சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோதனை - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 13:27

» கதையை பத்து வரியில சொல்லிடறேன்...!!
by rammalar Tue 29 Sep 2020 - 17:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Tue 29 Sep 2020 - 16:49

» ரசித்தவை...
by rammalar Sun 27 Sep 2020 - 15:11

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by rammalar Thu 24 Sep 2020 - 19:18

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்...
by rammalar Thu 24 Sep 2020 - 19:13

» நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்!
by rammalar Thu 24 Sep 2020 - 18:59

» முகமூடி மாட்டினால்தான் மரியாதை...!
by rammalar Wed 23 Sep 2020 - 14:54

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by rammalar Wed 23 Sep 2020 - 14:03

» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Sun 20 Sep 2020 - 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது  Khan11

மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது

Go down

Sticky மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 29 Nov 2011 - 11:26

"நேட்டோ படைகள் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதற்காக, மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. இவ்விவகாரம் மேலும் பல மோசமான விளைவுகளை உருவாக்கும்' என பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், பாக்., தரப்பில் இருந்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டது என வெளியான தகவல்களையும் அது மறுத்துள்ளது.கடந்த 26ம் தேதி அதிகாலை, பாகிஸ்தானின் மொஹ்மந்த் பழங்குடியினப் பகுதியில், ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து மூன்று கி.மீ., தொலைவில் உள்ள சலாலா எல்லைச் சாவடி மீது, நேட்டோ-ஆப்கன் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில், 24 பாக்., வீரர்கள் பலியாயினர்.இச்சம்பவம், ஏற்கனவே சிக்கலில் உள்ள அமெரிக்கா - பாக்., உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நேட்டோ மன்னிப்பு:நேட்டோ பொதுச் செயலர் ஆண்டர்ஸ் போக் ராஸ்முஸ்ஸன், பாக்., பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு எழுதிய கடிதத்தில், "எவ்வித உள்நோக்கமும் இன்றி எதிர்பாராத விதமாக இச்சம்பவம் நடந்து விட்டது' என வருத்தம் தெரிவித்திருந்தார்.
ராணுவம் காட்டம்:ஆனால், நேட்டோவின் மன்னிப்பு மட்டும் போதாது என பாக்., ராணுவம் காட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாக்., ராணுவ செய்தித் தொடர்பாளர் அதர் அப்பாஸ் கூறியதாவது:
இச்சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. இதன் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும். இதுபோன்ற தாக்குதல்கள் ஏற்கனவே பல முறை நடந்து விட்டன.
கடந்த மூன்றாண்டுகளில், நேட்டோ நடத்திய தாக்குதல்களில், 72 பாக்., வீரர்கள் பலியாகியுள்ளனர். 250 பேர் காயம் அடைந்துள்ளனர். நேட்டோ நடத்திய தாக்குதல் மீதான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பாக்., அரசு முடிவெடுக்கும்.இவ்வாறு அப்பாஸ் தெரிவித்தார்.

யார் முதலில் தாக்கியது?அதேநேரம், "வால் ஸ்ட்ரீட் ஜர்னல், கார்டியன்' போன்ற பத்திரிகைகளில், முதன் முதலில் பாக்., தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அது தலிபான்களாக இருக்கலாம் எனக் கருதித் தான் நேட்டோ பதிலடி கொடுத்ததாகவும், தாக்குதல் குறித்து பாக்., ராணுவத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆப்கன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏன் 2 மணி நேரத் தாக்குதல்?இதுகுறித்து கேள்விகள் கேட்கப்பட்ட போது அப்பாஸ் கூறியதாவது:"இது ஒரு சாக்கு போக்கு. அப்படி பாக்., தரப்பில் இருந்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டால் அங்கு எத்தனை பேர் பலியாயினர், சேதம் என்ன என்பது பற்றி விவரங்களை அவர்களால் தரமுடியுமா? தாக்குதல் நடந்த நேரத்தில், சலாலா சாவடியில், வீரர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.நேட்டோ தாக்குதல் துவங்கிய போதே, அதை நிறுத்தும்படி அவர்களுக்கு பாக்., ராணுவத் தரப்பில் இருந்து தகவல் அளிக்கப்பட்டது.
அதையும் மீறித் தான் இரண்டு மணி நேரமாக அத்தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் எதற்காக ராணுவ ஹெலிகாப்டர்களும் ஜெட் ரக போர் விமானங்களும் பயன்படுத்தப்பட்டன?இவ்வாறு அப்பாஸ் கேள்வி எழுப்பினார்.இதற்கிடையில், நேட்டோ தாக்குதல் குறித்து தனித்த விசாரணை நடத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மக்கள் கொந்தளிப்பு:நேட்டோ தாக்குதலை அடுத்து, பாக்.,ல் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு எழுந்துள்ளது. இனி எக்காரணம் கொண்டும், நேட்டோவுக்கு எரிபொருள் வினியோகிக்கப் போவதில்லை என பாக்., எரிபொருள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.பாக்., முழுவதும் நேற்று வழக்கறிஞர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

சீனா அதிர்ச்சி:சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ வெளியிட்டுள்ள அறிக்கையில், "இச்சம்பவத்தால் சீனா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. பெரும் கவலை அடைந்துள்ளது. பாகிஸ்தானின் சுயேச்சையான, இறையாண்மை மிக்க எல்லைகள் மதிக்கப்பட வேண்டும். நடந்த சம்பவம் குறித்து நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.


மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது

Post by நண்பன் on Tue 29 Nov 2011 - 12:24

பாக்கிஸ்தான் இப்போது சுடுகாடாக மாறி வருகிறது யாரும் கண்டுகிறார்களே இல்லை அமெரிக்காவிற்கு சரியான பதிலடி பாக்கிஸ்தான் கொடுக்குமாயிருந்தால் இன்னும் நல்லா இருக்கும் செய் அல்லது செத்து மடி மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது  224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது

Post by Atchaya on Tue 29 Nov 2011 - 12:46

பாக்கிஸ்தான் இப்போது சுடுகாடாக மாறி வருகிறது யாரும் கண்டுகிறார்களே இல்லை அமெரிக்காவிற்கு சரியான பதிலடி பாக்கிஸ்தான் கொடுக்குமாயிருந்தால் இன்னும் நல்லா இருக்கும் செய் அல்லது செத்து மடி

நன்றாக சொன்னீங்க!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது

Post by அப்புகுட்டி on Tue 29 Nov 2011 - 14:01

Atchaya wrote:பாக்கிஸ்தான் இப்போது சுடுகாடாக மாறி வருகிறது யாரும் கண்டுகிறார்களே இல்லை அமெரிக்காவிற்கு சரியான பதிலடி பாக்கிஸ்தான் கொடுக்குமாயிருந்தால் இன்னும் நல்லா இருக்கும் செய் அல்லது செத்து மடி

நன்றாக சொன்னீங்க!
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum