சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்காக ஐந்தருவியில் ரூ.5.25 கோடியில் அருவி பூங்கா Khan11

குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்காக ஐந்தருவியில் ரூ.5.25 கோடியில் அருவி பூங்கா

Go down

குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்காக ஐந்தருவியில் ரூ.5.25 கோடியில் அருவி பூங்கா Empty குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்காக ஐந்தருவியில் ரூ.5.25 கோடியில் அருவி பூங்கா

Post by kalainilaa Sun 21 Aug 2011 - 4:59

ஏழைகளின் ஊட்டி' என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் சீசன் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும். இந்த மூன்று மாத காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பல லட்சம் சுற்றுலா பணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்வது வழக்கம். கடந்த ஆண்டு மட்டும் குற்றாலத்திற்கு 32 லட்சத்து 68 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆண்டு தோறும் அடிப்படை வசதிகள், மேம்பாட்டு பணிகள் செய்வதற்காக கோடி கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.குற்றாலத்தில் மெயின் அருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, புலியருவி, பழையகுற்றால அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் உள்ளன. இவற்றில் செண்பகாதேவி அருவி மெயின் அருவியில் இருந்து 5 கி.மீ.,தொலைவில் மலை பகுதியிலும், தேனருவி செண்பகாதேவி அருவியிலிருந்து 4 கி.மீ.,தொலைவில் மலைபகுதியிலும் உள்ளன. அருவிகளில் தண்ணீர் அதிகமாக விழும் போது செண்பகாதேவி அருவி, தேனருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவது வழக்கம்.சுற்றுலா பயணிகளின் பொழுது போக்கிற்காக பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஐந்தருவி வெண்ணமடை குளத்தில் சுற்றுலாத்துறை சார்பில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சீசன் காலத்தில் மட்டும் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும். வேறு குறிப்பிடும்படி பொழுது போக்கு வசதிகள் ஏதும் இல்லை. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சில நாட்கள் குற்றாலத்தில் தங்கியிருந்து சீசனை அனுபவிப்பர். ஆனால் இப்போது சுற்றுலா பயணிகள் ஒருநாள் தங்கியிருப்பதே அபூர்வமாக இருக்கிறது.

குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு பொழுது போக்கும் வசதிகளை பெருக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக ஐந்தருவி அரசு தோட்டக்கலை பண்ணையில் அருவி பூங்கா அமைக்கும் பணி கடந்த 21.9.2010ம் தேதி துவங்கியது. இதற்கு 5 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டது. இதே நாளில் கொடைக்கானல் பூங்கா மேம்பாட்டு பணிகளும் துவங்கியது.ஐந்தருவியில் அமைக்கப்பட்டு வரும் அருவி பூங்கா இன்னும் ஓராண்டில் முழுமை பெற்று விடும் என கூறப்படுகிறது. அருவி பூங்காவில் நுழைவு வாயில், சுற்றுச்சூழல் குளம், கார் பார்க்கிங், மூங்கில் தோட்டம், வண்ணத்து பூச்சி பூங்கா, மலர் வனம், சிறுவர்கள் விளையாடுமிடம், நீர் வீழ்ச்சி, நீர் விளையாட்டு திடல், பிரதான வாயில், நீரோட்ட நடை பாதை, தாழ்தள தோட்டம், சாகச விளையாட்டு திடல், பாறை தோட்டம், காகித பூ தோட்டம், ஆல மர தோட்டம், நறுமண பூங்கா, பார்வையாளர் மாடம், சிறிய சிற்ப விலங்கு தோட்டம், பெரணி பூங்கா, பழத்தோட்டம், கற்பாறை பூங்கா, இயற்கை பூங்கா, உணவகம், பசுமை குடில், கழிப்பிடம் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது.சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் அருவி பூங்காவில் 50 சதவீதத்திற்கு மேல் பணிகள் முடிந்துள்ளன. பூங்காவை சுற்றி நடை பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இது வாக்கிங் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். அருவி பூங்கா பணியை கடந்த மாதம் தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பூங்கா பணி நிறைவடைந்து விட்டால் சீசன் காலத்தில் மட்டும் அல்ல ஆண்டு முழுவதும் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவர்.பறவைகள் பூங்கா, மீன் காட்சியகம், மின் இசை நீர் வீழ்ச்சி, பூங்காவை சுற்றி பார்க்க பாட்டரி கார் உள்ளிட்டவைகள் கூடுதலாக அமைக்க சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மழை பெய்தால் மட்டுமே அருவிகளில் தண்ணீர் விழும். சீசன் இல்லாத காலத்தில் குடிப்பதற்கே குற்றாலத்தில் தண்ணீர் இல்லாத நிலை தான் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு அருவி பூங்காவில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் சுற்றுலா பயணிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

அருவி பூங்கா அமைக்கப்பட்டு வரும் பகுதி அருகே பழத்தோட்ட அருவி உள்ளது. இந்த அருவியில் தற்போது யாரும் குளிக்க முடியாது. அருவி செல்லும் பாதை மின் வேலி அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அருவி பூங்காவை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் பழத்தோட்ட அருவியில் குளிப்பதற்கு அனுமதிக்க கூடாது. இந்த அருவி பார்க்க மட்டுமே அனுமதிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை இங்கு பயன்படுத்த கூடாது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும்.குற்றாலம் இந்திய சுற்றுலா வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் நிதியும் குற்றாலத்திற்கு கிடைக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மத்திய சுற்றுலாத்துறை குற்றாலத்திற்கு 4 கோடியே 62 லட்சம் ரூபாய் வளர்ச்சி பணிக்காக ஒதுக்கீடு செய்தது. நடப்பாண்டிலும் மத்திய சுற்றுலாத்துறையின் நிதியை பெறுவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.

-கே.எஸ்.கணேசன்-
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» 108 அம்மன் கோயில் சுற்றுலா: சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு
»  குற்றாலம் சிறுவர் பூங்கா – புகைப்படங்கள்
» ஸ்ரீபெரும்புதூரில், ரூ.198 கோடியில் அமைகிறது விமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா
» இலங்கையில் அதிகரித்து வரும் இந்திய சுற்றுலா பயணிகள்
» தொடரும் கற்பழிப்புகளால் இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்கள் எண்ணிக்கை 35% குறைந்தது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum