சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கண்டியில் ஜனாதிபதி சந்திப்பு Khan11

முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கண்டியில் ஜனாதிபதி சந்திப்பு

2 posters

Go down

முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கண்டியில் ஜனாதிபதி சந்திப்பு Empty முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கண்டியில் ஜனாதிபதி சந்திப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 3 Oct 2011 - 7:04

பொய் வதந்திகளை நம்பி ஏமாறாமல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை அமோக வெற்றிபெறச் செய்து நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்பு செய்யுங்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

சுற்றாடல் பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் தலைமையில் அவரது கண்டி வாசஸ்தலத்தில் நடைபெற்ற முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அன்று முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரம் நடப்பதில்லை என்றும் எங்கும் அச்சம் நிலவுவதால் மக்கள் நகருக்கு வருவது குறைந்துள்ளது என்றும் கூறினார்கள். நாம் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து அந்த அச்ச நிலையைப் போக்கியுள்ளோம். இப்போது மக்கள் அச்சம், பீதியின்றி நடமாடுகின்றார்கள். வியாபாரமும் நல்லபடி நடக்கின்றது.

என்றாலும் இப்போது தேர்தல் நடக்கின்றது. உங்கள் நகரை அபிவிருத்தி செய்வதற்கு மிகவும் அவசியமான தேர்தல் இது. அதனால் உங்களது எதிர்கால சந்ததியினரதும் நலன்களை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுங்கள். சிந்தித்து செயற்படுங்கள்.

வரலாற்று சிறப்புமிக்க மாநகரம் இருந்தும் இங்கு ஒழுங்கு முறையாக கழிவுப் பொருட்கள் அகற்றப்படாது. இதனால் நகரின் பல பிரதேசங்களில் துர்நாற்றம் வீசுகின்றது. இப்பிரச்சினைக்கு மாநகரை ஆட்சி செய்பவர்களால் இற்றைவரையும் தீர்வு வழங்கப்படவில்லை. இனியும் வழங்குவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

ஆனால் நகர அபிவிருத்தி சபையை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்து கொழும்பு மாநகரின் கழிவுப் பொருள் பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளோம்.

மீன் சந்தையை கொழும்புக்கு வெளியே கொண்டு சென்றிருக்கின்றோம். ஆனால் ஐ.தே.க. கொழும்பு மாநகர சபை முதன்மை அபேட்சகர் மீண்டும் மீன் சந்தையை கொழும்புக்குள் கொண்டு வருவதாகக் கூறுகின்றார். அப்படியென்றால் கொழும்பு அழகாகவும், துர்நாற்றமின்றியும் இருப்பதும் இவருக்குப் பிடிக்கவில்லை போலும்.

நான் கண்டி முஸ்லிம்களுக்கு ஆண்கண் பாடசாலையொன்றைத் தருவதாகக் கூறினேன். இதற்காக ஸ்ரீல.சு. கட்சியில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை உருவாக்கித் தருமாறு அன்று கேட்டேன். ஆனால் ஒரு முஸ்லிம் ஸ்ரீல.சு. கட்சியில் எம்.பியாகவில்லை. இப்போது இருவர் பிரதியமைச்சர்களாக இருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் களுத்துறையைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணி அலி சப்றி அண்மையில் ஒரு தொலைக்காட்சி கலந்துரையாடலில் தெரிவித்த கருத்துக்கள் என்னை பெரிதும் சிந்திக்க வைத்ததுதான். ஒரு முஸ்லிம் என்று முஸ்லிம் பாடசாலையிலேயே கற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் சட்டக் கல்லூரியில் இணைந்த பின்னர் தான் சிங்கள மொழியைக் கற்றேன். சிங்கள மொழி மாணவர்களுடன் கலந்து பழகும் வாய்ப்பும் கிடைத்தது என்றும் கூறினார்.

உண்மையில் எமது பிள்ளைகளைப் பாடசாலை பருவத்திலிருந்தே சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று பிரித்து வைத்திருக்கின்றோம். அவர்கள் வளர்ந்த பின்னர் தான் ஒன்றுபட்டு செயற்படுமாறு கூறுகின்றோம். ஆனால் றோயல் கல்லூரியில் மூன்று இன மாணவர்களும் ஒன்றாக கற்கின்றார்கள். அவரவர் சமய, கலாசார விழுமியங்களை அறிந்து உணர்ந்து மதித்து செயற்படுகின்றார்கள். நாம் சமூகத்தைப் பிரிக்கக் கூடாது.

பள்ளிவாசல்களில் அதான் கூறுவதை நாம் நிறுத்தவில்லை. அதற்கு வழி சமைத்தவர்கள்தான் ஐ.தே.க. மேடைகளில் இப்போது பேச்சாளராக இருக்கின்றார். நாம் பள்ளிவாசல்களை உடைக்கவில்லை. முஸ்லிம்களுக்கான கலாசார நிலையத்தை அமைத்திருக்கின்றோம். கிறிஸ் பூதம் என்ற வதந்தியைப் பரப்பினார்கள். என் மீது சேறு பூசப்பூச ஐ.தே.க.வும், ஜே.வி.பி.யும் துண்டு துண்டாக உடைந்து பிரிந்து போய் விட்டது. நீங்கள் வதந்திகளை நம்பாதீர்கள். ஐ.ம.சு.முன்னணியை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

இஸ்லாத்தின் அடிப்படையே சாந்தி சமாதானம்தான். உணர்வுகளுக்கு முதலிடம் கொடுக்காமல் புத்திக்கு முன்னுரிமை அளியுங்கள். எல்லா மக்களும் இந்நாட்டில் சுய கெளரவத்துடன் வாழ வேண்டும். கல்வி தான் எமது கண். அதற்கு முதலிடமளிப்பது மிக அவசியம். எல்லோரும் ஒன்று பட்டு நாட்டை அபிவிருத்தி செய்வோம் என்றார்.

இந்நிகழ்வில் பிரதமர் டி.எம். ஜயரட்ன, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மாகாண சபை உறுப்பினர் அம்ஜாத் ஹாஜியார் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.


முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கண்டியில் ஜனாதிபதி சந்திப்பு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கண்டியில் ஜனாதிபதி சந்திப்பு Empty Re: முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கண்டியில் ஜனாதிபதி சந்திப்பு

Post by நண்பன் Mon 3 Oct 2011 - 9:47

தேர்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்டவைகள் இவைகள் முஸ்லீம் தலைவர்கள் சிந்தித்து செயல் படுவது மக்களுக்கு நல்லது
முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கண்டியில் ஜனாதிபதி சந்திப்பு 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum