Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
"ஈ" ...... என்னும் நோய் பரப்பி
5 posters
Page 1 of 1
"ஈ" ...... என்னும் நோய் பரப்பி
இன்று நகரத்திலிருந்து கிராமம் வரை எங்கும் பறந்து, திரிந்து வாழும் ஒரு வகை பூச்சி இனம்தான் ஈக்கள். பொதுவாக ஈக்கள் என்றாலே எல்லோருக்கும் அருவெருப்பே தோன்றும். ஏனென்றால் அவை
மலத்திலும், குப்பையிலும் உட்கார்ந்து ... பிறகு, நம் உடலிலும், உண்ணும் உணவுகளின் மீதும் உட்காருவது தான். ஈக்களை முழுமையாக ஒழிக்க, சிறந்த வழி - சுகாதாரமே. அரசும் பல வழிகளில் முயற்சி செய்தும் ஈக்களின் எண்ணிக்கையோ குறைந்த பாடில்லை.
ஈக்களால் ஆண்டுக்கு பல லட்சம் பேர் பல்வேறு நோய்களின் தாக்குதலுக்கு இலக்காகின்றனர். பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள் பரவுவதற்கு
ஈக்களே முதன் காரணமாய் இருக்கின்றன.
பொதுவாக ஈக்கள் அழுகிப்போன காய்கறிகள், மீன் கடைகள், கோழிப்பண்ணை, மாட்டுப்பண்ணை, மலஜல கழிப்பறை, மற்றும் சுகாதாரம் குறைந்த குப்பைத்தொட்டிகள் போன்ற இடங்களில் வசதியாக வாழ்கின்றன.
பெண் ஈ, ஒரு தடவைக்கு 80 முதல் 100 முட்டைகள் வரை இடுமாம்.
ஈக்கள், கொசுக்களைப் போல் நம் இரத்தத்தில் கலக்கக்கூடிய கொடிய நோய்க்கிருமிகளை சுமந்துக்கொண்டு அலைவதில்லை என்றாலும், உணவுப் பொருட்களின் மீது இலட்சக்கணக்கான பாக்டீரியாக்களை இறக்குமதி செய்யும் பணியை செவ்வனே செய்கின்றன.
ஈக்களின் ஆறு கால்களிலும் அதன் உடலிலும் பல்லாயிரக்கணக்கான உரோமங்கள் உள்ளன. இதனுடைய ஒவ்வொரு காலிலும்
வட்டமான, பிசின் போன்ற, ஒரு அமைப்பு உள்ளது. இந்த பிசின், ஒருவித பசை பொருளாகும். கழிவுகளின் மீது, ஈக்கள், உட்காரும்போது கழிவுகளிலுள்ள பாக்டீரியாக்கள் அந்த பிசின் போன்ற அமைப்பில் ஒட்டிக் கொள்கின்றன. ஈ, மீண்டும் மனிதன் மீதோ அல்லது உணவின் மீதோ உட்காரும்போது அந்த பாக்டீரியாக்கள் வெகுஎளிதில் உணவில் கலந்து நம் உடலுக்குள் செல்கின்றன.
இதன் விளைவால் வயிற்றுப்போக்கு, குடற்புழு, உடல் நமைச்சல், தோல் எரிச்சல், வயிற்றுப்புண், டைபாய்டு, தொற்றுக் கிருமிக் காய்ச்சல் என எண்ணிலடங்கா நோய்கள் நம்மை தாக்குகின்றன. 'நாங்கள் கொசுக்களுக்கு சளைத்தவர்கள் அல்ல' என்பதுபோல் ஈக்களும் தன்பங்கிற்கு ஏராளமான நோய்களைப்
பரப்புகின்றன.
ஈக்களைப் பற்றி கி.மு. 400ம் நூற்றாண்டுகளிலிருந்து செய்திகள் உள்ளனவாம்.
தற்போது தமிழகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும், கடற்கரை யோரத்தில் வாழும் மக்களும்தான் ஈக்களால் அதிகமாக
பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட இடங்களில் கோழிப்பண்ணைகள் அதிகம் இருப்பதால், அங்கு ஈக்களின் பெருக்கமும் தாக்கமும் மிக அதிகமாக உள்ளது. மற்றும் கடலோர
மாவட்டங்களிலும் மீன்கள் விற்கப்படும் இடங்களிலும் ஈக்களின் உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது.
இப்படி பல வகைகளில் மக்களைத் தாக்கும் ஈக்களிலிருந்து நம்மை பாதுகாக்க சில நடவடிக்களை மேற்கொள்வது நல்லது:
-- அழுகிய பொருட்களை உடனே அப்புறப்படுத்தி அப்பகுதியை தூய்மையாக வைத்திருந்தால் ஈக்கள்
பெருகாது.
-- அசைவ பொருள் கிடங்குகளின் கழிவுகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு, கிடங்குகளில் தூய்மையை பேணுதல் வேண்டும்.
-- வீடுகளைச் சுற்றியுள்ள குப்பைகளை தினமும் அகற்ற வேண்டும்.
-- உணவுப் பொருட்கள் உட்பட எந்த பொருளையும் திறந்து வைப்பதை முற்றிலும் தவிர்த்தாக வேண்டும்.
-- வீடுகளில் குப்பைகளை சேர்த்துவைக்காமல் அடிக்கடி அப்புறப்படுத்திடவேண்டும்.
-- கோழிப்பண்ணை போன்ற இடங்களில் முழு சுகாதாரத்தைக் கடைப்பிடித்தோமானால் ஈக்களை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தி, அழிக்கலாம்.
-- ஈக்களின் தொந்திரவு அதிகமாக இருந்தால், மஞ்சள் தூளை நீரில் கரைத்து அவைகள் அதிகம் உள்ள இடங்களில் தெளித்தால், ஈக்கள் உள்ளே வருவதை தவிர்ப்பதோடு, தொந்திரவிலிருந்தும் சற்று நிம்மதி பெறலாம்.
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
Re: "ஈ" ...... என்னும் நோய் பரப்பி
அனுமதி வேண்டி
Quote message
From Atchaya To nazimudeen, Today at 03:09
அன்புமிக்க தோழரே!
சேனைத்
தமிழ் உலாவில் உங்களின் ஈ பதிவு கண்டேன். விழிப்புணர்விற்காக,
இக்கட்டுரையினை எனது வலைப்பூவில் இணைக்க அனுமதி வேண்டி தங்களிடம்
கேட்கிறேன் அன்பு உறவே!
மறுமொழி இடவும்.
அன்புடன் அட்சயா.
http://atchaya-krishnalaya.blogspot.com
Dear friend ATCHAYA,
You
can publish any of my postings without any hesitation. And it's a great
opportunity for me to visit your blog, which looks so nice.
சேனை - யிலும் மறுமொழி தந்திருக்கிறேன் ....
வாழ்த்துகளுடன் ...
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
Quote message
From Atchaya To nazimudeen, Today at 03:09
அன்புமிக்க தோழரே!
சேனைத்
தமிழ் உலாவில் உங்களின் ஈ பதிவு கண்டேன். விழிப்புணர்விற்காக,
இக்கட்டுரையினை எனது வலைப்பூவில் இணைக்க அனுமதி வேண்டி தங்களிடம்
கேட்கிறேன் அன்பு உறவே!
மறுமொழி இடவும்.
அன்புடன் அட்சயா.
http://atchaya-krishnalaya.blogspot.com
Dear friend ATCHAYA,
You
can publish any of my postings without any hesitation. And it's a great
opportunity for me to visit your blog, which looks so nice.
சேனை - யிலும் மறுமொழி தந்திருக்கிறேன் ....
வாழ்த்துகளுடன் ...
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
Re: "ஈ" ...... என்னும் நோய் பரப்பி
பதிவு அருமை. பயனுள்ள தகவல்!
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Similar topics
» எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டு, நோய் பரப்பி வருகிறார்கள்
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா கேன்சர் நோயை பரப்பி வருகிறது
» வெள்ளை நோய் என்றழைக்கப்படும் வெட்டை நோய்
» மன நோய் எனும் சமூக நோய்
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா கேன்சர் நோயை பரப்பி வருகிறது
» வெள்ளை நோய் என்றழைக்கப்படும் வெட்டை நோய்
» மன நோய் எனும் சமூக நோய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum