Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
உன் கருப்பை கனத்தபோது..
+6
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
பார்த்திபன்
முனாஸ் சுலைமான்
நண்பன்
gud boy
10 posters
Page 1 of 1
உன் கருப்பை கனத்தபோது..
உன் கருப்பை கனத்தபோது...
கொஞ்சம் விஞ்சி உண்டேன்
என்னுணவைக்கூட என்னால்
சுமந்து செல்ல முடியல….
நான்குமணி நேரம் என்னுணவை
இரைப்பையே சுமக்காத போது
நாற்பது வாரங்கள் எனையுன்
கருப்பை எப்படி சுமந்ததோ?
ஒருவேளை உணவுகூட
உன் உடம்பில் ஒட்டல
வாந்தியாய் வெளித்தள்ளவே
அட்டையாய் ஒட்டிநின்றேன்
பகல் கனவாய் உன்
உறக்கம் இருக்க
இராப்பகலாய் நான்
உறங்கிக் கழித்தேன்.
உன் உயிர் குடித்தாவது
நான் பிறக்கத் துடிப்பதை
என் பிள்ளை உதைக்கிறான் என்று
என் அப்பனுக்கு நீகாட்டி
மடத்தனமாய் மகிழ்ந்திருந்தாய்!
கருச்சிறையில் விடுதலைபெற
உன்னையல்லவா நான்
பணயக் கைதியாக்கினேன்!
வேதனையின்போது காலிரண்டும்
பின்னிக் கொள்ளும் நியதிக்கு
விலக்களித்து நீ மட்டும் எனைப்
புறந்தள்ளும் வேதனையிலும்
விலக்கிவைத்தாய் காலிரண்டை
ஒரு நொடி உனக்குப் போதும்
சப்பையாக்கி எனைக் கொல்ல
என்விடயத்தில் மட்டும் உன்
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?
பார்க்க முடியாத குருடனாய்
கேட்க முடியாத செவிடனாய்
பேச முடியாத ஊமையாய்
நடக்க முடியாத முடவனாய்
மொத்த ஊணத்தின் குத்தகைக்
காரனாய் எனை நீ கண்டபோதும்
வாரியணைத்து முத்தமிட்டு
மாரிழந்து பாலூட்டி மகிழ
எப்படி உன்னால் முடிந்தது?
என்னிலையில் நீ இருந்திருந்தால்
எட்டியுதைக்கத் தோனாதா?
என்விடயத்தில் மட்டும் உன்
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?
மூத்திரத்தை முகத்தில் கழித்தால்
ஆத்திரம் வருவது அறிவு
என் மூத்திரத்தை மட்டும்
நேத்திரம் மூடி நீ ரசித்திருந்தாய்
என்விடயத்தில் மட்டும் உன்
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?
என்னை மிஞ்ச இன்னொருவன்
இருக்கலாமா என நினைப்பது
ஈனப்பிறவிக்கும் தன்மனதில்
இயல்பாய் உள்ள உள்ளுணர்வு!
என்னை மிஞ்சி என்மகன்
படிப்பாளியாய் இருக்கனும்
என்னை விட பலபடிமேல்
என்மகன் சிறக்கனும்
என்றல்லவா எனக்கு நீ
பாலூட்டும்போது பாடினாய்
என்விடயத்தில் மட்டும் உன்
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?
உன்னைவிட ஒருபடிமேல்
வீரனாகக் கற்றுத் தந்தாய்
செல்வம்கூட பெற்றுத் தந்தாய்
சுகாதாரம் சொல்லித் தந்தாய்
வாழ்வாதாரம் அள்ளித் தந்தாய்
இத்தனையும் கொட்டிவிட்டு
ஒன்றைமட்டும் விட்டுவிட்டாய்
எனக்கு நீ காட்டும் பாசம்போல்
உன்மீதும் நான் பாசம் காட்ட
கற்றுத்தர ஏன் மறந்தாய்
நன்றி
எழுதியவர் நண்பர் ரூஹுல் றஸ்மி...
கொஞ்சம் விஞ்சி உண்டேன்
என்னுணவைக்கூட என்னால்
சுமந்து செல்ல முடியல….
நான்குமணி நேரம் என்னுணவை
இரைப்பையே சுமக்காத போது
நாற்பது வாரங்கள் எனையுன்
கருப்பை எப்படி சுமந்ததோ?
ஒருவேளை உணவுகூட
உன் உடம்பில் ஒட்டல
வாந்தியாய் வெளித்தள்ளவே
அட்டையாய் ஒட்டிநின்றேன்
பகல் கனவாய் உன்
உறக்கம் இருக்க
இராப்பகலாய் நான்
உறங்கிக் கழித்தேன்.
உன் உயிர் குடித்தாவது
நான் பிறக்கத் துடிப்பதை
என் பிள்ளை உதைக்கிறான் என்று
என் அப்பனுக்கு நீகாட்டி
மடத்தனமாய் மகிழ்ந்திருந்தாய்!
கருச்சிறையில் விடுதலைபெற
உன்னையல்லவா நான்
பணயக் கைதியாக்கினேன்!
வேதனையின்போது காலிரண்டும்
பின்னிக் கொள்ளும் நியதிக்கு
விலக்களித்து நீ மட்டும் எனைப்
புறந்தள்ளும் வேதனையிலும்
விலக்கிவைத்தாய் காலிரண்டை
ஒரு நொடி உனக்குப் போதும்
சப்பையாக்கி எனைக் கொல்ல
என்விடயத்தில் மட்டும் உன்
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?
பார்க்க முடியாத குருடனாய்
கேட்க முடியாத செவிடனாய்
பேச முடியாத ஊமையாய்
நடக்க முடியாத முடவனாய்
மொத்த ஊணத்தின் குத்தகைக்
காரனாய் எனை நீ கண்டபோதும்
வாரியணைத்து முத்தமிட்டு
மாரிழந்து பாலூட்டி மகிழ
எப்படி உன்னால் முடிந்தது?
என்னிலையில் நீ இருந்திருந்தால்
எட்டியுதைக்கத் தோனாதா?
என்விடயத்தில் மட்டும் உன்
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?
மூத்திரத்தை முகத்தில் கழித்தால்
ஆத்திரம் வருவது அறிவு
என் மூத்திரத்தை மட்டும்
நேத்திரம் மூடி நீ ரசித்திருந்தாய்
என்விடயத்தில் மட்டும் உன்
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?
என்னை மிஞ்ச இன்னொருவன்
இருக்கலாமா என நினைப்பது
ஈனப்பிறவிக்கும் தன்மனதில்
இயல்பாய் உள்ள உள்ளுணர்வு!
என்னை மிஞ்சி என்மகன்
படிப்பாளியாய் இருக்கனும்
என்னை விட பலபடிமேல்
என்மகன் சிறக்கனும்
என்றல்லவா எனக்கு நீ
பாலூட்டும்போது பாடினாய்
என்விடயத்தில் மட்டும் உன்
பகுத்தறிவுக்கு நேர்ந்ததென்ன?
உன்னைவிட ஒருபடிமேல்
வீரனாகக் கற்றுத் தந்தாய்
செல்வம்கூட பெற்றுத் தந்தாய்
சுகாதாரம் சொல்லித் தந்தாய்
வாழ்வாதாரம் அள்ளித் தந்தாய்
இத்தனையும் கொட்டிவிட்டு
ஒன்றைமட்டும் விட்டுவிட்டாய்
எனக்கு நீ காட்டும் பாசம்போல்
உன்மீதும் நான் பாசம் காட்ட
கற்றுத்தர ஏன் மறந்தாய்
நன்றி
எழுதியவர் நண்பர் ரூஹுல் றஸ்மி...
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: உன் கருப்பை கனத்தபோது..
இத்தனையும் கொட்டிவிட்டு
ஒன்றைமட்டும் விட்டுவிட்டாய்
எனக்கு நீ காட்டும் பாசம்போல்
உன்மீதும் நான் பாசம் காட்ட
கற்றுத்தர ஏன் மறந்தாய்
உயிரோட்டமுள்ள வரிகள் நீங்களும் ரசித்து எங்களுக்கும் பகிர்ந்தளித்த உறவுக்கு நன்றி நன்றி
அருமையான கவிதை
:];: :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உன் கருப்பை கனத்தபோது..
@. @.நண்பன் wrote:இத்தனையும் கொட்டிவிட்டு
ஒன்றைமட்டும் விட்டுவிட்டாய்
எனக்கு நீ காட்டும் பாசம்போல்
உன்மீதும் நான் பாசம் காட்ட
கற்றுத்தர ஏன் மறந்தாய்
உயிரோட்டமுள்ள வரிகள் நீங்களும் ரசித்து எங்களுக்கும் பகிர்ந்தளித்த உறவுக்கு நன்றி நன்றி
அருமையான கவிதை
:];: :];:
Re: உன் கருப்பை கனத்தபோது..
அருமையான கவிதை.
வாசித்து முடித்த மறு நிமிடம் இதயத்தின் எடை இரு மடங்கானதாக உணர்கிறேன்!
கணினித் திரையைத் துடைக்கும் சாக்கில் என் கண்ணீரையும் துடைக்கிறேன்! :!+: ://:-:
வாசித்து முடித்த மறு நிமிடம் இதயத்தின் எடை இரு மடங்கானதாக உணர்கிறேன்!
கணினித் திரையைத் துடைக்கும் சாக்கில் என் கண்ணீரையும் துடைக்கிறேன்! :!+: ://:-:
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: உன் கருப்பை கனத்தபோது..
உணர்வு ரீதியான வரிகள் அருமையாக இருக்கிறது வெகுவாக ஈர்த்தது கவிதை பகிர்வுக்கு நன்றி
Re: உன் கருப்பை கனத்தபோது..
அருமை நண்பா வாழ்த்துக்கள்
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Re: உன் கருப்பை கனத்தபோது..
நிதர்சன வரிகள் தோழரே உள்ளத்தை தட்டிச் சென்றது .
பகிர்விற்கு நன்றி.
பகிர்விற்கு நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உன் கருப்பை கனத்தபோது..
தட்டிக்கொடுத்த அனைவருக்கும் நன்றி
roohulrazmi- புதுமுகம்
- பதிவுகள்:- : 20
மதிப்பீடுகள் : 10
Re: உன் கருப்பை கனத்தபோது..
roohulrazmi wrote:தட்டிக்கொடுத்த அனைவருக்கும் நன்றி
வாருங்கள் நண்பரே தங்களின் அறிமுகம் தாருங்கள் உங்களின் வரவில் மகிழ்ச்சி என்றும் இணைந்திருங்கள் நட்புடன்.
நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உன் கருப்பை கனத்தபோது..
roohulrazmi wrote:தட்டிக்கொடுத்த அனைவருக்கும் நன்றி
உங்கள் கவிதைகளையும்,கருத்துகளையும் பகிர்ந்துக் கொள்ள சிறந்த தளம் நம் சேனை தளம்.இங்குள்ள உறவுகள் மனக் கசப்பில்லாமல் தட்டிக் கொடுத்து ஊக்கமளிக்கும் சொந்தங்கள்..
உங்கள் வரவில் மகிழ்ச்சி.. தொடர்ந்திருங்கள்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: உன் கருப்பை கனத்தபோது..
வேதனையின்போது காலிரண்டும்
பின்னிக் கொள்ளும் நியதிக்கு
விலக்களித்து நீ மட்டும் எனைப்
புறந்தள்ளும் வேதனையிலும்
விலக்கிவைத்தாய் காலிரண்டை
ரூஹுல் றஸ்மி...( யார் இவர்)
இவருக்கும் பகிர்ந்தவருக்கும் நன்றிகள்,,,
பின்னிக் கொள்ளும் நியதிக்கு
விலக்களித்து நீ மட்டும் எனைப்
புறந்தள்ளும் வேதனையிலும்
விலக்கிவைத்தாய் காலிரண்டை
ரூஹுல் றஸ்மி...( யார் இவர்)
இவருக்கும் பகிர்ந்தவருக்கும் நன்றிகள்,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: உன் கருப்பை கனத்தபோது..
@. @. @.kiwi boy wrote:roohulrazmi wrote:தட்டிக்கொடுத்த அனைவருக்கும் நன்றி
உங்கள் கவிதைகளையும்,கருத்துகளையும் பகிர்ந்துக் கொள்ள சிறந்த தளம் நம் சேனை தளம்.இங்குள்ள உறவுகள் மனக் கசப்பில்லாமல் தட்டிக் கொடுத்து ஊக்கமளிக்கும் சொந்தங்கள்..
உங்கள் வரவில் மகிழ்ச்சி.. தொடர்ந்திருங்கள்..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உன் கருப்பை கனத்தபோது..
உயிராய் மதித்து ரசித்த முனாஸூக்கு நன்றிமுனாஸ் சுலைமான் wrote:@. @.நண்பன் wrote:இத்தனையும் கொட்டிவிட்டு
ஒன்றைமட்டும் விட்டுவிட்டாய்
எனக்கு நீ காட்டும் பாசம்போல்
உன்மீதும் நான் பாசம் காட்ட
கற்றுத்தர ஏன் மறந்தாய்
உயிரோட்டமுள்ள வரிகள் நீங்களும் ரசித்து எங்களுக்கும் பகிர்ந்தளித்த உறவுக்கு நன்றி நன்றி
அருமையான கவிதை
:];: :];:
roohulrazmi- புதுமுகம்
- பதிவுகள்:- : 20
மதிப்பீடுகள் : 10
Re: உன் கருப்பை கனத்தபோது..
நட்பிலக்கண விதியின் நற்பண்புகளுள் ஓட்டமும், உயிரும் என்றும் பின்னியவை. என் கவிதையில் அதைக் கண்டெடுத்த நீங்கள் என் உயிர் ”நண்பன்”.நண்பன் wrote:இத்தனையும் கொட்டிவிட்டு
ஒன்றைமட்டும் விட்டுவிட்டாய்
எனக்கு நீ காட்டும் பாசம்போல்
உன்மீதும் நான் பாசம் காட்ட
கற்றுத்தர ஏன் மறந்தாய்
உயிரோட்டமுள்ள வரிகள் நீங்களும் ரசித்து எங்களுக்கும் பகிர்ந்தளித்த உறவுக்கு நன்றி நன்றி
அருமையான கவிதை
:];: :];:
roohulrazmi- புதுமுகம்
- பதிவுகள்:- : 20
மதிப்பீடுகள் : 10
Re: உன் கருப்பை கனத்தபோது..
அன்பின் kiwi boykiwi boy wrote:roohulrazmi wrote:தட்டிக்கொடுத்த அனைவருக்கும் நன்றி
உங்கள் கவிதைகளையும்,கருத்துகளையும் பகிர்ந்துக் கொள்ள சிறந்த தளம் நம் சேனை தளம்.இங்குள்ள உறவுகள் மனக் கசப்பில்லாமல் தட்டிக் கொடுத்து ஊக்கமளிக்கும் சொந்தங்கள்..
உங்கள் வரவில் மகிழ்ச்சி.. தொடர்ந்திருங்கள்..
என் கவிதையை நீங்கள் கண்டெடுக்கவில்லை. கன்றென ஈன்றெடுத்தீர்கள்.
”தாய்” மொழியில் நன்றி சொல்லியிருக்கிறேன்.
roohulrazmi- புதுமுகம்
- பதிவுகள்:- : 20
மதிப்பீடுகள் : 10
Re: உன் கருப்பை கனத்தபோது..
பார்த்திபன் wrote:அருமையான கவிதை.
வாசித்து முடித்த மறு நிமிடம் இதயத்தின் எடை இரு மடங்கானதாக உணர்கிறேன்!
கணினித் திரையைத் துடைக்கும் சாக்கில் என் கண்ணீரையும் துடைக்கிறேன்! :!+: ://:-:
பார்த்திபன் பார்த்திருப்பது என் கவிதைக் கருவை அல்ல.
தன் விதையைச் சுமந்த கருவை.
roohulrazmi- புதுமுகம்
- பதிவுகள்:- : 20
மதிப்பீடுகள் : 10
Re: உன் கருப்பை கனத்தபோது..
ஈர்ப்பு விசைக்குக் காரணம் சுமை(Mass ) என்பது ஐன்ஸ்டைனின் special theory of relativity . உன் சுமையைச் சுமந்தவளை ஒற்றைவரியில் நான் உளறியிருப்பினும் நீ ஈர்க்கப்படுவது இயற்கை நியதி.நேசமுடன் ஹாசிம் wrote:உணர்வு ரீதியான வரிகள் அருமையாக இருக்கிறது வெகுவாக ஈர்த்தது கவிதை பகிர்வுக்கு நன்றி
roohulrazmi- புதுமுகம்
- பதிவுகள்:- : 20
மதிப்பீடுகள் : 10
Re: உன் கருப்பை கனத்தபோது..
ADNAN wrote:அருமை நண்பா வாழ்த்துக்கள்
(கவிதை)அருமை. நண்பா வாழ்த்துக்கள்! என்றீர்களா? (எனது) அருமை நண்பா, வாழ்த்துக்கள்! என்றீர்களா?
உங்கள் பின்னூட்டல் அருமை. எனது அருமை நண்பா, நன்றிகள்!
roohulrazmi- புதுமுகம்
- பதிவுகள்:- : 20
மதிப்பீடுகள் : 10
Similar topics
» கருப்பை கட்டிகள் !
» புனிதத்தின் கருப்பை
» கருப்பை புற்றுநோய்
» கருப்பை புற்று நோய்.
» கருப்பை புற்று நோய்.........
» புனிதத்தின் கருப்பை
» கருப்பை புற்றுநோய்
» கருப்பை புற்று நோய்.
» கருப்பை புற்று நோய்.........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum