சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 8:18

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

வன்முறைகளை மீண்டும் தூண்டினால் கடும் நடவடிக்கை Khan11

வன்முறைகளை மீண்டும் தூண்டினால் கடும் நடவடிக்கை

Go down

வன்முறைகளை மீண்டும் தூண்டினால் கடும் நடவடிக்கை Empty வன்முறைகளை மீண்டும் தூண்டினால் கடும் நடவடிக்கை

Post by நண்பன் Sat 27 Aug 2011 - 4:14

அவசரகால சட்ட நீக்கத்தை சாதகமாக்கி
வன்முறைகளை மீண்டும் தூண்டினால் கடும் நடவடிக்கை
நமது நிருபர்
வன்முறைகளை முறியடிப்பதற்காகவே அவசர காலச்சட்டம் இதுவரைகாலமும் அமுலில் இருந்தது. இன்று நாட்டில் அமைதி திரும்பியிருப்பதனாலேயே அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி முற்றாக நீக்கியுள்ளார். ஆயினும் வன்முறைகளை மீண்டும் தூண்டிவிடும் சக்திகளுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்குமென அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

“அவசர காலச்சட்டம் நீக்கப்பட்டதை சாதகமாகப் பயன்படுத்தி எவரும் வன்முறைகளுக்கு தூபமிட்டால் அரசு பார்த்துக் கொண்டிருக்காது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடும்” என அதிகாரியொருவர் கூறினார்.

நாட்டில் சமாதானமும் அமைதியும் நிலைகொண்டிருக்கின்ற இன்றைய சூழ்நிலையில் அவசரகால சட்டத்தின் கடுமையான சட்டவிதிகள் அவசியமில்லை என்பதை அரசாங்கம் நன்கு உணர்ந்திருந்த காரணத்தினால் தான் சில காலமாக அவசரகால சட்டவிதிகளை படிப்படியாக தளர்த்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டு மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக கடந்த வியாழனன்று பாராளுமன்றத்தில் அவசர கால சட்டத்தை முற்றாக நீக்கிவிடுவது என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை அறிவித்தார். அவசரகால சட்டம் நீக்கப்பட்டது குறித்து இந்நாட்டின் சனத்தொகையின் 98 சதவீதமான பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். அவசர கால சட்டம் அமுலில் இருந்த போதிலும், எங்களுக்கு அதனால் எவ்வித தாக்கமும் ஏற்படவில்லை. அப்படி ஒரு சட்டம் அமுலில் இருக்கின்றதா என்று நாங்கள் உணர்ந்து கொள்ளவில்லை.

எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்தினால் நாடெங்கிலும் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற போது பாதுகாப்பு படையினரும் பொலிஸாரும் மேற்கொண்ட வீதி சோதனைகள் வீடுகளுக்கு வந்து சோதனையிடுதல் போன்ற சந்தர்ப்பங்களில் நாம் சிறிதளவு அசெளகரியங்களை அனுபவித்தாலும் நாம் நாட்டின் நன்மைக்காக அவற்றை ஏற்றுக் கொண்டோம் என்றும் பொதுமக்களில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.

இவ்விதம் அன்று நாம் நாட்டுப்பற்றுடன் நடந்து கொண்டதனால் தான் இன்று ஜனாதிபதி அவர்கள் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டி நாட்டில் பூரண அமைதியை ஏற்படுத்தியிருக்கிறார் என்றும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஜே.வி.பி வன்முறைகளையும் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்தையும் முறியடிப்பதற்கு அரசாங்கங்களுக்கு அவசர கால சட்டம் ஒரு சிறந்த அணிகனாக விளங்கியது. அதனை சரியான முறையில் சாதாரண பொதுமக்களுக்கு எவ்வித தீங்கையும் இழைக்காமல் அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்தி வந்த போதிலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கம் மிகவும் அவதானமாக நடந்து கொண்டது.

யுத்தம் முடிவுற்ற பின்னரும் பயங்கரவாதிகள் நாட்டின் நாலா பக்கங்களிலும் ஒளிந்திருந்து வன்முறைகளை ஏற்படுத்துவதற்கு திட்டமிடும் முயற்சிகளை முறியடிப்பதற்கும் எங்கள் நாட்டில் ஆயுதப்படையினருக்கும், பொலிஸாருக்கும் ஒரு பலம் வாய்ந்த உந்து சக்தியாக விளங்கியது.

ஜனாதிபதியினதும் பாதுகாப்பு செயலாளரினதும் நெறியான தலைமைத்துவத்தின் மூலம் இன்று வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் நாட்டின் நாலா பக்கங்களிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பாதாள உலகைச் சேர்ந்த தலைவர்களும் பிடித்து தண்டிக்கப்பட்டு இன்று சிறைக்கைதிக ளாக்கப்பட்டுள்ளார்கள். தொழிற் சங்கவாதிகளும், நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கான ஆர்ப்பாட்டங்களுக்கு தூபமிட்ட சந்தர்ப்பங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட முறையில் பொலிஸ் படையின் உதவியுடன் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம் உதவியாக அமைந்திருந்தது.

1958ம் ஆண்டு இனக்கலவரத்துடன் இலங்கையில் முதல் தடவையாக அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதற்கு பின்னர் 60ம் ஆண்டு தசாப்தத்தின் ஆரம்பத்திலும் இந்த சட்டம் தமிழ் கட்சிகளின் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை அடுத்து மட்டுப்படுத்தப்பட்டு அவசரகால சட்டவிதிகள் அமுலாக்கப்பட்டது. 1971ம் ஆண்டில் ஜே.வி.பி. யினரின் ஆயுதப் போராட்டத்தை அடுத்தே அவசர கால சட்டம் தீவிரமாக அமுலாக்கப்பட்டு, அக்கட்சியினர் அரசாங்க அதிகாரத்தை கைபற்றுவது தடுக்கப்பட்டது. அதற்கு பின்னர் அவ்வப்போது அவசரகால சட்டவிதிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அமுலாக்கப்பட்டன.

1983ம் ஆண்டு இனக்கலவரத்திற்கு பின்னரே நாட்டில் அவசரகால சட்டம் தொடர்ந்தும் சுமார் 30 வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகின்றது. 1983ம் ஆண்டில் இந்த அவசரகால சட்டத்தை ஏற்படுத்துவதற்கு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் கொடுங்கோல் ஆட்சியின் போது தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதைத் தொடர்ந்தே அவசரகால சட்டம் மீண்டும் நாட்டில் அமுலாக்கப்பட்டது.

அதையடுத்து எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதம் நாட்டில் சிறிது சிறிதாக வளர்ந்து 1987ம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இந்திய அமைதிகாக்கும் படையின் வருகையுடன் மீண்டும் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதம் வடக்கிலும் கிழக்கிலும் விஸ்வரூபம் எடுத்தது.

எப்போதுமே தேசத்துரோக செயற்பாடுகளை மேற்கொள்ள தயக்கம் காட்டாதிருக்கும் ஜே.விபி.யினர் 1987ம் ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி நாட்டில் அராஜகத்தையும் வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட்டனர். அன்று ஜே.வி.பியினர் அரசாங்க உடமைகளை அழித்தும், தேயிலை, இறப்பர் தோட்டங்களின் தொழிற்சாலைகளை தீயிட்டும், கொளுத்தியும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களை எரித்தும் கோடான கோடி எங்கள் நாட்டின் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை துவம்சம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து ஜே.வி.பி வன்முறைகள் 88-89ல் உச்சகட்டத்தை அடைந்ததை அடுத்து நாட்டில் சமாதா னத்தை ஏற்படுத்துவதற்காகவும் ஜே.வி.பியினரிடமிருந்து தங்களையும், தங்கள் குடும்ப அங்கத்தவர்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆயுதப் படையினரும், பொலிஸாரும் மேற்கொண்ட முயற்சிகளை ஜே.வி.பியினர் எதிர்த்து போராட்டங்கள் செய்த போது பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களின் மரணத்திற்கும் அடிதளமிட்டது.

இத்தகைய ஜே.வி.பி / எல்.ரி.ரி.ஈ மற்றும் தேசத்துரோக சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுவதற்கு

பட்டன. அதனால்தான் அவசரகால சட்டம் இவ்வளவு வருடங்கள் பாராளுமன்றத்தில் மாதா மாதம் நீடிக்கப்பட்டன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» சட்டத்தை கையிலெடுப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை! குழப்பம் ஏற்பட்டால் மீண்டும் யுத்தகால நிலைமை!
» எங்கள் ஆட்சி அமைந்தால் கட்சிக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மாயாவதி மிரட்டல்
» நில அபகரிப்பில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை: ஜெயலலிதா
» லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை; தி.மலையில் விஜயகாந்த் பிரசாரம்
» ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நிதியமைச்சு மீது நடவடிக்கை எடுக்குமாறு கடும் வற்புறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum