சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 11:49

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

ஆறு பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் Khan11

ஆறு பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்

Go down

ஆறு பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் Empty ஆறு பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்

Post by பாயிஸ் Mon 5 Sep 2011 - 8:30

இலங்கையின் நான்கு பிரதான பல்கலைக்கழங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் இப்போது மேற்கொண்டு வருகிறது. 1956 ஆம் ஆண்டுக்கு முன்னர் எங்கள் நாட்டின் கொழும்பு பல்கலைக்கழகமும், பேரா தனை பல்கலைக்கழகமும் கல்வித்துறையில் சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்று புகழ் உச்சியில் இருந்தன.

இலங்கையின் ஆங்கில மொழியறிவு அன்று அதியுன்னத நிலையில் இருந்தமைக்கு பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறை களில் கலாநிதி மற்றும் பட்டமுதுமாணி சிறப்பு பட்டங்கள் பெற்ற வர்கள் இவ்விரு பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் இருந்த காரணத்தினால் கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு சர்வ தேச ரீதியில் பெருமையும், அங்கீகாரமும் கொடுக்கப்பட்டது.

இலங்கையில் எம்.பி.பி.எஸ் வைத்தியத்துறை பட்டம் பெற்றவர்கள் பிரிட்டனிலும் மற்றெல்லா நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்டு, அந் நாடுகளில் வைத்தியர்களாக பணிபுரிவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் எம்.பி.பி.எஸ் பட்டங்கள் வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்படுவ தில்லை. இந்த நாடுகளில் எம்.பி.ப.எஸ் பட்டம் பெற்றவர்கள் வெளிநாடுகளில் தொழில்புரிய விரும்பினால், அந்தந்த நாடுகளின் எம்.பி.பி. எஸ் பரீட்சைக்கு தோற்றி, அவற்றில் சித்தியடைய வேண்டும்.

இதனால், நாம் மேலே குறிப்பிட்ட வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றவர்கள் இலங்கையில் வைத்தியர்களாக பணிபுரிய விரும்பினாலும், அவர்களும் இலங்கையில் எம். பி.பி.எஸ் பரீட் சைக்கு தோற்றி சித்தியடைய வேண்டும் என்ற நடைமுறை இப் போதும் இருந்து வருகிறது.

பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

ஆறு பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் Empty Re: ஆறு பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்

Post by பாயிஸ் Mon 5 Sep 2011 - 8:31

1956 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் பல்வேறு பல்கலைக் கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது, எமது பல்கலைக்கழகங்களில் சித்தியடைந்தவர்களுக்கு முன்னர் இருந்து வந்த வரவேற்பும், முக்கி யத்துவமும், வெளிநாடுகளில் எதிர்பார்த்தளவுக்கு கிடைக்கவில்லை.

இத்தகைய காரணங்களினால் அரசாங்கம் எமது நாட்டின் ஆறு பல் கலைக்கழகங்களில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான தீர்மான த்தை அடுத்த சில வருடங்களில் 600 மில்லியன் ரூபாவை செல விட்டு அதனை நடைமுறைப்படுத்துவது என்று முடிவெடுத்துள்ளது.

உயர்கல்வி அமைச்சின் செயலாளர் டாக்டர் சுனில் ஜெயந்த நவரத்ன இத்திட்டத்தின் கீழ் கொழும்பு, பேராதெனிய, ஸ்ரீ ஜெயவர்தனபுர, மொறட்டுவ, களனி மற்றும் றுகுணு பல்கலைக்கழகங்களின் தரம் உயர்த்தப்படும் என்று கூறினார். உலகில் முன்னணியிலுள்ள ஆயி ரம் பல்கலைக்கழகங்களின் தரத்திற்கு எமது நாட்டின் இந்த ஆறு பல்கலைக்கழகங்களை தரம் உயர்த்துவதே இத்திட்டத்தின் குறிக் கோளாகும் என்றும் அவர் கூறினார்.

இன்று, எங்கள் நாட்டின் இந்த ஆறு பல்கலைக்கழகங்களும் உலகின் பல்கலைக்கழகங்களின் தர நிர்ணயத்தில் 3500 முதல் 5000 வரை யிலான ஸ்தானங்களை பெற வேண்டிய பின்னடைவு ஏற்பட்டுள் ளது வேதனையளிப்பதாக இருக்கின்றது.

எமது பல்கலைக்கழகங்களை உலகின் முன்னணி ஆயிரம் பல்கலைக் கழகங்களின் தரத்திற்கு உயர்த்த வேண்டுமாயின், எமது பல் கலைக்கழகங்கள் உலக தரத்திலான கல்வித் தொடர்புடைய பிர சுரங்களை வெளியிட வேண்டும். அடுத்த படியாக வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக்கொள்வதுடன், வெளிநாட்டு கல்விமான்களை ஆசிரிய பீடத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக உலக நாடுகளில் பணிபுரியக் கூடிய தகுதியும், திறமைமிக்க பட்ட தாரிகளை எமது பல்கலைக்கழகங்கள் உருவாக்க வேண்டும்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

ஆறு பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் Empty Re: ஆறு பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்

Post by பாயிஸ் Mon 5 Sep 2011 - 8:32

இந்த நிபந்தனைகளையும், தகுதிகளையும் எமது பல்கலைக்கழகங்கள் பூர்த்தி செய்தால் மாத்திரமே அவற்றிற்கு சர்வதேச ரீதியில் முன் னணி பல்கலைக்கழகங்களாக உயர்ச்சி பெற முடியும். இன்று உல கப் பல்கலைக்கழகங்களின் தர நிர்ணயத்தில் பேராதனை பல் கலைக்கழகம் 2220 ஆம் ஸ்தானத்திலும், கொழும்பு பல்கலைக் கழகம் 2240 ஆம் ஸ்தானத்திலும், மொறட்டுவ பல்கலைக்கழகம் 2573 ஆம் ஸ்தானத்திலும், றுகுணு பல்கலைக்கழகம் 3514 ஆம் ஸ்தானத்திலும், திறந்த பல்கலைக்கழகம் 5988 ஆம் ஸ்தானத்திலும், ஸ்ரீ ஜெயவர்தன பல்கலைக்கழகம் 6382 ஆம் ஸ்தானத்திலும், களனி பல்கலைக்கழகம் 6594 ஆம் ஸ்தானத்திலும் இருக்கின்றன.

இது இவ்விதம் இருக்க தெற்காசிய நாடுகளின் பல்கலைக்கழகங்களின் தர நிர்ணயத்தில் பேராதனை பல்கலைக்கழகம் 20 ஆம் ஸ்தானத் திலும், கொழும்பு பல்கலைக்கழகம் 23 ஆம் ஸ்தானத்திலும், மொறட்டுவ பல்கலைக்கழகம் 31 ஆம் ஸ்தானத்திலும் இருப்பது ஓரளவு மன நிறைவை அளிக்கின்றது.

எமது பல்கலைக்கழகங்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு பூர் வாங்க நடவடிக்கையாக பல்கலைக்கழக ஆணைக்குழுவின் பிரதி நிதிகளும், பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களும், ஒரு உயர் மட்ட கூட்டத்தை நடத்தி, ஆலோசனைகளை நடத்துவார்கள். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எமது பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு உதவியாக அமையும் என்று நாம் அசையாத நம்பிக்கை வைத்திருக்கலாம். இந்த தீர்மானங்கள் மீண்டும் எமது நாட்டின் பல்கலைக்கழகங்களை முன்பு இருந்த நிலைக்கு உயர்த்தி, இலங்கை கல்வித்துறையில் அடைந்துள்ள உயர் நிலையை வெளிநாடுகளுக்கு எடுத்துக் காட்டுவதற்கு ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.

பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

ஆறு பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் Empty Re: ஆறு பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum