Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பிரதமரும் விதிவிலக்கல்ல: யார் ஊழல் செய்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்; விஜயகாந்த் பிறந்த நா
2 posters
Page 1 of 1

சென்னை, ஆக. 25-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எனது
பிறந்தநாளை தனிப்பட்ட பிறந்த நாளாக நான் கொண்டாடுவதில்லை. வறுமை ஒழிப்பு
தினமாக கடைப்பிடித்து வருகிறேன் என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.
ஒவ்வொரு
வறுமை ஒழிப்பு தினத்திலும் ஏழை, எளிய மக்களின் நல்வாழ்வுக்கு நலத்திட்டப்
பணிகளை நாம் மேற்கொள்வது வழக்கம். மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர
வண்டிகள், காது கேட்கும் கருவிகள், சலவைத் தொழிலாளர்களுக்கு சலவைப்
பெட்டிகள், ஏழைத் தாய்மார்களுக்கு தையல் இயந்திரங்கள், அரசுப் பள்ளிகளுக்கு
கணினிகள், ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உணவளித்தல், பள்ளிப் பிள்ளைகளுக்கு
சீருடை வழங்குதல், இலவச பாடப் புத்தகங்களை வழங்குதல், ஏழைகளுக்கு
இன்சூரன்ஸ் திட்டம் போன்ற நற்பணிகளைச் செய்துள்ளேன்.
மேலும்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் ரூ.50
ஆயிரம் தந்து வருகிறேன். மாணவர்கள் படிப்பதற்கு கணிசமான தொகை உதவித்
தொகையாக வழங்கப்படுகிறது. 1300 தையல் இயந்திரங்கள் ஒரு சேர எனது பிறந்த
நாளில் தமிழ்நாடு முழுவதும் வழங்கியுள்ளேன். 60 இடங்களில் கேப்டன் இலவச
கணினி பயிற்சி மையங்கள் பல்லாயிரம் பேருக்கு இலவச கணினி பயிற்சி அளித்து
வருகின்றன.
பெண் சிசுக் கொலையை தடுக்கும்
வகையில், பெண்கள் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தை கொண்டு வந்து பெண்
குழந்தைகள் திருமண வயதை எட்டுகிறபொழுது சுமார் ரூ.2 லட்சம் கிடைக்க வகை
செய்தேன். திருமண மண்டபம் கட்டி இலவசத் திருமணங்கள் நடத்த ஏற்பாடு
செய்ததோடு மட்டுமல்லாமல், திருமண மண்டபத்தை மாமண்டூர் மக்களுக்கே
ஒப்படைத்துள்ளேன்.
இந்த ஆண்டு 32 மாவட்டங்களிலும்,
32 முதியோர் இல்லங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், ரூ. 32 லட்சம்
இன்று வழங்கியுள்ளேன். நாம் கடவுளை நேரில் கண்டதில்லை. ஆனால் நம்முடைய
தாய்-தந்தையர்தான் நமக்கு கண்கண்ட தெய்வங்களாக காட்சியளிக்கிறார்கள். வயதான
காலத்தில் அவர்களை வைத்துக் காப்பாற்ற வேண்டியது இளைஞர்களின் கடமையாகும்.
அதைக் கருத்தில் கொண்டுதான் முதியோர் இல்லங்களுக்கு இந்த நன்கொடை
வழங்கியுள்ளேன்.
ஈரோடு மாவட்டத்தில் 55 பேருக்கு
ரூ.5 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனைப் பத்திரம் வழங்கப்படுகிறது. அதன்
மதிப்பு சுமார் ரூ.2 கோடியே 75 லட்சமாகும். விருகம்பாக்கம் சட்டமன்றத்
தொகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் இலவச ஆம்புலன்ஸ் வழங்கப்படுகிறது.
கழகத்தைச் சேர்ந்த தே.மு. தி.க. 138வது வட்ட அரிகிருஷ்ணன் படுகொலை
செய்யப்பட்டதால்,அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்திற்கு ரூ.ஒரு லட்சத்து
25 ஆயிரம் நிதியுதவியும், அதே போன்று ஆரணியில் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் நாரயாணசாமி தேர்தல் பணியில்
ஈடுபட்டபொழுது விபத்தில் மரணமடைந்தார். அவர் குடும்பத்தாருக்கு ரூ.65
ஆயிரம் வழங்கப்படுகிறது.
இயன்றதைச் செய்வோம்,
இல்லாதவர்க்கே என்னும் நமது குறிக்கோளுக்கு ஏற்ப, என்னால் இயன்ற மேற்கண்ட
நல உதவிகளை செய்துள்ளேன். அதே போன்று நாடெங்கும் உள்ள கழக நிர்வாகிகள், அணி
நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அவர வர்களுடைய சக்திக்கேற்ப
தங்களால் இயன்ற உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு செய்ய கேட்டுக் கொள்ளுகிறேன்.
ஊழலையும், வறுமையையும் ஒழிப்போம் என்று
தே.மு.தி.க. துவங்கிய பொழுதே நாம்தான் மக்களிடையே முன் வைத்தோம். இன்று
ஊழல் ஒழிப்பு இயக்கம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் ஓங்கி
ஒலிக்கிறது. அன்று நாம் சொன்னபொழுது கேலி பேசியவர்கள் இன்று அதற் காக
போராடுவதைப் பார்க்கிறபொழுது நமக்கே ஒரு பெருமித உணர்வு ஏற்படுகிறது.
அதிலும்
குறிப்பாக, இன்றைய இளைஞர்கள் அதற்காக இந்தியா எங்கும் போராட்டம்
நடத்துவது, ஊர்வலம் செல்வது நம்மைப் போன்ற ஊழல் ஒழிக்க வேண்டும் என்ற
உணர்வாளர்களுக்கு ஒரு நம்பிக்கையை தருகிறது.
இன்றைய
இளைஞர்களுக்கு தரமான கல்வியும், கண்ணியமான வேலையும், சமவாய்ப்பும்
கிடைக்கச் செய்வதே தலையாய கடமையாகும். அன்னை மொழி காப்போம், அனைத்து
மொழிகளையும் கற்போம் என்ற உணர்வுடன் இளைஞர்கள் தேவைப்படும் மொழிகளைக்
கற்பதன் மூலம் திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற வகையில் உலகெங்கும்
பணி செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
யார் ஊழல்
செய்தாலும் சட்டத்தின் முன் அவர்களும் நிறுத்தப்பட வேண்டும். சட்டத்தின்
முன் அனைவரும் சமம் என்பதற்கேற்ப, பிரதமரும் இதற்கு விதி விலக்கல்ல.
இன்னும் சொல்லப்போனால் அவரே ஒரு முன் உதாரணமாக திகழ வேண்டும். அத்தகையதோர்
புதிய சமுதாயத்தை அமைக்கும் பணியில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள எனது
பிறந்தநாள் பயன்படட்டும்.
இந்த நன்னாளில் நாட்டு
மக்கள் அனைவருக்கும் அவர்கள் காட்டி வரும் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி
காட்டும் வகையில் அவர்களுக்காக என்றும் கடமையாற்றுவேன் என்று உறுதி
கூறுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிரதமரும் விதிவிலக்கல்ல: யார் ஊழல் செய்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்; விஜயகாந்த் பிறந்த நா
இதெல்லாம் இவருடைய பணத்தில் இருந்து பண்ணுகிறாரா ...பரவாயில்லையே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» நாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்...
» நாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்..
» சிகரெட் பழக்கத்தை நிறுத்த வேண்டும்
» அவதூறு வழக்கு போட்ட ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும்: விஜயகாந்த்
» ஊழல் மோசடிகள் தொடர்பில் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் - சரத் பொன்சேகா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum