Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க தி. மு. க இன்று உண்ணா விரதம்
Page 1 of 1

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு தி.மு. க சார்பில் இன்று உண்ணாவிரதம் 15ந் திகதி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று கருணாநிதி தலைமையில் நடைபெற்ற தி.மு. க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கூடியது. கூட்டத்திற்கு தி.மு. க தலைவர் கருணாநிதி தலைமைதாங்கினார்.
பொருளாளர் மு. க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், துணை பொதுச் செயலாளர்கள் சற்குணபாண்டியன், துரைமுருகன், வி. பி. துரைசாமி, முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, மத்திய மந்திரிகள் ஜெகத்ரட்சகன், பழனி மாணிக்கம், எம். பிக்கள் டி.ஆர். பாலு, டி.கே. இளங்கோவன், நடிகை குஷ்பு, நடிகர் குமரிமுத்து, திண்டுக்கல் லியோனி உள்பட கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீரமானம் வருமாறு:-
முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் நீதிமன்ற நடவடிக்கைக்குப் புறம்பாக திடீரென கேரளாவில் உள்ள ஒரு சிலர் அரசியல் நோக்கில் மேற்கொண்ட செயல்பாடுகளின் காரணமாக கேரள, தமிழக மாநிலங்களில் உள்ள எல்லை மாவட்டங்களில் பரபரப்பும் பதற்றமுமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இரு மாநிலங்களுக்கிடையே பாரம்பரியமாகப் பல முனைகளிலும் பேணப்பட்டு வரும் பன்னொடுங்கால உறவும், நட்பும் மனித நேயமும் பங்கப்பட்டு விடுமோ என்ற அச்ச உணர்வு நாட்டு நலனில் அக்கறை உள்ள அனைவரது உள்ளங்களிலும் எழுந்துள்ளது.
ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால், தமிழகத்துக்கும் கேரள மாநிலத்துக்கும் உள்ள வரலாற்று ரீதியான உறவு எவ்வளவு வலுவானது உண்மையானது என்பதை உணர்ந்திட முடியும். மூவேந்தர்களில் சேர மன்னர்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள், தமிழகத்திலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கேரளத்திலும் பெரிதும் மதித்து போற்றப்பட்டு வருகிறார்கள்.
கேரளத்தைச் சார்ந்த டொக்டர் டி. எம். நாயர் திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். இத்தகைய உன்னத உறவும் நினைவுகளும் என்றென்றைக்கும் நின்று நிலைத்திட வேண்டுமேயல்லாமல் அதை யாரும் சீர்குலைத்திட அனுமதிக்கலாகாது.
தி.மு. கழகம் 2006 ஆம் ஆண்டு அன் றைய முதல் அமைச்சர் என்ற முறையில் தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை தி. மு.க தலைவர் கருணாநிதி கூட்டியபோது, அ. தி. மு. சார்பில் இன்று அமைச்சர்களாக இருக்கும் ஒ. பன்னீர்செல்வமும் கே. ஏ. செங்கோட்டையனும் கலந்துகொண்டார்கள்.
அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில் 'முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து தமிழக அரசின் சார்பாக எடுத்து வைத்த நியாயங்களை ஏற்றுக்கொண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை நிறைவேற்றுவதற்கு முன் வராத கேரள அரசின் போக்கைச் சுட்டிக் காட்டி, உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் நல்லெண்ண சமிக்ஞையாக மத்திய அரசு முன்னிலையில் தமிழக அரசு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இக்கூட்டம் இணக்கம் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம் ஏற்கனவே 27. 2. 2006ல் பிறப்பித்த உத்தரவான அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்பதை நடை முறைப்படுத்த வேண்டுமென்று உத்தரவளிக் குமாறு முறையீடு செய்துகொள்வதென்று" கேட்டுக் கொண்டோம்.
இரு மாநிலங்களும் தமது சமூக பொருளாதார வாழ்வு மேம்பாட்டுக்கு ஒன்றையொன்று சார்ந்தே இருந்திட வேண்டும் என்பது இயற்கையாகவே பூகோள ரீதியாக உருவாகியுள்ள நிலைமை ஆகும்.
எனவே இரு மாநிலங்களுக்கும் இடையிலான உறவுப் பாலங்கள், ஒன்றையொன்று சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பிரச்சினைகளை அணுகுவதற்கு மாறாக குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக, நீண்ட நெடிய வரலாற்று அடிப்படையிலான உறவைக் காயப்படுத்திட எண்ணினால், வரலாறு நிச்சயம் மன்னிக்காது என்பதை அருகருகே உள்ள இரண்டு மாநிலங்களின் மக்களும் குறிப்பாக அரசியலாளர்களும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டுமென்று தி.மு.க செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தி.மு.க வின் இந்த நோக்கங்களையும், கருத்துக்களையும் வலியுறுத்திடும் வண்ணம் மத்திய அரசின் உடனடியான கவனத்தை ஈர்ப்பதற்கும், இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகரங்களிலும், நகரங்களிலும், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் ஒருநாள் உண்ணா விரதத்தில் ஈடுபடுவதென்றும் அதற்கடுத்து 15ந் திகதி (வியாழக்கிழமை) முல்லைப்பெரியாறு அணையினால் பாசன வசதி பெறும் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமனாதபுரம் மாவட்டங்களில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாபெரும் 'மனிதச் சங்கிலி' அணி வகுப்பு நடத்துவதென்றும் இச் செயற்குழு முடிவு செய்கிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இலங்கைச் சிறையில் உக்ரைய்ன் நாட்டவர் சாகும் வரை உண்ணா விரதம்
» மதுரை மல்லி உள்ளிட்ட 6 தமிழக உற்பத்திகளுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு
» மாயாவதி அரசின் மீது சி.பி.ஐ விசாரணை: மத்திய மந்திரி எச்சரிக்கை
» அரசியல் தலைவர்கள்,மத்திய அரசின் அனுமதி பெற்ற பின்னரே இனி வெளிநாடு செல்ல முடியும்
» அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி எப்போது; மத்திய அரசு தலையிடுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum