஷ்பிரயோகம் செய்யவே வாய்ப்புகள் உள்ளன. பிரிவு 18-ல் அரசு ஊழியர்களின் பொறுப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
வன்முறை மற்றும் திட்டமிட்ட வன்முறை நடக்கும் பட்சத்தில் அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கீழ்மட்ட அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி உயர் அதிகாரிகள் தப்பித்துக் கொள்ள முடியும். இதனால் இந்த மசோதாவினால் ஆபத்து இரட்டிப்பாகும். இந்த சட்டம் மாநில அரசின் அதிகாரங்களை குறைக்கிறது. மாநில சுயாட்சி கொள்கைகளுக்கு விரோதமானதாக உள்ளது. இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள குற்றங்களை கையாள, மாநில அரசுகளால் சுதந்திரமாக சிறப்பு வக்கீலை நியமிக்கும் அதிகாரம் கூட கிடையாது. மத்திய அரசிடம் இருந்து முன் அனுமதி பெற்றே நியமிக்க முடியும். இது போன்ற சரத்துக்களால் மாநில அரசு ஒரு கண்காணிப்பாளராகத் தான் இருக்க முடியுமே தவிர தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க முடியாது.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் மத்திய அரசின் ஆதிக்கமே மேலோங்கும். மத்திய-மாநில உறவுகள் குறித்து சர்க்காரியா கமிசன் பரிந்துரை செய்துள்ள விதிகளை மீறுவதாக உள்ளது. இது வேண்டாத மாநில அரசுகளை பழிவாங்க பயன்படுத்தப்படும் அரசியல் சட்டம் 356-வது பிரிவின் புதிய வடிவமாக உள்ளது. இந்த சட்டமானது ஜனநாயகத்துக்கு விரோதமானது. எனவே அரசியல் கட்சிகள், சமுதாய தலைவர்கள், சிந்தனையாளர்கள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Similar topics
» மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது- சுப்ரீ்ம் கோர்ட் நீதிபதி
» மதக்கலவர தடுப்பு சட்டமூலம் மாநில அதிகாரத்தை பாதிக்காது
» முஷரப் மீது தீவிரவாத தடுப்பு சட்டம் பயன்படுத்த முடியாது
» மத வன்முறை தடுப்புச் சட்டமென்ற பேரில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்க முயற்சி
» இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவல்: மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum