சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

ஜெயா சொல்வது உண்மையா? தூக்கு கைதிகள் -சட்டம், தீர்மானம் -ஓர் அலசல் Khan11

ஜெயா சொல்வது உண்மையா? தூக்கு கைதிகள் -சட்டம், தீர்மானம் -ஓர் அலசல்

Go down

ஜெயா சொல்வது உண்மையா? தூக்கு கைதிகள் -சட்டம், தீர்மானம் -ஓர் அலசல் Empty ஜெயா சொல்வது உண்மையா? தூக்கு கைதிகள் -சட்டம், தீர்மானம் -ஓர் அலசல்

Post by அப்துல்லாஹ் Tue 6 Sep 2011 - 9:58

"தூக்குத் தண்டனையை எதிர் நோக்கியுள்ள மூவரையும் காப்பாற்ற தனது அரசுக்கு சட்ட அதிகாரமில்லை' என்று தெளிவுபடுத்தியிருக்கிறார் ஜெயலலிதா. இது தொடர்பாக, 29-ந் தேதி சட்டமன்றத்தில் 110-விதியின் கீழ் பேசிய ஜெயலலிதா, ""குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதேபொருள் தொடர்பான கருணை மனுவை ஆளுநர் பரிசீலிக்க வேண்டுமென மாநில அரசு கோரமுடியாது என்று 5.3.1991 நாளிட்ட மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில் தெளிவுரை வழங்கியுள்ளது. அதாவது, மரண தண்ட னை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர் பான கருணை மனு... இந்திய அரசமைப்பு சட்டம் 72-ன் கீழ் குடியரசுத் தலைவர் தனக்குள்ள அதிகாரத்தின் படி நிராகரித்திருந்தால், அரசமைப்பு சட்டம் 161-ன் பிரிவு படி உள்ள அதிகாரத்தை பயன் படுத்த மாநில அரசுக்கு அதிகாரமில்லை என அரசமைப்பு சட்டம் 257(1) பிரிவு கட்டளை யிடுவதாக மத்திய அரசு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. அதனால் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட கருணை மனுவை மாற்று வதற்கு எனக்கு அதிகாரமில்லை''’என்று கூறியிருந்தார்.

ஆனால் மூவரையும் காப்பாற்றியாக வேண்டும் என்கிற தன்னெழுச்சியான உணர்வுகள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில், ஜெயலலிதாவின் இந்த கருத்துக்குப் பிறகு மேலும் எழுச்சி அதிகரிக்கத் துவங்கியது. அதேசமயம் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் வழக்கறிஞர்கள் "மாநில அரசுக்கு அதிகாரமிருக்கிறது' என்று பல்வேறு சட்ட விதிகளையும் சம்பவங்களையும் சுட்டிக்காட்டி ஜெயலலிதா வுக்கு கடிதம் எழுதினர். இந்த நிலையில் மறுநாள் (30-ந் தேதி) சட்டமன்றத்தில்,’’""தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துக்கும் மதிப்பளிக்கும் விதத்தில், சாந்தன், முருகன்,பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை பரிசீலித்து அவர்களது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு குடி யரசுத் தலைவரை இந்த பேரவை வலியுறுத்துகிறது''’’என்று தீர்மானம் நிறைவேற்றினார் ஜெயலலிதா. ஆனால் ""இந்த தீர்மானம் மத்திய அரசை கட்டுப்படுத்தாது'' என்று உடனடி இதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறார் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் 110 விதியின் கீழ் ஜெ. சொன்னது உண்மையா? பொய்யா? என அரசியல் கட்சிகள், வழக்கறிஞர்கள் தரப்பினரால் விவாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பலரிடமும் பேசினோம்.

தொல்.திருமாவளவன் எம்.பி.
(தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி) :

மூவரின் உயிரை காப்பாற்றும் விஷயத்தில் தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று ஜெய லலிதா கூறியதற்கும், சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியதற்கும் எவ்வித வித்தி யாசமும் இல்லை. இரண்டும் ஒரே பொருள் கொண்டவைதான். இரண்டு விஷயத்திலுமே மாநில அரசின் அதிகாரத்தை அவர் தட்டிக் கழிப்பதாகவே கருதுகிறேன். நமது அரசியலமைப்பு சட்டம் பிரிவு-72 குடியரசுத் தலைவருக்குரிய அதிகாரத்தையும், 161-வது பிரிவு மாநில ஆளுநருக்குரிய அதிகாரத்தையும் விரிவாக சுட்டிக்காட்டுகிறது. அந்தவகையில், குடியரசுத் தலைவரால் எத்தனை முறை கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும் மாநில ஆளுநருக்கு மீண்டும் மீண்டும் மனு செய்ய முடியும். அப்படி ஆளுநருக்கு அனுப்பப்படும் மனு மீது தனது அமைச்சரவையில் விவாதித்து தண்டனையை குறைக்க ஆளுநருக்கு தமிழக அரசால் பரிந்துரைக்க முடியும். அதை செய்யாமல் "மத்திய அரசிடம் போராடி உங்களுக்கான நியாயத்தை பெற்றுக்கொள்ளுங்கள்' என்கிற ரீதியிலேயே ஜெயலலிதாவின் முடிவுகள் இருக்கிறது. மாநில அரசிடம் இருக்கும் அதிகாரம் என்கிற பந்தை அடித்து விளையாடாமல் மத்திய அரசிடமே தள்ளிவிடுகிறார் ஜெயலலிதா.

பேராசிரியர் அ.மார்க்ஸ் (மாநில அமைப்பாளர், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்) :

மரண தண்டனைக்கு தொடர்ச்சியான ஆதரவாளர் ஜெயலலிதா. குற்றம், தண்டனை, அரசு அதிகாரம் போன்ற விஷயங்களில் முழுமை யான பழமைவாத கருத்துக்களைக் கொண்டவர். இந்த மூவரும் தூக்கிலிடப்பட வேண்டும் என்பதே அவரது உள்ளார்ந்த கருத்து. அத னால்தான், நளினிக்கு தண்டனையை குறைக்க சோனியாகாந்தி நினைத்தபோது "இது உங்கள் கணவரின் பிரச்சினையாகப் பார்க்கக்கூடாது. ஒரு தலைவரை படுகொலை செய்தவர்களை மன்னிக்கக் கூடாது என்றே பார்க்க வேண்டும்' என்கிற ரீதியிலே கருத்துக்களைச் சொன்னவர் ஜெயலலிதா.

மூவரின் தூக்குத்தண்டனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் வெடித்த போராட்டங்கள், செங்கொடியின் தீக்குளிப்பு உயிர் தியாகம் உள்ளிட்ட நிகழ்வுகள் தமிழக அரசை நிலைகுலையச் செய்தன. ஜெயலலிதாவும் உண்மையில் திணறித்தான் போனார். இருப்பினும் தூக்குத் தண்டனைக்கு எதிராக எந்த கருத்தையும் வெளிப்படுத்திடக்கூடாது என்பதில் இறுக்கமாகவே இருந்தார் அவர். ஆனால் முத்துக்குமார் தியாகத்தால் உருவான தாக்கம், செங்கொடி தீக்குளிப்பிலும் உருவாகிடுமோ என அறிந்து... இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கருதியே "தனக்கு அதிகாரமில்லை' என்று உரத்துச் சொன்னார் ஜெயலலிதா. ஆனால் "அதிகாரம் இருக்கு' என்று சட்ட வல்லுநர்கள் வெளிப்படுத்தியதும், மறுநாளே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி "தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன்' என்பதுபோல தோற்றம் காட்டியிருக்கிறார்.

ஆனால் மரண தண்டனைக்கு எதிரான கருத்தோ, மூவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நிலைப்பாடோ அவரது அடி மனதில் இல்லை. அத னால்தான் தூக்குத் தண்ட னைக்கு எதிராக தனது கருத்தை எங்கேயும் இதுவரை பதிவு செய்யவில்லை அவர். மூன்று உயிர்களை காப்பாற்றுவதற் காகத்தான் தீர்மானத்தையே நிறைவேற்றினேன் என்பது உண்மையெனில் மாநில அர சுக்குரிய அதிகாரத்தை மூடி மறைக்காமல் அதை பயன் படுத்த ஜெயலலிதா முயற்சிக்க வேண்டும்.

கண்ணதாசன் (சிறைக் கைதி களுக்கான மூத்த சிறப்பு வழக் கறிஞர்) :

ஜெயலலிதா நிறை வேற்றியுள்ள தீர்மானம் ஒரு கண்துடைப்பு. தூக்குத்தண்ட னையை குறைக்கும் அளவுக்கு இந்த தீர்மானத்திற்கு சட்ட வலிமை கிடையாது. அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் தீர் மானம்தான் இந்த விவகாரத்தில் சட்ட வலிமை கொண்டது. அதை செய்திருக்க வேண்டும் தமிழக அரசு. ஒரு குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனையே இருபது ஆண்டுகள்தான் என்று சிறை நடைமுறை விதிகளில் கூறப் பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மூவரும் 20 வருட தண்டனையை அனுபவித்துவிட்டார்கள். இந்த நிலையில் அவர்களை தூக்கிலிடுவது ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனை தருவதுபோல. அப்படி ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனை தருவது சட்டவிரோதம் என்கிறது இந்திய அரசியலமைப்பு சட்டம் 20-வது பிரிவு. அதனால் இதை சுட்டிக்காட்டியே இவர்களின் தண்டனையை குறைக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. நமது அரசியலமைப்புப் சட்டம் மாநில அரசுக்கு நிறைய அதிகாரத்தை தந்துள்ளது. அதனால் அரசியலமைப்பு சட்டப்பிரிவுகளுக்கு எதிராக மத்திய அரசு அனுப்பும் எந்த உத்தரவுகளும் மாநில அரசின் அதிகாரத் தையோ, ஆளுநரின் அதிகாரத்தையோ கட்டுப்படுத்திடாது. இதை தமிழக அரசு உணர்ந்தாலே போதும் மூவரையும் எளிதாக காப்பாற்றிட முடியும். அதனால் தங்களுக்கான அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்த நினைக்காமல் வெறுமனே தீர்மானம் போடுவதில் பலனில்லை. தண்டனைக் குறைப்பு விவகாரத்தில் தேவையான அனைத்து அதிகாரங்களையும், அமைச்சரவை மூலம் ஆளுநருக்கு பரிந்துரை செய்ய மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது. அதை பயன்படுத்த மனதில்லாமல் தட்டிக்கழிக்கிறது தமிழக அரசு.

வழக்கறிஞர் வி.சுரேஷ் (தேசிய செயலர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்) :

"குடியரசுத் தலைவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப் பட்ட நிலையில், மீண்டும் அது குறித்து பரிசீலிக்க தனது அரசுக்கு அதிகாரம் இல்லை' என்றும், "குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட கருணை மனு மீது மீண்டும் மாநில ஆளுநர் பரிசீலிக்க வேண்டுமென்று மாநில அரசு கோரமுடியாது' என மத்திய உள்துறை அமைச்சகம் 5.3.1991 நாளிட்ட கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது என்றும் சொல்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

இதைப்பற்றி ஆராயும்போது, மாநில அரசுக் குரிய சட்ட அதிகாரங்கள் குறித்து அதிகாரி கள் முதல்வருக்கு சரியாக உணர்த்த வில்லையோ என்றே நான் கருதுகிறேன். குடியரசுத் தலைவரால் கருணை மனுக்கள் மறுக்கப்பட்ட பிறகு, தண்டனைக் குறைப்பு கோரும் புதிய மனுக்களை ஆளுநர் பெறுவதா? கூடாதா? என்பது குறித்து விதி 257-ல் சில குறிப்புகளை சொல்லியிருப்ப தாக மத்திய அரசு தெரி விக்கிறது. இந்த குறிப்பு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் தண்ட னை குறைப்பு கோரும் புதிய மனுக்களை பரிசீலிக்கும் ஆளுநரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவோ, வரை யறைக்கு உட்படுத்த வோ அல்லது தடுக்கவோ முடி யாது. ஏனெ னில் "விதி 161-ன்படி ஆளுநரின் அதிகாரம் முழுமையானது. கட் டற்றது. வரையறைக்கு உட்படுத்த முடியாதது' என்று உச்சநீதிமன்றம் பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறது.

குறிப்பாக, பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ்சிங் கயரோன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தயாசிங் என்பவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் 2 முறை ஆளுநரும், ஜனாதிபதியும் கருணை மனுவை நிராகரித்துவிட்டனர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தயாசிங்.

அப்போது "ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்ட மனுவை மீண்டும் ஆளுநரால் பரிசீலிக்க முடியாது' என 257 விதியை சுட்டிக்காட்டி மாநில அரசுக்கு மத்திய அரசு எழுதப்பட்ட கடித உத்தரவு (அந்த உத்தரவு கடி தத்தைத்தான் தற்போது ஜெயலலிதா சுட்டிக்காட்டுகிறார்) கோர்ட்டில் காட்டப்படுகிறது. இதை முழுமை யாக விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசை பல்வேறு கேள்வி களுக்கு உட்படுத்தியதுடன், "அர சமைப்பு சட்டத்தின் 257-வது விதியின் அடிப்படையில் வழங்கப் படும் எந்த வழிகாட்டுதலும் ஆளுநரின் அதிகாரத்தை தடுக்க முடியாது.

மரண தண்டனையை வாழ் நாள் சிறை தண்டனையாக மாற்றும் மாநில அரசின் அதிகாரம் 161-வது விதியின் கீழ் அமைச்சரவை மூலம் ஆளுநரால் செயல்படுத்தப்படும்' என்று அழுத்தமாகச் சொல்லி தயாசிங்கின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வழியை ஏற்படுத்தியது. அதனால் மரண தண்டனையை ஆயுள் தண்ட னையாக மாற்றக்கூடிய அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. மாநில அமைச்சரவையின் அறிவுரையின் அடிப்படையில் தண்டனை குறைப்பு மனுக்களை மீண்டும் பரிசீலிக்க ஆளுநருக்கோ தமிழக அரசுக்கோ சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum