Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உலகம் முழுவதும் பரவுகிறது "வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு' போராட்டம்: ரோம் நகரில் வெடித்தது வன்முறை
Page 1 of 1

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் "வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்க' போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், உலகப் பொருளாதாரம் சீர்கேடு அடைவதற்குக் காரணமான வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசியல்வாதிகளைக் கண்டித்தும், போராட்டங்கள் உலகளவில் துவங்கியுள்ளன.
"வால் தெரு ஆக்கரமிப்பு இயக்கம்' கடந்த செப்டம்பர் 17ம் தேதி நியூயார்க்கில் துவக்கிய போராட்டம், தற்போது அமெரிக்காவின் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்து வருகிறது.
பூங்கா விவகாரம்: இந்நிலையில், நியூயார்க்கில், ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியுள்ள, தனியாருக்குச் சொந்தமான "ஜூகோட்டி பூங்காவில்' இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றும் நோக்கில், அந்தப் பூங்காவைத் தூய்மைப்படுத்தப் போவதாக, பூங்கா உரிமையாளரான "ப்ரூக்பீல்டு பிராபர்ட்டீஸ்' நிறுவனம் அறிவித்தது.
மக்கள் எதிர்ப்பு: தூய்மைப்படுத்திய பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் பூங்காவில் மீண்டும் தங்கலாம் எனவும் கூறியிருந்தது. ஆனால், இதன் மூலம் தங்கள் ஆர்ப்பாட்டத்தை நசுக்க நியூயார்க் போலீசார் முயல்வதாகக் கருதிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர், பூங்காவில் நேற்று திரண்டு, அங்கிருந்து செல்ல முடியாது என தெரிவித்தனர்.
வாபஸ்: இதன் பின், கடைசி நேரத்தில், தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பூங்காவை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும்: இந்நிலையில், "வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு போராட்டம்' உலகளவில் பரவி வருகிறது. தென்னாப்ரிக்கா, தென் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆசியா, தெற்காசியா, ரஷ்யா என உலகம் முழுவதும் போராட்டங்கள் நேற்று முதல் துவங்கின. இதற்காக, www.15october.net என்ற இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இதில், உலகம் முழுவதும், இந்தியா உள்ளிட்ட 82 நாடுகளில், 951 நகரங்களில் "வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு' போராட்டம் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில், டோக்கியோவில்... முதற்கட்டமாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன் நகரங்களிலும், நியூசிலாந்தின் ஆக்லாண்ட், வெல்லிங்டன், கிறிஸ்ட்சர்ச் நகரங்களிலும், தைவான் தலைநகர் தாய்பெய்யிலும், ஜப்பானின் டோக்கியோ,ரோப்போங்கி நகரங்களிலும், தென்கொரியத் தலைநகர் சியோலிலும் நேற்று போராட்டங்கள் நடந்தன.
லண்டனில் அசாஞ்ச்: அதேநேரம்,ரோம், ஏதென்ஸ், மாட்ரிட் போன்ற நகரங்களிலும், தென்னாப்ரிக்காவின் டர்பன், கேப்டவுன், ஜோகன்னஸ்பர்க் நகரங்களிலும், ஜெர்மனியின் பிராங்பர்ட்டிலும் நேற்று போராட்டங்கள் நடந்தன. பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடந்த போராட்டத்தில் "விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் கலந்து கொண்டார். இத்தாலியின் ரோம் நகரில் நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கார்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
"இந்தியா ஆக்கிரமிப்பு' போராட்டம்? ஆக்கிரமிப்பு போராட்டங்களுக்கான www.15october.net இணையதளத்தில், இந்தியாவில் புனே, ஐதராபாத், மும்பை, கோல்கட்டா மற்றும் டெல்லியில் போராட்டங்கள் நேற்று நடக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மும்பையில் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள், "ட்விட்டரில்' இம்மாதம் 29ம் தேதி போராட்டம் நடக்கும் என அறிவித்திருந்தனர். பிற நகரங்களில் போராட்டங்கள் நடந்தது குறித்து தகவல்கள் தெரியவரவில்லை.

Similar topics
» உலகம் முழுவதும் பெரும் வன்முறையாகும் வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் இந்தியாவிலும்
» வேலை வாய்ப்பு கோரி 86 நாடுகளில் போராட்டம்; ரோம் நகரில் வன்முறை
» ரோம் நகரில் அரிதான சிலை கண்டுபிடிப்பு!
» ஊழலை எதிர்த்து நாடு முழுவதும் பரவுகிறது : ஹசாரேவுடன் உண்ணாவிரதம் இருக்க மக்கள் தயார்
» ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum