Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கிறீஸ் மனிதனின் செயற்பாடு அரசின் கட்டுப்பாட்டிலேயே இடம்பெறுகிறது: யோகேஸ்வரன் _
Page 1 of 1

மர்ம மனிதனின் செயற்பாட்டினால் பெண்கள்
தனித்திருக்க அஞ்சுகின்றனர். ஆண்கள் வீட்டில் இருப்பதனால் அவர்களின்
தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றது. மர்ம மனிதனின் செயற்பாடு
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இடம்பெறுகின்றது என்று தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட எம்.பி.யான எஸ். யோகேஸ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி
சட்டத்தின் கீழ் கட்டளைகள், தேயிலை சிறு பற்று நில அபிவிருத்தி சட்டத்தின்
கீழான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஏற்றுமதி துறை பற்றி உரையாற்றிக்
கொண்டிருக்கின்றோம். என்றாலும் மக்கள் நிம்மதியாக வேலைகளுக்கு செல்ல
முடியாத நிலைமையே நாட்டில் இன்று நிலவுகின்றது. களுவங்கேணியில் 100
வீதமானவர்கள் மீனவர்கள். அவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியவில்லை.
வீட்டில் மனைவி மற்றும் பெண்களை தனியாக விட்டுச் செல்ல முடியவில்லை. தனியாக
விட்டு செல்வதற்கு அஞ்சுகின்றனர். மர்ம மனிதனின் செயற்பாட்டை தீர்க்க
வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சியினருக்கும் இருக்கின்றது.
பெண்கள் வீதியில் நடமாட முடியவில்லை. மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல
முடியவில்லை. அச்சம் பீதியிலேயே மக்கள் வாழ்கின்றனர். மட்டக்களப்பு
தாதியர் விடுதிக்குள்ளும் புகுந்து கிறிஸ் மனிதன் தாக்குதல் நடத்துகின்றான்
என்றார்.
யோகேஸ்வரன் எம்.பி. கிறீஸ் மனிதனின் விவகாரம் தொடர்பில் சுட்டிக்காட்டிய
போதெல்லாம் ஆளும் தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன
ஆளும் கட்சியின் எம்.பியான ஏ.எச்.எம். அஸ்வர் மற்றும் பியசேன எம்.பி.
ஆகியோர் நிலையியற் கட்டளைகளை சுட்டிக்காட்டி விடயதானங்களுக்கு ஏற்ப
உரையாற்றுமாறு அடிக்கொரு தடவைகள் ஒழுங்கு பிரச்சினைகளை கிளப்பினர்.
நிலையியற் கட்டளையின் பிரகாரமே தான் உரையாற்றுவதாக தெரிவித்த யோகேஸ்வரன் எம்.பி.,
பொலிஸ் இராணுவத்துடன் எமக்கு பிரச்சினை இல்லை. பல்வேறு பிரச்சினைகளை நாம்
படைத் தரப்பினருடன் கலந்தாலோசித்து தீர்வு கண்டிருக்கின்றோம். எனினும்
கிறீஸ் மனிதன் பிரச்சினை தொடர்பில் எவ்விதமான தீர்வையும் பெற்றுக்கொள்ள
முடியவில்லை. மட்டக்களப்பில் மட்டுமே கிறீஸ் மனிதனின் செயற்பாட்டினால் 16
பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறிக் கொண்டிருந்த வேளையில் மீண்டும்
ஒழுங்கு பிரச்சினை எழுப்பப்பட்டது.
நான் விடயதானங்களுக்கு ஏற்பவே உரையாற்றுகின்றேன். எனினும் மர்ம மனிதனின்
செயற்பாடு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே நிறைவேறுகின்றது என்று தனது
உரையை இடைநடுவிலேயே இடைநிறுத்திகொண்டார்.

Similar topics
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகுமூலம் யோகேஸ்வரன் பா.உ. விஜயம்
» கிறீஸ் பூதத்தின் பின்னணியில் அரசே செயற்பட்டுவருகின்றது
» பேஸ்புக்கில் கிறீஸ் மனிதன்
» கிராமங்களை அச்சுறுத்தும் 'கிறீஸ்' மர்மமனிதன் உங்களில் ஒருவன்
» மட்டக்களப்பு கல்லடியில் கிறீஸ் மனிதனாம்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum