Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
+7
அப்துல்லாஹ்
kalainilaa
பாயிஸ்
kutty
நண்பன்
Atchaya
யாதுமானவள்
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
எத்தனையோ மொழிகளீன்ற தாயின் கருவிது
எதிரியையும் தன்வசத்தில் ஈர்த்து வைத்தது
சத்து நிறை நூல்களெல்லாம் தானும் கொண்டது
சந்ததமிழ் இன்றேனோ சவலை யானது
பத்திரமாய் பழைய நூல்கள் பரணில் உறங்குது
பார்க்கையிலே பழகுதமிழ் பாவம் வாடுது
சத்தியமாய் எனதுவிரல் தடுக்கத் துடிக்குது
சத்தமின்றி கவலைகொண்டு நெஞ்சம் நோகுது
எத்தர்மொழி ஏணிமேலே ஏறிப்போகுது
இதனைக் கண்ட என்மனமோ துக்கமாகுது
பித்தர்மனம் புத்திகெட்டு புறமே போகுது
போதைகொண்டு பிறமொழியை நாவிலேற்றுது
நித்தநித்தம் செந்தமிழின் நிலைமை மாறுது
நினைக்கையிலே நெஞ்சமெங் கும்தீ பரவுது
முத்தனைய மூத்ததமிழ் மூழ்கிப் போகுது
முழங்குமொழி யதற்குயின்று மூச்சு முட்டுது
சிலம்பொலியின் அதிர்வுகளை செவியில் ஏற்றியே
சிந்துவெளி முழுவதையும் உசுப்பி விட்டது
பலபுலவர் பகுத்து வைத்த சங்கநூலெலாம்
படித்தவர்கள் சிந்தையெலாம் செம்மையாக்குது
வெண்டளையால் உயர்ந்த குரள்வியக்க வைக்குது
வேறுமொழி தமிழைக்கொஞ் சம்இரவல் கேட்குது
ஒண்டமிழை உண்டவர்கள் நெஞ்சம் இனிக்குது
ஒர்நிகராம் தமிழை யுலகுகூர்ந்து நோக்குது
சூழநின்றும் ஆரியர்கள் சூழ்ச்சிசெய் தனர்பல
சூத்திரங்கள் செய்தபோதும் தோற்றுப் போயினர்
பாழும்ஆங் கிலேயன்வந் துதமிழைத்தாக் கினானவன்
பாதிரிமார் தமிழைத் தனது மார்பில் சூட்டினார்!
ஆழியலை யுண்டுதீர்க்க நினைத்து வந்தது
ஆரவார தமிழதற்கும் அடங்க மறுத்தது
தாழிஎல்லாம் நிறைந்து தரமுயர்ந்து நிற்குது
தரணியிலே உயர்ந்தமொழிப் பட்டம் வென்றது !
இன்னும்பல பெருமை களையிமையில் சுமக்கிறாள்!
இமயமான இவளையெந்தன் உதட்டில் சுமக்கிறேன்.
ஒன்றி யவள்நிழல்பி டித்து நானும் நடக்கிறேன்.
ஓடியவள் மடியில்தானே உறக்கம் கொள்கிறேன்
பொன்னும் மணிரத்தினங் களொதுக்கி வைக்கிறேன்
புன்னகையாய்ப் பைந்தமிழைப் பூட்டிக் கொள்கிறேன்
என்மழலை கோர்த்து வொருமாலை யாக்கினேன்
அதையிவளின் மார்பில் சூட்டியழகு பார்க்கிறேன்
- யாதுமானவள் (எ) லதாராணி

Last edited by யாதுமானவள் on Sat 17 Sep 2011 - 14:29; edited 2 times in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
பொன்னும் மணிரத்தினங் களொதுக்கி வைக்கிறேன்
புன்னகையாய்ப் பைந்தமிழைப் பூட்டிக் கொள்கிறேன்
என்மழலை கோர்த்து வொருமாலை யாக்கினேன்
அதையிவளின் மார்பில் சூட்டியழகு பார்க்கிறேன்
அற்புதம்...அருமை .... :flower: :!@!: #heart
புன்னகையாய்ப் பைந்தமிழைப் பூட்டிக் கொள்கிறேன்
என்மழலை கோர்த்து வொருமாலை யாக்கினேன்
அதையிவளின் மார்பில் சூட்டியழகு பார்க்கிறேன்
அற்புதம்...அருமை .... :flower: :!@!: #heart
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
Atchaya wrote:பொன்னும் மணிரத்தினங் களொதுக்கி வைக்கிறேன்
புன்னகையாய்ப் பைந்தமிழைப் பூட்டிக் கொள்கிறேன்
என்மழலை கோர்த்து வொருமாலை யாக்கினேன்
அதையிவளின் மார்பில் சூட்டியழகு பார்க்கிறேன்
அற்புதம்...அருமை ....
நன்றி ரவி !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
முத்தனைய மூத்ததமிழ் மூழ்கிப் போகுது
முழங்குமொழி யதற்குயின்று மூச்சு முட்டுது
நித்தநித்தம் செந்தமிழின் நிலைமை மாறுது
நினைக்கையிலே நெஞ்சமெங் கும்தீ பரவுது
அக்கா...உங்களால் மட்டுமே இப்படி எல்லாம் எழுத முடியும்...நெஞ்சு கனக்க வைக்கிறது... :!+: :!+:
முழங்குமொழி யதற்குயின்று மூச்சு முட்டுது
நித்தநித்தம் செந்தமிழின் நிலைமை மாறுது
நினைக்கையிலே நெஞ்சமெங் கும்தீ பரவுது
அக்கா...உங்களால் மட்டுமே இப்படி எல்லாம் எழுத முடியும்...நெஞ்சு கனக்க வைக்கிறது... :!+: :!+:
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
30 நிமிடமாக நான் ஆலோசித்துக்கொண்டிருக்கிறேன்
தமிழோடு யாதுமாவனவள் (லதாராணி) மேடம் கொண்ட காதலால் அவர்கள் கோர்த்துள்ள தமிழ் வரிகள் இந்த வரிகளுக்கு பாராட்டாமல் என்னால் இருக்க முடிய வில்லை 30 நிமிடம் களிந்து விட்டது எப்படி பாராட்ட என்ன சொல்லி பாராட்ட
தமிழ்த்தாயே உங்கள் உறக்கம் தமிழ்
முத்தமிழ் நங்கையே உங்கள் விழிப்பு தமிழ்
என்னருமை தமிழச்சியே உங்கள் விருப்பு தமிழ்
அறிவுக்களஞ்சிமே நீங்கள் நெஞ்சில் சுமப்பதும் தமிழ்
சிந்தனை சிற்பியே உங்கள் மூச்சும் பேச்சும் தமிழ்
உங்கள் தமிழ் ஆர்வத்தை என்னவென்று சொல்ல
எப்படி சொல்ல. எனக்குத் தெரிந்த தமிழுக்குப் பஞ்சம்
உங்கள் திறமைக்கு வாழ்த்துச் சொல்ல.
மன்னித்து விடுங்கள் எனக்கு வரிகளுக்குப் பஞ்சம்
அதனால் வாழ்த்த முடியாமல் பின் வாங்கி விட்டேன்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart #heart

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
சூப்பர் பாட்டிம்மா அசத்திட்டீங்க போங்க மார்வலஸ், ஃபண்டாஸ்டிக் அப்படின்னு ஆங்கிலத்துல வாழ்த்த பிடிக்கல
அழகு மிகுந்த தமிழ் மொழியை அற்புதமான கவிதை வடிவில் ஆனந்தமாய் அள்ளித் தந்தமைக்கு மிக்க நன்றி :!@!:
அழகு மிகுந்த தமிழ் மொழியை அற்புதமான கவிதை வடிவில் ஆனந்தமாய் அள்ளித் தந்தமைக்கு மிக்க நன்றி :!@!:
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
kutty wrote:சூப்பர் பாட்டிம்மா அசத்திட்டீங்க போங்க மார்வலஸ், ஃபண்டாஸ்டிக் அப்படின்னு ஆங்கிலத்துல வாழ்த்த பிடிக்கல
அழகு மிகுந்த தமிழ் மொழியை அற்புதமான கவிதை வடிவில் ஆனந்தமாய் அள்ளித் தந்தமைக்கு மிக்க நன்றி
அது சரி... வாழ்த்துக்கள் இருக்கட்டும்.... முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க
பாட்டிம்மாவா? ... நீங்க குட்டியா இருக்கறதால நாங்க பாட்டிமாவா ஆகிடுவோமா? ....
(கொஞ்சம் வளருங்கப்பா...! -மீனு ஸ்டைல் "லதா"ன் சொல்றேன் )
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
பரிசு கொடுத்தா வாங்கிக்கனும் இப்படி திரும்ப கேள்விலாம் கேட்கப்படாது ஓகே...................
நான் ஒரு தடவை தான் சொல்வேன் உரக்க சொல்வேன் அதுதான் குட்டி எப்புடி :.”: பாட்டிம்மாமாமாமாமா
நான் ஒரு தடவை தான் சொல்வேன் உரக்க சொல்வேன் அதுதான் குட்டி எப்புடி :.”: பாட்டிம்மாமாமாமாமா
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
kutty wrote:பரிசு கொடுத்தா வாங்கிக்கனும் இப்படி திரும்ப கேள்விலாம் கேட்கப்படாது ஓகே...................
நான் ஒரு தடவை தான் சொல்வேன் உரக்க சொல்வேன் அதுதான் குட்டி எப்புடி பாட்டிம்மாமாமாமாமா
பரவாயில்லை.. மெதுவா சொல்லாம என்னை மாதிரி உரக்க சொல்றேன்னு பழகி கிட்ட குட்டி.... நம்ம லைன் க்கு வந்தாச்சுல்ல... அது போதும்...!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
எது உங்க லைன் ௨ கோடு நோட்டுல ஒரு கோடு இருக்குமே அதுவா :”: :”: :”: :”:
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
kutty wrote:எது உங்க லைன் ௨ கோடு நோட்டுல ஒரு கோடு இருக்குமே அதுவா
இல்ல ஒத்தைக் கொடுத்தான்... ஒரே கொடு .... நேர்க்கோடு ....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
கிளம்பிட்டாய்யா கிளம்பிட்டாய்யா :”: :”:kutty wrote:எது உங்க லைன் ௨ கோடு நோட்டுல ஒரு கோடு இருக்குமே அதுவா :”: :”: :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
யாதுமானவள் wrote:kutty wrote:எது உங்க லைன் ௨ கோடு நோட்டுல ஒரு கோடு இருக்குமே அதுவா
இல்ல ஒத்தைக் கொடுத்தான்... ஒரே கொடு .... நேர்க்கோடு ....
ஒரு கோடு நோட்டு வரலையே வந்தா பாப்போம்............ எப்பவுமே ஒரு கோடு தனியா ஜெயிச்சதா சரித்திரமே இல்ல அதுக்கு துணைக்கு இன்னொரு கோடு வேண்டும்............
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
kutty wrote:யாதுமானவள் wrote:kutty wrote:எது உங்க லைன் ௨ கோடு நோட்டுல ஒரு கோடு இருக்குமே அதுவா
இல்ல ஒத்தைக் கொடுத்தான்... ஒரே கொடு .... நேர்க்கோடு ....
ஒரு கோடு நோட்டு வரலையே வந்தா பாப்போம்............ எப்பவுமே ஒரு கோடு தனியா ஜெயிச்சதா சரித்திரமே இல்ல அதுக்கு துணைக்கு இன்னொரு கோடு வேண்டும்............
ஒற்றைக் கோட்டின் மேல் எழுதும் எழுத்து தான் ஜெயிக்கும். எழுத்தை இடுகோடுகளுக்குள் சிறை படுத்த முடியாது... எனக்குப் பிடிக்கவும் பிடிக்காது!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
அப்ப நீங்க சின்னப் பிள்ளைல ௨ கோடு நோட்டுலாம் எழுதுனது இல்லையா அதான் இப்படி பேசுறீங்க..........
௨ கோடு நோட்டுன்னு சொன்னது நம்ம அம்மா அப்பாவை இப்ப புரியுதா மக்கு பாட்டிம்மா
௨ கோடு நோட்டுன்னு சொன்னது நம்ம அம்மா அப்பாவை இப்ப புரியுதா மக்கு பாட்டிம்மா
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
வியப்பாகவே நான் பார்ப்பதுண்டு உங்களின் கவிதைகளை மறபுக்கவிதையின் தாக்கம் உங்கள் கவிதையில் எப்போவுமே ஜொலிக்கும். ஒரு கவிஞனுக்கு இலக்கணச்சொற்கள் கண்டிப்பாகத்தெரிந்திருக்க வேண்டும் அந்த வகையில் எங்கள் சேனையில் நீங்கள்தான் முதலிடம் இதை யார்தான் மறுக்க முடியும். உண்மையைச்சொன்னால் நான் உங்களின் கவிதையின் ஊடாக கற்றுக்கொண்டதும் திருடிக்கொண்டதும் அதிகம் காரணம் எனக்கு அவ்வளவாக சொற்கள் தெரியாது அதற்காக என் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்தோடு நான் இன்னுமொன்றை உங்களிடம் கேட்க வேண்டுமென ஆசைப்படுகிறேன் நீங்கள் அதிகம் புத்தகங்கள் படிப்பதாலா இப்படியான கவிதைகள் எழுத உதவியாக இருக்கிறது அல்லது அது தானாகவே வருகிறதா. ஏதுவானாலும் இதைப்பாராட்டாமல் மாத்திரம் இருக்க முடியாது என்றாலும் என்னால் பாராட்ட முடியவில்லை.
சிறப்பு சிறப்பு சிறப்பு

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
Atchaya wrote:பொன்னும் மணிரத்தினங் களொதுக்கி வைக்கிறேன்
புன்னகையாய்ப் பைந்தமிழைப் பூட்டிக் கொள்கிறேன்
என்மழலை கோர்த்து வொருமாலை யாக்கினேன்
அதையிவளின் மார்பில் சூட்டியழகு பார்க்கிறேன்
அற்புதம்...அருமை ....
மிக்க நன்றி ரவி! :)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
Atchaya wrote:முத்தனைய மூத்ததமிழ் மூழ்கிப் போகுது
முழங்குமொழி யதற்குயின்று மூச்சு முட்டுது
நித்தநித்தம் செந்தமிழின் நிலைமை மாறுது
நினைக்கையிலே நெஞ்சமெங் கும்தீ பரவுது
அக்கா...உங்களால் மட்டுமே இப்படி எல்லாம் எழுத முடியும்...நெஞ்சு கனக்க வைக்கிறது...
சந்தோஷமாக உள்ளது. என் எழுத்துக்கள் ஒரு சிலரைக் கவர்வதும் அதன் தாக்கத்தால் கனப்பதும். நன்றி ரவி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
நண்பன் wrote:30 நிமிடமாக நான் ஆலோசித்துக்கொண்டிருக்கிறேன்
தமிழோடு யாதுமாவனவள் (லதாராணி) மேடம் கொண்ட காதலால் அவர்கள் கோர்த்துள்ள தமிழ் வரிகள் இந்த வரிகளுக்கு பாராட்டாமல் என்னால் இருக்க முடிய வில்லை 30 நிமிடம் களிந்து விட்டது எப்படி பாராட்ட என்ன சொல்லி பாராட்ட
தமிழ்த்தாயே உங்கள் உறக்கம் தமிழ்
முத்தமிழ் நங்கையே உங்கள் விழிப்பு தமிழ்
என்னருமை தமிழச்சியே உங்கள் விருப்பு தமிழ்
அறிவுக்களஞ்சிமே நீங்கள் நெஞ்சில் சுமப்பதும் தமிழ்
சிந்தனை சிற்பியே உங்கள் மூச்சும் பேச்சும் தமிழ்
உங்கள் தமிழ் ஆர்வத்தை என்னவென்று சொல்ல
எப்படி சொல்ல. எனக்குத் தெரிந்த தமிழுக்குப் பஞ்சம்
உங்கள் திறமைக்கு வாழ்த்துச் சொல்ல.
மன்னித்து விடுங்கள் எனக்கு வரிகளுக்குப் பஞ்சம்
அதனால் வாழ்த்த முடியாமல் பின் வாங்கி விட்டேன்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
உங்கள் பின்னூட்டத்தில் மகிழ்ந்தேன் நண்பன்! அழகான வார்த்தைகளால் நீங்கள் வாழ்த்திய விதம் கண்டு பூரிக்கிறேன்.
நன்றிகள் ஏற்க!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
kutty wrote:சூப்பர் பாட்டிம்மா அசத்திட்டீங்க போங்க மார்வலஸ், ஃபண்டாஸ்டிக் அப்படின்னு ஆங்கிலத்துல வாழ்த்த பிடிக்கல
அழகு மிகுந்த தமிழ் மொழியை அற்புதமான கவிதை வடிவில் ஆனந்தமாய் அள்ளித் தந்தமைக்கு மிக்க நன்றி
நன்றி நன்றி குட்டி...!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
வாழ்த்த வரிகளின்றி தவித்தேன் மேடம்உங்கள் பின்னூட்டத்தில் மகிழ்ந்தேன் நண்பன்! அழகான வார்த்தைகளால் நீங்கள் வாழ்த்திய விதம் கண்டு பூரிக்கிறேன்.
நன்றிகள் ஏற்க!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
பாயிஸ் wrote:வியப்பாகவே நான் பார்ப்பதுண்டு உங்களின் கவிதைகளை மறபுக்கவிதையின் தாக்கம் உங்கள் கவிதையில் எப்போவுமே ஜொலிக்கும். ஒரு கவிஞனுக்கு இலக்கணச்சொற்கள் கண்டிப்பாகத்தெரிந்திருக்க வேண்டும் அந்த வகையில் எங்கள் சேனையில் நீங்கள்தான் முதலிடம் இதை யார்தான் மறுக்க முடியும். உண்மையைச்சொன்னால் நான் உங்களின் கவிதையின் ஊடாக கற்றுக்கொண்டதும் திருடிக்கொண்டதும் அதிகம் காரணம் எனக்கு அவ்வளவாக சொற்கள் தெரியாது அதற்காக என் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்தோடு நான் இன்னுமொன்றை உங்களிடம் கேட்க வேண்டுமென ஆசைப்படுகிறேன் நீங்கள் அதிகம் புத்தகங்கள் படிப்பதாலா இப்படியான கவிதைகள் எழுத உதவியாக இருக்கிறது அல்லது அது தானாகவே வருகிறதா. ஏதுவானாலும் இதைப்பாராட்டாமல் மாத்திரம் இருக்க முடியாது என்றாலும் என்னால் பாராட்ட முடியவில்லை.
சிறப்பு சிறப்பு சிறப்பு
அதிகமான புத்தகங்களை ஆழ்ந்து படிப்பேன் பாயிஸ்.... எனக்கும் மற்ற கவிஞர்களின் தாக்கம் தான். ஆனால் என்னை தொலைவிலிருந்தே தொடர்ந்து ஊக்குவிக்குவித்து என் எழுத்துக்களை ரசித்து அவர்களும் மகிழ்ந்து என்னை மெருகேற்றுபவர்கள் என் தந்தையும் புலவர். திரு. சூசை மைக்கேலும். ( எந்தந்தையை சமீபத்தில்தான் இழந்துவிட்டேன்)
இந்தக் கவிதையை என்தந்தை மிகவும் ரசித்தார். குறிப்பாக இதிலுள்ள இரண்டு வரிகள்... தொலைபேசியில் அழைத்துச் சொன்னார்.
நிறைய படிக்கவேண்டும், முடிந்தபோதெல்லாம் எழுதவேண்டும். ... அவ்வளவுதான்.... நான் இன்னும் ஆரம்பப் படியில் தான் உள்ளேன். முடிந்தளவு எழுதவேண்டும் என்ற முயற்சியில் உள்ளேன்.
நன்றி பாயிஸ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
யாதுமானவள் wrote:பாயிஸ் wrote:வியப்பாகவே நான் பார்ப்பதுண்டு உங்களின் கவிதைகளை மறபுக்கவிதையின் தாக்கம் உங்கள் கவிதையில் எப்போவுமே ஜொலிக்கும். ஒரு கவிஞனுக்கு இலக்கணச்சொற்கள் கண்டிப்பாகத்தெரிந்திருக்க வேண்டும் அந்த வகையில் எங்கள் சேனையில் நீங்கள்தான் முதலிடம் இதை யார்தான் மறுக்க முடியும். உண்மையைச்சொன்னால் நான் உங்களின் கவிதையின் ஊடாக கற்றுக்கொண்டதும் திருடிக்கொண்டதும் அதிகம் காரணம் எனக்கு அவ்வளவாக சொற்கள் தெரியாது அதற்காக என் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்தோடு நான் இன்னுமொன்றை உங்களிடம் கேட்க வேண்டுமென ஆசைப்படுகிறேன் நீங்கள் அதிகம் புத்தகங்கள் படிப்பதாலா இப்படியான கவிதைகள் எழுத உதவியாக இருக்கிறது அல்லது அது தானாகவே வருகிறதா. ஏதுவானாலும் இதைப்பாராட்டாமல் மாத்திரம் இருக்க முடியாது என்றாலும் என்னால் பாராட்ட முடியவில்லை.
சிறப்பு சிறப்பு சிறப்பு
அதிகமான புத்தகங்களை ஆழ்ந்து படிப்பேன் பாயிஸ்.... எனக்கும் மற்ற கவிஞர்களின் தாக்கம் தான். ஆனால் என்னை தொலைவிலிருந்தே தொடர்ந்து ஊக்குவிக்குவித்து என் எழுத்துக்களை ரசித்து அவர்களும் மகிழ்ந்து என்னை மெருகேற்றுபவர்கள் என் தந்தையும் புலவர். திரு. சூசை மைக்கேலும். ( எந்தந்தையை சமீபத்தில்தான் இழந்துவிட்டேன்)
இந்தக் கவிதையை என்தந்தை மிகவும் ரசித்தார். குறிப்பாக இதிலுள்ள இரண்டு வரிகள்... தொலைபேசியில் அழைத்துச் சொன்னார்.
நிறைய படிக்கவேண்டும், முடிந்தபோதெல்லாம் எழுதவேண்டும். ... அவ்வளவுதான்.... நான் இன்னும் ஆரம்பப் படியில் தான் உள்ளேன். முடிந்தளவு எழுதவேண்டும் என்ற முயற்சியில் உள்ளேன்.
நன்றி பாயிஸ்
அரிய தகவலுக்கு நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
என்மழலை கோர்த்து வொருமாலை யாக்கினேன்
அதையிவளின் மார்பில் சூட்டியழகு பார்க்கிறேன்
தமிழுக்கு புகழ்மாலை ,
தமிழ் அருவியாய் இங்கு .
தரணி எங்கும் வேற்று மொழி ஆதிக்கம்,
நாத்திகம் பேசும் மனிதனுக்கு மட்டும் வசப்படும்,
என்ற பொருளை க்கொண்டு இங்கு ஆதங்கம்,
தமிழுக்கு ,ஒரு தமிழச்சி சுட்டிய மாலையாகும்,
படிக்க படிக்க அழகாகும்!மனத்தை ஈர்க்கும் .பாராட்ட அதே தமிழை துணைக்கு அழைக்கும் .

Last edited by kalainilaa on Mon 5 Sep 2011 - 22:15; edited 1 time in total
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தமிழோடு நான்- யாதுமானவள் கவிதை
kalainilaa wrote:என்மழலை கோர்த்து வொருமாலை யாக்கினேன்
அதையிவளின் மார்பில் சூட்டியழகு பார்க்கிறேன்
தமிழுக்கு புகழ்மாலை ,
தமிழ் அருவியாய் இங்கு .
தரணி எங்கும் வேற்று மொழி ஆதிக்கம்,
நாத்திகம் பேசும் மனிதனுக்கு மட்டும் வசப்படும்,
என்ற பொருளை க்கொண்டு இங்கு ஆதங்கம்,
தமிழுக்கு ,ஒரு தமிழச்சி சுட்டிய மாலையாகும்,
படிக்க படிக்க அழகாகும்!மனத்தை ஈர்க்கும் .பாராட்ட அதே தமிழை துணைக்கு அழைக்கும் .
மிக்க நன்றி கலை நிலா.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இரங்கல் கவிதை !யாதுமானவள் தந்தைக்காக!
» நான் எழுதுவது கவிதை இல்லை
» யாதுமானவள்: பாதுஷா ஒரு கவிதை சொல்லு
» கவலை நான் [மாதிரி கவிதை ]
» நான் ரசித்த கவிதை!
» நான் எழுதுவது கவிதை இல்லை
» யாதுமானவள்: பாதுஷா ஒரு கவிதை சொல்லு
» கவலை நான் [மாதிரி கவிதை ]
» நான் ரசித்த கவிதை!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum