Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
கை கழுவும் முறை...!
2 posters
Page 1 of 1
கை கழுவும் முறை...!
ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்கு டாய்லெட்டில் சுத்தமாக கழுவும் முறைகளை சொல்லித்தர வேண்டும். நிறைய வீட்டில், `டேய் டாய்லெட்டில் ஒழுங்காக கழுவிக்கொண்டு வா' என்று கட்டளை இடுகிறார்களே தவிர, உடனிருந்து சுத்தமாக கழுவ வழி காட்டுவதில்லை. சொல்லித் தருவதும் இல்லை. இது தவறு. நீங்கள்தான் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.
சிறியவர், பெரியவர் யாராயிருந்தாலும் சரி, டாய்லெட்டிலிருந்து வெளியே வந்தவுடன் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். அநேக வெளிநாட்டவர்கள், கரண்டி (ஸ்பூன்) மூலமே சாப்பிட்டு முடித்து விடுகிறார்கள். அவர்களுடைய உணவு வகைகளுக்கு ஸ்பூனில் சாப்பிடுவது சரிதான்.
நம்மூர் மாதிரி சாதத்தில் சாம்பார், ரசம், மோர் என்று ஊற்றி நன்றாக கைகளால் பிசைந்து சாப்பிடும் நிலை அவர்களுக்கு இல்லை. அவர்களின் உணவு கரண்டியில் எடுத்து சாப்பிடுவதற்கு ஏற்றது. ஸ்பூனில் சாப்பிடுவது தவறு என்று சொல்லமாட்டேன். ஆனால் ஆரோக்கியமான விஷயமல்ல. ஸ்பூனில் சாப்பிடும்போது உணவோடு சேர்ந்து ஸ்பூனும் வாய்க்குள் போய்வருகிறது.
வாயிலுள்ள எச்சில் உணவுக்கூழ் மற்றும் எல்லாவற்றையும் தொட்டுவிட்டுத்தான் வருகிறது. இப்படியிருக்கையில் ஒரு ஸ்பூனை ஒரே நபர் திரும்பத் திரும்ப வீட்டில் நன்றாக வெந்நீரில் கழுவி பயன்படுத்தி வந்தால் பிரச்சினையில்லை.
வீட்டிலோ அல்லது வெளியிலோ ஒரே ஸ்பூனை பல பேர் உபயோகிக்கும்போது அது கொதிக்கும் நீரில் நன்றாக கழுவப்படுகிறதா? இல்லையா? என்பது சந்தேகமே. நான் ஏற்கனவே சொல்லியபடி சாப்பிடும் பாத்திரங்களை 100 டிகிரி கொதிக்கும் நீரில் கழுவி எடுக்க வேண்டும். அப்படியென்றால்தான் அதிலுள்ள கிருமிகள் சாகும்.
சாதாரண தண்ணீரிலோ அல்லது மிதமான சூடுள்ள தண்ணீரிலோ ஸ்பூனை கழுவி எடுப்பதில் எந்தவித உபயோகமும் இல்லை. இளம் சூட்டில் கிருமிகள் சாகவும் செய்யாது. நிறைய வீடுகளில் ஸ்பூனை கொதிக்கும் நீரில் கழுவுவதில்லை..
ஓட்டலில் மட்டுமென்ன, அங்கேயும் இதே நிலைதான். சுடுதண்ணீர் என்ற பெயரில் தண்ணீர் இருக்கும். அது என்ன சூட்டில் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. எனவே சுகாதாரமற்ற முறையில் இருக்கும் ஓட்டல்களில் ஸ்பூனில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். கைகளை சுத்தமாக கழுவிவிட்டு ஆரோக்கியமாக கைகளிலேயே சாப்பிடலாம்.
ஆபரேஷன் தியேட்டர்களில் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் ஆபரேஷன் செய்வதற்கு முன்பாக கைகளைக் கழுவுவதற்கு மட்டுமே சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்வார்கள். கைகளைக் கழுவும் இந்த முறையில் முதலில் தண்ணீர்க் குழாயைத் திறந்துவிட்டு ஓடுகிற நீரில் முழங்கைக்கு கீழே உள்ள கைகள் இரண்டையும் நன்றாக கழுவுவார்கள்.
அடுத்து வலது உள்ளங்கையைக் கொண்டு இடது உள்ளங்கையையும், இடது உள்ளங்கையைக் கொண்டு வலது உள்ளங்கையையும் நன்றாக சொரிந்து தேய்த்து கழுவுவார்கள். அடுத்து வலது கையைக் கொண்டு இடது கைவிரல்களையும், இடது கையைக் கொண்டு வலது கை விரல்களையும் நன்கு சொரிந்து தேய்த்து கழுவுவார்கள்.
அடுத்து வலது கை விரல் இடுக்குகளையும், இடது கைவிரல் இடுக்குகளையும் நன்கு தேய்த்து கழுவுவார்கள். அடுத்து இரண்டு கைவிரல்களையும் ஒன்றோடொன்று கோர்த்து விரல்களுக்குள் விரல்களை விட்டு சொரிந்து தேய்த்து கழுவுவார்கள். அடுத்து ஒவ்வொரு விரலையும் நுனியிலிருந்து அடிவரை தனித்தனியாக தேய்த்து சொரிந்து கழுவுவார்கள்.
நான் மேற்சொன்ன ஒவ்வொரு முறையையும் சுமார் பத்து முறை முதலில் தண்ணீரை பயன்படுத்தி அடுத்து கிருமி நாசினி திரவத்தைப் பயன்படுத்தி, அடுத்து கடைசியாக சூடான உப்பு நீரில் விரல்களிலிருந்து முழங்கை வரை மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் பலமுறை நன்கு தேய்த்து கழுவுவார்கள்.
இதற்குப் பிறகுதான் கைகளை கிருமிகள் நீக்கப்பட்ட சுத்தப்படுத்தப்பட்ட துணியினால் துடைத்துவிட்டு, கையுறைகளை அணிவார்கள். இதற்குப் பிறகுதான் ஆபரேஷன் தியேட்டருக்குள் போவார்கள். `ஆபரேஷன் தியேட்டருக்குள் போறதுக்கு முன்னாடி நூறுமுறை கை கழுவணுமா, ஆளை விடுங்கடா சாமி' என்று நீங்கள் நினைப்பது எனக்கு நன்றாகப் புரிகிறது.
கைகளுக்கு இவ்வளவு அக்கறை எடுத்துதான் ஆக வேண்டும். இல்லையெனில் கைகள் மூலமாக கிருமிகள் நோயாளியின் உடலுக்குள் நுழைந்து நோயை உண்டுபண்ணி விடும். ஆபரேஷன் தியேட்டரில் கைகளுக்காக எடுத்துக் கொள்ளும் அக்கறையைப்போல நம் வயிற்றுக்குள் செல்லும் உணவை சாப்பிட பயன்படுத்தும் கைகளுக்கும் நாம் கண்டிப்பாக அக்கறை எடுத்துதான் ஆக வேண்டும்.
சில நேரங்களில் வெறும் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி கைகளை நன்றாக கழுவ முடியாது. கைகளில் ஒட்டியிருக்கும் கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருட்கள், எண்ணை சம்பந்தப்பட்ட பொருட்கள், புரோட்டீன் உணவு சம்பந்தப்பட்ட பொருட்கள், அழுக்கு, கறை முதலியவை தண்ணீரில் சுத்தமாக போகாது.
இம்மாதிரி நேரங்களில் வெந்நீர் மற்றும் சோப்பு எண்ணை திரவங்களைப் பயன்படுத்தினால் இந்தக் கறைகளெல்லாம் கைகளிலிருந்து சுத்தமாக நீங்கிவிடும். ஈதைல் ஆல்கஹால் கலந்த கிருமி நாசினி திரவங்களை உபயோகித்து கைகளை கழுவினால் பாக்டீரியா, காசநோய்க் கிருமி, எச்.ஐ.வி. ஹெர்பிஸ் கிருமி, கல்லீரல் நோய்க் கிருமி, இவைகள் அனைத்தும் இறந்து விட வாய்ப்ப்புண்டு.
கட்டி சோப்புகளைத்தான் நாம் வீட்டில் உபயோகித்து வருகிறோம். அது முழுவதும் கரையும் வரை மறுபடியும் மறுபடியும் அதையே தான் நாம் உபயோகித்துக் கொண்டு இருப்போம். கட்டியாக அதாவது திடமாக இருப்பதால் அந்த சோப்புக் கட்டியிலே கிருமிகள் தங்க வாய்ப்புண்டு.
எனவே சோப்புக் கட்டியை உபயோகிப்பதற்கு முன்பு முதலில் சோப்புக் கட்டியை நன்றாக ஓடும் தண்ணீரில் கழுவிவிட்டு அதற்குப் பிறகு உபயோகிப்பது நல்லது. இந்தியாவில் அதிகமானோர் கைகளை உபயோகித்துத்தான் சாப்பிடுகிறார்கள்.
மேலை நாடுகளில் கைகளை உபயோகித்து சாப்பிடுபவர்கள் குறைவு. ஆனால் மேலை நாடுகளில் மருத்துவமனை, விமான நிலையம், ரயில் நிலையம் முதலிய இடங்களில் நுழையும் வாசலிலேயே கை கழுவுவதற்கென்று நிறைய கருவிகளை வரிசையாக மாட்டி வைத்திருக்கிறார்கள்.
ஆனால் கைகளை அதிகமாக உபயோகப்படுத்தும் நம்நாட்டில் முக்கியமான சில மருத்துவமனைகளைத் தவிர வேறு எங்கும் இதுபோன்ற வசதி இல்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
கீழ்க்கண்ட செயல்களை செய்யும்போது கைகளை நன்றாக கழுவுவது அவசியம்.
1. வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ உள்ள டாய்லெட் மற்றும் பாத்ரூம்களை பயன்படுத்தும் போது
2. குழந்தை மற்றும் வயதானவர்களுக்கு டயபர் பேடை மாற்றும் போது,
3. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பு,
4. சாப்பிடுவதற்கு முன்பு,
5. சமைப்பதற்கு முன்பு,
6. சமையலறையில் சிக்கன், மட்டன், மீன் முதலியவைகளை கழுவுவதற்கு முன்பும், கழுவிய பின்பும்,
7. நோயாளிகளை பார்ப்பதற்கு முன்பும், பார்த்த பின்பும்,
8. டாய்லெட் போவதற்கு முன்பும், போய் வந்த பின்பும்,
9. அதிக மக்கள் கூட்டமுள்ள இடங்களுக்கு போய்வந்த பின்பு,
10. பொதுக் கழிப்பிடங்கள், சினிமா தியேட்டர்களுக்கு போய்வந்த பின்பு,
11. கம்ப்யூட்டர் கீபோர்டு முதலியவைகளை பிரவுசிங் சென்டரில் தொட்ட பின்பு.
கையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு தென்னிந்தியரைப் பார்த்து ஒரு ஆங்கிலேயர் கேட்டாராம்.
`அய்யய்யோ நாங்களெல்லாம் சுத்தமான ஸ்பூனில்தான் சாப்பிடுகிறோம். நீங்களென்ன வெறும் கையிலேயே சாப்பிடுகிறீர்கள். இது சுத்தமில்லையே?' என்று.
அதற்கு பதிலளித்த இந்தியர்,
`அய்யா நான் என்னுடைய சுத்தமான கையால் தான் சாப்பிடுகிறேன். ஆனால் நீங்களோ எத்தனையோ பேர் வாயில் வைத்த ஸ்பூனில் அல்லவா சாப்பிடுகிறீர்கள். எது சுத்தம் என்பதை நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள்' என்றாராம்.
அவர் சொல்லியது உண்மையே!
கையை விட சுத்தமான ஒரு உறுப்பும் கிடையாது. அதேமாதிரி கையைவிட அசுத்தமான ஒரு உறுப்பும் கிடையாது. அதை நாம் பராமரிப்பதை பொறுத்து நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: கை கழுவும் முறை...!
கையை விட சுத்தமான ஒரு உறுப்பும் கிடையாது. அதேமாதிரி கையைவிட அசுத்தமான ஒரு உறுப்பும் கிடையாது. அதை நாம் பராமரிப்பதை பொறுத்து நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
:!+: :!+: @.
:!+: :!+: @.
Similar topics
» வயதானவர்களுக்கான உணவு முறை
» காதல் ஒரு முறை
» தினமும் இரு முறை பல் துலக்காவிட்டால்…?
» வாரத்தில் 5 முறை உடற்பயிற்சி
» முறை என்ன?
» காதல் ஒரு முறை
» தினமும் இரு முறை பல் துலக்காவிட்டால்…?
» வாரத்தில் 5 முறை உடற்பயிற்சி
» முறை என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|