Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கதைசொல்லும் பாடல்கள்
+2
Atchaya
சர்ஹூன்
6 posters
Page 1 of 1
கதைசொல்லும் பாடல்கள்
எப்போதாவது சில விடயங்கள் திடீரென உதிக்கும். உண்மையில் நாம் அது பற்றி சிந்தித்துக்கூட இருக்கமாட்டோம். ஆனாலும் அது நிகழ்ந்துவிடும். இன்று காலை எனக்கு அது நிகழ்ந்தது. ஒரு பாடல்.. திடீரென எங்கிருந்தோ பறந்து வந்து ஒட்டிக்கொண்டது.
சில பாடல்கள் தனிப்பட்ட வாழ்வில் மிக அதிக கனதி கொண்டிருப்பது உணர்வுபூர்வமான ஒன்று அல்லவா? சில வேளைகளில் சில பாடல்கள், எம்மை எமது சிறு பருவத்திற்கு அழைத்துப்போகும், சில வேறு சம்பவங்களை… என ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைகளினை சுமந்து திரியும். எனக்கு இன்று நிகழ்ந்ததும் அதுதான்.
“என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன் கை அணைக்க …… ‘
காலை வேக வேகமாக அலுவலகம் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் போது அது நிகழ்ந்தது. நினைவுகள் கோர்வையாகி பல்கலைக்கழக நோக்கி விரட்டியது. ஆமாம் இப்பாடல் எப்போதும் எனக்கு சிறிது அசௌகரியத்தினையும் வலியினையும் கொண்டு சேர்க்கும். அதனால் இதனை தவிர்ப்பதில் என்னாலான எல்ல முயற்சிகளினையும் எடுத்துக்கொள்வேன். இருந்தும் சில வேளைகளில் என்னையும் மீறி அது நிகழ்ந்து விடுகின்றது.
இன்றும் அப்படித்தான், சே! என்ன ஆனது?
“என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன் கை அணைக்க …… ‘
மீண்டும் ரீங்காரமிடத்தொடங்கி விட்டது. இம்முறை இன்னும் ஆழமாக அது உள்ளிறங்குவது போல ஒரு பிரம்மை.
“ஏ! பாடலே! இன்று நான் உன் கைதி, நீ உன் இஷ்டம் போல என்னை வதைக்கலாம்” என எனக்குள் சொல்லிக்கொண்டேன். சரணடைவதைத்தவிர வேறு வழியில்லை.
பல்கலைக்கழக வாழ்வில் மெல்லிதாய் அரும்பிய உறவொன்று.. நட்புக்கும் காதலுக்குமிடையில் நின்று திணறிக்கொண்டிருந்தது. எனக்கு குடும்ப தளைகள் தாண்டி அக்கோட்டினை தாண்ட திராணியில்லை. ஆனாலும் அவள் தாண்ட தயாராய் இருந்தாள். காலங்கள் இப்படியே என்களை ஒத்திச்சென்ற போது, அது காதலாகிப்போய்விட்டது. இன்னும் குழப்பத்துடன் நான் இருந்தாலும் அது காதல்தான்..
எனக்காக வாழ / மாற தொடங்கிவிட்டாள். அவ்வேகம் பிரமிப்பாக மாறியது எனக்கு. பின்னர் அதுவே பயமாக மாறலானது. உண்மை! ஏனெனில் அதீதமான அவள் காதல் என சுதந்திரத்தினை கேள்விக்குறியாக்கலானது. வேறு நண்பிகளுடன் கதைப்பது, நேரம் பிந்துவது …என ஒவ்வொன்றிற்கும் அவளிடமிருக்குமொரே பதில்: “உனக்கு என்னில் காதலில்லை” அவளின் முரட்டுத்தனமான அன்பிற்கு முன்னால் ஒப்பிடும்போது அது உண்மையோ எனத்தோன்றும். ஆனால் நான் அவளை காதலித்தேன். அத்தருணங்களில் இப்பாடல் வரிகளே எனக்கு கை கொடுக்கும். மெல்லிய முறுவலோடும் கண்களில் காதலோடும் குற்றச்சாட்டுகளை திரும்பப்பெற்றுக்கொள்வாள்.
எத்தனை முறை இவ்வரிகள் எனக்கும் அவளுக்கும் இடையில் ஒரு சமாதான தூதுவனாக இருந்திருக்கும்? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…… நினைவுகளுக்கு கடிவாளமில்லை. அது சென்று கொண்டே இருக்கும். இன்னும் அதற்கு மேலாக ஊக்கிகள் கிடைத்தால் கேட்கவும் வேண்டுமா? தனிமையில் இதை எழுதும் போது, அவளின் காதலின் தீவிரத்தினை இன்று உணர்கின்றேன். ஆனாலும் காலம் பிந்திய ஞானங்கள் எதற்கும் உதவாது அல்லவா? அது முடிந்து போய்விட்டது.
அன்றொரு நாள் என் நண்பனுடனான உரையாடலின் போது, அவனே அவள் பற்றி என்னிடம் சொன்னான்.. அவள் இப்போது மணம் முடித்துவிட்டதாக… இர்ந்தும் இப்பாடல் கேட்கும் போது நான் உணரும் அவஸ்தைகள் அவளுக்கும் தோன்றுமல்லவா?
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: கதைசொல்லும் பாடல்கள்
இளம் வயதில் தொலைவில் இருக்கின்றீர்கள். நினைவுகள் உங்களை நிறையவே பாதிக்கிறது.
எல்லாம் வல்ல இறைவன் கற்பனைக்கும் நிஜத்திருக்குமுள்ள வேறுபாடுகளை உங்களுக்கு உணர்த்தி வருகிறான்.
இதுபோன்ற வுனர்வுகள் ஏற்படுவது இயற்கை. மனதை தெளிவாக்குங்கள். ஆகவில்லை என்றால் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்யுங்கள்.
எல்லாம் வல்ல இறைவன் கற்பனைக்கும் நிஜத்திருக்குமுள்ள வேறுபாடுகளை உங்களுக்கு உணர்த்தி வருகிறான்.
இதுபோன்ற வுனர்வுகள் ஏற்படுவது இயற்கை. மனதை தெளிவாக்குங்கள். ஆகவில்லை என்றால் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்யுங்கள்.
Re: கதைசொல்லும் பாடல்கள்
இளவயதுக்காதலில் சிக்காதவர் யாருமில்லை எனலாம் அக்காதல் நிச்சயமற்றது என்பது தோல்வியான பின்னர்தான் அறியவருகிறது சதையும் நகமுமாய் உடலும் உயிருமாய் உருகி பருகி காதலிக்கும் போதுள்ள சுகமிருக்கே உலகை ஒரு கணம் மறந்துவிடுவோம் அவ்வாறே உங்களின் நிலை என உணர்கிறேன்
அன்றய நினைவுகள் இன்று திரும்பிப்பார்க்கச் செய்த பாடலுக்கு ஒரு சலூட் அதை எங்களோடு பகிர்ந்திட்ட உங்களுக்கும் உங்கள் படைப்புக்கும் பாராட்டுகள்
உங்களுக்காகப் பிறந்தவள் ஒருவள் காத்திருப்பாள் அவளோடு இணையும் காலம் இந்த பழைய நினைவுகளும் மறந்து புது மனிதனாவீர்கள் அப்போது உணர்வீர்கள் வாழ்வின் அர்த்தத்தினை அதனால் இன்றய கவலை இன்றொடு அகன்றிடட்டும் நன்றிகள் நண்பா

கண்டிப்பாக உங்கள் கதை சொல்லும் பாடலுடன் வந்த பசுமையான நினைவுகள் மிகவும் விருவிருப்பாக உள்ளது அதை நீங்கள் தந்த விதம் இன்னும் அழகு அனுதாப வாழ்த்துக்கள்.
அன்றொரு நாள் என் நண்பனுடனான உரையாடலின் போது, அவனே அவள் பற்றி என்னிடம் சொன்னான்.. அவள் இப்போது மணம் முடித்துவிட்டதாக… இர்ந்தும் இப்பாடல் கேட்கும் போது நான் உணரும் அவஸ்தைகள் அவளுக்கும் தோன்றுமல்லவா?
கண்டிப்பாக முதல் மனதில் தோண்றும் காதல் யாராலும் மறக்க முடியாது மறுக்க முடியாது அப்படியான ஒரு சம்பவத்தை நீங்கள் எங்களுக்காக படைத்து பகிர்ந்து விட்டீர்கள் பாராட்டுக்கள்
வாழ்க வழமுடன்
நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கதைசொல்லும் பாடல்கள்
இது தான் தல ,காதல் இருகொல்லி தீ .அணையாது ,அணைத்துவிட
முடியாது ..........!
காதல் வேண்டுமா ?
முடியாது ..........!
காதல் வேண்டுமா ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கதைசொல்லும் பாடல்கள்
நல்ல ஒரு பளிங்கு போன்ற படிமம்... சர்ஹுன் காதலில் தோற்றதைக் கூட ஒரு பாடல் வரியிலேயே பகிர்ந்து கொள்கிறார்..
ஒன்று தெரியுமா
காதல் என்பது தேன்கூடு
அதைக் கட்டுவதென்றால் பெரும்பாடு
காலம் நினைத்தால் கைகூடும்
கனவாய்ப் போனால் ....
உள்ளத்தின் கதவுகள் கண்கள்
உறவுக்குக் காரணம் பெண்கள்..
பகிர்வுக்கு நன்றி
ஒன்று தெரியுமா
காதல் என்பது தேன்கூடு
அதைக் கட்டுவதென்றால் பெரும்பாடு
காலம் நினைத்தால் கைகூடும்
கனவாய்ப் போனால் ....
உள்ளத்தின் கதவுகள் கண்கள்
உறவுக்குக் காரணம் பெண்கள்..
பகிர்வுக்கு நன்றி
Re: கதைசொல்லும் பாடல்கள்
அப்துல்லாஹ் wrote:நல்ல ஒரு பளிங்கு போன்ற படிமம்... சர்ஹுன் காதலில் தோற்றதைக் கூட ஒரு பாடல் வரியிலேயே பகிர்ந்து கொள்கிறார்..
ஒன்று தெரியுமா
காதல் என்பது தேன்கூடு
அதைக் கட்டுவதென்றால் பெரும்பாடு
காலம் நினைத்தால் கைகூடும்
கனவாய்ப் போனால் ....
உள்ளத்தின் கதவுகள் கண்கள்
உறவுக்குக் காரணம் பெண்கள்..
பகிர்வுக்கு நன்றி
வரேவா அடிச்சாரு பாரு பாயின்டு காதல் என்பது தேன் கூடு
ரசனை சூப்பருதான் சார் காதல் வாழ்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கதைசொல்லும் பாடல்கள்
Atchaya wrote:இளம் வயதில் தொலைவில் இருக்கின்றீர்கள். நினைவுகள் உங்களை நிறையவே பாதிக்கிறது.
எல்லாம் வல்ல இறைவன் கற்பனைக்கும் நிஜத்திருக்குமுள்ள வேறுபாடுகளை உங்களுக்கு உணர்த்தி வருகிறான்.
இதுபோன்ற வுனர்வுகள் ஏற்படுவது இயற்கை. மனதை தெளிவாக்குங்கள். ஆகவில்லை என்றால் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்யுங்கள்.
இதையெல்லாம் கடந்து வந்தாச்சு நண்பரே! இப்போது இவை எல்லாம் ஒரு ஞாபகங்கள் அவ்வளவே..
தங்கள் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றிகள்..
நட்போடு
-சர்ஹூன் -
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: கதைசொல்லும் பாடல்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:இளவயதுக்காதலில் சிக்காதவர் யாருமில்லை எனலாம் அக்காதல் நிச்சயமற்றது என்பது தோல்வியான பின்னர்தான் அறியவருகிறது சதையும் நகமுமாய் உடலும் உயிருமாய் உருகி பருகி காதலிக்கும் போதுள்ள சுகமிருக்கே உலகை ஒரு கணம் மறந்துவிடுவோம் அவ்வாறே உங்களின் நிலை என உணர்கிறேன்
அன்றய நினைவுகள் இன்று திரும்பிப்பார்க்கச் செய்த பாடலுக்கு ஒரு சலூட் அதை எங்களோடு பகிர்ந்திட்ட உங்களுக்கும் உங்கள் படைப்புக்கும் பாராட்டுகள்
உங்களுக்காகப் பிறந்தவள் ஒருவள் காத்திருப்பாள் அவளோடு இணையும் காலம் இந்த பழைய நினைவுகளும் மறந்து புது மனிதனாவீர்கள் அப்போது உணர்வீர்கள் வாழ்வின் அர்த்தத்தினை அதனால் இன்றய கவலை இன்றொடு அகன்றிடட்டும் நன்றிகள் நண்பா
நன்றிகள் ஹாசீம்.. பழைய பக்கங்களை புரட்டினேன் அவ்வளவே.. அதெல்லாம் முடிந்துவிட்டது..
பாராட்டுக்கு நன்றிகள்
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: கதைசொல்லும் பாடல்கள்
நண்பன் wrote:கண்டிப்பாக உங்கள் கதை சொல்லும் பாடலுடன் வந்த பசுமையான நினைவுகள் மிகவும் விருவிருப்பாக உள்ளது அதை நீங்கள் தந்த விதம் இன்னும் அழகு அனுதாப வாழ்த்துக்கள்.
அன்றொரு நாள் என் நண்பனுடனான உரையாடலின் போது, அவனே அவள் பற்றி என்னிடம் சொன்னான்.. அவள் இப்போது மணம் முடித்துவிட்டதாக… இர்ந்தும் இப்பாடல் கேட்கும் போது நான் உணரும் அவஸ்தைகள் அவளுக்கும் தோன்றுமல்லவா?
கண்டிப்பாக முதல் மனதில் தோண்றும் காதல் யாராலும் மறக்க முடியாது மறுக்க முடியாது அப்படியான ஒரு சம்பவத்தை நீங்கள் எங்களுக்காக படைத்து பகிர்ந்து விட்டீர்கள் பாராட்டுக்கள்
வாழ்க வழமுடன்
நண்பன்.
நன்றி நண்பன், உங்களுக்கும் பழைய நினைவுகள் இருந்தால் பகிருங்களேன்... :!#: :!#: :!#: ( இதான் கோர்த்துவிடுறது.. :”: :”: :”: )
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: கதைசொல்லும் பாடல்கள்
kalainilaa wrote:இது தான் தல ,காதல் இருகொல்லி தீ .அணையாது ,அணைத்துவிட
முடியாது ..........!
காதல் வேண்டுமா ?
ரொம்ப அனுபவப்பட்டிருக்கீங்க போல,, சும்மா சொல்லுங்களேன் சார் அந்தக்கால கறுப்பு வெள்ளை காதல் எப்பிடி இருந்துச்சுன்னு கேட்போம் @. @.
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Re: கதைசொல்லும் பாடல்கள்
அப்துல்லாஹ் wrote:நல்ல ஒரு பளிங்கு போன்ற படிமம்... சர்ஹுன் காதலில் தோற்றதைக் கூட ஒரு பாடல் வரியிலேயே பகிர்ந்து கொள்கிறார்..
ஒன்று தெரியுமா
காதல் என்பது தேன்கூடு
அதைக் கட்டுவதென்றால் பெரும்பாடு
காலம் நினைத்தால் கைகூடும்
கனவாய்ப் போனால் ....
உள்ளத்தின் கதவுகள் கண்கள்
உறவுக்குக் காரணம் பெண்கள்..
பகிர்வுக்கு நன்றி
இன்று காலை - ஜெயா டீவியில் ஒளிபரப்பாகும் , " தேன் கிண்ணம்" நிகழ்ச்சியில் நீங்கள் மேற்கோள் காட்டிய பாடல் ஒளிபரப்பானது... உண்மைதான்
பாராட்டுக்கு நன்றிகள் :”@: :”@:
சர்ஹூன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25
Similar topics
» இரு பாடல்கள்
» மழலையர் பாடல்கள்
» நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
» குழந்தைகளுக்கான பாடல்கள்
» சினிமா பாடல்கள்
» மழலையர் பாடல்கள்
» நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
» குழந்தைகளுக்கான பாடல்கள்
» சினிமா பாடல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum