சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Today at 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Today at 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Today at 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Today at 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Yesterday at 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Yesterday at 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை  Khan11

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

2 posters

Go down

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை  Empty தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

Post by நேசமுடன் ஹாசிம் Fri 28 Oct 2011 - 6:52

"தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும்' என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகபட்சமாக, புதுச்சேரியில் 19 செ.மீ., மழை கொட்டியது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, கடந்த 24ம் தேதி துவங்கியது. சில நாட்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை விடாமல் கொட்டி வருகிறது. அதிகபட்சமாக, புதுச்சேரி விமான நிலையத்தில் 19 செ.மீ., மழை பதிவானது.

2 நாட்களுக்கு கனமழை: பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை நீடிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் மேலும் கூறும்போது, "மன்னார் வளைகுடாவுக்கும், ஆந்திரா கடற்கரைக்கும் இடையே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழையும், உள்மாவட்டங்களில் பல இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை நகரில் மழை விட்டுவிட்டு பெய்யலாம்' என்றார்.

சம்பா நடவு பணி தீவிரம்: திருச்சி மாவட்டம் முழுவதும், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், சம்பா நடவுப் பணி தீவிரமடைந்துள்ளது. திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முடிந்து, சம்பா பயிர் நடவுப் பணி துவங்கியுள்ளது. இந்த மழை, சம்பா நடவுக்கு உகந்ததாக உள்ளது என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

திருச்சியில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு வருமாறு: திருச்சி மாவட்டம் முழுவதும், 1.65 எக்டேர் விவசாய நிலம் உள்ளது. இதில், 70 ஆயிரம் எக்டேர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குறுவை பருவம் முடிந்து தற்போது சம்பா பருவம் துவங்கியுள்ளது. சம்பா பயிர், 60 ஆயிரம் எக்டேர், குறுவை, 6,000 எக்டேர், நவரை, 4,000 எக்டேர் பயிரிடப்பட்டுள்ளது. மழை காரணமாக சம்பா நடவுப் பணி தீவிரமடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

உப்பு உற்பத்தி நிறுத்தம்: வேதாரண்யத்தில் தொடர் மழை காரணமாக உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், உப்பு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேதாரண்யம் தாலுகாவில் உள்ள கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த, 10 ஆயிரம் மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மழை காரணமாக, உப்பளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், உப்பு விலை உயரும் என, உப்பு வியாபாரிகள் தெரிவித்தனர்.

நெல் அறுவடை பணி பாதிப்பு: தஞ்சாவூர் அருகே ரெட்டிப்பாளையம் கிராமத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வயல்களில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், அறுவடை செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. அறுவடை இயந்திரங்கள், பாதி அறுவடை செய்யப்பட்ட வயல்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அறுவடை செய்யப்பட்ட 25 குவிண்டால் அளவுள்ள நெற்கதிர்கள், ரெட்டிப்பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன், கடந்த 15 நாட்களாக விற்பனை செய்ய முடியாமல் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போது பெய்து வரும் மழையால் நெல் அதிக ஈரப்பதத்துடன் உள்ளது. அதனால், கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு: தேனி மாவட்டம் கட மலை - மயிலை ஒன்றிய பகுதி களிலும், வருஷநாடு மலைப்பகுதி யிலும் பெய்து வரும் தொடர் கன மழையால், வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

சுற்றுலா தலங்களில் "வெறிச்': நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த மூன்று நாட் களாக கன மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி, முக்கூர்த்தி, பார்சன்ஸ் வேலி உட்பட அனைத்து இடங் களிலும் உள்ள நீர்தேக்கங்கள் நிரம்பி வருகின்றன. காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடுங்குளிர் நிலவுகிறது. குறைந்த பட்ச வெப்பநிலை 7.5 செல்சியசாகவும், அதிகபட்ச வெப்பநிலை 17 செல்சியசாகவும் பதிவாகி உள்ளது. ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா ஆகிய பகுதிகளில் நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் வெகுவாக குறைந்து காணப் பட்டது. படகு சவாரிக்கு ஆளின்றி, ஊட்டி ஏரியில் படகுகள் எல்லாம் "போட் ஜெட்டிகளில்' நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த காலநிலை தொடரும் பட் சத்தில் உள்ளுர் மக்கள், குறிப்பாக, பள்ளி மாணவ, மாணவியர் கடும் அவதிப்பட வேண்டிய சூழல் உள்ளது.

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி யில் பெய்து வரும் பலத்த மழை யால், குற்றாலம் மெயின் அருவியில் செம்மண் நிறத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பயணிகள் குளிக்க அனுமதிக்கப் படவில்லை.போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலையில், வெள்ளநீர் குற்றாலநாதர் கோவில் வாசல் வழியாக கடைவீதியில் ஓடியது.

ஸ்ரீவி., பேயனாற்றில் திடீர் வெள்ளம்: ஸ்ரீவில்லிபுத்தூர் மலை பகுதியில் கடும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பேயனாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், குளிக்கச் சென்றவர்கள் கரைக்கு வர முடியாமல் தவித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகதோப்பு பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. மலையடிவாரத்தில் பேயனாறு, மீன்வெட்டி பாறை போன்ற நீர்வீழ்ச்சிகள் உள்ளன. விடுமுறை காலங்களிலும், பேச்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும், ஆற்றிலும், நீர்வீழ்ச்சிகளிலும் குளிப்பது வழக்கம். இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. செண்பகதோப்பு பேயனாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது. இந்நிலையில், நேற்று செண்பகதோப்புக்கு சுற்றுலா வந்தவர்கள், பேயனாற்றில் குளிக்க சென்றுள்ளனர். ஆனால், குளிக்கும் போது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்து செல்லப்பட்டு, மறுகரையில் தள்ளப்பட்டனர். இதனால் அவர்கள் கரை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. பின், அருகிலிருந்தவர்கள் கயிறு கட்டி இழுத்து வந்து கரை சேர்த்தனர். இதனால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டது.


தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை  Empty Re: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

Post by முனாஸ் சுலைமான் Fri 28 Oct 2011 - 7:05

விடுமுறை காலங்களிலும், பேச்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும், ஆற்றிலும், நீர்வீழ்ச்சிகளிலும் குளிப்பது வழக்கம். இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. செண்பகதோப்பு பேயனாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது. இந்நிலையில், நேற்று செண்பகதோப்புக்கு சுற்றுலா வந்தவர்கள், பேயனாற்றில் குளிக்க சென்றுள்ளனர். ஆனால், குளிக்கும் போது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்து செல்லப்பட்டு, மறுகரையில் தள்ளப்பட்டனர்.

எனவே கவனம் பக்தர்களும் மக்களும் மற்றவர்களும். ##*
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தென்மாவட்டங்களில் அடுத்த 2 நாள் கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
» 22 ஆண்டுகளில் இல்லாத கடுங்குளிர்: மேலும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
» கொளுத்தும் வெயில்… எத்தனை நாளைக்கு நீடிக்கும்? வானிலை ஆய்வு மையம் தகவல்
» வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum