Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கட்சித் தலைமையைக் கைப்பற்றச் சதி செய்தமையே சசிகலா குடும்பத்தினரை nஜயலலிதா வெளியேற்றக் காரணம்
Page 1 of 1
கட்சித் தலைமையைக் கைப்பற்றச் சதி செய்தமையே சசிகலா குடும்பத்தினரை nஜயலலிதா வெளியேற்றக் காரணம்
அ.தி.மு.கவுக்கு எதிரான சக்திகளை உருவாக்கிய தகவல்கள் அம்பலம்!
சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றால், அடுத்த முதல்வராக யாரை நியமிப்பது என சகிகலா உறவினர்கள் ஜோதிடம் பார்த்த தகவல் மற்றும் சசிகலா, இளவரசிக்காக சட்ட நிபுணரிடம் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது, தி. மு. க. குடும்பத்தினரிடம் மறைமுக தொடர்பு வைத்த விவகாரம் போன்றவை தெரிய வந்ததால் மன்னார்குடி குடும்பத்தினர் முற்றாக வெளியேற்றப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள், கட்சி நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து, முதல்வரின் நன்மதிப்பிலிருந்து அவர்களை வெளியேற்றுவதில் சசிகலாவின் உறவினர்களின் முக்கிய பணியாக இருந்தது.
முதல்வர் ஜெயலலிதாவை தினமும் யார் சந்திக்க வேண்டும், எந்தெந்த கடிதங்கள் அவரது பார்வைக்கு அனுப்ப வேண்டும், எந்தெந்த கோப்புகளை அனுப்பி கையெழுத்து பெற வேண்டும் போன்ற பணிகளை சசிகலா செய்து வந்தார். அவரது கண் அசைவு இன்றி, போயஸ் தோட்ட வீட்டில் எந்த காரியமும் நடக்காது.
சர்வ வல்லமையுடன் கோலோச்சி வந்த சசிகலாவை, கட்சியிலிருந்து நீக்குவதற்கு அவரது குடும்ப அதிகார மையமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
சசிகலாவின் உறவினர் ஒருவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளார். அவருக்கும், தி. மு. க. குடும்பத்தினர் சிலருக்கும் மறைமுக நட்பு இருந்துள்ளது. தி. மு. க. குடும்பத்தினருக்கு வேண்டிய ஐ. ஏ. எஸ், - ஐ. பி. எஸ். அதிகாரிகளை பதவிகளில் நியமிக்க வைப்பதில் அவரது கைங்கரியம் உண்டு.
முதல்வருக்கு அரசியல் ஆலோசனை கூறும் முக்கிய பிரமுகர் ஒருவரின் உறவினர் கட்டிய கட்டடத்திற்கு சி. எம். டி. ஏ. அனுமதி பெறுவதற்கு சசிகலா உறவினர் ஒருவர் பணம் கேட்ட தகவல், முதல்வருக்கு தெரிய வந்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா குடும்பத்தினரை மட்டும் காப்பாற்றுவதற்காக சட்ட நிபுணர் ஒருவர் மூலமாக, முன்னாள் நீதிபதியிடம் பேச்சுவார்த்தை நடத்திய தகவலும் கிடைத்துள்ளது.
சமீபத்தில் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராவதற்கு சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூரு சென்றனர். அப்போது அங்கு சசிகலாவின் குடும்பத்தினர் அனைவரும் சென்றுள்ளனர். முதல்வர் பெங்களூர் நீதிமன்றத்திற்கு சென்றபோது, சசிகலா குடும்பத்தினர் யாரும் வரவில்லை. இதுவும் முதல்வருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தி. மு. க. குடும்பத்தினர் மற்றும் மத்திய அமைச்சர் ஒருவர் நடத்தும் மதுபான நிறுவனங்களுக்கு அரசாங்க அனுமதியுடன் இயங்கும் மதுபான கடைகளில் விற்பதற் கான ஏற்பாடுகளை சசிகலா உறவினர்கள் செய்துள் ளனர். பிரபல மதுபான நிறுவனங்களின் உரிமையாளர்கள்இந்த தகவலை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இவை அனைத்தும் விட மிக முத்தாய்ப் பாக சொத்து குவிப்பு வழக்கில் முதல்வருக்கு எதிரான தீர்ப்பு கிடைக்குமானால், அடுத்த முதல்வர் யாரை நியமிக்கலாம் என்பதை ஜோதிடர் மூலம் சசிகலாவின் உறவினர்கள், பிரபல ஜோதிடர் ஒருவரை சந்தித்து மூத்த அமைச்சர் ஒருவரின் ஜாகத்தையும், கனிஷ்ட அமைச்சர் ஒருவரின் ஜாதகத்தையும் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மூத்த அமைச்சரின் ஜாதகத்தை ஜோதிடர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், கனிஷ்ட அமைச்சரை தேர்வு செய்யலாம் என ஜோதிடர் தெரிவித்த தகவலும் கசிந்துள்ளது.
வட மாநிலங்களைச் சேர்ந்த ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் சிலர், தங்களை மத்திய அரசு பணிக்கு அனுப்பி வையுங் கள் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கான காரணங்கள் குறித்து முதல்வர் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது தி. மு. கவுக்கு வேண்டிய அதிகாரிகளுக்கு முக்கிய பதவி கொடுப்பதற்கு சசிகலா உறவினர்கள் படாத பாடு படுத்திய விவரங்களையும் அதிகாரிகள் முதல்வரிடம் பட்டியலிட்டுள்ளனர்.
கடந்த பாராளுமன்ற சட்ட சபை, உள்ளாட்சி தேர்தல்களில் ஆசனம் வழங்கப்பட்டதில், சசிகலாவின் உறவினர்கள் பல கோடிகளை வசூலித்த புகாரும் மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.
இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது :-
போயஸ் தோட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகள் பலர் சசிகலாவுக்கு வேண்டப் பட்டவர்கள். அவர்களை முதலில் மாற்ற வேண்டும். அவர்களில் சிலர், தம் மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளனர். பாதுகாப்பு பணி பொலிசாரின் சகோதரர் ஒருவர், எம். எல். ஏ. வாக இருக்கிறார். எங்களை, ‘சின்னம்மா பொலிஸ்’ என வெளிப்படையாகவே கூறுகின்றனர்.
மதுக்கடைகளில் ஆதிக்கம், கவுன்சிலர்கள் வேட்பாளர்கள் தேர்விலும், மண்டலக் குழுத் தலைவர்கள் நியமனத்திலும் மாவட்ட நிர்வாகிகள் நியமனத்திலும் வசூல் வேட்டை, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில், தி. மு. க. ஆதரவாளர்கள் நியமனம், ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்த நடவடிக்கை குறித்து தகவல் பரிமாற்றம் செய்தது, கட்சிக்குள் கோஷ்டிப் பூசலை வளர்த்தது.
அதிகார மையங்களின் அராஜகச் செயல் போன்றவை தான், சசிகலாவின் குடும்பத்தினரை வெளியேற்றுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» nஜயலலிதா மீது அவதூறு குற்றச்சாட்டு: ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
» ரஜினி குடும்பத்தினரை தவறாக பேசவில்லை: நடிகர் கருணாஸ் மறுப்பு
» எதிர்க் கட்சித் தலைவர் தெரிவில் ஐ.தே.க. உறுப்பினரிடையே குழப்பம்
» தேர்தல் ஆணையாளருடன் கட்சித் தலைவர்கள் இன்று சந்திப்பு
» ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்படுமா? கரு. தலைவர் சஜித் ஜனாதிபதி வேட்பாளர்?
» ரஜினி குடும்பத்தினரை தவறாக பேசவில்லை: நடிகர் கருணாஸ் மறுப்பு
» எதிர்க் கட்சித் தலைவர் தெரிவில் ஐ.தே.க. உறுப்பினரிடையே குழப்பம்
» தேர்தல் ஆணையாளருடன் கட்சித் தலைவர்கள் இன்று சந்திப்பு
» ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்படுமா? கரு. தலைவர் சஜித் ஜனாதிபதி வேட்பாளர்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum