Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
ஜுபிடர் செல்லும் ஜூனோ
Page 1 of 1
ஜுபிடர் செல்லும் ஜூனோ
வியாழன் கிரகத்துக்கு ஆளில்லா விண்கலம் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா அனுப்புகிறது.
ஜூனோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம் வெள்ளிக்கிழமையன்று ஜிஎம்டி நேரப்படி 15:34க்கு பின்னர் கிளம்புகிறது.
ஐந்து ஆண்டுகள் பயணத்துக்குப் பின்னர் 2016ஆம் ஆண்டு இது ஜூபிடர் எனப்படுகின்ற வியாழன் கிரகத்தை சுற்றிவரத் துவங்குமாம்.
சூரிய சக்தியில் இயங்கும்
நூற்று பத்து கோடி டாலர் பெறுமதி கொண்டது இந்த ஆளில்லா விண்வெளிப் பயணத் திட்டம்.
தவிர சூரிய வெளிச்சதியில் இருந்து எரிசக்தியைப் பெறுகின்ற ஒரு விண்கலம் சூரியனுக்கு அப்பால் இவ்வளவு அதிக தூரம் அனுப்பப்படுவது இதுவே முதல் முறை.
வாயுக்கள் நிறைந்த இந்த ராட்சத கிரகத்தில் சூரிய ஒளியின் அளவு பூமியில் விழுகின்ற அளவுக்கு இருபத்து ஐந்தில் ஒரு பாகமே இருக்கும்.
ஆதலால் சாதாரணமாக இவ்வளவு தூரத்துக்கு அனுப்பப்படுகின்ற விண்கலங்கள், புளூடோனியம் பேட்டரிகளில் இருந்து மின்சக்தியைப் பெறும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் இந்த ஜூனோ விண்கலத்தின் மூன்று இறக்கைகளிலுமாக மொத்தம் பதினெட்டாயிரம் சோலார் செல்கள் அமைந்திருப்பதால் அந்த குறைந்த ஒளியிலும் போதுமான எரிசக்தியை இது பெற்றுவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
பயணத்தின் நோக்கம்
"பிரபஞ்சம் தொடர்பில் நமக்குள்ள புரிதலை ஆழப்படுத்திக்கொள்ள இப்படி விண்கலங்களை நாம் அனுப்புவதென்பது மிகவும் முக்கியம்"
நாஸா விஞ்ஞானி ஸ்டீவன் லெவென்
சூரிய குடும்பத்தின் மிகப் பெரிய கிரகமான வியாழன் கிரகத்தின் தோற்றம், பரிணாம மாற்றங்கள் என்பனவற்றை ஆராய்ந்து புரிந்து கொள்வதன் மூலம் சூரியக் குடும்பத்தின் இரகசியங்களைக் கண்டறிவது என்பது ஜூனோவுடைய பயணத்தின் நோக்கம்.
பிரபஞ்சம் தொடர்பில் நமக்குள்ள புரிதலை ஆழப்படுத்திக்கொள்ள இப்படி விண்கலங்களை நாம் அனுப்புவதென்பது மிகவும் முக்கியம் என்று நாஸா விஞ்ஞானியான ஸ்டீவன் லெவென் கூறுகிறார்.
தொலைவிலுள்ள விடயங்களை உணர்ந்து ஆராயும் இந்த விண்கலத்தின் ரிமோட் சென்சர் கருவிகள் வியாழன் கிரகத்தின் பல படிவங்களை ஆராயும், வியாழன் கிரகத்தில் அதிகமாகக் காணப்படும் தனிமங்கள், அதன் தட்ப வெப்ப நிலை, அதன் இயக்கம் மற்றும் இயற்கை அம்சங்களை ஆராயும்.
வியாழன் கிரகத்தைச் சுற்றியுள்ள பிரம்மாண்டமான வாயு வெளியில் எந்த அளவுக்கு தண்ணீர் இருக்கிறது என்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிய விரும்புகின்றனர். ஏனெனில் சூரிய குடும்பம் உருவான சமயத்தில் வியாழன் கிரகப் பகுதியில் எந்த அளவு பிராணவாயுவான ஆக்ஸிஜன் இருந்தது என்பதன் அறிகுறியாக இது அமையும்.
தவிர வியாழன் கிரகம் முழுக்கவே வாயுக்களால் ஆனது,அதில் திடப் பொருள் எதுவும் இல்லை என்று ஒரு சிலரும், வாயுவெளிக்கு உள்ளே திடப் பொருள் இருக்கத்தான் செய்கிறது என்று வேறு சிலரும் பலகாலமாக செய்துவரும் வாதத்துக்கு இந்த ஜூனோ ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.
நன்றி. பிபிசி தமிழ்

Similar topics
» ஜூனோ - ஒரு பக்க கதை
» இந்துக்கோயிலிலிருந்து ஹொலிவுட்டிற்குச் செல்லும் சிகையலங்காரம்
» மக்காவுக்குச் செல்லும் ஒழுங்குகள்
» வேலைக்குச் செல்லும் பெண்
» தூங்கச் செல்லும் முன்
» இந்துக்கோயிலிலிருந்து ஹொலிவுட்டிற்குச் செல்லும் சிகையலங்காரம்
» மக்காவுக்குச் செல்லும் ஒழுங்குகள்
» வேலைக்குச் செல்லும் பெண்
» தூங்கச் செல்லும் முன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum