Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வங்கிகளுக்கான வட்டி விகிதம் மீண்டும் 0.25 சதவீதம் அதிகரிப்பு
Page 1 of 1
வங்கிகளுக்கான வட்டி விகிதம் மீண்டும் 0.25 சதவீதம் அதிகரிப்பு
நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ரிசர்வ் வங்கி, மத்திய காலாண்டிற்கான நிதிக் கொள்கையில், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, மீண்டும் 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. இது குறித்த அறிக்கையை, ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ.சுப்பாராவ் நேற்று வெளியிட்டார். கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரையிலுமாக, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, 12 முறை உயர்த்தியுள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும், நான்கு முறை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய அறிவிப்பின்படி, வங்கிகள், ரிசர்வ் வங்கியிடமிருந்து, குறைந்த கால அடிப்படையில் பெறும் கடனுக்கான (ரெப்போ ரேட்) வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் உயர்த்தி, 8.25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே போன்று, ரிசர்வ் வங்கி, வங்கிகளிடமிருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தை (ரிவர்ஸ் ரெப்போ ரேட் ) 0.25 சதவீதம் அதிகரித்து, 7.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகித அதிகரிப்பால், உள்நாட்டில் பணப் புழக்கம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வங்கிகளுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் போது, வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டியும் உயர்கிறது. இதனால், வீட்டு வசதி, வாகனங்கள் மற்றும் சில்லரை கடன்களுக்கான வட்டி விகிதம், மேலும் அதிகரிக்கும். குறிப்பாக, வீட்டு வசதி கடனை, வட்டியுடன் திரும்பச் செலுத்தும் வாடிக்கையாளர்களின் மாதாந்திர தவணைத் தொகை அதிகரிக்கும், அல்லது கடனை திரும்பச் செலுத்தும் காலம் நீட்டிக்கப்படும். நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, ரிசர்வ் வங்கி எடுக்கும் இந்த நடவடிக்கையால், நாட்டின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும். ஏனெனில், அதிக வட்டியில் கடன் வாங்கும் போக்கு குறையும். இது, பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு எடுத்துக்காட்டாக, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 3.3 சதவீதமாக குறைந்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ரிசர்வ் வங்கி நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் அதேநேரத்தில், நேற்று முன்தினம், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 3.14 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இது மீண்டும் பணவீக்க உயர்விற்கு வழிகோலுவதாக உள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் பொதுப் பணவீக்கம், கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவிற்கு, 9.78 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஜூலை மாதத்தில், 9.22 சதவீதம் என்ற அளவில் இருந்தது. ரிசர்வ் வங்கி, நாட்டின் பணவீக்கம் 5-6 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என முன்பு மதிப்பிட்டிருந்தது. ஆனால், பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே, வங்கிகளுக்கான வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது என, சுப்பாராவ் மேலும் தெரிவித்தார். வங்கிகளுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ள அதே நேரத்தில், வங்கிகள், அவை திரட்டும் மொத்த டிபாசிட்டிலிருந்து, குறிப்பிட்ட தொகையை ரிசர்வ் வங்கியிடம் வைக்கும் ரொக்க இருப்பு விகிதத்தில் (சி.ஆர்.ஆர் -6 சதவீதம்) மாற்றம் செய்யப்படவில்லை. ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு குறித்து, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறும்போது,"ரிசர்வ் வங்கியின், வங்கிகளுக்கான வட்டி விகித அறிவிப்பு, பணவீக்கத்தை குறுகிய காலத்திற்குள் கட்டுக்குள் கொண்டு வரும். இதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படாது.இதற்கு எடுத்துக்காட்டாக, அண்மைக் காலத்தில் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய போது, அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை' என்று தெரிவித்தார். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் சி.ரங்கராஜன் கூறும் பொழுது," ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, சரியானது தான், நாட்டின் பணவீக்கம், சென்ற ஜனவரி மாதம் முதல், 9 சதவீதத்தை தாண்டியே உள்ளது. எனவே, அதிகரித்து வரும், பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவது என்பது, மத்திய வங்கியின் முக்கிய கடமையாகும்' என்றார். மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறுகையில், "ரிசர்வ் வங்கி, 0.25 சதவீத வட்டி விகித உயர்வு, நியாயமான அளவிற்கே உள்ளது. பணவீக்கத்தை இது கட்டுப்படுத்தும். நாட்டில், பல மாநிலங்களில், சாகுபடி நன்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், உணவு தானிய உற்பத்தி அதிகரிக்கும். உலக அளவிலும், பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள், உள்நாட்டிலும் பணவீக்கம் கட்டுக்குள் வந்துவிடும்' என்று தெரிவித்தார். ஆனால், இது குறித்து, வங்கிகளின் தலைவர்கள் கருத்து கூறும்போது, "ரிசர்வ் வங்கியின் வட்டி விகித அதிகரிப்பால் ஏற்படும் இடர்பாட்டை, வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதைத் தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளனர்.
Similar topics
» ரயில்வே துறையின் வருவாய் 11 சதவீதம் அதிகரிப்பு
» சர்வதேச காபி ஏற்றுமதி 24 சதவீதம் அதிகரிப்பு
» ஊழல் புகார்கள் 113 சதவீதம் அதிகரிப்பு : சி.வி.சி., ஆண்டு அறிக்கையில் தகவல்
» கரும்பு பயிரிடும் பரப்பளவு அதிகரிப்பு : நாட்டின் சர்க்கரை உற்பத்தி 1.2 சதவீதம் உயரும்
» திருப்பதியில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: வி.ஐ.பி. தரிசனம் நிரந்தரமாக ரத்து
» சர்வதேச காபி ஏற்றுமதி 24 சதவீதம் அதிகரிப்பு
» ஊழல் புகார்கள் 113 சதவீதம் அதிகரிப்பு : சி.வி.சி., ஆண்டு அறிக்கையில் தகவல்
» கரும்பு பயிரிடும் பரப்பளவு அதிகரிப்பு : நாட்டின் சர்க்கரை உற்பத்தி 1.2 சதவீதம் உயரும்
» திருப்பதியில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: வி.ஐ.பி. தரிசனம் நிரந்தரமாக ரத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum