Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிக்கிம் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு : டில்லி-பீகார்-மேகாலயா-திரிபுரா அதிர்ந்தது
Page 1 of 1
சிக்கிம் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு : டில்லி-பீகார்-மேகாலயா-திரிபுரா அதிர்ந்தது
சிக்கிம் மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. சிக்கிம்மில் 19 பேரும், மேற்குவங்கத்தில் 7 பேரும், நேபாளம் திபெத்தில் தலா 7 பேரும் பலியாகியுள்ளனர். நேபாளத்தில், நிலநடுக்கத்திற்கு ஐந்து பேர் பலியாகியுள்ளனர். கடும் மழையால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. சிலிகுரி - கேங்டாங் சாலையில் நான்கு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிலிருந்து 60 கி.மீ., தொலைவில் உள்ள சிக்கிம் - நேபாள எல்லையை மையமாகக் கொண்டு நேற்று மாலை 6.10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 என பதிவானது. இதைத் தொடர்ந்து, அந்த பகுதியில், அடுத்தடுத்து மூன்று முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள் இடிந்து விழுந்தன; ஏராளமான வீடுகளில் விரிசல் ஏற்பட்டன. மக்கள் பீதியுடன், தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
சாலைகளில் விரிசல் ஏற்பட்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பேகாங் பகுதியில் உள்ள, "இந்தோ திபெத்தியன் எல்லை போலீஸ்' படைக்குச் சொந்தமான இரண்டு கட்டடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிலர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள், தலைநகர் டில்லி, உ.பி., பீகார், அசாம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களிலும் உணரப்பட்டன. அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசத்திலும் உணரப்பட்டது.
பலி எவ்வளவு: நிலநடுக்கத்தினால் சிக்கிமில் -7, பீகாரில் -2, மேற்கு வங்கத்தில் -4(சிலிகுரியில் ஒருவர், டார்ஜலிங்கில் 3 ) உட்பட 13 பேரும், அண்டை நாடான நேபாளத்தில் ஐந்து பேரும் பலியாகியுள்ளனர்; 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
வெளிநாட்டினர் மீட்பு: சிக்கிம் மாநிலம் வடக்கு பகுதியில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 15 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் 150 கிராம மக்களை இந்தியா-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் கேங்டாக் அருகில் உள்ள மாங்கன் பகுதியில் அமைந்துள்ள இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிக்கிமின் பிகாங் பகுதியில் 400க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 300 எல்லைப்பாதுகாப்பு படையினர் சிலிகுரி மற்றும் கவுகாத்தி பகுதிகளில் மருத்துவர்களுடன் மீட்பு பணிக்கு விரைந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு உதவி: நிலநடுக்கம்ஏற்பட்டவுடன் பிரதமர் மன்மோகன் சிங், சிக்கிம் மாநில முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மாநிலத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என கூறினார். பின்னர் பேரிடர் மேலாண் அமைப்பு கூட்டத்தை உடனடியாக கூட பிரதமர் கேபினட் செயலாளருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த கூட்டம் கூடி அவசர ஆலோசனை நடத்தியது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய கேபினட் செயலாளர் அஜித் சேத் கூறுகையில், சிக்கிம் மாநிலத்திற்கு இரண்டு விமானப்படை விமானத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 4 குழுவினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கோல்கட்டாவுக்கு 5 குழுவினர் அனுப்பியுள்ளதாகவும் கூறினார். மேலும் நிவாரண பணிகளில் ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் கூறினார். பிரதமர் மன்மோகன் சிங் தற்போது நடைபெறும் மீட்பு பணிகளை ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார்.
மீட்பு பணியில் விமானப்படை விமானங்கள் : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான 5 விமானங்கள், கோல்கட்டா, பாலம் மற்றும் ஹின்டாங் ஆகிய பகுதிகளில் இருந்து சென்றுள்ளது. இதனிடையே சிலிகுரி - கேங்டாங் சாலையில் நான்கு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் மழையால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உதவி செய்ய தயார்-நரேந்திர மோடி: நிலநடுக்கம் ஏற்பட்ட தகவலறிந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறுகையில், நிலநடுக்கம் ஏற்பட்ட செய்தி கவலையடைய செய்தது. இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறினார். மேலும் அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய குஜராத் மாநிலம் தயாராக உள்ளது. இதற்காக குஜராத் பேரிடர் மேலாண் அமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு அல்லது மாநில அரசுகளோ தொடர்பு கொள்ளும் பட்சத்தில் உடனடியாக மீட்டு குழுவினர் அனுப்பி வைக்கப்படுவார்கள் என கூறினார்.
20 ஆண்டுகளில் மிகப்பெரிய நிலநடுக்கம்: தற்போது ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் என புவியியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்த பகுதி நிலநடுக்கம் அபாயம் அதிகரித்து வருவதாகவும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
Similar topics
» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
» சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது
» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
» காஷ்மீர் பனிச்சரிவு: ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
» எம்பிபிஎஸ் சீட்களின் எண்ணிக்கை 8000-ஆக உயர்வு
» சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது
» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
» காஷ்மீர் பனிச்சரிவு: ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
» எம்பிபிஎஸ் சீட்களின் எண்ணிக்கை 8000-ஆக உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum