Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அவளின் அந்த ஆசை
5 posters
Page 1 of 1
அவளின் அந்த ஆசை
அன்று
அவளுடனான
ஒரு தனிமைப் பொழுதில்
என்
காதோரத்தில் மெல்லிதாய்
முணுமுணுத்தது அவள் இதழ்கள்
இதழ்கள்
உதிர்த்த ஓசைகளில்
அவளின் ஆழ்மனத்தின் ஆசைகள்
அங்கு
வெகுதூரத்தில் சாந்தமாய்
மனித வாசமற்ற ஓரிடம்
அன்றைய
வேலைமுடிந்து அசதியில்
உறங்கச் செல்லும்
கதிரவன்
உலவும்
மேகங்களுக்கு இடையில்
எட்டிப்பார்க்கும் மூன்றுவயது
நிலவு
இருளின்
ஒரு துளி சிதறிவிழ
நீல வானம் முகம்சிவக்கும்
அந்திமாலை
தன்
மெல்லிய கரங்களால்
கிச்சுகிச்சு மூட்டி வருடும்
தென்றல்
நிசப்தம்
உறங்கும் நம் புதுவுலகில்
நமக்குத் துணையாக
இயற்கை தோழமைகள்
மௌனம்
வழிந்தொழுகும் ஆற்றங்கரை
அதில் மெல்லத் தளும்பும்
நீரலைகள்
அந்த
நீரலைகளின் நடுவே
நமக்கு மட்டுமாய் அமர
ஒர்மேடை
சிம்மினி
விளக்கின் அகத்தினில்
மெல்லப் புன்னகைக்கும்
ஒளிச்சுடர் அலங்காரம்
நம்
சார்ந்த சலனங்களை
சிலநாழிகை மட்டும் களைந்து
பிறந்த குழந்தைகளாய்
அந்த
சாயான தருணத்தில்
மெல்லமாய் பேசிக் கொள்ளட்டும்
இதழ் திறக்கும் இதயங்கள்
புன்னகை
பாத்திரத்தில் பரிமாறவேண்டும்
நம் ஆழ்மனதில் உறங்கும்
எண்ணங்கள்
நம்
உணர்வும் உணர்ச்சிகளும்
தத்தம் தர்க்கங்களை களைந்து
கொஞ்சிக் குலவவேண்டும்
பசிக்கு
முத்தங்களை உண்டு
உமிழ்நீரை பருகி
காதல் தாகம் தணிப்போம்
உலகம்
உறங்கும் வேளையிலும்
விழிகள் விழித்திருக்கவேண்டும்
நம் உயிரும் இணைந்திருக்கவேண்டும்
அந்த
மெல்லிய முனங்களிலேயே
மார்பில் தலைசாய்த்து
அயர்ந்து தூங்கிவிட்டாள்
பிரிதொரு நாளில்
அங்கே ஓரிடத்தில் காத்திருந்தது
அவள் ஆழ்மனத்தின் அந்தநாள்
அவள்
மனதில் வரைந்த ஓவியங்கள்
அவளுடனான அவனின் காதலால்
உயிர்த்தெழுந்தது
அன்று
அவர்களின் திருமண நாள்
இறைவன் படைத்த இயற்கைகளை
அவளுக்கு பரிசாக அளித்தான்
தலைவன்
இரட்டிப்பு
இன்பத்தில் தத்தளித்தவள்
வாரி முத்தமிட்டாள்
தன் காதல் தலைவனை
மீத
நாழிகை தருணங்கள்
.........வார்த்தைகள் இல்லை
அவர்களின் சொர்க்கத்தில்
கட்டெறும்பாக எனக்கு விருப்பமில்லை
-செய்தாலி
Re: அவளின் அந்த ஆசை
இனிமையான காட்சி ஒன்றிட்கு விதவிதமான வர்ணனைகள்
கவிஞர்கள் அனைவரும் அவர் அவர் பாணியி்ல் சும்மா பிச்சி உதறிக் கொண்டிருக்கிறார்கள் இதோ நமது புரட்சிக்கவிஞர் தத்துவக்கவிஞர் எங்கள் செய்தாலியின் பாணியில் சிறப்பாக கவிதை தந்துள்ளார் வாழ்த்துக்கள் செய்தாலி
சேனையின் அனைத்துக் கவிஞர்களுக்கும் கிரீடம் தரலாம் அதையும் சீக்கிரம் செய்து விடுகிறேன்
வாழ்த்த்துக்கள் வாழ்த்துக்கள்.
கவிஞர்கள் அனைவரும் அவர் அவர் பாணியி்ல் சும்மா பிச்சி உதறிக் கொண்டிருக்கிறார்கள் இதோ நமது புரட்சிக்கவிஞர் தத்துவக்கவிஞர் எங்கள் செய்தாலியின் பாணியில் சிறப்பாக கவிதை தந்துள்ளார் வாழ்த்துக்கள் செய்தாலி
சேனையின் அனைத்துக் கவிஞர்களுக்கும் கிரீடம் தரலாம் அதையும் சீக்கிரம் செய்து விடுகிறேன்
வாழ்த்த்துக்கள் வாழ்த்துக்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளின் அந்த ஆசை
உண்மையில் பெருமையாக இருக்கிறது உணர்வுள்ள கவிஞர்களோடு நானும் பயணிக்கிறேன் என்றுணர்ந்து ஒரு அழகிய காட்சிக்கு வினவப்பட்ட கவிதை கவிஞர்களின் ஆற்றல் வெளிப்படுத்தும் அரிய சந்தர்ப்பம் கரு கிடைத்தால் போதும் என்ற துடுப்பை ஆர்வமாக பயன்படுத்தியிருப்பது மிகையாகிறது மகிழ்ச்சி பாராட்டுகள் இந்த கரு தந்த உள்ளத்திற்கு நன்றிகள்
Re: அவளின் அந்த ஆசை
செய்தாலியின் கவிதை என்றாலே தனி மவுசுதான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: அவளின் அந்த ஆசை
நண்பன் wrote:இனிமையான காட்சி ஒன்றிட்கு விதவிதமான வர்ணனைகள்
கவிஞர்கள் அனைவரும் அவர் அவர் பாணியி்ல் சும்மா பிச்சி உதறிக் கொண்டிருக்கிறார்கள் இதோ நமது புரட்சிக்கவிஞர் தத்துவக்கவிஞர் எங்கள் செய்தாலியின் பாணியில் சிறப்பாக கவிதை தந்துள்ளார் வாழ்த்துக்கள் செய்தாலி
சேனையின் அனைத்துக் கவிஞர்களுக்கும் கிரீடம் தரலாம் அதையும் சீக்கிரம் செய்து விடுகிறேன்
வாழ்த்த்துக்கள் வாழ்த்துக்கள்.
இந்தபுகைப்படம் மூன்று நாளுக்கு முன்
ஒரு நட்புத் தளத்தில் இருந்தது அதற்கு எல்லாரும்
கவிதை தீட்டினார்கள்
அந்த புகைப்படம் என்னையும் எதோ கிறுக்க சொன்னது
நேற்றே கிறுக்கிவிட்டேன்
இன்று உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்
மிக்க நன்றி நண்பன்
Re: அவளின் அந்த ஆசை
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையில் பெருமையாக இருக்கிறது உணர்வுள்ள கவிஞர்களோடு நானும் பயணிக்கிறேன் என்றுணர்ந்து ஒரு அழகிய காட்சிக்கு வினவப்பட்ட கவிதை கவிஞர்களின் ஆற்றல் வெளிப்படுத்தும் அரிய சந்தர்ப்பம் கரு கிடைத்தால் போதும் என்ற துடுப்பை ஆர்வமாக பயன்படுத்தியிருப்பது மிகையாகிறது மகிழ்ச்சி பாராட்டுகள் இந்த கரு தந்த உள்ளத்திற்கு நன்றிகள்
இந்தப் புகை படத்திற்கு நேற்றே நீங்கள் வரிகள் தீட்டிவிட்டீர்கள்
நான் எல்லாவற்றிலும் தமதாகமாகவே வருகிறேன்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி உறவே
Re: அவளின் அந்த ஆசை
jasmin wrote:செய்தாலியின் கவிதை என்றாலே தனி மவுசுதான்
உங்களின் அன்பிற்கு நன்றி தோழி
Re: அவளின் அந்த ஆசை
செய்தாலி wrote:நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையில் பெருமையாக இருக்கிறது உணர்வுள்ள கவிஞர்களோடு நானும் பயணிக்கிறேன் என்றுணர்ந்து ஒரு அழகிய காட்சிக்கு வினவப்பட்ட கவிதை கவிஞர்களின் ஆற்றல் வெளிப்படுத்தும் அரிய சந்தர்ப்பம் கரு கிடைத்தால் போதும் என்ற துடுப்பை ஆர்வமாக பயன்படுத்தியிருப்பது மிகையாகிறது மகிழ்ச்சி பாராட்டுகள் இந்த கரு தந்த உள்ளத்திற்கு நன்றிகள்
இந்தப் புகை படத்திற்கு நேற்றே நீங்கள் வரிகள் தீட்டிவிட்டீர்கள்
நான் எல்லாவற்றிலும் தமதாகமாகவே வருகிறேன்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி உறவே
தாமதமாய் தீட்டினாலும் வைரமாய் ஜொலிக்கிறதே அதுதான் உங்களின் ஷ்பெசல் நன்றிகள்
Re: அவளின் அந்த ஆசை
@. @.நேசமுடன் ஹாசிம் wrote:செய்தாலி wrote:நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையில் பெருமையாக இருக்கிறது உணர்வுள்ள கவிஞர்களோடு நானும் பயணிக்கிறேன் என்றுணர்ந்து ஒரு அழகிய காட்சிக்கு வினவப்பட்ட கவிதை கவிஞர்களின் ஆற்றல் வெளிப்படுத்தும் அரிய சந்தர்ப்பம் கரு கிடைத்தால் போதும் என்ற துடுப்பை ஆர்வமாக பயன்படுத்தியிருப்பது மிகையாகிறது மகிழ்ச்சி பாராட்டுகள் இந்த கரு தந்த உள்ளத்திற்கு நன்றிகள்
இந்தப் புகை படத்திற்கு நேற்றே நீங்கள் வரிகள் தீட்டிவிட்டீர்கள்
நான் எல்லாவற்றிலும் தமதாகமாகவே வருகிறேன்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி உறவே
தாமதமாய் தீட்டினாலும் வைரமாய் ஜொலிக்கிறதே அதுதான் உங்களின் ஷ்பெசல் நன்றிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளின் அந்த ஆசை
உங்கள் அத்தனை வரிகளிலும் பெண்மை பேசுகிறது..தீண்டாமல் மெய்தீண்டும் வரிகள் அற்புதம்.காதல் கனியை இவ்வார்த்தைகளில் சுவைக்க முடிகிறது, ஒரு பெண்ணின் மனதில் மௌனங்களோடு கொட்டிக் கிடக்கும் உணர்வலைகள் இங்கு நதியலையாக பாய்கிறது உமது கவிதையில்..சான்சே இல்ல அருமையாக இருக்கிறது..வாழ்த்துக்கள் கவிதையின் காவிய நாயகனே.. ://:-:
Re: அவளின் அந்த ஆசை
ஜிப்ரியா wrote:உங்கள் அத்தனை வரிகளிலும் பெண்மை பேசுகிறது..தீண்டாமல் மெய்தீண்டும் வரிகள் அற்புதம்.காதல் கனியை இவ்வார்த்தைகளில் சுவைக்க முடிகிறது, ஒரு பெண்ணின் மனதில் மௌனங்களோடு கொட்டிக் கிடக்கும் உணர்வலைகள் இங்கு நதியலையாக பாய்கிறது உமது கவிதையில்..சான்சே இல்ல அருமையாக இருக்கிறது..வாழ்த்துக்கள் கவிதையின் காவிய நாயகனே.. ://:-:
காதல் காவிய நாயகியும் இந்த படத்திற்கு கவிதை எழுதினால் அருமையாக இருக்குமே எங்கே எங்களுக்காக எழுதுங்கள்........... கவிக்குயிலே....
Re: அவளின் அந்த ஆசை
காதல் காவிய நாயகியும் இந்த படத்திற்கு கவிதை எழுதினால் அருமையாக இருக்குமே எங்கே எங்களுக்காக எழுதுங்கள்........... கவிக்குயிலே....
நானும் சொல்ல நினைத்தேன் நன்றி ஹாசிம் @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளின் அந்த ஆசை
ஜிப்ரியா wrote:உங்கள் அத்தனை வரிகளிலும் பெண்மை பேசுகிறது..தீண்டாமல் மெய்தீண்டும் வரிகள் அற்புதம்.காதல் கனியை இவ்வார்த்தைகளில் சுவைக்க முடிகிறது, ஒரு பெண்ணின் மனதில் மௌனங்களோடு கொட்டிக் கிடக்கும் உணர்வலைகள் இங்கு நதியலையாக பாய்கிறது உமது கவிதையில்..சான்சே இல்ல அருமையாக இருக்கிறது..வாழ்த்துக்கள் கவிதையின் காவிய நாயகனே.. ://:-:
உங்கள் அன்பிற்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி
Similar topics
» அவளின் அந்த நாட்கள்
» அவளின் கண்ணீர்
» அவளின் அழகு
» அவளின் அழகிய கோபம்
» அவளின் வெட்கத்தில் சில வார்த்தைகள் !!!
» அவளின் கண்ணீர்
» அவளின் அழகு
» அவளின் அழகிய கோபம்
» அவளின் வெட்கத்தில் சில வார்த்தைகள் !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum