Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என் இனத்தார் விட்டு விலகும் விளையாட்டும் கலைகளும் -கவிதை
+3
அப்புகுட்டி
முனாஸ் சுலைமான்
யாதுமானவள்
7 posters
Page 1 of 1
என் இனத்தார் விட்டு விலகும் விளையாட்டும் கலைகளும் -கவிதை
என் சேனைத் தமிழ் உறவுகள் அனைவருக்கும். வணக்கம்... அனைவரின் நலன் அறியும் ஆவல் மிக்கவளாய் உள்ளேன்..
குவைத்தில் 24 -11 -2011 அன்று "என்... " என்ற தலைப்பில் நடந்த கவியரங்கில் நான் படித்த கவிதை...
“என் இனத்தார் விட்டு விலகும் விளையாட்டும் கலைகளும்
பாரெங்கும் பரவியுள்ள பைந்தமிழாள் உந்தனுக்கும்
ஈரைந்து மாதங்கள் எனைச்சுமந்த தாய்மைக்கும்
சீராட்டிச் சிற்றறிவைச் செப்பனிட்ட தந்தைக்கும்
நீராட்டிப் பாதமலர் நனைக்கின்றேன் நன்றியுடன்!
மங்கிடாத தமிழாலே மண்ணிசைத் திருவிழாவை
தங்கும்படி மனத்தினிலே தொகுத்துரைக்கு மெனையழைத்து
இங்கிருக்கும் கவிஞரோடு என்கவிதை வேண்டுமெனும்
அங்கிருந்து வந்தகவி கபிலனுக்கும் என்நன்றி
நன்றிமலர் துவியபின் என்தமிழின் வாசனையை
இன்றிந்த அரங்கினிலே நிறைத்திடவும் முயலுகின்றேன்
“என்”என்ற தலைப்பினிலே எனைப்பாட அழைத்தவுடன்
எண்ணத்தில் தோன்றியதோ என்தமிழர் தேகபலம்.
தொலைக்காட்சிப் பெட்டியிலும் தொலைபேசி அரட்டையிலும்
அலைகடலாய் கணினிவந்து ஆரவாரம் செய்வதிலும்
இலையென்று ஆனதுநம் கலைகளோடு விளையாட்டும்
குலைகிறது அதனாலே கேள்வியின்றி தேகபலம்! ……(1)
ஓப்பற்ற வீரராக உயர்தமிழர் வாழ்ந்ததாக
முப்பாட்டன் காலத்து வரலாறும் உரைக்கிறது
திறம்செறிந்த ஆண்போலே பெண்ணிருந்த தாலன்று
முறம்கொண்டு புலியடித்து விரட்டியதாய் கதையுண்டு …..(2)
இத்தனை பலம்கொண்ட எம்முன்னோர் வழிவந்தோர்
சொத்தையாகிப் போனதின்று ஏனென்று ஆராய்ந்தால்
மொத்தமாக விட்டுவிட்ட விளையாட்டும் கலைகளுமே
அத்தனைக்கும் காரணமாய் ஆனதுதான் வேதனையே! …..(3)
கால்கொலுசு சத்தமிட களங்கமற்ற சிரிப்புடனே
பால்மறந்த பிஞ்சுமுதல் பள்ளிசெல்லும் சிறுமிவரை
மறைந்தோடி யாடியதும் மணியூஞ்சல் ஆட்டியதும்
மறந்திடத்தான் இயலுமோ மற்றேதும் ஈடாமோ? …..(4)
இடைசெறுகிய தாவணியும் இரட்டைசடை பின்னலோடும்
இடைமெலிந்த நங்கையர்கள் தோட்டத்திலே ஒன்றுகூடி
கண்கட்டி ஆடியதும் கயிறுதாண்டி குதித்ததையும்
நொண்டியாடி நின்றதையும்; நினைக்கையிலே இனிக்கிறது! …..(5)
பந்தடித்து விளையாடிய பருவமங்கை போலன்றி
வம்புபேசும் நேரந்தனில் ஒன்றாகச் சேர்ந்திருந்து
வெற்றிலையை மென்றபடி உட்கார்ந்த இடத்தினிலே
ஒற்றுமையாய் மூத்தபெண்டிர் விளையாடினர் பல்லாங்குழி! …..(6)
சிறுவரெல்லாம் சேர்ந்துஇரு கூட்டமாகப் பிரிந்துநின்று
சிறுகுச்சியொன் றுபோடஅதைச் சடுதியிலே அடித்துவிட்டு
சிறுகுழியில் வீழாமல் வேகமாகத் தடுக்குமந்த
சிறப்பான புல்லியாட்டம் சிந்தைக்குள் சிலிர்க்கிறது! …..(7)
சின்னஞ்சிறு பாலகர்கள் வரிசையாக குனிந்திருக்க
தன்கையை ஊன்றிவைத்து மற்றவர்கள் தாண்டிவர
சின்னதான கால்படாது சிரத்தையோடு ஆடுமந்த
பொன்குதிரை தாண்டுமாட்டம் இன்றெங்கே இருக்கிறது? …..(8)
தொட்டுவிட முயலும்போது காலிழுத்து விட்டபின்பு
சுற்றிவளைத் தெல்லோரும் தூக்கியெடுத் தப்படியே
துள்ளுகின்ற எதிராளைத் தொடவிடாது கோட்டினையே
எள்ளிவிளை யாடுமந்த சடுகுடுவும் போனதெங்கே? …..(9)
மஞ்சளோடு கருமையை உடல்முழுதும் பூசிக்கொண்டு
அஞ்சியோடும் குழந்தைகளைச் சிலநேரம் அழவைக்கும்
நெஞ்சுவிம்மும் சீற்றத்தோடு ஆடும்புலி யாட்டமட்டும்
எஞ்சியள்ள திப்போதும் எங்கோசில இடந்தன்னில்! …..(10)
தமிழர்களின் கலைகளெல்லாம் தானமாகத் தந்துவிட்டு
இமியளவும் கவலையின்றி நாமிருக்கும் காரணத்தால்
களரியோடு கதகளியும் வர்மக்கலை நாட்டியமும்
மலையாளக் கலையாகி மர்மத்தோடு சிரிக்கிறது! …..(11)
இதுபோன்ற விளையாட்டு ஏராளம் இன்னுமுண்டு
இதையெல்லாம் விட்டுவிட்டு கணினியிலே கால்பந்தும்
முகநூலில் கட்டிடமும் கட்டிவிளை யாடுவதால்
தெருவெல்லாம் சிறுவரின்றி வெறிச்சோடி இருக்கிறது. …..(12)
வேறினத்தோர் கலைகள்மேல் வெறிகொண்டு ஏற்கின்றோம்
வேரூன்றிய நம்கலையை வெட்கமென விடுகின்றோம்
சீர்;ம்pக்க குலத்துதித்த சிந்துவெளிக் கலைகளெல்லாம்
சீர்குலைந்து போவதுதான் சிறிதேனும் நியாயமா? ….(13)
கோலெடுத்துச் சுழற்றுகின்ற சிலம்பாட்டம் சுருளியோடு
வாளெடுத்துச் சுழற்றுகின்ற வாள்வீச்சும் மறந்துவிட
பாறையினைத் தூக்கிதனது வீரத்தை நிலைநாட்டிய
தேரிழுத்த சீலர்குலம் சீக்காளி ஆனதின்று! …(14)
சுற்றிவந்து எத்தனைதான் நடைப்பயிற்சி செய்தாலும்
சற்றுமந்த சர்க்கரையும் குறையாமல் தவிக்கின்றான்
மற்றுமந்த எரிச்சலிலே குருதிகொஞ்சம் கொதித்தபின்தான்
பற்றுவந்து விடுகிறது கேழ்வரகு கம்புமீது!… (15)
விருதுக்கு மட்டுந்தான் விளையாட்டென் றாகிவிட
விரும்பியவர் மட்டும்சில விளையாட்டைப பயில்கின்றார்;
குறிப்பிட்ட விளையாட்டை மட்டுமவர் ஏற்றதால் - நான்
குறிப்பிட்ட ஆட்டமெல்லாம் நியாபகங்கள் ஆனது!
விரலசைவில் உலகம்தான் மறுக்கவில்லை ஏற்கின்றேன்
விரல்மட்டும் அசைந்துகொண்டு உடலில்பல மில்லையென்றால்
வெறுதாவாய்ப் போய்விடும்நம் விஞ்ஞானமும் வளர்ச்சியும்
வெறும்வார்த்தை யில்லையிது விளையாட்டை ஏற்றுவிடு…….(16)
விலையில்லாக் கலையாலே உரம்பாய்ச்சிய உடலாக
பலமிக்க சந்ததியைப் பாருக்கு நாம்கொடுப்போம்
அறிவோடு ஆற்றலும் அவனியிலே மிக்கவர்கள்
தரமானத மிழர்கள்தான் எனவியக்க வாழ்ந்திடுவோம்! (17)
அன்புடன்
யாதுமானவள் (லதாரணி )

Last edited by யாதுமானவள் on Wed 30 Nov 2011 - 21:09; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் இனத்தார் விட்டு விலகும் விளையாட்டும் கலைகளும் -கவிதை
கால்கொலுசு சத்தமிட களங்கமற்ற சிரிப்புடனே
பால்மறந்த பிஞ்சுமுதல் பள்ளிசெல்லும் சிறுமிவரை
மறைந்தோடி யாடியதும் மணியூஞ்சல் ஆட்டியதும்
மறந்திடத்தான் இயலுமோ மற்றேதும் ஈடாமோ? …..(4)
எந்த பந்தி என்று சொல்ல முடியாது எல்லா வரிகளும் ஒவ்வொரு பந்திகளும் ஒவ்வொரு கருத்துக்களுடன் சிறப்பான கவிதை
ஆழமான அர்த்தமாக உள்ளது வாழ்த்துக்கள் இத்தனை நாளாக எங்கிருந்தீர் உங்களை சேனையின் பக்கம் காணவில்லை எங்களுடன் கோபமா அல்லையேல் இச்சேனையுடன் ஆதங்கமா இது உங்களின் சேனையாச்சே என்றும் சுகமுடன் இருக்க படைத்தவன் போதுமானவன் என்றும் சேனையுடன் இணைந்திருங்கள். அன்புடன் முனாஸ், :!@!: :!@!:
Re: என் இனத்தார் விட்டு விலகும் விளையாட்டும் கலைகளும் -கவிதை
நன்றி முனாஸ்.சேனை மீது எனக்கெப்படி கோபம் வரும்? இங்கு மிகவும் பிசி யாக உள்ளேன். சிறிது நாட்களுக்குப் பின் வருகிறேன். வேலைப் பளு அதிகம்.
தங்கள் அன்பிற்கு நன்றி... நலம் காக்க/ மீண்டும் சந்திப்போம்
தங்கள் அன்பிற்கு நன்றி... நலம் காக்க/ மீண்டும் சந்திப்போம்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் இனத்தார் விட்டு விலகும் விளையாட்டும் கலைகளும் -கவிதை
என் இனத்தார் விட்டு விலகும் விளையாட்டும் கலைகளும்
என்ற தலைப்பில் மிகவும் அருமையாக பசுமையான நினைவுகளை இங்கு கவிதை வரிகளாக்கி சிறப்பாக தந்திருக்கு புரட்சிக்கவி யாதுமானவளுக்கு நன்றிகளுடன் பாராட்டுக்கள்.
நீண்ட நாட்களின் பின் இப்படியொரு பிரமாண்டப்படைப்புடன் வந்திருக்கும் உறவே வாருங்கள் தன் இனத்தார் ஆரோக்கியம் கருதிய நல்லெண்ணத்தில் நொடிப்பொழுதில் எழுந்த பொது நல வரிகள் மிகவும் அருமையாக உள்ளது அருமை அருமை அருமை
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வரிகள் அனைத்தும் எங்களுக்கு
பாடாங்களாக நாங்களும் எடுத்து எங்கள் வாழ்க்கையில்
இப்போதுள்ள கணினியுடனான வாழ்வை மாற்றி உடல் நலம் காத்து விளையாட்டில் ஆர்வம் காட்டிட முயல்வோம்.
என்றும் மாறா அன்புடன்
அப்புகுட்டி.

அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: என் இனத்தார் விட்டு விலகும் விளையாட்டும் கலைகளும் -கவிதை
வரிகள் ஒவ்வொன்று ஒன்றுடன் ஒன்று ஒற்றுமையுடன் இணைந்து முக்கியத்துவம் வகித்து சிந்தனைக்கு சிறப்பாய் வடிவமைந்து உங்களுக்கு வார்த்தைகளாய் வழைந்து கொடுத்த விதம் அருமை முத்தமிழில் முதல் கண் எடுத்த முதல் பெண்சிறுத்தை யாது அல்லவா உங்களை வாழ்த்த நான் தமிழ் பித்தனாக மாறி செந்தமிழில் வரியெழுத நினைக்கிறேன் முடியல அக்கா என்னால் முடிந்தவரை எழுதினேன் வாழ்த்துகள் அக்கா தமிழ் பற்றும் கவி பயணமும் சிறப்பாய் செல்ல செழித்த மனதுடன் வாழ்த்துகிறேன்.
நட்புடன் சம்ஸ்
நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் இனத்தார் விட்டு விலகும் விளையாட்டும் கலைகளும் -கவிதை
அப்புகுட்டி wrote:என் இனத்தார் விட்டு விலகும் விளையாட்டும் கலைகளும்
என்ற தலைப்பில் மிகவும் அருமையாக பசுமையான நினைவுகளை இங்கு கவிதை வரிகளாக்கி சிறப்பாக தந்திருக்கு புரட்சிக்கவி யாதுமானவளுக்கு நன்றிகளுடன் பாராட்டுக்கள்.
நீண்ட நாட்களின் பின் இப்படியொரு பிரமாண்டப்படைப்புடன் வந்திருக்கும் உறவே வாருங்கள் தன் இனத்தார் ஆரோக்கியம் கருதிய நல்லெண்ணத்தில் நொடிப்பொழுதில் எழுந்த பொது நல வரிகள் மிகவும் அருமையாக உள்ளது அருமை அருமை அருமை
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வரிகள் அனைத்தும் எங்களுக்கு
பாடாங்களாக நாங்களும் எடுத்து எங்கள் வாழ்க்கையில்
இப்போதுள்ள கணினியுடனான வாழ்வை மாற்றி உடல் நலம் காத்து விளையாட்டில் ஆர்வம் காட்டிட முயல்வோம்.
என்றும் மாறா அன்புடன்
அப்புகுட்டி.
நன்றி அப்புக்குட்டி ! தினமும் உடற்பயிற்சியாவது செய்யுங்க....! :)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் இனத்தார் விட்டு விலகும் விளையாட்டும் கலைகளும் -கவிதை
*சம்ஸ் wrote:வரிகள் ஒவ்வொன்று ஒன்றுடன் ஒன்று ஒற்றுமையுடன் இணைந்து முக்கியத்துவம் வகித்து சிந்தனைக்கு சிறப்பாய் வடிவமைந்து உங்களுக்கு வார்த்தைகளாய் வழைந்து கொடுத்த விதம் அருமை முத்தமிழில் முதல் கண் எடுத்த முதல் பெண்சிறுத்தை யாது அல்லவா உங்களை வாழ்த்த நான் தமிழ் பித்தனாக மாறி செந்தமிழில் வரியெழுத நினைக்கிறேன் முடியல அக்கா என்னால் முடிந்தவரை எழுதினேன் வாழ்த்துகள் அக்கா தமிழ் பற்றும் கவி பயணமும் சிறப்பாய் செல்ல செழித்த மனதுடன் வாழ்த்துகிறேன்.
நட்புடன் சம்ஸ்
நன்றி நன்றி சம்ஸ்.... உணர்ச்சிமிகு வாழ்த்துக்களை உணர்ந்து ஏற்கிறேன். ! சேனைத் தமிழுலாவை ஒரு சிறந்த இலக்கிய படைப்பாளிகளின் சங்கமமாக அக்கவேண்டுமேன்பதே எனது ஆவலாக உள்ளது.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் இனத்தார் விட்டு விலகும் விளையாட்டும் கலைகளும் -கவிதை
உண்மையினை உணர்ந்து உணர்த்திய கவிதை மிகப்பிரமாதம் சமுகத்தில் எதை நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த நினைக்கிறோமோ அதுவே கருவாக எண்ணக்குவியலாக சொல்லம்பாக மக்களின் மனங்களை நோக்கி கவிதைகளாக வடிக்கிறோம் வெல்கிறோம் இங்கும் காலாகாலம் போற்றப்பட்டு மருகிப்போன பண்டய விளையாட்டுக்கள் இன்று எம் சிறார்களுக்கு தெரியவும் வாய்ப்பில்லாமல் ஆனது காரணம் தொழில் நுட்ப முன்னேற்றம் கணனி மயமாக்கல்
அதை மிகத்தெளிவா உணர்த்தியிருப்பது சிறப்பு பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்
அதை மிகத்தெளிவா உணர்த்தியிருப்பது சிறப்பு பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்
Re: என் இனத்தார் விட்டு விலகும் விளையாட்டும் கலைகளும் -கவிதை
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையினை உணர்ந்து உணர்த்திய கவிதை மிகப்பிரமாதம் சமுகத்தில் எதை நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த நினைக்கிறோமோ அதுவே கருவாக எண்ணக்குவியலாக சொல்லம்பாக மக்களின் மனங்களை நோக்கி கவிதைகளாக வடிக்கிறோம் வெல்கிறோம் இங்கும் காலாகாலம் போற்றப்பட்டு மருகிப்போன பண்டய விளையாட்டுக்கள் இன்று எம் சிறார்களுக்கு தெரியவும் வாய்ப்பில்லாமல் ஆனது காரணம் தொழில் நுட்ப முன்னேற்றம் கணனி மயமாக்கல்
அதை மிகத்தெளிவா உணர்த்தியிருப்பது சிறப்பு பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்
மிக நன்றிகள் ஹாசிம்.! எத்தனையோ அவலங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.... ஒரு சிறு துளியை என் சிந்தையிலிருந்து இறக்கிவைக்க தமிழன்னை கொடுத்த வரமாக நினைத்து எட்டினில் பதித்துவிட்டுச் செல்கிறேன்
தங்கள வாழ்த்துக்களுக்கு நன்றி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் இனத்தார் விட்டு விலகும் விளையாட்டும் கலைகளும் -கவிதை
பிறப்பு முதல் இறுதிவரை வகை வகையா இனம் பிரித்து வக்கனையாய் கவி வடித்து வரி வரியாய் கருத்தளித்து கவியிலேயே வாழ்ந்து காட்டிய கருப்பு தங்கம் என் உள்ளம் கவர் கள்ளி சகோதரி யாதுவுக்கு இந்த அன்பு சகோதரியின் பாராட்டுக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: என் இனத்தார் விட்டு விலகும் விளையாட்டும் கலைகளும் -கவிதை
jasmin wrote:பிறப்பு முதல் இறுதிவரை வகை வகையா இனம் பிரித்து வக்கனையாய் கவி வடித்து வரி வரியாய் கருத்தளித்து கவியிலேயே வாழ்ந்து காட்டிய கருப்பு தங்கம் என் உள்ளம் கவர் கள்ளி சகோதரி யாதுவுக்கு இந்த அன்பு சகோதரியின் பாராட்டுக்கள்
மிக்க நன்றி ஜாஸ்மின்/
அது என்ன புதுப் பட்டம்? கறுப்புத் தங்கம்? (விஜயகாந்த் தானே கறுப்புத்தங்கம்? ....அம்மாடி... நான் அவ்ளோ கருப்பில்லம்மா.... அப்படியே சொன்னாலும் கொஞ்சம் கௌரவமா.. வைரம்னே சொல்லி இருக்கலாமே.. இருந்தாலும் ரசித்தேன்... நன்றி மிக்கவளாய்....அன்புடன்...யாது .)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் இனத்தார் விட்டு விலகும் விளையாட்டும் கலைகளும் -கவிதை
இது என்ன இது புது கதையா இருக்கே கருப்பு தங்கம் என்பது விஜயகாந்த் உடலோடு ஒட்டிய பட்டமா என்ன? இப்ப வெலவாசில உச்சில இருக்குறது தங்கம்தானே என்று சொன்னேன் கலரை வைத்து அல்ல,,,இருப்பினும் உங்கள் விண்ணப்பத்தை ஏற்று ‘ஜெக ஜெக வென ஜொலிக்கும் சுத்த வைரம் எங்கள் சகோதரி யாதுவுக்கு பாராட்டுக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: என் இனத்தார் விட்டு விலகும் விளையாட்டும் கலைகளும் -கவிதை
jasmin wrote:இது என்ன இது புது கதையா இருக்கே கருப்பு தங்கம் என்பது விஜயகாந்த் உடலோடு ஒட்டிய பட்டமா என்ன? இப்ப வெலவாசில உச்சில இருக்குறது தங்கம்தானே என்று சொன்னேன் கலரை வைத்து அல்ல,,,இருப்பினும் உங்கள் விண்ணப்பத்தை ஏற்று ‘ஜெக ஜெக வென ஜொலிக்கும் சுத்த வைரம் எங்கள் சகோதரி யாதுவுக்கு பாராட்டுக்கள்
சிரித்து ரசித்தேன். ரொம்பதான் நக்கல் உங்களுக்கு.... (அது சரி இப்படித்தான் எல்லோரும் பட்டம் கேட்டு வாங்கரன்களோ?)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் இனத்தார் விட்டு விலகும் விளையாட்டும் கலைகளும் -கவிதை
அப்படி சொல்ல இயலாது சகோதரி ,முன்னால் முதல்வர் எம் ஜி யார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்த போது அந்த அறிவிப்பு என் காதுலயே விழவில்லை என்றார் ஆனால் பட்டததை வாங்க்கிக்கொண்டார்
கலைஞர் விழாக்களில் முன் வரிசையில் அமர்ந்து இருக்கும்போது அவரை புகழ்ந்து பேசும் பேச்சாலர்கள் அவரது பட்டங்களை சொல்லும்போது புன்ன்கைப்பார்
இப்படி வகைவகையான மனிதர்கள் வாழ்வில் உண்டு இதில் எங்கள் யாது என்ன வகை என்று தெரியவில்லையே .
ஓகோ புன்னகை மன்னியோ ?
கலைஞர் விழாக்களில் முன் வரிசையில் அமர்ந்து இருக்கும்போது அவரை புகழ்ந்து பேசும் பேச்சாலர்கள் அவரது பட்டங்களை சொல்லும்போது புன்ன்கைப்பார்
இப்படி வகைவகையான மனிதர்கள் வாழ்வில் உண்டு இதில் எங்கள் யாது என்ன வகை என்று தெரியவில்லையே .
ஓகோ புன்னகை மன்னியோ ?
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: என் இனத்தார் விட்டு விலகும் விளையாட்டும் கலைகளும் -கவிதை
அப்புகுட்டி wrote:என் இனத்தார் விட்டு விலகும் விளையாட்டும் கலைகளும்
என்ற தலைப்பில் மிகவும் அருமையாக பசுமையான நினைவுகளை இங்கு கவிதை வரிகளாக்கி சிறப்பாக தந்திருக்கு புரட்சிக்கவி யாதுமானவளுக்கு நன்றிகளுடன் பாராட்டுக்கள்.
நீண்ட நாட்களின் பின் இப்படியொரு பிரமாண்டப்படைப்புடன் வந்திருக்கும் உறவே வாருங்கள் தன் இனத்தார் ஆரோக்கியம் கருதிய நல்லெண்ணத்தில் நொடிப்பொழுதில் எழுந்த பொது நல வரிகள் மிகவும் அருமையாக உள்ளது அருமை அருமை அருமை
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வரிகள் அனைத்தும் எங்களுக்கு
பாடாங்களாக நாங்களும் எடுத்து எங்கள் வாழ்க்கையில்
இப்போதுள்ள கணினியுடனான வாழ்வை மாற்றி உடல் நலம் காத்து விளையாட்டில் ஆர்வம் காட்டிட முயல்வோம்.
என்றும் மாறா அன்புடன்
அப்புகுட்டி.
மிகவும் சரியாகச்சொன்னீர்கள் சேனைத் தமிழ் உலாவில் என்றும் நமக்கு விளையாட்டுத்தானே அதையும் மேடம் சுட்டிக்காட்டி உள்ளார்கள் மிகவும் அருமையான கருத்துக்கள் நிறைந்த கவிதை வாழ்த்துக்கள் மேடம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் இனத்தார் விட்டு விலகும் விளையாட்டும் கலைகளும் -கவிதை
மிக்க நன்றி நண்பன்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» பில்லா பட டைரக்டரை விட்டு விலகும் அஜித்
» குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!
» புதியம்புத்தூரில் ஓட்டுபோட பணம் கொடுத்த அதிமுகவினரை விட்டு விட்டு வாங்கியவர் கைது
» வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்!
» கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum