சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 11:12 am

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 11:06 am

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 10:39 am

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 10:32 am

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 7:22 pm

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 8:43 am

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 8:39 am

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 8:36 am

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm

» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am

» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am

» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Khan11

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

3 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 1:15 pm

First topic message reminder :

ஆசிரியர் ; மாணவர்களே ! இன்றைய பாடம் " உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்"..!
ஒரு மனிதன் ஒரு கழுதையை அடித்து இம்சிக்கிறான்..நான் அதைத் தடுக்கிறேன்..
இதில் இருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள் ?

மாணவர்கள் ; ( ஒட்டு மொத்தமாக) சகோதர பாசம்..!
பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 188826 பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 188826 பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 2:44 pm

ஆசிரியர் ; பிள்ளைகளே.. 5 ம் 4 ம் எவ்வளவு ?

சின்னா ; 9.

ஆசிரியர் ; 4 ம் 5 ம் எவ்வளவு..?

சின்னா ; 6.

ஆசிரியர் ; எப்படி..?

சின்னா ; நீங்க கேள்வியை மாத்திக் கேட்டீங்க.. நான் பதிலை திருப்பி சொன்னேன்..!!!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 2:45 pm

ஆசிரியர்: உங்க அப்பாகிட்ட 10 மிட்டாய் இருக்கு. அதுல 9-ஐ பக்கத்து வீட்டு
பாப்பாவுக்கு கொடுத்துவிடுகிறார். இப்போ உனக்கு என்ன வரும்?
பையன்: எங்க நைனா மேல சந்தேகம் வரும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 2:47 pm

சங்கர் நீ சொல்லு .. 1869 -ல் என்ன முக்கியமான நிகழ்வு ?

காந்திஜி பிறந்தார்..

சின்னா நீ சொல்லு.. 1873-ல் என்ன ஆச்சு..?

காந்திஜிக்கு 4 வயசு ஆச்சு சார்..!!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 2:48 pm

ஆண்டுத் தேர்வு விடைத்தாளின் இறுதிப் பக்கத்தில் சின்னா ( பத்திரிகை ஆசிரியர் மகன்) இவ்வாறு எழுதினான்..

இந்த
விடைத்தாளில் உள்ள விவரங்கள் அனைத்தும் என் அறிவுக்கு உட்பட்டு உண்மையானவை
என்றும், என் பதில்களும் என் நண்பன் பதில்களும் ஒத்துப் போகுமேயானால் அது
சற்றும் எனக்கு சம்பந்தமில்லாதது என்று இதன் மூலம் உறுதியளிக்கிறேன்..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 2:49 pm

சின்னாவும்
அவன் நண்பனும் ஒரு 100 ரூபாய்த் தாளை கண்டெடுத்தனர்.. இருவரில் யார் ஒரு
நம்ப முடியாத பொய்யை சொல்கிறார்களோ அவனுக்கே இந்த பணம் என்று முடிவு
செய்தனர். அப்போது டெ.கு.டேனியல் வாத்தியார் இதைக் கேட்டு அவர்களை
கண்டித்தார்..

உங்களுக்கு வெட்கமாக இல்லை..? உங்கள் வயதில் எனக்கு "பொய்" என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாது..

சின்னா மறுவார்த்தை பேசாமல் 100 ரூபாயை அவரிடம் கொடுத்து விட்டான்...!!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 2:52 pm

வேகமாக வாகனம் ஓட்டிய வழக்குக்காக ஒரு ஆசிரியர் நீதிமன்றம் வந்தார். மிகவும் தாமதமானதால் நடுவரை வேண்டினார்.

"அய்யா நான் ஒரு ஆசிரியன். பள்ளிக்கு மிகவும் தாமதமாவதால் தயவு செய்து என் வழக்கை முதலில் விசாரிக்க வேண்டுகிறேன்.."

மிகுந்த
ஆர்வம் கொண்ட நடுவர், " நீங்கள் ஒரு ஆசிரியரா..!" எனக்கேட்டு, தன்
நினைவுகளை பின்னோக்கி ஓடவிட்டார். பின் ஒரு தீர்மானத்துக்கு வந்தவராக,
"நல்லது ஆசிரியரே.. கூண்டில் ஏறி நின்று, 500 முறை 'நான் வேகமாக வாகனம்
செலுத்த மாட்டேன்' என எழுதிக்கொடுத்துவிட்டு நீங்கள் போகலாம்...!!"

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 2:53 pm

சின்னா ஆசிரியர்கள் ஓய்வறை வழியாகப் போனபோது ஒரு ஆசிரியர் கூப்பிட்டார்..

சின்னா, எனக்கொரு டீ வாங்கி வா..

மற்றொருவர் " எனக்கும்.. க்ளாஸை நல்லா கழுவிட்டு டீ போட்டு வாங்கிட்டு வா.."

சின்னா 2 தேனீர் குவளைகளுடன் திரும்பினான்..

" யார் சார் கழுவின க்ளாஸ்லே டீ கேட்டது.. இந்தாங்க...!"

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 2:54 pm

சின்னா ஒருநாள் அழுதுகொண்டே பள்ளிக்கு வந்தான்.. தலைமை ஆசிரியர் ஏனென்று கேட்டார். சின்னா சொன்னான்..

"
நம்ம பள்ளிக்கு வர்ற மேட்டு ரோட்டுலே டேனியல் சார் சைக்கிளை ஏறி
மிதிச்சுட்டு வந்தார்.. திடீர்ன்னு பெடல் வழுக்கி...." என்று சொல்லிவிட்டு
மேலும் அழ ஆரம்பித்தான்,,

தலைமை ஆசிரியர்," அடடா.. சரி.. சரி.. இதுக்கெல்லாம் ஆம்பளைப் பையன் அழலாமா.? எங்கே.. சிரி.. பார்க்கலாம்." என்றார்.

"போங்க சார்.. அங்க சிரிச்சதுக்கு அவர் அடிச்சதினாலே தான் அழறேன்..! இங்கே வேறே சிரிக்க சொல்றீங்களே...!!!"

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 2:55 pm

ஏண்டா சின்னா நம்ம வாத்தியாரை டீ கடையிலே ரவுண்டு கட்டி அடிச்சாங்க..?

பஜ்ஜி சாப்பிட்டு சும்மா வரவேண்டியதுதானே..? பழக்க தோஷத்திலே உங்க பொண்ண பாட சொல்லுங்க ன்னுருக்கார்..!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 2:58 pm

பள்ளிக்கு புறப்பட்ட சின்னா திரும்ப வீட்டுக்குள் வந்தான்..

அம்மா ; ஏண்டா பள்ளிக்கு இன்னும் போகலையா..?

சின்னா ; பாவம்மா.. வெளியிலே ஒரு ஆள் 1 ரூபா.. 1 ரூபா தாங்கன்னு கேட்டு கெஞ்சறாருரும்மா.. குடும்மா..குடுத்துட்டு பள்ளிக்கு போறேன்..

அம்மா ; அடப்பாவமே.. யாரு.. பிச்சைக்காரனா..?

சின்னா ; ஐஸ் விக்கிறவர்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 2:59 pm

வேதியல் சோதனைக்கூடத்தில்....

டேனியல் ; இந்த குவளையில் இருப்பது கந்தக அமிலம்.. இதற்குள் நாணயத்தை போடுகிறேன்.. கரையுமா கரையாதா சொல்லுங்கள் மாணவர்களே..

சின்னா ; கரையாது அய்யா.. கரையும் என்றால் எங்களிடமிருந்து அல்லவா நாணயத்தை வாங்கி போட்டிருப்பீர்கள்..!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 3:01 pm

இந்தாடா கண்ணா.. இந்த ஞாபக சக்தி மாத்திரையை முழுங்கிட்டு பரீட்சை எழுது..

படிச்சதெல்லாம் நினைவுக்கு வந்துடுமா சின்னா..?

இல்லே.. உடம்புல எங்கெங்கே எந்தெந்த பிட் வச்சிருக்கோம்ன்னு ஞாபகம் வரும்..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 3:02 pm

சின்னா விடுதியிலிருந்து தன் தந்தைக்கு கடிதம் எழுதினான்..

" அன்புள்ள அப்பா..

எனக்கே
மிகவும் வெட்கமாக இருக்கிறது.. திரும்ப திரும்ப பணம் கேட்டு தொல்லை
செய்வதற்கு மிக வருந்துகிறேன்.. கல்லூரியில் " ஸ்மோக்கிங் ஃபீஸ்" கேட்டு
நச்சரிக்கிறார்ககள்.. மேலும் புதிய பாடத்திட்டமான " அரியர்ஸ்"க்கு புத்தகம்
வாங்க வேண்டும்.. தயவு செய்து பணம் அனுப்புங்கள்.

பி.கு.
இந்த கடிதத்தை அஞ்சல் செய்தபிறகு ரொம்ப வருத்தப் பட்டேன்.. திரும்ப
பெட்டடியில் இருந்து எடுத்துவிடலாம் என்று முயன்றேன்.. முடியவில்லை..
கடவுளே.. இந்த கடிதம் அப்பாவுக்கு கிடைக்க கூடாது என்றுகூட
வேண்டிக்கொண்டேன்..

அந்த அளவுக்கு உங்களுக்கு சிரமம் கொடுப்பதை எண்ணி வருந்துகிறேன் அப்பா..!

நான்கு நாள் கழித்து அப்பாவிடம் இருந்து ஒரு கவர் வந்தது.. அதில் இவ்வாறு எழுதியிருந்தது..

" மகனே.. உன் வேண்டுதல் பலித்து விட்டது.. அந்த கடிதம் வந்து சேரவே இல்லை...!!!"

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 3:04 pm

சின்னாவின் வகுப்புக்கு புது ஆசிரியை வந்தாள்..ஒவ்வொரு மாணவராக அவர்கள் அப்பா என்ன செய்கிறார்கள் என்று விசாரித்தாள்..

"சின்னா.. உங்கப்பா என்ன பண்றாரு..?"

" எங்கப்பா செத்துட்டாரு மிஸ்.."

" அடடா.... சரி சாகறதுக்கு முன்னே என்ன பண்ணாரு..?"

" சாவித்திரீ.... கடைசியிலே விஷம் குடுத்துட்டியா...?"ன்னு சொல்லிக்கிட்டே விழுந்துட்டாரு..மிஸ்...!"

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 3:05 pm

பள்ளியில் ஓவியப் போட்டி.. சின்னாவின் தாளில் எந்தப் படமும் வரையப்படவில்லை...

ஆசிரியர் ; என்னடா இது..?

சின்னா ; ஆடு புல் தின்னும் காட்சி..

ஆசிரியர் ; புல் எங்கே..?

சின்னா ; ஆடு தின்னுடிச்சி சார்..

ஆசிரியர் ; அப்ப ஆடு எங்கே..?

சின்னா ; புல் இல்லாத இடத்திலே ஆட்டுக்கு என்ன வேலை..? கிளம்பிப் போயிடுச்சு சார்..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 3:08 pm

ஒரு
வகுப்பில் ஆசிரியை ஆண்பால், பெண்பால் இவற்றைப் பற்றி கற்பித்துக்
கொண்டிருந்தாள்.. மனித இனத்துக்கு அப்பால் ஆங்கில மொழியில் எவை எவைக்கு
பாலின பாகுபாடு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெளிவாக விளக்கிக்
கொண்டிருந்தாள்.. (
உங்க கலவரம் எனக்கு புரியுது மக்கா.. இதிலே அசைவமும் இல்லே... அந்தப் பய சின்னாவும் இல்லே.. நிம்மதியா தொடருங்கப்பு.. )
சூறாவளிகள், நீர் ஊர்திகள் இவற்றிற்கும் பெண்பாலிட்டு குறிப்பிடப்படுவது
ஏன் என்று பாடம் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மாணவன் ஒரு சந்தேகத்தை
எழுப்பினான்..

" கணினி ( என் சந்தேகம் கணிணியா அல்லது கணினியா..?) ஆணா... பெண்ணா..?

ஆசிரியைக்கு
உண்மையிலேயே விடை தெரியவில்லை.. எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள்
தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினாள்..

மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்... அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ..

1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..

2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..

3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..

4) எந்த நேரத்துல புகையும்... எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..

5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்...!

மாணவர்களோ கணிணி பெண்பால்தான்னு சாதிச்சாங்க..

அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ...

1) எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..

2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..

3) நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்.. ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரியாது..

4) பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவை.. ஆனா பெரும்பாலான சமயங்கள்ல அதுகளேதான் பிரச்சினையே..

5)
அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம்
பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு...!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 3:10 pm

ஆரிரியை ஓய்வறை.. ஒரு மாணவன் அழுதுகொண்டே
வந்தான்.. அவன் இடது கன்னம் வீங்கியிருந்தது..ஆசிரியை காரணம் கேட்க,
சின்னா அடித்துவிட்டதாக சொன்னான்..

ஆசிரியை,
இப்படியெல்லாம் அடித்துக் கொள்ளக்கூடாது.. நட்பை வளர்க்க வேண்டும்..
இந்தா.. இந்த மிட்டாயை சின்னாவிடம் கொடுத்து 'ஃப்ரெண்ட்' ஆயிக்கோ.. என்று
சொல்லி அனுப்பினாள்..

சற்று நேரத்தில் அதே மாணவன் மீண்டும் அழுதுகொண்டே வந்தான்.. இன்னொரு கன்னமும் வீங்கியிருந்தது..

இப்போ என்னடா ஆச்சு..?

சின்னாவுக்கு இன்னொரு மிட்டாய் வேணுமாம் டீச்சர்..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 3:14 pm

டீச்சர்: உன் கூட பிறந்தவங்க எத்தனை பேர்?

மாணவன்: 100 பேர் டீச்சர்

டீச்சர்: என்னடா சொல்ற

மாணவன்: நான் ஜி.எச்.-ல பொறந்தவன் டீச்சர்.... ஹிஹி ஹி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 3:18 pm

ஆசிரியர் :- குழந்தே !! என்னவா ஆகனும் ஆசப்படுறே

சுபன் :- நானும் எங்க அப்பா மாதிரி டொக்டர் ஆகனும்னு ஆசப்பட்டேன்

ஆசிரியர் :- பலே பலே !! உங்கப்பா என்ன டொக்டரா

சுபன் :- இல்லே அவரும் டொக்டர் ஆகனும்னு ஆசைப்பட்டார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 3:19 pm

டேனி ; சின்னா.. மது பழக்கம் கூடாது..

சின்னா ; அப்படியே அய்யா..!

டேனி ; மாது சிந்தனை கூடவே கூடாது..

சின்னா ; அப்படியே அய்யா..!

டேனி ; மாமிசம் ஆகாது..

சின்னா ; அப்படியே அய்யா..!

டேனி ; சூது ஆகவே ஆகாது..

சின்னா ; அப்படியே அய்யா..!

டேனி ; நாட்டுக்காக உயிரிழக்க தயங்கவே கூடாது..

சின்னா ; அதைத்தான் செஞ்சாகணும்.. அப்புறம் வெட்டியா இந்த உயிரை வச்சுக்கிட்டு என்ன செய்யறது..?

டேனி ; ???????????????????????

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 3:22 pm

பள்ளி மதிய இடைவேளைக்குப் பின் துவங்கியது.. டேனி அறிவியல் வகுப்பு எடுத்தார்..

டேனி ; பிள்ளைகளே.. இன்று நான் தவளையின் உடற்கூறு பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம்.. இதோ தவளை...

டேனி தன் தோள் பையிலுள்ள டப்பாவில் இருந்து எடுத்தது தவளை இல்லை.. தயிர் வடை.. ! அவர் குழப்பத்தில் இருக்க..

சின்னா : அய்யா.. தாங்கள் மதியம் சாப்பிட்டது என்ன தயிர் வடையா.. அல்லது......

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 3:22 pm

அப்பா ; ஏய் சின்னா.. உங்க ஸ்கூல்லேருந்து போன் வந்துச்சு.. ரேங்க் கார்டு குடுத்துட்டாங்களாமே.. எங்கே காட்டு..

சின்னா ; என் ஃபிரெண்ட் வாங்கிட்டுப் போயிருக்கான்.. அவங்க அப்பாவ பயமுறுத்தறதுக்காக...!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 3:24 pm

டேனி கேட்டார்.. பிள்ளைகளே.. உலகில் மிக வேகமான நிகழ்வு எது..?

மாது ; கண் இமைப்பது அய்யா.

சுபன் ; ஒளி அதாவது லைட் அய்யா..

குமரன் ; சிந்தனை வேகம் தான் அய்யா...

சின்னா ; வயிற்றுப் போக்கு தான் அய்யா...!

டேனி ; சின்னா என்ன உளறுகிறாய்..?

சின்னா ; உண்மைதான் அய்யா.. நேற்றிரவு தூங்கிக்கிட்டு இருந்தபோது என்ன நடக்குதுன்னு சிந்திச்சு, லைட்டு போடுறதுக்கு முன்னே கண் இமைக்கிறதுக்குள்ளே எல்லாம் முடிஞ்சு போச்சுய்யா..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 3:28 pm

பள்ளியில் சர்தார் மகன்..

ஆசிரியை ; சுத்தமான நீரைப் பெற நாம் என்ன செய்யவேண்டும்..?

சர்தார் மகன் ; கிணற்று நீரை மினரல் வாட்டரில் கழுவ வேண்டும்..!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by நண்பன் Sat Jan 22, 2011 3:34 pm

தலைமைஆசிரியர்: யாராவது லேடீஸ் ஹாஸ்டலுக்கு உள்ளே போனா முதல் தடவை 100
அபராதமும், இரண்டாவது தடவை சென்றால் 200 ருபாயும், 3வது தடவை 500 ருபாயும்
அபராதம் கட்ட வேண்டும்.
மாணவன் : மாதாந்திர பாஸ் எவ்வளவு ஆகும் சார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்) - Page 2 Empty Re: பள்ளிக்கூடத்தில் வில்லங்கம்..!(நகைச்சுவைகள்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum