சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

அந்த குருகுலம்...! Khan11

அந்த குருகுலம்...!

+5
நண்பன்
kalainilaa
அப்துல்லாஹ்
முனாஸ் சுலைமான்
யாதுமானவள்
9 posters

Go down

அந்த குருகுலம்...! Empty அந்த குருகுலம்...!

Post by யாதுமானவள் Wed 21 Sep 2011 - 20:53

பகுத்தறிவுப் பகலவன், தந்தை பெரியார் ஈ.வே. ராமசாமி அவர்களின் 133 ஆவது பிறந்தநாளுக்காக எழுதிய கவிதை...

அந்த குருகுலம்...!.

மரத்தடி நிழலில் மாணவர் அமர்த்தி
விஞ்ஞா னத்தை வளர்த்திட வில்லை
மரத்திட்ட மனிதம் உயிர்த்திட நமக்கு
அஞ்ஞா னத்தை அகற்றிட முனைந்தார்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்னும்பேதம்
ஊரை விட்டு ஒழிப்போம் என்றார்
செயலதுசெய் திடகுலத் தொழில் ஒழித்து
கல்வியை அனைவரும் கற்போ மென்றார்

மென்றே ஆரியர் நம்குலத் தோரை
மெல்லவே அடிமை யாக்கிட்டார்
கொன்றே அவரின் சூழ்ச்சிக ளெல்லாம்
குடிகள் நம்மைக் காத்திட்டார்
அன்றே ஆரியர் இவர்பெயர் சொன்னால்
அங்கம் எல்லாம் வேர்த்திட்டார்
மன்றந் தன்னில் இவர்குரல் கேட்டால்
மயங்கி அவரும் விழுந்திட்டார்

கடவுளும் மதமும் மனிதன் தன்னைமுட்
டாளாக்கும் முறைக ளென்றார்
கடவுள் என்னும் கற்சிலை யெல்லாம்
காலில்போட் டுமிதிப்போ மென்றார்
கடவுள் கதையைத் தாங்கி நிற்கும்
காவியமெல் லாமெரிப்போ மென்றார்
கடவுள் ஒழிப்பும் மதங்கள் ஒழிப்பும்
கறையைத் துவட்டும் ஆயுதமென்றார்

கருத்துக்கள் பரப்பி கயமைத் தனத்தினை
காவு வாங்கிட முனைந்திட்டார்
தெருத்தெருவா கத்தோழர் களுடனே
தொடர்சொற் பொழிவுகள் ஆற்றிட்டார்
நெருப்பென கக்கிய வார்தையினாலே
நையப் புடைத்தே விரட்டிட்டார்
செருப்புகள் மாலையாய்த் தந்தார்
கயவர் சிரித்தே அதனை ஏற்றிட்டார்

பெண்கள் அடிமையாய் இருப்பதைக் கண்டு
கொதித்தே அவரும் எழுந்திட்டார்
பெண்ணும் ஆணுக் கிணைதா னென்றே
ஓங்கிக் குரலும் எழுப்பிட்டார்
வள்ளுவன் பெண்ணை ஆணின் அடிமை
யென்றே குறளில் சொல்லுவதை
எள்ளள வேனும் பயமின்றி துணிவுடன்
எல்லோர் முன்பும் மொழிந்திட்டார்

அடிமைத் தனத்தினை சம்மட்டி கொண்டு
ஓங்கி அடித்து ஒழித்திட்டார்
செதுக்கிச் செதுக்கிச் மனிதனை மனிதனாய்
மாற்றிடும் உளியாய் மாறிட்டார்
விருப்புடன் யாரும் அவர்பின் னாலே
ஓடியே சென்று சேர்ந்திட்டார்
கருப்புச் சட்டையே அடையா ளமாகக்
காலம் முழுதும் அணிந்திட்டார்

ஒவ்வொரு தமிழனும் வாழ்க்கையைப் படித்திட்ட
பெரியார் என்னும் குருகுலமே
எவ்விதப் பயனும் தனக்கென் றென்னா
தகைசால் மானப் பெட்டகமே
ஒவ்வொரு தமிழனின் குருதிக்குள்ளும்
நெருப்பாய் நீயே இருக்கின்றாய்
எவரினும் உயர்வாய் நீயேஉல கில்என்றும்
இதுபோல் நிலைத்தி டுவாய்!

- யாதுமானவள்
செயலாளர் : தந்தை பெரியார் பன்னாட்டு மையம், குவைத் கிளை.



******************
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அந்த குருகுலம்...! Empty Re: அந்த குருகுலம்...!

Post by முனாஸ் சுலைமான் Wed 21 Sep 2011 - 22:09

பெண்கள் அடிமையாய் இருப்பதைக் கண்டு
கொதித்தே அவரும் எழுந்திட்டார்
பெண்ணும் ஆணுக் கிணைதா னென்றே
ஓங்கிக் குரலும் எழுப்பிட்டார்
வள்ளுவன் பெண்ணை ஆணின் அடிமை
யென்றே குறளில் சொல்லுவதை
எள்ளள வேனும் பயமின்றி துணிவுடன்
எல்லோர் முன்பும் மொழிந்திட்டார்



நல்ல வரிகளுடன் கவிதை தந்திருக்கும் அக்காவுக்கு வாழ்த்துக்கள்.
தமிழை நன்றாகப்படித்தால் மாத்திரமே சரியான அர்த்தம் விழங்கும் நானும் சேனைக்கு வந்துதான் அக்காவின் தமிழில் படிக்கிறேன்.
அக்கா மேடையில் பேசினால் கேட்பதற்க்கு நன்றாக இருக்கும் என்று நினைக்கேன். அந்த குருகுலம்...! 528804
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அந்த குருகுலம்...! Empty Re: அந்த குருகுலம்...!

Post by அப்துல்லாஹ் Wed 21 Sep 2011 - 22:10

பகுத்தறிவுப் பகலவன்
பார் போற்றும் மேதை
சமுக நீதி காத்த செம்மல்
ஈரோட்டுக் காந்தி
பெரியவர் பற்றிய இந்த கவிதை வரிகள் மனிதனை காட்டும் கண்ணாடி...
மனசை அடகு வைத்து விட்டு இன்று மனித வேஷம் போடும் பொய்த் தலைவர்கள் மத்தியில் உண்மையை உள்ளபடி ஒளிக்காமல் உலகுக்குசொன்ன ஒரு மனிதன் பற்றிய கவிதை..
வாசிக்கும் போது ரோமங்கள் சிலிர்த்த ஒரு அனுபவம்...
நன்றி சகோதரி
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அந்த குருகுலம்...! Empty Re: அந்த குருகுலம்...!

Post by kalainilaa Wed 21 Sep 2011 - 22:15

யார் இவர் என்று அறிய தந்த பெரியார்
அவரின் புகழுக்கு மகுடமாய் உங்கள் கவிதை .
அந்த குருகுலம்...! 50093645
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அந்த குருகுலம்...! Empty Re: அந்த குருகுலம்...!

Post by யாதுமானவள் Wed 21 Sep 2011 - 22:47

முனாஸ் சுலைமான் wrote:பெண்கள் அடிமையாய் இருப்பதைக் கண்டு
கொதித்தே அவரும் எழுந்திட்டார்
பெண்ணும் ஆணுக் கிணைதா னென்றே
ஓங்கிக் குரலும் எழுப்பிட்டார்
வள்ளுவன் பெண்ணை ஆணின் அடிமை
யென்றே குறளில் சொல்லுவதை
எள்ளள வேனும் பயமின்றி துணிவுடன்
எல்லோர் முன்பும் மொழிந்திட்டார்



நல்ல வரிகளுடன் கவிதை தந்திருக்கும் அக்காவுக்கு வாழ்த்துக்கள்.
தமிழை நன்றாகப்படித்தால் மாத்திரமே சரியான அர்த்தம் விழங்கும் நானும் சேனைக்கு வந்துதான் அக்காவின் தமிழில் படிக்கிறேன்.
அக்கா மேடையில் பேசினால் கேட்பதற்க்கு நன்றாக இருக்கும் என்று நினைக்கேன். அந்த குருகுலம்...! 528804

நன்றி முனாஸ்... ! பிரித்துப் படிக்க பழகிவிட்டால் எளிதாக விளங்கிவிடும். என் தமிழ் எளிமையானதுதான்!

தங்கள் வாழ்த்திற்கு நன்றி முனாஸ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அந்த குருகுலம்...! Empty Re: அந்த குருகுலம்...!

Post by யாதுமானவள் Wed 21 Sep 2011 - 22:52

அப்துல்லாஹ் wrote:பகுத்தறிவுப் பகலவன்
பார் போற்றும் மேதை
சமுக நீதி காத்த செம்மல்
ஈரோட்டுக் காந்தி
பெரியவர் பற்றிய இந்த கவிதை வரிகள் மனிதனை காட்டும் கண்ணாடி...
மனசை அடகு வைத்து விட்டு இன்று மனித வேஷம் போடும் பொய்த் தலைவர்கள் மத்தியில் உண்மையை உள்ளபடி ஒளிக்காமல் உலகுக்குசொன்ன ஒரு மனிதன் பற்றிய கவிதை..
வாசிக்கும் போது ரோமங்கள் சிலிர்த்த ஒரு அனுபவம்...
நன்றி சகோதரி

நன்றி அப்துல்லாஹ ...! உண்மையான மனித ஞானம் உள்ளவர்.... ! வாழ்கிறார்... !இன்னும்... இனியும்..!

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அந்த குருகுலம்...! Empty Re: அந்த குருகுலம்...!

Post by யாதுமானவள் Wed 21 Sep 2011 - 22:53

kalainilaa wrote:யார் இவர் என்று அறிய தந்த பெரியார்
அவரின் புகழுக்கு மகுடமாய் உங்கள் கவிதை .
அந்த குருகுலம்...! 50093645

நன்றி கலை நிலா.... கவிதைக்கு உடனே தக்க படத்தினையும் போட்டு அசத்தி விட்டீர்கள்

நன்றி!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அந்த குருகுலம்...! Empty Re: அந்த குருகுலம்...!

Post by நண்பன் Wed 21 Sep 2011 - 22:59

வலைய தளங்களில் பல கட்டுரைகள் படித்து விட்டேன் பெரியார் பற்றி அதில் பலரின் கருத்தும் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது பெரியார் தந்த புத்தி போதும் என்றும் ஆநேகர் சொல்வர் அந்தப் பெரியாருக்கு
மேடம் தந்த வரிகள் மிகவும் அருமை பாராட்டுக்கள்.
)(( )(( )((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அந்த குருகுலம்...! Empty Re: அந்த குருகுலம்...!

Post by யாதுமானவள் Thu 22 Sep 2011 - 12:53

நண்பன் wrote:வலைய தளங்களில் பல கட்டுரைகள் படித்து விட்டேன் பெரியார் பற்றி அதில் பலரின் கருத்தும் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது பெரியார் தந்த புத்தி போதும் என்றும் ஆநேகர் சொல்வர் அந்தப் பெரியாருக்கு
மேடம் தந்த வரிகள் மிகவும் அருமை பாராட்டுக்கள்.
)(( )(( )((

மிக்க நன்றி நண்பன்..!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அந்த குருகுலம்...! Empty Re: அந்த குருகுலம்...!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 22 Sep 2011 - 13:01

பெரியார் என்ற மிகப்பெரிய புரட்சியாளர் தமிழர்களுக்கு தன்னலம் கருதாத போதனையில் அனைவரையும் கவர்ந்தவர் இன்றும் அவரின் போதனைகளில் வாழும் மாந்தர்களதிகம் அவரின் பிறந்த நாளுக்கான கவிதை அவரின் புரட்சிகள் தாங்கியதாக அவரைப்பற்றி விபரிப்பதாக எழுதிய புலவருக்கு வாழ்த்துகள் நன்றிகள்


அந்த குருகுலம்...! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அந்த குருகுலம்...! Empty Re: அந்த குருகுலம்...!

Post by *சம்ஸ் Thu 22 Sep 2011 - 13:47

பெரியார் பற்றி அருமையாக முத்துக்கள் போன்று வரியெழுதி கவி பாடிய கவிக்கு வாழ்த்துகள் அந்த குருகுலம்...! 930799


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அந்த குருகுலம்...! Empty Re: அந்த குருகுலம்...!

Post by இன்பத் அஹ்மத் Thu 22 Sep 2011 - 15:10

பெரியார் பற்றி அற்புதமான வரிகளில் கவி வடித்த அக்கா யாது அவர்களுக்கு நன்றி
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

அந்த குருகுலம்...! Empty Re: அந்த குருகுலம்...!

Post by யாதுமானவள் Thu 22 Sep 2011 - 17:46

நேசமுடன் ஹாசிம் wrote:பெரியார் என்ற மிகப்பெரிய புரட்சியாளர் தமிழர்களுக்கு தன்னலம் கருதாத போதனையில் அனைவரையும் கவர்ந்தவர் இன்றும் அவரின் போதனைகளில் வாழும் மாந்தர்களதிகம் அவரின் பிறந்த நாளுக்கான கவிதை அவரின் புரட்சிகள் தாங்கியதாக அவரைப்பற்றி விபரிப்பதாக எழுதிய புலவருக்கு வாழ்த்துகள் நன்றிகள்

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி ஹாசிம் !.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அந்த குருகுலம்...! Empty Re: அந்த குருகுலம்...!

Post by யாதுமானவள் Thu 22 Sep 2011 - 17:49

அப்துல் றிமாஸ் wrote:பெரியார் பற்றி அற்புதமான வரிகளில் கவி வடித்த அக்கா யாது அவர்களுக்கு நன்றி

வாழ்த்திற்கு நன்றி ரிமாஸ் !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அந்த குருகுலம்...! Empty Re: அந்த குருகுலம்...!

Post by Atchaya Thu 22 Sep 2011 - 17:50

புரட்சி என்பதனையே
புரட்சியாய் செய்து
மிரட்சி அடையச் செய்திட்ட
தரணியில் தன பெயரினை

ராம சாமியை பெரியோரே
பெரியாராக நினைக்க வித்திட்ட
தன்னுடைய கருத்துக்களில்
நேர்மையான வாதங்களால்

அனைவருமே இவரே
பெரியார் என வியக்கவைத்திட்ட
அருந் தமிழனை செங்
கரும்புத் தமிழால் பாமாலை

சூட்டிய யாது மானவளே!
எங்களின் லதாராணியே!
தங்கத் தமிழால் தேரோட்ட,
உங்கள் பின்னால் வருவோம்
நாங்களுமே!

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அந்த குருகுலம்...! Empty Re: அந்த குருகுலம்...!

Post by யாதுமானவள் Thu 22 Sep 2011 - 17:51

*சம்ஸ் wrote:பெரியார் பற்றி அருமையாக முத்துக்கள் போன்று வரியெழுதி கவி பாடிய கவிக்கு வாழ்த்துகள் அந்த குருகுலம்...! 930799

மிக்க நன்றி சம்ஸ் ...!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அந்த குருகுலம்...! Empty Re: அந்த குருகுலம்...!

Post by யாதுமானவள் Thu 22 Sep 2011 - 18:05

Atchaya wrote:புரட்சி என்பதனையே
புரட்சியாய் செய்து
மிரட்சி அடையச் செய்திட்ட
தரணியில் தன பெயரினை

ராம சாமியை பெரியோரே
பெரியாராக நினைக்க வித்திட்ட
தன்னுடைய கருத்துக்களில்
நேர்மையான வாதங்களால்

அனைவருமே இவரே
பெரியார் என வியக்கவைத்திட்ட
அருந் தமிழனை செங்
கரும்புத் தமிழால் பாமாலை

சூட்டிய யாது மானவளே!
எங்களின் லதாராணியே!
தங்கத் தமிழால் தேரோட்ட,
உங்கள் பின்னால் வருவோம்
நாங்களுமே!

புரட்சி என்பதனையே
புரட்சியாய் செய்து
மிரட்சி அடையச் செய்திட்ட....
அழகான தமிழில் என் கவிதையைப் பாராட்டிய அன்புச் சகோதரர் ரவி அவர்களுக்கு என் மனம் மகிழ்ந்த நன்றி....!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அந்த குருகுலம்...! Empty Re: அந்த குருகுலம்...!

Post by Atchaya Thu 22 Sep 2011 - 18:11

இலக்கண சுவையோடு படைத்திட்டவரை
இலக்கண மறியா சிறுவனுக்கு நன்றி
நவின்ற மொழி தனைக் கேட்ட
செவியும் உள்ளமும் குளிர்ந்தனவே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அந்த குருகுலம்...! Empty Re: அந்த குருகுலம்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum