சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

முன்னாள் புலி உறுப்பினர்கள் 368 பேர் சமூகத்தில் இணைவு Khan11

முன்னாள் புலி உறுப்பினர்கள் 368 பேர் சமூகத்தில் இணைவு

Go down

முன்னாள் புலி உறுப்பினர்கள் 368 பேர் சமூகத்தில் இணைவு Empty முன்னாள் புலி உறுப்பினர்கள் 368 பேர் சமூகத்தில் இணைவு

Post by நண்பன் Wed 26 Oct 2011 - 8:26

முன்னாள் புலி உறுப்பினர்கள் 368 பேர் சமூகத்தில் இணைவு




மகேஸ்வரன் பிரசாத்

தீபாவளித் திருநாளை முன்னிட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி
உறுப்பினர்கள் 368 பேர் நேற்றைய தினம் சமூக வாழ்வில் இணைக்கப்பட்டனர். இந்த நிகழ்வு
கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.

முன்னாள் புலி உறுப்பினர்கள் 368 பேர் சமூகத்தில் இணைவு N10
இளைஞர் ஒருவர், பிரதமர் டி.எம். ஜயரட்ன,
அமைச்சர்களான சந்திரசிறி கஜதீர, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் முன்னிலையில்
ஒப்படைக்கப்படுகிறார். அருகில் சிரேஷ்ட ஆலோசகர் சதீஷ் குமாரும்
காணப்படுகிறார்.
(படம்: தெஹிவளை, கல்கிஸ்ஸை தினகரன் நிருபர்)
பிரதமர் டி.எம்.ஜயரட்ன, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்
சந்திரசிறி கஜதீர, பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின்
செயலாளர் திஸாநாயக்க, வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி, மேல்மாகாண ஆளுனர் அலவி
மெளலானா, நீதியமைச்சின் செயலாளர் சுகத கம்லத், புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல்
சந்தன ராஜகுரு, சிறைச்சாலைகள் ஆணையாளர் கொடிப்பிலி உள்ளிட்ட அதிகாரிகள் பலர்
கலந்துகொண்டனர்.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட 368 பேரின்
வாழ்க்கையிலும் ஒளிவீசவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இவர்களை விடுவிக்கத்
தீர்மானித்ததாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்தது.
வர்ண அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மேடைக்கு பிரதமர் உள்ளிட்ட பிரமுர்கள்
மங்கள வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது.
இம்முறை தீபாவளியை 368 புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் தமது குடும்பங்களுடன்
சந்தோசமாகக் கொண்டாடவிருப்பதாக நேற்றைய நிகழ்வில் உரையாற்றிய போது குறிப்பிட்ட
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர,
எஞ்சியுள்ள ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் எதிர்வரும் 3 அல்லது நான்கு மாதங்களில்
தமது குடும்பங்களுடன் இணைக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.
நான்காகக் காணப்படும் புனர்வாழ்வு நிலையங்களை எதிர்வரும் 4 மாதங்களில் இரண்டாகக்
குறைப்பதற்குத் தாம் தீர்மானித்திருப்பதாகவும், புனர்வாழ்வளிக்கப்பட்டு
விடுவிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளின் திறைமைகளை மேலும் வளர்ப்பதற்கு ஏதுவாக
வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு நிலையக் கட்டடங்களை நிரந்தமாக வைத்திருப்பதற்குத்
தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களில் பல
திறமையான இளைஞர்கள் இருக்கின்றனர். அண்மையில் மாத்தறையில் நடைபெற்ற கிரிக்கெட்
போட்டி மற்றும் கொழும்பில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டிகளில் பல இளைஞர்கள் தமது
திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர். தேசிய அணியில் இடம்பெறக்கூடிய திறமையுடையவர்கள்
காணப்படுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரியவும் கூறியிருந்தார்.

இந்த
நிலையில் தேசிய கிரிக்கெட் அணிக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களில் மூவரை
இணைப்பதற்கான நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுத்திருப்பதாகவும் தனதுரையில் அவர்
குறிப்பிட்டார்.
இதுமாத்திரமன்றி திறைமையுள்ள இளைஞர் யுவதிகளின் வாழ்க்கையை மேலும் வளமானதாக
அமைப்பதற்கு குறைந்த வட்டியில் கடன்களை வழங்கவும் தமது அமைச்சு நடவடிக்கை
எடுத்துள்ளது என்றும், தொடர்ச்சியாக இவர்களுக்கு உதவிகளை வழங்க நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். இந்தநிகழ்வில்
வரவேற்புரை நிகழ்த்திய புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு,
புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் இதுவரை 1.7 பில்லியன் ரூபாய்களைச்
செலவிட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் க.பொ.த. உயர்தர மற்றும்
சாதாரணதரப் பரீட்சைகளில் தோற்றியுள்ளனர். இதற்கு இந்து மாமன்றம் உதவிகளை
வழங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர்
திஸநாயக்க, பிரதமர் டி.எம்.ஜயரட்ண ஆகியோர் உரையாற்றியிருந்தனர். பெற்றோருடன்
மீளிணைக்கப்பட்ட 368 பேரும் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு நேற்று வவுனியாவில்
விசேட பயண ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.


தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» 152 முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்தில் இணைப்பு
» தீபாவளி விழாவில் 367 முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்தில் இணைப்பு
» தீபாவளி விழாவில் 367 முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்தில் இணைப்பு
» முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு நன்றி
» க.பொ.த. உயர்தரம்: 302 முன்னாள் புலி உறுப்பினர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum