சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Yesterday at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

உச்ச நீதிமன்ற தீர்ப்பு உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வோம் Khan11

உச்ச நீதிமன்ற தீர்ப்பு உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வோம்

Go down

உச்ச நீதிமன்ற தீர்ப்பு உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வோம் Empty உச்ச நீதிமன்ற தீர்ப்பு உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வோம்

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 4:23

சென்னை : சமச்சீர் கல்வித் தீர்ப்பை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றேகால் கோடி மாணவ, மாணவியர்களும், அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூக நீதியில் அக்கறை கொண்டோரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த சமச்சீர் கல்வி பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்து விட்டது.

உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் திரும்பத் திரும்பச் சொல்லியும் அவைகளை எல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு திமுக ஆட்சி அறிமுகப்படுத்திய காரணத்திற்காகவும், ஆதிக்க வர்க்கத்துக்கு ஆதரவாகவும், சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டேன் என்று, நீதிமன்றங்களே நாட்களைக் குறிப்பிட்டுச் சொல்லி, அந்த தேதிக்குள் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களை விநியோகிக்க வேண்டுமென்று வலியுறுத்தியும் கூடக் கேளாமல், முரட்டுப் பிடிவாதம் காட்டி வந்த அதிமுக அரசுக்கு ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் மிகப்பெரிய பாடம் உச்ச நீதிமன்றத்திலிருந்தே கிடைத்துள்ளது.

இதே தீர்ப்பு திமுக ஆட்சியிலே உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தால், உடனடியாக கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று அறிக்கை விடுத்திருப்பார் அம்மையார் ஜெயலலிதா. அதைப் போல நான் தற்போது அறிக்கை விடுவதற்கு விரும்பவில்லை. இனியாவது இதுபோன்ற பிரச்னைகளில் ஜெயலலிதா தனது பிடிவாதப் போக்கினைக் கைவிட்டு நாட்டு நலன் கருதி தன்னுடைய அணுகுமுறைகளையும், நடவடிக்கைகளையும் மாற்றிக் கொண்டு செயல்படுவார் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சமச்சீர் கல்விக்கு கிடைத்த இந்த உச்சக்கட்ட வெற்றியை அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2006 முதல் சமச்சீர் கல்வியின் பயணம்

சமச்சீர் கல்வி திட்டம் கடந்த 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்டபோதே தனியார் பள்ளிகள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து இந்த திட்டம் பள்ளிகளில் இடம் பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் பயணம் குறிப்பு இங்கே...

ஸீ 2006&தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையை செயல்படுத்துவது என்ற முடிவை தமிழக அரசு ஏற்றது. முன்னாள் துணை வேந்தர் முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழுவை அரசு உருவாக்கியது.
ஸீ முத்துக்குமரன் குழு ஒரு ஆண்டு காலம் தமிழகத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்டது. பின்னர் பரிந்துரையை அரசுக்கு சமர்ப்பித்தது.
ஸீ 2007&குழுவின் பரிந்துரையை ஆழ்ந்து பரிசீலனை செய்ய, சென்னை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் எம்.பி.விஜயகுமார் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.
ஸீ ஒரு நபர் குழு சமச்சீர் கல்வி உருவாக்குதல் குறித்து திட்டவட்டமான ஆலோசனைகளை அரசுக்கு சமர்ப்பித்தது.
ஸீ 2008&மற்ற மாநிலங்களில் பள்ளிக் கல்வித்துறையில் பின்பற்றப்படும் பயனுள்ள நடைமுறைகளை தெரிந்து வர ஒரு கல்வியாளர் குழுவை அரசு அமைத்தது.
ஸீ இந்த கல்வியாளர் குழு சில மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள நிர்வாக அமைப்பு முறைகள், பாடவாரியங்கள், பாடத்திட்டம், தேர்வு முறை, பயிற்று மொழி ஆகியவை குறித்து விரிவான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது.
ஸீ 2009&மேற்கண்ட குழுக்கள் அளித்த பரிந்துரைகளை பற்றி அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
ஸீ தமிழகத்தில் உள்ள நான்கு வகை பாடத்திட்டங்களை கலைத்துவிட்டு ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வருவது எனவும், 2010&2011 கல்வி ஆண்டில் முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் மட்டும் பொதுப்பாடத்திட்டத்தை அறிமுகம் செய்வது, 2011&2012 கல்வி ஆண்டில் மற்ற வகுப்புகளுக்கு பொதுப்பாடத்திட்டத்தை அறிமுகம் செய்வது எனவும் அரசு ஏற்றுக் கொண்டது.
ஸீ 2009 அக்டோபர்& சென்னையில் உள்ள ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் பொதுக்கல்வி திட்டம், பாடத்திட்டம், பாடநூல்கள் தயாரிக்கும் பணி தொடங்கியது.
ஸீ சமச்சீர் கல்வி¬ செயல்படுத்துவதின் முதற்கட்டமாக பொது பாடத்திட்ட வரைவு பள்ளிக் கல்வி இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்டது.
ஸீ 2009 டிசம்பர்&அனைத்து கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து பொதுக்கல்வி வாரியம் அமைக்கப்பட்டது. பள்ளிக் கல்வி இயக்குநர் தலைவராக நியமனம்.
ஸீ சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் எழுத பாடவாரியாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஸீ 2010 சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் எழுதும் பணி தொடங்கியது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் 10 இணை இயக்குநர்கள் இதற்கு பொறுப்பேற்றனர்.
ஸீ 2011 ஏப்ரல்& சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் 7 கோடி அச்சிடும் பணிகள் நிறைவு பெற்றன.
ஸீ 2011 மே& சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் 44 குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டன. அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடங்கியது.

அரசின் கையில் தேர்வுத்தாள், மார்க்ஷீட்

சமச்சீர் கல்வியை வரும் 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான தேர்வு முறைகளை உருவாக்கும் பணிகள் தொடங்கும். குறிப்பாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு தாள்கள் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பு அரசிடம் உள்ளது. இதற்கென தனி ஆணை வழங்க வேண்டும்.

ஏற்கெனவே அனைத்து பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது. அதாவது 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண்கள் 500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சமச்சீர் கல்வியின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு ஒரே மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என தெரிகிறது.

4 பாடத்திட்டம் இனி இல்லை

தமிழகத்தில் 33,326 தொடக்கப் பள்ளிகள், 10815 நடுநிலைப் பள்ளிகள், 5020 உயர்நிலைப் பள்ளிகள், 5369 மேனிலைப் பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கி வருகின்றன. இதுதவிர 42 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், 30 ஓ.எஸ்.எல்.சி பள்ளிகள் உள்ளன. இவற்றில் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் மட்டும் தற்போது சமச்சீர் கல்வி பின்பற்றப்படுகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் கடந்த ஆண்டு இருந்த பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.
நான்கு பாடத்திட்டத்தின் கீழ் படித்து வரும் மாணவர்கள் இனிமேல் பொதுப் பாடத்திட்டத்தின் கீழ் வரும் சமச்சீர் கல்வி பாடங்களை படிக்க வேண்டும்

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரை நெடுஞ்சாலையில் சத்தமில்லாமல் புதிய டாஸ்மாக் கடை திறப்பு: வருவாய் இலக்கை எட்ட உச்ச நீதிமன்ற உத
» கூடங்குளம் அணுஉலை இயங்கலாம் ; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா?- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக
» புதிய நீதிமன்ற வளாகங்களை ஹைகோர்ட் நீதிபதி ஆய்வு
» உற்சாகத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய விஜய்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum