சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பத்திரிகை உலகில் தரம் குன்றாது கோலோச்சி நிற்கும் "கேசரி ' _ Khan11

பத்திரிகை உலகில் தரம் குன்றாது கோலோச்சி நிற்கும் "கேசரி ' _

Go down

பத்திரிகை உலகில் தரம் குன்றாது கோலோச்சி நிற்கும் "கேசரி ' _ Empty பத்திரிகை உலகில் தரம் குன்றாது கோலோச்சி நிற்கும் "கேசரி ' _

Post by முனாஸ் சுலைமான் Sat 6 Aug 2011 - 21:45

பத்திரிகை உலகில் தரம் குன்றாது கோலோச்சி நிற்கும் "கேசரி ' _ Virakesari
"வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்'' என்கின்ற முதுமொழி அனுபவித்து கூறப்பட்டதாகும். இந்த அற்புத வாக்கியத்தை நாம் ஒவ்வொருவரும் உணருவது ""பத்திரிகை'' எனும் நாளிதழ்களின் மூலமே. அந்த வகையில் தலைநகர் கொழும்பில் 06.08.1930 ஆம் ஆண்டில் உதயமான இந்த வீரகேசரி தனது ஒன்பதாவது தசாப்தத்தில் அதாவது 81 ஆம் ஆண்டில் தடம் பதித்து நிற்பது நம் தமிழர்கள் அனைவருக்குமே பெருமிதமான விடயம்.

ஒரு பத்திரிகை அதன் தரம் குன்றாது இன்றுவரை கோலோச்சி நிலைத்து நிற்பதற்கு பல வல்லுநர்களின் கடின உழைப்பு இங்கே முதன்மை பெறுகின்றது. அந்த உண்மையான நல் உழைப்பின் வெகுமதியே இன்றுவரை மக்கள் விரும்பிப் படிக்கும் நாளிதழ்களில் வீரகேசரி முதன்மையாய் தடம் பதித்துக் கொண்டிருக்கின்றது. இதை யாரும் மறுக்க முடியாது.

'சமன் செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கணி' என்கின்ற வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கு ஏற்ப "நடுவு நிலைமை' தவறாத பத்திரிகை தர்மம் கொண்ட செயற்பாடு இதன் முக்கிய வெற்றிக்கு ஒரு காரணியாகும். முந்தய காலம் ஊடகம் என்கின்ற பொழுது, வானொலி, பத்திரிகை இவை இரண்டுமே முதன்மைபெறும். அதிலும் வானொலி கேட்கும் நேரக் கட்டுப்பாடு எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. எனவே பத்திரிகைதான் அங்கே முதன்மையாகின்றது. பத்திரிகையை எங்கு இருந்தும் படித்துக் கொள்ள முடியும்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பத்திரிகை உலகில் தரம் குன்றாது கோலோச்சி நிற்கும் "கேசரி ' _ Empty Re: பத்திரிகை உலகில் தரம் குன்றாது கோலோச்சி நிற்கும் "கேசரி ' _

Post by முனாஸ் சுலைமான் Sat 6 Aug 2011 - 21:45

அப்படியான காலகட்டத்திலே இந்திய தமிழ் பத்திரிகைகளின் ஆதிக்கம் பரவலாக அமைந்த கால எல்லையில் திரு. சுப்பிரமணியம் செட்டியார் என்கின்ற பெரியவர் மனமுவந்து ஸ்தாபித்த வீரகேசரி இன்று கணனியுகத்திலும் ஈடுகொடுத்து பல பரிமாணங்களைத் தொட்டு எங்கள் பத்திரிகை என்கின்ற உரிமையை மக்களுக்கு கொடுத்த ஓர் அற்புதமான நாளிதழ். இதற்கு ஒப்புயர்வற்ற எழுத்தாளர்களின் கருத்தாற்றல், எதை, எப்படி, மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்கின்ற ஆசிரிய பீடத்தின் சாணக்கியம் தவறு ஏற்படாத மொழி ஆளுமை கொண்ட கண்காணிப்புக் குழு என இத்தனை ஆளுமை வல்லுநர்களின் திறமை, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்கின்ற மக்களின் ஏற்புடை தன்மை, வீரகேசரியை இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு தடம் பதிக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.

நாள் செய்வதை நல்லோரும் செய்ய மாட்டார் என்கின்ற வார்த்தைக்கு ஏற்ப 06.08.1930 ஆம் ஆண்டு ஜோதிட ரீதியாகக்கூட வீரகேசரிக்கு சாதகமான நாள் அமைந்து விட்டது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது போல புதன்கிழமையும் 'ஆண்மூலம் அரசாளும்' எனும் மொழிக்கேற்ப மூல நட்சத்திரமும் அமைந்து, கவர்ச்சிகரமும் சமூக அந்தஸ்தும் கொண்ட சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற 6 ஆம் எண்ணும் சேர்ந்தது ஜோதிட ரீதியாக வீரகேசரியின் வெற்றியாகும். எதையும் தெளிவாகவும், சிறப்பாகவும் படித்தவர் முதல் பாமரர் வரை ஏற்றுக் கொள்கின்ற பக்குவத்தையும், தமதாக்கிக் கொண்டு செயற்படும் ஆற்றல் ஒரு பத்திரிகைக்கு மிகவும் முக்கியமானதாகும். அதற்கு ஆசானாய் வீரகேசரி தன்னை முன்னுதாரணம் கூறும் அளவிற்கு செயற்படுத்திக் கொண்டது.

பத்திரிகை வெறும் வியாபார நோக்கும், கவர்ச்சிகரமும் கொண்டு செயல்பட்டால் அதிலே உள்ள விடயம் சிறு நாட்களின் பின் விரயமாகி அப்பத்திரிகையும் வீணாகி விடும். தன் மொழி சார்ந்த மக்களுக்கு வெறும் செய்தி மட்டும் தரும் நிலையிலும் பத்திரிகை அமையக் கூடாது. தன் மொழி, சமயம், கலாசாரம் என்கின்ற விழுமியங்களுக்குள் முழுமையாக தன்னைத் தாங்கிக் கொள்கின்ற நிலையிலேயே பத்திரிகை எனும் நாளிதழ் வேரூன்ற முடியும். இதை வீரகேசரி விவேகமுடன் செயற்படுத்தி வருகின்றது. அதுமட்டுமன்றி எமது இலங்கை நாட்டை பொறுத்தவரையில் தமிழ் மொழி பேசும் முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினரும் வாழுகின்றனர். அவர்களின் கலாசாரம் சார்ந்த விடயங்களிலும் ஒரு பங்கீடு செய்ய வேண்டிய அவசியம், அறிவுடைமை எமது பத்திரிகைகளுக்கு உண்டு. அதிலும் வீரகேசரி வெற்றியே பெற்றது. வீரகேசரியில் வருகின்ற நாளிதழ்களிலும் சரி வார வெளியீடான ஞாயிறு இதழிலும் சரி ஒட்டு மொத்தமாக மாணவர், இளைஞர், குடும்பஸ்தர், முதியவர், பெண்கள், யுவதிகள் ,சிறுவர் என அனைவரையும் ஈர்க்கும் விடயங்கள் இடம், பொருள், ஏவல் என்கின்ற நிலையிலே மிகவும் சிறப்பாக அமையப் பெற்று வருகின்றது. அதிலும் இன்னும் ஒரு பெருமை வீரகேசரி வார வெளியீடு உலகில் எங்கெல்லாம் நம் தமிழர் வாழ்கின்றார்களோ அங்கு வீரநடை போட்டு முன்னணியில் திகழ்கின்றது என்பது புலம்பெயர் நாடுகளில் நாம் கண்ணால் காணக் கூடியதாய் உள்ள விடயமாகும். இத்தனை தூரம் மக்களின் மனதில் வீரகேசரி வசீகரமாய் அமைந்து விட்டது என்பது அனைவரும் ஒரு மனதாய் ஏற்றுக் கொண்ட விடயம். இதற்கு வேதத்திலே ஒரு நீதி வாக்கிய மந்திர ஸ்லோகம் சொல்லப்பட்டிருக்கிறது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பத்திரிகை உலகில் தரம் குன்றாது கோலோச்சி நிற்கும் "கேசரி ' _ Empty Re: பத்திரிகை உலகில் தரம் குன்றாது கோலோச்சி நிற்கும் "கேசரி ' _

Post by முனாஸ் சுலைமான் Sat 6 Aug 2011 - 21:46

யுக்தியுக்தம் வசோக் கிராஹ்யம் பலாதபி ஸுகாதபி! அயுக்தமபி நக்கிராஹ்யம் ஸாக்ஷத்பி பிரஹஸ்பதே!! இதன்பொருள். சமயோசிதமான சொல்லை கிளி சொன்னாலும் சிறுவர் சொன்னாலும் எடுத்துக் கொள்ள வேண்டும். உதவாத சொல்லாக இருந்தால் கடவுளான பிரகஸ்பதி சொன்னாலும் கேட்கலாகாது என்பதாகும். எனவே கடந்த 80 ஆண்டுகளாய் வீரகேசரி வெறும் செய்திப் பத்திரிகை என்கின்ற நிலையை தாண்டி எம் உறவாய் சமயோசிதமான விடயங்களை எமக்குத் தந்து கொண்டிருக்கின்றது. அதன் பரிமாணம் பல கிளைகளாய் மிளிர்ந்து கொண்டிருக்கின்றது. மித்திரன், சுகவாழ்வு, யாழ். ஓசை, கலைக்கேசரி, விடிவெள்ளி, ஜீனியஸ், மெட்ரோ நியூஸ், புதுயுகம், சோதிட கேசரி, பக்தி மலர் என விரிவு கொண்டு மக்களின் தேவை அறிந்து அதற்கு உவந்த ஆசானாய் மிளிர்கின்றது. பல பத்திரிகை நாளிதழ்களுக்கு முன்னுதாரணமாகவும் ஆசானாகவும் வீரகேசரி திகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஓர் எழுத்தாளன் என்கின்ற நிலையில் கேசரியுடனான தொடர்பு எனக்கும் நீண்டதொரு பரிமாணமாகி இருக்கிறது. அந்த வகையில் 81 ஆம் ஆண்டில் தடம் பதிக்கும் வீரகேசரி எமது வீட்டின் ஒரு கலைப் பொக்கிஷமாய் மிளிர்கின்றது. ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் தாயாய் மிளிரும் கலைமகளின் கடாட்சம் என்றும் வீரகேசரிக்கு உண்டு. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் பல புதுமையோடு மலரும் என்பது எங்கள் மன உறுதி. __
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பத்திரிகை உலகில் தரம் குன்றாது கோலோச்சி நிற்கும் "கேசரி ' _ Empty Re: பத்திரிகை உலகில் தரம் குன்றாது கோலோச்சி நிற்கும் "கேசரி ' _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum