சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm

» nisc
by rammalar Yesterday at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm

» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm

» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am

» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm

சிவாஜிகணேசன் என்ற இலக்கணமும் இலக்கியமும் Khan11

சிவாஜிகணேசன் என்ற இலக்கணமும் இலக்கியமும்

+3
அப்துல்லாஹ்
நேசமுடன் ஹாசிம்
nazimudeen
7 posters

Go down

சிவாஜிகணேசன் என்ற இலக்கணமும் இலக்கியமும் Empty சிவாஜிகணேசன் என்ற இலக்கணமும் இலக்கியமும்

Post by nazimudeen Tue Oct 18, 2011 4:42 am


சிவாஜிகணேசன் என்ற இலக்கணமும் இலக்கியமும் Siva21-300x259


(ஆங்கிலத்தின் அக்டோபர் முதலாம் திகதியில் பிறந்த நடிகர் திலகம் அமரர்
சிவாஜிகணேசன் அவர்களின் நினைவலைகளை


அலைகளில் (http://www.alaikal.com) அவர்பிறந்த மாதத்திலே
வெளிக்கொண்டுவருவதில் மகிழ்ச்சி ,
அலைகளின் சிவாஜி இரசிகர்களுக்கு இந்தக்கட்டுரை நிச்சயம் இனிக்கும் )


ஒரு மனிதன் தான் சார்ந்த தொழிற்துறையில் அதீத சக்தியுடையவனாக திகழ்வது
ஒரு சிலருக்கே கிட்டிய பேறாகும்


தான் ஏற்றுக்கொண்ட நடிப்புத்துறையில் பேராற்றலுடன் விளங்கியவர் அமரர்
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்


பெரியவர்களானதும் ஆற்றப்போகும் தொழிலுக்கு பலம் சேர்க்க மாணவர்கள்
இளமையிலிருந்தே கல்வியினை கற்பார்கள்


ஆனால் நடிகர்த்திலகமோ இளமையிலிருந்தே நடிப்பினை கற்று வந்தார் ஆம்
குடும்பத்தின் வறுமை நிலையால் வீட்டை


தாண்டி நாட்டை மகிழவைத்த நாடக மேடைக்குள் காலை வைத்தார் , கலைமகள்
கண்திறந்து வாமகனே என்றாளோ என


நாமெல்லாம் எண்ணும் வகையில் நடிப்புக்கு கடவுள் என்று சொல்லும் விதம்
நடித்து காட்டி இரசிகர்களின் அத்தனை உணர்வுகளுக்கும் நன்றாகவே நிறைவினை
கொடுத்தார்,


பேசிய வசனங்களின் பொருளுக்கு ஏற்ப கண்கள் உருண்டன கால்கள் நடந்தன கைகள்
அசைந்தன தோள்கள் நிமிர்ந்தன


முதுகு குலுங்கியது மொத்தத்தில் உச்சிமுதல் உள்ளங்கால்வரை தான்
எடுத்துக்கொண்ட பாத்திரத்துக்கு ஏற்ப


நூற்றுக்கு நூறு சரியாக நேர்த்தியாக உடலை நடிப்புக்கு
வடிவமாக்கினார்,ஆம் தமிழ் தெரியாத அந்நியன் அவரின்


உடலசைவை வைத்தே காட்சியின் சூழல் என்னவென்று கண்டுகொள்வான் என்றால்
மிகையில்லை , சிவாஜி கர்ச்சித்தால் இரசிகனின் தோள்கள் நிமிரும் அவர்
அழுதால் இரசிகனின் தோள்கள் ஒடுங்கும் நடிகர் திலகம் சிரித்தால் இரசிகனின்
முகம் மலரும்


அழுதால் இரசிகனின் முகமும் வாடும் , தனது உணர்வுடனேயே இரசிகர்களை
அழைத்து செல்வது அவரின் அளவற்ற


ஆற்றலின் நுட்பமாகும்,இதற்கு இப்படித்தான் இது இன்னவாறே என்று
எடுத்துகொள்ளும் காட்சியின் சூழலுக்கும்


தனது பாத்திரத்துக்கும் குறுகிய நேரத்தில் நிறைவான முடிவினை கற்பனை
செய்து நடித்து காட்டுவதில்


நடிகர்திலகம் போல் உலகில் வேறு யாராவது இருப்பார்களா என்பது சந்தேகமே,


பாத்திரத்துக்கான ஆடைகளை தெரிவு செய்வதிலும் ஆபரணங்களை அணிந்து
கொள்வதிலும் அவரும் நன்றாகவே


ஈடுபாடு காட்டியிருப்பார் என்பதனை அவர் அணிந்து கொண்டிருக்கும்
எடுப்பில் வைத்து நாம் மதிப்பிடமுடியும்


இராஜா வேடத்துக்கு கம்பீரம் காட்ட ஒருநடை பணக்கார பிரமுகர் என்றால்
அதற்கொரு நடை ஏழையானால்


அதற்கு


ஒரு நடை களியாட்ட விழாவுக்கு ஒருநடை இப்படி ஒவ்வொன்றுக்கும் ஐயாவின்
நடையழகு விடைபெறாமல்


தொடர்ந்திருந்தது ,எத்தனை படங்கள் எத்தனை வசனங்கள் எத்தனை எத்தனை
பாத்திர மாற்றங்கள் அத்தனையும்


அவரொருவருக்கே படைக்கப்பட்டதுவோ என எண்ணி எண்ணி வியக்கின்றேன்,


ஆற்றல் மிகுந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் நடிகர்திலகத்தின் நாக்கு
உச்சரித்த பொழுதே அழகு பெற்றது


என்றால்


மிகையில்லை,அவருடைய குரலினிமையால் உச்சரிக்கும் வேக அளவால் வசனங்கள்
உயிர்பெற்று ஊஞ்சலாடி


கல்வெட்டுக்கள் போல் தமிழர்கள் உள்ளமெல்லாம் பதிந்தது,


ராஜா என்று குறுக்கி சொல்லும் பொழுது காதில் விழுந்த அவரின் தேன்
குரல் இதயத்தை தொட்டு


இன்பத்தை தந்தது (ஓ ஓ ராஜா என்ற “ராஜா “படப்பாடலில் ) காதலியாக
மனைவியாக நடிக்கும் பாத்திரத்தின்


பெயரை


எத்தனை அழகாக அதில் அன்பும் கலந்து நுட்பமாக
உச்சரித்திருப்பார்,”பாலும் பழமும்”படத்தில் சாந்தி என்ற


மனைவியின் பெயரை எத்தனை அழகாக உருக்கமாக பல விதமாகவெல்லாம்
உச்சரித்திருந்தார், சீதா,


பார்வதி,செல்லம்மா ,என்று பல பெயர்களை அடுக்கிகொண்டே போகலாம் ,


,அதேபோல்


தனக்கு எதிரான பாத்திரத்தின் பெயரையும் அழகாகவே ஆத்திரம் கலந்திருந்த
சூழ்நிலையிலும் உச்சரித்திருப்பார்


“திருடன்” படத்தில் ஜெகன்னாதன்


நீ ஒரு கோழை என்பார், சோகத்திலும் ஜெகன் என்று நீட்டி அழகாய்
கத்தியிருப்பார்


“தங்கப்பதக்கம்”


படத்தில் , ஒரு பெயரை அன்றில் வார்த்தையை எந்தச்சூழ்நிலைக்காட்சியிலும்
அழகாக பேசியிருப்பார் மட்டுமின்றி


வட்டார வழக்கு பேச்சினையும் அதுபோலவே பிசகின்றி பேசி
வல்லமையைகாட்டினார்,”வியட்னாம் வீடு”படத்தில்


பிராமணர்களின் பேச்சுவழக்கு , “நவராத்திரி” படத்தில் ஏழைக்குடியான
கமக்காரர்களின் பேச்சு , அகம்பாவம்


பிடித்த தொழிலதிபர் பேச்சினை “பாட்டும் பரதமும்” படத்தில்,என்று
இன்னும் பற்பல ,


பாடல் காட்சிகளில் அவரைப்போல் கச்சிதமாக வாயசைத்தவர்கள் கிடையாது,
சிவஜியாரின் பாடல்கள் பற்றி


எழுதவேண்டின் முக்கியமான ஒருவரை சேர்த்தே ஆகவேண்டும் அவர்தான் பாடகர்
திலகம் டி.எம்.சௌந்தரராஜன்


திலகத்துக்கென்றே பிறந்த திலகம் குரல்கொடுக்க இறைவனால் படைக்கப்பட்டவரோ
என எண்ண வைக்கும்


குரலதிசயம் பாடகர்திலகம் டி. எம்.எஸ் என்றால் யாரும்
மறுக்கமாட்டார்கள்.”பாவாடைதாவணியில்” என்று இதமாக


பாடியவரே “படைத்தானே” என்று பதறியும் பாடி நடிகர்திலகத்தின்
நடிப்புக்கு குரலால் உணர்ச்சி கூட்டி


பாடிக்கொடுத்திருந்தார், “நீயும் நானுமா” என்று அவர் ஓங்கிப்பாடும்
பொழுது ஆத்திரத்தை கொப்பளித்திருப்பார் குரலில்


அவரின் அசாத்திய திறமைக்கு ஒலிவாங்கியின் தரம் போதாதோ என்று எண்ண
தோன்றியது,அந்தளவிற்கு அவரது


குரல்வன்மை இனிமையை கலந்து தமிழருக்கு காதுகளில் கனலாக
விழுந்தது,”அம்மாடி ” என்று இழுத்த பொழுது


வானத்தை ஒருக்கா முத்தமிட்டு தொட்டு வந்தது அவரின் பண்பட்ட
கம்பீரக்குரல் ,நடிகர்திலகத்துக்கு கிடைத்த


மிகப்பெரிய பலமானது அவரின் கலை வாழ்வுக்கு பாடகர்திலகத்தின்
குரல்என்றால் மிகையில்லை .


நடிகர்திலகம் ஒரு மாபெரும் விருட்சத்துக்கு சமமானவர் அவரின் அத்தனை
விடயங்களையும் ஒரு கட்டுரைக்குள் எழுதி


முடிப்பது அவ்வளவு எளிதான விடயமல்ல ஆதலினால் இம்மட்டில்
உங்களிடமிருந்து தற்போதைக்கு


விடைபெறுகின்றேன்.


nazimudeen
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

சிவாஜிகணேசன் என்ற இலக்கணமும் இலக்கியமும் Empty Re: சிவாஜிகணேசன் என்ற இலக்கணமும் இலக்கியமும்

Post by நேசமுடன் ஹாசிம் Tue Oct 18, 2011 12:20 pm

நல்ல பகிர்வு நன்றி சகோ


சிவாஜிகணேசன் என்ற இலக்கணமும் இலக்கியமும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிவாஜிகணேசன் என்ற இலக்கணமும் இலக்கியமும் Empty Re: சிவாஜிகணேசன் என்ற இலக்கணமும் இலக்கியமும்

Post by அப்துல்லாஹ் Tue Oct 18, 2011 12:34 pm

சும்மா ரசிச்சு சிலாகிச்சு சொல்லியிருக்கிங்க உறவே...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சிவாஜிகணேசன் என்ற இலக்கணமும் இலக்கியமும் Empty Re: சிவாஜிகணேசன் என்ற இலக்கணமும் இலக்கியமும்

Post by kalainilaa Tue Oct 18, 2011 1:08 pm

சிவாஜி இரசிகர்களுக்கு இந்தக்கட்டுரை நிச்சயம் இனிக்கும்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சிவாஜிகணேசன் என்ற இலக்கணமும் இலக்கியமும் Empty Re: சிவாஜிகணேசன் என்ற இலக்கணமும் இலக்கியமும்

Post by jasmin Tue Oct 18, 2011 1:44 pm

நடிப்புக்கு இலக்கனமும் இலக்கியமும் சிவாஜிதான் என்பதில் என்ன சந்தேகம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சிவாஜிகணேசன் என்ற இலக்கணமும் இலக்கியமும் Empty Re: சிவாஜிகணேசன் என்ற இலக்கணமும் இலக்கியமும்

Post by நண்பன் Tue Oct 18, 2011 7:58 pm

jasmin wrote:நடிப்புக்கு இலக்கனமும் இலக்கியமும் சிவாஜிதான் என்பதில் என்ன சந்தேகம்
சிவாஜிகணேசன் என்ற இலக்கணமும் இலக்கியமும் 111433சிவாஜிகணேசன் என்ற இலக்கணமும் இலக்கியமும் 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிவாஜிகணேசன் என்ற இலக்கணமும் இலக்கியமும் Empty Re: சிவாஜிகணேசன் என்ற இலக்கணமும் இலக்கியமும்

Post by முனாஸ் சுலைமான் Tue Oct 18, 2011 9:21 pm

:flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சிவாஜிகணேசன் என்ற இலக்கணமும் இலக்கியமும் Empty Re: சிவாஜிகணேசன் என்ற இலக்கணமும் இலக்கியமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum