Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
Puli Vesham(புலி வேஷம்)
2 posters
Page 1 of 1
Puli Vesham(புலி வேஷம்)
கிராமத்திலும், நகரத்திலும் பயணிக்கிற ஒரு வெகுளி இளைஞனின் கதை.
சின்ன வயதில் அனாதையாக நிற்கும் ஆர்.கே.வை வீட்டுக்கு அழைத்து வந்து தன்
மகள் திவ்ய பத்மினிக்கு பாதுகாவலராக வேலைக்கு வைக்கிறார் இளவரசு. பள்ளி,
கோவில் என திவ்ய பத்மினி போகும் இடமெல்லாம் ஆர்.கே.தான் பாதுகாப்பு வளையம்.
திவ்ய பத்மினி - ஆர்.கே. இடையிலான பாச உறவில் இளவரசுக்கு சின்ன சந்தேகம்.
ஆர்.கே.வை அடித்து விரட்டுகிறார் இளவரசு. வீட்டை விட்டு, கிராமத்தை விட்டு
சென்னைக்குப் பயணமாகும் ஆர்.கே.வுடன், திவ்ய பத்மினியும் பஸ் ஏறுகிறார்.
அதன் பிறகு நடக்கும் ஒரு சம்பவம் ஆர்.கே.வை எங்கே கொண்டு நிறுத்தியது?
திவ்ய பத்மினி - ஆர்.கே. இடையிலான அன்பு என்ன ஆனது? என்பதை அசமந்தமாக
விவரித்துச் செல்கிறது திரைக்கதை!
'சின்னதம்பி' கதையை தன் வழக்கமான சென்டிமென்ட் மசாலா பூசி, ஆக்ஷன்
கோட்டிங் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பி.வாசு., கமர்ஷியல் அயிட்டங்களைப்
பார்த்துப் பார்த்து ஒருங்கிணைத்தவர், லாஜிக்கை மறந்து விட்டார்.
திரைக்கதையில் அவ்வளவு ஓட்டை.
'எல்லாம் அவன் செயல்', 'அழகர்மலை' படங்களுக்குப் பிறகு ஆர்.கே
நடித்திருக்கும் படம் இது. பாசம் நிறைந்த மனிதன், கோபக்கார தாதா என இரண்டு
பாத்திரங்களை நன்றாகவே பேலன்ஸ் பண்ணுகிறார் ஆர்.கே., தன் பாத்திரத்தின்
தன்மை உணர்ந்து நடித்திருந்தாலும், திரைக்கதையில் பேலன்ஸ் இல்லாததால்
படமும் தடுமாறுகிறது. திவ்ய பத்மினியிடம் பாச மழை பொழியும் போதும், இளவரசு
அடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பும் போதும் ஆர்.கே.வின் நடிப்பில்
பளிச். தாதாயிஸத்தை முக்கிய கருவாக கொண்ட கதையில் 'இந்த காட்சி செம
மிரட்டல்' என்று சொல்லும் அளவுக்கு ஒரு காட்சிகூட இல்லை.
நடு இரவில் மரத்தின் மேல் நடக்கும் அந்த சண்டைக்காட்சி அசத்தல்.
படத்தில் இரு நாயகிகள் என்றாலும், அதிக ரொமான்ஸ் காட்சிகளை வைத்து
சங்கடப்படுத்தாதது ஆறுதல்.
திவ்ய பத்மினிக்கு நல்ல ஸ்கோப். நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ஆனால், தன்னை பெண் பார்க்க வருபவர்களிடம் 'திருமணத்துக்குப் பிறகும் இவன்
என் கூடத்தான் இருப்பான்'னு ஆர்.கே.வை கை நீட்டுவது லாஜிக் தடுமாற்றம்.
லூசுப் பெண்ணாக சதா. அவரது குரல் குழைவும், உடல் நெளிவும் பல இடங்களில்
மெய்சிலிர்க்க வைக்கிறது. சில இடங்களில் கிளாமரைத் தவிர வேறேதும் தெரியாதது
போல் இருப்பது ஏன் என்றே தெரியவில்லை. கிளாமர் காட்சிகளில் வந்து
கிளர்ச்சியூட்டுகிறார். ஆர்.கே. மீது காதல் வயப்படுவது மாதிரி நடித்து
கடைசியில் போலீஸ் உடையில் வந்து நிற்கிறார் சதா. சதா சம்பந்தப்பட்ட
காட்சிகள் சாதா காட்சிகளாகவே அமைந்து விட்டன!
சின்சியர் போலீஸ் ஆபீஸராக கார்த்திக், ரொம்ப நாளைக்கப்புறம் கதாநாயகன்
லுக்கில் கலக்கி இருக்கிறார். படத்தின் பெரியபலம் கார்த்திக்தான்.
கிரிக்கெட் பேட்டும் கையுமாக, இளம் பெண்களை கடத்துவதை குலதொழிலாக கொண்ட
மன்சூரலிகான் செம கலக்கல். யார், யாரோ பேசுறாங்க, 20 வருஷமா நிலைத்து
நிற்கும் நான் பன்ச் டயலாக் பேசக்கூடாத என பிய்த்து பெடலெடுக்கும் அவர்
பேச்சில் செம நக்கல்! கார்த்திக் மாதிரியே, கலகலக்கலாக படம் முழுக்க
புலிவேசத்தை காப்பாற்றியிருக்கிறார் மன்சூர், என்றால் மிகையல்ல.
கஞ்சா கருப்பு, லொல்லு சபா ஜீவா, மயிசாமி ஆகியோரது காமெடி காட்சிகள் சில
கடித்தாலும், பல சிரிப்பு வெடியாகிறது. அதிலும் ஆவியாக வரும்
மயில்சாமியின் காட்சிகள் அத்தனையும் சிரிப்பு வெடிதான்.
பல காட்சிகளில் வாசுவின் அனுபவ முத்திரை தெரிகிறது. ஆனால் இத்தனை நீளமாக
படத்தை இழுக்காமல், இன்னும் நச்சென்று, வேகமான படமாகக் கொடுத்திருந்தால்
படத்தோட ரேஞ்சே வேறுமாதிரி இருந்திருக்கும்.
கருணாமூர்த்தியின் ஒளிப்பதிவு படத்துக்கு பிளஸ். ஸ்ரீகாந்த் தேவாவின்
இசையில் ""வர்றேன்... வர்றேன்..." பாடல் நல்ல ரகம். அதே பாடலின் இசைப்
பின்னணியில் கதையை நகர்த்தியிருப்பது சாமர்த்தியம்.
புலிவேசம் - வேசம் எடுபடலை!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: Puli Vesham(புலி வேஷம்)
நடு இரவில் மரத்தின் மேல் நடக்கும் அந்த சண்டைக்காட்சி அசத்தல்.
படத்தில் இரு நாயகிகள் என்றாலும், அதிக ரொமான்ஸ் காட்சிகளை வைத்து
சங்கடப்படுத்தாதது ஆறுதல். ://:-: ://:-:
படத்தில் இரு நாயகிகள் என்றாலும், அதிக ரொமான்ஸ் காட்சிகளை வைத்து
சங்கடப்படுத்தாதது ஆறுதல். ://:-: ://:-:
Similar topics
» Puli Vesham-புலி வேஷம்
» சிங்கம் புலி - Singam Puli
» சிங்கம் புலி - Singam Puli
» வேஷம் – ஒரு பக்க கதை
» பெண்களைக் கவரக்கூடிய வேஷம் உங்களுக்கு...!!
» சிங்கம் புலி - Singam Puli
» சிங்கம் புலி - Singam Puli
» வேஷம் – ஒரு பக்க கதை
» பெண்களைக் கவரக்கூடிய வேஷம் உங்களுக்கு...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum